Advertisement

அத்தியாயம் 9

 

         என்ன தான் தவறெல்லாம் சுருதியின் மீது சுமத்திவிட்டு…உறக்கம் கொண்டாலும் பாதி இரவுக்கு மேல் ஜெயகுமாரால் உறங்க முடியவில்லை…

         ஐந்து வருடங்களாக ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றனர் தான்…ஆனால் ஐந்து வருடங்களில் ஒரு நாள் கூட இப்படி நிம்மதியின்மையாக உணர்ந்தது இல்லை…எதுவோ அழுத்தும் உணர்வு… எப்படி சொல்வது இரவு அளவுக்கதிகமாக வெண்பொங்கலை சாப்பிட்டுவிட்டால் மூச்சு கூட விடமுடியாத மாதிரி எதுவோ நெஞ்சை அடைப்பது போல் உணர்வோமே அப்படிப்பட்ட உணர்வு…ஜெயகுமாரிற்கு புரியவே இல்லை…

         “whats wrong with me “என்று தனதறைக்குள் இருந்த குளியலறையில் அருவி போல கொட்டும் ஷவரின் கீழ் நின்றிருந்த ஜெயக்குமார் தன்னை தானே கேட்டுக்கொண்டான்…விடை தான் தெரிந்தபாடு இல்லை…(எனக்கு தெரியுமே…)

           ஜெயக்குமார் தன்னை தானே self -discovery செய்துகொண்டிருந்த நேரத்தில் அவனின் முயற்சியை கலைக்கும் விதமாக ஒரு கனத்த சாரீரத்தின்

அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா “என்று சுருதியே இல்லாமல் நாராசமாக பாடிக்கொண்டிருந்தது வேறு யாரும் இல்லை…நேற்று கோவித்துக்கொண்டு குமாரின் முகத்தை கூட திரும்பி பார்க்காத  தன்மான சிங்கம்…தடுக்கி விழுக்காத தங்கம் நம் கதாநாயகி சுருதியே… பஸ் பஸ்…இந்த பட்டமெல்லாம் இன்று காலை 7.59 வரை தான்…எப்பொழுது ஜெயக்குமாரின் வீட்டுக்குள் நுழைந்தாளோ அப்பொழுதே அந்த பட்டங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு மானம்கெட்ட மன்னாரு…புல்தடுக்கி பயில்வான் என்ற புதுபட்டங்கள் பெற்ற நம் கதாநாயகி சுருதி தான்…

 

     அந்த பாடல் அவன் செவிவழி உட்சென்று மூளையை அடைந்து அக்குரலுக்கான நபரை அடையாள படுத்தியது…

      சுருதி எப்பொழுதுமே இப்படி தான் அனைவருக்குமே இந்த மாதிரி ஒரு பாடல் வைத்திருப்பாள்…பெரிய அத்தையான ஜெயக்குமாரின் அம்மாவிற்கு இந்த பாடலும்…தன் சின்ன அத்தை மீனாட்சிக்கு

“அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ”…. என்ற பாடலும் அவர்களை பார்த்தவுடன் பாடுவாள்…(மீத பாடல்களை கதையின் போக்கில் காணலாம்…)

        “சுருதி…”என்று சந்தோசமாக முணுமுணுத்தவன் தனக்கு மேலே கொட்டும் செயற்கை அருவியை கைத்திருகியால் நிற்பாட்டிவிட்டு அருகிலிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு குளியலறையில் இருந்து வெளிவந்தான் ஜெயக்குமார்…(நல்லவேலை…)

           வேகமாக அறையின் கதவை திறக்கப்போனவன் திறக்காமல் கதவில் காதை வைத்து அந்த கர்ணகொடூரமான பாடலை கேட்டான் (உன் மாமா மகள் குரலை நீ தான் மெச்சுக்கணும்…)

                               சுருதியும் அதே போல் அவன் அறையின் கதவின் மறுபக்கம் சாய்ந்து பாடிக் கொண்டிருந்தவள் அறையினுள் நடமாடும் சத்தம் கேட்டவுடன் பாடுவதை நிறுத்தியிருந்தாள்…கதவில் உள்புறம் காதைவைத்து உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தவனோ பாட்டு சத்தம் கேட்காததால் அவள் சென்றுவிட்டாள் என்று நினைத்து வேகமாக கதவை இழுத்தான்…

         அதுவரை கதவின் மேல் சாய்ந்துநின்றவள் கதவு வலுவாக இழுக்கப்பட்டதும் பிடிமானம் இல்லாமல் அவளும் கதவுடனே இழுக்கப்பட்டாள்…

 கதவை திறந்த ஜெயக்குமாரோ தன்னை நோக்கி ஒரு உருவம் அதாவது சுருதி வருவதை பார்த்து அலறியடித்து தள்ளி நின்றான்….

