Advertisement

அத்தியாயம் 2

         

        பழமையும் புதுமையும் கை கோர்த்து களிநடனம் புரியும் மதுரையின் புறநகர் பகுதியில் பல எக்கர்நிலங்களை வளைத்து போட்டு அப்பொறியியல் கல்லூரியை  கட்டமைத்திருந்தனர்…மத்தியில் அமைச்சராய் இருப்பவரின் வாரிசால் ஆரம்பிக்கப்பட்டது கல்வி நிறுவனம்…..இக்கல்லூரி மதுரையில் ஒழுக்கத்திற்கும் கல்விமுறைக்கும் புகழ்பெற்றது ஆகும்… இந்நிறுவனம் பல தொண்டு காரியங்களையும் செய்து வருகிறது…இப்படி தன்னகத்தே பல பெருமைகளை வைத்திருக்கும் இக்கல்லுரியின் மின்னணுவியல் இன்ஜினியரிங் இளங்கலை பிரிவில் 3 ஆம் ஆண்டு வகுப்பறை அடுத்த பாடவேளைக்கு வரவேண்டிய ஆசிரியர் இன்னும் வராததால் ஆர்ப்பாட்டமாக இருந்தது…

         மின்னணுவியல்  பிரிவு என்றாலே அங்கு பெண்களை காண்பது அரிதாகும்…இந்த பெண்ணினத்துக்கு இந்த  மின் சம்பந்தப்பட்ட படிப்பில் அப்படி என்ன ஒவ்வாமையோ…(நான் ஒரு எலக்ட்ரானிக்ஸ் ஸ்டுடென்ட் மக்களே)

         அந்த வகுப்பிலும் ஒரு 50  மாணவர்களுக்கு இடையில் 3  பூச்செடிகள் மட்டும் இருந்தனர்….அதாங்க 3 மாணவிகள்…அவர்கள் மூவரும் ஏன் எதற்கு என்று தெரியாமல் இப்பிரிவில் சேர்ந்தவர்கள்…சேர்ந்தபின்பு ஏன் இப்பிரிவு எடுத்தோம் என்று தினமும் புலம்புவர்கள்.. அவர்கள் தான் நம் கதாநாயகனின் வாழ்கைமுறையை வரும் நாட்களில் மாற்றப்போகின்றனர்…விதி போடும் முடிச்சை யாரும் அறிவதில்லை…

அவர்களின் பெயர்கள் நவீனா…பவித்ரா…பாரதி

     .

          “ஏன் டி நவி நம்ம சொர்ணாக்கா நேத்து தானே ரிட்டைர்டு ஆனாங்க…இப்ப அவங்க ஹவர் தானே…நமக்கு mc எடுக்க யாரு வருவாங்க…”என்று தன் தோழி நவீனாவிடம் விசாரித்தாள் பவித்ரா

    “தெரில டி பவி…நம்ம பிரின்சிபல் ஆளுகிட்ட கேளு…அவளுக்கு தெரியும் டி…”என்று சிரித்துக்கொண்டே கூறினாள் நவீனா

     “சாவடிச்சுருவேன் டி…உன்னால இன்னைக்கு காலைல அந்த சந்துரு எருமைமாடுஉன் ஆளுக்கு உடம்பு சரி இல்லையாம்…உன்னை பார்த்த தான் உடம்பு சரி ஆகும்னு சொல்லிட்டு இருக்காராம்…போய்  என்னனு பாரு…வெளியே தான் நிக்குறாரு…வேகமா போய் பாருன்னு சொல்ரான்.. நானும் யாரடா இவன் சொல்றான்னு போய் பார்த்தா அந்த டக்வாத்து நிக்குறாரார்  டி…”என்று நவீனாவை அடித்தவாறு கூறினாள் பாரதி….(டக்வாத்து என்று பாரதியால் அன்பாக அழைக்கப்படுபவர் இக்கல்லூரியின் பிரின்சிபல் தாங்க…)

