Advertisement

அத்தியாயம் 8

        காதல் ரசம் சொட்டும் முகத்துடன் கண்ணன் ராதை பின்னே  இருக்க… அதற்கு கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாமல் முன்னே அலட்சியம் மற்றும்  கோவம் சுமந்த முகத்துடன் சுருதி ஜெயக்குமார் ஜோடியாக நின்றனர்…

        கண்டிப்பாக இது ஒரு நகைமுரண் தான்…இக்காட்சியை மட்டும் உலகநாயகன் பாத்திருந்தால் நகைமுரண் என்ற தலைப்பில்…கேட்குற நமக்கே  புரியாமலே ஒருமணி நேரம் பேசியிருப்பார்…ஆனால் அவர்க்கு தான் அதிர்ஷ்டம் இல்லை…

           நிச்சியதார்த்தம் முடிந்தால் பாதி கல்யாணம் முடிந்த மாதிரி என்ற வாக்கியத்துக்கிணங்க அக்குடும்பத்தில் உள்ள மூத்ததலைமுறை பெற்றோர் முதல் வந்திருந்த சொந்தபந்த பெரியவர்கள் வரை  அனைவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவைத்து சுருதி ஜெயக்குமாரின் நிலையை கவலைக்கிடம் ஆக்கினர் குடும்பத்தார்…

          சுருதியோ இனியராவது வந்தால் அவர்கள் மேலயே விழுமளவிற்கு கலைப்பாய் காட்சியளித்தாள்…

        ஜெயகுமாரோ விட்டால் அருகிலிருப்பவர்களை கடித்து குதறும் அளவிற்கு கடும்கோவதில் இருந்தான்…ஏனென்றால் சுருதி செய்த லீலைகள் அப்படி…

        ஆசிர்வாதம் வாங்க ஒன்றாகவே குனிந்தாலும் நிமிரும் போது எப்டியோ அவனின் ஓரத்தில் நின்றவள் அவனுக்கு முன் வந்துவிடுவாள்…அவன் உயரமாக இருப்பதால் குனிந்து நிமிர்வதற்குள் இவள் மிகவேகமாக நிமிர்ந்து அவனின் நெஞ்சில் நான்கைந்து தடவைக்கு மேல் அவளின் பின்மண்டையால் நச்சென்று முட்டியிருந்தாள்…கால்மாற்றி நிக்குறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு தன் நீண்ட ஹீல்ஸால் ஓரமாக சிவனே என்று நின்றிருந்த ஜெயக்குமாரின் காலிலேயே மிதித்தாள்… இப்படி பல அக்கப்போர்களை அரங்கேற்றினாள் சுருதி… பொறுத்து பொறுத்து பார்த்தவன் ஐந்து நிமிடங்களுக்கு முன் தான்  வந்திருந்த உறவுகளின் கூட்டம் குறையவும் அவளை விட்டு ஒரு 2 மீட்டர் தூரம் தள்ளி நின்றான்…

       சுருதி தெரியாமல் தான் செய்கிறாள் என்று நம்பும் அளவுக்கு ஜெயக்குமார் ஒன்றும் விரல்சப்பும் பாப்பா கிடையாதே… தான் ஆரம்பித்துவைத்ததை அவள் தொடருகிறாள்   என்பது நன்கு தெரிந்தது…

       தன் செயலை எண்ணி தன்னையே நொந்துகொண்டான்…நிச்சியதார்த்த புடவை எடுக்க சென்று போது இவன் வரவில்லை என்று தான் கூறியிருந்தான்…அதைபோல் இவனையும் விட்டுவிட்டு தான் சென்றிருந்தனர்…போன இடத்தில் பணப்பற்றாக்குறை ஆனதால் பணம் குடுக்க அவன் அங்கு செல்லவேண்டியதாக போயிற்று…மணப்பெண்ணை அழைத்து செல்வதெல்லாம் அவர்கள் வழக்கத்தில் கிடையாது,..அதான் அவளை அழைத்துசெல்லவில்லை…பணம் குடுக்க போனவன் தன் தாயிடம் கொடுத்தபோது ஒரு ஆலிவ் கிறீன் நிற புடவை… ஒரு அடர் நீலநிற புடவை.. என ரெண்டு புடவையை. கையில் வைத்துக்கொண்டு இரண்டில் எது தெரிவு செய்யவேண்டும் என்று குழம்பிக்கொண்டிருந்தனர்…