      அம்மா என்ற அலறலுடன் சுருதி கீழே விழுந்து கிடந்தாள்…கீழே விழுந்து கிடந்த சுருதியை பார்த்து அதிர்ந்தவன் சிறிது நேரத்தில் பெருங்குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்தான்…

       சுருதியோ முகத்தை சுளித்தவாறு அவனை நோக்கி கை நீட்டியவாறு “தூக்கி விடுடா பன்னி…சிரிச்சுட்டு இருக்க…நொண்டி குமாரு…பரதேசி…”என்று திட்ட ஆரம்பித்தாள்…

         குமாரும் சிரித்தவாறே அவளின் கையை பிடித்து தூக்கி விட்டான்….

          அவனின் சிரிப்பு சத்தத்திலே குமார் குடும்பத்தார் அனைவரும் சம்பவ இடத்தை நெருங்கிருந்தனர்…அவர்கள் வந்து பார்த்த பொழுது ஜெயக்குமார் சுருதியை கையை பிடித்து தூக்கிக்கொண்டிருந்தான்…

       “சுருதி எப்ப டா வந்த…என்ன ஆச்சு…”என்று பதட்டமாக சுருதியை நெருங்கினார் லட்சுமி…

        அதற்கு சற்றும் குறையாத பதட்டத்துடன்  செல்வாவும்…நாகராஜனும் சுருதியை நெருங்கினர்…

 சுருதியோ”அத்தை இவன் தான் என்னை தள்ளிவிட்டுட்டான்…நேத்து பால்பச்சை கலர் சட்டை குடுத்தேன்னு என்னை திட்டிகிட்டே” என்று கூறியவாறே அவரின் தோளை பலமாக கைக்கொண்டு தள்ளி “இப்டி தான்  தள்ளுனான நான் கீழே விழுந்துட்டேன் அத்தை…” என்று நடக்காத ஒரு காரியத்தை நடந்த மாதிரி செய்முறை விளக்கத்துடன் கூறிக்கொண்டிருந்தாள்…

அதை கேட்ட ஜெயக்குமாரோ “அடிப்பாவி..”என்று வாயில் கைவைத்து கூறியவன் அவனின் அம்மாவின் புறம் திரும்பியவன்”சத்தியமா இல்லை மா… இவ பொய் சொல்லுறா மா…நான் கதவை திறக்குறேன்…இவ வந்து விழுகுறா மா…”என்று வேகவேகமாக கூறினான்…

          ஜெயக்குமாரின் அம்மாவும் சிறிது சந்தேகமாக சுருதியை நோக்கினார்…சுருதியோ உலகநாயகனையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு தன் மாமாவின் தோளில் சாய்ந்துகொண்டு வராத கண்ணீரை அவரின் சட்டையில் தொடைத்து கொண்டிருந்தாள்…(குமாரு நிஜமாவே இந்த பொண்ணு உனக்கு வேணுமா…)

               அவ்வளவு தான் தன் மருமகளின் கண்ணீரை பார்த்து வந்ததே லக்ஷ்மிக்கு கோவம் “ஏன் குமார் இப்டி பண்ற…பாவம் டா…எப்ப பார்த்தாலும் அவ கூடயே வம்பு இழுத்துகிட்டு இருக்க…கல்யாணம் ஆகப்போற பையன் மாதிரியா நீ நடத்துக்குற….ஏதோ சின்னப்பையன் மாதிரி…”என்று திட்ட ஆரம்பித்திருந்தார்…

         செல்வாவும் நாகராஜனும் பொங்கி வரும் சிரிப்பை அடக்கும் வழி தெரியாமல் உதட்டை கடித்து சிரிப்பை அடங்கிக்கொண்டனர்…

      பத்து நிமிடங்கள் திட்டு மற்றும் அறிவுரையால் அவனை அர்ச்சித்தவர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தார்…

 “காலேஜ்க்கு இன்னும் நேரம் ஆகலையா உனக்கு…வேகமா போய் டிரஸ் மாத்திட்டு சாப்பிட வா..போ …”என்று அந்த அர்ச்சனைக்கு ஒரு முடிவுரை கொடுத்தவர்  சுருதியை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு ஹால் நோக்கி சென்றார் லட்சுமி…அவருடனே நாகராஜனும் செல்வாவும் சென்றனர்…

