Advertisement

வண்ணம்-10

“நிழல் போல நானும்…….ஆ.. நிழல் போல நானும்……

.நடை போட நீயும் …..

தொடர்கின்ற….. சொந்தம்…. நெடுங்கால பந்தம்……..

கடல்…… வானம்….. கூட நிறம் மாற கூடும்…….

நான்……. கொண்ட பாசம்….. தடம் மாறிடாது…..”

ருத்ரன்…… இரு வருடங்களில், வேலை,பொருளாதாரம், சமுக மதிப்பு என்ற வகையில் அவனுக்கு ஏற்றமே……

ஆனால், ருத்ரனுக்கு ஓர்…. முசுட்டு தனம் வந்திருந்தது…. எதற்கு என்றாலும் கோவப்பட்டான்…. யார்…….. என்ன….  என்றும் பாராமல் எரிந்து விழுந்தான்.

வைத்தியநாதன், “நாம் சென்று நிச்சையம் செய்வது தான் முறை என்க…

ருத்ரன் ”இங்கு எல்லாம் முறையாக நடக்கிறதா” என்றான்

அவர் “என்னடா…. பேச்சு இது..” என்க ஒரு முறைப்புடனே சென்றான்.

அன்று நிச்சையத்திலும் அப்படி தான் அவள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிடிவாதம்.

மதுவின் மன வருத்தம் பார்த்து….. சிம்பிள்லாக திருமணம் வைக்கலாம் என வைத்தியநாதன் கூற… அதற்கும் அவரிடம் காய்ந்தான்.

ஜானகிக்கு கவலை ருத்ரன் ஊருக்கு வருவதே இல்லை என…….. ஆனால் வந்தால்……. “ஏண்டா… இவன் வருகிறான்” என நினைக்க வைத்தான்.

கல்லாக இறுகி இருந்தான், யாரும் அவனிடம் பேச கூட கிட்டே வருவதில்லை. அனைவரையும் தள்ளி நிறுத்தி இருந்தான்.

கிரி , சுபா கூட இப்போ சற்று தள்ளியே நின்றனர்…… நிறுத்தியிருந்தான்.

திருமணநாள் குறிக்க பட்டது…. அனைவருக்கும் ஆனந்தமே…. ருத்ரனை இலக்குவதற்க்காக….. புடவை, நகை எடுக்க என லதா அழைக்க “என்னால் வர முடியாது” என நேராகவே சொன்னான்….. சாக்கு போக்கு எதுவும் இல்லாமல்.   

சௌந்தர் பத்திரிகை மாடல் எதாவாது… நீ பார்க்கிறாயா?” என கேட்க…. “எல்லாம் உங்கள் செலவு தானே………. உங்களுக்கு எது வசதியோ அப்படி செய்யுங்கள்” என்றான்.

இங்கே செலவு கணக்கு யாரடா… பார்த்தார்….. என தோன்றியது சௌந்தர்க்கு.

அதன் பிறகு யாராவது அவனிடம் பேசுவார்களா என்ன….

கல்யாண வேலைகள் நன்றாக நடந்துக் கொண்டிருந்தது கல்யாணத்திற்கு நான்கு நாட்கள்……. இருந்த நிலையில் கிரி ருத்ரனுக்குபோன் செய்து “மாமா எப்போ வருவிங்க.. உங்க ப்ரிண்ட்ஸ் எல்லாம் எத்தனை பேர் வருவார்கள்…… ஏதாவது ஹோட்டலில் ரூம் போடவா?” என்றான்.

ருத்ரன் “கண்டிப்பா வந்திருவேன் டா…….. அதுக்காக எல்லாம் போன் செய்யாத…. என் விஷயம் நான் பார்த்துக் கொள்ளகிறேன்…..” என்றான்.

அவர்களில்…. பெண் வீட்டில் தான் திருமணம் செய்வார்கள்…. அதனால், வைத்தியநாதனும் ஜானகியும் இங்கு கோவை வந்திருந்தனர்.  கல்யாண பத்திரிகை, புடைவை…. எல்லாம் எடுப்பதற்காக……

எல்லோரும் நீண்ட நாள் கழித்து சேர்வதால்………. ஓர் உற்சாகம் இருந்தது, ஆனால் கூடவே அனைவரும் ஒரு வித இறுக்கத்துடன் இருந்ததனர்.