      அந்நேரம் பார்த்து இவன் சென்றதால் இவனிடமும் எதை எடுக்க என்று அபிப்ராயம் கேட்டனர்…எதையோ எடுங்க என்று கூறவந்தவன் ஓரத்தில் கிடந்த பட்டுரோஸ் கலர் புடவையை பார்த்தவன் குஷியாகி அநேகம் பேரின் எதிர்ப்பை கண்டுகொள்ளாது இவனே தன் பணத்தில் அந்த  புடவையை வாங்கினான்…அது தான் இன்று விவகாரமாகி பட்டு ரோஸ் பால் பச்சையாகி வந்திருக்கிறது…

      புகைப்படம் எடுக்குறோம் என்று அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்த செல்வா இவன் தள்ளி நின்றதை பார்த்து அருகில் நிக்க சொன்னான்…

       ஏற்கனவே சட்டை விஷயத்தில் செல்வாவின் மீது கடும்கோபத்தில் இருந்தான்…இப்பொழுது இதையும் சொல்லவும்…அவனை அருகில் வருமாறு சைகை செய்தவன்…அவன் அருகில் வந்தவுடன் மிகமிக மெதுவாக “ஏற்கனவே உன்மேல கொலைவெறில இருக்கேன்…அமைதியா இரு…இல்லாட்டி மவனே என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…”என்று உதடை இழுத்து சிரிப்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு அடக்கப்பட்ட கோபத்துடன் வார்த்தைகளை கடித்து துப்பினான்…

        இதற்கு பின்பும் செல்வா ஏன் அங்கு நிற்கப்போகிறான்…அங்கிருந்த தன் சித்தி மகனான சுதாகரிடம் காமெராவை குடுத்துவிட்டு வேற வேலையை பார்க்கச்சென்றான்…

 

என்ன தான் ஜெயகுமாரும் செல்வாவும் நண்பர்கள் போல் பேசி கொண்டாலும்…ஜெயக்குமாரின் மேல் செல்வாவுக்கு சிறிதளவு பயம் என்பது சிறு வயதிலிருந்தே இருக்கின்றது  என்பதை ஒத்துக்கொள்ள தான் வேண்டும் …செல்வாவிற்கு மட்டுமின்றி… படிப்பு ஒழுக்கம் என்று அனைத்திலும் முதலாவதாக இருக்கும் ஜெயகுமாரிடம் அக்குடும்பத்தில் உள்ள எல்லா இளையவர்களுக்கும் மரியாதையும்…அதைவிட அதிகமாக பயமும் இருக்கும்..தவறு செய்துவிட்டால் பெற்றோர் அடிக்கிறார்களோ திட்டுறார்களோ இல்லையோ ஜெயகுமாரிடம்  இருந்து எல்லாமே  கிடைத்து விடும்…அதை போல தான் பாராட்டும்…..சுருதி போல் அவர்கள் குடும்பத்தில் உள்ள எந்த இளையவர்களும் ஜெயக்குமாரை இப்டி வம்பிழுக்க முடியாது…நம் கதாநாயகி ஒருத்தி தான் ஜெய்குமாரையே வந்து  பார் என்பது போல் வம்பிழுப்பாள்…அவள் ஆரம்பிக்கா விட்டாலும் இப்பொழுது நடந்த புடவை சர்ச்சை போல் இவன் ஏதாவது ஆரம்பித்து வைத்துவிட்டு இறுதியில் இப்படி முழித்துக்கொண்டு நிற்பான்…

            இவ்வளவு நேரம் சந்தோசமாக இருந்த தன் நண்பன் இப்பொழுது அமைதியாக போவதை பார்த்த சுருதிக்கு ஜெயக்குமாரின் மேல் கண்மண் தெரியாத கோவம் வந்தது…நண்பனுக்கு ஒன்றென்றால் தளபதி சூர்யாவை மிஞ்சும் அளவிற்கு கோவப்படுபவள் இப்பொழுதும் சண்டை இழுக்க ஆரம்பித்தாள்…

