Advertisement

உடனே ருத்ரனுக்கு போன் செய்தாள் மது….. அது காலை பதினொரு மணி…….. “மாமா ஷியாம் விஷயம் ஏன் என்கிட்டே சொல்ல” என்றாள் எடுத்த உடன். 
ருத்ரன் “என்னடி…. எடுத்த உடனே என்னனமோ கேட்க்கிற….. யாரு ஷியாம்…..” என்றான். முதலுக்கே மோசம்….
என்னவென்று சொல்லுவாள் மது….அய்யோ இவரிடம் சொல்லி இருக்க கூடாதோ…. அமைதியாக இருக்க…..
ருத்ரனுக்கு இப்போது தான் மணி அடித்தது…. “ஓஓ… என்றவன்….. என் மதுவ தூக்கி இருக்காண்டி…… அவன், அவன நான் ஒன்னும் செய்யாம  விட்டேன்னு சந்தோஷப்படு….. அவன….. பத்தி நான் உன்கிட்ட என்ன சொல்லணும்….. என்ன டி சொல்லணும்…. அதை சொல்லி அவனை விட…. நான் நல்லவன் பாருன்னு உன் கிட்ட சேர்டிபிகட் வாங்கனுமா…… டி…..” காட்டு கத்தலாக…. கத்தினான்.
மதுவிற்கு…. நான் என்ன கேட்ட இவர் எப்படி யோசிக்கிறார் என்று தான் தோன்றியது……உடனே மது போன் காலை கட் செய்தாள்….. வீடியோ கால் செய்தாள்….. 2தரம் செய்த பின்பே அட்டன் செய்தான்…..
மதுவிற்கு இப்போது ஷியாம் என்பவன் நினைவில் இல்லை….. தன்னை சுற்றி நடந்ததே தனக்கு தெரியவில்லையே….. என்ற கோவம் மட்டுமே இப்போது….
மது கோவத்தில் “என்ன பண்றிங்க…. என்ன கேட்டேன் உங்ககிட்ட…. தப்பா எதுவும் கேட்கலையில….. எதுக்கு கத்திறிங்க…. இத நான் வேறு யார்கிட்ட கேட்க முடியும்…. “ கடைசியாக அழுகையில் முடிக்க…. ருத்ரனுக்கு அய்யோ என்றானது.
ருத்ரனுக்கு இது ஒரு விஷயமா…. என்று தான் எண்ணம்.
“ஒரு நிமிடம்…” என்றவன் முகம் கழுவி தண்ணீர் எடுத்து குடித்துக் கொண்டே வந்தவன்……
மது இன்னும் அழுவதை பார்த்தவன்….. என்ன கோவம் வருது நமக்கு மேலே என நினைத்து இங்கு தவறினான்….. ”யாருக்காக அழற…… எனக்காவா… இல்லை அவனுக்காகவா….” என்றான்.
மதுக்கு மரியாதையை எல்லாம் என்ன விலை என்ற நிலையில் இப்படி ஒரு வார்த்தை சொன்னாய் அல்லவா….. வாங்கிக்க… என்ற நிலையில் “ “நான் ஏன் டா… உனக்காக அழனும்….. உனக்காவே அழ மாட்டேன்…….. என்னும் போது அவன் யாருடா எனக்கு…. “ முச்சு வாங்கியது……
“அவனுக்காக நான் ஏன்  டா அழனும்…. நான் எனக்காக அழறேன்….. எப்படி எல்லாம் நான் ஒன்னும் தெரியாம இருக்கேன்னு நினைத்து  எனக்காக மட்டும் தான் அழறேன்…..” என்று அழுது கொண்டே கத்தினாள்…. எட்டா மாதம் கடைசி வேறு… புஸ்.. புஸ்.. என முச்சு வாங்கியது மதுவிற்கு.
ருத்ரனுக்கு அவள் அழுவதை பார்த்து…… பொறுக்க முடியவில்லை….. ஓங்கி தன் தலையில் தன் கையாலேயே குத்திக் கொண்டான். பரபரப்பு என்ன செய்வதென்றே தெரியவில்லை….. எதிலோ ஆரம்பித்து எங்கோ சென்றது…..
