Advertisement

அத்தியாயம் 5 :

           சுருதியின் சம்மதம் பெற்றதும் திருமண வேலைகள் இன்னும் ஜரூராக நடக்க ஆரம்பித்திருந்தது…இரண்டு நாட்களில் மதுரைக்கும் தங்கள் வசிப்பிடத்தை மாற்றிருந்தனர்…முத்துவேல் குடும்பத்தின் வசிப்பிடம் முதலிருந்தே மதுரை தான்…ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த சிறு பிரச்சனையில் தன் மகளின் நிம்மதிக்காக தன் உயிருடனும் உணர்வுடனும் கலந்திருந்த மதுரை மண்ணை விட்டு உதகை மண்டலத்தில் போய் குடியேறினார் முத்துவேல்…

            அது சிறுபிரச்னையோ பெரும்பிரச்னையோ எதுவும் தன் மகளை அண்டக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்…அது தன் மகளே ஏற்படுத்திய புதை குழி என்றாலும்…

             பிரச்சனைகள் முடிவடைந்த பின்பும் அவர் இங்கு வசிக்க விரும்பவில்லை …சுருதிகூட மாதக்கணக்காக இங்கு வந்து தங்கி உறவுகளுடன் உறவாடி சென்றிருக்கிறாள்….இப்பொழுது வந்தது தன் மகளுக்கு நிலையான ஒரு வாழ்வு அமைந்து விட்டது…இதில் எவராலும் குட்டையை குழப்ப முடியாது என்பதால் தான்…

           நாளை நிச்சயதார்த்தம் என்னும் நிலையில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சனிக்கிழமை மதியத்தில் முத்துவேல்…ஜோதி…அவந்திகா…செல்வகுமார் அனைவரும் ஒரு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்…அங்கிருந்து பார்த்தால் ஹாலில் நடப்பது அனைத்தும் தெரியும்…

            பொதுவிஷயங்கள் அதுஎது என்று அனைத்தையும் பேசிக்கொண்டிருந்தவர்களின் கவனம் அப்பொழுது தான் ஹாலில் அங்கேயும் இங்கேயும் குட்டி போட்ட பூனையாக நடந்து கொண்டிருக்கும் சுருதியின் மேல் திரும்பியது…

            “சுருதி ஏன் அத்தை இப்டி குட்டி போட்ட பூனையாட்டம் குறுக்க மறுக்க நடந்துட்டு இருக்கா…  காலைலயிலிருந்தே இவள் ஒரு மார்க்கமா தான் த்தை திரியுறா…”என்று சுருதியை ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டே சொல்ல ஆரம்பித்தான் செல்வா…

“நான் இங்கே வந்துட்டு இருந்தப்ப வழியிலே சுருதியை பார்த்தேன்…எங்கயோ கடைக்கு போய்ட்டு வந்தாளாம்…சரினு சொல்லி அவளை என் கூட வண்டில கூட்டிட்டு வந்து வீட்டுல இறக்கி விட்டேன் …வண்டியே நிப்பாட்டிட்டு வரதுக்குள்ள அவள் உள்ளே போயிருந்தா…சரினு சொல்லிட்டு செருப்பை கழட்டி போடபோனேனா   அங்கே பார்த்தா இந்த சுருதி  கிறுக்கச்சி வேறவேற செருப்பை போட்டுட்டு கடைக்கு போயிருக்கா…உள்ளே வந்து என்னல லூசு இப்படி போய்ட்டு வந்துருக்கனு கேட்டா முளிக்குறா…” என்று தன் மாமா மகள் மாணிக்கத்தின் அருமை பெருமைகளை கூறினான் செல்வா

            “அதையேன் டா கேக்குற…காலைல என்கிட்டே வந்து தலைவலிக்குது காபி போட்டு தா மானு கேட்டா…எனக்கு வேலையிருந்ததாலே நீயே போட்டுக்கோன்னு அனுப்பி வைச்சுட்டேன் டா…கொஞ்சம் நேரம் கழிச்சு மனசு கேக்காம நாமளே போட்டு தருவோம்னு போய் பார்த்தா…பாலை காயவைச்சு பக்கத்துல இருக்க சோத்து பானைல ஊத்திக்கிட்டு இருக்கா…மண்டையில ஒரு அடியை போட்டுட்டு என்ன டி பண்றனு கேட்டா …காபி போடா பால் எடுக்குறேனு சொல்லறா டா…அடிப்பாவி அதுக்கு எதுக்கு டி சாப்பாட்டுல பால் ஊத்துறேன்னு கேக்குறேன்…அப்ப தான் அவ அதையே கவனிச்சு தன் தலைல தானே தட்டிகிட்டு சாரி மானு சொல்லிட்டு போறா…லாஸ்ட்ல காபியே குடிக்காம ரூம்குள்ள போய்ட்டா”என்று ஜோதிமா தன் மகளின் கவனமின்மையையே பரிதாபமாக கூறினார்…

