Advertisement

வண்ணம்-14
“ஈரம் விழுந்தாலே…. நிலத்திலே எல்லாம்…. துளிர்க்குது……….
நேசம் பிறந்தாலே…. உடம்பெல்லாம் ஏனோ……… சிலிர்க்குது…….
ஆலம் விழுதாக ஆசைகள்…. ஊஞ்சல் ஆடுது…..
அலையும் அலை போலே… அழகெல்லாம் கோலம்.. போடுது….
குயிலே குயிலினமே அத… இசையா கூவுதம்மா…..
கிளியே கிளி இனமே அத…. கதையா பேசுதம்மா…..
கதையாய்….. விடுகதையாய் ஆவதில்லையே… அன்பு தான்….
தென்றல் வந்து தீண்டும் போது என்ன.. வண்ணமோ மனசுல….
திங்கள் வந்து காயும் போது என்ன… வண்ணமோ நினைப்புல…..
வந்து வந்து போகுதம்மா…. எண்ணமெல்லாம் வண்ணம்மா ….
எண்ணகளுக்கு ஏத்தபடி… வண்ணமெல்லாம் மாறும்மா…..”
ருத்ரனும் மதுவும் அடுத்த இரண்டாவது நாளில் உடுமலை சென்றனர்…. சௌந்தர் கூட கூறினார் “ எங்காவது  சென்று வாருங்கள் இருவரும்….” டிக்கெட் போடவா…. என்றார்.
ருத்ரனுக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லை “இப்போ வேண்டாம் மாமா …. பிறகு பார்க்கலாம்….” என்று  கூறி கிளம்பினான்.
நேராக…. தன் அண்ணன் வீட்டில் விருந்துக்கு சென்றனர் ருத்ரன் மது…. ரம்யா சிறப்பாக கவனித்தார், அவர்களை…. அன்று இரவு தான் உடுமலை வந்தனர்
அங்கே சென்று இரண்டு நாள் இருந்து விட்டு சென்னை செல்வதாக…. ஏற்பாடு…. அங்கு சென்றதும் ஜானகிக்கு மிகவும் சந்தோஷம்…. அதுவும் ருத்ரன் பழைய படி…… எல்லோரிடமும் சாதரணமாக பேசவும்….. மகிழ்ந்து போனார்…
மது தான்….. இவர்களின் தனிமை பார்த்து எங்காவது செல்லலாம் என… ருத்ரனிடம் கேட்க.. அவனும் சரி என்று …… அனைவரிடமும் போன் செய்து பேசி மறுநாள்… ஒரு சின்ன ட்ரிப்க்கு… ஏற்பாடு செய்தான்.
அனைவரும்… மறுநாள்…. உடுமலையில் இருந்து….  சுதாகர் பாமிலி வைத்தியநாதன்  ஜானகி ருத்ரன் மது …… கோவையில் இருந்து அவர்கள் அனைவரும் அப்படியே வண்டியில் வருவதாக ஏற்பாடு….. நேராக…. ஆழியார் அறிவு திருகோயில்……. பின் வால்பாறை….. என சென்று பின் திரும்பினர்…..
மது வைதியநாதன் ஜானகியை சென்னை அழைக்க…. ஜானகி நீ ஏதாவது நல்ல சேதி சொல்லு வரேன்….. என ஆசையாக கூறிவிட்டார்.
நாட்கள் தன் போல் சென்றது…. இன்னும் சுபா வீட்டு விருந்து தான் மிச்சம் இருந்தது….. மதுவிற்கு சங்கடமாக இருந்தது….. சுபாவின் புகுந்த வீட்டில் அவளை ஏதாவது சொல்லுவார்கள் என….
ருத்ரனிடம் “மாமா…. சுபாவிற்கு என் மீது தான் கோவம்.. ஆனால், நாம் அங்கு போகாமல் இருந்தாள்….. அவள் வீட்டில்….. அவளுக்கு கொஞ்சம் கஷ்டம் தானே….. அவர்கள் அத்தை மாமா ஏதாவது சொல்லுவார்கள்….. “ என கரையாக கரைத்து அவனை சேலம் அழைத்து சென்றாள்.
ருத்ரனுக்கு கோவம் தான் சுபா ஒரு வார்த்தை கூட மதுவை கூப்பிடவில்லை…. என. ஆனால், இரண்டு நாளைக்கு ஒரு தரம் அரவிந்த் போன் செய்து பேசுவான்…….. அந்த ஒரு விஷயத்திற்காகவே, ருத்ரன் சென்றான்.