அவளை எப்படி கையாள்வது என தெரியவில்லை….. நிறை மாதம்…. அழுது அழுது முகமே வீங்கி இருந்தது…. தானும் அருகில் இல்லை….. இதில் தானும் கோவப்படுகிறோம்….. என்ன செய்ய….. என்ன செய்ய…. புரியவில்லை….  
அமைதியானான் ருத்ரன்……. நிதானத்திற்கு வந்தான்…. என்ன வார்த்தை சொல்லிவிட்டேன் நான்…. சிந்தனை. 
உணர்ந்தவன் உடனே “சாரி டி…. சாரி டி…. தப்பு தான் அப்படி சொல்ல கூடாது…. நீ ஏன் அதை எல்லாம் யோசிக்கிற….  எப்படி இதெல்லாம் உனக்கு தெரியும்….” என்று கேட்க… அடக்கிய கோவத்துடன் கேட்டான்.
இந்த நேரத்தில் மதுவிற்கு அவன் மேல் கோவம் வந்தது…. என்னவெல்லாம் பேசுகிறான்….. என்னை பார்த்து எப்படி இப்படி கேட்கலாம்…..  என மது மனம் போராட…… மது போனை பார்க்கவில்லை…
“மது….. இப்போ என்னை பார்க்கற…. ம்ம்…. “என்றான். கறாராக…
சத்தமே இல்லை அவளிடம்….
கொஞ்சலாக “டி…. மதும்மா….”
கோவமாக “மது….”
மது “முடியாது… போடா….” என்றவள் போனை கட் செய்தாள்.       
ருத்ரனுக்கு சிரிப்பு தான் வந்தது…..  அப்படா நல்லாதான் இருக்கா.. என்று தான் தோன்றியது…….
ஆனாலும் தான் பேசிய வார்த்தை பெரிது… என தெரிந்து ருத்ரனுக்கு… அன்று இரவே கிளம்பினான்… கோவைக்கு….
வீட்டில் அனைவருக்கும் விஷயம் பிடிப்பட்டது…. திக்…. திக்… ஒன்றும் சொல்லவதற்கில்லை… என்ற நிலை…..
வந்து நின்றான் அதிகாலை 3மணிக்கு…… லதாவிற்கு போன் செய்து கதவை திறக்க செய்து உள்ளே வந்தான்….. மதுவின் ரூம் வாசலில் நின்று கதவை தட்ட….  
தெரியும் மதுவிற்கு அவன் வருவான் என்று….. முழித்து தான் இருந்தாள், ஆனால், கதவை திறக்க வில்லை.. கண்ணில் நீர் தான்…. கணவன் தனக்காக இரவு முழுவதும் வண்டி எடுத்து…. வந்திருக்கிறான் தான்…..  புரிகிறது… ஆனால், கதவை திறக்கவில்லை…. 
ருத்ரனும் விடாமல் தட்ட… போன் செய்ய … மெசேஜ் செய்ய என எல்லா வகையான முயர்ச்சியும் முடித்து ஹாலில் படுத்துவிட்டான். அவன் படுத்த பிறகு தான் மது கண் அசந்தால்……
காலையில் கிரி ருத்ரனை யோசனையுடன் பார்த்தான்…” என்ன ஏதாவது பிரச்சினையா…” என்றான். கிரி.
ருத்ரன் “வாடா… நல்லவனே… நீ தானே போட்டு கொடுத்த…” என்க.
கிரி “இல்ல… அது “ என ஆரம்பித்து… நடந்தவற்றை சொல்லி தன்னை விளக்கிக் கொண்டான்..
மதியம்  12 மணி வரை கூட மது கதவை திறக்கவில்லை….. போனில் வாட்ஸ்அப் விடு தூதுமட்டுமே…. ருத்ரன் மதுவிற்கு நடுவில்….