         அது வரைக்கும் அமைதியாக கதை கேட்டு கொண்டிருந்த முத்துவேல் திடிரென்று பரபரப்பாகி “அதான் காலைல வந்து நீங்க இனிமே பால்சோறு தான் சாப்பிடணும்னு சொன்னியா நீ…ஏன் திடிர்னு சொல்லறன்னு கேட்டதுக்கு இப்ப தான் டிவி ல பார்த்தேன் உடம்பு சரியில்லாதவங்க பால் சோறு சாப்டா நல்லதுன்னு சொன்னாங்கனு சொல்ற…பெரிய தில்லாலங்கடி டி நீ… இப்டி எத்தனை கீழேபோடுற சாப்பாட்டையெல்லாம் என்கிட்டே கொடுத்து சாப்பிட வைச்சுருக்க… ” என்று அங்கலாய்ப்பாக கேட்டார்…

      “ஹி ஹி ஹி…இதாங்க பர்ஸ்ட் டைம்…அதுக்காக அந்த சாப்பாட்டை என்னங்க பண்ண முடியும்…செல்வா வருவான் அவனை சாப்பிடசொல்லாம்னு தான் நினைச்சேன்…ஆனால் இன்னைக்குனு பார்த்து வர ரொம்ப லேட் ஆச்சு…அதான் சாப்பாடு கெட்டு போயிரும்னு உங்ககிட்ட குடுத்தேன்…நிஜமா பால் சாதம் நல்லதுங்க…”என்று தான் பிடிபட்டதால் பரிதாபமாக கூறினார்…

      “அத்தை…நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன்…இனிமே இங்கே ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிடமாட்டேன் அத்தை…”என்று முறுக்கிக்கொண்டான் செல்வா…

      இவர்கள் பேச்சுவார்த்தையை கேட்டு அவந்திகா சிரித்துக்கொண்டிருந்தாள்…

      “இன்னைக்கு உனக்கு பிடிக்குமேனு தக்காளி சாதம் மதியத்துக்கு கிண்டுனேன்…உனக்கு வேணாமா…சரி அவந்தி நீ வீட்டுக்கு போகும் போது எடுத்துட்டு போடி…சிவாக்கு ரொம்ப பிடிக்கும்ல…”என்று செல்வாவை பார்த்துக்கொண்டே அவந்திகாவிடம் கூறினார் ஜோதி…

          “யாரு சாப்பிடமாட்டேனு சொன்னா…நான்லாம் சாப்பிடுவேன் வேணும்னா அவந்தி பங்கையோ இல்லாட்டி உங்க ஆருயிர் கணவன்  பங்கையோ குடுங்க….”என்று ஆகாச பல்டி அடித்தான் செல்வா….

                   இவ்வாறு தாங்கள் ஆரம்பித்த சுருதி என்னும் பைபாஸ் ரோட்டை விட்டு தக்காளி சாதம் என்னும் சந்து பொந்துகளை பற்றி சண்டை போடஆரம்பித்து விட்டார்கள்…

        அங்கு ஹாலில் உலாத்திகொண்டிருந்தவளோ இதுக்கு மேல தனியா இருந்து யோசிச்சுகிட்டு இருந்தோம் பைத்தியமே பிடிச்சுரும்…எங்கே இந்த முட்டாள் பீசு  குடும்பத்தை காணோம் …என்று யோசித்தவாறு திரும்பியவள் அங்கு அவள் குறிப்பிட்ட முட்டாள் பீசு குடும்பம்  எதிரில் இருந்த அறையில்  எதையோ மும்முரமாக விவாதித்து கொண்டிருந்தனர்…

            அவளின் முட்டாள் பீசு குடும்பம் சுருதி என்ற இந்த முட்டாளை பத்தி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று இந்த முட்டாளுக்கு  தெரியவில்லையே…

