Advertisement

வண்ணம்-13

“ஆசை தீர பேச வேண்டும் வரவா….. வரவா….

நான்கு பேர்க்கு ஓசை கேட்கும்.. மெதுவா…. மெதுவா…..

பெண் மயங்கும் நீ தொட….. நீ தொட…..

கண் மயங்கும்… நான் வர… நான் வர….

அங்கங்கு வாலிபம் பொங்கிட…… பொங்கிட……

அங்கங்கள் யாவிலும்… தங்கிட…. தங்கிட….

தோள்களில் சாய்ந்திட….. தோகையை ஏந்திட…

யார்…….

நீ………..

கண்மணி நீ வர காத்திருந்தேன்….

ஜன்னலில் பார்த்திருந்தேன்……

கண்விழி தாமரை பூத்திருந்தேன் ….

பொன்னுடல் வேர்த்திருந்தேன்…..

ஒவ்வரு இராத்திரி வேளையிலும்…..

கண்மணி உன் ஞாபகமே…..”

ருத்ரனுக்கும் மதுவிற்கும் அந்த நான்கு நாட்கள்…….. வெளியே என்ன நடந்தது என கேட்டால் தெரியாது………. நல்ல வேலை அக்கம் பக்கத்தில் வீடுகள் இல்லை, அதனால் பரவாயில்லை…..

ருத்ரன் தனது அக்டோபஸ் செயல்காளால்…….. எப்போதும் மதுவை… தனக்குள் வைத்திருந்தான்………. இல்லை அவளுக்குள் தான் இருந்தான்….

மது தனது…. அடிமை நிலையில் இருந்து வெளியே வந்திருந்தாள்……… அல்லது வர வைத்திருந்தான்  ருத்ரன்………..

அவளின் பேச்சிலும் நடையிலும் அது தெரிந்தது……… அந்த திங்கள் கிழமை ஆபீஸ் செல்லவே ருத்ரன்…….. விரும்பவில்லை……..

ருத்ரன் “ஏய்………….. ஏண்டி….. என்ன தொரத்தர……….. நான் வொர்க் ப்ரம் ஹோம்னு போட்டுக்கிறேன் டி……………” என மது பின்னால் சுற்ற……….

மது “இல்ல…. இல்ல……. கண்டிப்பா நீங்க போகணும்……….” எல்லாரும் என்ன நினைப்பாங்க….. வீட்டுக்கு கூட போன் பேச விடறது இல்ல……. இதுல இன்னைக்கும் லீவ்னா………. அவ்வளவு தான்………… என இவள் முனகிக் கொண்டே சென்றாள்.

ருத்ரன் கிளம்பி சென்றதும் தான், தன் வீடிற்கு வீடியோ கால் செய்தாள்………  ஏதோ வெகு நாள் கழித்து பேசுவது போல் இருந்தது………. வெட்கம் வேறு வந்தது……… மதுவிற்கு……

மது…… தன் சித்திக்கு தான் அழைத்தாள்……….. “சித்தி……..” உற்சாக குரலே சொன்னது அவளின் நிலையை……….

கண்ணும் முகமும்  ஜொலி ஜொலிக்க……. ஆர்பாட்டமாக……… மது….. பேச பேச…… ஷோபனா…… மதுவின் சித்தி….. கண்ணில் நீருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்…………. மது மட்டுமே பேசினாள்…. அவளின் சித்திக் கேட்டுக் கொண்டிருந்தார்….

“இது இப்படி……. செய்தேன் சரியா வரல….. காலையில் சீக்கிரம் எழுந்தேன்……..” என தனது புதிதான சமையல்……… அதில் தனது சொதப்பள்கள்……. என சம்மந்தமே இல்லாமல்…..

முன் போலே ஒரு எனர்ஜியோடு……… எப்போ சித்தி வர…….” என மது வாய்மூடாமல் பேச…

ஒரு கட்டத்தில்….. என்னாச்சு என மது “என்ன சித்தி….. அப்படி பார்க்குற……..” என கேட்க. ஒரு வேட்க்க குரலில் கேட்க…..

