Advertisement

Part 2

ம்கூம்… பதிலே வரவில்லை வர்ஷினியிடமிருந்து சுப்புக்கு… அவனால், அவளிடம் கேட்கவும் முடியவில்லை.. அந்த பெண்ணின் பெற்றோர் வேறு… வர்ஷினியை குரு குருவென பார்த்துக் கொண்டிருந்தனர். சுப்புக்கு கோவம்தான் வந்தது, வெளிக்காட்ட முடியாத கோவம் வர்ஷினி மேல். மனதேயில்லாமல் வீடு வந்தான் சுப்பு…

இந்த ஒரு வாரத்தில், எல்லாம் நல்லபடியாக சென்றது… ஆனால், சந்தோஷி மட்டும் பேசவேயில்லை.. இவனும் அழைக்கவில்லை..

அடுத்த இரண்டு நாளில் திருமணம் என்ற நிலையில் நேற்றே ஊரிலிருந்து வந்திருந்தான் சரவணன்…

இப்போதுதான் வீடே கலகலப்பு கொண்டது.. கொஞ்சம் சத்தம் வந்தது… தனக்கு என தனியாக துணியெடுக்க கோவை சென்றான் அவன். வர்ஷினியையும் அழைத்து சென்றான்..

ஆத்மநாதன் “இதென்ன… அந்த பொண்ணுகூட போறது… அவளுக்கு கல்யாணம் ஆக போகுது… அண்ணனோட போயிட்டு வா, அவனுக்கு நல்லதா நாலு எடுத்து கொடு… ஏனோதானோன்னு இருக்கான்” என சத்தம் போட்டார்.

சரவணன் “அதெல்லாம் வரவங்க.. பார்த்துப்பாங்க… இல்ல உங்க உடன் பிறப்புகள கூட்டி போய் எடுங்க” என்றான் கொஞ்சம் கிண்டலாய்..

நாதன் “என்ன டா பேச்சு… அத்தைய இப்படியா பேசுறது… மதியமே வந்திரணும்… வந்து, வேலைய பார்க்கணும்… ஊர் சுத்தாத… பொறுப்பா இரு” என இருவது நிமிடம் பாடம் நடத்தியே… வண்டி சாவி தந்தார் சரவணனின் அப்பா.

இது பானுமதி சொல்லியிருந்தார்… “அந்த புள்ளைக்கு… நாலு நல்ல புடவையா வாங்கு… இனி அவளுக்கு வெளிய போக, வர இருக்கும்… அதனால.. நல்ல சுடிதார எடுத்துக்க சொல்லு… அந்த பையன பத்தி விசாரிச்சிட்டில்ல டா தம்பி” என்றார் வாஞ்சையாய்…

“ம்மா… பயப்படாத… எல்லாம் சரியா நடக்கும்” என ஆறுதல் சொன்னான்.

அதன்படியே வர்ஷினியுடன் கோவை சென்று… தனக்கும் வாங்கிக் கொண்டு.. அவளுக்கும் வாங்கி வந்தான். வர்ஷினியிடம், சரவணன் “மாப்பிள்ளைகிட்ட பேசுறியா… நான் அம்மா கிட்ட சொல்லமாட்டேன்” என்றான் லேசாக கண்சிமிட்டி.. தன் தோழியின் மனம்படிக்க முயன்றவனாக..

வேகமாக தலையாட்டியபடியே சொன்னாள்… “சர்ரு, வேண்டாம்… அத்தையையும்.. உன்னையும் எங்கும் விட்டுத்தரமாட்டேன்… அவங்க இப்போ பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க… சோ, இன்னும் டூ டேஸ் வெயிட் பண்ணமாட்டேனா” என்றான் மிகவும் சீரியஸ்ஸான குரலில்.

அதன்பிறகு எதுவும் கேட்கவில்லை சர்ரு… அமைதியாக வீடு வந்தனர்.. வரும்போது கிரியை, அழைத்து வந்தனர்.

மறுநாள், அவர்களின் பெரிய வீட்டில் முகப்பில் பெரிய பந்தல் போட்டுக் கொண்டிருந்தனர்.. இன்று காலையில்தான் பந்தகால் வைபவம் நன்றாக நடந்தது. அதன் பரபரப்பை தாண்டி… இப்போதுதான் வீடு இயல்பாக இருந்தது…

சுப்பு, இப்போதுதான் பினான்ஸ் வந்திருந்தான். அவனுக்கு மனம் சஞ்சலமாகவே இருந்தது.. நல்லபடியாக எல்லாம் முடியவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. கல்யாண கனவு.. ஆசை.. இதெல்லாம் வரவேயில்லை.