     “ஹா ஹா ஹா மச்சி…விடுடி …அந்த ஆளு நீ மட்டும் id கார்டு போடாம வந்த ரெண்டு நாளும் உன்னை விட்டார்ல அதான்…”என்று மேலும் வம்பு வளர்த்தாள் பவி

     “அடியே ரெண்டு தடவையும் அந்தாள் முன்னாடியே அப்டி அழுது சீன் போட்டு வந்தேன் டி…அந்தாளும் பாவம்னு விட்டுட்டார்…அதே போய் இப்டி பேசிட்டு இருக்கீங்க…”என்று இப்பயும் அழுதுவிடுபவள் போல் கூறினாள் பாரதி

     “சரி இப்ப யாரு வரப்போறாங்கனு தெரியுமா…”என்று மீண்டும் கேட்டாள் நவீனா

     ” யாரோ புதுசா ஒருத்தர் வர்றராம்…ஐஐடில MTech பண்ணி இருக்காராம்அப்டி  ஆஹோ ஓஹோனு நம்ம அலெர்ட் ஆறுமுகம்(HOD) புவி மேம் கிட்ட அள்ளி விட்டுட்டு இருந்தார்…நான் நேத்து ரெகார்ட் நோட் சைன் வாங்க போனப்ப கேட்டேன்…என்று அசிரத்தையாக கூறினாள்

    

                 இவ்வாறு பல உரையாடல்கள் அங்கு நடந்துகொண்டிருந்த போது அந்தப்பிரிவின் HOD (அலெர்ட் ஆறுமுகம்) மற்றும் ஒரு இளைஞனும்  உள்நுழைந்தனர்

        HOD க்கு பின் உள்நுழைந்தவனே பார்த்த மும்பெருதேவிகளும் 240 வால்ட் மின்சாரத்தை மொத்தமாக தங்கள் மேல் பாச்சியது போல் அதிர்ந்து நின்றனர்

2 மணி நேரம் 40 நிமிடம் 29 வினாடிகளுக்கு முன்பு

     கோரிப்பாளையத்தின் ஒரு குறுக்கு சந்தில் மூன்று மாணவிகளை சுமந்துகொண்டு படுவேகமாக வந்த அந்த வெஸ்பா மெயின் வீதியை சென்றடையும் போகும் கணநேரத்தில் தனக்கு எதிராக வந்த Yamaha YZF R3 மீது மோதி கீழே விழுந்திருந்தது

       அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடித்திருந்தது

         மூவர் வந்த வண்டி கீழே விழுந்திருந்தது… அவர்கள் மட்டும் காற்றிலா மிதக்க முடியும்…அவர்களும் கீழே விழுந்திருந்தனர்அந்த மூவர் நவீனா…பவி…பாரதி

          கீழே விழுந்திருந்த மூவரும் தட்டுத்தடுமாறி எழுந்திருந்தனர்…இவர்களை இடித்து தள்ளிய அந்த இருசக்கர குதிரை வண்டியோ அதை இயங்கி வந்தவனோ அசைய கூட இல்லை

           “கண்ணு என்ன உனக்கு புடணிலயா இருக்கு…இப்படி வந்து மோதுற…பொறுக்கி…விடிச்சும் விடியாம கூட சரக்கு அடிச்சுட்டு வந்து மோத வேண்டியது…உங்களெல்லாம் பெத்து ரோட்ல விட்ருவாங்க போலே…ச்சை..உ உ “என்று நவீனா எரிச்சலோடு கத்தி கொண்டிருந்த வேளையில் அந்த இடித்தவனோ மிக மிக மெதுவாக தனது ஹெல்மட்டை கழட்டி கறுத்து அடர்ந்த தன்  சிகையை லேசாக கோதிவிட்டு கொண்டே மிக அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தான் பாருங்களேன்…மூவரும் டோட்டல் அவுட்…(ஹீரோ என்ட்ரிகை தட்டுங்க மக்களே)

