Advertisement

உன் வருகைஎன் வரமாய்….4 (2)

வர்ஷினி, அதெல்லாம் காதில் வாங்காது “வா சரு… சாப்பிடலாம்” என்றவள் அவன் கையை பிடிக்க..

“இரு, வண்டிய துடைக்க மாட்டியா… பாரு… தூசி… இப்படிதான் ஓட்டிட்டு போறிய.. சாவி எடு” என்றான் கோவமாக..

வர்ஷினி “ச்சு… ஆரம்பிச்சுட்டியா… வா, சாப்பிடலாம்.. அப்புறமா… ஸ்டார்ட் மியூசிக்…. ஓகே…” என்றாள்.

முறைப்பா பார்வையா என தெரியாத பார்வை பார்த்து “நீ போய் சாவிய எடுத்து வா” என்றான்.

இவள் உள்ளே வர… செம்பா வந்து “வாங்க தம்பி…” என முகமன் கூறி உள்ளே வந்தார். இப்படியாக அவளை விரட்டியபடியே, அவன் அந்த வண்டியை துடைத்து முடித்துதான் உள்ளே வந்தான்..

செண்பா அங்கு பூந்தோட்டத்துக்கு சென்றுவிட்டார். சமையல் வர்ஷினிதான்.

அதற்குள் கிரியும் எழுந்துவிட… காலை உணவை, பேசியப்படியே உண்டனர் மூவரும். பொதுவான பேச்சுக்கள்.. படிப்பு, வேலை.. கிரியின் அடுத்த படிப்பு என எல்லாம் பேசினார், அவர்களை இப்படி உரிமையாய் குடைந்து குடைந்து கேள்வி கேட்பவன் சரவணன் ஒருவனே… எனவே பவ்யமாக பதில் சொன்னான் கிரி…

வர்ஷினியிடமும் அதுதான் கேட்டான் “என்ன இப்படியே சின்ன பிள்ளைக கூடவே விளையாடி… வாழ்க்கைய ஓட்டிடலாம்னு பார்க்காத… UG ஏதாவது பண்ணு” என்றான்.

“ம்… ம்….. என்னால டென்ஷன் ஆக முடியாது ப்பா, இதே போதும் எனக்கு” என்றாள் சலிப்பான குரலில்.

“சோம்பேரி…… இப்படி ஒரு லேசிய நான் பார்த்ததேயில்ல…. “ என திட்டிக் கொண்டிருந்தான்.. இன்னும் சுகமாக கேட்டபடி… உண்டு கொண்டிருந்தாள் வர்ஷினி.

அவளின் மன அழுத்தம் எல்லாம் சரவணின் அக்கரையில் கரையும்… இப்படி அவள் இருந்தாலும்… மனதுள் நாளை என்னவாகும்.. தம்பி எப்படி படிப்பான்.. வேலை அமையுமா இவன் படிப்புக்கு, எனக்கு திருமணம் அமையுமா.. நல்ல துணை அமையுமா, நாங்களும் இங்கு சிறப்பாக வாழ்வோமா என தூங்கும் நேரத்தி அவளின் மனம் படும் பாடு.. அவள் மட்டுமே அறிவாள்.

எல்லோரு இருக்கின்றனர்தான்.. ஆனால் அவர்களுக்காக கவலைப்பட.. பெற்றோர் இருக்கின்றனர்.. ஆனால் எங்களுக்காக, நாங்கள் மட்டுமே இருக்கிறோம் என்ற எண்ணம் அவள் மனதில் வந்து.. பலவருடங்கள் ஆகிறது. அது சரவணனுக்கு புரியும்.. அதனை போக்க அவன் பல நேரம் முயன்றிருக்கிறான்… பலன் எப்போதும் .1%தான்.

உண்டுமுடித்து சரவணன் “சரி, கிரி நான் கிளம்பறேன்… “ என்றான் “சரி மாம்ஸ்” என்றவன், உள்ளே சென்றுவிட்டான் கிரி.