சரவணன் கேட்டான் “ண்ணா.. பந்தக்கால் போட்டாச்சி… நீ வெளிய போகலாமா கேட்டுக்கோ” என்றான்.

சுப்பு “டேய்… நானென்ன பெண்ணா… போடா, போய் வேலைய பார்” என கொஞ்சம் பல்லை கடித்தே சொன்னான்.. சொல்லி கிளம்பிவிட்டான்.

வர்ஷினி இந்த பெரியவீட்டு பக்கம் வரவேயில்லை… பானுமதி கூப்பிட்டு சலித்தார்தான், ஆனால் எட்டியும் பார்க்க்கவில்லை அவள், காலையில் பந்தக்கால் போடா வந்தவள் உடனே சென்றுவிட்டாள். அவளும் புடவைக்கு மேட்சிங் பிளவுஸ் தைத்து… ரெடியாகினால்… அவளின் கண்ணாளை பார்க்க…

அன்றைய நேரம் செல்ல… இரவு… மணி எட்டு, அப்போதுதான் உள்ளே வந்தான் சுப்பு… நாலு பெரிய கிழவிகள்.. எல்லாம்.. ஆத்மநாதனின் சித்தப்பா பெரியாப்பா மனைவிகள், அங்கிருந்த முற்றத்தில் அமர்ந்து யாரையோ இடித்து இடித்து… வெத்தலையை மென்றபடி.. கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

சுப்புவின் மாமாக்கள் “ஏன் புதுமாப்பிள்ளை… இவ்வளவு நேரம்… வரபோறவளுக்கு இப்போவே சம்பாதிக்கிரியா.. சும்மா கலகலன்னு வீட்டிலேயே இருக்க வேண்டாமா…” என்றார்கள் கேலியாக.

அங்கேயே அப்படியே அமர்ந்து கொண்டான் அவர்களுடன் எப்போதும் போல, சின்ன சிரிப்பு.. ஆனாலும்.. எப்போதும்.. இருக்கும் அந்த உயிர்ப்பு கூட இல்லை, எதோ சிரித்தான்.

சரவணன், பானுமதியின் சொந்தங்களை அழைத்துவர பஸ் ஸ்டான்ட் சென்றிருந்தான். வீடு, உறவுகளால் களைகட்டியது. இப்போதுதான் இரவு உணவு உண்டு கொண்டிருந்தனர் சிறு பிள்ளைகள்..

இப்படி இருக்க… பெரியவர்கள் உணவு உண்ண செல்லவும்.. அப்போதுதான் மேலே சென்று உடைமாற்றி வந்தான் சுப்பு… வெள்ளை லுங்கி… மேலே ஆரஞ்சி டிஷிர்ட் சகிதம் கீழே வரவும்… தன் அன்னையின் சித்தி… சித்தப்பா என அவனின் தாத்தா பாட்டி வரவும், அவர்களுடன் பேசியபடியே இருந்தான்.. 

அவர்களை உபசரித்து உணவு உண்ண அழைத்து சென்றார் பானுமதி… எல்லோரும் கிட்ட தட்ட வயதான நிலையில் வந்திருந்தனர். நேரம் சென்றது.

ஆத்மநாதன் “சரவணா… நாளைக்கு அந்த மண்டப அலங்காரம்… வெளிய லைட்டு, எல்லாம் பகலே வந்து போட சொல்லு… அலங்காரம், மதியம் இரண்டு மணிக்கே முடிஞ்சி இருக்கணும்… பொண்ணு வீட்டிலிருந்து மதியம் சாப்பாட்டுக்கு வந்திடுவாங்க” என்றார்.

அவரே “சுப்பு… போய் சாப்பிட்டு படுப்பா… ரொம்ப அலையாத… நாங்க பார்த்துக்கிறோம்…” என்றவர், அவனை உண்ண, உள்ளே அனுப்பியும் வைத்தார்.

அப்போது ஆத்மநாதனின் போன் அழைக்க தொடங்கியது… பொறுமையாக பேசி வந்தார்.. வந்தவர், அமர்ந்து கொண்டார் யாரின் கவனத்தையும் ஈர்க்காமல்.