ஷோபனா “ஒன்னும் இல்லடா தங்கம்…… என் பொண்ணு…. குடும்பம் நடத்தும் அழகை……… கேட்டா……. எனக்கு சந்தோஷம் தாங்கலடா……” என கண்ணை துடைத்தவர்.

“என் பொண்ணுக்கு என் கண்ணே பட்டுடும் போலவே………. உன்ன பார்க்க வரேண்டா…….. கண்ணம்மா……… நானே வந்து உனக்கு சுத்தி போடுறேன்…..” என்றார், லதாவிடம் போனை தந்தார்.

அனைவரும் அங்கு தான் இருந்தனர்….. எல்லோர் கண்களும் பளபளத்தது….

ஷோபனா… எழுந்து நேராக சென்றது பூஜை அறைக்கு தான்……. அப்படியே விழுந்தார்……….. அந்த காமாட்சி அம்மன் பாதத்தில்………           

லதா போனை சௌந்தரிடம் தந்தவள்…….  வரதனுடன் தானும்  பின்னாடியே சென்றனர்…….. ஷோபனாவை…. லதா தூக்க…….. “அக்கா போதும் க்கா…. எனக்கு இது போதும் க்கா…… வேறு எதுவும் எனக்கு…. வேண்டாம் க்கா……… “ என்று தோளில் சாய்ந்து ஒரே அழுகை… லதாவும் அப்படியே.

சும்மாவா…. மது சோர்ந்த நேரமெல்லாம் அவளை தேற்றி…..  உணவு ஊட்டி……. தலை கோதி உறங்க செய்து ……. யாருடைய பாராமுகமும் அவளை அணுக செய்யாமல் பாதுகாத்து…… அவளை ஒரு கை குழந்தை போல் அல்லவா பாதுகாத்தார்….. ஷோபனா……..

உருகியே விட்டார்…. அந்த செழுமையை தன் பெண்ணின் முகத்தில் பார்க்கவும்…… வளர்த்த பாசம் …. கரை காணாதது… அல்லவா…

நிற்க முடியவில்லை….. ஷோபனாவால், சென்னை செல்ல வேண்டும்…. என…  பிடிவாதம்……..

வரதன் பாமிலி….. கூடவே கிரி அந்த வாரம்…. சென்னை கிளம்பி சென்றனர்…… மதுவும் அவர்களை பார்த்தவுடன்…. “சித்தி …..” என்று தான் முதலில் ஓடினாள்…..

கிரியும் வரதனும் கூட கிண்டல் செய்தனர்…… “எங்களை எல்லாம் கண்ணே தெரியவில்லை……….உனக்கு……” என்று.

மது அப்போது தான் நிமிர்ந்து “அப்படி இல்லை சித்தப்பா….. அண்ணா…….” சமாதானம் செய்தாள்.

ருத்ரனும் வந்து எல்லோரையும் அழைத்து……. பேச…….. அந்த இடமே…… துள்ளளுடன் இருந்தது…….

ருத்ரனை வேலை ஏவிக் கொண்டிருந்தாள் மது “இது சித்தப்பாக்கு பிடிக்கும்……… இது சித்தி சூப்பரா சமைப்பாங்க…. இது கிரிக்கு பிடிக்கும் ….. ஷரவனும்……… சர்வேஷ்ம்…. ஈவினிங் வராங்க…….. அதனாலா…… இது வேணும் “ என ஒரு பெரிய லிஸ்டே போட…….

கிரியின் அருகே, ரூம் பால்கனியில்… அமர்ந்து பேசிக் கொண்டிருந்த…. ருத்ரன்……… அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்க……….

