Advertisement

உன் வருகை என் வரமாய்…6

“கண்ணை கொஞ்சம் திறந்தேன்…

கண்களுக்குள் விழுந்தாய்….

எனது விழிகளை முடிக் கொண்டேன்..

சின்னசிறு கண்களில் உனை சிறையெடுத்தேன்….”

வர்ஷினி இன்னமும் தன் கண்களை கசக்கி கசக்கி எதையோ செய்து கொண்டிருப்பதை பார்த்த.. கரண்ட் கம்பத்தில், திடிரென கரண்ட் கட் ஆகியது…

அப்படியே அமர்ந்து கொண்டான்… மூளை முழுவதும்… சட்டென அவளில், அமிழ்ந்தது போல எண்ணம்.. அமர்ந்துவிட்டான் திண்ணையில் ‘நான் எதுக்கு சொல்லணும்… அவளுக்கு, யாரோ சொல்லட்டும்.. நான் ஏன் சொல்லணும்…’ என நொடியில் மாறியது மனம், மூளை எல்லாம்…

அப்போதே தனது போனிலிருந்த போட்டோவை… சரவணனுக்கு அனுப்பி வைத்துவிட்டு… உள்ளே குரல் கொடுத்தான் “பர்வதம்… சர்ருகிட்ட பேசு… போட்டோ அனுப்பிட்டேன்…” என்றான்.

“சரி “ என்றவள் அவனை பாராமல் தன் வேலையை பார்க்க தொடங்கினாள். அவனும் பட்டென நகர்ந்தான் எப்போதும் போல… ‘ப்பா… இனி பக்கத்தில் போக கூடாது’ என முடிவு செய்து கொண்டான் அந்த இளமையான பிரம்மச்சாரி..

அடுத்தடுத்த நாட்கள் கரையை கடக்கும் புயலேனவே நகர்ந்தது அனைத்திலும் வேகம்… பத்திரிகை.. அழைப்பு என அதற்கு மட்டுமே ஆத்மநாதணும் பானுமதியும் சேர்ந்து சென்றனர்.

விஜயா அத்தை, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்.. வீட்டில் சமையலுக்கு ஆள் ஏற்பாடு செய்தனர்.. முதல் திருமணம்… சிறப்பாக செய்தனர்..

அப்போது பேசியதுதான் அதன் பின் பெண், பேசவில்லை.. சுப்புவும், அதை பெரிதாக எடுக்கவில்லை… பெண்ணிடம் போன் இல்லை என்றார்கள்.. தம்பி வீட்டுக்கு வரவே நேரமானது என்றார்கள்.. மேலும் சுப்பு இதையெல்லாம் எதிர்பார்க்க வில்லை அதனால், பெரிதாக தெரியவில்லை..

ஆனால்… கண்ணில் விழுந்த தூசியாக.. மனதின் ஓரத்தில் வர்ஷினி உறுத்திக் கொண்டே இருந்தாள்… அவளுடன் பேச வேண்டும் என்று ஏதோ ஒன்று அவனை நச்ச தொடங்கியது… இப்போது தோட்டத்திற்கு சென்றால்.. அவள் வீட்டில் இருக்கிறாளா என அவன் கண்கள் தேடியது…

ஆனால், அவள் வெளியே வருவதேயில்லை… எத்தனை வருட படிப்பினை.. வர்ஷினிக்கும், எதோ சொல்லியது போல அவளின் மனம். எனவே, ஒதுங்கிக் கொண்டாள்.. அவன் வரும் நேரங்களில் இப்போதெல்லாம்.

பூண்டு சட்னி… கட்லெட்… எடுத்து வரும் அவளின் கைகளை காணவே முடியவில்லை அவனால். செண்பா, மட்டுமே டீ போட்டு தந்தார்… மோட்டார் ரூம் லைட் தன் போல் ஒளிர்ந்தது…

அவளின் ஒதுக்கம் அப்பட்டமாய் தெரிய… கௌரவம் பார்க்கும் சுப்புக்கு புரியாதா என்ன, இவனும் சத்தமில்லாமல் வந்து போக தொடங்கினான்.

#$#$#$#$#$#$#$#$#$#$

வர்ஷினிக்கு, சரவணன் அன்று இரவே அழைத்தான்… மாப்பிள்ளையை பற்றி விசாரித்து இருந்தான்.. “ஒன்றும் பெரிதாக குறையில்லை.. நீ தாரளாமா ஒத்துக்க, உன்ன நல்லா பார்த்துப்பான்… அவனுக்கு நான் கியாண்டி “ என்றான் விளம்பர பாணியில்..

