Advertisement

வண்ணம்-11

“கண்கள் முடிய புத்தர் சிலை…

என்… கனவில் வருவது பிடிக்கும் என்றேன்….

தயக்கம்…… என்பதே சிறிதும் இன்றி…. அது………

எனக்கும்… எனக்கும்…. தான் பிடிக்கும் என்றாய்… அடி

உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க

என்னை……  ஏன்…. பிடிக்காதென்றாய்….. “

மாலையில் நிச்சையம் நன்றாக… நடந்தது……. மதியம் ருத்ரன் பேசியதிலிருந்து மது இறுக்கத்துடன்…. இருந்தாள்.

ஒரு அமைதியில்லாதா மனது அவளிடம்….  சபையில் பெரியவர்கள்… ஒன்று செய்ய சொன்னால்… இவள் ஒன்று செய்தாள்….. அனைவர் முன்பும் நிற்கவே அவளிற்கு… சங்கடமாக இருந்தது…..

திருமணம் என்னும் போது வரும் ஒரு உற்சாகம் இல்லை…. ருத்ரனை, இது கவனிக்க வைத்தது….. கண்ணால் கிரியை அழைத்து….. “மதுவை பார்” என்றான்.

கிரி மதுவின் அருகில் வந்து கையை பிடிக்க சில் என இருந்தது. ஆனால் மதுவிற்கு கிரி தன் அருகில் வந்ததே…… போதுமானதாக இருந்தது…. கிரியின் கையை விடவே இல்லை.

மது, கிரியை பார்க்க……. அங்கேயே அமர்ந்தான் கிரி.  ருத்ரன் சுபாவை தேடி… கண்ணால், மதுவை காட்ட…. சுபா வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

ருத்ரன் இதை எதிர்பார்க்கவில்லை, இது அவனுக்கு தெரியவும் இல்லை… இத்தனை நாட்களில்….. எங்கே, அவன் தான் யாருடனும் பேசுவதில்லை….. பிறகு….சுபா மதுவிடம் பேசாதது தெரியவில்லை.

அதன்பின் வரவேற்புக்கு மணமக்கள் தயாராக சென்றனர்.

கடல் வண்ணத்தில் பட்டு…… அதனின் அடர் நீலத்தில் ப்ளௌஸ்…. பொருத்தமான…. நகைகள்….. கையில் ருத்ரனுக்கு பிடித்த மருதாணி என மது ஒரு தீபம் போல் ஒளிர்ந்தாள்…..

மது சொல்லிச் சென்றதும் தாடியை எடுத்திருந்தான்…. ருத்ரன்…. அப்பாடா என்றானது பெரியவர்களுக்கு.

லதாவிற்கு ஒரே எண்ணம் எல்லாம் நல்லபடியாக நடக்க  வேண்டும் என….

மதுவின் உடைகேர்ப்ப…. ருத்ரனும் அடர் நீலத்தில் குர்த்தி…. தோத்தி மாடல் பேன்ட்….என இணையாக அணிந்து வந்தான்.

ருத்ரனின் அம்மா, அவனிடம் “உன்னக்கு பிடிக்குனு தான் டா….. மது ப்ளூ கலர்ல… புடவையே எடுத்தா….” என பெருமையாக் கூற…

ருத்ரன் மதுவை பார்க்க…… அழகாக… தெரிந்தாள்…. ஆனால் அவர்கள் சொன்ன உடன் இன்னும் அழகாக தெரிந்தாள்…

ருத்ரன்…  தன் அம்மாவிடம் “பாத்தியா எனக்கு… பிடித்த கலரில் தான் உன் மருமகளே அழகா தெரியறா….” என்றான் அசால்டாக..

“டேய் ….” என அனைவரும் கிண்டல் செய்தனர்.

சௌந்தரின் ஆபீஸ் வட்டாரங்கள்…. வரதனின் தொழில் முறை நண்பர்கள்……. சொந்தம் பந்தம் என அனைவர் கண்களும் இவர்கள் மேல் தான்.

வரவேற்ப்பு முடிந்து புகைப்படம் எடுத்து, உணவு முடிந்து…. படுப்பதற்கே…. இரவு 12 மணி…..