சுபாவின் வீட்டிலும் நல்ல முறையில் தான் நடந்துக் கொண்டனர்… சுபாவிற்கு…. மிகவும் சந்தோஷம்….. ருத்ரனை கண்டதும்…. “வாங்க மாமா….” என்றவள்.
மதுவை பார்க்க கூட இல்லை, இன்னும் சுபாவால் மதுவை மன்னிக்க முடியவில்லை…. அனைவரும் சொல்லி பார்த்து விட்டனர்…. ம்கூம்… சுபா கேட்பதாக இல்லை……..  “சுபாவிற்கு ருத்ரன் மாமாவை இவள் எப்படி….. வேண்டாம் என்று போகலாம்…..” என்ற எண்ணமே….
ருத்ரன் கோவமாக மதுவை “பார்…. என்பது போல் பார்க்க……” அதெல்லாம் கண்டு கொள்ள வில்லை மது, தீப்தியை…. அரவிந்திடமிருந்து வாங்கிக் கொண்டு….  அத்தை மாமாவிடம் பேசியபடி நகர்ந்துவிட்டாள்.
ருத்ரனுக்கு இருப்பு கொள்ளவில்லை……… விருந்து முடிந்த, உடனே கிளம்பிவிட்டான்……… அரவிந்திடம் “சாரி அரவிந்த்…. இன்னொரு நாள் பேசலாம்….” என்றுவிட்டான்.
அரவிந்த் மதுவிடம் “மது நீ எதுவும் மனதில் வைக்காதே ம்மா….” என சங்கடமாக் சொல்ல….
மது “என் அக்காவா…. எனக்கு தெரியும் மாமா…… நீங்க விடுங்க “ என்றுவிட்டு கிளம்பினார்கள்.
சென்னை வந்தவன்…. மதுவிடம் சுபா பற்றி எதுவும் பேசவில்லை ருத்ரன்.அவளிடம் ஏதும் சொன்னாள்… திரும்பவும் தன்னுள் ஒடுங்கி போவாள் என நினைத்தான்……. ருத்ரன்.
ருத்ரனுக்கு தெரியும்…. தன் மேல் உள்ள பாசத்தால் தான்… சுபா….மதுவிடம்  பாராமுகம்…காட்டுகிறாள் என புரிந்தாலும்…. சுபாவை நினைத்து சந்தோஷ பட முடியவில்லை…. ருத்ரனுக்கு.
மதுவிற்கு தான் ஆச்சிரியமாக இருந்தது என்ன மாதிரி அன்பு இது….. தங்கையை விட….அக்காக்கு (சுபாவிற்கு) அவங்க ருத்ரன் மாமா தான் பெருசா தெரியறாங்க…. என்று.
பொறாமை இல்லை….. ஒரு கர்வம் தான் வந்தது…..
இரண்டு மாதம் சென்றிருந்த நிலையில்…. ருத்ரனுக்கு ஆன்சைட் ஆபர் வந்தது…. ருத்ரனுக்கு மதுவிடம் உடனே சொல்ல வேண்டும்…. அவளின் ரீயாக்ஷன் பார்க்க வேண்டும் என நினைத்து மதுவிற்கு அழைத்தான்.
வீட்டிலிருந்த மதுவிற்கு போன் செய்து  “மது…. நான் நெக்ஸ்ட் வீக் துபாய் போகணும் டி…” என்றான். ஆராயும் குரலில்.
மதுவும் யோசிக்காது “நானு…..” என்றாள் ஏக்கமாக.
இதை ருத்ரன் எதிர்பார்க்கவில்லை…… தன்னுடன் அவள் வருவேன் என்று சொல்லுவாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை…… அவனிடம் சங்கடமான அமைதி….
மது “என்ன மிஸ்ட்டர் ருத்ரேஷ்வர்…… சத்தத்தை காணோம்….” என்க.
குரலில் உறுதியை வரவழைத்துக் கொண்டு  “ சாரி டா…. நீ வர முடியாது டா….. நான் மட்டும் தான் ஜஸ்ட் 1 மாதம்….. நீ வருத்தப்பட்டா….  நான் போகலே சொல்லிடவா…..” என.