அதன்பிறகு கிரிக்கு போட்டோ அனுப்பினாள்.. விவரம் எல்லாம் பானுமதி சொன்னார். அவரே “சுப்பு கல்யாணத்துக்கு, கூப்பிட்டிருக்கோம்… மாப்பிள்ளையும் வருவாரு… அன்னிக்கே பேசிடுங்க ரெண்டு பேரும்.. அதுவரைக்கும் பேச வேண்டாம்… நேரில் பார்த்து முடிவு செய்துக்கலாம்… டா தங்கம்” என்றார் வர்ஷினியிடம்.

“த்த… நீங்க சொல்ற மாதிரி செய்துக்கலாம்… எனக்கு நோப்ரோப்ளம்…” என்றாள். ஆக மனதை கட்டுபடுத்த தெரிந்த சுப்பு, தன் கொள்கை தவிர அனைத்தையும் தள்ளி வைக்கும் வர்ஷினிக்கு நடுவில்.. அந்த சலனம்.. காணாமலே போனதோ..

ம்…. இன்று சுப்பு, திருமணத்திற்கு துணியெடுக்க சென்றனர் பானுமதி தம்பதி. பானுமதிக்கு, எப்போதும் போல கைபிடிக்க வர்ஷினி தங்கம் உடன் சென்றாள்…

சுப்புவின், கடைசி அத்தை வரவில்லை… மற்ற இரண்டு அத்தைகளும் வந்திருந்தனர்.. இவர்கள் இருவரும், ஒரு, இருவது கிலோ மீட்டர் சுற்றளவிலேயே இருப்பதால்.. வருவதும், போவதும் சகஜம்தான்.

பெண் வீட்டினர் முன்பே வந்திருந்தனர்… அவர்களின் தாய்மாமா அத்தை என பெரிய கூட்டத்தோடு வர… பெண் வரவில்லை.. பானுமதிக்கு கோவம்தான் வந்தது… காரணம் ‘அவளுக்கு பிரியட்ஸ்’ என்றனர்.. பெண் வீட்டினர்.

பானுமதி “உங்களிடம் கேட்டோமே… தேதி ஒத்து வருமான்னு, என் பையனே வந்திருக்கான்.. நீங்க சும்மாவாது கூட்டி வந்திருக்கலாம்” என்றார் மனதை மறையாது.

ஒன்றும் சொல்ல முடியாமல் பெண் வீட்டினர் கேட்டுக் கொண்டனர்.. சுப்புக்கு, இப்போதுதான் முதல் முறையாக ‘ஏதோ…’ என மனம் கணக்க தொடங்கியது., அவர்களின் முகங்களை பார்த்து.

இத்தனை நாள், ‘பெண்’ என்ற ஒன்று அமைத்தால் போதும் என்ற நிலையில் எதையும் பற்றி கவலை படாமல்… பெண் பார்த்தவன்… இப்போதுதான் அவர்களை ஆராய தொடங்கினான்.. அதுவும் போனில் கூட பேச்சு இல்லையே… அத்தோடு அவள் வரவும் இல்லையே எனும்போது ஒரு கலக்கம் இயல்பாய் வருவதுதானே.. அப்படிதான்…

‘அந்த தம்பியிடம்’ மெதுவாக பேச்சு கொடுக்க தொடங்கினான்.. ‘என்ன படிச்சாங்க உங்க அக்கா… வேலைக்கு போனாங்களா’ என கொஞ்சம் நிற்க வைத்தே கேள்வி கேட்டான்..

சுப்பு நினைத்தது போல… எல்லா பதிலும், முன்னுக்கு பின் முரணாகவே வந்தது.. சுப்புக்கு மனதே சரியில்லை… கண்மூடி சாய்ந்தான், அந்த துணி கடை நாற்காலியில்.. ஓய்ந்து போட்விட்டான்… உறுத்த தொடங்கியது மனம்..

எப்படி கணக்கு போட்டாலும் எங்கோ இடித்தது.. எப்படி மாற்றி யோசித்தாலும் விடையும், வழிமுறையும் வேறு வேறாக அவன் கணக்கில் கிடைக்க.. ஓய்ந்தே போனான்…

வர்ஷினி ஒரு ஓரமாகதான் நின்றிருந்தாள்… பானுமதியையே ஆட்டாத்தில் சேர்த்துக் கொள்ளாத கூட்டம்.. வர்ஷினியை, எப்படி சேர்க்கும். எனவே, எப்போதும் போல.. தன் அத்தைக்காக வந்தவள்.. ஒதுங்கி நின்று போன் பார்க்க தொடங்கினாள்..

