Advertisement

Tamil Novel

வண்ணம்-8

“தொடுவானம்….. தொடுகின்ற நேரம்…..

தொலைவினில் போகும்…..

அட… தொலைந்துமே போகும்……

தொடுவானமாய் பக்கம் ஆகிறாய்…..  

தொடும்போதிலே…. தொலைவாகிறாய்….”

சுரேந்தர் ஒரு கணக்கு வைத்திருந்தார், இந்த பக்கம் ஷியாமை அனுப்பி வைத்து விட்டு, தான் சென்று இருவருக்கும் பொதுவான பெரியவர்களிடம் மதுவை பெண் கேட்பது போல் பேசுவது…..

அதனால், முதலில்…. பொதுவாக நல்ல கார்யங்களுக்காக் பேச்சை துவங்கும் போது, பகலில் தான்… பேசுவது வழக்கம்…..

ஆனால் சுரேந்தர் இரவு…. 7 மணி  அவசரமாக போன் செய்தார்….  தனது தம்பி அவர்கள் பெண்ணை விரும்புவதாக கூறினார். நீங்கள் தான் சௌந்தர் வீட்டிடம் கேட்டு இதனை முடித்து தர வேண்டுமென வேண்டுகோள் வைத்தார்.

மதுவும் ஷியாமும் டெல்லி சென்று சேரும் நேரத்தை கணக்கில் கொண்டு, தனது வேலையாட்கள் ஒருவர் மூலமாக, அவர்களின் வீட்டின் வேலை ஆட்களுக்கு விவரம் தெரிவிக்கும் படி எல்லாம் செய்து விட்டார்.

இப்போது அவர்கள் நம்மை தேடி வந்து தானே ஆக வேண்டும் என தனது அன்றாடும் வேலையை செய்தார்.

மதுவின் வீட்டிலே இவர் நினைத்த படி நடந்தது. பெண்கள் மட்டும் இருந்த நிலையில்…. அப்படி தான் நடந்தது…. மது இன்னும் காலேஜ்லிருந்து வரவில்லை எனவும்…. 6 மணி வரை பார்த்தவர்கள்….. பிறகு சௌந்தர்ருக்கும், வரதனுக்கும் போன் செய்தனர் 

மது இன்னும் வரவில்லை என்ற விவரம் தெரிந்து சௌந்தர்ரும், வரதராஜனும் வீட்டிக்கு வந்த போது சுரேந்தர் சொல்லியது போல் வேலை ஆட்கள்…. அப்படியே பேசிக் கொண்டனர்.

சௌந்தர்க்கு பயம் தான், என்ன டா வரதா… போலீசில் சொல்லி தேட சொல்லலாமா…. என கேட்க….

வரதன் “இரு அண்ணா…. ஒரு அரை மணி நேரம்…. மதுவை பற்றி தெரிந்து விடும்…. நான் பார்த்து சொல்லிகிறேன்…. நான் தான் கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன்….. நீ கவலை பாடதே…. நான் தான் சுரேந்தர் குடும்பத்தை அமைதியானவர்கள் என நம்பி விட்டேன்.” என்றவர். அவர் உள் மனதில் ஏதோ ஒரு உறுத்தல்….. எங்கயோ தவறி இருக்கிறது என தோன்றியது. அதனால் கொஞ்சம் யோசித்தால் தெரிந்துவிடும். என இவர் நினைக்க.

அதனால், வரதராஜன் அசராமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்… சௌந்தரிடம்.., கேட்டுக் கொண்டிருந்த லதாவிற்கு “என்ன தம்பி….. இப்படி சொல்லிட்டு இங்கே இருக்கிரிங்க…..” என காரமாக் பேசவும்.

அப்போது தான் கிரி உள்ளே நுழைந்தான்…. இந்த விஷயங்கள்   தெரியாமல், வந்தவனை வாசலோடே அழைத்துச் சென்றார்…….” வா டா கிரி ஒரு முக்கியமான வேலை இருக்கிறது …..” என்று.

கிரியும் ஏதோ வேலை விஷயம் என எண்ணி அப்படியே கிளம்ப…. சௌந்தர் தான் வரதராஜனை பார்த்து“ ஒரு மணி நேரம் தான்……. உனக்கு….”  என மிரட்டலாக சொல்ல.

