Advertisement

 

 

Tamil Novel

 

வண்ணம்-6

“நீ கீர்த்தனை… நான் ப்ரார்த்தனை…

பொருந்தாமல்…. போகுமா……………..

இதோ… இதோ… என் பல்லவி….

எப்போது கீதம்.. ஆகுமோ…..

இவன்… உந்தன் சரணம்மென்றால்…

அப்போது…. வேதமாகும்மோ…….

ருத்ரன் கோவையிலிருந்து சென்று 2 மாதத்தில் ஆன் சைட் சென்று விட்டான். வருவதற்கு ஒரு வருடம் ஆகும் என்று தகவல் போனில் சொன்னான்

ஜானகி தான் புலம்பி தீர்த்து விட்டார். இங்கு வருவதே இல்லை, எப்போதும் வேலை வேலை என அலைவது, என்ன சாப்பிடுகிறானோ, என்ன செய்கிறானோ என.

இதை கேட்ட வைத்தியநாதனும் சற்று கோவமாக அவர்கள் நீண்ட நாளாக சொல்லுவது போல் “ஏம்…பா… ருத்ரா…. இங்கயே ஏதாவது டீச்சர் வேலை வாங்கி கொண்டு வந்து விடுடா… உன் திருமணத்தையும் முடித்து விட்டால், எங்களுக்கு மனம் நிறைவாக இருக்கும்…ப்பா…,

இன்னும் எத்தனை காலம் இப்படி நாங்கள் தனியே இருப்பது… நீயும் இந்த கடை, நில குத்தகை விவரம் எல்லாம் தெரிந்து கொள்ள வேணுமே ப்பா…” என கூறினார்.

ருத்ரனுக்கு  அவருக்கு மேல் கோவம் வந்தது “அப்பா.. என்ன அவசரம்….உங்கள் உதவிக்கு தான் வடிவேல் அங்கிள் இருக்கிறார்… இன்னும் ஒரு 5 வருடம் என்னை எதுவும் கேட்காதிர்கள் ப்பா… pl…” என்று விட்டான்.

ருத்ரனுக்கு இந்த IT வாழ்க்கை மிகவும் பிடித்தது, நிற்காத 5, நாள் ஓட்டம் 2 நாள் விடுமுறை, கொண்டாட்டம்.

எப்போதும் ஏதோ, ஒரு இலக்கு…… எங்கும் நீயா நானா போட்டி, ஒரு 10 நாள்  விடுமுறை  எடுத்தாலும் அந்த ஆபீஸ்சில் நீ… 3 மாதம் அன்னியனே…….. என நிற்காமல் ஓடுவதும் அவனுக்கு பிடிக்கிறது.

இதை அவன் தந்தை “விட்டு வா….” எனவும்… ஆன் சைட் செல்லும் போது அவர்களை சென்று அவன் பார்க்க வில்லை. வருவதற்கு ஒரு வருடமாகும் என்ற தகவல் மட்டும் போனில் கூறினான். அப்படித்தான் அவன், அவனுக்கு யார் கேள்வி கேட்டாலும் பிடிக்காது.

மது இப்போது தான் சற்று எல்லோரிடமும் பேசி சிரிக்கிறாள், அதன் பொருட்டு எல்லோருக்கும் நிம்மதியே.

ஆனால்,  மதுவும் சுரேந்தார் சந்தித்த விஷயம் தெரிந்த நாளில் இருந்து  வரதராஜனின் பார்வை மதுவை ஆராயிச்சியோடு பார்க்க தொடங்கியது.

வரதராஜனுக்கு தன் அண்ணன் மகளின் மேல் முழு நம்பிக்கை, அவர்களாக ஏதோ வந்து இவளிடம் வம்பு செய்கிறார்கள் என நினைத்தார். அதனால், அவர் தனது அண்ணனிடம் இதை பற்றி சொல்லவில்லை.

நாம் முதலில், தெரிந்துக் கொண்டு அதன் பிறகு சொல்லலாம் என நினைத்திருந்தார்.

