Advertisement

அத்தியாயம் 7 :

 

       இருவரும் ஒருவரையொருவர் வெறித்துநோக்கியவாறே நின்றுக்கொண்டிருந்தனர்…இருவர் பார்வையிலும் அன்போ…காதலோ…வெறுப்போ…குற்றஉணர்ச்சியோ… ஏன் இத்தனை வருடம் கழித்து ஒருவரை பார்த்தால் நாம் சாதாரணமாக மற்றவரை  பார்க்கும் ஒரு ஆராய்ச்சி பார்வை கூட இல்லை…(உங்களலாம் வைச்சு ரொமான்ஸ் ஸ்டோரி எழுதணும்னு நினைச்சேன்ல என்னை சொல்லணும்…)

         தௌபீக்கின் குரல் கேட்டவுடன்… தங்களுடைய நீண்ட நெடிய அறுபது வினாடி பார்வை பரிமாற்றத்திலிருந்து முதலில் சுதாரித்தது சுருதி தான்…தௌபீக்கை நோக்கி பார்வையை திருப்பிய சுருதி அந்த ஒல்லியான சிவந்த உருவத்தை எங்கயோ பார்த்தமாதிரியாகவும் நன்கு பழக்கமான நபராகவும் தோன்றிய 0.0004  நொடிகளில் தௌபீக் குறித்த அவள் அறிந்த Wikipedia அவளுக்கு ஞாபகம் வந்தது…

          ஜெயக்குமாரை டீலில் விட்டவள் “தௌ அண்ணா…எப்படி இருக்கீங்க…”என்று சிரித்தவாறு அவள் நின்றிருந்த இடத்திலிருந்தே கேட்டாள் சுருதி…

         “நல்லா இருக்கேன் மா…நீ எப்படி இருக்க…பரவா இல்லையே என்னை ஞாபகம் வச்சுருக்க…”என்று சிரித்தவாறு தௌபீக் கேட்டுக்கொண்டிருக்கையிலே அவனின் கையை பிடித்து இழுத்தவாறு அந்த இடத்திலிருந்து வெளியேறினான் ஜெயக்குமார்…

       சிறு தோள்குலுக்கலுடன் அவளும் அறையினுள் சென்றாள்…

அவள் தன்னை சிறிதும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டதையும்…தன்னை விட்டு தௌபீக்கிடம் பேசியதையும் நினைத்து      ஜெயக்குமார் கடும்கோபத்தில் இருந்தான்…

     அனைவர்க்கும் முக்கியத்துவம் குடுக்கும் சுருதி ஜெயக்குமாரை மட்டும் அலட்சியமாக கையாண்டாள்…

        ஜெயக்குமார் தன்னை சுற்றிருக்கும் அனைவரையும் இடகையால் போகிற போக்கில் அலட்சியப்படுத்தி செல்பவன் சுருதியின்  ஒவ்வொரு சிறுசிறு செயல்களுக்கும் தன்னை அறியாமல் முக்கியத்துவம் குடுத்தான்…இதுதான் இவர்கள் இருவரின் அனைத்து பிரச்னைகளுக்குமான மூல காரணம்…அதை இருவரும் அறியாதது தான்  இருவருக்கும் இடையேயான கூறுகெட்ட சுவாரசியம்….

 இருநாட்களாக அவர்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கொண்டிருந்த சுருதியும் ஜெயகுமாரும் ஒருவரையொருவர் பார்த்தபின்பு இருவருமே வார்த்தைகளில் வடிக்க முடியா ஒரு ஆறுதலை  comfort zone ஐயை உணர்ந்தார்கள்  என்றால் மிகையில்லை…அதற்குப்பின்பு பதட்டமோ எதுவோ அவர்களை அணுகவேவில்லை…

                   நிச்சயதார்த்தம் வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் நடந்தது…சகோதர்கள் முவர்வீட்டுக்கும் பொதுவானதாக அமைக்கப்பட்ட தோட்டம் ஆகும்…தோட்டம் மிகவும் விஸ்தாரமாக நூறுபேர் புழங்கும் அளவுக்கு போதுமானதாக இருக்கும்…

