உன் வருகை என் வரமாய்…15(2)

செண்பா தலையில் அடித்துக் கொண்டார்.. “யாராவது காதில் இது விழுந்தது… எல்லாம் உன்னதான், தப்பா நினைப்பாங்க… நீங்க விளையாட்டுக்கு பேசுறீங்கன்னு யாருக்கு தெரியும் வர்ஷிம்மா” என்றார்.

வர்ஷினி “அதெல்லாம் பார்த்துக்கலாம் கவலையே படாதீங்க… யாரு வரபோறா இங்க… “ என அவரை சமாதானம் செய்தாள்.

சுப்புக்கு வார இறுதிநாள் பரபரப்பு… எனவே அவன் இதனை கண்டுகொள்ளவில்லை… கிளம்பிக் கொண்டிருந்தான்.. பாவம் கிரி அமைதியாக இருந்தான்.

சர்ருவை, எதிர்பார்த்த பானுமதி.. அவன் வரவில்லை எனவும்.. எப்போதும் போல, அங்கு ஒரு டிபனை செய்து வைத்துவிட்டு… சத்தமில்லாமல் இங்கு வந்துவிட்டார்.

சுப்பு உண்டு முதலில் கிளம்பிவிட்டான். பின்தான் பொறுமையாக சரவணன் கிரி உண்டு, அது ஜீரணமாக வர்ஷினியை வம்பிழுத்து… சப்போர்ட்டுக்கு வந்த பானுமதியையும் சேர்த்திழுத்து… ஒரு வழியாக மதியம் நெருங்கும் நேரத்தில் டவுனுக்கு சென்றனர்.

மற்றவர்கள் எல்லோரும் உண்டு அடுத்த வேலையை பார்க்க தொடங்கினர். அன்றைய பொழுது இப்படியே வார்த்தையும்.. வம்புமாக நகர்ந்தது.

மறுநாள் அதிகாலை… நன்றாகவே விடிந்தது… சமையல் சென்று கொண்டிருந்தது… ஆத்மநாதணும், விஜியும் வந்தனர். பானுமதி இரவு இங்கேயே தங்கிவிட்டார். எனவே அண்ணன் தங்கை இருவரும் அதிகாலை வந்தனர்.

வர்ஷினி.. குளித்து… அழகான நீல பட்டுடுத்தி.. “வாங்க மாமா, வாங்க சித்தி” என்றாள். இப்போதுதான் வர்ஷினியை பார்க்கின்றனர் இருவரும்… திருமணத்தன்று பார்த்தது.. அதன்பிறகு பார்க்க்கவில்லை…

அழகாக இருந்தாள்.. சற்று பூசினார் போல் தோன்றியது.. முகத்தில் ஒரு தேஜஸ்… தோற்றத்தில் நிமிர்வு என வர்ஷினி என்ற.. தாய் தந்தையற்ற பெண்ணின் முகம் தெரியவில்லை அவர்களுக்கு.. தங்கள் வீட்டு மருமகள்… தன் மகனின் மனைவி என்ற முகம்தான் தெரிந்தது.

அவர்களும் ஏதும் பேசாமல்.. அமர்ந்தனர்… காபி, டிபன் என எல்லாம் வர்ஷினியே பார்த்து பார்த்து கவனித்தால்…. எங்கும் குறையில்லை. சுப்பு அவளை பார்வையால் கூட தீண்டவில்லை எப்போதும் போல, அலட்டாமல் வந்தவர்களை வாவென கேட்டு தன் வேலையை பார்த்திருந்தான்.

மற்ற அத்தை பெரியப்பா என எல்லாம் வந்தனர்… காலைவுணவு முடிந்து… விழா தொடங்கியது.. சுமங்கலிகள்.. அவளை அமரவைத்து.. நலங்கு வைத்து… சுப்பு தந்த செயின்னில்… மாங்கல்யத்தை கோர்த்து… அணிவித்தனர். பின் இருவரையும் சேர்த்து.. ஆலம் சுற்றி விழாவை நிறைவு செய்தனர்.

மதியம் உண்டு முடித்து.. கிளம்பினர் பங்காளிகள், அத்தையின் கணவர்கள், பிள்ளைகள் என அனைவரும்.. இப்போது ஆத்மநாதனின் உடன் பிறந்தோர்.. வீட்டு உறுப்பினர் அவ்வளவுதான்.. மதியம் உண்டு முடித்து… அமர்ந்திருந்தனர். எப்போதடா என நேரம் பார்த்திருந்தனர்… போல்.. அக்கா தங்கைகள்…

ஆத்மநாதன், சுப்புவிடம் “சரிப்பா… நான் அங்க போய் படுக்கிறேன்… “ என சொல்லிக் கொண்டிருந்தார்.