 லக்ஷ்மியின் கைவளைவில் இருந்த சுருதியோ ஜெயக்குமாரை நோக்கி திரும்பி பார்த்து எப்பொழுதும் அவனை இக்கட்டில் மாட்டி விட்டால் செய்யும் தன் மேனரிஸத்தை செய்தாள்…இரு புருவங்களையும் உயர்த்தி அளவிட முடியா குறும்பை கண்களில் தேக்கி கீழ் உதட்டை பிதுக்கி யவாறு தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்…

         இதெல்லாம் பார்த்தவனுக்கு நியாயத்திற்கு அவள் மேல் கொலைவெறி தான் வந்திருக்க வேண்டும்…ஆனால் அவனோ மிகவும் சந்தோசமாக உணர்ந்தான்…இவ்வளவு நேரம் அவனை அழுத்திய ஏதோ ஒரு உணர்வு அவனை விட்டு தூர சென்றது…

   சிறுவயதிலிருந்தே இருவரும் இப்படி தான்…அளவுக்கதிகமாக சண்டை போடுபவர்கள் எப்பொழுதுமே பாதியில் தாங்களாக சண்டையை நிறுத்தமாட்டார்கள்…யாராவது வந்து நிறுத்தினால் தான் உண்டு…சில வேளைகளில் நேற்று மாதிரி தங்களின் பேச்சால் மற்றவர் காயப்பட்டு சண்டையை பாதியில் முறித்துக்கொண்டால் போய் விளக்கம் எல்லாம் சொல்லமாட்டார்கள்…மற்றவரின் முகத்தையே பார்த்து கொண்டிருப்பர்…காயப்பட்டவரோ மறுநாள் தாங்களே மற்றவரின் வீட்டுக்கு சென்று இப்படி வம்பிழுத்து தங்களுக்கிடையான பிணக்கை சரிசெய்து கொள்வர்…

          இவர்களின் பந்தத்தில் மன்னிப்போ…விளக்கமோ…எதுவும் கிடையாது…காயப்படுத்தியவரை பொறுத்தவரை மன்னிப்பு கேட்பது என்பது அவர்கள் பார்க்கும் இடத்தில நிற்பது…மன்னிக்கப்படுவது என்பது திரும்பி எப்பயும் போல் வம்பிழுப்பது தான்… (உங்க ஆட்டத்துல இது என்ன புது ரகமா இருக்கு…)

         உடையை மாற்றி கீழே வந்த ஜெயக்குமார் முதலில் கண்டது டைன்னிங் டேபிளில் ஒரு கிண்ணம் நிறைய குலாப் ஜாமுன்  இருக்க அதை கரண்டியால் எல்லாம் எடுத்து சாப்பிடாமல்…கையெல்லாம் அந்த பாகு வழிய சாப்பிட்டு கொண்டிருந்த சுருதியை தான்…

        “எத்தை…உன்னை மாதிரி யாராலயும் குலாப் ஜாம்முன் செய்ய முடியாது அத்தை…என்ன டேஸ்ட்டு…என்ன டேஸ்ட்டு…ஜோதிக்கும் கொஞ்சம் சொல்லி குடு அத்தை…”என்று பேச்சு பேச்சாக இருந்தாலும் கவனம் முழுவதையும் கிண்ணத்தில் இருந்த குலாப் ஜாம்முன் மீது வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் சுருதி….

      ஜெயகுமாரிற்கு சுருதியிடம் பிடிக்காத முதல் விஷயம் யாருக்கும் மரியாதை தரமாட்டாள்…தங்கள் குடும்பமே பயந்து நடுங்கும் லக்ஷ்மியை இவள் மட்டுமே அசால்ட்டாக போ வா என்று அழைப்பாள்…மிகவும் சந்தோசமாக இருந்தால் பெயர் சொல்லியே அழைப்பாள்…தன் தாயிடம் மட்டும் இல்லை அனைவரிடமும் அப்படி தான்…

        மரியாதை என்பது நம் அவர்களிடம் பேசும் போலி பேச்சுகளிலோ…அவர்களுக்கு தரும் அதிகப்படியான பணிவோ இல்லை…மரியாதை என்பது நம் மனதில் இருக்க வேண்டும்…சுருதி அனைவர்க்கும் மரியாதை தருவாள் …பயப்படமாட்டாள்…ஜெயக்குமாரின் அம்மாவின் மேல் சுருதிக்கு மரியாதை இருக்கிறது பயம் இல்லை…ஜெயக்குமாரோ பயம் மரியாதை இரண்டையும் தனக்குள் வைத்து குழப்பி கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும்…