மது, அவன் அமைதியாக இருக்கவும்….. ஒரு கட்டத்தில் நிமிர்ந்து அவனை பார்க்க……. அவனின் அகலா பார்வை கண்ணில் பட……… கண்ணால்….. கிரியை கண் காட்ட…….

கிரி இவர்கள் நிலை பார்த்து……… “போன்….”  என எழ…….அப்போது தான் சுதாரித்த ருத்ரன் “இருடா…… போலாம்……….. உன் தங்கைக்கு…….. இத்தன ஐட்டம் தெரியும் என்பதே இப்போ தான் டா…….. எனக்கு தெரியும்……..” என முடிக்க கூட இல்லை…….

மது இடுப்பில் கை வைத்து முறைக்க………. “ இல்ல டி சும்மா……….” என்றவன்…..”டேய் கிரி  இப்போ எல்லாம் உன் தங்கை….. என்னை இப்படி தான் வேலை வாங்கறா டா……..” என ராகம் பாட…….

கிரி “மாம்ஸ்….. ரொம்ப…. வழியுது……… துடைங்க…. அப்புறம் என்னை ஆளை விடுங்கப்பா…..” என ஓட…….. ருத்ரன் அவனை துரத்திக் கொண்டே சென்றான்.

ஷரவனும்.. சரவேஷ்ம் …. மாலை வந்தனர்….. வீடே கலை கட்டியது……. ஷோபனா… தன் மகள் குடும்பம் நடத்தும் அழகை……… எல்லோருக்கும் போன் செய்து சொல்லிக் கொண்டிருந்தார்…….. அவர் அங்கு இருந்த வரை….மதுவை கிட்சனில் விடவே இல்லை…. எல்லா வேலையும் தானே செய்தார்……….

ருத்ரன் அன்று தான் மதுவை எல்லோருடனும் இரண்டாம் முறையாக வெளியே அழைத்து சென்றான்………. பீச் ஹோட்டல்…..அண்ட் ரேசர்ட்….. ஒரே ஆட்டம் அனைவரும்…….. உருண்டு பிரண்டு விளையாடி……. நனைஞ்சி…….. அங்கு அன்றிரவு தங்கி……… என…..  ருத்ரன் வெகுவாக கவனித்தான்…….. அவர்களை.

அனைவரும் ஊருக்கு கிளம்பும் போது…….” மதுவை கூட்டிக் கொண்டு ஊருக்கு வாங்க” என ஷோபனாவும் வரதனும் கூற……..  ருத்ரணும் மறுக்காது வருவதாக கூறினான்.

அனைவரிடமும் பேசிய பழகிய ருத்ரன்……… சுபாவிடம் மட்டும் பாராமுகமாகவே இருந்தான்……

அனைவரையும் அழைத்த ருத்ரன் சுபாவை சென்னைக்கு அழைக்க வில்லை……… அரவிந்தனிடம் சகஜமாக பேசினான்……… ஆனால்…. சுபா பேசும் போதெல்லாம்…… தவிர்த்து விட்டான்….. சுபாவிற்கு இப்போது தான் இது புரிந்தது…. மது எப்போதும் போல் அரவிந்திடம் மட்டும் பேசினாள்……. சுபாவும் மனம் மாறவில்லை……….. .

வைத்தியநாதன் ஜானகி……. அடுத்த வாரம் வந்தனர்…….. பின்பு, சுதாகர் பாமிலி வந்தனர்….. ரம்யாவை சமாளிக்கும் கலையை கற்றிருந்தாள்….. மது….. ஆனால் முழுவதும்….. முடியவில்லை…..

இவர்கள் வந்து சென்றதும்…… மதுவும் ருத்ரனும் கோவை சென்றனர்….. இப்போது தான் சௌந்தர்க்கு நிம்மதி……

ஆனால் அவனின் கிட்ட நெருங்கவில்லை சௌந்தர்…. இப்போது மாப்பிள்ளை…. வேறு……. இன்னும் ஏதேனும் படுத்துவானே……. என்று நினைத்து விட்டார். திருமணம் பேசும் போதே இருவருக்கும் டேம்ஸ் சரியில்லை…..