       மல்லிகை…முல்லை பந்தல் ஒருபுறமும்…Marvel of Peru என்று குறிப்பிடப்படும் அந்திமந்தாரை குறு புதர் செடிகள் அந்திசாயும் வேளை என்பதால் பல வண்ண பூக்களை தன்னகத்தை கொண்டு ஒருபுறமும்…நித்தியகல்யாணி…செம்பருத்தி செடிகள் மாற்றிமாற்றி வைக்கப்பட்டு ஒருபுறமும் அமைக்க பட்டு இருந்தது… அப்பூக்கள் அங்கு வருபவர்கள் அனைவரையும் தன் அழகு மற்றும் மணத்தால் கொள்ளை கொண்டது…

              இவை அனைத்தையும் விட அத்தோட்டதிற்கு உயிர்ரோட்டமாக தோட்டத்தின் மத்தியில்… குழலூதும் கண்ணனின் இன்னிசையில் ஆவி பொருள் அனைத்தையும் மறந்து…அவனின் காதலில் மயங்கி தோளில் சாய்ந்தவாறு ராதை உள்ள கண்ணன் ராதை கற்சிற்பம் இருந்தது…கற்சிற்பத்தின் அடிப்பாகம் முழுவதையும் பார்த்தவர் கண்களை கொள்ளைகொள்ளும் நிறத்தில் வாடாமல்லி பூக்கள் பூத்துக்குலுங்கும்  செடிகள் சுற்றி இருந்தது…அது ஒரு ரம்மியமான சூழலை குடுத்தது என்றால் மிகையாகாது…

    கண்ணன் ராதை சிலைக்கு முன்னர் இவ்விழாவின் “center of the attraction “ஆன மணமக்கள் அமர்வதற்கு நாற்காலிகளும் அவர்களுக்கு நேரெதிராக ஒரு ஜமுக்காளம் விரித்து மாப்பிளை வீட்டார் கொண்டுவந்த சீர் தட்டுகளும்…பெண்வீட்டார் சீர் தட்டுகளும்.. நிச்சியதார்த்த தட்டை மாற்றுபவர்களும் அமர வழிவகை செய்யப்பட்டிருந்தது…இருபுறமும் நாற்காலிகள் போட்டு வந்திருக்கும் சொந்தபந்தங்கள் அமர்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…

வர்ண விளக்கு அலங்காரங்களும் சேர்ந்து கொள்ள அத்தோட்டமே தேவலோகத்தை ஒத்திருந்தது…

    விழாவிற்கு வந்த அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்துக்கொண்டனர்…மணமகனான ஜெயகுமாரும் நண்பர்கள்…தன் சகோதரர்கள் மற்றும் மச்சான்களின் புடைசூழ அமர்ந்திருந்தான்…

       ஆனால் நாயகி சுருதி மட்டும் அவ்விடத்தை வந்து சேரவில்லை…அனைவரின் பார்வையும் அவளுக்காகவே காத்திருந்தது…

       நம் 70  வருட தமிழ் சினிமாவில் வரும் காட்சி போலவே இங்கயும் ஒரு பெரிசு “நேரமாச்சு…பொண்ணை வர சொல்லுங்கப்பா…”என்று கூறி நமக்கு தமிழ் சினிமாவின் மீதிருக்கும் மதிப்பு குறையவிடாமல் பார்த்துக்கொண்டார்…

      அவந்திகா…மற்றும் அவளின் அத்தை சித்திகளின் பாதுகாப்பு வலையத்துடன் சுருதி அவ்விடத்தை அடைந்தாள்…

            மணமகனான ஜெயக்குமாரை விட ஐந்து வருடங்கள் கழித்து சுருதியை  பார்க்கும் அவனின் நண்பர்கள் அசந்துவிட்டனர் என்று தான் கூற வேண்டும்…

      பின்னே ஐந்து வருடங்களுக்கு முன் பார்த்தபொழுது குஷ்பூவின் ஒன்று விட்ட தங்கை மாதிரி நல்ல புஷ்புஸ்னு இருந்தவள் தற்பொழுது aliabhatt இன் பெரியம்மா மகள் மாதிரி  இருந்தால் அவர்களும் பாவம் என்னதான் செய்வார்கள்…

           

             “டேய் மச்சி…what a changeover  டா…”என்று பாலா வாயைப்பிளந்து கூறினான்…அதன் பிறகே அணு ஆராய்ச்சி பண்ணுவதுபோல் தன் உடல் ஆவி அனைத்தையும் கட்டுக்குள் வைத்து அருகில் இருந்த வாடாமல்லி செடியை கவனமாக  பார்த்துக்கொண்டிருந்த ஜெயக்குமார் நிமிர்ந்து தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த ஐந்தடி அழகு ராட்சச புன்னகை புயலை பார்த்தான்…