  இருவர்க்கும் இடையே உள்ள தூரத்தை ஒரே எட்டில் அடைந்தவள் கையில் உள்ள கூல் ட்ரிங்க்ஸை அவனிடம் நீட்டியவாறு “செல்வாவை இப்ப என்ன சொன்னே…இவ்ளோ நேரம் ஜாலியா இருந்தவன் இப்ப அமைதியா போறான்…உன் அதட்டுற வேலையெல்லாம் உன் காலேஜ்லயே விட்டுட்டு வந்துரு…நொண்டிக்குமாரு…சேர்ந்து தானே நிக்க சொன்னான்…அதுக்கு ஓவரா தான் பண்ற….திட்டணும்னா என்னை திட்டு… இனிமேல் அவனை திட்டுன இன்னைக்கு கலந்த மாதிரி ஒரு பேதி மாத்திரைலாம் கலக்க மாட்டேன்… ஒரு டப்பா தான் போடுவேன் “என்றாலே பாக்கலாம் அவள் அருகில் வந்தவுடனே நீட்டிய ஜூஸை வாங்கி குடித்துக்கொண்டிருத்தவன் இவள் கூறியதை கேட்டவுடன் வேகமாக கீழே துப்பினான்…

        இந்த பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கும்போது நல்லவேளை  யாரும் இவர்களை பார்க்கவில்லை…

         “என்ன டி …பே பே பே பேதி மாத்திரை கலந்தியா…”என்று அகமும் புறமும் பதற கேட்டான் ஜெயக்குமார்…

          “பேதி மாத்திரை தான்…அதை ஏன் பேய் மாதிரி இழுக்குற… இனிமே செல்வாவை திட்டமாட்டேன் சொல்லு…. அப்புறம் இப்பயே செல்வாக்கு கால் பண்ணி இப்ப திட்டுனதுக்கு சாரி சொல்லு மேன்… நான் சொன்னதை செய்ச்சா உடனடியா உனக்கு மாற்று மருந்து தரேன்… இல்லாட்டி தர மாட்டேன் பா… அவந்திகிட்ட வாங்கி வைச்சிருக்கேன்….குடிச்ச மூணு நிமிசத்துக்குள்ள மாற்றுமருந்து குடிச்சா தான் சரியாகும்…இல்லாட்டி உன் பயலுக கேட்டை உடைச்சுட்டு வெளிய வந்துருவாங்க…. பார்த்துக்கோ…நா உனக்கு விளக்கம் சொன்னதுலயே 2 மினிட்ஸ் ஆயிருச்சு….”என்று கூறியவாறே இடக்கையில் அணிந்திருந்த கைக்கடிகாரத்தை பார்த்தாள்….

ஜெயக்குமார்க்கு கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது தான்…வேற நேரமாக இருந்திருந்தால் வர்ரதை பார்த்துக்கொள்ளலாம்  சரி தான் போடி என்று போயிருப்பான்…ஆனால் இன்றோ அவனால் சத்தியமாக முடியாது…எனவே கோவத்தை அடக்கி கொண்டான்…பற்றாக்குறைக்கு வயிற்றுக்குள் யாரோ உட்கார்ந்து கேவலமாக ஹம்மிங் குடுப்பது போல் சத்தம் வேறுவந்து தொலைத்தது…

       எனவே அடங்கியவன்”சரி…இனிமேல் திட்டமாட்டேன்…மெடிசின் குடு…”என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்டான்…கோவத்தில் அவனின் காது ரெண்டும் சிவந்தது…காதில் புகைவராதது தான் குறை…

               “செல்வாக்கு இன்னும் நீ கால் பண்ணலையே…2 மினிட் 10 செக் ஆச்சு…”என்று அவன் படும் அவதியை பார்த்து ரசித்தவாறு கூறினாள் சுருதி…

            அமிதாப் பச்சன் கூட இதுவரை அவ்வளவு கோவத்தை காட்டியிருக்கமாட்டார்…அவ்வளவு கோவம் இருந்தாலும் வெளியே சிரிக்கவேண்டிய அத்தியாவசியம் இருந்ததால் சிரித்தவாறு உதட்டை வைத்து கொண்டு தன் கைபேசியை எடுத்து செல்வாவிற்கு அழைத்து சாரி கேட்டுவிட்டு மீண்டும் சுருதியை நோக்கி கை நீட்டினான்….

