Advertisement

அத்தியாயம் 2:

நேரம் மாலை 5 மணி. காலையில் தன் அம்மாவிடம் பணத்தை கொடுத்து விட்டு தனது அறைக்குள் வந்தவன் இப்போது தான் எழுகிறான். தன்னை மறந்து தூக்கமா இல்லை மயக்கமா என்று அவனுக்கு புரியவில்லை. அமர முயன்ற போது தலை சுற்றியது. வயிற்றிலிருந்து பல வித்தியாசமான சப்தங்கள் எழுந்தன. எனக்கு ஏதாவது கொடு என வயிறு‌ அவனிடம் கெஞ்சுவது போல இருந்தது.

மெல்ல எழுந்தவன்‌ சமையலறை நோக்கி சென்றான். பரிதியின் தந்தை குமரன்‌ பரிதிக்கு பத்து வயது இருக்கும் போது இந்த வீட்டைக் கட்டினார். முதலில் வரவேற்பறை அதனை தொடர்ந்து ஹால் அதன் இடது புறம்‌ இரு‌அறைகள் பின்பு கிட்சன் அதன்‌ அருகில் டைனிங் அறை போல ஒரு அறை கடைசியாக தோட்டத்திற்கு செல்லும் கதவு.  வீட்டில் மாடியில் மூன்று‌அறைகள் உள்ளன. முதல் அறையில் சிவா தனது குடும்பத்துடன் தங்கி உள்ளான். அடுத்த‌ அறை ரம்யாவிற்கு. கடைசி அறை பரிதிக்கு.

டைனிங் அறையில் டேபிள் எதுவும் போடப்‌படாமல் வெறுமையாக இருக்கும். அங்கே அமர்ந்து தான்‌ சமையலுக்கு தேவையான வேலைகளை செய்வார்கள். சில சமயம் ஓய்வு எடுக்கும் இடமாகவும், பிள்ளைகள் படிக்கும் இடமாகவும், உணவருந்தும் இடமாகவும், புறணி பேசும் இடமாகவும் அந்த டைனிங் ஹாலின் பங்கு அந்த வீட்டில் முக்கியமானது.

பரிதி அந்த வீட்டினர் யாருடனும் உணவருந்த மாட்டான். தனது அறையில் தான் உணவருந்துவான்ஏன் அந்த வீட்டில் யாரும் யாருடனும்‌ சேர்நது உணவருந்த மாட்டர்கள்.அதனால் வழக்கம் போல தானாக உணவைத் தட்டில் போட்டுக் கொண்டவன் அவனது அறைக்கு எடுத்து சென்றான். அப்போது டைனிங் ஹாலில் அவனுடைய அண்ணன் தன் மனைவி மகன்களுடன்‌ உணவு உண்பதை கண்டான்.

மனதில் விவரித்திட இயலா ஒரு வெறுமை தோன்றியது. மகிழினி அவள் தான் அவனது உயிர். காவியக் காதலா என்று தெரியவில்லை ஆனால் அவளின்றி அவன்‌ இல்லை. இன்று அவள் மீது இருந்த காதலை விட கோபம் தான் அதிகம் இருந்தது. அவளுக்கென்று அவனது இதயத்தில் ஒரு‌ இடத்தை வைத்திருந்தான் யாருக்கும் கொடுத்திடாத இடம்.

யாருக்குகாகவும் எதையும் பொறுத்து செல்லும் பழக்கம் அவனிடம் இல்லை. அவனுக்கு வேண்டியதை எப்படியேனும் பெற்று விடுவான். குமரனுக்கு பரிதி மீது தனிப் பாசம் ஒன்று இருந்தது. அதனாலே அவன் கேட்ட அத்தனையும்  அவனுக்கு கிடைக்கும். அதனால் பரிதிக்கு கஷ்டம் என்றால் என்னவென்று அறியாது தான் வளர்ந்தான். குமரன் மூன்று பிள்ளைகளையும் சமமாக தான் எண்ணினார். ஆனால் படிக்காமல் இடையிலேயே‌ படிப்பை நிறுத்தி விட்ட பிள்ளைகளை விட கல்லூரி வரை சென்று தனக்கு பிடித்ததை படித்து நல்ல வேலைக்கு செல்லும் மகன் மீது அதிக மரியாதை வைத்திருந்தார். அந்த மரியாதை பணத்தால் அல்ல அவன் எடுக்கும் முடிவுகள் நன்மையை தான் தரும் என்ற நம்பிக்கையால் வந்தது. அந்த நம்பிக்கையில் தான் மகிழினியை விரும்புவதாக கேள்வி பட்டபோது மறுப்பின்றி தலையாட்ட வைத்தது.