           குட்டிமுடிகள் விளையாடும் பிறைநெற்றி…எப்பொழுதும் வேண்டுமானாலும் என்னிடம் வழுக்கி விழுவாய் என்று கட்டியம் கூறும் நீண்ட விழிகள்…கத்தி போன்ற மூக்கு…லிப்ஸ்டிக்கின் உபயத்தால் பளபளக்கும் ஜெர்ரி பழ உதடுகள்…கடிக்க தூண்டும் ஆப்பிள் கன்னங்கள்…பிடித்துகொஞ்ச ஆணையிடும்  தாடை…ஆபத்து நிறைந்த மேடுபள்ளங்களும்…சிவப்பு நிற புடவையின் உபயத்தால் பார்க்க தூண்டும் வளைவு நெளிவுகளும்…ஒற்றை சடை பின்னலும்…அதில் ஒட்டி உறவாடிக்கொண்டிருந்த மதுரையின் மல்லிகை சரங்களும் ஜெயக்குமாரின் மனதில் எந்த விதமான  விபத்தையும் ஏற்படுத்தி விடவில்லை…

     ஏனென்றால் அவனின் கண்கள்…இதயம்…மூளை என்று அனைத்தும் அவளின் கொள்ளையடிக்கும் மரகத புன்னைகைக்கு போட்டியாக மின்னிக்கொண்டிருக்கும் அந்த  மாணிக்க நிற சிவப்பு மூக்குத்தியிலே நின்றுவிட்டதே…

      சுருதி அவனின் அருகில் வந்து நிற்கும்வரை மூக்குத்தியை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான் ஜெயக்குமார்…

      சுருதியோ  ஜெயக்குமாரை தவிர அவனை சுற்றிநின்ற அவனின் நண்பர்கள்  அனைவரையும் பார்த்து தனக்குத்தானே நினைவுபடுத்திக்கொண்டவள் அவர்களை பார்த்து

சிரிக்கவும் செய்தாள்…

 

    சுருதி வந்து ஜெயக்குமாரின் அருகில் நின்றவுடன் அனைவரையும் பார்த்து கைகூப்பி வணக்கம் சொல்லியவள் ஏனென்று தெரியாமல் அனிச்சையாக தன் அருகில் நின்றுகொண்டிருக்கும் ஜெயக்குமாரை பார்த்தாள்…

      அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்…இருவர் பார்வையும் எதிர்பாராமல் சந்தித்துக்கொண்டதில் என்ன சிரிக்கவேண்டுமா இல்லை முறைக்கவேண்டுமா என்ற குழப்பத்தில் இருவரும் முழித்தனர்…

      குமாரின்  திருட்டு முழியை பார்த்து சுருதியும் …சுருதியின்  திருட்டு முழியை பார்த்து குமாரும் சிரித்துவிட்டனர்…

       ஜெயகுமாரும் சிரிப்புடன் அவளின் காதருகில் குனிந்து “பேபி மா…மூக்குத்தி எப்ப குத்தின…”என்று என்றும் இல்லாத திருநாளாக அன்பாக தான் கேட்டான்…

          ஆனால் சுருதியோ கண்கள் முழுவதும் அனல் தெறிக்கும் கோபத்துடன் முறைத்துப்பார்த்தவாறு “நொண்டிக்குமாரு…நீ இப்ப recent ஆ எங்கே விழுந்து காலை உடைச்சுகிட்டயோ அப்ப தான் டா குத்தினேன்…”என்று பற்களை கடித்து தன் கோவத்தை அடக்கியவாறு கூறினாள்…(அவன் எம்புட்டு ஆசையா கேட்டான் அதுக்கு ஏன் மா கோவப்படுற…)

          “உன்கிட்ட போய் பேசுனேன் பாரு என்னை சொல்லணும் டி…என் தலையெழுத்து…மூஞ்சை பாரு…குள்ள கொரங்கு…”என்று தன் பட்டப்பேரை கூறிய ஆத்திரத்தில் முகம் சிவக்க கோவப்பட்டான் ஜெயக்குமார்…