                ஆறடி உயரத்தில்…சிவந்த நிறத்தில்கூர்மையான கண்கள் அது முழுவதும் நிறைந்த அலட்சிய பாவத்துடன்…..நின்றவனை எதிர்த்து பேசவும் முடியுமா

               “ஒன்வே எதுன்னு பார்க்குற அளவுக்கு நான் தெளிவா தான் இருக்கேன்…நீங்க எப்டியோ… இன்னும் 10 மணிகூட ஆகலையே…அதுக்குள்ள எப்படி… உங்களெல்லாம் பெத்து oneway ல அனுப்பி வைச்சுருவாங்க போல.... உங்க மேல இருக்க தூசி துரும்பு…சேறு சகதி எல்லாம் தட்டிவிட்டுட்டு காலேஜ் போக பாருங்க….”என்று வண்டியை ஸ்டார்ட் செய்தவாறு கூறினான்

    பத்தடி தூரம் சென்றவன்  மீண்டும் வண்டியை திரும்பி இவர்களை நெருங்கியவன் “பாத்திங்களா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்…அடுத்த கட்டிங்ல போலீஸ் இருப்பாங்க….ஹெல்மெட் போடாட்டி பிடிச்சுக்குவாங்க…அப்புறம் உங்களுக்கு காலேஜ்க்கு லேட் ஆயிரும் பாருங்க…”என்று அக்கறையாக கூறுவது போல் அந்த கண்களில் அளவிட முடிய அலட்சியம் மற்றும் இலவச இணைப்பாக நக்கலுடன் கூறி சென்றான்

 அவன் கடந்த சென்ற பின்பு தான் அந்த மூன்று இன்ஸ்டன்ட் கண்ணகி சிலைகளுக்கும் உயிர் வந்து ஒரே நேரத்தில் “போடா ஷேவிங் பண்ண கொரங்கு “என்று கோரஸாக கத்தினர்

      இவர்களை விட்டு சிறிது தூரம் கடந்து சென்றிருந்தவன் வண்டி ஓட்டிக்கொண்டே இவர்களை திரும்பி பார்த்து கொன்றுவேன் என்று கையை காட்டிவிட்டு சென்றான்

      அவனை பார்த்து கட்டை விரலை தலைகீழாக காட்டி சிரித்தனர்…அவனின் ரியர் வியூ கண்ணாடியில் தெரியும் என்ற நம்பிக்கையில்

       “ஒருத்தன் அழகா இருந்துற கூடாதே…நம்மள கீழே தள்ளி விட்டதே கூட மறந்துட்டு அவனை ஆஆ னு பார்ப்பீங்களே…”என்று நவீனா காட்டமாக இருவரையும் திட்டினாள்

       அதற்கெல்லாம் அசருப்பவர்களா”வந்தது oneway  அதுல என்ன நமக்குலாம் பேச்சு வேண்டிக்கிடக்கு…”என்று பவியும்

      “நம்மளாச்சும் பரவாஇல்லை டி…அவன் ஹெல்மெட் கழட்டுனா உடனே இவ விட்ட ஜொல்லுல வைகை ஆறே நெம்பி போச்சு…இவ பேச வந்துட்டா…போடி…”என்று பாரதியும் எகிறினர்

       “விடு மச்சி…அழகை கண்டா ரசிகனும் மச்சி…”என்று உடனடியாக சமாதான உடன்படிக்கை போட்டாள் நவீனா

       மூவரும் சிரித்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கோரிப்பாளையம் வண்டிகள் நிப்பாட்டும் இடத்தில நிற்பாட்டி விட்டு எப்பொழுதும் தாங்கள் செல்லும் கல்லூரி பேருந்தை கரணம் தப்பினால் மரணம் என்னும் அளவிற்கு லாரி காருக்குள் புகுந்து ஓடி பிடித்து தாங்கள் கல்லூரியை வந்தடைந்தனர்…