        கலகலவென்று சிரித்தவள் ” பியாரி Angry youngman …உன்னோட அன்பு மாமா மகள் எப்படி உன்னை கவுக்குறதுக்கு எனக்கு உதவி பண்ணுவா… யோசிக்கணும் குமாரு யோசிக்கணும்…பொய் சொன்னேன்..” என்று அவனை ஏமாத்திவிட்டோம் என்ற தினுசில் கிண்டலாக கூறினாள்…

  ஏற்கனவே கடும்கோபத்தில் இருந்தவன் தற்பொழுது வெடிக்க தயாராகிருந்தான்…”ச்சீ…நீயெல்லாம் ஒரு பொண்ணா…”என்று சுற்றுப்புறத்தை மறந்து முகத்தை சுளித்துக்கொண்டு கூறியவன்…அடுத்து சொன்ன வார்த்தைகள் எல்லாம் யாரும் தன் வருங்கால மனைவியை பற்றி கூற யோசிக்கும்…கூறவே கூடாத வார்த்தைகள்…

 “what the heck …I have never seen a girl like you in my life …எப்படி எனக்கு புரியவே இல்லை…உன்னை திட்டுன மாதிரி நான் வேற ஒரு பொண்ணே திட்டிருந்தா அவ எந்த நிலைமையிலையும் என் கூட பேசியிருக்க மாட்டா……ஆனால் நீ அசிங்கமே இல்லாம என்னை உரசிட்டு நிக்குற…”என்று கூறியவாறு அவளை தலை முதல் கால் வரை நிதானமாக ஏறிட்டவன்

    “அதெல்லாம் மானம் உள்ள பொண்ணுங்களுக்கு தான்…உனக்கு இல்லை…”என்று கூறிகொண்டே அவளது முகத்தை பார்த்தான்…

     அதிர்ந்த முகத்தில் கலங்கிய கண்களுடன் அவனை அண்ணாந்து பார்த்தவாறு நின்றாள்.

        அடுத்து என்ன கூறியிருப்பானோ அந்த அதிர்ந்த முகத்தை பார்த்தவுடன் தான் பேசிய வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தவன் மானசீகமாகவெல்லாம் தலையில் அடித்துக்கொள்ளவில்லை…நேரடியாகவே தன் நெற்றியில் அறைந்துகொண்டான்…

      “பேபி மா…”என்று என்ன கூறவந்தானோ அதற்குள் கை நீட்டி அவன் பேசுவதை நிறுத்தியவள் தனது 32 முத்து பற்களையும் காட்டி வசீகர புன்னகை புரிந்தவள்…அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்…

என்ன செய்வது என்று புரியாமல் ஒரு நிமிடம் நின்றவன் அவளுக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டான்…

       சிறிது நேரத்தில் வந்திருந்த அனைத்து சொந்தபந்தங்களும் இரவுஉணவு உண்டுவிட்டு இவர்கள் இருவரிடமும் கூறிவிட்டு சென்றிருந்தனர்…

       குடும்பத்தார் இருவரையும் கண்டுகொள்ளாத மாதிரி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தாலும் இருவருக்கும் இடையில் எதுவோ  சரியில்லை என்று உணர்ந்து கொண்டனர் …

        ஜெயக்குமார் திட்டியவுடன் அங்கிருந்து சென்ற செல்வாவும் அவன் அழைத்து மன்னிப்பு கூறியவுடன் இது கண்டிப்பாக தனது பார்த்தா வான சுருதியால் தான் என்று புரிந்து கொண்டவன் தன் தோழியை பார்க்க ஓடிஓடி வந்தவன் கேட்டது இறுதியாக ஜெயக்குமார் கூறிய “அதெல்லாம் மானம் உள்ள பெண்களுக்கு தான்” என்ற வார்த்தையை மட்டும் தான்…அதற்கு சுருதி கண்கலங்கியது செல்வாவிற்கு ஒரு மாதிரியாகி விட்டது…இப்பொழுது போய் அவனிடம் கேட்டாலும் தேவையில்லாத பிரச்னை வரும் என்று நினைத்தவாறு ஓரமாக அமர்ந்து நடப்பதை பார்வையிட்டான்…நாளைக்கு இதை விசாரிக்க வேண்டுமென்று மனதில் குறித்துக்கொண்டான்…