இதனை பார்த்தவன்….. “என்ன சித்தப்பா….” கலவரமாக கேட்க…. காரை அவனையே எடுக்க சொன்னவர்…. விவரமாக மதுவின் விஷயத்தை…. சொல்லி முடித்தார்…….. பின்…. “இவர்கள் ஏதோ திட்டம் போட்டு தான் செய்தது போல் இருக்கு டா….. நான்….. நான் தான்….. அது என்னனு தெரியலா டா….. அவனை …… முதலில் பெண் கிடைக்கட்டும்…. நாம் அமைதியாக் இருக்கணும் டா… ” என்று பல்லை கடித்துக் கொண்டு தான் சொன்னார்

கிரிக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை…….

“எல்லாம் முடிஞ்சு போச்சு இன்னும் என்ன பொறுமை சித்தப்பா…… “

“டேய்…. இரு டா….

நேராக  ஸ்டடி சென்டர்ருக்கு உள் சென்றனர்……. சுரேந்தார் நீட்டிடாக் டிரஸ் செய்து…. அமைதியாக் அமர்ந்திருந்தார், இவர்கள் சென்றதும்… அமைதியாக் “வாங்க “ என்றாவர்.

இப்போது தான் விஷயம் தெரிந்தது என்றார்.

வரதன் “ஷியாம்க்கு போன் செய்யுங்கள்….” சொன்னார்……

வரதன்  தான் ”அவர்களை இங்கே வர சொல்லுங்க நாம் எல்லாம் நல்ல படியாக செய்யலாம்” என்று தன்மையாகவே பேசினார்.

சுரேந்தார் தன்மையாகவே பேசினார், ஷியாமுக்கு போன் செய்தார்…. போன்  நாட் ரீச்சபுல் என வந்தது.

சுரேந்தர் “நான் இப்பொது தான் யோசித்து…. பெண் கேட்கலாம்…. என கேசவன் அண்ணனுக்கு போன் செய்து பேசி இருந்தேன்… அதற்குள் இந்த ஷியாம் அவசரப்பட்டு விட்டான். என தன்னை நல்லவனாகவே காட்டிக் கொண்டார்.

இதல்லாம் சுரேந்தார், கிரியின் நடவடிக்கையை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர்க்கு அவனை பார்க்க பார்க்க…. பயம்…. முகத்தில் காட்டவில்லை.

கிரிக்கு இருப்பு கொள்ளவில்லை, அங்கு அமரவெல்லாம் இல்லை…. கிரி நடந்துக் கொண்டே இருந்தான்….. கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம்… வருகின்ற போனை எல்லாம் கட் செய்தான்….

யாரையும் அடிக்க முடியாத ஆத்திரத்தில்…. அங்கிருந்த டெஸ்க்கில் தன் கை வலிக்க ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான்….

வரதன் தான் அதை பார்த்து விட்டு “தப்பா நினைக்காதீர்கள், ரொம்ப பொறுமையானவன் தான் இன்று….. நிலைமை வேறல்லவா …. அதான்….” என்று சமாதானம் செய்தாரா இல்லை மிரட்டினாரா…. தெரியவில்லை.

9 மணியளவில் சுரேந்தரின் போன் ஒலித்தது…. சுரேந்தர்க்கு, ஏர்போர்ட்டில் நடந்தது தெரியாதல்லவா…. போன் வந்தது…. உடனே ஸ்பீக்கர் மோடில்  ஆன் செய்தார்…..

ஷியாம் சொல் புத்தி அல்லவா, அடுத்து என்ன செய்வது என தெரியாதவன், அண்ணனை கேட்க எண்ணி…. எடுத்த உடன் “அண்ணா… எவனோ, ஸ்ரீயின் மாமாவாம்…. வந்து காரியத்தை…..” என முடிக்க கூட இல்லை கால்… கட் செய்யப்பட்டது சுரேந்தாரால்…….

வரதனும், கிரியும்  ஏற்கனவே… சந்தேகத்தில் இருப்பவர்கள்…. இப்போது, ஷணமும் யோசிக்காத… கிரி….. அவர் அமர்ந்திருந்த…. நாற்காலியை விட்டான், ஒரு உதய்…..