இதனால், மது கோவிலுக்கு செல்லும் போதும் வெளியே செல்லும்  போதும் கூடவே லதாவோ, கிரியோ, ஷ்ரவன்னோ இல்லை சர்வேஷ்ஷோ யாரோ ஒருவர் துணைக்கு சென்றனர்

முதலில் அது மதுவிற்கு தெரியவில்லை, அதன் பின் புரியவும் அய்யோ … என பயம் வந்தது.

எதிலும் கவனமாக இருந்தாள், இது ஒரு கொடுமை தன் வீட்டில் தான் கண்காணிக்கப்படுகிறோம் என்னும் போது.

தன் அம்மாவின் போன் இவளிடம் கொடுக்கப்பட வில்லை. எல்லோரும் இவளை பாதுகாத்தனர். அதனால் அவளுக்கு இது சிறை போல் ஆனது.

ஷியாமை விரும்புவது வீட்டிற்கு தெரிந்து விட்டது என மது நினைக்க, ஷியாமின் வீட்டு ஆட்கள் இவளை தொந்தரவு செய்கின்றனர் என வரதராஜன் நினைத்தார்.

இரண்டாம் வருடம் ஸமஸ்டர் தொடங்கியது மது ரெஸ்ட்லஸ்ஸாக இருந்தாள். ஏதோ இவர்கள் தன்னை அகதி போல் நடத்துவதாக உணர்ந்தாள்… examல் கவனம் செலுத்த முடியவில்லை.

யாரும் நண்பர்களாக தெரியவில்லை, எதிரி நாட்டில் சிக்கிய இராணுவ வீரனின் நிலை, சௌந்தர் அமைதியானார்,

மது பாட்டி அறையே கதி என இருந்தாள், வெளியே சென்றாள் யாரும் ஏதும் கேட்பார்களோ என பயம் ஷியாமிற்கும் விஷயம் தெரிவிக்க முடியவில்லை.

வராதராஜன்  முழுவதுமாக விசாரித்து இருந்தார், ஆனால் அவர் எதிர்பாராத படி ஷியாமும் மதுவும் விரும்புவது தெரிந்தது… முதலில் வந்து போனது ருத்ரனின் முகமே….

“ருத்ரதாண்டவம் ஆடிவிடுவானே… அவன்….” உடல் சிலிர்த்தது அவருக்கு… அதனால் இரு பக்கமும் யோசித்தார் அவர்….

அதனால், அவர் ஷியாமை பற்றியும் விசாரிக்க தவறவில்லை, அவருக்கு திருப்தியே…. நல்ல வேளை, நல்ல குடும்பம், தந்தை இல்லாவிட்டாலும் பொறுப்பாக படித்து உயர்ந்து இருக்கிறான்…. குறை என்று ஒன்றும் இல்லை அவர்களை கை நீட்டி சொல்ல… மேலும்….

நம் பெண் விரும்பும் பட்சத்தில் பெண் கொடுத்து…. அவர் தங்களின் குடும்ப உறவை புதுபிக்கவே நினைத்தார்…. (பக்கா பிசினஸ் மேன் ஆக)எதிரிகள் பிடிக்காது…. ஒன்று அழிக்க வேண்டும் இல்லை தட்டிக் கொடுத்து தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்…. அவருக்கு….

மது விஷயத்தில் ருத்ரனை தவிர வேறு தடைகள் இல்லை அவருக்கு…. ஆனால், மது ருத்ரன் வேண்டாம் என்று சொன்னால் தான் ஷியாம் என்பதில் தெளிவாக இருந்தார்….

ஆனால், எதுவாக இருந்தாலும் ஷியாமின் சைடில் இருந்து முதலில் வரவேண்டும் என நினைத்தார்….

ஒரு வேலை தன் நினைப்பு அனைத்தும் பொய் ஆகி அவர்கள் நம் பெண்ணை பயமுறுத்தி இருந்தால், அதனையும் சும்மா விட போவதில்லை…. என்றிருந்தார்.