மது “அய்யோ மாமா….. ப்ளீஸ்… அப்படியெல்லாம் எதுவும் செய்யாதீங்க…. நான் சமாளிச்சுக்குவேன்…..” என்க.
ருத்ரனுக்கு வேலை விஷயத்தில் காம்பெரமைஸ் செய்யும் எண்ணம் எல்லாம் இல்லை….. ஆனாலும் மதுவிடம் இப்படி ஒரு வார்த்தையைய் கேட்ட பின்…. ருத்ரனுக்கு கொஞ்சம் பேட்டரி லோ ஆனது.
வீட்டிற்கு வந்து மதுவிடம்….. “தேங்க்ஸ் டி….. நெக்ஸ்ட் டைம் நாம போறோம்….” என்றான். சமாதானமாக……
மது “வேணாம்…. வேணாம்….அந்த துபாய் ய நான் பார்க்கவே வேண்டாம்…. பெரிய துபாய்…” என்றாள் கோவமாக….
ருத்ரன் “நான் கூட தப்பா நேனைச்சிடேன் என்னை தான் நினைச்சி பீல் செய்வியோனு….. போடி… துபாய்க்கு தான் இந்த பீலிங்கா… என்னை எம்மாத்திட்ட……. என்னை பார்த்தா பாவமா இல்லை…” என பின் வந்து கட்டிக் கொண்டு வம்பிழுத்தான்.
திரும்பிக் கொண்டு சென்றுவிட்டாள்… பின்னாலேயே சென்றான்…. திரும்பி கூட பார்க்கவில்லை மது….. “இவ இப்போ என்னை போ னு சொல்றாளா… போக கூடாதுன்னு சொல்றாளா…. புரியவில்லை… அவனுக்கு.”
பெண்கள் ஆண்களுக்கு எப்போதும் சவால் தான்…..
முதல் ஊடல்…. சமாளித்தான் ருத்ரன்.
அந்த வாரம் கடைசியில் உடுமலையில் மதுவை விட்டவன்….  கிளம்பும் சமயம் வந்ததும் தன் ரூமை விட்டு வெளியே வரவில்லை…… ருத்ரன், மது ரூமிற்குள்ளேயே வரவில்லை….
ருத்ரன் ரூமையே அளந்துக் கொண்டிருந்தான்.
வைத்தியநாதன் மதுவிடம் “நேரம் ஆச்சே மா…. இன்னும் கிளம்பல… அவன். என்னன்னு பாரு “ என மதுவை அழைத்து சொல்ல….
மது ரூமிற்கு சென்றாள் “மாமா… டைம் ஆச்சு கிளம்பல…” என்க.
ருத்ரன் முறைத்தான் பேசவே இல்லை….. திரும்பவும் மது “மாமா… நீங்கக் கிளம்புங்க…. 1 வீக்ல நான் பார்த்து சொல்றேன்… ப்ளீஸ்…” என
ருத்ரன் அசையவில்லை….. அதே நடை….. ரூமை சுற்றி…. மதுவிற்கு கண்ணில் நீர் வந்தது ரொம்ப நாள் கழித்து அழுவதால் கண்ணெல்லாம் சிவந்து விட்டது… கேவல்…. அதிகமாகவும் தான் ருத்ரன் அவளை பார்த்தான்.
“அப்பா… என்ன பாடு படுத்தற டி என்னை…. எதுக்கு இந்த ஆர்பாட்டம்….” என்றவன் அருகில் வந்து அவள் கண்ணீர் துடைக்க….
அவள் “பயமா இருக்கு மாமா…. சுபா அக்கா எல்லாம் முதல் தடவ… 45 டேல தான் பார்த்தாங்க…. அப்பவே அது  இரண்டு, முனு மாதம் அவர்களுக்கு ஏமாற்றம் தான்….. மாமாவும் அக்காவும் நிறைய கஷ்ட்ட பட்டாங்க தெரியுமா…. நீங்க வேற இப்போ ஊருக்கு போறிங்க…. ஏதாவது தப்பா வந்தா… நீங்க தான் ….. சங்கடத்தோட ஊருக்கு போகணும்….. எனக்கு தாங்காது மாமா…… ப்ளீஸ்…” என பெரிதாக விளக்க….
ருத்ரன் சும்மாவே மது பித்து பிடித்து சுற்றுபவன் இந்த…. விளக்கத்தில்… மதுவிடம் கனிந்து நின்றான்……..