அங்கே ஏர்போர்ட்டில்,  

போலீஸ் வரவும், மது ஷியாமை பார்க அவன்…… இவளை கண்டு கொள்ளவே இல்லை.

ஷியாம்…… ருத்ரன் தன்னை அடித்ததையே நினைத்துக் கொண்டு இருந்தான்…. போலீசில் வந்ததும் நீ தான் என்னுடன் வந்தாய் என கூறி இருடி உன் மாமாவை இன்று கதற வைக்கிறேன்……..” என்று நினைத்தவன்.

மதுவையும் “நீ என்னை விட்டு எங்கு போயி விடுவாய்….. என்று மிதப்பாக பார்க்க…… மது முதல் முறையாக் உடைந்தே போனாள்……

தனக்கு ஷியாமை பற்றி தெரியவில்லையோ……  “தன்மையானவன்… என் ஷியாம்… குணமானவன் என்னவன்” என்ற நினைப்பை எல்லாம்…. இந்த பார்வையால்……… ஒரு மெத்தன பார்வையால்…… ஷியாம் பார்க்க….. ஒடுங்கித்தான் போனாள் மது. 

ஆனாலும், ஷியாமை விட்டு விலகாமல் நடந்தாள், அது ஷியாமிற்கு ஒரு கர்வத்தை கொடுத்தது.

(இது பெண்கள் செய்யும் தவறா…. இல்ல அது தவறு என கற்பிக்க பட்டதா…. )

போலீஸ் வந்து என்ன ஏது என கேட்பதற்காக என்குயிரி ரூமிற்கு அழைத்துச் சென்றனர்…… ஷியாம் ஹிந்தியில்… ஆரம்பித்து…. “நான் கூட்டி வந்த பெண்… இது அவ….. கசின்…. ” என அவனே ஒரு பட படப்புடன்…. ருத்ரனை பற்றி சொன்னான்…..

அந்த சின்ன வழி முழுவதும் ஷியாம் புலம்பிக் கொண்டே வந்தான். இதில் ஒரு வரிக் கூட நான் கல்யாணம் செய்ய போகும் பெண் மது என அவன் கூறவே இல்லை…. இதை மதுவும், ருத்ரனும் நோட் செய்தே இருந்தனர்.

மது சங்கடமாக தலை குனிய… ருத்ரன் அலட்சியமாக தான் மதுவை பார்த்தான்.    

ருத்ரன் அமைதியாகவே இருந்தான்…. பின் அவர்களை உள் அழைத்து சென்றனர்…….. போலீஸ்

ரூம்மின் உள் சென்றதும் தான் ருத்ரன் வாயே திறந்தான்….. ஹிந்தி பேசாத தமிழன் டா…. என ஆங்கிலத்தில்  “ஹாய்…. சர்….. ஆம் ருத்ரன் …… என்றவன் தனது  பாஸ்போர்ட், கம்பனி விசா….  எடுத்துக் காட்டினான்….  மதுவை காட்டி இவள் நான் கல்யாணம் செய்ய போகும் பெண்……. “ என்றான் சிறு சிரிப்புடன்.

தொடர்ந்து “என்னை ஸர்ப்ரைஸ் செய்வதற்காக…. அவன் பிரின்ட்டுடன் இங்கு வந்தாள்….. எனக்கு அவன் பிரின்ட் என தெரியல….. அதான்…….. சாரி  பிரின்ட்…….” என அவர்கள் முன்னே ஷியாமிடம் ஷேக் ஹான்ட்ஸ் செய்து மதுவை ஒரு பார்வை பார்க்க….. 

அவளும் ருத்ரன் கண்ணசைவில்…. சிறு சிரிப்புடன் தொடர்ந்து…. “யா….. ஹி ஸ் மை பிரின்ட் ஷியாம் என ஆரம்பித்து…. ருத்ரனை தனது பியான்சி… என தொடர்ந்து…… ஒரு எக்சைட்மென்ட்டுகாக…..” லேசாக சங்கடத்துடன் ருத்ரனை பார்க்க……”

அவனும் சிரித்துக் கொண்டே…. “நான் தான் கோவப்பட்டு விட்டேன்…..சாரி பேபி” என கூறி… அவளை தோளோடு அனைத்துக கொள்ள… இதை எல்லாம் ருத்ரன் இயல்பாக செய்ய…..  அந்த என்குரியர் பெர்சன், ஒரு இளம் வயதினன்…. இவர்களது கண்ணசைவை கண்டுடே “ஓகே… ஒகே….” என்றார். 