             சுருதி அறைக்குள் சென்றவுடன் அவள் முதலில் பார்த்தது கட்டிலில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த தன் தந்தையையும் மறுஓரத்தில் அமர்ந்திருந்த தன் தாயையும்…அவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக முத்துவேலின் மடியில் தன் தலையையும் ஜோதிமாவின் மடியில் தன் காலையையும் வைத்து படுத்திருந்த அவந்திகாவையும்…தன் தந்தையின் மறுபுறம் கால் நீட்டி அமர்ந்திருந்த செல்வாவையும் தான்…அக்காட்சி பார்ப்பதற்கே அவ்வளவு அழகியலாக இருந்தது…

       சுருதி வருவதை பார்த்த முத்துவேல்”வா பாப்பா…உள்ளே வந்து உட்காரு…”என்று அழைத்தார்…

               அதை ரசித்தவாறே உள்நுழைந்தவள் தன் தாயின் அருகில் போய் அமர்ந்தவாறே அவந்திகாவை வம்பிழுக்க ஆரம்பித்திருந்தாள்…

 “ஒய் எந்திரி….அவந்தி…என்ன என் செல்ல அம்மா அப்பா மடில படுத்து கிடக்க…”என்று விளையாட்டாக அதட்டியவாறு தன் தாயின் தோளில் சாய்ந்தவாறு அதட்டினாள் சுருதி…

       “எனக்கு பிடிச்ச எல்லாரும் தான் உன்கிட்ட இருக்காங்களே…உனக்கு பிடிச்சவங்களாது என்கிட்டே இருக்கட்டும் கா…”என்று விளையாட்டாக சொன்னாளோ வினையாக சொன்னாளோ அது அவந்திகா மட்டுமே அறிவாள்…

       “அப்டி இல்லை செல்லம்…உனக்கு பிடிச்சதும் என்கிட்டே தான் இருக்கனும்…எனக்கு பிடிச்சதும் என்கிட்டே தான் இருக்கனும்…”என்று கள்ளமில்லா சிரிப்புடன் கூறினாள் சுருதி…

      “சுருதி சும்மா இரு டி “என்று அதட்டிய ஜோதிமா “இந்த வீட்டு பிள்ளைங்க எல்லாருமே எங்களுக்கு ஒன்னு தான்….அது சுருதினா என்ன…அவந்தினா என்ன…நீயாச்சும் கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆகி உன் அத்தை கிட்ட போயிருவ…ஆனால் அவந்தி இன்னும் கொஞ்ச வருசத்துக்கு எங்க கூட தான் இருப்பாள்…”என்று தன் பெறா மகளை கொஞ்சியவாறு கூறினார் ஜோதி….

        இப்டி சென்று கொண்டிருந்த பேச்சு வார்த்தையை முத்துவேல் சிரித்தவாறு பார்த்துக்கொண்டும்…செல்வா தனக்குள் அவந்திகாவை  பற்றி சிந்தித்தவாறு பார்த்தான்…

           அவந்திகா சிறு வயதிலிருந்தே தன் உணர்வுகளை வெளியிடாதவள்…expressionless child என்பார்களே அதுபோல்…மிகவும் அழுத்தமானவள்…தன் சுகம்… துக்கம்… அழுகை…ஆர்ப்பாட்டம் என்று அனைத்து உணர்வுகளுக்கும் ஒரே மாதிரி தன் முகத்தை வைத்திருப்பாள்…அவளாக சொன்னாலொழிய அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று யாராலயும் கூறமுடியாது…

    ஆனால் சுருதி அப்டியே அவளுக்கு நேர் எதிர்மறையானவள்…எப்படியென்றால் sj சூர்யாவையும்…TR ஐயும் கலந்து செய்த கலவை அவள்…அவளின் உள்ளத்து உணர்வுகள் கூட அவளின் பளிங்கு முகத்திலும் உடல் மொழியிலும் நமக்கு புரிந்து விடும்…

      இப்பொழுது பிரச்னை என்னவென்றால் சுருதியின் முகத்தின் மூலம் அவள் விளையாட்டாக தான் அவந்தியிடம் கேட்டாள்…ஆனால் அவந்தியின் பதிலில் ஏதோ hidden ajanta  இருப்பதாகவே செல்வாவிற்கு தோன்றியது…செல்வாவிற்கு சுருதி எப்டியோ அதைவிட கொஞ்சமே கொஞ்சம் கம்மியாக அவந்திகாவும் தான்…அதனாலே அவள் மனதிற்குள் வைத்து கஷ்டப்படும் விஷயத்தை கண்டுபிடிக்க நினைத்தான்… அவன் கண்டுபிடிக்கும் விஷயத்தால் தன் அண்ணனின் மணவாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்த போகிறோம் என்று அவன் அறியவில்லை…