               மரியாதை என்பது அவர் அந்த இடத்தில் இருந்தாலோ இல்லை என்றாலோ அவர்களுக்கான மதிப்பு இருக்கும்…ஆனால் பயம் என்பது அவர்கள் இருந்தால் மட்டுமே வெளிப்படும்…இல்லையென்றால் பன்மை அழைப்பெல்லாம் தூர தேசம் போயிருக்கும்…

             சுருதியை முறைத்து கொண்டே அவளுக்கு நேரெதிர் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தவன் இட்லி எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான்….

 அவன் வந்து அமர்ந்த பொழுது நிமிர்ந்து பார்த்தவள் தான்…அதற்கு பிறகு அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை…தன் வேளையில் குறியாக இருந்தாள்…அவன் சாப்பிட்டு கை கழுவ எழும் போது தான் தான் குலாப் ஜம்முனை முடித்தவள்…தன் அத்தை லக்ஷ்மியை நோக்கி

  “அத்தை நாளைக்கு 12 மணி போல உங்க மகனை என் கூட வர சொல்லு அத்தை…நா முத வேலை பார்த்த ஸ்கூல் பிரின்சிபால்க்கு பத்திரிகை குடுக்கணும்…ஒழுங்கா வர சொல்லு…நான் மட்டும் தனியா போனா நல்லா இருக்காது…”என்று அவனை பார்த்தவாறே தன் அத்தையிடம் கூறினாள்…

      “அம்மா…லீவெல்லாம் தர மாட்டாங்க…இந்த காலேஜில சேர்ந்து ஒன் வீக் தான் மா ஆகியிருக்கு… உங்களுக்கு தெரியாததா மா…இதுக்கெல்லாம் போய் லீவு போட முடியுமா மா…எப்பயும் போல செல்வாவை கூப்பிட்டுட்டு போக சொல்லுங்க மா…டீச்சர் வேலை பாக்குறவங்க இப்படி தேவை இல்லாம லீவு போடக்கூடாதுனு நீங்க தானே அம்மா சொல்லிருக்கீங்க…செம் வேற வர போகுது…எனக்கு கொஞ்சம் பாடம் வேற நடத்தணும் மா … ” என்று தன் தாய் என்ன சொன்னால் தன்னை  ஆதரிப்பாரோ அப்படி சொன்னான்…

     தன் அத்தையின் பலவீனத்தை நன்கு அறிந்து வைத்திருந்த சுருதி மிகவும் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தன் அத்தையை நிமிர்ந்து நோக்கியவாறு”அத்தை…தொடர்ந்து அங்கே தான் வேலை பாக்க போறேன்…அவர் ரொம்ப நல்லவர் அத்தை…அங்கே வேலை பார்த்தப்ப என்னை அவர் நல்லா பார்த்துக்கிட்டாரு  தெரியுமா அத்தை…பத்தாததுக்கு செல்வா வேற இன்னைக்கு சாந்தரம் சென்னைக்கு போயிருவான்ல…ஜோதி தனியா அனுப்பாது அத்தை…அதான்…ப்ளீஸ் அத்தை..”என்று கூறினாள்…

     அவ்வளவு தான் லட்சுமி மனமிரங்கி”நீ ஒன்னும் லீவு எல்லாம் போட வேண்டாம் குமார்…”என்று கூறியவுடன் கெத்தாக சுருதியை பார்த்தான் ஜெயக்குமார்….அவன் பார்வை திரும்புவதற்குள் “பெர்மிசன் கேட்டு சுருதியை கூப்பிட்டு போயிடு வா…வேற எதுவும் பேசாம இப்ப காலேஜிக்கு கிளம்பு போ…. ” என்று எப்பொழுதும் போல் தன் மருமகளுக்கு சாதகமாக தீர்ப்பை கூறியவர் அவள் சாப்பிட்டு வைத்த பாத்திரத்தை எடுத்து கொண்டு கழுவ சென்றார்…

      “ஒழுங்கா கிளம்பி இரு…நான் வந்து கூப்பிட்டு போறேன்…”என்று ஜெயக்குமார் கூறியவுடன்     

        “நோ நோ…நீ வராம போய்ட்டேனா…நானே வரேன்…உங்க காலேஜ்க்கு கொஞ்சம் முன்னாடி நிக்குறேன்…நீ வா…”என்று கூறியவள் தன் நண்பனுக்கு பாக்கிங்கில் உதவ சென்று விட்டாள்…

       எல்லாம் தலையெழுத்து என்று தனக்குள் புலம்பியவாறே தலையில் அடித்து கொண்டு லேப்டாப் பாகை எடுத்துக்கொண்டு தன் தாயிடம் சொல்லிக்கொண்டு கல்லூரிக்கு சென்றான்….