மது, அவள் தனது சுயத்தை முழுவதுமாக இழந்து இருந்தாள்…. புடவை எடுக்க சென்றார்….

“என்ன பார்க்கற மதும்மா….” என ஜானகி கேட்க….. “மாமாக்கு என்ன கலர் பிடிக்கும் பாட்டி அதே…….. வாங்கி விடலாம்……..” என்றாள்.

மது முகூர்த்த புடவையையும் அதே கலரில் தேட…….. லதா தான் “என்ன பண்ற மது நீ……” எல்லா புடவையும் ஒரே கலரில் இருக்கு…. ஷேட்ஸ் தான் மாறி இருக்கு…. ஆனா எல்லாம் ஒரே கலர்….” என கடிந்தார்.

இதே தான், நகை, பத்திரிகை, நிச்சைய மோதிரம் என எல்லாவற்றிலும் வந்து நின்றது…..   

முதலில் ஜானகிக்கும் லதாவிற்கும் சந்தோஷமே….. ஆனால் எல்லாவற்றிலும் அதே வார்த்தையை திரும்ப திரும்ப இவள் சொல்ல…… அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

மதுவின் அதீத குற்ற உணர்ச்சி… ஒரு அடிமையாக அவளை செய்து இருந்தது…. அதுவும் ஒரு சில விஷயங்களில்…. அது தனது எல்லையை தாண்டி இருந்தது.

ஒரு 23 வயது பெண்ணின் கல்யாண கனவுகளில் இருந்து முற்றிலும் வேறாக இருந்தது.

சுபா… இப்போதும் மதுவிடம் பேசுவது இல்லை….. தன் தங்கை கல்யாணத்திற்கு வந்திருந்தவள் அனைத்து வேலைகளையும் செய்தாள்….. தன் தங்கையிடம் பேசுவதை தவிர.

அழகு நிலைய பெண்கள் வந்திருந்தனர்…. சுபா தான் இந்த மேக்-அப், இது இப்படி, இது அப்படி என சொல்லிக் கொண்டிருந்தாள்….. மது வாயே திறக்கவில்லை,

கடைசியாக மெகந்தி புக் ஒன்று காட்டி “இந்த டிசைன் என்ன வேண்டும்…. ரெட் கோன்….. ட்ரை செய்கிறீர்களா….” என வினவ   

சுபாவின் கல்யாணத்தில், எவ்வளவு ஆசையாக, தான் இந்த மெகந்தியை போட்டுக் கொண்டது நியாபகம் வந்தது… மதுவிற்கு……..

ருத்ரன் கூட கிண்டல் செய்தான் “எப்படி தான் மணிக் கணக்க இத போடுக்கிரிங்களோ…. நல்லவே இல்ல…..  கை நிறைய மருதாணி வைச்ச  எவ்வளவு அழகாக இருக்கும்……” என ரசனையோடு சொன்னான்.

அதற்கு மது “ எனக்கு புடிச்சத தான் நான் போட்டுக்க முடியும்……” என்றாள். ஒரே போடாக.      

மது யோசிக்க தொடங்க… உடனே சுபா “உனக்கு இதில் சாய்ஸ்சே இல்லை…. ருத்ரன் மாமாக்கு அரைத்து வைக்கும் மருதாணி தான்  பிடிக்கும்…..” ஒரு வித கிண்டலாக கூற…. மது கண்ணில் நீர் நிறைந்தது.

லதா கடிந்துக் கொண்டார்… “என்ன சுபா… அவளே இப்போ தான், ஏதோ நிமிர்ந்து அமர்ந்தாள்….. அதற்குள்…. என்ன சொல்லற…. நீ.. போ… நான் பார்த்துக்கிறேன்.” என்று அவளை நகர்த்த…. 

சுபா “எனக்கு என்ன வந்தது மாமாக்கு பிடிக்குமேனு சொன்னேன்…. சும்மா…. சும்மா…. என்ன ஏதாவது சொல்ல வேண்டடியது” என கொஞ்சம் காரமாகவே பேச…..