வர்ஷினி “ஏன், இப்போதானே வந்த… “ என்றாள்.

“இல்ல, அண்ணன் கிட்ட இன்னும் பேசல, போய் என்ன ஏதுன்னு கேட்கணும் வரேன் பாரு, நைட் இங்கதான் டின்னர்.. சரியா, பாய் “ என்றவன் கிளம்பினான்.

சரவணன் வந்தவுடன்… பானுமதியும் சுறுசுறுப்பானார்… மதியம் சமையல் நடந்து கொண்டிருந்தது.. சுப்பு எப்போதும் காலையில் நடைபயிற்சியாக தோட்டத்துக்கு செல்லுவான்.

என்ன வேலைகள் இருக்கின்றன என அங்கிருக்கும் கவலாளியுடன் பேச்சு செல்லும்… காலையில் வேலையாட்கள் எத்தனை மணிக்கு வருவார்கள் என்ன விவரம் என பேச்சு முடித்து அவரை அனுப்பிவிட்டு… வஜ்னையும், பைரவனையும் அங்கிருந்து கூட்டி வந்து கட்டி வைத்துவிட்டுதான். தனக்கான காலை காபியே.. உள்ளே செல்லும் அவனுக்கு.

அதன் பிறகு குளித்து கிளம்பி… நேரே பினான்ஸ்.. ஏழு நபர்கள் சேர்ந்து கூட்டாக நடத்துவது.. கொஞ்சம் பெரியகைதான்.. எனவே, இளம் வயதாய் இருப்பதால் பொறுப்பு முழுவதும் இவனுடையதுதான்.

மதியம் வரை… அவனுக்கு வட்டி கேட்கவே நேரம் சரியாக இருக்கும்… பொறுமையாக பேனில் பேசி, செய்து.. வாங்க வேண்டும்.. கலெக்ஷன் நபர்கள் உண்டுதான். ஆனாலும்.. ஓவ்வரு தொகையும் பெரியது. அசந்தால்.. முழுவதும் காலி.. எனவே சுப்புவின் நேரடி தொடர்பில் இருப்பர் அனைவரும்.

மதியம் வந்தால் உண்டு முடித்து… நேரே தோட்டம் செல்லுவான் தன் தந்தையை உணவருந்த விடுவிப்பான்.. அப்போதே.. பூக்கள் வண்டியில் ஏற்ற வேண்டிய கணக்குள்.. அதை தொடந்த வேலைகள் என ஐந்து மணிக்குதான் மீண்டும் வீடு வருவான்.. சற்று அசதியா ஈசி சேரில் சாய்ந்து ஒரு குட்டி தூக்கம் அதன்பின் திரும்பவும்… வர்ஷினியின் வீடு தொடங்கி ஒரு சுற்று சுற்றி ஒன்பது மணிகெல்லாம் உறங்கும் பழக்கம் கொண்டவன்.. ஆக இப்போது அவன் பினான்ஸ்சில் இருக்க, சரவணன் போன் செய்து “வா… ண்ணா வீட்டுக்கு” என்றான்.

“டேய்… தீபாவளி நேரத்துல… ஏண்டா படுத்தற… நீ இங்க வா… ஒரு இடத்துக்கு பணம் கொண்டு போய் கொடுக்கணும்… வா, எல்லோரும் லீவ்… நானும் ஒரு இடத்துக்கு போகணும்… வா, வந்துட்டு போ” என்றான் அவசரமான குரலில், அவனையும் சேர்த்து வேலைக்கு இழுத்துக் கொண்டான்.

ஆக பானுமதி, சரவணன் வந்தால், அவனிடம் பேசலாம் என நினைத்து அவசரமாக சமையல் முடித்து அமர்ந்திருக்க சரவணனும் பைனான்ஸ் கிளம்ப.. “போங்கடா… ஒரு பிள்ளைய பெத்துக்காம போயிட்டேன்.. என் பேச்ச காது கொடுத்தாவது கேடிருப்பா…” என புலம்பியபடியே மீண்டும் உள்ளே சென்றார்.

