Advertisement

உன் வருகை என் வரமாய்…15(1)

கிரியுடன் அரட்டை, முடித்து… சுப்பு வருவதற்கே நேரம் ஆனது… வர்ஷினி இருவருக்கும் இடையில் வராமல்.. சென்று தூங்கிவிட்டால்..

சரவணன் போன் செய்ததுமே.. பானுமதி “சரிப்பா.. என்னை, அந்த வீட்டில் விடு“ என சொல்லி சுப்புவுடன், கிளம்பினார் பெரிய வீட்டுக்கு.

சுப்புவும் சென்று.. சிறிது நேரம் எல்லோரிடமும் பேசிவிட்டு வந்தான்.. ஆத்மநாதன் யார் யாரை அழைக்கிறார் என சொன்னார்.. அவருக்கும் மகனை விட முடியவில்லை…

சுப்பு “போதும் ப்பா… பெருசா வேண்டாம்.. லேடீஸ் பங்க்ஷன்தானே… அளவா சொல்லுங்க… நம்ம அத்த, அவங்க பசங்க… இங்கிருக்க பங்காளி போதும்.. வேற வேண்டாம்.. வீட்டிலியே சமைச்சிகலாம்” என இவனும் சொல்லி வந்தான்.

ஆக தந்தை மகனுக்கு நடுவிலும் யாரும் வரவில்லை… இருவரும் தோதாக விளையாடினர். எங்கும்.. பார்வையால் கூட கேள்வி கேட்கவில்லை சுப்பு, தன் தந்தையை..

அவரும் அப்படியே.. தான், செய்தது தவறே இல்லையென்ற ப்பாவமே அவரிடமும். ஆகவே தந்தை எட்டடி.. குட்டி பதினாறடி… விளையாடினர். கோலத்தில் நுழைந்து, புள்ளியில் வந்தனர்…

விஜி அத்தை “சாப்பிட்டு போடா…” என்றார்.

பானுமதி சட்னி சாம்பார் எல்லாம் அங்கிருந்துதான் எடுத்து வந்திருந்தார்… இதில் எங்கு தான்போய் உண்பது என நினைத்து, “இல்ல த்த… அங்க, கிரி வந்திருக்கான்.. நீங்க சாப்பிடுங்க…. பைரவனும், வஜ்ரனும் இங்கதான் இருக்காங்க… “ என சொல்லி கிளம்பினான்.

விஜிக்கு ஒரு மாதிரி ஆனது… இவர்களின் நிழலில் இருப்பவர்.. அதனால் தன்னை மதிக்காமல் போய்விடுவார்களோ என எப்போதும் தன் அண்ணனிடம், தன் அண்ணி, பிள்ளைகளை ஒட்ட விடமாட்டார்.. மேலும் பிள்ளைகள் மேல் பாசம்தான். ஆனால், அது பயத்தினால் வந்த பாசமாக இருந்தது…

வார்த்தைகளில் அன்புக்கு பதில்… ஒரு அதிகாரம் இருக்கும்.. முதலில் சுப்பு, சரவணனுக்கு அது பழகியது.. வளர வளர… அதன் தன்மை புரிந்தது.. ஆனால் தந்தையை மீறி ஏதும் பேசமுடியாது… இன்னமும் விஜி அத்தைதான் எல்லாம், அந்த வீட்டில்.

இப்போதுதான் விஜி அத்தைக்கு… அன்பு என்பது.. போற்றும் இடத்தில்தான் என புரிந்தது. அதிகாரம் எதையும் தராது என உணர்ந்தார்.. மெல்ல அவனிடம் “நாளைக்கு காலையில் வாப்பா, சாப்பிட” என்றார். வாஞ்சையான குரல்.. வளர்த்தவர்.. கேட்கிறார்.. எனினும்..

சுப்புக்கு இது புதிதாக இருந்தது… ஏன் இந்த இளக்கம்… ஏதேனும்… தவறு நடக்குமோ.. வேலையாக வேண்டுமோ எனத்தான் தோன்றியது. இந்த குரலை அவனால் சட்டென மறுக்க முடியவில்லை.. மேலும் அடிக்கடி இது போன்ற அவர் பேசியதில்லை… வளர்த்தவர்… கேட்கிறார் தட்டமுடியவில்லை “த்த சரவணன் வரான்… வேலையிருக்கு… நாங்க… எல்லோரும் சண்டே நைட் இங்கதான் டின்னெர்” என பொறுமையாகவே பதில் சொல்லி கிளம்பினான்.

அவரும் முதலில் அப்படியா எனும்விதமாக பார்த்தார், பின் தன் அண்ணனை பார்த்துவிட்டு “சரி பப்பா” என்றார் நல்லவிதமாகவே..

இரவு உணவு நேரத்திற்கு வந்தான் சுப்பு. இப்போது உணவு முடித்து கிரியுடன் ஏதேதோ பேச்சு சென்றது.. வர்ஷினிக்கு அமர முடியவில்லை.. கண்ணை சுழற்றியது, படுத்துக் கொண்டாள் தங்களது அறையில்.