மது முடிவாக “ஒன் வீக்…. நீங்க பேசாதீங்க… நீங்க ரொம்ப பேசுறீங்க…” என கூறி “நான் சாப்பிடனும் நீங்க கிளம்பினால்… சாப்பாடு… இல்ல பட்டினி…” என மனசாட்சியே இல்லாமல் மது ரிப்ளே…” செய்து அமர்ந்திருந்தாள்….     
அடுத்த 5தாவது நிமிடம் ருத்ரன் கிளம்பி இருந்தான்….. லதாவிற்கு போனில் அழைத்து…”மதுவை எதுவும் கேட்க கூடாது” என்றான், அப்படியே மதுவிற்கு…BP செக் செய்ய வைத்தான்.  
அவள் நார்மல் என்று சொன்ன உடன் தான் அந்த தெருவை தாண்டினான்…
நேர்மையான ஆண்கள், அடிமை பெண்களை விரும்புவதில்லை….
சரியாக ஒரு வாரம் கழித்து…. காலை 6 மணிக்கு வீடியோ கால் மதுவிற்கு…. ருத்ரனிடமிருந்து……
மது எடுத்தவுடன் ருத்ரன் “குட் மோர்னிங்… ரோஜாபூ…” என்றான்.
மதுவிற்கு அணுவெல்லாம் மலர்ந்தது…… கன்னம் தன் வண்ணம் காட்டியது… திரும்பவும் “ரோஜாபூ……” என்றான்.
“ம்ம்ம்……”
“ஏன் மாமா வரலையா…” என்றாள் ஏக்கமாக….
ருத்ரன் “இல்ல டா.. 2 டேஸ் கழிச்சி வரேன்….” என்றான்
“ஏன் மாமா கோவமா நா…. நான்.. தப்பு பண்ணல  தானே மாமா…” பொதுவாக கேட்க…..
ருத்ரனுக்கு BP ஏறியது……. “மது இன்னும் அதையே…. இன்னும் நினைச்சிட்டு இருக்க….. நான் அன்றே சொன்னேன் நீ இதில் இநோசென்ட் என்று….  பாபா வேற வயிற்றில் இருக்கு…. சும்மா… சும்மா… நீ குழப்பிக்காத…… “ என்றான் எரிச்சலாக….
மீண்டும் “நீ இதில் தப்பே செய்யாதவள்…. எப்படி சொல்றது…. தெரியல டா….. ம் … நீ எனக்காகவே பிறந்தவள் என்னும் போது…..” தொய்ந்து போன குரலில் சொன்னவன்….
என்ன சொல்ல்வது என தெரியவில்லை அவனுக்கு…. இன்னும் புரியாத  என்ற பாவனை வந்தது பேச்சில் “போடி உனக்கு புரியாது… நீ பிறந்ததிலிருந்து உன்னை மட்டுமே நினைக்கற என்னை இன்னும் உன்னால புரிஞ்சிக்க முடியல….. போடி…. டூ பேட்….” சலித்து போன குரலில் சொல்லிக் கொண்டிருக்க….
மதுவிற்கு விம்மல் வெடித்தது…… விடாமல் விம்மினாள்….. “என்னங்க…..” கூப்பிட கூப்பிட சத்தமில்லை அவனிடம்..
மது  தானே பேசினாள்….. “தேங்க்ஸ் மாமா…. தேன்க் யு சோ மச்….. நீங்க என்னை கடமைன்னு நினைத்து கல்யாணம் செய்திங்கலோன்னு ஒரு சின்ன எண்ணம் அது தான்….” இப்போ ருத்ரன் முறைத்தான்….
“இப்போ கிளியர் மாமா….. சாரி மாமா…. நீங்க என்ன எவ்வளோ நேசிகிரிங்கலோ… அத விட கொஞ்சம் கம்மியா….. “ தன் கை விரலில் நகத்தின் அளவை காண்பித்து….. “அவ்வளோ மட்டும் கம்மியா…. நான் உங்களை நேசிக்கிறேன்…..” என கண்ணில் நீர் வழிய….. தன் முழு மதி சொல்லுவதை கேட்டவன்…. அப்படியே போனை கையில் வைத்துக் கொண்டே கட்டிலில் விழுந்தான்…..
“ம்ம்…..” என்றான்.