         “வா ராஜா வா…உன்னை சொன்னா மட்டும் பொத்துக்கிட்டு கோவம் வரமாதிரி தான் எனக்கும் வரும்…”என்று தலைமுடியை சிலுப்பி கொண்டு போருக்கான அறைகூவல் விட்டாள் சுருதி…

            அப்பொழுதுதான் அவனும் உணர்ந்தான் அவளின் கோவத்திற்கான காரணம் அவளின் பட்டபெயரான பேபிமா என்று கூறியது தான்…

       “ச்சுச்சு…பேபி மா கோவப்படக்கூடாது…என் பேபி மா …இல்லை….”என்று முகம் கொள்ளா சிரிப்புடன் வம்பிழுத்தான் ஜெயக்குமார்….

      சுருதியின் கோவம் எல்லையை கடந்தது…அடுத்து அவள் என்ன சொல்லியிருப்பாளோ அதற்குள் அவளிடம் மணமகன் வீட்டு புடவை நகை அடங்கிய சீர் தட்டை கொடுத்து புடவை மாற்றிவர சொல்லினர்…

  அதை வந்து வாங்கியவள் மீண்டும் பெண்கள் புடைசூழ அழைத்துச்செல்லப்பட்டாள்…

      சென்றுகொண்டிருந்த சுருதி உள்ளுணர்வு உந்த திரும்பி பார்த்தாள்…அங்கு அடக்க முடியா சிரிப்புடனும் கண்கள் நிறைய குறும்புடனும் இவளையே பார்த்தவாறு இருந்தான் ஜெயக்குமார்…

       இவன் எதுக்கு இப்படி சிரிக்குறான்…ஏதோ பயபுள்ள வேலை பார்த்து இருக்கான்…என்னவா இருக்கும்…ஒருவேளை நம்ம பட்டப்பேரை சொன்னது நினைச்சு அல்ப தனமா சிரிக்குறானோ என்று யோசித்தவாறே புடவை மாற்ற சென்றாள் சுருதி…

      சுருதியை உள்ளே அனுப்பிவிட்ட பின்பு தான் முத்துவேல் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கே அப்பாடா என்று இருந்தது…சுருதி ஜெயக்குமார் பேசுவது காதில் விழாவிட்டாலும் இருவரின் முகபாவனையில் இருந்து  ஏதோ சண்டைபோடுகிறார்கள் என்று மட்டும் புரிந்தது…இறுதியில் சுருதியின் முகம் காட்டிய கோவத்தின் மிதமிஞ்சிய அளவில் அனைவரும் பயந்துவிட்டனர்…எங்கே இருவரும் வந்திருக்கும் உறவினர் அனைவரின் முன்னிலையிலும்  சண்டை போட்டு விடுவார்களோ என்று…அதான் அவசரமாக புடவையை குடுத்து அவளை அனுப்பிவைத்தனர்…

                 தன் கண்பார்வையை விட்டு சுருதி மறைந்த பின்பு திரும்பிய ஜெயக்குமார் அங்கு அடக்க முடியா சிரிப்புடன் தன்னை பார்த்துக்கொண்டிருந்த தன் உடன்பிறப்பு மற்றும் நண்பர்களை பார்த்து என்னவென்று இருபுருவங்களையும் தூக்கி விசாரித்தான்…

          ஆறுபேரும் ஒன்றுமில்லை என்பதாக தலையசைத்து விட்டு பின்திரும்பி நின்று சிரித்தனர்…அவர்கள் சிரிக்கிறார்கள் என்பது அனைவரின் உடலும் குலுங்குவதிலே தெரிந்தது…

            தாங்கள் சண்டைபோட்டதை நினைத்து தான் சிரிக்குறார்கள் என்று புரிந்துகொண்ட ஜெயக்குமார் தன் இடதுகையால் அடர்ந்த சிகையை கோதிவிட்டவாறே யோசித்தான்…