        அவன் அமர்ந்த இடத்திற்கு அருகில் தான் அவந்திகாவும் அமர்ந்திருந்தாள்…இருவரும் பேசஆரம்பித்தவுடனே இங்கே வந்திருந்தாள்…இருவரையும் கண்சிமிட்ட கூட மறந்து பார்த்திருந்தாள்…

      அவள் மனதில் ஆயிர எண்ணவோட்டங்கள் ஓடி கொண்டிருந்தது… இத்தனை வருடங்களில் அவளுக்கு தெரிந்த ஜெயக்குமார் எப்பொழுதும் ஒரு நிதானத்துடன் அமைதியாக…calm and collective என்று குறிப்பிடுவார்களே அது போல் தான் இருப்பான்…எப்பொழுதாவது சிரிப்பான்…இளையவர்கள் யாராவது தவறு செய்துவிட்டால் கோவப்படுவான் அதுவும் சாதாரணமாக தான்…கட்டுப்படுத்த முடியாத அளவிற்கலாம் இருக்காது…அவந்திகா மிகவும் அமைதியான பெண் என்பதால் இதுவரை அவனிடம் திட்டுவாங்கும் படியாக எதுவும் நடந்தது இல்லை…அவந்திகாவை பார்க்கும்போதெல்லாம் ஒரு சின்ன சிரிப்போடு என்ன ஏதென்று விசாரித்து செல்வான்…சில நேரம் அவனாகவும் வந்து பேசுவான்..அது படிப்பு சம்மந்தப்பட்டதாக தான் இருக்கும்…சிறிது வருடங்களாக சுருதியும் ஜெயகுமாரும் சந்தித்து கொள்வதை தவிர்த்த பிறகு இவளிடம் முன்னேவிட கொஞ்சம்  அதிகம் பேச ஆரம்பித்திருந்தான்…WhatsApp இல்   காலை மாலை வணக்கங்கள் பரிமாறி கொள்ளும் அளவுக்கு இப்பொழுது தான் முன்னேறிருந்தனர்…முன்னாடியே அவனிடம் கூறியிருக்க வேண்டுமோ…

     ஆனால் சுருதியுடன் பார்க்கும்பொழுது முழுவதும் வேறொருவனாக தெரிந்தான்….அவனுள் எத்தனை பிம்பங்கள்….சிறிது நேரத்துக்கு முன் வரை அவளை வம்பிழுத்து சிரித்தான்…அடுத்து கோவப்பட்டான்…சிறிது நேரத்தில் கெஞ்சுகிறான்…உடனே அளவுக்கதிகமான கோவப்பட்டு அவளை திட்டினான்…திட்டியவுடனே அவள் கலங்கிய முகத்தை பார்த்து அதிர்ந்து இப்பொழுது அவள் தன்னை திரும்பி பார்க்கமாட்டாளா என்று ஏக்கமாக பார்க்கிறான்…

     என்னவோ சுருதியுடன் இருந்தால் தான் அவன் அவனாக இருக்கிறானோ என்று தோன்றியது…சிறுவயதில் சுருதி ஜெயக்குமார்க்கு இடையான சண்டை வெறுப்பாக தெரிந்தது….இப்பொழுது உரிமையாக ஒருவித அன்பாக தெரிகிறது…

   ஜெயக்குமார் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை திரும்பி திரும்பி சுருதியை பார்த்தான்…ஆனால் அவளோ அவனை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை…

     அங்கு நின்றிருந்த ஜெயக்குமாரின் நண்பர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டிருந்தாள்…

          “ஏன் அண்ணா…எல்லாரும் ஒரே மாதிரி சட்டை போட்டு வந்தவுடனே நான் என்னமோ குமார்க்கு துணையா வந்திருக்கிங்கனு நினைச்சா…நீங்க சமையல்கார பழரசம் வீட்டுக்கு துணையா வந்திருக்கீங்க போலயே…நிச்சியம் முடிச்சவுடனே சாப்பிடற இடத்துக்கு பரிமாற போனவங்க தான்…எல்லாம் முடிஞ்ச பின்னாடி தான் வரீங்க…”என்று சிரித்தவாறு ஐவரிடமும் கேட்டாள்…