சுப்பு “ஏன் ப்பா, இங்கேயே.. படுங்க… “ என ஏதோ விவரம் சொல்லிக் கொண்டிருக்க…

இரண்டாவது அத்தை “பார்த்தியா… நம்ம வீடுன்னு.. உங்க அப்பாவால இருக்க கூட முடியலை… நீ எப்படிடா இங்க இருக்க…” என்றார்.

வர்ஷினி அப்போதுதான் வேலையாட்களுக்கு… உணவை எடுத்து கொண்டிருந்தாள்.. நல்ல சத்தமாக… “எல்லாம் எங்க தப்புதான்… அவசரத்துக்கு கல்யாணம் செய்து வைத்தோம் இப்போ அனுபவிக்கிறோம்” என்றார். வர்ஷினிக்கு கண்கள் உடைபெடுக்க தொடங்கியது… முன்போல் யாரும் இல்லை தனக்காக பேச எனத்தான் தோன்றியது.

சுப்பு, அமைத்தியாகினான் பேச்சை வளர்க்க விரும்பவில்லை.. இது நானும் அப்பாவும் சமந்தபட்டது.. இதை பொதுவில் பேசினால், காயம் பெரிதாகும் எனவே பேச கூடாது என இவன் தன் தந்தை பார்த்து “ப்பா… வாங்க நம்ம வீடுதானே… நீங்க ஏன் சங்கட படுறீங்க… வாங்க” என்றான் கைபிடித்து உரிமையாய்.

அந்த அத்தை மீண்டும் “நீ அவர் கையை விடுடா… அவருக்கு இங்க.. சரிவராது, விஜி நீ அண்ணன் கூட்டி போ” என்றார்..

அவ்வளவுதான் சரவணனுக்கு கோவம் வந்தது.. “அத்த… இது நம்ம வீடுதானே… கொஞ்ச வருஷம் முன்னாடி வரைக்கும் இங்கதானே இருந்தோம்… என்ன சரிபடாது..” என்றான்.

அவரும் “வந்துட்டான் நல்லவன்… ஏன் டா அங்க, என் அண்ணன்.. பார்த்து பார்த்து அவ்வளோ பெரிய வீடு கட்டி வைச்சிருக்கார் பையனுக்காக… இங்க வந்து அவன் இருக்கான், அத கேட்க உனக்கு தெரியலை… எங்கிட்ட சத்தம் போடற” என்றார்.

சண்டை போட வேண்டும் என்ற நினைத்து பேசும் பேச்சு தீராது.. என்றும் தீராது… சுப்பு “நீ அமைதியா இரு சரவணா” என்றான்.

“நீ சும்மா இரு ண்ணா… ஏன், அவன் வந்தான்னு உங்களுக்கு தெரியாதா… அவன் ஒரு மாசமா இங்கதானே இருக்கான்… இப்போ வந்து கேட்க்குறீங்க, அதுக்கு காரணமே நீங்கதானே…” என்றான்… இவனும் சண்டைக்கு தயாராக…

பானுமதி “சரவணா அத்த, ஏதோ கோவத்தில் பேசுறாங்க… பெரியவங்கிட்ட இப்படிதான் பேசுவியா” என அவரும் அவனை அமைதிபடுத்த தொடங்க…

“சும்மா இரும்மா… “ என்றான்.

அத்தை “அதாண்டா ஏன்னு கேட்கறேன்… கல்யாண செய்து வைத்த எங்களுக்கு… நாள் பார்த்து சேர்த்து வைக்க தெரியாதா… “ என சொல்லி “அப்படி… அவ்வளவு முக்கியமா.. ஒன்ருமில்லாத பெண்டாட்டி” என்ற அர்த்தத்தில் ஏதோ வார்த்தையை விட்டார் அத்தை.

வர்ஷினிக்கு தாளவே முடியவில்லை… ஏதும் பேசவே இல்லை தன் கணவன் என்ற எண்ணம். அத்தோடு… எல்லோரும், பேசும் சரவணனையும், அடக்கவும் என்ன செய்வது என தெரியாதா.. அழுகை… இனி எனக்கு காலம் முழுமைக்கும் இப்படிதான் ஒரு பெயர் வருமோ.. என அழுகையோ அழுகை..