 

             ********************************************************

        

 

                மூன்றாமாண்டு எலக்ட்ரிகல் பிரிவில் ஜெயக்குமார் தான் எடுக்கும் பாடமான microcontroller லில்  8 பிட் முறையில் வரும்  வகுத்தல் (division)   கணக்கை  நடத்திகொண்டிருந்தான்…ஆனால் அவன் நினைவு முழுவதும் வேறெதிலோ சிக்கிருந்தது…வேறென்ன வேறு எல்லாம்  நம் கதாநாயகியின் நினைவில் தான்…

சுருதியும் ஜெயக்குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்து எப்படியும் ஒரு 3 வருடங்கள் இருக்கும்… பல்வேறு காரணங்களால் இருவரும் மற்றவரை காண்பதை விரும்பவில்லை…சுருதி செல்லும் குடும்ப விழாவுக்கு ஜெயக்குமார்  வரமாட்டான்…அதுபோல ஜெயக்குமார் வருவதற்கான சாத்தியக்கூறு உள்ள விழாவிற்கு சுருதி செல்லமாட்டாள்…இப்டி இவர்கள்  இருவரும் மூன்று வருடங்களாக  விளையாடி கொண்டிருந்த கண்ணாமுச்சி விளையாட்டு நாளையுடன் ஒரு முடிவிற்கு வரப்போகிறது…

      அதேபோல் அவன் மாணவர்களும் தங்களுக்குள் ஏதோ கிசுகிசுத்தவாறே இருந்தனர்…

       “என்ன மச்சி…இவர் இப்டி நடத்துறாரு…சொல்லுவோமா…ஏற்கனவே இவருக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு வேற  இருக்கு…”என்று கிசுகிசுத்தாள் பாரதி…

     “மூடிட்டு பேசாம இரு…நாம அன்னைக்கு நடந்ததுக்கே என்னைக்கு  ஆப்படிக்க போறார்னு தெரில…இதுல இத்தனை பேருக்கு முன்னாடி சொல்லி திட்டு வாங்க சொல்றியா…”என்று மறுமொழிந்தாள் பவித்ரா…

      “பவியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் யுவர் ஹானர்…”என்று நவி கூறிக்கொண்டிருக்கும் போதே…

       தன் நினைவு என்னும் சங்கிலியில் இருந்து தற்காலிகமாக விடுபட்ட ஜெயக்குமார் அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருப்பதை கவனித்து விட்டான்…

           “கேர்ள்ஸ்…மூணு பெரும் எந்திரிங்க…அப்டி எதை பத்தி தான் மூணுபேரும் பேசிட்டு இருப்பிங்கனே தெரில….எப்ப பார்த்தாலும் பேசிகிட்டு தான் இருக்கீங்க…எதுலயும் கவனமே இல்லை…நாளைக்கு நான் வரும் போது மூணு பெரும் இடம் மாரி உக்காந்து இருக்கீங்க புரியுதா…இனிமே இப்டி கிளாஸ் ஹௌர்ஸ்ல பேசிட்டு இருந்தா HOD ட்ட தான் கம்பிளைன்ட் பண்ண வேண்டியிருக்கும்…உக்காருங்க ….”என்று அவர்களை பேசவே விடாமல் திட்டி விட்டு அமர சொன்னான் ஜெயக்குமார்…

     அதற்குள் அந்த ஹவர் முடித்தற்கான மணி அடித்தவுடன் மாணவர்களிடம் விடைபெற்று வெளியே செல்வதற்கு முன் மூவரையும் தன் அறையில் வந்து தன்னை பார்க்குமாறு சொல்லி சென்றான்…

      ஜெயக்குமார் சென்ற பின்”என்ன டி அலெர்ட் அறுமுகம்கிட்ட சொல்லிருவேன்னு பயமுடுத்துறாரு…அந்தஆளு கிட்ட மட்டும் சிக்கினோம் சிதைச்சுருவோம் டி…”என்று சிறிது பயத்துடன் கூறினாள் பவி…

         “நீ ஏன் டி பயப்படுற…jk  சார் கிட்டயே சொல்லுவோம் நீங்க தப்ப சொல்லிகுடுத்தீங்க சார்…அதான் உங்ககிட்ட சொல்லலாம்ணு நினைச்சு பேசுனோம்னு ….இதுல என்ன இருக்கு அவர் தப்பா நடத்தி போட்டுட்டு நம்மள போட்டு தருவராக்கும்…”என்று தங்களை இத்தனை பேருக்கு முன்னால்  நிற்கவைத்து திட்டிவிட்டானே என்ற கடுப்பில் எகிறினாள் நவீனா…