 

*****************************************************************************

       சொன்னது போலவே மறுநாள் சரியாக 12 மணிக்கு கிளம்பி ஜெயக்குமாரின் கல்லூரியிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் பழ கடையில் நின்று கொண்டு அவனுக்கு அழைத்தாள்…

      ஜெயக்குமார் அவளிடம் சொன்னது போலவே முதல் நாளே permission கேட்டு வாங்கியிருந்தான்…

        ஆனால் அவன் இன்று கல்லூரியில் நுழைந்ததில் இருந்தே கல்லூரி மிகவும் பரபரப்பாக இருந்தது…

        ஏனென்றால் இக்கல்லூரியில்  IT  துறையில் மூன்றாம் ஆண்டு  படிக்கும் மாலா என்ற மாணவி இன்று அதிகாலை 3  மணி போல தற்கொலை செய்திருந்தாள்…இரண்டு துறைகளும் அருகருகில் இருந்ததினால் காவல்துறை வந்து விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்…

         இவர்கள் துறை ஆசிரியர்களிடம் காவல் துறையினர் பேசிக்கொண்டிருந்த போது தான் சுருதி ஜெயக்குமாரின் கைபேசிக்கு அழைத்து கொண்டிருந்தாள்…எத்தனை தடவை cut  பண்ணிவிட்டாலும் திருப்பி திருப்பி அழைத்து கொண்டிருந்தாள்…

        அதை கவனித்த அவர்கள் துரையின் hod “jk  நீங்க பெர்மிசன் கேட்டு இருந்திங்கள…நீங்க கிளம்புங்க…நான் சொல்லுறேன்…”என்று கூறியவர் அவன் மறுக்க மறுக்க காவல் துறை அதிகாரிகளிடமும் பேசி அவனை அனுப்பி வைத்தார்…

   ஜெயக்குமாரோ சுருதியின் மேல் பயங்கர கோவத்தில் இருந்தான்…அழைப்பை ஏற்காவிடில் சிறிது நேரம் கழித்து அழைக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் திருப்பி திருப்பி அழைத்து கொண்டிருந்ததை நினைத்து…

 

 மாலா என்ற பெண்ணை நேற்று தான் பார்த்தான்…நேற்று பெர்மிஷன் வாங்க ப்ரின்ஸிபல் அறைக்கு சென்றான்…அங்கு தான் அவள் நின்றிருந்தாள்…ஏதோ பதட்டமாக நின்று கொண்டிருந்தாள்…எப்பொழுதும் அவனின் அலட்சிய பாவத்துடன் அவளை கடந்து சென்றிருந்தான்…

    இப்பொழுது தான் தோன்றுகிறது நின்று அப்பெண்ணிடம் என்ன எது என்று விசாரித்து இருக்கலாமோ என்று நினைத்தான்…தான் கேட்டிருந்தால் அவளுக்கு ஏதாவது உதவிருக்க முடியுமோ என்று நினைத்து கொண்டான்….அது வேறு சிறிது குற்ற உணர்ச்சியாக இருந்தது…

      அவன் அங்கிருந்து கவனித்த வரை அந்த பெண் நேற்று ப்ரின்ஸிபல் அறைக்கு சென்றது பற்றி காவல்துறைக்கு தெரிய வில்லை போல தான்…

            

 அதை பற்றி சொல்லலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே அவள் மாற்றி மாற்றி அழைத்துக்கொண்டிருந்தாள்…அதற்குள் hod யும் அவனை அனுப்பி வைத்துவிட்டார்…

      அந்த கோவத்துடனே தன் Yamahavai எடுத்து கொண்டு அவள் நின்றிருந்த பழக்கடையை நோக்கி சென்றான்…

       சென்றவன் அங்கு சுருதி நின்ற கோலத்தை பார்த்து அதிர்ந்தான்…தன் அகமும் புறமும் பதற அவளை நோக்கி சென்றான்….

 

நம் செய்யும் ஒவ்வொரு அலட்சியமும் தமக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எவ்வளவு உண்மை ….

 

ஆதிக்கம் தொடரும்…

 

       

        

 

Advertisement