சட்டென மது பணிந்தால்…. “அய்யோ நீ… சொல்ற மாறியே செய்யலாம் க்கா..” என்றாள்.  அப்போதாவது என்னுடன் பேசிவிடுவாளா சுபா என்று தான் பார்த்திருந்தாள் மது……

ஆனால், சுபா அவளை பார்க்க கூட இல்லை.

ஆனால் லதாவிற்கு தான் “அய்யோ என் பெண் நிலை இப்படி இருக்கிறதே என பாவப்பட்டார்…….

எல்லா வீடுகளிலும் இருப்பது தான் அக்கா தங்கை சண்டை…….. ஆனால், சுபா நேரம் கிடைக்கும் போதெல்லாம் மதுவை பதம் பார்த்தாள்.

தீப்திக்கு உணவு ஊட்டினால் கூட சுபா….” என்ன சாதம் சரியாக் பிசையவே இல்லை….” என்றாள்.

அரவிந்த் சுபாவை விட வந்த போது… மது மேலே மொட்டை மாடியில் துணி எடுக்க சென்றிருந்தாள்……. ஒரு பத்து நிமிடம் கழித்து வந்து பார்த்து “வாங்க மாமா…. வா அக்கா…. “ என்றாள்.

அதற்கு சுபா “நாங்க வந்து அரை மணி நேரமாச்சு…. இப்போ தான் ரூம்ம்மிலிருந்து வெளியேவே வர……” எனக, மதுவிற்கு முகம் வாடி போனது. வரதன் தான் சுபாவை செய்யலை கண்டு…… பேச்சை மாற்றினார்.

சுபா எப்போதும் இப்படி கிடையாது…. ஆனால்……. மதுவின் செயல், அவளை அப்படி பேச வைத்தது.

வரதன் தான் மதுவிற்காக தனியே சுபாவை அழைத்து பேசினார்…..  ஆனால் அதை எல்லாம் சுபா கண்டுக் கொள்ளவில்லை, எல்லா வகையிலும் எப்போதும் மதுவை வரதன் தான் தேற்றினார்.

அங்கே உடுமலையில் ருத்ரனின் மற்ற இரு அக்கா, மாமா……, பிள்ளைகள், அண்ணன் சுதாகர், அண்ணி ரம்யா, மகன் சந்தோஷ்…. என அனைவரும் வந்திருந்தனர்….. இவர்கள் ஸ்ரீலங்கா போல…. நட்பு நாடா… இல்ல பகை நாடானே தெரியாது.

ஆனால்… தம்பியின் திருமணம் முன்னிட்டு…….. எந்த தயக்கமும் இல்லை போலும்……சுதாகர்க்கு, ரம்யா தான்…. என் கொழுந்தனுக்கு.. என்ன குறைச்சல்…. இப்படி ஒரு பொண்ணு… என தான் மதுவை நினைத்தாள்.

ரம்யாவிற்கு தன், சித்தப்பாவின் பெண்…….. மீராவை.. ருத்ரனுக்கு கேட்டனர்…. ஆனால் அது பேச்சாக கூட எடுபட வில்லை….. ருத்ரனிடம்…. அதனால் தான் இந்த தாக்கம் ரம்யாவிடம்.

ருத்ரன்…. உடுமலை வந்துவிட்டான்…. அவனின் நெருங்கிய நண்பர்கள் மூவர் மட்டும் வந்திருந்தனர்….

நாளை திருமணம்…….. என்ற நிலையில் முதல் நாள் காலை கிளம்பி மதியம் கோவை அடைந்தனர்…. ருத்ரன் வீட்டினர். மாப்பிள்ளை ருத்ரனை பார்த்து அனைவருக்கும்…. அதிர்ச்சி……

அப்படி இருந்தான்….. ருத்ரன்…… ஒரு காதில் மட்டும் கடுக்கன் (தோடு)…… விராட் கோலி ஹேர் ஸ்டைல்………  அதில் பின்புறம் வேறு சின்ன போனிடையில்……. போதாதற்கு……. ஒரு தாடி…. எல்லோ கலர்……டி-ஷர்ட், சாயம் போன….. ஜீன்……    

மண்டபத்துள் மாப்பிள்ளை நுழையும் போது…. ஆர்த்தி எடுப்பது வழக்கம்… அதற்காக ருத்ரன் நிற்க…. ஆர்த்தி தட்டுடன் வந்த சுபா… “மாமா…. ஏன்… இப்படி….” என சத்தம்மாக கேட்க…. ருத்ரன் முறைத்தான்.