     “டேய்…நான் அப்பயே சொன்னேன் கேட்டீங்களா டா…இது ஒரு நன்றிகெட்ட உலகம் டா…இவர்களுக்காக நாம போய் வேலை பார்த்தா…இந்த பிள்ளை நக்கலை பார்த்தியா…”என்று சலித்து கொண்டான் பை பாஸ்@பாலா…

       “டேய் நீ தானே டா…பொண்ணுங்களாம் வரும்…நாம ஜாலியா சைட் அடிக்கலாம்னு கூப்டு போனே…அங்கே போய் நாங்கல்லாம் பரிமாறினா நீ மட்டும் சாப்பிட வந்த பொண்ணு கூட கடலை போட்டுட்டு இருந்தியே மச்சி…”என்று சிரித்துக்கொண்டே கூறிய தௌபீக் சுருதியுடன் ஹைப்பை அடித்துக்கொண்டான்…

      “டேய் நான் நல்லாயிருக்கிறது உனக்கு பிடிக்கலையா டா…என் பொண்டாட்டிக்கு ஊரெல்லாம் காது கண்ணு இருக்கு டா…யாராச்சும் அவகிட்ட சொன்னாங்க என்னோட இறுதிஅஞ்சலில்ல தான் என்னை பார்க்கமுடியும்…”என்று பாலா கூறிக்கொண்டிருக்கும் போதே அவனின் கைபேசி இசைத்தது…

      சட்டை பையிலிருந்து எடுத்து பார்த்தவன் விளக்கெண்ணெய் குடித்தது போல் முழித்தான்…

    ஏனெனில் அழைத்தது அவனின் மனைவி தான்…”டேய் எனக்கு என்னமோ உங்க மேல தான் டா சந்தேகமா இருக்கு…யாரோ என்கூட இருந்துகிட்டே அவளுக்கு ஒற்றன் வேலை பாக்குறீங்க டா…நா என்ன பண்ணாலும் அவளுக்கு தெரிஞ்சுறது…கண்டுபிடிக்கிறேன் டா…ஐய்யயோ உங்ககிட்ட கோவப்பட்டுட்டேனே…அவளுக்கு தெரிஞ்சிருக்கும்…”என்று இவர்களை பார்த்து கூறியவன்…கண்ணை முடி ஏதோ வேண்டிக்கொண்டான் …

     அவனை பார்த்து அனைவரும் சிரித்தனர்…அதெல்லாம் கண்டுகொள்ளாமல் சிறிது தூரம் தள்ளி வந்தான்…

   பிறகு அழைப்பை ஏற்றவன் “சொல்லு டா மா…”அந்த பக்கம் என்ன கூறினார்களோ “ஐய்யயோ இல்லை மா…நான் அப்டிலாம் பண்ணுவேனா…அந்த பொண்ணு என் கூட டியூஷன் படிச்ச பையனோட தங்கச்சி மாதிரி இருந்தது மா…அதான் …”அடுத்து ஒரு வார்த்தை கூட அவனை பேச விடவில்லை….

        “சரி சுருதி…நாங்க கிளம்புறோம்…பார்ப்போம்…”என்று இவளிடம் விடைபெற்றவர்கள் ஜெயகுமாரிடமும்  விடைபெற்றுக்கொண்டு தள்ளி நின்று அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பாலாவையும் அழைத்துக்கொண்டு சென்றனர்…

     நண்பர் பட்டாளம் சென்றவுடன் சுருதியிடம் ஜெயக்குமார் ஏதோ சொல்ல முயல்வதற்குள் அங்கே வந்த ஜெயக்குமாரின் அன்னை லட்சுமி இருவரையும் சாப்பிட அழைத்து சென்றார்…

    அதன் பிறகு ஜெயகுமாரல் சுருதியை நெருங்கவே முடியவில்லை…செல்வா தான் அவளை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என்று எங்கயும் திரும்பவிடாமல் நகைச்சுவையாக சொல்லி அவள் உருண்டு பிரண்டு சிரிக்கும் அளவுக்கு பார்த்துக்கொண்டானே…

        11  மணி போல குடும்பங்கள் இரவு உறக்கத்திற்காக முத்துவேல் ஜோதியிடம் சொல்லி விட்டு கிளம்பினர்…அதே போல் ஜெயக்குமார் குடும்பமும் கிளம்பியது செல்வா உட்பட…அதுவரையும் சுருதி குமாரின் முகத்தை பார்க்கவில்லை…