சுப்பு, இப்போதுதான் உள்ளே வந்தான்.. தன் தலையில் கை வைத்து… நிமிர்ந்து படுத்து, ஓவியமாக உறங்கிக் கொண்டிருந்தாள்.. அவனின் மனைவி.

சுப்புக்கு சிரிப்புதான் வந்தது… தூங்கு மூஞ்சி என திட்டியபடியே.. அருகில் வந்து அவளின் தூக்கம் கலைத்தான்… சின்ன சின்ன விளையாட்டோடு.. தொடங்கிய நேரம்… இன்பமாக கழிந்தது.. நடு நடுவே… “உன் தம்பிக்கு மட்டும் ஸ்பெஷல்… அப்போ எனக்கு, எனக்கு” என தன் தேவையை… வெட்கமே இல்லாமல் சொல்லி நிறைவேற்றிக் கொண்டான்.

சுப்பு நிறைவாய் இருந்தான்.. தலைவனாக உணர்ந்தான்.. கண்பார்த்து நடந்தாள் மனையாள்… அன்று… அவனின் படர்ந்த, தோளில் சாய்ந்த படி… தங்களின் ரகசியங்களை பேசிக் கொண்டிருந்தனர்.. சுப்பு “ஏன் டா, அம்மா உனக்கு… தாலி செயின் வாங்க சொன்னங்க… அதுக்கு ஆடர் கொடுத்தாச்சு…

உனக்கு என்ன வேணும்… என்னோட கிப்ட்டா.. “ என்றான்.. அவளின் கன்னத்தில் சற்றுமுன் தான், கடித்து சிவந்த இடத்தை வருடியபடியே…

வர்ஷினிக்கு இந்த வார்த்தை… பூரணத்தை தந்தது… என் விருப்பம் கேட்டு செய்வானா.. என் அப்பா போல… எனதான் முதலில் தோன்றியது. அவரும் அப்படிதான்.. தீபாவளி உடை எடுத்தால் கூட, என்ன கலர் வேண்டும் என கேட்டு எடுப்பார் பிள்ளைகளிடம்.. தன் கணவன் இப்போது கேட்டது.. அவரை நினைவு படுத்த… இன்னும் அவனின் தோளில் ஒன்றினால்..

ஏதும் பேசவில்லை, எதிர்பார்க்கவில்லை எதையும் அவள், அதனால் கேட்கவேண்டும் என தோன்றவில்லை… சுப்பு “சொல்லி டா” என்றான் அதே காதலான குரலில்.

“ம்… எனக்கு எதுவும் வேண்டாம்… ஆனா, என் அம்மா ஒரு நெக்செட் வைச்சிருந்தாங்க… ஏதோ.. டியூப்லைட் நெக்லெஸ்ன்னு சொல்லுவாங்க… அப்போ, நான் அதை கிண்டல் பண்ணியிருக்கேன்…

ஆனால்.. இப்போ… இப்போ… அது வேணும் போல இருக்கு…” என சொல்லி அண்ணாந்து தன்னவன் முகம் பார்த்தாள். கண்கள் லேசாக… மிக லேசாக கலங்கியிருந்தது…

“ஹேய் அவ்வளோதானே… யார் கிட்ட இருக்கு… அப்பாகிட்டயா.. கேட்டு வாங்கி தரேன்…. கண்டிப்பா வாங்கித்தரேன்…

இப்போ, நான் கேட்டேனே… என்னோட கிப்ட்டா என்ன வேண்டும்” என்றான் மீண்டும்…

தெரியவில்லை… ஒன்றுமே தோன்றவில்லை.. தன் அன்னை, தந்தை தவிர.. இப்போது சுப்பு, இதை தவிர வேறு தோன்றவில்லை இந்த ஷணம்… உதடு பிதுக்கினாள்… தெரியவில்லை என்பதாக…

ஏகாந்த இரவு… என்ன கேட்டாலும் வாங்கி தருகிறேன்.. என கணவன் கிறங்கி கேட்கிறான்… தெரியவில்லை என உதடு பிதுக்கும் மனைவி… வரங்கள் எல்லாம்… உரியவர்கே சேரும் போல…

சுப்பு… அந்த ஷ்ணத்தை ரசித்தான்… உண்மையாக உணர்ந்தான்… அவளை, குழந்தை… காத்துக்கொள்ள வேண்டும்.. இவளின் இந்த குழந்தைதனத்தை என எண்ணினான்.  இன்னும் ஆசையாக கை கோர்த்து பேசினான்.. நிறைய பேசினான்.. என்ன பிடிக்கும் கேட்டான்.. சற்று அதை வைத்து வம்பும் இழுத்தான்… அவளிடம் மட்டும். மெதுவாகவே கடந்தது அந்த இரவு அவர்களுக்கு…

சரவணன்… அதிகாலையில் தன் அண்ணனை அழைத்தான்… சுப்பு கிளம்பி சென்றான், பிக்கப் செய்ய.. அதில் வர்ஷிணியும் விழித்துக் கொள்ள.. அவளும் எழுந்து கொண்டாள்.. இப்படியே ஒவ்வருவராக எழுந்தனர், சர்ரு வருவதற்குள்..

