Advertisement

உன் வருகை என் வரமாய்..10

“நிரூபித்துக்கொண்டே இருப்பதை விட…

நீங்கியிருப்பது நல்லது..”  இன்றைய வர்ஷினியின் வாட்ஸ்சப் ஸ்டேட்ஸ் பார்த்து நின்றிருந்தான் சுப்பு… நான் நீங்கியிருக்கனுமா.. இல்லை இவளா… இப்போதெல்லாம் அவளின் ஒவ்வரு நிகழ்வும் இவனை பாதிக்கிறது.

தன் தந்தையின் பேச்சிலிருந்து… எதையோ உணர்ந்தவனாக இருக்கிறான். ஆனால், அவரை நேரடியாக தப்பு சொல்ல மனம் வரவில்லை தனையனுக்கு..

அதே சமயம்… பர்வதம், அவனின் மனதில் நிலையாக அமர்ந்து கொண்டாள்.. ஆனால், எப்படி, என்ன செய்து அவளிடம் நெருங்குவது என புரியாமல் நிற்கிறான். அவளின் நினைவே எங்கும் அவனிடம்…

தயக்கம், எப்படி அவளிடம் பேசுவது… என்ன சொல்லி அங்கு போவது என பெரிய தயக்கம்… மேலும் தூக்கம் என்பதேயில்லை இந்த ஒரு வாரமாக.. முழுதுமாக வர்ஷினியே எடுத்துக் கொண்டாள்… அதனை.

அதிகாலை நேரம்… இன்று காலையில் மாடியில் நின்று அந்த தோட்டத்து வீட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். வர்ஷினி, அந்த மெல்லிய பனி போர்வையில்… வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்…

ஏதோ மூட் சரியில்லை அவளுக்கு… அதனால், இன்று கலர்கோலம் போல… இதேபோல் கிறுக்கு தனங்கலெல்லாம் செய்வாள்… அந்த வீட்டு முற்றம் ஹோலி  கொண்டாடிக் கொண்டிருந்தது..

இவனும் ஏதோ முன்னாள் காதலியை ரசிப்பது போல… திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருந்தான். எங்கிருந்தோ வந்த காலை நேர பட்சி… ”அவள் உன் மனைவி “ என கத்தி சென்றது அவன் காதில்..

வர்ஷினியும் பல பல திசைகளில் அமர்ந்து கலர் கலர் பொடிகளால் அழகாக கோலத்தில் வண்ணம் சேர்த்துக் கொண்டிருந்தாள்.. சிறிது தூக்கி கட்டிய நைட்டி.. தன் சிகையை தூக்கி போட்டு, பெரிய கிளிப்.. கைகளில் வண்ணம்.. கோலத்தில் கவனமென.. கொஞ்சம் அரைகுறையாய் தெரிந்தால் அவனுக்கு..

அவள் குனிந்து வண்ணம் சேர்த்ததில்… அவன் கட்டிய தாலி முன்வந்து விழ… அதனை கவனியாமல் அவளும் தன் வேலையை செய்துக் கொண்டிருந்தாள். பாவம் சுப்பு, நிற்க முடியாமல்… இறங்கி கீழே தோட்டத்து வீட்டுக்கு சென்றான்.. ஏதோ முடிவுடன்.

அங்கு, அந்த வாயில்லா ஜீவன்கள் இவனை பார்த்தது கத்தி கூப்பாடு போட்டது, தன்னிடம் உள்ள சாவியால் கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தான்… வந்தவன் அதுகளை கையில் பிடித்துக் கொண்டு… மெல்ல அங்கு வீட்டு முற்றத்திற்கு வந்தான்…

முதல் முதலாக சுப்பு, உரிமையாக வந்து நிற்கிறான்.. மூன்று மாதம் கடந்து.. கொஞ்சம் அதிக பொறுமைதான்.. ஆனால் வேறு வழியும் இல்லையே அவனுக்கு.. திருமணம் போல, இதுவும்… இயல்பாய் நடக்கும் என எண்ணம். இல்லை.. நடக்கவில்லை.. இதோ வந்துவிட்டான்..

அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.. ஜம்புவின் சத்தம், அவளை அழைக்கிறது… அவளின் மேல் இழைந்து அழைக்கிறது.. இவன் வந்துவிட்டதை சொல்லி அழைக்கிறது போல..

இதெல்லாம் கேட்கிறது.. அவளுக்கும் புரிகிறது… கூடவே கோலத்தின் அருகே அவனின் நீண்ட அழுத்தமான பாதம் தெரிகிறது.. பாவையவள் இதயம்.. வேகமாகத்தான் துடிக்கிறது.. ஆனாலும், நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்.. எழுந்தும் செல்லவில்லை… கோலம் பாதியில் நிற்கிறதே..

எந்த தயக்கமும் இல்லை போல… சுப்புக்கு “குட்மோர்னிங்…” என்றான். சத்தமில்லை அவளிடம்.. மீண்டும் அவனே “பர்வதம்” என்றான். கலர் செய்து கொண்டிருந்த வர்ஷினியின் கைகள் நடுங்கியது… ஒரு ஷணம், பின் மீண்டும் பர பரவென கலர் செய்தாள்.. கலர் சிதறியது.. அவள் மனம் போல..

சுப்பு “பொறுமை… பொறுமை..” என சொல்லி இரண்டடி பின் சென்றான்.

ஒன்றும் சொல்லவில்லை அவள்.. மீண்டும் செய்யும் வேளையில், தன்னை செலுத்திக் கொண்டாள். முடிந்திடுமா அது… காணாத கணவன் வாசலில் அமர்ந்திருக்க… கலர் செய்யும் விரல்கள், சற்று திணற தொடங்கியது.

திண்ணையில் அமர்ந்து, ஏதோ.. கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் தோரணையில் அமர்ந்து, பார்த்துக் கொண்டிருந்தான் சுப்பு.. செண்பா, ஏதோ பேசியபடியே உள்ளிருந்து வந்தார்.. “ஏன் பாப்பு.. தலையில ஏதாவது துணி கட்டிக்கலாம்ல்ல… எப்படி பனி பெய்யுது பா” என வெளிவந்தவர் நிறுத்தினார்.. சுப்பு, திண்ணையில் அமர்ந்திருப்பதை பார்த்து…

செண்பா “வாங்க சுப்பு தம்பி.. இருங்க டீ எடுத்து வரேன்” என உள்ளே செல்ல..

சுப்பு “இருங்க…க்கா, பர்வதம், வந்து போடட்டும்” என்றான் அசராது. செண்பாவும் புரிந்து சிரித்தபடியே “சரி வர்ஷி… எனக்கு.. அங்க பூ பறிக்க போகணும்” என அந்த விடிகாலையில் எங்கோ கிளபினார் இருவருக்கும் தனிமை கொடுத்து..

சுப்பு “அம்மா உங்கள கூப்பிட்டாங்க” என்றான் நன்றியாய் அவரை பார்த்தபடியே..

“ம்.. சரி தம்பி என்னான்னு கேட்டு போறேன்” என்றவர் கிளம்பிவிட்டார்.

வர்ஷிணியும் கட கடவெனவே கலர் செய்தாள்.. ‘என்ன அதிசையமா… வந்திருக்கான்… என்னாவாம்… என்னை கண் தெரிந்துவிட்டதாமா… இல்லை தாலிய வாங்கிட்டு போக வந்திருப்பானோ..’ என ஏக வசனத்தில்தான் எண்ணமே வந்தது.. அவ்வளவு கோவம் தன் கணவன் மேல்.

அடுத்த இருபது நிமிடத்தில் கோலம் முடித்து, எல்லாம் எடுத்து வைத்து அவள் உள்ளே செல்ல.. அரைமணி நேரமானது.. உள்ளே வந்தவள்.. நேரே கிட்சென் சென்று டீ போட்டாள்..