அவளை கை வளைவில் நிறுத்தி… கனிந்த குரலில் “ரோஜாபூ…..” என்க
“ம்…ம்…” என்றாள்
“எப்ப.. டி வளருவ….” என்றான். சமந்தமே இல்லாமல்.
மது என்னவென்று புரியாமல் கண்ணீருடன் நிமிர…. ”போடி…. இது தான் நமக்கு முதல் முறை…. எதுவாக இருந்தாலும் பராவயில்லை….. எனக்கு என்னமோ கண்போர்ம் ஆகும்னு தோனுது… போடி….” என்றான் கொஞ்சும் குரலில்….
பின்பும் அவளிடம் அசைவில்லை …”நான் உண்டு… இல்லைன்னு…. தெரிஞ்சிகிட்டு போறேன்…. ப்ளீஸ் டி….” என அவளை லேசாக அதட்டி…. அவள் கையில் ப்ரகனன்ட் செக்அப் கிட்டையும் கொடுத்து  ரெஸ்ட்ரூம் அனுப்பினான்.
ஒரு பெருமுச்சு எழுந்தது அவனிடம் ஒரு புன்னகையும் கூடவே….. இந்த இரண்டு நாட்களாக சொல்லிக் கொண்டே இருக்கிறாள்…. “மாமா என்னவோ தலை சுற்றுது… நாட்கள் வேறு தள்ளி போய் இருக்கிறது….” என்று.
ஆனால்…. செக் செய்ய பயமாம்….. ருத்ரனுக்கு வேறு,  எதுவாக இருந்தாலும்… தெரிந்து கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம்….
ஆனால், மது ருத்ரன் கண்ணில் படுவதே இல்லை…. அப்படி அவன் எதிரில் வந்தாலும் முகத்தை… தூக்கி வைத்துக் கொள்வது என… தன்னால் முடிந்தவரை அவனை படுத்தி வைத்து…. இப்போது தான்…. அவன் கண்ணில் படவும்… பேசி பேசி உள்ளே அனுப்பி இருக்கிறான்.
முகத்தை நன்கு கழுவிக் கொண்டு துடைக்காமல் வெளியே வந்தாள்…. ருத்ரன், கையை கட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்தபடி அவளையே பார்த்தபடி நிற்க….
மது அவனை பார்க்கவே இல்லை. டவலை… தேடியவள்…. அதனை எடுத்து அவனுக்கு முதுகு காட்டி…. நின்று துடைக்க… அங்கு அவள் எதிரில் வந்து நின்றான்….. 
 மதுவின் கண்கள் மட்டும் தெரிந்தது…. அவனை பார்க்க….. அதில் அவன் கண்ட சிரிப்பு….. நல்லதையே உணர்த்த…..
கர்வமாக உணர்ந்தவன்… அவளின் டவளை வாங்கி விசிறி எறிந்தான்….. “என்ன பாடு படுத்தற… நீ….” என்று கூறியவன்….. அவள் உதடுகளை…. பேசவே விட வில்லை….  
அவள் காதில் “எனக்கு தெரியும் டி….. நான் அன்று…….”  என ஏதோ கூற வர…. அவன் உதடுகளை கைகளால் மூடியவள்…. இடவலமாக தலை அசைத்து “மூச்சு….” என்றாள் பாவனையாக….. .
“மாமா… இப்படி எல்லாம் பேசக் கூடாது சொல்லியிருக்கேன் இல்ல….” என மிரட்ட…
“மிரட்டற…. ம்ம்….. இரண்டு நாளா பக்கத்தில் கூட விடல…. இதில் பேசவும் கூடாதாம்…. நல்லா… பேசுவேன் டி…..” என வாயை திறக்க.. 
காதை கைகளால் மூடிக்கொண்டு திரும்பி நடக்க….. “மது….” என ருத்ரன் கை விரித்து அழைக்க………
மது அவன் கைகளில் பாந்தமாய் பொருந்தினால்……. அவளை அணைத்தவாறே சுவற்றில் சாய்ந்துக் கொண்டவன்….. “தேங்க்ஸ் டி……”.. என்றவனை மது  நிமிர்ந்து முறைக்க…..
“கேர்புல் ரோஜாபூ………” என்றவன் பிறகு பேசவே இல்லை…. அமைதியாக அவளை அணைத்தவாறே நின்றிருந்தான்.