சௌந்தர்க்கு எங்கோ தோற்றது போல் ஒரு உணர்வு………. ருத்ரன் கேட்கா விட்டாலும் திருமணத்தை சிறப்பாக செய்திருப்பார் தான்…… ஆனால் ருத்ரன்….. வாய் விட்டு கேட்கவும்….. சிறிது மன சங்கடம்……. என்னை பற்றி தெரியாதா…. அவனுக்கு…… என்ற எண்ணம்…  அவ்வளவே, ஆனால் முகத்தில் காட்டவில்லை…… சகஜமாகவே இருந்தார்….

ருத்ரனுக்கு தன் அக்கா வீடு என்ற எண்ணம் வரவே இல்லை…… மாமியார் வீட்டு மரியாதை தான் கிடைத்தது….. வந்த அன்றே அவனால் ப்ரீயாக பீல் பண்ண முடியவில்லை……. மதியம் போலே கிரியுடன் வெளியே சென்றுவிட்டான்……..

பின்பு…… மாலை போல் வந்தவன்……. அமைதியாக  தனது லேப்டாப் எடுத்து வைத்து  அமர்ந்திருந்தான்….. மது ஏது கேட்டும்…. பதில் இல்லை……. மதுவை  தான் எல்லோரும் படுத்தி எடுத்தனர்…….  “ஏன் அமைதியாக இருக்கிறான். என்ன ஆயிற்று ….” என கேட்க…..

மது “ஆமாம்….. எனக்கு தான் தெரியும் பாருங்க……… எல்லாம்…… நானே இப்போ தான்…….. அந்த டிசைன புரிஞ்சிக்க………. ட்ரை பன்றேன்….. அதுக்குள்ளே……. எரர்…….. என்ன செய்வது………” என மது கிண்டல் செய்துக் கொண்டிருந்தாள்……. உள்ளே சமையலறையில் லதாவிடமும் ஷோபனாவிடமும்.

லதா “ஏண்டி… என தம்பியை பார்த்தா…… டிசைனா. தெரியுதா……… வரட்டும் அவன்……. சொல்லிக் கொடுக்கிறேன்……..” என்றார் விளையாட்டாக.  

இதை கேட்டுக் கொண்டிருந்த ருத்ரன்…….. சிரித்துக் கொண்டே மேலே சென்று விட்டான்……

இரவு உணவு அனைவரும் அமர்ந்து உண்டனர்….. ஆனால் யாரும் அளவுக்கு அதிகமாக பேசிக்கொள்ளவில்லை………  ருத்ரனையும் கவனிக்க தவறவில்லை…. அதில் மரியாதை மட்டும் இருந்தது…. சௌந்தர் அமைதியாகவே இருந்தார்……

வரதன் தான் எல்லோரையும் இணைத்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்….. மதுவிற்கும் ஒரே யோசனை….

உண்டு முடித்து ருத்ரன் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டான்… எங்கே தவறினோம் என ருத்ரன்….. மனம் அந்த சிந்தனையில் இருக்க……..

கீழே மது……….. தனது அப்பாவிடம் “என்ன ப்பா…. மாமா….. ஏதும் தப்பு பண்ணிட்டாங்களா……. ஏன்… ஏதோ சரியில்லை……. நீங்களும் மாமாவும் ” என ஆரம்பிக்க….

சௌந்தர் “அப்படி எல்லாம் இல்லை டா……. எனக்கு கொஞ்சம் வேலை அதிகம் டா……. அதான்…. நீ எதையும் மனதில் வைக்காதே டா…… அப்புறம் அவன் என்னை காய்வான்……” என சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தார்.

சௌந்தர் என்ன செய்வது என்றே தெரியவில்லை…… குழந்தைகள் கவனிக்கும் அளவிற்கா…. என் செயல் உள்ளது என நினைத்தவர்… தனது தோள் சாய்ந்து அமர்ந்திருந்த….. மகளை வாஞ்சையாக வருடிக் கொண்டிருந்தார்….. 