எவ்வளவு போராட்டங்கள் எவ்வளவு சண்டைகள் அதையெல்லாம் தாண்டி அவளை திருமணம் செய்ததற்கு காரணம்‌ அவள் மீது இருந்த காதல். அவள் மீது தனக்கு இருந்த காதலைப் போல அவளுக்கு இல்லையோ. அதனால் தான் எளிதில் தன்னை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டாள். இப்போது தேடி அலைவது அவளுக்காக இல்லை அவனுடைய பிள்ளைகளுக்காக. அவர்களை தன்னிடமிருந்து பிரிக்க அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என எண்ணிக் கொண்டவன் கண்ணில் அவள் அவனுக்காக கொடுத்த பவர் பேங்க் பட்டது. அதனை தூக்கி சுவற்றில் வீசினான்.

அதே நேரம் மகிழினியின் பெற்றோர் வீடு:

” எங்க மா இருக்க நீ. எதுக்காக யாருக்கும் தெரியாமல் தனியா இருக்கணும். இங்க வந்தா நாங்க பாத்துப்போம்ல. இப்படி தனியா கிடந்து அல்லல் படணுமா. ‘

“இல்ல பா. கொஞ்ச நாள் தனியா இருக்கேன். அங்க உங்க கூட இருந்தா அவருக்கு என்னோட கஷ்டம் புரியாது. அவங்க வீட்ல இருக்கவங்களும் சுகமா போய் உக்கார்ந்து இருக்கானு பேசுவாங்க இல்ல நீங்க தான் எனக்கு சொல்லிக் கொடுத்து பிரச்சனை பண்ண வச்சீங்கனு அவங்க பையன் கிட்ட சொல்லுவாங்க. இதெல்லாம் எதுக்கு. “

“அவங்க என்ன சொன்னா எங்களுக்கு என்ன. எங்களுக்கு நீ தான்மா முக்கியம். நீ பேசாமா இங்க வாடா”

“ம்மா… இதுக்கு தான் நா பேசாம இருந்தேன். நீங்க எண்ண நினச்சு கவல படுவீங்கனு தான் இப்போ கால் பண்ணேன். சரி மா நா அப்பறம் பேசுறேன். நீங்க போன அபி அம்மா கிட்ட கொடுங்க”.

“தேங்க்ஸ்கா. சிரமம் பாக்காம அப்பா கிட்ட பேசணும்னு சொன்ன உடனே வீட்டுக்கு வந்து உங்க போன அவங்க கிட்ட கொடுத்ததுக்கு”

“பரவால்ல மகி நீ‌ எங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்க. இது விடு நீ‌ பத்திரமா‌ இரு.. நா‌வைக்குறேன்”

அழைப்பை துண்டித்த‌ மகிழினிக்கு இருபத்தியொன்பது வயது. இரு குழந்தைகளின் தாய். சீரியல்களிலும், படத்திலும் வருவதுபோல பால் வண்ண பேரழகி இல்லை அவள். அது வரையறைக்கு அப்பாற்பட்ட நல்லவளும் இல்லை. யதார்த்தவாதி. மாநிறத்திற்கும் சற்று கீழே. ஆனால் கலையான முகம். நீண்ட கண்கள். சிறிய இதழ்கள். பருக்கள் நிறைந்த கண்ணங்கள். ஆனால் அதுவும் அவளுக்கு தனி அழகே. மொத்தத்தில் அக்மார்க் தமிழ் பெண்.

அவளின் நினைவுகள் ஆறு ஆண்டுகளுக்கு பின்னே சென்றது.

 தனது எம்.சி.ஏ படிப்பை முடித்து விட்டு கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி சென்னை வந்து ஒரு வருடம் நிறைவடைந்து இருந்தது மகிழினிக்கு. அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்திருந்தாள். அப்போது  பரிதி அவளுடைய சீனியர். அனைவரிடமும் அன்பாக பழகும் மகியின் குணத்தை கண்டு அவளைக் காதலித்தான்.

பரிதியோடு ஒப்பிடும் போது மகி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். அவளுடைய தந்தையால் அவளையும் அவளது இரு தம்பிகளையும் படிக்க வைக்க மட்டுமே முடிந்தது. அவளுக்கென்று படிப்பை தவிர வேறு ஒன்றையும் சேர்க்க வில்லை அவர். இவளும் இவளது பெரிய தம்பி கனியமுதனும் இப்போது தான் வேலைக்கு செல்கின்றனர். கடைக்குட்டி பொறியியல் படிப்பின் கடைசி வருடத்தில் இருக்கிறான்.