இருவருக்குள்ளும் ஒரு அமைதி….
இருவரும் தாங்கள் கூறியதை கிரகித்து….. நிமிரும் போது….. சிரிப்பு தான் வந்தது…. “போடி….. என்னை ரொம்ப படுத்தற….” என்றான் ஆசையாக.
“ம்கூம்….. “ என்றாள் மது.
அன்பு சில சமயம்…… மான, ரோஷம் பார்க்காது இப்படி தான் குப்புற விழுந்து விடும்.   
அப்படா, கிரி திருமணம் முடிவாகி இருந்தது.     
மதுவின் டெலிவரி முடிந்து தேதி வைப்பதாக இருந்தது….. அதில் மது கொஞ்சம் பிஸி…..  அவர்கள் வாழ்க்கை பிஸி…..
15 ஆண்டுகலுக்கு பின்……     
மது ஒரு காட்டான் புடவையில்….. கிட்சென் உள்ள்ளே…… இருந்து குரல் மட்டும் வந்தது….. “மஹா….. மஹா….” என்றாள்.
“ம்மா…. சாக்ஸ் போட்டுக்கிட்டு இருக்கேன்….  வெயிட் பண்ணுக….” என அவர்களின் முதல் மகன் மஹாதேவ் கத்தினான்.
அவர்களின் முதல் மகன் 7ம் வகுப்பு படிக்கிறான்….. மஹாதேவ்…. இரண்டாவது மகன் ஷிவேஷ்….. 4ம் வகுப்பு படிக்கிறான்.
அடுத்து ukg படிக்கும் மகள் ஷிவப்ரியா….. என ருத்ரன் பாமிலி நீண்டது….
மாடியில் இருந்து இறங்கி வந்த ருத்ரன்….. அவளின் அழைப்பை கேட்டுக் கொண்டே வந்தவன்…..
“அதென்ன மஹா…. பெண்பிள்ளை பெயர் போல் கூப்பிடுற…. தேவ் னு சொல்லு டி…” என்றான். டின்னிங் ஹால் சென்று கொண்டே…. கிட்செனில் வேறு வேலை ஆட்கள் இருக்கவும் எதுவும் பேச முடியாத மது….
வெளியே வந்த மது அத்தனை அவசரத்திலும் பல்லை கடித்துக் கொண்டு அவனின் முகத்திற்கு நேரே
“மஹா… மஹா…. மஹா….” என  முன்று முறை கத்தி அழைக்க…. ருத்ரனை வெறுப்பேற்ற நினைத்த மதுவிற்கு…..
மகனிடமிருந்து பதில் வந்தது “ஏன்… ம்மா… ஏலம் விடுறிங்க……. நான் இங்க தான் இருக்கேன்…” என தேவ் கத்த… மது தன் தலையில் அடித்துக் கொள்ள…. அதை பார்த்த ருத்ரன் “வேணும் டி உனக்கு…. நேற்று மொட்ட மாடி வரமாட்டேன்னு சொல்லிட்டில….” என முனுமுனுக்க…… 
அதற்குள் சின்னவன் ஷிவா “நாங்களும் தான் ஸ்கூல் போகிறோம் எப்போ பார்த்தாலும் மஹா தான் உங்களுக்கு..” என தன் பங்கிற்கு  முகத்தை திருப்பி சொல்ல….”
ருத்ரன் இன்னும் ஏற்றிவிட்டான் அவனை…. “அப்படி கேளு டா தங்கம் எப்போதும் உங்க அம்மாக்கு அவன் தான் முக்கியம் நம்மளை எல்லாம் கண்ணு தெரியாது……” என ஏற்றிவிட்டவன்
“அம்மா….” என்ற ஷிவாப்ரியாவை தூக்கி கொண்டு சோபாவில் அமர வைத்து சாக்ஸ் போட்டு விட்டு…. அவளிடம் முத்தம் ஒன்றை வாங்கி கொண்டு….. அவளிற்கு உணவு எடுத்து வர சென்றான் ருத்ரன்….