பத்து நிமிடத்திற்கு ஒரு தரம்… ‘நம்மை விட்டு போயிட போறாங்க…’ என  முகம் நிமிர்த்தி பார்த்தால் போல… அவளின் ஐந்தாவது நிமிர்த்தலில் சுப்புவின், ஓய்ந்த தோற்றம் பார்க்க ‘பார்ரா… கரண்டு கம்பத்துக்கு… சந்தோஷிய பார்க்கலைன்னு… எவ்வளோ அப்செட்…‘ என கலாயித்தபடியே நின்றிருந்தாள்.

என்ன நடந்தது என புரியாமல் இப்போது நிமிர்ந்தான் சுப்பு… கண்கள் தன்போல் யாரையோ தேடியது… அவன் மூளையும் இப்போது செய்வது தெரியாது, அந்த தேடல் பார்வை வழி, பார்க்க… இப்போது அவள்… அந்த தம்பியுடன் பேசிக் கொண்டிருந்தாள்…

வர்ஷினியின் செல்லுக்கு இப்போது முதல்முறை… மெசேஜ் செய்தான்.. சுப்பு. “கேளு… அவன்கிட்ட, சந்தோஷிக்கிட்ட பேசலாமான்னு கேளு…” என்றான்.

சுப்புக்கு அந்த நொடி, தன்னையே அருவேருத்துக் கொண்டான்.. ஏன் இப்படி சந்தேகம் எனக்குள்.. என போராடிக் கொண்டான்.. யாரிடம்தான் சொல்ல முடியும் அவனின் பரிதவிப்பை… இது, பெண் அமையவில்லையே என்ற நிலையை விட கடினமாகத்தான் இருந்தது…

என்னவென்றே தெரியா பூதமாக… அவனின் மனம் அல்லாட தொடங்கியது… எப்போதும்.. ஒதுங்கியே இருப்பவனுக்கு… இதில் ஒதுங்க முடியவில்லை.. ஆனால், இவனின் நிலை வர்ஷினிக்கு புரியவில்லை போல, புரிந்துகொள்ள நினைக்கவில்லை.

பொதுவாக பேசினாள் அந்த தம்பியிடம்… சுப்புவின் மெசேஜ் பார்த்து எரிச்சல்தான் வந்தது… ‘நான் ஏன் கேட்கணும்’ என. எப்போதும் சுப்புவுடன் ஒன்றமுடியாது அவளால்.. சுப்புவும் அவனின் அப்பாவையும் எப்போதும்  தள்ளி வைத்தே பழக்கம் அவளுக்கு அதனால் கண்டுகொள்ளவில்லை சுப்புவை. ஆனால் சுப்பு இப்போதும் குறுகுறுவென அவளையே பார்த்திருனான்.. அவளின் பதில் மெசேஜ்க்காக..

அந்த கடையின் ஓனர்… இவர்களிடம் பினான்ஸ் வாங்குபவர்.. இப்போதுதான் கடைக்கு வந்தார் போல.. சுப்பு, அங்கு அமர்ந்திருப்பதை பார்த்து, அருகில் வந்தார்…

சுப்பு, இருந்த குழப்பத்தில் ஏதும் பேசாமல், லேசாக சிரித்து.. தன் அப்பாவை கைகாட்ட.. அவர்தான் “பையன் கல்யாணம், அதான்.. துணியெடுக்க வந்திருக்கோம்” என கலையான சிரித்த முகமாக சொன்னார்.

அதன்பின் தடபுடலான கவனிப்பு அவர்களுக்கு. சுப்புக்கு, அமர முடியவில்லை… மனம் அவனின் சம்மதிமில்லாமல் அதிர தொடங்கியது… இது நடக்குமா… நீடிக்குமா என போராட தொடங்கினான்.

ஊருக்கே பத்திரிகை வைத்தாகிவிட்டது… இப்படி பார்க்கும் ஒவ்வருவருக்கும்.. விஷயமும் சொல்லபடுகிறது.. கையில் பத்திரிகையுடந்தான் வந்திருந்தார் ஆத்மநாதன்..

அந்த உரிமையாளருக்கும் அவர்களின் அறையில் சென்று பத்திரிகை வைக்க… சுப்புக்கு பழைய கால நினைவுகள்.. பெண்ணே கிடைக்காத நினைவுகள்… கிடைத்தும் இப்படி.. ஒரு சந்தோஷமில்லா.. திருமண நிமிடங்கள் என அந்த ஏசி அறையிலும் வியர்த்து போனான்.

நேரம் சென்றது.. பானுமதி எப்போதும் போல, இவளுக்கு ஒரு பட்டு புடவை எடுத்தார்… அதை சுற்றி அவர்கள் நாத்தனார் எதோ கேட்க.. பட்டென.. தன் மகனுக்கு துணி பார்க்க சென்றுவிட்டார்..

Advertisement