        அதை கேட்ட பாரதியோ “ஏன் டி கோவப்படுற…அவருக்கு என்ன பிரச்சனையோ அதான் இப்டி தப்பா சொல்லி குடுத்துட்டாரு…நாலு மாசமா நம்ம சொர்ணாக்கா நடத்தி புரியாத mp  இவர் ஒரு வாரத்துல நடத்துனது புரிச்சுருச்சுல நவி…”என்று அவனின் திறமையை நவி ஒப்புக்கொள்ளும் அளவுக்கு கூறினாள் பாரதி…

           “ஆமா…யாரு இல்லைனு சொன்னது…இருந்தாலும் அவர் அழகா இருக்குறாருனு நீ அநியாயத்துக்கு செம்பு தூக்குற மச்சி…”என்று டலடித்தாள் நவீனா…

          “கதை இந்த மாறி போய்கிட்டு இருந்தா…பாரு மா…உன் ஆளு ரொம்ப பாவமா ஆயிருவார் மா…அவரை நம்பி தான் இந்த காலேஜ் ஜே இருக்கு…கொஞ்சம் பார்த்து செய்…”என்று பாரதியின் இடுப்பில் கிச்சுகிச்சு முட்டியவாறே கூறினாள் பவித்ரா…

            “அட சீ…நாய்களா மூடிட்டு வாங்க டி …அவர் திட்ட போறாரு…”என்று பேசியவாறு ஜெயக்குமார் அறைக்கு சென்றனர்…

           அறைக்கு உள்ளே நுழைவதற்கு முன்னே இருவரையும் திரும்பி பார்த்த நவீனா”சிரிக்குற வாயை மூடுங்க…எப்பயும் அலெர்ட் ஆறுமுகத்துக்கிட்ட மாட்டுனா ஒரு ரியாக்ஷன் குடுப்போம்ல பாவமா அதை குடுங்க…”என்று கூறியவள் முதலில் அனுமதி பெற்று உள்நுழைந்தாள்…அவளின் பின்னே பவியும் பாரதியும் உள்நுழைந்தனர்….

           “வாங்க கேர்ள்ஸ்…உங்களுக்கு என்ன தான் பிரச்னை ஏன் கிளாஸ் ஹவர்ஸ்ல பேசிட்டு இருக்கீங்க…”என்று அதட்டலாக கேட்டான் ஜெயக்குமார்…

        “சார் அதுவந்து அதுவந்து…”என்று முப்பெரும் தேவிகளும் வந்து வந்து என்று இழுத்து கொண்டிருந்தனர்…

       “அதான் வந்துட்டீங்களே…சொல்லி தொலைங்க…அப்டியே எதுவும் பேச தெரியாத மாதிரி தான்…”என்று கடுப்பாக கூறினான் ஜெயக்குமார்….

     மீண்டும் அதுவந்து என்று இழுக்க தயாராகிய மூவரை பார்த்தவன் அவர்கள் சொல்ல வருவதை கைநீட்டி தடுத்து நிப்பாட்டி நவீனாவை மட்டும் கூறச்சொன்னான்….

      அவன் தன்னை மட்டும் சொல்ல சொன்னதில் தைரியம் வரப்பெற்ற நவீனா அவன் வகுப்பில் தவறாக கணக்கு நடத்தியதை  சொல்லி முடித்தாள்…

 

   அதை கேட்டவன் சிறிது நேர அமைதிக்குப்பின் அவர்களிடம் மன்னிப்பை வேண்டினான்…

             தற்போதைய பாடவகுப்பில் ஆசிரியர்கள்  யாரும் இல்லை என்று தெரிந்துகொண்டவன் வகுப்பறைக்கு சென்று மன்னிப்பு கேட்டு தான் தவறாக செய்த கணக்கை மீண்டும் சரியாக சொல்லிகுடுத்து விட்டு வந்தான்…

                கல்லூரி முடிந்தவுடன் தனது பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிட்ருந்தவன் மனம் முழுவதும் தன் செய்கையை நினைத்து தன்னையே நொந்தவாறு சென்றவன் வண்டியை நிறுத்திய இடம் சுருதியின் வீடு…