நான் ஒன்னுமில்லாதவளா.. என்ற எண்ணம் சுப்பு, பேசாதது எல்லாம் சேர்ந்து வர்ஷினிக்கு கோவம் ஏறியது… தன் கணவன் வாய் திறக்க மாட்டன் என தோன்ற… அவர்களுக்கு உணவினை எடுத்து கொடுத்துவிட்டு வெளியே வந்தாள்.

வர்ஷினியின் சிவந்த மூக்கும், வீங்கிய கண்களுமாக.. அவளின் நிலையை பார்த்தவுடன் உணர்ந்து கொண்டான் சுப்பு… கண்ணால், பேசாதே என்ற மொழி படித்து, வாயால் “பர்வதம்.. அப்பாக்கு அந்த பெட்டை தட்டி போடு” என அவளை வேலை ஏவி.. உள்ளே அனுப்பினான்.. கிரியின் அறைக்கு..

அவளும், தன் கணவனுக்கு ஏதும் பேச விருப்பமில்லை என தெரிந்து… கேவியபடியே எல்லாம் செய்தாள்.. பார்த்த சரவணனுக்கு கூட “என்ன இப்படி படுத்துறான்” எனதான் தோன்றியது.

விஜி, வர்ஷினி அழுதபடியே எல்லாம் செய்வதை பார்த்து ஒரு வன்மம் ‘வாயே திறக்கமாட்டேன்கிறா.. இவனும் அவளை இங்கே பேசவிடாமல் செய்கிறான்..’ என எண்ணி… “நீங்க வாங்க.. ண்ணா “ என ஆத்மநாதனின் கைபிடித்தார்… விஜி.

சுப்பு ஏதும் பேசாமல் நின்றான்.

ஆத்மநாதணும்.. இங்கு நடந்ததை வேடிக்கை பார்த்தாரே தவிர ஏதும் பேசவில்லை.. இப்போது சுப்பு அவரின் கையை விட்டுவிட்டான்.. இங்கு ஏதும் நடந்ததா.. என்ற பார்வை பார்த்து.. “ம்மா… கொஞ்சம் காபி தாங்க” என சொல்லி அமர்ந்து கொண்டான். நிதானம் வேண்டுமாக இருந்தது அவனுக்கு… இது உறவு சிக்கல்… எங்கு வெட்டினாலும்.. பாதிப்பு எனக்குதான் என மனம் சொல்ல.. அமர்ந்து கொண்டான்…

ஆத்மநாதனும், விஜியும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர். சரவணன், விஜி அத்தையிடம் திரும்பி “அவர ஏன், இப்போ இழுக்கிறீங்க… விடுங்க” என்றான்,

சுப்பு “சரவணா.. பேசாம இரு, அத்த… நீங்க கிளம்பிங்க… காபி நான் கொடுத்து விடுறேன்.. போய் படுங்க” என்றான் நிதான குரலில்.

மூன்று அத்தைகளைக்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது. இதுமாதிரி நேரங்களில் அண்ணன் ஆத்மநாதன் இடையிட்டு, ஏதாவது பேசுவார்.. அதை தொட்டு இவர்கள் பக்கம் சரியென ஆகும்.. பின் இவர்கள் சொல்லுவதுதான் சரியெனவே ஆகும்.

அண்ணன்.. ‘நீங்க சொல்றபடியே செய்யலாம் ம்மா’ என்றுவிடுவார். பானுமதி தள்ளி நின்றுகொள்ளவார்.. இதுவரை அப்படிதான் அந்த வீட்டில். இன்று முதல்முறை.. சுப்பு… கடைசி வார்த்தை பேசினான்..’கிளம்பிங்க’ என்பதாக.

இத்தனை வருடங்கள் தெரியாத.. சண்டையின் நுனி இன்று தெரிந்தது சுப்புக்கு… எனவே.. சுப்பு அமைதியாகிவிட்டான். அமைதியாக இருக்கும் தன் தந்தையை தூண்டி விடுவது… ஆக இப்போதும் அது தொடங்கவும்… சுப்பு, தன் மனைவியை கண்ணால் அடக்கி, தன் தந்தையையும் தன்னுடன் தக்க வைக்க பார்த்தான்… முடியவில்லை.. விட்டுவிட்டான். அமைதியாகிவிட்டான்.

சொந்தமே ஒரு வானவில்

அதன் வர்ணம் கொஞ்ச நேரம்…

பந்தமே முள்ளானதால்…

இந்த நெஞ்சில் ஒரு பாரம்…