     தனது ஐந்து வருட கோவம் எங்கு சென்றது என்று தான் ஜெயக்குமார்க்கு புரியவில்லை…அவள் முகத்தை கூட பார்க்க விருப்பமில்லாமல் மூன்றுவருடங்களாக கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த தான் தான் இப்பொழுது அவளை வம்பிழுத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்…அவளை கண்ணால் காணாதவரை வெறுக்கும் இந்த மனம் தான் பார்தவுடனை  அனைத்தையும்…இடைப்பட்ட ஐந்து வருடத்தையும் கூட தூக்கி கடாசிவிட்டு பேசச்சொல்கிறது…சுருதியை பற்றி நன்கு தெரியும் அவள் எப்போதுமே எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டாள்…அவளுக்கு இந்த வெக்கம் சூடு சுரணை இந்த பொருள்கள் எல்லாம் கிடையாது….என்று…தனக்கு கூடவா அது கிடையாது என்று யோசித்துக்கொண்டிருந்தான்…அவள் இல்லாத இப்பொழுது அவளை வெறுக்கிறான்…இது என்ன டிசைனோ…

            ஜெயக்குமார் எதுக்கு சிரித்தான் என்று யோசித்துக்கொண்டே புடவையை மாற்றிய சுருதி கண்ணாடி முன் நின்று நகையை அணிந்தவாறே நிமிர்ந்து கண்ணாடியை பார்த்தவள் அதிர்ந்து கண் கலங்க…கோவத்தில் முகம் சிவக்க வெளியில் நின்றிருந்த தன் சின்ன அத்தை மீனாட்சியை திட்டுவதற்காக கதவை திறந்தாள்…

           உள்ளே புடவை மாற்றவென்று சென்ற பெண் கண்சிவக்க கோவமாக பத்திரகாளியை போல் வந்து கதவு திறப்பதை பார்த்து வெளியே நின்றவர்கள் அரண்டனர்…

        “எத்தை…உன்கிட்ட என்ன சொன்னேன்…”என்று கண்கள் கலங்க உதடு துடிக்க விட்டால் அழுதுவிடுபவள் போல் கேட்டாள் சுருதி…

        “அடியே…கூறுகெட்டவளே…மொட்டையா உங்ககிட்ட என்ன சொன்னேன்னு கேட்டா நா என்னத்தை டி சொல்லுவேன்…தெளிவா சொல்லு…எதுக்கு அழுகுற…”என்று அவள் திடிரென்று வந்து கேட்கவும் வெளியில் உறவினர்கள் அனைவரும் இருக்கும் பயத்தில் சிறிது அதட்டி கேட்டார் மீனாட்சி…

         “நான் ஒன்னும் அழலை…”என்று வடிந்த கண்ணீரை துடைத்து விட்டவள்…”அன்னைக்கு நீ கால் பண்ணி என்ன கலர்ல புடவை வேணும்னு நீ கேட்டப்ப நான் என்ன கலர் சொன்னேன்…நீ என்ன கலர் எடுத்துட்டு வந்திருக்க…”என்று கையில் பிடித்திருந்த பட்டு ரோஸ் நிற தான் உடுத்திருக்கும் புடவையின் முந்தானையை வீசியவாறு கேட்டாள் சுருதி…

  “ஆலிவ் கிரீன் கலர் புடவை கேட்ட…நானும் எடுத்தேன்…ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு அங்கே வந்த குமார் அந்த சேலையை வைச்சுட்டு இப்ப நீ கட்டிருக்க பட்டுரோஸ் கலர் சேலையை எடுத்தான்..இது தான் என் வருங்கால பொண்டாட்டிக்கு என் சார்பா கொடுக்கணும்னு ஆசையா அவன் காசு போட்டு வாங்குனான்…”என்று அவரின் அக்கா மகன்  அளவுகடந்த அன்பில் வாங்கிருக்கிறான் என்று பெருமையுடன் கூறினார்…

          அதை கேட்ட சுருதியின் முகமோ தான் கட்டியிருக்கும் புடவையின் நிறத்துக்கு போட்டியாக சிவந்தது…வெட்கத்தால் அல்ல கோவத்தால்…

            சுருதிக்கு அது என்னவோ விவரம் தெரிய ஆரம்பித்த வயதிலிருந்தே தன் உடைவிஷயத்தில் மிகவும் கவனமாக மெனக்கிடுவாள்…எந்த அடர்ந்த அடிக்கும் நிறங்களிலும்  உடை எடுக்கவே மாட்டாள்…அந்த மாதிரி நிறத்தில் உடை எடுப்பவர்களை பார்த்தாலே சிரிப்பு தான் வரும் அவளுக்கு…அதிலும் இந்த பட்டுரோஸ் நிறம் என்றால் செத்தே விடுவாள்…அதை நன்கு அறிந்திருந்த ஜெயக்குமார் அதை பயன்படுத்திக்கொண்டான்…இந்நேரத்தில் அவளால் இதை மாற்றவும் முடியாது இல்லையா…