விடியல் காலை முகூர்த்தம்…… மதுவிற்கு உறக்கமே வரவில்லை. புலி வருது… புலி வருது கதையாக…… வந்தே விட்டதே….. இத்தனை நாட்களில், மாமாவிடம் இப்படி ஒரு கோவம் இருக்கும், எனக்கு நீ நிறைய பதில் சொல்லன்னு சொல்வாங்க…. என தான் நினைத்தது, நடந்தே விட்டதே என்ற எண்ணம் தான் மதுவிடம்.

இதில் தூக்கம் எப்படி வரும்…….. கண்ணில் நீர் கூட வரவில்லை…. இன்னும் எத்தனை காலம் நான் போராடுவது…… என்னும் நினைவு தான் மதுவிடம்.

விடிந்தால் ருத்ரனுடன் தனது வாழ்வு இணைய போகிறது…. இப்போது… எங்கும் ….. அவன்(மாமா) …  இல்லவே… இல்லை….

எனது மனதின் மூலை…. முடுக்கு…. இண்டு… இடுக்கு…. எங்கும் தேடியாகி விட்டது அவன் இல்லை….. நானாக…. என்னுள் மாமாவை கொண்டு வர நினைத்தாலும் முடியவே இல்லை…  நினைத்தே கரைந்தாள்

ருத்ரன் நிலை இன்னும் மோசம்…. அவள் தான் எல்லாம் என மனத்தால் உணர முடிகின்ற அவனால்…….. ஒன்ற முடியவில்லை… மதுவிடம்

மது பார்க்கும் பார்வையில் இப்போது ஒரு அந்நிய தன்மை…. நான் உனக்கு வேண்டாம் என்னும் விதமான பார்வை…….. அவனை தள்ளியே நிறுத்துகிறது.

இவனும் முன் போல்…. அதனை உடைக்க நினைக்கவில்லை.

விடிற்காலையில், நல்ல ரெட்… மிளகாய் பழ கலர்…. பட்டில்…. ருத்ரனின் அருகில் மது வந்தமர….. என்னவள் என்ற கர்வம் வந்தது ருத்ரனிடம்…   

ருத்ரன் மது திருமணம் நிறைவடைந்தது….. அதன்பின் மதுவீட்டிற்கு மணமக்கள் சென்றனர் … மாலை போல் உடுமலை சென்றனர்.

மதுவுடன் கிரியும் அவளின் சித்தப்பா… வரதனும் வரவில்லை…. இங்கு வீட்டை பார்த்துக் கொள்ளவதாக கூறினார்..

மது கிரியைவிடவே இல்லை….. அவனின் கையை பிடித்துக் கொண்டு ஒரே அழுகை…. நீயும் இப்போது என்னுடன் வா… என.

மற்ற எல்லாரையும் விட…. கிரியையும் வரதனையும் தான் இந்த மூன்று வருடங்களாக அவள் அதிகம் தேடுவது.

இப்போது அந்த இருவரும் வரவில்லை எனவும் மது பயங்கர அப்செட்….தீப்தியை விட மோசமாக அழுதாள்… எல்லோரும் சமாதானம் செய்து பார்த்தனர்….

நேற்று மதியம் ருத்ரனின் பேச்சு, இரவு சரியாக உறங்காதது…., இப்போது வரை தூங்காமல்…. இருப்பது எல்லாம் சேர்ந்து…. அவளை அந்த நிலைக்கு தள்ளியது

பொறுமையாக… கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்த ருத்ரன்…. நேரம் ஆக ஆக…. மதுவின் பிடிவாதம் அதிகமாகவும்….

ருத்ரன் அவளின் அருகில் வந்து நின்று…. கிரியின் கையிலிருந்து அவளின் கையை பிரித்தவன்….. “ஒழுங்க…. நான்… அமைதியா சொல்லும் போதே…. என்கூட வா….” என சத்தமே இல்லாமல் கூற

கிரியும் “மாமா சொல்றத மட்டும் கேளு மது…. எல்லாம் நல்லதாவே நடக்கும்….” என கூற…. மது அத தவிர வேறு ஏதாவது சொல்லேன் என்னும் விதமாக தான் கிரியை பார்த்தாள்.   