 

இப்பொழுது

        வகுப்பறையினில் நுழைந்த HOD “குட் மோர்னிங் ஸ்டுடென்ட்ஸ்இவர் ஜெயக்குமார்…ஐஐடி ல M Tech பண்ணிருக்காரு…இவர் தான் நம்ம டிபார்ட்மென்ட் க்கு புதுசா வந்திருக்க ஸ்டாப்…இவர் தான் உங்களுக்கு இனிமேல் மைக்ரோ processor பேப்பர் எடுப்பார்…சார் யூ கேர்ரி ஆன்…”என்று கூறிவிட்டு அனைவரிடமும் விடைபெற்று சென்றார்

           “குட் மோர்னிங் ஸ்டுடென்ட்ஸ்…என் டீடெயில்ஸ் எல்லாம் அவர் சொல்லிட்டு போய்ட்டாரு…அவ்வளவு தான் என்னை பத்தி சொல்ல…இனிமே நீங்க உங்களை பத்தி சொல்லுங்க…”என்று ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி கொள்ள சொல்லிவிட்டு நாற்காலியில் அமராமல் மேசை மீது அமர்ந்து கொண்டு அவர்கள் கூறுவதை கேக்க ஆரம்பித்தான்

                “என்ன டி இவர் நமக்கு புதுசா வந்திருக்குற ஸ்டாப்பா…செத்தோம் போ…காலைல நடந்தது எல்லாம் மனசுல வைச்சுட்டு நம்மள பழிவாங்குவாரோ… “என்று சிறிது பயத்துடன் பாரதி  தான் யூக திறமையை ஆரம்பித்து வைத்தாள்

     தாங்கள் இருவர் மட்டும் சளைத்தவர்களா என்று நவீனா மற்றும் பவித்ராவும்  70 வருட இந்திய சினிமாவின் பழிவாங்கும் திரைக்கதை அனைத்தையும் தங்களுக்கு ஏற்றவாறு modify  செய்து கூறி தங்களின் யூக திறமையை காட்டி மேலும் மேலும் மூவரே  பயந்து கொண்டனர்

           என்ன தான் மூவரும் இத்தனை அழிச்சாட்டியம் செய்தாலும் படிப்பில் மிகவும் கவனமாக இருப்பார்கள்…தாங்கள் காலையில் செய்த ரகளையில் தங்கள் படிப்புக்கு குந்தகம் வந்துவிடுமோ என்றே பயந்தனர்…

       ஆனால் வந்ததிலிருந்து ஜெயக்குமார் இவர்கள் பக்கம் திரும்ப கூட இல்லை…

            வரிசை படி ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக்கொண்டு வந்தது இறுதியாக பெண்கள் வரிசையில் வந்து நின்றது…

        ஜெயக்குமார் இவர்கள் மூவரையும் தெரிந்தமாதிரி கூட காட்டி கொள்ளவில்லை…

இப்பொழுது தான் முதல்முதலாக பார்ப்பது போல் பார்த்து சொல்லுங்க கேர்ள்ஸ் என்று கூறினான்

   எப்டியோ திக்கி திணறி மூவரும் தங்கள் அறிமுகத்தை முடித்தனர்…மொத்த வகுப்பறையயும் அதாவது அன்றைக்கு கல்லூரிக்கு வராத 3 நபர்களை தவிர்த்து மீதம் உள்ள 47 பெரும் இவர்களை தான் அதிசயமாக பார்த்தனர்

   47 பேரையும் பேசியே கொல்லும் இந்த முப்பெருதேவிகளா இன்று அறிமுகத்துக்கு கூட திக்கி திணறி பேசுகின்றனர் என்று…கூச்சம் என்றல்லாம் சொல்ல முடியாது…வந்த முதல் நாளே அங்கிருந்த 50 மாணவர்களுடனும்  தானாக வந்து அறிமுகமானவர்கள் ஆச்சே