        அதனால் தான் அவன் தன்னை பார்த்து சிரித்துஇருக்கிறான்…என்கிட்டயே விளையாட ஆரம்பிச்சிட்டேல சுமார் மூஞ்சி குமாரு இனி இருக்கு டா மவனே உனக்கு…ஐஞ்சு வருசமா என் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கில்ல அதுல வந்த திமிரு…இரு டா மவனே…என்று தனக்குள் சபதம் ஏற்று கொண்டவள் நொடியில் தன் முகத்தில் சிரிப்பை படரவிட்டவள் தன் கைபேசியை எடுத்து செல்வாவிற்கு அழைத்து கொண்டே தன் அத்தைக்கு கன்னத்தில் முத்தம்மிட்டவள் உள்ளே சென்றாள்…

          சிரித்துக்கொண்டே உள்ளே சென்ற பெண்கள் அவளுக்கு நகையை மாட்ட உதவி செய்தனர்… அப்பொழுது அங்கு வந்த செல்வாவிடம் காதில் எதையோ கூறி எடுத்து வர சொன்னவள் சிரித்த முகமாக எழுந்தாள்…

       மீண்டும் அனைவரின் புடை சூழ விழா நடக்கும் இடத்திற்கு வந்தாள்…மீண்டும் அதைபோல் வணக்கம் செலுத்தினாள்…ஓரக்கண்ணால் ஜெயக்குமாரை பார்த்தாள்…வாய்விட்டு சிரிக்க முடியா காரணத்தால் முகமெல்லாம் சிவக்க உதட்டை கடித்து சிரிப்பை அடக்கி கொண்டு நின்றான்…

            கழுத்தை திருப்பி அவனை பார்த்த சுருதி இரு புருவங்களை உயர்த்தி அளவிடமுடியா குறும்பை கண்களில் தேக்கி கீழுதடை பிதுக்கியவாறு தலையை மேலும் கீழும் ஆட்டினாள்…

            அதை பார்த்த ஜெய்குமாருக்கோ மனதினில் அபாய சங்கோசை அடிக்க ஆரம்பித்தது…சுருதி இப்படி செய்தாள் என்றாலே ஏதோ ஆப்பு வைத்துவிட்டால் என்று அர்த்தம்…சிறுவயதிலிருந்து அவள் இப்டி செய்தபொழுது நடந்ததை எல்லாம் நினைத்துப்பார்த்தவனுக்கு இறுதியில் விடையாய் கிடைத்தது எல்லாம் disaster தான்…

            ஜெயக்குமார் அவள் முகத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே பெரியவர்கள் நிச்சிய பத்திரிகை வாசித்து தட்டை மாற்றிக்கொண்டனர்…திருமணம் இந்த மாதத்தில் அடுத்த 15 நாளில் வரும் முகூர்த்தத்தில் குறிக்கப்பட்டது…

        இருவரின் அருகில் வந்த முத்துவேல் ஆளுக்கு ஒரு மோதிர டப்பாவை குடுத்து மற்றவர்க்கு அணிந்துவிட சொன்னார்….

      “நோ நோ…அப்பா…ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க…”என்று அங்கு குழுமியிருந்த தன் குடும்பத்தினர் வயிற்றில் புளியை கரைத்தாள் சுருதி….

        அனைவர் முன்பும் அதட்ட முடியா சூழ்நிலையில் முத்து பல்லைக்கடித்துக்கொண்டு நின்றிருந்தார்….

         இரண்டு நிமிட இடைவேளையில் வேர்க்க விறுவிறுக்க அங்கு வந்து சேர்த்தான் செல்வா…கையில் ஒரு பையுடன்…

         சுருதியின் அருகில் வந்தவன் அவளிடம் தான் கொண்டுவந்த பையை குடுத்தான்…

       அதை வாய்கொள்ளா சிரிப்புடன் வாங்கிய சுருதி “இப்ப தான் மீனாட்சி அத்தை சொன்னாங்க…இவர் எனக்காக தேடி தேடி இந்த saree  ஆசையா வாங்குனார்னு…அதான் இவர்காகவும் நான் ஒரு ஷர்ட் வாங்குனேன்…அப்புறம் கொடுக்கலாம்னு நினைச்சேன்…ஆனால் saree  மேட்டர் தெரிஞ்சவுடனே அத்தானுக்கு இப்பயே ஷர்ட் கொடுக்கணும்னு தோணுச்சு அதான்…சாரி…”என்று அங்கு வந்திருந்த அனைவரின் கைத்தட்டலுடன் ஜெயகுமாரிடம் பையை நீட்டினாள் சுருதி…