இவர் விசாரித்த நாள் முதல் ஷியாமை பார்க்கவே இல்லை….  அதனால் ஒரு நம்பிக்கை.. அவருக்கு…. “நம் பிள்ளைகள் நம் கையை மீறி செல்ல மாட்டார்கள்” என….

வரதராஜன் இது… இப்படி என எதுவும் சொல்ல வில்லை, ஆனால் ஏதோ என குடும்ப உறுப்பினர்களுக்கு கோடு காட்டி இருந்தார்..

அதனால் வீட்டில் அமைதி… அமைதி… அமைதிக் எல்லாம் அமைதி…. என்றாகியது .

கிரி தான் தன் சித்தப்பாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான், “என்ன சித்தப்பா, என்ன பிரச்சனை” என்று, அவர் வாயே திறக்கவில்லை.

பெண் பிள்ளை விவகாரம், இவனிடம் சொன்னால் இவன் ஏதாவது செய்து விடுவான் என நினைத்து…. நாம் நம் பிள்ளையை தான் முதலில் பாதுக்காக்க வேண்டும் என எண்ணி அமைதியாக இருந்தார்

அதீத பொறுமையும் ஆபத்தோ…. வரதராஜன் அமைதியாக இருந்தார். ஷியாம் வீட்டில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என பார்ப்போம் என

கொஞ்ச நாட்கள் கழித்து வைத்தியநாதன் ஒரு நன் நாளில் சௌந்தர்ரிடம் மதுவை பெண் கேட்டார்….

அன்று காலை அனைவரும் வீட்டில் இருக்கும் போது போன் செய்த வைத்தியநாதன் சௌந்தர்ரிடம்  “ருத்ரன் இன்னும் 1 மாதத்தில் வந்து விடுவான்…. அதனால் அவன் வந்து ஒரு மாதத்தில் கல்யாணம் வைத்துக் கொள்ளாம்… ப்பா.. சௌந்தர்… இப்போது நல்ல நாள் பார்த்து நிச்சையம் செய்து விடுவோமா…. “ என்றார்.

சௌந்தர் ருத்ரனிடம் கேட்டிர்களா… மாமா … அவன் ஏதோ 3 வருடம் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தானே…” கேட்க

“இப்போதே அவனுக்கு 28 வயதாகிறது… அவனுக்கு முடித்தால் கொஞ்சம் நிம்மதி எங்களுக்கு… அவனிடம் நான் பேசுகிறேன்….. நீ மதுவிடம் பேசிவிட்டு சொல்லு…. அவ்வளவு தான்”  .என முடித்தார்.

சௌந்தர்ரும், “மது காலேஜ்லிருந்து வரட்டும் மாமா பேசிவிட்டு சொல்கிறேன்.” என்றார் மது காலேஜ் சென்ற சமயம் அது.

சௌந்தர்க்கு ஒரே யோசனை, இப்போவே செய்ய வேணுமா, காலேஜ் முடிந்த பின் பார்க்காலாமே…. என

வைத்தியநாதன் கூறியதை அனைவரிடமும் கூறிக் கொண்டிருந்தார் ஹாலில் அமர்ந்து….

இதை கேட்ட வராதராஜன்  “அண்ணா … மதுவிற்கு பிடித்திருந்தால் உடனே முடித்து விடு… கல்யாணம் முடித்து வேண்டுமானால் மது இங்கேயே படிக்கடும் அல்லது ருத்ரன் என்ன சொல்லிகிறானோ அதன் படி செய்யலாம்.” என சிறுது கூட தயங்காமல் சொல்லவும்… ஏற்கனவே…

அவர் வேறு மதுவை பற்றி, விட்டினரிடம் கோடு காட்டி இருக்கவும்…. லதாவும் “ஆமாம்… காலா காலத்தில் செய்து விடலாம்…” என்னும் விதமாக சொல்லவும்…   

மதுவின் விஷயம் எதுவும் தெரியாத சௌந்தர்… அனைவர் முகத்தையும் பார்த்து… “என்ன ப்பா… வரதா….  ஏன் எல்லோர் முகமும் ஒரு மாதிரி இருக்கிறது… என்ன விஷயம்… எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல்லு ப்பா…” என கேட்க