பெரியாவர்களே சும்மா இருக்கவும்… சுபா அமைதியாக.. தன் வேலையை செய்தாள்…. உள்ளே வந்த உடன்… லதா தன் அப்பாவிடம் “என்ன ப்பா…. இது…. இவன் இப்படி வந்து நிக்கிறான்…. நீங்க எதுவும் சொல்லையா?….” என முறைத்தார்.

வைத்தியநாதனும் “என்னம்மா… செய்வது… அவனிடம் சொல்லியாச்சு… கேட்டா தானே….” என்றார்.. விரக்த்தியாக.  

கிரிக்கு சிரிப்பு தான் வந்தது…. சௌந்தர் வரதன் எல்லாம் செம கடுப்பில் இருந்தனர்….

“கல்யாணத்தில் தாடியோட எந்த மாப்பிள்ளையும் இருந்து நான் பார்த்தில்லை” என மதுவின் அத்தை புலம்ப….

மண்டபமே ஹாட் ஆனது…. ருத்ரனின் எல்லா அக்காவும் வந்து இது நல்லா இல்ல டா… வேணாம் டா… இன்னும் கொஞ்ச நேரத்தில் நிச்சையம் டா… போடோ எடுத்தா… காலம் பூர இப்படியே தானடா இருக்கும்…” என புலம்பல்…………

அசையவில்லை அவன் ஏன் வாய் கூட திறக்கவில்லை….. அசால்டாக போன் பார்த்துக் கொண்டிருந்தான்.

கிரி தான் பார்த்துவிட்டு நேராக வரதனிடம் சென்று ஏதோ சொன்னான்…. அவர் நேரே மதுவின் அறைக்கு சென்றார்…. “மதும்மா… ருத்ரன்… மாப்பிள்ளை கிட்ட… கொஞ்சம் பேசு டா, அந்த தாடிய மட்டும் எடுக்க சொல்லு டா போதும்….” என மொட்டையாக் கூற….

மது விழித்தாள்……. பிறகு, கிரி வந்து விவரம் சொல்ல மது “என்ன சித்தப்பா…. நான் போய் எப்படி சொல்ல” என கண்ணில் நீரே வந்து விட்டது…  

வரதன் “என்னடா செய்வது உன் மாமன் படுத்துகிறான்…. போடாமா… எல்லோரும் சொல்லியாச்சு டா….”  என கூற மதுவிற்கு கண்ணில் நீர் நிறைந்தது…

“எப்போதும் இவனுக்கு…. இவன் எண்ணம் தான் முக்கியம்…. பழக்க வழக்கத்தை கூட நினைப்பதில்லை…..” என லதா சொல்லிக் கொண்டே ரூமிலுள் வந்தார்.

அங்கு மதுவினிடம் வரதன் கூறுவதை கேட்ட லதா…. “போடா ம்மா… நீ சொன்ன கேட்ப்பான்….” என கூற….   

மது பாவமாக கிரியை பார்த்து “நீயும் வா ண்ணா,,,,,,,” எனக, லதா அங்கு நின்றிருந்த தீப்தியை தூக்கி மதுவிடம் கொடுத்து….. “போ… என்னும் விதமாக… பார்க்க….” மது கிரியை கண்களால்  கெஞ்சுவது போல் பார்க்க….

லதா தலையில் அடித்துக் கொண்டு… “போடி….” என்றார். கிரியும் கண்களால்…”போ…….” என்று பார்க்க….

மதுவிற்கு மாமா ஏற்கனவே என்னை மதிக்க மாட்டான்…… இப்போ இவர்கள் வேறு…. இப்படியல்லாம் செய்கிறார்கள்…. என்னை நிமிர்ந்துக் கூட பார்க்க மாட்டான் ….. என தொண்டையில் அடைத்ததை விழுங்கி கொண்டு……… தன் கண்ணிலிருந்து கண்ணீர் வெளியே வரக் கூடாது என எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு…… ருத்ரன் அமர்ந்த்திருந்த இடத்தில் நின்றாள்.