      சுருதி பேசரம்பித்தவுடனே புரிந்துகொண்டான் இது தனக்காக அன்பாக வாங்கிய சட்டை இல்லை…அவளை வம்பிழுத்ததற்காக தண்டனையாக கொடுக்கப்படும் சட்டை என்று…செல்வாவை முறைத்தவாறு சட்டையை வாங்கி கொண்டு வீட்டினுள் சென்றான் தனியாக…

       ஜெயக்குமார் தான் சேலை தெரிவுசெய்தவன் என்று தெரிந்தவுடன் செல்வாவிற்கு அழைத்தவள் அவன் வந்தவுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் செல்வாவை கத்தவிடுவதற்காக ஒரு அடிக்கும் நிறத்தில் சட்டை வாங்கி அவனிடம் குடுத்தாள்…அதை தான் இப்பொழுது எடுத்துவருமாறு கூறி அவனை அனுப்பிவிட்டாள்…செல்வாவும் கனகச்சிதமாக செய்துவிட்டான்…

        செல்வாவிற்கும் சிறிது மனம் உதைத்தது தான் தன் அண்ணன் பாவம் என்று…அவனை பாவம் பார்த்தால் தன் நிலைமை பாவமோ பாவம் ஆகிவிடும் என்று அனுபவத்தால் உணர்ந்தவன் என்பதால் சிறிது நேரத்திற்கு போர்க்கால அடிப்படையில் மனசாட்சிக்கு விடுமுறை அளித்தவன் தன் வீட்டிற்கு சென்று சட்டையை எடுத்துவந்தான்….

  இரண்டு நிமிட இடைவேளையில் சட்டையை மாற்றிக்கொண்டு வெளியே வந்த ஜெயக்குமாரை பார்த்த அவனின் குடும்பத்தார் மற்றும் நண்பர் பட்டாளம் அதிர்ந்து பார்த்தவாறு நின்றனர்…

        ஏனெனில் அது ஒரு அடர் பால் பச்சை நிற சட்டை…பார்த்தவுடன் ப்ப்ப்பாஆ என்று சொல்லும் அளவிற்கு இருந்தது…

          அதிர்வு சிறிதுசிறிதாக சிரிப்பாக மாறியது…வந்திருந்த உறவினர்கள் ஒன்றும் நினைக்கவில்லை அவர்களுக்கு இவர்கள் இருவரும் கரைபுரண்டு ஓடும் காதலினால் இப்படி அன்பளிப்பு கொடுத்துக்கொள்கின்றனர்  என்று நினைத்தனர்…ஆனால் இவர்களை பற்றி நன்கறிந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாதா இது முழுவதும் பழிவாங்கும் படலம் என்று…

          சுருதியின் அருகில் வந்து நின்றவன் அவள் புறம் திரும்பி அவள் கையை இறுக்கமாக பிடித்து மோதிரம் அணிவித்து விட்டான் கல் போன்ற முகத்துடன்…

       சுருதியோ நீ கோவப்பட்டால் நான் என்ன செய்வது என்ற அலட்சியபாவத்துடன் அவனின் கையை பட்டும்படாமலும் பிடித்து மோதிரம் அணிவித்தாள்…

         பின்னே காதல் ரசம் சொட்டும் முகத்துடன் கண்ணன் ராதை இருக்க…முன்னே அலட்சியம் கோவம் நிறைந்த முகத்துடன் சுருதி ஜெயக்குமார் இருந்தனர்…

         கண்டிப்பாக இது ஒரு நகைமுரண் தான்…இக்காட்சியை மட்டும் உலகநாயகன்  பாத்திருந்தால் நகைமுரண் என்ற தலைப்பில் புரியாமலே ஒருமணி நேரம் பேசியிருப்பார்… ஆனால் அவர்க்கு அதிர்ஷ்டம் இல்லை…

 

நீயும் நானும் …

ஈர்ப்பும் விசையும்…

 

ஆதிக்கம் தொடரும்…

 

Advertisement