இதை ஷியாம் ஒரு குரோதத்துடன் பார்த்திருக்க… அந்த போலீசில் மேன்… ருத்ரனிடம் “ஹாப்பி மெர்ரிட் லைப்……..ஜி….” என கூறி……. ஷியாமிடம் திரும்பி “கூல் ஜி…….” என கூறி… “கோ நொவ்… “ என்றார்.

மூவரும் அங்கிருந்து வெளியே வந்தனர், மதுவிற்கு தாங்கக் முடியவில்லை அங்கிருந்த இருக்கை ஒன்றில் தொப்பென என அமர்ந்தாள்.

ஷியாம் அவளின் அருகில் கூட செல்ல முயலவில்லை…… ஒரு ஓரமாக நின்று போனை இப்போது தான் ஆன் செய்தான்.

தனது லக்கேஜ் எல்லாவற்றையும் அப்படியே… அங்கேயே ரூம் வாசலிலேயே வைத்து விட்டு……. மதுவை பார்க்க,கண்ணிரில் கண்கள் மட்டும் வெளியே தெரிந்தது………. அதுவும் உடல் அழுகையில் குலுங்கக்…… அதன் சத்தம் வெளியே வராமல் இருக்க மது தனது க்ர்ச்சிப்பை கொண்டு மூக்கையும் வாயையும் மூடிக் கொண்டு, அமர்ந்திருந்தாள். ருத்ரனால் மதுவை பார்க்க முடியவில்லை…….

ருத்ரன் தாங்கக் முடியாமல் ரெஸ்ட் ரூம் சென்று விட்டான்……… ஓங்கி தன் கைகளை சுவற்றில் குத்தினான்…… கண்கள் சிவந்தது வெறித்து இருந்தது…….. என்னுடையவள் அழுகிறாள்…. நான் கைகட்டி வேடிக்கை பார்க்கிறேன்………

மை கேர்ள்….   ஷி ஸ் மைன்….. கத்திக் கொண்டான்….. ஆம்….. கத்தி சொல்லிக் கொண்டான்……… பிறகு தான்…….. கொஞ்சம் தன்னிலைக்கு வந்தான்……

ம்….. என் கண் பார்த்தே காரியம் செய்தவள்….. எப்படி டி…. சிரித்துக் கொண்டான்…… மனதில் கொஞ்சம் தெம்பு வந்தது….

இப்போது நிதானத்திற்கு வந்துவிட்டான். புல் ஹன்ட் ட்-ஷர்ட், ஒரு ஜீன், கையில் ஒரு விண்டர் ஜாகெட்…. சகிதம் பிரெஷ்ஷாக வெளியே வந்தான்.

ஷியாம் அப்போது தான் போன் பேசி……… அது உடனே கட் ஆகவும், அந்த டென்ஷன்னில் இருந்தான்.       

ருத்ரன்  சென்று அடுத்த கோவை பிளைட் டிட்டையில் கேட்டு வந்தான்… இன்னும் 1 மணி நேரத்திற்கு மேல் இருக்கவும் தான், மதுவிற்கு ஏதாவது… குடிக்க கொடுக்க வேண்டும் என நினைத்து ஏதோ வாங்கிக் கொண்டு அவள் அருகில் சென்றான்.

ருத்ரன் “இந்தா டி…” என்க… மது ஷியாமின் புறம் திரும்பி அவன் எதுவும் உண்ணவில்லை என பார்க்க. ருத்ரன் பல்லை கடிக்கும் சத்தம் மதுவிற்கு நன்றாக கேட்டது.

“நான் வீட்டுக்கு போன் செய்து சொல்றேன்…. நீ குடி ….” என்று விட்டு நகர. மதுவிற்கு கண்ணை ருத்ரன் மீதிருந்து எடுக்க முடியவில்லை…

கோவை,

சுரேந்தர்க்கு வந்த ஷியாமின் போனினால் தான்…..