அதே நேரம் ருத்ரனுக்கு….. அங்கே இருக்க முடியவில்லை…..  கீழே இறங்கி வந்தான். அப்பா பெண்ணின் நிலையை பார்த்தவன்….. தானும் போய்…. சௌந்தர் மடியில் படுத்துக் கொண்டான்……. போட்டிக்காக…… சிறுபிள்ளை போல்…

தன் ஆறடியை குறுக்கி….. ஒடுக்கி….. ஒன்றும் சொல்லாமல் உரிமையோடு அவரிடம் ஒட்டிக் கொண்டான்.

சௌந்தரும் ஏதும் பேசவில்லை, சிறிது நேரம் அமைதியாக இருந்தனர் அனைவரும்….

 பின்பு அமைதியாக……… ருத்ரனின் தலை கோதினார்…….. ஏதேதோ யோசனை அவருள் போலும்….. மதுவிடம் “போய் படுங்க இரண்டு பேரும்… ரொம்ப நேரமாச்சு……..” என்க.

“ம்………   ம்……” என்றாள் மது அசையவில்லை…..

ருத்ரன் இப்போது… “மாமா…..  சாரி மாமா….. நான்…… கேட்டது தப்பு தான்….. அப்போ நான் எதை பற்றியும் யோசிக்கும் நிலையில் இல்லை மாமா……… ” என்றவன் மது இருப்பதை உணர்ந்து

“மது எனக்கு ஒரு காபி ப்ளீஸ்…….” என்றான்.

மதுவும் புரிந்துக் கொண்டு அவர்களை தனியே விட்டு எழுந்துச் சென்றாள். தன் அம்மாவிடம் காபி மாமாக்கு என சொல்லி விட்டு மேலே சென்றுவிட்டாள்

திரும்பி எழுந்து அமர்ந்து சௌந்தரின் முகம் பார்க்க……”டேய்….. விடுடா…. நேரமாகுது……. நான் போய் படுக்கணும்….. நாளைக்கு ஆபிஸ்ல மீட்டிங் இருக்கு…… எனக்கு வருத்தம் மட்டுமே…. ஆனால், அது கூட இப்போ இல்ல… நீ போய் தூங்கு…. ”  என்றார் சௌந்தர்.

வந்த பொழுதிலிருந்து மாப்பிள்ளை…. மாப்பிள்ளை என அழைத்தவர்…. இப்போது தான், பழைய படி கூப்பிடவும் மகிழ்ச்சியானவன்…..

ருத்ரன் “தாங்கஸ்…. மாமா….. நம் உறவு எப்போதும் இப்படியே இருக்கட்டும் மாமா….. நான் உங்களோட அதே ருத்ரன் தான்….. இன்னமும் எனக்கு இந்த மடியில் படுக்க உரிமை இருக்கு….. என்னை நீங்க தள்ளி வைக்க முடியாது ….” என அன்பாக மிரட்டினான்.

லதா அந்த நேரம் காபி எடுத்துக் கொண்டு வந்தவர் இவர்களின் உரையாடல் கேட்டு சிரித்துக் கொண்டே ருத்ரனிடம் “மாப்பிள்ளை…. மாதிரியா பேசற…. மாமனார் என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லை…” என்றே மிரட்டிக் கொண்டே வந்தார்.

ருத்ரனும் “அந்த போஸ்டிங் அப்புறம் தான், முதலில் இவர் என ஹீரோ…. ப்ரிண்ட்… இது எல்லாம் தான் முதலில்…… சொல்லி வை உன் புருஷன் கிட்ட …….” என்றான் மிரட்டலாக.

லதா “போதும் டா….. நீங்க போங்க….” என ருத்ரனில் ஆரம்பித்து சௌந்தரிடம் முடித்தார்.