வரதன் “தன் அண்ணனிடம், சுரேந்தர் கோவிலில் மதுவை பார்த்தது, தான் விசாரித்தது என அனைத்தையும் சொல்லி முடித்தார்…. இதனால் மாமா பெண் கேட்கும் போதே….. செய்து விடலாம் ண்ணா… “ கூடவே யாரும்…. அவளிடம் எதுவும் கேட்டக் கூடாது… எல்லாம் அண்ணன் பேசிக்கொள்வார்….” என ஒரு முறை கண்டிப்புடன் சொன்னார்.

ஆனால் லதா “இல்ல தம்பி  நீங்களே பேசிடுங்க… ருத்ரனுக்கும் உனக்கும் கல்யாணம் என… அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் … நான் அப்பாவிடமும் சொல்லி விடுகிறேன் நாள் பார்க்க…. அவன் வந்த உடன் அடுத்த முகூர்த்ததில்…. கல்யாணம் தான்” என லதா  பட பட வென திட்டம் போட்டு விட்டார்.

வரதராஜன் ஷியாமின் வீட்டிலிருந்து எதுவும் தகவல் இல்லை எனவும்…. தான், தன் அண்ணனிடம் உடனே செய்யும் படி கூறினார்.

சௌந்தர் அதன் பின் பேசவே இல்லை தன் பெண் காதலிக்கிறாள் என்பதே நம்ப முடியாதவருக்கு, அதுவும் தங்களுக்கு ஆகாதவர்கள் வீட்டு பையனை என்றதும்… அய்யோ என்றானது… தன் பெண்ணை அவர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள் என… தான் தோன்றியது.

அவர்கள் வீட்டின் மேல் கோவமாகக் வந்தது… தன் தந்தையை ஏமாற்றினார்கள்… ஆனால், பழி என்னமோ தங்கள் மேல்….

இப்போது என் பெண்ணையும் ஏமாற்றுகிறார்கள்… என தான் அவருக்கு தோன்றியது… அது சரியவும் இருந்தது.

ஆம்…ஷியாமின் தந்தை தற்கொலை செய்துக் கொண்டார். அப்போதெல்லாம் உறவுகள் தான் இவர்கள், ஷியாமின் தற்போது இருக்கும் வீட்டை கட்டுவதற்காக.. சௌந்தர்ரின் தந்தையிடம் கொஞ்சம் பணம் வங்கி இருந்தார்… 

ஷியாமின் தந்தை சற்று செலவாலி… குடி ஆசாமி வேறு…

சில பல வருடம் கழித்தும் பணத்தை திருப்பி தருவதாக காணோம் என்ற உடன் சௌந்தர்ரின் தந்தை பணத்தை கேட்க… இவர் நான் வாங்கவே இல்லை என சாதிக்க… வாய் தகராறு முற்றியது.. பஞ்சாயத்து வரை சென்றது… அந்த அவமானம் தாங்காமல் அவர் தற்கொலை, செய்து கொள்ள இவர்கள் மேல் பழி மற்றும் பணமும் போயிற்று.

இது எதுவும் மதுவிற்கும் ஷியாமிற்கும் தெரியாது…..

அன்று தான் தன் தோழியின் போனில் இருந்து ஷியாமிற்கு பேசி இருந்தாள், 3 மாதங்களுக்கு பிறகு

யார் நம்பர் என தெரியாமல் எடுத்த ஷியாம் “ஹலோ…” என்ற குரலிலேயே தன்னவள் என கண்டவன் “ஸ்ரீ… எப்படி டா இருக்க… “ என்க “ம்..ம்..” என்றவள்.