ருத்ரனுக்கு கோவம் வந்தது… முறைதான் கிரியை…. இதை பார்த்த மது அமைதியாக ருத்ரனுடன் சென்றாள்.

வண்டியில் வர வர ருத்ரன் தூங்கிக் கொண்டு வந்தான்…. மதுவின் புறம் திரும்ப கூட இல்லை.

மதுவிற்கும் இப்போது பயம் வந்தது… மண்டபத்திலேயே…. என்னிடம் அப்படி பேசியவன்… இப்போது என்ன என்ன கேள்வி கேட்பானோ…. என்னோட பழைய கதை எல்லாம்  இவனிடம் திரும்பவும் அலசப்படுமோ…. என்ற நினைவை மதுவால் தடுக்க முடியவில்லை.

அது கொடுத்த தாக்கம்…. வானில் போகும் மேகங்களில் எல்லாம் இப்போது கொடூரமான உருவங்களாக…. தெரிந்தது. மதுவிற்கு.

வீடு வர வர…. மதுவிற்கு அழுகை வந்தது…. கார் வீட்டின் முன் நிற்கவும்…. அறிந்தவர், தெரிந்தவர் எல்லாம் நின்று மணமக்களை பார்த்தனர்.

மது தலை குனிந்துக் கொண்டாள்… உள்ளே சென்று… விளக்கேற்ற சொல்ல… மதுவிற்கு தீப்பெட்டி பற்றவே இல்லை…. எப்படி பற்றும் கை எல்லாம் வேர்வை…

சொந்தம் எல்லாம் நின்று வேடிக்கை பார்க்கிறது… அருகில் ருத்ரன் வேறு… அவன் பார்த்தாலே இவளுக்கு சரியாக வராது… இதில் இவன் வேறு அருகில் நிர்க்கவும்…. தீப்பெட்டி நமுத்து போச்சு….

கூட்டத்தில்… ஒரு சலசலப்பு…. அவளின் எதிரில் இருந்து இதை பார்த்த ருத்ரன்… அமைதியாக அவளிடமிருந்து, தீப்பெட்டியை வாங்கினான்….

அதில் ஈரத்தை உணர்ந்தவன்… அவளின் கையின் மணிக்கட்டை பிடித்து  எடுத்து….  தனது நெஞ்சின் மேல் அழுந்த வைத்து அவளின் ஈரத்தை துடைத்தவன்… மெதுவாக…. மிக மெதுவாக…. ரிலாக்ஸ்… மது…. என்றான்…. சிரித்த முகமாகவே…  

தானே தீகுச்சியை பொருத்தி அவளிடம் நீட்ட…. கைகள் நடுங்க அவள் வாங்க போக…. “ம்….” என்று லேசாக…. அவளிற்கு கண் காட்ட….. மது, அவனது கையை பிடிக்க, இருவரும் சேர்ந்து…. அந்த தீபத்தை ஏற்றினர்.

மதுவின் அத்தை பெண்கள் எல்லாம் “ம்…. ம்…. இப்பவே ஆரமிச்சாச்சா…” என கிண்டல் செய்ய மதுவிற்கு இப்போது தான் சிறிது டென்ஷன் குறைந்தது.

பூஜை அறையிலிருந்து வெளியே வந்தவுடன்….. மணமக்களை… அமர வைத்து பால் பழம் அருந்த செய்து ஒய்வு எடுக்க வைத்தனர்…

வந்திருந்தவர்களுகுக் விருந்து முடித்து…. வீட்டு மக்கள் அனைவரும் உணவருந்தி முடித்து…. முதலிரவுக்கு அறையை தயார் செய்தனர்.

மேலே ருத்ரனின் அறையில் மதுவை விட…. மதுவிற்கு உள் கண்டிப்பாக    செல்ல வேண்டுமா…. என்ற நிலையில்…. இவள் அறை வாசலில் தயங்கி தயங்கி…. செல்ல…..

ருத்ரன் “வந்து தூக்கிட்டு போகனுமா…” என்றான். எரிச்சலில். சிலிர்த்து போனது மதுவிற்கு…

பச்சை வண்ண மைசூர் சில்க் பட்டில்…  அழகாக இருந்தாள்… ருத்ரன்… இயல்பாய்… ஒரு ஷ்ட்ஸ்… டி-ஷர்ட் ல் கீழே அமர்ந்திருந்தான்.