வரதனுக்கு இப்போது தான் நிம்மதி…. தன் பெண் தவறே செய்யவில்லை என்று நினைத்தார். நான் தான் தவறி விட்டேன் என நினைத்தார், ஆனால் அதெல்லாம் விட ஷியாமின்  “யாரோ மாமா….” என்ற குரல். அவரை குழப்பியது.

கிரியும் கவனித்து தான் இருந்தான், ஆனால் இவரை விட மனமில்லை…. எனவே அவன்… சுரேந்தர் கிரி விட்ட உதையில் எதிரே இருந்த டேப்புலேளில் இடித்து நெற்றி காயத்துடன் கீழே விழுந்தார்..

சுரேந்தரால் எழ கூட முடியவில்லை…. கிரி நீ என்ன செய்தாய் ஏது என எதுவும் கேட்க வில்லை……

கிரிக்கு ஒரு அரை மணி நேரம் கழித்து போன் வந்தது…. ருத்ரனிடமிருந்து….  கிரிக்கு ஒரு அனுமானம் தான் ருத்ரன் தான் பார்த்திருப்பான் என…..

அதனால் போன் வந்தவுடன் எடுக்க….. “ஸ்பீக்கர் ல போடு டா…..” என்றான் “என்ன டா… பு***க  எல்லோரும்…. யாரா அவன் ஷியாம்….”

கிரி “சரி ….. அவன கூட்டிட்டு…. வீட்டுக்கு வந்துடு….நான் அவன் அண்ணன கூட்டிட்டு போறேன்…..” என்றான்.

ருத்ரன் “டேய்….. ஏதாவது வாய்ல வந்துடும்….. அண்ணன… கூட்டிட்டு போறானாம்…. அண்ணன…. நான் இன்னும் 3 மணி நேரம் ஆகும் வர….” எனக் கூறினான். 

ஷியாமின் அண்ணனை அவனிடம் பேச சொல்லு….. என்று விட்டு போனை வைத்தான்.        

சுரேன்தரை அதன் பிறகு கிரி எதுவும் செய்யவில்லை…. ஒரு ஆத்திரம் அவ்வளவே…. அதன் பிறகு ஷியாமிற்கு போன் செய்து வர செய்தனர்.

அனைவரும் விடியல் காலை… 3.30 வந்து சேர்ந்தனர்.

மதுவை பார்த்ததும் லதா முதலில் ஒரு அடி கன்னத்தில், அதன் பின் தான் படி ஏறவே விட்டார். பார்த்த ருத்ரன் அமைதியாக கடந்து சென்றான்

கார் சத்தம் கேட்டு கிரி மாடியில் இருந்து பாய்ந்து வந்தான்…. மதுவை பார்த்துக் கையை ஓங்கிக் கொண்டு வந்தான்…. இதை பார்த்த ருத்ரன்

“டேய் கிரி …. விடுடா அவள…. சும்மா படுத்தாதிங்க டா…. எத்தனை டா தாங்குவா அவ…. போடா…. போயி……. அங்கு பார்…..” என்றான்.

மது மேலே ரூமிற்கு கூட்டிச் சென்றனர்.         

ருத்ரன் அப்படியே கீழே…. ஹாலிலேயே…. மல்லாந்து படுத்துவிட்டான்

“காதல் என்னை பிழிகிறதே……

கண்ணீர் நதியாய் வழிகிறதே….

நினைப்பதும் தொல்லை …..

மறப்பதும் தொல்லை….

வாழ்வே வலிக்கிறதே…..

காற்றில் தொலைந்த மழை துளி போல்….

பெண்ணே நீயும் தொலைந்ததென்ன….

நீரினை தேடும் வேரினை போல…

பெண்ணே. உன்னை கண்டேடுப்பேன்….  

கண்கள் ரெண்டும் மூடும் போது

நூறு வண்ணம் தோன்றுதே…. 

மீண்டும் கண்கள் பார்க்கும் போது……

லோகம் சூன்யம் ஆகுதே….

  

Advertisement