இப்படியே நேரம் சென்றது… பசங்க இருவரும் மதியம் உணவுக்கு வரவில்லை.. தன் கணவருக்கு மட்டும் உணவை கொடுத்து விட்டார் தோட்டத்துக்கு. மீண்டும் கவலை பானுமதிக்கு.

அவர் கண்ணசரும் நேரம் அவரின் போன் ஒலிக்க தொடங்கியது.. “ஹலோ… யாருங்க” என்றார். முழுதாக பத்து நிமிடம் பேசினர்.. போனை வைத்தபிறகும் அவர் முகத்தில் சந்தோஷத்தின் சாயல், நிரம்பியிருந்தது.

வர்ஷினியின் தூரத்து மாமா ஒருவர் அழைத்திருந்தார்.. அவர்களின் உறவில் வர்ஷினிக்கு ஒரு வரன் இருப்பதாகவும், அடுத்த இரண்டுநாள் சென்று அவளின் ஜாதகத்தை அனுப்புமாறும் சொல்லி வைத்தார். அதுவே பானுமதியின் மகிழ்ச்சிக்கு காரணமாக… வர்ஷினியின் ஜாதகத்தை தேட தொடங்கினார். மகன் கவலை போய்… வர்ஷ்னியின் சந்தோஷம் வந்தது அவருள்..

#$#$#$#$#$#$#$#$#$

இருட்ட தொடங்கவும்… வாணவேடிக்கைகள்… கண்களையும் காதுகளையும் நிறைக்க தொடங்கியது.. வர்ஷிணியும் கிரியும்… அங்கிருந்த கயித்து கட்டிலில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

எட்டுமணி போல் சுப்புவும், சரவணனும் வீடு வந்தனர்.. வரும் வழியிலேயே சரவணன், வர்ஷினியின் வீட்டில் இறங்கிக் கொண்டான்..

சுப்புவிடம் “நீயும் வாண்ணா.. “ என அழைக்க…

“இல்ல டா… அப்பாகிட்ட கொஞ்சம் பேசணும்.. நாளைக்கு எப்போதும் போல அங்க சாப்பிட வரசொல்லு அவங்கள” என கூறியபடி வண்டியெடுத்து சென்றான்.

சரவணனுக்கு தோன்றியது ‘ஏன்தான் இப்படி தனக்குள்ளேயே ஒடுங்கிக்கிரானோ’ என ஆனால், அதற்குமேல் அவனாலும் அருகில் நெருங்க முடியவில்லை..

சரு.. உள்ளே வந்ததும்… இவர்கள் வெளியே, கயித்து கட்டிலில் அமர்ந்திருக்க.. கிரி “வாங்க மாம்ஸ்…” என்றான். வர்ஷினி “டீ போடவா…” என்றாள்.

அப்படியே ஈவ்னிங் பொரி வருத்திருந்தால் வர்ஷினி.. அத்துடன் சர்ருக்கு டீயும் வர… அப்படியே அமர்ந்து பேச தொடங்கினர்… பொதுவான பேச்சுகள்… சரவணின் ஸ்டேட்ஸ் பற்றி பேச்சு வந்தது, அவனுடையதில் இப்போதெல்லாம் காதல் வசனம் நிறைய வருகிறது என வர்ஷினி சொல்லிக் கொண்டிருக்க… சர்ரு “ஏதோ, நம்ம வீட்டில் என் ஒருத்தனுக்காவது அந்த வாசனையாவது.. வரட்டும்…” என நழுவினான். கிரியும் அருகில் இருப்பதால் வர்ஷினி ஏதும் கேட்காமல் அமைதியாகிவிட்டாள்.