                     தன் நினைவுலகத்தில் இருந்து வெளிவந்தவன் அப்பொழுது தான் சுற்றுப்புறத்தை உணர்ந்தான்…

            அட கொடுமையே என்ன இங்கே வந்து தொலைச்சுட்டோம்….யாரும் பார்குறதுக்குள்ள இந்த இடத்தை விட்டு காலி பண்ணனும் என்று அவன் வண்டியை திரும்புவதற்குள் டேய் அண்ணா என்ற குரல் பின்னிருந்து கேட்டது…

             “யாருகிட்ட மாட்டகூடாதுனு நினைச்சேனோ அவன்கிட்டயே மாட்டிகிட்டேனே…இப்ப இவன்கிட்ட என்ன சொல்லி சமாளிக்குறதுனு தெரிலையே…”என்று யோசித்தவாறு திரும்பினான்…

       “என்ன டா இங்கே வந்துருக்க…மாமாவே பாக்கணுமா…என்ன…”என்று கண்ணெல்லாம் சந்தேக குறியோடு பார்த்தான் செல்வா….

        “இல்லை டா…இங்கிட்டு தான் என் பிரண்ட் வீடு இருக்கு அவனை பாக்கவந்தேன்…அதான் அப்டியே ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்க வந்தேன்…”என்று ஏதோ வாய்க்குள் வந்ததை உளறி னான்…

     “அப்டியா…அப்றம் ஏன் யாரையும் பாக்காம கிளம்பி போற…”உன் பொய் என்னிடம் எடுபடாது என்ற பார்வையுடன் பார்த்தான்…

     “சும்மா நொய்நொய்னு கேள்வி கேட்டுட்டு இருக்க…நான் எங்க மாமா வீட்டுக்கு வரக்கூடாதா…நீ மட்டும் இங்கயே குடியிருக்க…நா ஏதாவது உன்னை கேக்குறானா…”என்று எரிந்து விழுந்தான்…

      “நா எப்ப இவனை இங்கே வர கூடாதுனு சொன்னேன்…வந்துட்டு யாரையும் பாக்காம போறானேன்னு தானே கேட்டேன்…”என்று  செல்வா தன் மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் போதே ஜெயக்குமார் சென்றிருந்தான்…

      “என்ன டா நடக்குது இங்கே…காலைல இருந்து ஒருத்தி கிறுக்கு மாறி என்ன என்னமோ பண்ணிட்டு இருக்கா…இவன் என்னடானா வீடுவீடா அலைச்சுட்டு திரியுறான்…இதுங்க ரெண்டும் கல்யாணம் பண்ணி யாரை கிறுக்கா அலைய விடபோதுங்களோ தெரியலை…நம்மால இல்லாத வரை சந்தோசம் தான்…”என்று எப்பொழுதும் போல் இவர்கள் இருவரையும் நினைத்து புலம்பியவாறே வீட்டுக்குள் சென்றான்…

     ஜெயக்குமார் சுருதி இருவருக்குமே தெரிந்தது தாங்கள் இப்டி குழம்பி தவித்து மற்றவர்களையும் குழப்பி விடுவதற்கான காரணம்…ஆனால் அதை ஏற்றுக்கொள்ள தான் இருவருக்கும் மனம் இல்லை…

இருவரும் தங்கள் இணைகளை மூன்று வருடங்கள் கழித்து பார்க்கப்போகிறோம் என்ற பதட்டத்திலியே பாலை சோறில் ஊற்றி…ஒரு ஜோடி செருப்புக்கு கூட வித்தியாசம் தெரியாமல்  அலைந்தாள் சுருதி…

        நம் கதாநாயகன் ஒரு படி மேலே சென்று தப்புத்தப்பாக சொல்லிகுடுத்து…தன் வீட்டை மறந்து கதாநாயகியின் வீட்டில் போய் நின்று அசிங்கப்பட்டான்…

             இரு துருவங்களும் சந்திப்பதற்கு முன்னே இவ்வளவு சேதாரங்கள் என்றால் சந்தித்தால்…கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்…

         

  உன்னை நோக்கி நானும்…  

   என்னை நோக்கி நீயும்….

  ஈர்க்கப்படுகிறோம்…

  என்று தெரியாமலே

 தவிர்க்க நினைக்கின்றோம்…

   முயல்கின்றோம்….

   ஆனால் பலன் என்னமோ….

      

   ஆதிக்கம் தொடரும்…

       

      

 

    

 

         

                     

Advertisement