        தன் குடும்பத்தார் அனைவரும் சென்றபின்பும் ஜெயக்குமார் தனது சட்டையில் இருந்த முக்கியமான பேப்பரை காணோம் என்று தான் உடைமாற்றிய அறையில் தேடிக்கொண்டிருந்தான்…

       தான் பேசாததால் தான் இப்டி பண்ணிக்கொண்டிருக்கிறான் என்று சுருதிக்கு  புரிந்தாலும் கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு சென்றிருந்தாள்…

        ஜெயகுமாரும் அவள் கண்டுகொள்ளமாட்டாள் என்று புரிந்ததும் தன் மாமா அத்தையிடம் கூறிவிட்டு தன் வீட்டுக்கு வந்திருந்தான்…

          வீட்டுக்கு வந்தவன் தன் அறையினுள் சென்று உடையை மாற்றியவன் படுக்கையில் சாய்ந்தவாறு சுருதியை பற்றி நினைக்க ஆரம்பித்திருந்தான்…

     தான் ஏன் இப்டி நடந்துகொள்கிறோம் என்று அவனுக்கே புரியவில்லை…தான் அவளிடம் முதல் வார்த்தை பேசாமல் இருந்திருந்தால் அவள் தன்னிடம் பேச என்ன திரும்பி கூட பார்க்காமல் இருந்திருப்பாள்…ஆனால் தான் தான் முதலில் அவள் பட்டப்பெயரை அழைத்து பின்பு புடவை விஷயத்தில் குழப்பம் செய்து என்று அனைத்திற்கும் தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கிறோம்…

     சிறிது நேரம் இப்படி தன்னையே நினைத்து அசிங்கமாக உணர்ந்தவனின்  நினைவில் அந்த முத்த காட்சி வந்தது…இவ்வளவு நேரம் இவனை குற்றம் சொல்லிக்கொண்டிருந்த அவனின் மனசாட்சி அந்த காட்சியிலிருந்து அவளை தப்பு சொல்ல ஆரம்பித்திருந்தது…

      தன்னுடைய குழப்பத்தில் இருந்து தப்பிக்க அவளை குற்றவாளியாக்கி தன்னை நியாயப்படுத்தி கொண்டது…அதற்கு பின்பே தான் செய்தது எந்த விதமான தப்பும் இல்லை என்ற நினைப்புடன் ஜெயக்குமார் துயில் கொண்டான்…

 

*********************************************************************

    சுருதியோ பொங்கி வரும் அழுகையை அடக்கும் வழி தெரியாமல் தரையில் அமர்ந்து கட்டிலின் காலில் தலையை சாய்த்து ஆற்றுவார் தேற்றுவர் இன்றி அழுதுகொண்டிருந்தாள்….

       

      “நான் என்ன தப்பு பண்ணினேன்….அவன் வந்து முதல் பேசுனத்துக்கு அப்புறம் தான் நான் பேசுனேன்…அவன் என்னை புடவை வைச்சு டீஸ் பன்னதுனால தான் அவனுக்கு ஷர்ட் கொடுத்தேன்…இல்லாட்டி நா என்ன பண்ணப்போறேன்…நா எப்படி கெட்ட பொண்ணு ஆகமுடியும்…இவன் என்னை திட்டுனா நா கெட்ட பொண்ணா ஆயிருவேனா…லவ் பண்றது  தப்பே கிடையாது…என் காதலும் தப்பே கிடையாது…நானும் தப்பானவள் கிடையாது தானே… இதுக்கே இப்படி நான் அழுதா வாழ்க்கையில நான் எதை தாங்க முடியும்…be brave my girl “என்று தனக்கு தானே உற்சாகம் அளித்தவள் கண்டவர் மயங்கும் தெத்துப்பல் புன்னகையுடன் படுகையில் சென்று படுத்துகொண்டாள்….

         

காதலுக்கு மட்டும் தான் இந்த விசித்திர குணம் உண்டு…தன்னை நேசிப்பவரையும் தான் நேசிப்பவரையும் அழவிட்டு வேடிக்கை பார்க்க வைக்கும்…

 

ஆதிக்கம் தொடரும்…..

 

          

         

 

   

Advertisement