மகிக்கு அலுவலகத்தில் பெண் தோழிகள் மட்டுமே. ஆண்களுடன் சரியாக பேச மாட்டாள். ஆனால் பரிதி தானாக வந்து சில முக்கியமான தருணங்களில் அவளுக்கு உதவியதால் அவனிடம் மட்டும் பேசுவாள். இந்நிலையில் தான் அவளிடம் காதலைச் சொன்னான் பரிதி. முதலில் மறுத்துப் பார்த்தாள். ஆறு‌ மாதங்கள் கடந்தும் அவனது காதலில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து மகியை வற்புறுத்தி கொண்டே இருந்தான் முகம் சுளிக்காத வகையில். பரிதியை அவளுக்கு நட்பு ரீதியாக பிடிக்கும். எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவன். அவன் சப்தமாக பேசிக் கூட அவள் கேட்டது இல்லை. காதல் திருமணத்தில் அவளுக்கு எதிர்ப்பு ஒன்றும் இல்லை. இறுதியில் தெரியாத யாரோ ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதற்கு பரிதியை திருமணம் செய்யலாம் என்று எண்ணினாள்.அதனால் பரிதிப் பற்றிய தகவல்களை தன் தந்தையிடம் தெரிவித்தாள். ஏனெனில் மகியின் தந்தை மோகன் தந்தையாக மட்டுமல்லாமல் தோழனாகவும் பழகுபவர்.

மோகனுக்கு விஷயம் தெரிந்ததும் மற்ற பெற்றோரைப் போன்று இல்லாமல் சற்று யோசித்தவர் பரிதியிடம் தனது அலைபேசி எண்ணை பகிர சொன்னார். இதுவரை அவரது மகள் என்ன ஆசைப்பட்டாலும் அதனை அவர்‌ நிறைவேற்றி வைத்துள்ளார். பரிதி மீது துளி அளவுக் கூட விருப்பம் இல்லையெனில் மகி அவனைப் பற்றி இவரிடம் உரைத்திருக்க மாட்டாள் என எண்ணினார்.அதன்‌படி அவள் பகிர்ந்து கொண்ட அடுத்த நொடி பரிதி மகியின் தந்தைக்கு அழைத்தான். இருவரும் பேசியவுடன் பரிதியின் ஜாதகமும் மகியின் ஜாதகமும் பொருத்தம் பார்க்கப்பட்டது. மகியின் வீட்டில் இப்படி என்றால் பரிதியின் வீட்டில் நிலைமை தலைகீழ்.

ரம்யாவிற்கு பரிதி படித்த வேலைக்கு செல்லும் பெண்ணை திருமணம் செய்வதில் விருப்பமில்லை. எங்கு மகி வந்த பிறகு தனது அதிகாரம் பறி போய்விடுமோ என்று அஞ்சினாள். இதுவரை மூத்த மருமகளான சாய் இவளை மீறி எதுவுமே செய்தது இல்லை. அவள் எண்ண அணிய வேண்டும், அவளது பெற்றோர் வீட்டுக்கு எப்போது செல்ல வேண்டும் எத்தனை நாள் அங்கே தங்குவது என எல்லாம் இவளது விருப்பப்படியே. ஆனால் மகி இப்படி இருப்பாள் என எண்ண நிச்சயம். அதனால் சாய் தேவியின் ஊரிலிருந்து அதிகம் படித்திடாத ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்பினாள்.

அதனால் தாயிடம் எவ்வளவு எடுத்துச் சொல்லி இக்கல்யாணத்தை நிறுத்த முடியாமோ அவ்வளவு வேலைகளையும் செய்தாள். மகளின் போதனையில் திருமணத்திற்கு முன்பே மகியின் மீது தவறான எண்ணம் வந்துவிட்டது மலருக்கு. இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட பரிதியோ வீட்டை விட்டு வெளியே சென்று திருமணத்தை நடத்திக் கொள்வேன் என மிரட்டினான். அது அவரையும் ரம்யாவையும்   மகியின் மீது வன்மமாக மாற்றி விட்டது.