சுப்புக்கு, நேரம் சென்றது.. உறவுகள்.. அவனின் அத்தை மகள், மகன், சித்தப்பா, பெரியப்பா மக்கள் என எல்லாம் சற்று பேசி, சிரித்து அவனை இளக வைத்திருந்தது… இப்போதுதான் லேசாக தனக்குத்தான் திருமணம்.. இது நடந்தேவிடும் என மனம் லேசாகியிருந்தது.. நல்ல மனநிலையில் வந்து ஹாலில் அமர்ந்தான்..

இப்போதுதான் சரவணன் உண்ண சென்றான். அப்போது போனெடுத்து வர்ஷினிக்கு அழைத்து “சாப்பிட்டியா… கிரிய, காலையிலேயே ரெடியாக சொல்லு சீக்கிரம்.. நான் வந்து கூட்டி போறேன்.” என ஆத்மநாதன் என்ன ஒதுக்கினாலும், சரவணன் அவர்களை அரவணைததே இருந்தான்.

இன்னும் அந்த பக்கம் என்ன சொல்லியதோ.. “தோ, உங்க தாத்தா எல்லாம் அங்கதான் வராங்க” என்றான்..

……………

“ஏன்… இன்னிக்கு வஜ்ரன், பைரவன் இங்கேயே இருக்கட்டும்… “ என அவன் சொல்ல சொல்ல..

……….. அந்தபக்கம் என்ன சொல்லியதோ…

“சரி சரி நான் கூட்டி வரேன்…” என்றான்.

…..

“சரி டி… வை…. நான் கூட்டி வரேன்” என்றான் சிரித்தபடியே. பின் உண்டான் தன் அத்தை மக்களுடன் சேர்ந்து.. பேசியபடியே.

ஆத்மநாதனை பார்த்தபடியே சுப்பு அந்த கிழவிகள் படையுடன் சிறிது கலக்க… அப்போது வந்த சரவணன் தன் தந்தையிடம் பணம் கேட்க சென்றான்.. அதுதான் சரவணன் உணர்ந்தது… ஆத்மநாதன் மெல்லிய குரலில் தன் சின்ன மகனிடம்.. “ப்பா தம்பி…. பொ…பொண்ணு வீட்டிலிருந்து போன்… வ. வந்துதுப்பா…

ஏதோ… அந்த ஊர்காரர்… அந்த எழுமலை பேசினான் ப்பா…. அங்க வீடே பரபரப்பா இருக்காம்…

அவங்க.. சித்தப்பா, மாமா இங்க வராங்களாம்…

என்ன டா… ஒன்னும் புரியலையே….

நீ போ… எல்லோரையும் படுக்க சொல்லு… மேல போ சொல்லு…

சுப்புவையும் படுக்க சொல்லு…

அந்த சுப்ரமணி மாமாவ மட்டும் நம்ம கூட வை… அத்தையெல்லாம் போய் படுக்க சொல்லு…

அந்த வாசல் ரூம்மில் உட்கார வை…. என்னன்னு தெரியையே… ப்பா… சென்னியப்பா…” என அந்த ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடக்க தொடங்கினார்.. குரலிலேயே கலக்கம் தெரிய தொடங்கியது..

சரவணன், பொறுமையாக எல்லோரையும் நகர்த்த… சுப்புக்கு, ஏதோ என புரிந்தது போல… “நான் வஜ்ரன விட்டு வரேன்” என இரண்டு ஜீவன்களையும் கைகளில் பிடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.. தோட்டத்து வீட்டுக்கு.. ஒன்றும் சொல்ல முடியவில்லை யாராலும்.

சரவணன், தன் அம்மாவிடம் எப்படி சொல்லுவது என பார்த்திருக்க.. பானுமதியின் சத்தம், சிரிப்பினுடே சற்று அதிகமாக கேட்டதோ… அழகாக தனக்கு வரபோற மருமகளை பற்றி சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார்… சரவணனுக்கு இப்போதும் தோன்றியது ‘எதோ சீர் வரிசையில்… முன்ன பின்ன இருக்கும் அதான்’ என.. நினைப்பில் அமைதியாக வேலைகளை பார்த்தான்…

“ஆயிரம் வாசல் இதயம்…

அதில், ஆயிரம் எண்ணங்கள் உதயம்…

யாரோ வருவார்…

யாரோ இருப்பார்…

வருவதும் போவதும்… தெரியாது…” 

Advertisement