ஷியாம் இப்போ வீட்டில் எல்லோரும் என்ன வாட்ச் பண்ற மாறியே இருக்கு ஷியாம், எனக்கு பயமா இருக்கு… எனக்கு ஸமஸ்டரும் முடிய போகுது, நான்… என்னால பேச முடியுமா தெரியல… அதன் ஷியாம் …” என திடமாக ஆரமித்தது… அழுகையில் கரைந்தாள்…

ஷியாம் “சரி டா… நான் பார்த்துக் கொள்ளகிறேன் ….” என்றவன், அடுத்து தன் அண்ணனுக்கு போன் செய்து, மதுவை பெண் கேட்க வேண்டும்… நீ அம்மாவை வர சொல்லுண்ணா…” என கூறினான்.

 

ஷியாமிற்கு  மதுவின் நினைவே…. அவள் அழுகை ஷியாமை யோசிக்கவே விட வில்லை…. அவனுக்கு தோன்றியது எல்லாம் “மது என்னுடன் இருக்க வேண்டும்” என்று மட்டுமே அதனால் தன் அண்ணனின் சொல்லை நம்பினான்.

சுரேந்தார்” ஏன் டா அவசரம் பொறுமையாக இரு…. நான் போயி முதலில் அவர்கள் வீட்டு ஆண்களிடம் பேசுகிறேன்…. பின்பு அம்மாவை கூட்டி செல்லாலம்  அவசரபடாதே….” என்றார்.

சரி தன் அண்ணன் தனக்காக் பெண் கேட்பார் என நினைத்து…. அடுத்த வாரம் வருகிறேன் அண்ணா “ என கூறி போனை வைத்தான்.

தன் தந்தையின் நிலை முழுமையாக தெரியாத நிலையில், அவருடைய இறப்பிற்கு நியாம் செய்வதாக நினைத்து…. மதுவின் குடும்பத்தை பழி தீர்த்துக் கொண்டார்.

ஆம்…… மதுவின் வீட்டில் தாங்கள் பெண் கேட்டு சென்றால், பெண் ஆசை பட்டாள் என திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள்….

அதனால் பெண்ணை வீட்டை விட்டு வர வைப்பது…. இது காலத்திற்கும் அழியாத கெட்ட பெயர்ரை அவர்களுக்கு தரும் என நினைத்தார்.

இது ஒன்றும் அவர் திட்டம் போட்டு செயல் படுத்தவில்லை, ஆனால் அவர்களின் குடும்பத்தை ஏதாவது செய்தாக வேண்டும் என அவரின் மூளையில் எங்கோ இருந்திருக்கும் போல்…

அதனால் செய்து தான் பார்ப்போமே… எப்படி இருந்தாலும் பெண் நம் வீட்டில் தானே வாழ போகிறாள்…. ஒன்றும் அவளை ஏமாற்ற வில்லையே…. என அதற்கும் நியாம் சொன்னார்….

ஷியாமின் விஷாயம் அவர் எதிர் பார்க்காதது…. அதன் பின் மதுவின் நிலை….

மது ஷியாமின் மீது கொண்டிருந்த கண்முடித் தனமான காதல், அதை அவளின் கண்களில் கண்டார். அப்போது தான் அவரின் மனம் மறியாது.

தன் தந்தை இழப்பிற்கு இவர்கள் தான் காரணம், ஆனால்  இவர்கள் அதை பற்றிய உறுத்தல் கொஞ்சமும் இல்லாமல் இருக்கிறார்களே என அந்த நேரத்து எண்ணம் அவரை வழி நடத்தியது.

தாங்கள் தந்தையை இழந்து பட்ட அவமானத்தில் பாதியாவது இவர்கள் அடைய வேண்டும்… என எண்ணினார்.

எனவே தான், தன் தம்பிக்கும் சேர்த்து தான் அவமானம் செய்கிறோம் என்பதை மறந்தார்… தன் உயரம்…. தன்னை நம்பி படிக்கும் பிள்ளைகளுக்கு நல் ஆசிரியர்… அவர், அந்த நிலையையும் மறந்தார்,  தன் தம்பியின் நிலை அனைத்தும் மறந்தார்…

இந்த இரு நாட்களாக …. எப்படி இதனை செய்வது என்ற ஒரே யோசனைதான் அவருக்கு. ஆனால் அது அவருக்கு கடினமானதாக இருக்கவில்லை.

 

Advertisement