தங்கள் கைகளில் இருந்த மகன் கை நழுவிப்  போய்விட்டதாக அவர்களே எண்ணினர். அதன் விளைவு ரம்யா மகிக்கும், பரிதிக்கும்‌ பெயர் பொருத்தம் கூட இல்லை என்றும் அதனால் திருமணத்தை நடத்தக் கூடாது என்றும் தாயிடமும் தம்பியிடமும் சொன்னாள். அதைக் கண்டு கொள்ளாத பரிதிக்கு அடுத்த இடி மகியின் வீட்டிலிருந்து. அவர்களும் ஜாதகம் பொருந்தவில்லை என்று கூறி இப்பேச்சை விட்டு விடும்படிக் கூற உடைந்து போனான் பரிதி.

தினமும் அலுவலகத்திலும், வீட்டிலும் மகியிடம் தன் காதலை எடுத்து கூற ஆரம்பித்தான். கடைசியாக அவனது காதலை ஏற்றுக் கொண்டாள். ஆனால் பெற்றோர் சம்மதம் வேண்டும் எனக் கூற தினமும் மகியின் தந்தைக்கு அழைத்து பேசுவான் பரிதி. இடையில் மகியின் தாய்க்கு மிகவும் உடல் நிலை மோசமானது. உயிர் பிழைப்பதே அரிது என சொன்னார்கள் மருத்துவர்கள். கையில் இருந்த கடைசி பங்கு சேமிப்பும் அதில் போய்விட்டது.

தற்போது திருமணம் நடந்த இயலாது என மோகன் சொல்லவும் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பதாக பரிதி அவருக்கு உறுதியளித்தான். ஒரு வழியாக மோகனின் மனமும் கரைந்தது பரிதியின்‌ உறுதியில் கூடுதலாக அவரை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்ற மகியின் வார்த்தைகளும்.

ஒருவழியாக இரு குடும்பத்தாரும் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். பரிதியிடம் மோகன் நேரிடையாகவே சொல்லியிருந்தார் தங்களால் மகிக்கு பெரிய அளவில் ஏதும் செய்ய இயலாது என. பரிதியோ எனக்கு மகி போதும் என்று விட்டான். இது மலருக்கும் , ரம்யாவிற்கும்‌ மேலும் எரிச்சலானது. ஏனெனில் சாய் தேவியை ( இனி தேவி என குறிப்பிடுகிறேன்) சிவாவிற்கு பேசும் போது தேவியின் வீட்டில் பதினைந்து பவுன் நகையும், பாத்திர பண்டங்களும் வாங்கி தருவதாக சொன்னார்கள். ஆனால் மலரும் ரம்யாவும் இருபது பவுன் நகையும், ஒரு லட்சத்திற்கு பாத்திரங்களும், டீவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என கேட்டு வாங்கினர்.

குறைவான சம்பளம்‌ வாங்கும் சிவாவிற்கே இவ்வளவு என்றால் பரிதிக்கு என இவர்கள் ஒரு லிஸ்டே ரெடி செய்திருக்க பரிதி மகியின் வீட்டினரால் எதுவும் செய்ய இயலாது என சொல்லியதும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பரிதியும் , மகியும் திருமண கனவுகளில் திளைத்திருக்க ரம்யா மோகனுக்கு அழைத்தாள்.

“ஹலோ.. மகி அப்பாவா”

“ஆமா. நீங்க”

” நா பரிதியோட அக்கா. “

“சொல்லுங்க மா எப்படி இருக்கீங்க “

“ஹான் இருக்கோம். மகிக்கு எவ்வளவு போடுவீங்க”

“எங்க கிட்ட‌ இப்போ எதுவும் இல்லை மா. பத்து. பவுன் கிட்ட எப்படியாவது போடுறேன் “

“என்னது பத்து பவுனா. மூத்தவனுங்கு இருந்து பவுன் போட்டாங்க. எங்க தம்பி வாங்குற சம்பளத்துக்கு குறஞ்சது முப்பது பவுன்‌போடணும்”

“எனக்கு புரியுது மா. ஆனா எங்க கிட்ட இல்ல”

” என்ன இல்லனு சாதாரணமா சொல்லுறீங்க. மாப்ள வீடா இருந்தாலும் எங்க தம்பி ஆசைக்காக தான் உங்க கிட்ட பேசுறேன். முப்பது பவுன்‌ ஏற்பாடு பண்ணுங்க”

ஒரு‌ நிமிடம் தொலைபேசியை வெறித்தவர் மகளுக்கு அழைத்தார். விஷயத்தை உரைத்தவர் மேற் கொண்டு என்ன செய்வது என கேட்டார். மகி சொன்ன‌ பதில் கல்யாணத்தை நிறுத்துங்கள் என்பது தான்.

நடந்ததா தாருமணம்

Advertisement