அவள் வந்து நின்றிருந்தாள்…. இவன் லேப்டாப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

மது “….ம் என்ங்…. மாமா…” என்றாள்.

ருத்ரன் “என்ன…” என

மது “இந்தாங்க…..” என பாலை கையில் கொடுத்தவள்… சொல்லாமல் அவன் காலில் விழுந்து எழுந்தாள்… “அக்கா…. சொன்னாங்க….” என்றாள்… டென்ஷனாக.

ருத்ரன் இயல்பாய் லேசாக சிரித்துக் கொண்டு “ம்… ஆச்சா….” என்றான். அவள் முகம் பார்த்து.

மதுவும் “ம்…..” என்று சிரித்துக் கொண்டே தலையை அசைத்தாள்.

“அப்புறம் வேறு ஏதாவது சொன்னாங்களா……. மறந்துட்டியா….”

“பார்த்துக்கோ…” என்றான். உதட்டில் சிரிப்பை மறைத்த படி.

இப்போது என்ன செய்வது என தெரியாமல் திரு திருவென… முழிக்க….

அதிலும் அவனுக்கு சிரிப்பு வந்தது “உட்கார்…” என்றான்.

ருத்ரன் அமைதியாக் இருந்தான் பேசவே இல்லை…..

ஸ்பீக்கரில் எ.ஆர்.ரஹ்மான்…. “ஆருயிரே…. மன்னிப்பாயா…மன்னிப்பாயா…..“ என்……. சகியே….. நீ இல்லாதா…” என உருகிக் கொண்டிருந்தார்….

அவளின் பதட்டமான முகம் பார்த்து…. என்னிடம் எதற்கு இந்த பதட்டம்…. நான் உன்னவன் மதும்மா…. என்று எண்ணியவன் “அழாக இருக்க.. டி….” என்றான்.

அவளிடம் வெட்கத்தை எதிர்பார்த்தவனுக்கு தோல்வியே…. மது கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தாள்…. அவளின் உடல் மொழி ஓர் ஒதுக்கத்தை காட்டியது.

அவனை…. தள்ளி நிறுத்துவது போல் உணர்ந்தான்….

இந்த நிலையில் ருத்ரனின் ஆளுமையும் கர்வமும் அடிவாங்கியது….. நான் ஒன்றுமே இல்லையா இவளுக்கு…. என் நிலை இவளுக்கு புரியவே புரியாதா…. என்று கதறினான்…. மனதிற்குள்….

ஆனால் ஒரு ஓரமாக அவனின் மனசாட்சி…. சொல்லிக் கொண்டே இருந்தது “நீ அவளுக்கு எங்கே டா…. புரிய வைத்தாய்….” என்று.

ஏதோ இவன் சிறு வயதில்…. இவனின் மாமா…. சொன்னாங்களாம்….

இவனுக்கும் அதை கேட்டு காதல் வந்ததாம்…… ஆனால், அவளுக்கு வரவில்லையாம்….. அதையும், நீயே… தான் சொல்லிக் கொள்கிறாய்…..

எப்போதாவது நீ அவகிட்ட சொல்லி இருக்கியா……… உன்னை எனக்கு பிடிக்கும் மது என…. இல்லை… குறிப்பால் தான் உணர்த்தி இருக்கியா……

ஏதோ நீ, விலை கொடுத்து வாங்கிய பொருளை…. கையில் தூக்கிக் கொண்டே அலைவது….மாதிரி,

மது என்பவள்…. என்னவள் என்று… நீ சொல்லிக் கொண்டே இருக்கிறாய்… அவ்வளவு தான்.

உணர்வதும்….. உணர்த்துவதும்…. தான் காதல்….. இதில் உரிமை என்பது நம்பிக்கை இன்மையின் முதல் நிலை.  என்று மனசாட்சி கிளாஸ் எடுத்தது.

இப்போது ருத்ரனின் முகம் மாறியது….. ஒரு அமைதி வந்தது….. ஒரு தீவிரமான குரலில் “இது தான் மது நிஜம்…. உன்னை பொறுத்தவரை நான் மட்டும் தான்….. “ என்றான் இப்போதும்….