பின்னாடியே ஹாலுக்கு வந்தான் சுப்பு, ஏதும் பேசவில்லை… அவளும் ஏதும் பேசவில்லை… ஏதோ ஒரு மாயவலை அவர்களை சூழ்ந்தது.. மெல்ல நடுக்கம் இருவருக்குள்ளும்…

‘எங்கே ஏதேனும் என்னை அசிங்கபடுத்திவிடுவாளோ’ என அவனுக்கு… ‘எங்கே எனை ஏதேனும் கேள்வி கேட்டுவிடுவானோ’ என அவளுக்கு, என இருவருக்கும் நடுக்கம். அப்படியேதும் நடக்கவில்லை.

அவனின் அருகில் டீ வைத்தாள்.. சுப்புக்கு, கொஞ்சம் சுருக்கென ஆனது.. ஆனாலும் “கையில தரமாட்டியா” என்றான்.

“எப்போதும் இப்படிதானே கொடுப்பேன்…” என்றாள் தெளிவாக.

சுப்பு அமைதியாகிவிட்டான்… என்ன பேசமுடியும்.. அமைதியாக டீயை குடித்தான்.. பின் “கொஞ்சம் பேசணும்” என்றான் திடமாக.

வர்ஷி “எனக்கு நேரமாச்சு… நான் குளிக்க போறேன்” என்றவள் நிற்காமல் தனதறைக்கு சென்றுவிட்டாள்.

சுப்பு “மணி எப்போதான் ஆறே கால்… அதுக்குள்ளையா…” என்றான் கோவமாக.

“ஆமாம் எனக்கு வேலையிருக்கு” என்றவள்.. “போகும் போது கதவ சாத்திட்டு போங்க” என கட்டளையிட்டு உள்ளே சென்றாள். சுப்பு அமைதியாக கிளம்பினான்.

சுப்புக்கு, ‘இப்போதும் என்னை மதிக்கவே மாட்டாளா’ எனதான் தோன்றியது. இன்னும் அவளின் நிலை தெரியவில்லை அவனுக்கு.

வர்ஷினிக்கும் இவனின் முகம் பார்த்து சங்கடமே.. ஆனால்.. தெரியவில்லை அவனை பற்றி.. ஏதாவது சொல்லி என்னை கரைய வைத்துவிடுவானோ என பயம் அவளுக்கு. அதனால், அவனை முடிந்தவரை தவிர்க்கிறாள் அவ்வளவுதான்.

ஆனால், சுப்பு தினமும் வந்தான் காலையில்… அவளின் டீதான் அவனின் நாளை தொடக்கியது. ஆயிற்று பத்துநாள்.. கொஞ்சம் கொஞ்சம் பேச்சு வந்தது அவர்களிடம்.. வேணும்.. வேண்டாம்.. சரி… என ஏதோ மொத்தம் பத்து வார்த்தைகளுக்குள் பேச்சு என்ற போர்வையில்.. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நாட்கள்.. சீரான வேகத்தில் கடக்க.. எந்த முன்னேற்றமும் இல்லாமல் இவர்களும் கடந்தனர்.

நேற்று பானுமதி சொல்லியிருந்தார்.. வர்ஷினியிடம். தன் நாத்தனார் உறவுமுறையில் அவரின் மருமகளின் தம்பி திருமணத்திற்கு செல்ல வேண்டும் இருவரும் என..

எப்போதும் போல வர்ஷினி ‘என்னால முடியாது’ என அவரிடம் சண்டைக்கு நின்றாள்.

மறுநாள் காலையில் சுப்பு வந்தான், துளி துளியாய், அவள் மனதில் தன்னை திணிக்க முயன்று கொண்டிருக்கிறான் இந்த நாட்களில்.  இப்போதெல்லாம்.

பட்டும் படாமல் ஏதோ பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது அவர்களிடம் “கோலம் நல்லாயிருக்கு… இன்னிக்கு என்ன டிபன்” என பொதுவாய் கேட்பான், அதற்கு ஒருவரி பதில் அவளும் சொல்லி பழகியிருந்தாள்.

நேற்று பானுமதி அந்த திருமண விழா பற்றி சொல்லவும் சுப்பு ஆவலாக வந்தான். அவள் கோலம் போட்டு முடிந்ததும்தான் வந்தான்… அவள் டீ போட்டுக் கொண்டிருந்தாள்… வஜ்ரனின் சத்தம் கேட்டது… இவன் வரவை அறிவித்தது.. எனவே, சின்ன சிரிப்புடனே வேலை செய்து கொண்டிருந்தாள்.