மது “மாமா… மாமா….” என அழைக்க….. ருத்ரன் திரும்ப வில்லை… வேணும்னே செய்கிறான்…..  இவள் முனகி கொண்டே….. கொஞ்சம் திடம் வரவும் “மா….” என சத்தமாக ஆரம்பிக்க…..

அதற்குள் தீப்தி “சித்தாப்பா…….” என கூப்பிட…. ருத்ரன், இப்போது சிரித்துக் கொண்டே நிமிர்ந்தான்……

ருத்ரன் “ஏன்… உங்க சித்தி என்ன… நாலு தரவ… மாமான்னு கூப்பிட்டால்…. குறைந்து விடுவாளா………” என மதுவை பார்த்துக் கொண்டே கூறி..     

எழுந்து தீப்தியை கையில் வாங்கியவன்….. மதுவை பார்த்து “உட்கார்…..” என்றான்.

மது பின்புறம் நின்றிருந்த…….. கிரியை பார்க்க…. “அங்க என்ன டி ….. பார்க்குற…. அவனுக்கு எல்லாம் தெரியும் நீ உட்கார்… ஒன்னும் சொல்ல மாட்டான்…….” என்றான்.

மதுவிடமிருந்து தீப்தியை வாங்கியவன்…. அது தன்னையும், மதுவையும் பார்ப்பதை பார்த்து…….. “உன் சித்திக்கு ரொம்ப பயமாம்…. என்னை பார்த்து….” எனக.

மது வாயே திறக்க வில்லை….. ருத்ரன் “ம்..” என்றான்.

அவசரமாக மது “மாமா….  சித்தப்பா…. இந்த தாடிய மட்டுமாவது எடுக்க சொன்னாங்க…. தாடி.. மட்டும் வேணாம் சொன்னாங்க….. நம்ம வகையில்…  அப்படி பண்ணக் கூடாதாம்…….” என திக்கி தெணறி……. முடித்தாள்.

ருத்ரன் “எப்படி…” என்க.

மது “தாடியோட கல்யாணம் பண்ணக் கூடாதாம்..” என விளக்க.

ருத்ரன் “அப்போ… உன்ன… கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கவா……….” என்றான்….. ஒரு ஆழ்ந்த குரலில்.  

தலை தனாக “ஆம்…..”என்றது. ருத்ரனுக்கு ஒரு திருப்தி…. ஆனால்…..மதுவிற்கு இன்னும் எத்தனை தரம் நான் இவனிடம் கேட்கக் வேண்டும்மென நினைக்கிறான்…. என்று நினைத்தாள்…….

ருத்ரனுக்கும் இது ஒரு சங்கடத்தை கொடுத்திருக்கும் போல்….. சட்டென “ஏன் டி…. நீயே பார்த்து சொல்… நான் நல்லா இல்லையா……” என தீப்தியை தூக்கிக் கொண்டு எழுந்து நின்றான்.

தீப்தி அவன் காதில் போட்டிருந்த ஒற்றை கல் தோட்டை தன் கையில் சுற்றிக் கொண்டிருந்தாள்……  கையில் ஒரு குழந்தையுடன்…. இயல்பாய் மனைவிடம் பேசும் கணவன் போல்…..

இப்படி அவன் எழுந்து நிற்கவும்…….. பார்க்கவே மதுவிற்கு அழகாக இருந்தது……… தன் ஒதுக்கத்தை எல்லாம் சற்று தள்ளி வைத்து அவனை நிமிர்ந்து பார்க்க….

ஒரு கம்பிளிட் மேன்…. லுகில் இருந்தான்… அத்தோடு கூட…… டிரெண்டி லுக்கில்…. இப்போது முகத்தில் சிரிப்புடன்…. கண்ணில் காதலும், ஆசையும் சேர… மதுவை பார்த்த போது…. மதுவிற்கு மூச்சடைத்தது….. அவளிற்கு வார்த்தையே வரவில்லை.   

ருத்ரன் “ம்…… பதில் சொல்லு… “ என்றான். மது “ம்…” என்றாள்.

ருத்ரன் “இதற்கே இப்படி யோசிச்சா எப்படி………. நீ இன்னும்…… நிறைய பதில் சொல்லணுமே…….” என்றான். பழைய படி…… 

  

Advertisement