பின்பு தன்னை நிலைபடுத்திக் கொண்டவன்…. அடுத்த  10 நிமிடத்தில் கிளம்பிவிட்டான்…. கீழே அனைவரிடமும் சொல்லிக்கொண்டு மதுவிடம் கண்ணால் விடைபெற்று கிளம்பிவிட்டான்.
மது தன் நிலையை வீட்டில் சொல்லிவிட்டாள்…. அதன் பின் அவள் நேரமும், உணவும் அவளின் அனைத்து செயல்களும் குழந்தையை கொண்டு பெரியவர்களால்…. தீர்மானிக்கப்பட்டது……
இப்படி அப்படி என ருத்ரனின் வேலைகள் இழுத்து விட்டது… அதனால்  ருத்ரன் அவளின் 5 மாதம் தான் இந்தியா வந்தான்…. அது வரையில் வீடியோ காலில்…. வாழ்க்கை சென்றது.
வீட்டில் அனைத்து உறவுகள் இருந்தும்…. கணவனாக அவனை தேடினாள்….. மது, வெளியே சொல்லவில்லை, ஆனால் இதனை கொண்டு எந்த நிலையிலும் மது ருத்ரனை கலவரப்படுத்த வில்லை…. அந்த மாதங்கள் அனைத்தையும் ….. அமைதியாக கடந்தாள்….
7 மாதம் வளைகாப்பு….. செய்தனர் மிகவும் சிறப்பாக…. மதுவை கோவை அழைத்து சென்றனர். ருத்ரன் வார வாரம் வந்து மதுவை பார்த்தக் கொண்டான்.
கிரிக்கு திருமணத்திற்கு பார்த்தனர்….. அப்போது, ஷியாம் வீட்டு சொந்தம் என்று ஒரு பெண்  ஜாதகம் வந்தது, கிரி பார்த்த உடன் வேண்டாம் என்றுவிட்டான்….. இவர்களுக்கு ஒத்து போகும் போல் இருந்தது..
வரதன் கூட யோசி டா என்றார்…. கிரி பிடிவாதமாக வேண்டவே வேண்டாம் என்றுவிட்டான்….. 
மது “ஏன்னா…. என்னை வைத்து யோசிகிறியா….” என்றாள்….
“மதும்மா அதெல்லாம் இல்லாடா இது வேற….. உனக்கு தெரியாது….” என்றான்.
மதுவிற்கு என்ன அது எனக்கு தெரியாம… தோன்ற “என்ன ..ண்ணா அது  எனக்கு தெரியாம” என்றாள் சாதரணமாக….
ஹாலில் யாரும் இல்லை… இவர்கள் இருவர் மட்டுமே…. 
இப்போது கிரி மதுவை கூர்மையாக பார்த்தான்….. ருத்ரன் சொல்லி இருப்பான் என அவன் பார்க்க….. மதுவிற்கு தன்னை தப்பாக நினைத்து விட்டானோ என மது நினைத்து… கிரியை பார்க்க…..
இப்போது ஆராயும் பார்வையோடு கிரி “மாமா உன்கிட்ட எதுவும் சொல்லல….” என்க.
மதுவிற்கு ஏதோ விஷயம் பெரிது என நினைக்க தோன்றியது….. “இல்ல ண்ணா… எனக்கு எதுவும் சொல்லல……” என்றாள் சன்ன குரலில்.
ஷியாமை பற்றி பேச்சை எங்களிடம் எழவில்லை என எப்படி சொல்வது அதே போல் ஷியாம் விஷயம் ‘தான்’ கேட்கலாமா…. வேண்டாமா என தெரியாவில்லை……….
தெரியாவிட்டாலும்…. மனம் அமைதியாக இருக்காது என தோன்ற….. “ண்ணா என் கிட்ட சொல்லலாம்னா சொல்லு…. என்னண்ணா…” என்றாள் தயங்கி தயங்கி
கிரிக்கும் மதுவிற்கு தெரியாதவரை பரவாயில்லை… ஆனால், இப்போது ஆரம்பித்த செய்தியை சொல்லாமல் விட்டால்… அவளை அது வேறு ஏதோ என நினைக்க வைத்துவிட்டால் என்ன செய்வது என நினைத்து…
மதுவிடம் “ஷியாம் சுரேந்தர் பேச்சை கேட்டு செய்த செயலை…. கூறினான். அவ்வளவு தான் என்பது போல் கிரி சொல்லிவிட்டான்..

Advertisement