அங்கு… பானுமதி, தன் கணவரிடம்… “நம்ம வர்ஷினிக்கு, அவங்க சொந்தத்திலிருந்து ஒரு வரன் வந்திருக்கு சொன்னங்கா… ஜாதகம் கேட்க்குறாங்க… ப்பா, அந்த பிள்ளைக்கும் ஒரு நல்ல இடம் அமைந்தால் சரிதான்…” என இன்னும் எதோ பேசியபடியே இருந்தார்…

அப்போதுதான் சுப்பு தன் தந்தையுடன் அமர்ந்து யார் யாருக்கு பணம் கொடுத்தான் என கணக்கு சொல்லிக் கொண்டிருந்தான்…

இங்கு, அடுத்து கிரியும், சருவும் வர்ஷினியின் சமையலை தொடங்கி அவளின் டீச்சிங் வரை கலாய்த்து தள்ளினர்.. சரு “ஏன், பாரு, இப்படி சூப்பரா சமைச்சு, சாப்பிட்டு போய்… அங்க எப்படி பிள்ளைகளுக்கு பாடம் எடுப்ப… தூக்கம் வாராது உனக்கு….

அதுவேற… ப்..பெரிய ஸ்கூல்… எப்படி உங்களால.. இவ்வளவு விழயங்களை செய்ய முடிகிறது… ” என கிரி மைக் போல் பிடித்திருக்க… சரவணன் முகத்தை சீரியஸாக வைத்து கேட்டுக் கொண்டிருந்தான்…

வர்ஷினி “டேய் படுத்தாதீங்க ரெண்டுபேரும்… எனக்கு வேலையிருக்கு..” என அவள் பல்லை கடித்து சொல்ல.. அதற்கும் சர்ரு “அதான் மேடம்… உங்களால எப்படி இவ்வளவும் செய்ய முடிகிறது” என அதே பாணியில் கேட்க… கிரி சிரிக்க… வர்ஷினி மிரட்ட தொடங்கினாள்… “டேய்… சோறு வேணுமா வேணாமா…” என.

கிரி “மாம்ஸ் சரண்டர்… இந்த சின்ன வயசுல… என் அக்கா மாதிரி யாருக்கு சமைக்க வரும்… போங்க மாம்ஸ்.. நீங்க, ரொம்ப கிண்டல் பண்றீங்க…” என்றான் நல்லவனாக.

சரவணன் “டேய்… டேய்… நான் மட்டும் என்ன சொன்னேன்… அவ நல்லா சமைப்பானுதானே சொன்னேன்..” என்றான் பாவமாக.

கிரி.. “நீங்க, அவ பாடம் நடத்துராளா… தூங்கராளான்னு கேட்டீங்க” என்றான் வம்பாய்..

சர்ரு “இல்ல டா… அது அப்படி இல்ல… சமையலே இப்படி செய்யரவ, பாடம் எவ்வளோ சூப்பரா எடுப்பான்னு சொன்னேன் டா” என்றான்… வர்ஷினிக்கு அழுகையே வந்தது… இவர்கள்… என்ன சொல்றாங்க என…

அந்த இரவு நேரத்தில்… நட்சத்திர கூரையில்.. தென்னங்கீற்று ஓசையில்.. கள்ளமில்லா உறவுகளின்.. பேச்சு சத்தம்.. தோட்டம் முழுவதும் நிரம்பி… அங்கிருந்த பெரிய வீட்டில்.. மொட்டைமாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த… ஒருவன் மனதில் இனம் புரியா… ஏக்கத்தை கொடுத்தது… அவனுக்கே தெரியாமல்..

“நன்ன்னனா…. நானா…

சிரிக்கும் சொர்க்கம்…

………… ………….. ………..

தங்கட்டு எனக்கு மட்டும்… ஒகே….

……………  ………… …………

தேவை… பாவை… பார்வை….

நினைக்க வைத்து…

…………… ……………..

நெஞ்சில் இன்று…. நெருங்கி வந்து…

…………….. …………………  ……………………..

மயக்கம் தந்தது யார்… தமிழோ.. அமுதோ… கவியோ…

Advertisement