அங்கு ஒரே அடி… தடி…. அமைதியாக அதில் தலையிடாமல் தன் மகளிர்க்கு மட்டும் பூரி எடுத்து ஊட்டி விட்டு வாய் துடைத்து கார் எடுக்க செல்ல…. 
மது அங்கு அவங்கள் இருவரிடமும் போராடி கொண்டிருந்தாள் ….
உணவை ஊட்டி விட்டாளல் தான் ஆயிற்று என ஷிவா அடம்….
அவனுக்கு மட்டும் செய்யுங்கள் என தேவ்…. இப்போது மாற்றி கத்தினான்…. ருத்ரன் கார் எடுக்க சென்றதை பார்த்து…. இருவரும்…. அவசரமாக ஓட….
மது சாப்பிடவில்லை என கூறி அவர்களை வாசலிலேயே நிக்க வைத்து ஊட்டி விட்டு, உள் வந்து அவர்களின் பாக் எடுத்து செல்ல…. அதை பார்த்த ருத்ரன் பசங்க இருவரையும் பிடித்துக் கொண்டான்…..
“என்ன டா பழக்கம் இது…. பாக் கூட அம்மா எடுத்து வர வேண்டுமா… ஸ்கூல் போகவே வேண்டாம் நீங்க…..” என காரை நிறுத்தி ஒரே சத்தம்….
அதன் பின் இரு மகன்களும் தன் அம்மாவிடம் சாரி கேட்ட பின்பே வண்டி நகர்ந்தது.
மதியம் லஞ்ச் ஸ்கூலில் கொடுத்துவிடுவார்கள்…. அதனால் லஞ்ச் பாக் இல்லை.
ருத்ரன் உடுமலையில் வந்துவிட்டிருந்தான்…. தன் மகள் பிறந்த பின் சென்னை வாசம் விட்டு வந்தவன்….. இங்கு ஒரு பைனஸ் நிறுவனம் வைத்து விட்டான்.
ஜானகி இல்லாத நிலையில்… இப்போது வைத்தியநாதன் மட்டும்…. தனியே இருப்பதை பார்த்து…… இந்த முடிவு…. அங்கு சென்னையில் வீட்டை வாடகைக்கு விட்டு வந்தனர்…..
மது அனைத்து உறவுகளையும் தாங்கியே நின்றாள். இங்கு எப்போதும் ருத்ரனின் அக்காக்கள் வந்து போய் இருப்பர்….. மதுவிற்கு இந்த கலகலப்பு பிடித்தே இருந்தது….
சுபா இப்போது தான்…. கொஞ்ச கொஞ்சம் சமாதானம் ஆகி இருந்தாள்… மதுவிடம்.
ரம்யாவிற்கு இப்போது நாமும் அங்கே சென்றுவிடலாம் என்ற எண்ணம் வந்து இருந்தது… அதற்கு காரணம்…. அவர்களின் மகளுக்கு சீர் செய்தனர். முறைப்படி உடுமலையில்…. அனைவரையும் அழைத்தனர்…. வைத்தியநாதன் சொந்தம்…. ஜானகி சொந்தம் வரையில் அழைப்பு சென்றது… அவர்களை அழைக்க கூட ரம்யா செல்லவில்லை.
மதுவும் ருத்ரனும் தான் எல்லாம்… வந்தவர் அனைவருக்கும் மதுவை தான் தெரிந்தது… வீட்டின் மூத்த மருமகளாக அவளை யாருக்கும் தெரியவில்லை…..
மதுவும் அனைவரையும் அழைத்து அன்பாக உபசரிக்க….,. நெகிழ்ந்துதான் போனது….சொந்தம். ஆனால், சில அபத்தமான பேச்சுகளும் வந்தது எப்படி இருந்தவளுக்கு வந்த வாழ்வை பாருடா என….
இதை ஒதுக்கி தள்ளவும் கற்று தந்திருந்தான் ருத்ரன்…..     
அவன் இவளை தாங்குகிறானா… இல்லை இவள் அவனை தாங்குகிறாளா…. என தெரியவில்லை அனைவருக்கும்…. நமக்கும் தான்……  
                        முற்று.

Advertisement