 

லதாவிற்கு சங்கடம் திருமணமாகி முதல் முறை வந்தவர்கள்….. எப்படி சொல்வது நீ மேலே போடா என. சௌந்தருக்கும் அதே…. முன்பிருந்தே கூறிக் கொண்டிருந்தார்….

மணி 12 :20

லதா தான் “ உனக்காக மது தான் உன் மாமா கிட்ட கேட்டா என்ன ப்பா … ஏன் மாமா…. கூட பேசலன்னு…..” என லதா மதுவை நியாபகாக படுத்தி பேச்சி கொடுக்க…..

ருத்ரன் அசையவில்லை….

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க….          வால்கிலோக்கையும் சேர்த்து பார்க்க…. ருத்ரன் அங்கே ஒரே எண்ணமாக…. ஹாலில் படுத்துக் கொண்டிருந்தான்.

ஒன்றும் சொல்ல முடியாமல் லதா தன் அறைக்கு சென்றார்….. சௌந்தரும் என்ன செய்வது என தெரியாமல் அங்கேயே படுக்க…. அந்த அசைவில் எழுந்தவன்…..

மனம் முழுவதும் நிம்மதியில்…. மாடி படியை தாவி ஏறினான்….. அங்கு பார்த்தாள்…. மது அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்……

நிமிர்ந்து படுத்து…. லேசாக வாயை திறந்துக் கொண்டு……. கட்டியிருந்த சாரியுடனேயே படுத்திருந்தாள்…. பார்த்தவனுக்கு கிறுக்கு தான் பிடித்தது….

அவளை ஒட்டி படுத்துக் கொண்டான்…… தன் கைவளைவில் அவளை கொண்டு வந்தவன்….. அவள் காதில் “ரோஜா…. பூ….. ரோஜா பூ….. “ என அழைத்தவன்….. அவள் காததை கடிக்க….  

மது “ம்….” என்றவள் அவன் கடிக்கவும்…..”ஸ்…” என்றவள்… கண் திறந்து பார்க்க….. 

ருத்ரன் “ வாடி மேல போலாம்….. எனக்கு தூக்கம் வரல….” என அழைக்க.

மது எதுவும் கூறாமல் தன் இரு கையையும்….. தூக்க…. சட்டென எழுந்தவன்…… “வித் மை ப்ரஷர் பேபி…. “ என்றவன்.

கையில் ஏந்திக் கொண்டே மொட்டை மாடிக்கு சென்றான்….. அங்கு  பௌர்ணமியின் அடுத்த நாள் நிலவு….. அப்போது தான் மேலே ஏறிக் கொண்டிருந்தது….  

மொட்டை மாடி……. குளிர் நிலவு…..  தனது மனத்துக்கு பிடிதவளிடமிருந்து வரும் மல்லிகை மணம்…..  அவளின் இடுப்பை பின்னிலிருந்து கட்டிக் கொண்டு….. ஒரு மோன நிலையில் நின்றுந்தனர்…. இருவரும்…..

மது இப்போது “அதென்ன புதுசா ரோஜா பூ….” என்றாள் மெதுவாக.

ருத்ரன் அவள் கழுத்து வளைவில் பட்டும் படாமல் ஒரு முத்தம் வைத்து… முன்புறம் திருப்பி……. திரும்பவும் அவள் முகம் பார்த்து “ரோஜா பூ….” என்றான் காதலாக……

மதுவிற்கு கன்னம் இரண்டும் அதன் வண்ணம் காட்ட…… ருத்ரன் ஆசையாக…. கடிக்க வர……. மது “மாமா…. ப்ளீஸ்….” என.. அழுந்த ஒரு முத்தம் வைத்தான்….. “ரோஜா பூ …. ரோஜா பூ…” என கூறிக் கொண்டே…..

அந்த இரவு முழுவதும்…. அந்த நிலவின் துணையில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்…..          

 

Advertisement