“ஏய்… இனி மாமான்னு… க்கூப்ப்பிடாதே டி… ஏதோ சின்ன பெண் கூப்பிடுவது போலே இருக்கு….” என்றான்…..                

“சரி போய் தூங்கு…”என்றான். மதுவும் சரி என்று அமைதியாக கட்டிலின் ஓரத்தில் படுத்துக் கொண்டாள். உறங்கியும் விட்டாள்.

ருத்ரனுக்கு ஆனந்தம் தான் தன் ரூமில் மது இருப்பது …. ஆனால் நெருங்கக் முடியா தூரமாக தெரிந்தது….

காலை, மதுவை எல்லோரும் உத்து உத்து பார்த்தனர்….. அவளின் மீனா சித்தி…… “என்னடி சொன்னான் என தம்பி…” என  கிண்டல் செய்ய…

அதற்கு, மது அமைதியாக இருக்க…. ரம்யா அங்கு இருந்தாள்… அதை கவனிக்க வில்லை இருவரும்…. உடனே ரம்யா மதுவின் அமைதி பார்த்து…. “அதானே… என கொழுந்தனுக்கு… கொஞ்சம் ரோஷம் இருக்கு…” என மூர்க்கமாக…. சொன்னாள்.

இது பின்புறம் நடந்த ஒரு எதிர்பாராத டாக்…. மதுவிற்கு… கேட்காத…. வார்த்தைகள்…. கல்யாணம் செய்த முதல் நாள்… இப்படி ஒரு பேச்சு….

மது கிடு கிடு வென… நடந்தாள்… மாடிக்கு, அங்கு ஹாலில் தான் அமர்ந்து ருத்ரன் காப்பிக் குடித்துக் கொண்டிருக்க,

இவளின் பரபரப்பு பார்த்துக் கொண்டிருந்தான்… அவளிடம் செல்ல வில்லை…

மீனா அக்கா, மதுவின் பின் கூடவே வர…. ரம்யாவும் ஒரு அசால்ட்டு பார்வையுடன் உள் வர…. ருத்ரன் கண்ணில் எதுவும் தப்பவில்லை….

மேலே சென்ற மது ஒரே அழுகை…. ஒரு பாடு அழுது நிமிர்த்து போது தான் தோன்றியது…. யாருமே நம்மை தேற்ற வரவில்லை என….

அதற்கும் கண்ணில் நீர் சேர்ந்தது…..

ஒரு பத்து நிமிடம் கழித்து “மது… மது… “ என ருத்ரன் அழைத்தக… மது, கொஞ்சம் தெளிந்து….

“என்ன மாமா …” என இயல்பாய் கேட்டுக் கொண்டே… இவள் இறங்கி வர……. ருத்ரன் ” என்ன மேல வேல உனக்கு… இங்க வா… குழந்தைகளுக்கு டிபன் வை…..”  என்றான்.

ரம்யாவிற்கு ருத்ரன் ஒன்னும் சொல்லவில்லை என்றதும்… ஒரே குஷி…. அவர்கள் அங்கு இருந்த ஒரு வாரமும்…. இப்படியே… நீ எங்கள் கொழுந்தனுக்கு பொருத்தமில்லாதவள்…. என்றே ரம்யாவின் பேச்சு சென்றது.

ருத்ரன் அங்கு இருந்த வரை…. அவளுடன்… அளவாக் பேசினான்…. வெளியில் அழைத்து செல்ல மறுத்துவிட்டான்.

லதாவும் சௌந்தர்ரும் கிளம்பும் போது…. “மாப்பிள்ளை….. கோவை வாங்க…. ஒரு வாரம் இருப்பது போல்…. “ என்று விட்டு  சென்றனர்.

ஆம் கோவை அவர்கள் செல்லவே இல்லை…. ருத்ரன் தான் அங்கு…. வர கொஞ்ச நாள் ஆகும் என்றுவிட்டான்.  சென்னை கிளம்பினர் ருத்ரன் மது…. இரு வீட்டு பெரியவர்களும் சென்று வீட்டை நிரப்பிவிட்டு வந்தனர் 

                    

 

Advertisement