ஏதும் கேட்காமல் தங்கள் வீட்டிற்கே கூட்டி வந்தான் சர்ருவை…

வீட்டிற்கு வந்ததும்.. முறையான வரவேற்புக்கு பிறகு… காபி வந்தது.. சுப்பு அமைதியாக குடித்துக் கொண்டிருந்தான்… சர்ருவும் கிரியும்தான் வம்பிழுக்க தொடங்கினர்… வர்ஷினியை..

சர்ரு “என்ன சூடே இல்ல” என்றான்.

கிரி “ஆமாம் மாமா… சூடே இல்ல” என ஒத்து ஊதினான். வர்ஷினி வாயே திறக்கவில்லை… அவளுக்குத்தான் தெரியுமே… இவர்கள் இருவரையும் பற்றி… நல்லா சாப்பிட்டு முடிச்சு… வக்கனையா பிரிச்சி மேய்வான்கள் என ஆதனால்.. காலை உணவு வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.. எதையும் காதில் வாங்காமல்… குடும்பம் தன் கடமையை செய்தது போல..

சுப்பு “டேய்… குளிச்சிட்டு… சாப்பிட்டு கிளம்பு… நீயும் கிரியும் போய்… நாளைக்கு தேவையான சாமான் எல்லாம் வாங்கி வந்திடுங்க… ”என்றான்.

சர்ரு “என்ன.. இப்போவா… அதெல்லாம் முடியாது, நான் தூங்கனும்… அப்புறமாதான்..”என்றான்.

கிரி “நான் போயிட்டு வரேன் மாமா… என்ன வாங்கணும்” என அவன் தயாராக.. சர்ரு அவனை முறைத்தான்…’நல்லவன்டா நீயி” என முறைத்தான்.

சுப்பு… “இப்போ என்ன ac.. பஸ்சுல வந்துட்டு… பேச்ச பாரு… போ, கிளம்பு” என்றான்.

சர்ரு “கொஞ்ச நேரம் தூங்கிட்டு போறேன் டா” என்றான்.

வர்ஷினி உள்ளிருந்து வந்தாள் “என்ன சர்ரு.. அவரு எவ்வளோ பொறுமையா சொல்லிக்கிட்டு இருக்காரு… நீ கிளம்பு முதலில்.. அப்புறம் தூங்கிக்கலாம்…” என்றாள் அவனிடம் பொறுப்பாக முகத்தை வைத்து அதட்டலான குரலில்.

தன் கணவனிடம் திரும்பி “நீங்க லிஸ்ட்ட வைச்சிட்டு போங்க… என்னமோ கொஞ்சிறீங்க” என்றாள் அதே மிரட்டல் த்வனியில்.

சர்ருக்கு, வலையில் வான்டடா சிக்கியது போல் தோன்ற.. “ஹேய்… என்ன… ரொம்ப பேசுற…” என்றான்.

வர்ஷினி “மரியாதை… டா, எங்க சொல்லு… அண்ணி…” என்றாள் சிரியாமல்.

சர்ரு “யாருடி அண்ணி…. நண்டு சிண்டை எல்லாம் அண்ணின்னு சொல்லுவாங்களா.. சூடா காபி கூட போடா தெரியல… அண்ணி பட்டம் வேண்டுமா…” என வேண்டுமென்றே சத்தமிட…

வர்ஷினி தன் கணவனிடம் “பாருங்க… எப்படி பேசுறான்னு… நீங்க சொல்லுங்க, மரியாதையா.. அண்ணின்னு சொல்ல சொல்லி..” என்றாள் வேண்டுமென்றே சுப்புவையும் இழுத்து…

சுப்பு, ரசனையோடு அவளின் குரலை கேட்டுக் கொண்டுடே, கிளம்பிக் கொண்டிருந்தானே தவிர… மறந்தும் திரும்பி பார்க்கக்வோ… வாய் திறக்கவோ இல்லை.

சர்ரு “யாரு, சுப்பு… சொல்லுவானா… உன் புருஷன் சொல்லிடுவானா… எங்க, சொல்ல சொல்லு… அண்ணியாம்…

உனக்கு கொழுந்தன் கொடுமைன்னா… என்னான்னு இந்த இரண்டு நாளில் நான் காட்டேன் டி…” என தொடை தட்டி சூளுரைத்தவன், குளிக்க சென்றான்.

அவளும் “இருங்க சார் நாங்களும்… அண்ணி கொடுமைய காட்டறோம்” என்றாள்.

Advertisement