      அடுத்த ஹவர்க்கான மணி அடித்தவுடன்  ஜெயக்குமார் அவ்வகுப்பறையிலிருந்து விடைபெற்று வெளியேறினான்

வெளியேறிய ஜெயக்குமார் பின்னாடியே சென்ற மூவரும் அவனிடம் மன்னிப்பை வேண்டினர்…        

         மீண்டும் அதே அலட்சிய பாவனையில் “பரவாஇல்லை…”என்று கூறிவிட்டு சென்றான்…அவனின் நடை பாவனை என்று அனைத்திலும் அலட்சியம் மட்டுமே…

           காலையில் வீட்டிலிருந்து வெளியேறிய ஜெயக்குமார் தன்னுடைய வண்டியில் பயணம் செய்தவாறே மூன்று மாத காலங்களில் தன் வாழ்வில் நடந்த மாற்றத்தை பற்றி நினைக்க ஆரம்பித்திருந்தான்

      தன் மாமா கூறியதற்காக சென்னையில் தான் பணிபுரிந்த கல்லூரியை விட்டு வெளியேறி…அந்த சீமை சித்தராங்கியை மணப்பதற்காக இங்கு வந்திருக்கிறான்

       இத்தனை வருடங்களில் அவள் கொஞ்சமாவது மாறியிருப்பாளா…இல்லை இன்னும் அது போல் தான் இருப்பாளா…தெரியவில்லை

       இன்னும் சிறிது காலத்தில் இந்த வண்டியை கூட அவளுக்காக இழக்க வேண்டும்…அவளுக்கு புல்லெட் தான் புடிக்குமாம்…என்று அவன் நினைத்தவாறு வந்து கொண்டிருந்த போது தான் அந்த விபத்து நடந்திருந்தது…அவர்கள் மூவரும் கீழே விழுந்து இவனை திட்டியது

       கீழே விழுந்த பெண்கள் எழுந்து இவனை திட்டிய போதும் கூட இவனுக்கு கோவம் எல்லாம் வரவில்லை…பாவம் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் என்று தான் நினைத்தான்…அதை விட இதுகளெல்லாம்  எனக்கு ஒரு ஆளா என்கிற அலட்சியம் தான்இவன் கோவத்தை காட்டுவதுக்கு கூட தகுதி வேண்டும் என்று நினைப்பவன்அதான் அப்டி கூறிவிட்டு வந்திருந்தான்

        ஆனால் அதற்கும் சேர்த்து மொத்த கோவமும் சுருதியின் மேல் தான் திரும்பியது இவளை பத்தி நினைச்சா கூட disaster தான்…இடிஒட்

          ******

  அதே நேரத்தில் உதகை மண்டலத்தில்    தேநீரை பருகியவாறு தன் முன் இருந்த இயற்கை காட்சியை வெறித்தவாறு நின்ற சுருதியின் மனத்திலும் இதே எண்ணங்கள்  தான்

     “அவனை பத்தி நினைக்க கூட வேணாம்….அவன் பேரை யாராச்சும் சொன்னா கூட disaster தான்செல்வா எருமை எங்க அன்னான் அப்டினு சொன்னவுடனே கீழே விழுந்து காலே உடைச்சுக்கிட்டேன்…”என்று நினைத்தவளின் மனதில் திருமணத்தை கண்டிப்பாக நிற்பாட்ட வேண்டும் என்ற உறுதியே பிறந்தது….

யார் நினைத்தாலும்…..வெறுத்தாலும் ஆண்டவனின் முடிச்சை அவிழ்க்க முடியாது…..விதி செய்யும் கோலத்தில் கைப்பாவையாய் நாம்….

ஆதிக்கம் தொடரும்….

 

 

   

 

    

   

   

Advertisement