சுப்பு இன்று கிட்செனுக்கே வந்தான் “குட் மோர்னிங்” என்றான் கடமை தவறாமல்.. இன்றுதான் முதல் முதலாக அவளும் சொன்னாள் “குட் மோர்னிங்” என.

சின்ன தயக்கம் அவள் முகத்தில், ஆனாலும், பனியில் நனைந்த ரோஜாவாக அவளின் முகம் சிவந்திருக்க… தன் உதட்டில் எதையோ தடவிக் கொண்டிருந்தாள்… அது மின்னியது பிங்க் வண்ணத்தில்… இந்த அழகை உற்று பார்த்தான் தள்ளியிருந்தே சுப்பு.. தெரியவில்லையடி நீ இத்தனை பேரழைகியென… என அவனின் மனமெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தது… ஆனாலும்.. அமைதியாக நின்றான்.

எவ்வளவு நேரம் அங்கேயே நிற்க முடியும்… இவன் வெளியே ஹாலில் வந்து அமர்ந்தான்.. டீ, இப்போதெல்லாம் அவனின் கைகளில் வந்தது..  ஆனாலும் என்ன, கை படாமல் கண்ணியம் காக்கும் கணவனவன்…

பொறுமையாக குடித்தான்.. சொட்டுவிடாமல்.. அவளை பார்த்தபடியே.. அவளும் தனதை அருந்த… பொறுமையாக சொன்னான் “அம்மா, ஏதோ கல்யாணத்துக்கு போகணும் சொன்னாங்க… ஈவ்னிங் ரெடியா இரு” என்றான்..

“நா… நான் அப்போதே சொல்லிட்டேன், நான் வரலைன்னு…” என்றாள் விட்டேற்றியான குரலில்.

“ஏன்” என்றான் அவனும் விடா குரலில்.

பொறுமையாக “அ.. அதுவா… எனக்கு எல்லா இடத்துக்கும் வர பிடிக்கலை” என்றாள்.. என்ன சொல்ல முடியும்.. உங்களுக்கு கல்யாண செய்ய நான்வேண்டும்… வெளியே போக நான் வேண்டும்… ஊரில் சொல்ல, நான் வேண்டும்… ஆனால் உரிமையாய் என்னை வீட்டிக்கு அழைக்கமாட்டீர்கள் என அவளின் மனம் நினைக்க தொடங்கியது.

ஆனால், எனை நீ தள்ளி வைக்கிறாய் என உரிமையாய் கணவனிடம் சண்டையிடும் அவளவு கூட அவளுக்கு நெருக்கமில்லை எனவே அவனை தவிர்க்கிறாள்.

அதனால் இந்த விட்டேற்றியாய் ஒருபதில் அவளிடமிருந்து.. வேறு ஏதாவது அவன் கேட்டுவிடும் முன், அவனின் பதிலுக்கு நிற்காமல்.. தனதறைக்கு சென்றுவிட்டாள்… குளிப்பதற்காக..

“பர்வதம்… இதென்ன பேச்சு… வர பிடிக்கலையா.. இல்லை, என்னுடன் வர பிடிக்கலையா…” என்றான் ஆராயும் எண்ணத்தில்…

அவளும் உள்ளிருந்தே… “ரெண்டும்தான் “ என்றாள்..

அப்படியொரு கோவம் வந்தது அந்த வார்த்தையில்… “எனக்கு பொண்ணு பார்க்க வந்தவளுக்கு… என்கூட வர கசக்குதா…” என்றான் யோசியாமல்.

கொஞ்சமும் அசரவில்லை அவள், உள்ளிருந்து சத்தமாக வந்தது குரல் “எனக்கு அப்போதே தெரியாதே… இப்படியாகும்னு… தெரிஞ்சிருந்தா.. நான் எங்கையாவது போயிருப்பேன்.. இப்படி ஒரு வாழ்க்கை..” என ஏதோ சொல்ல வந்தவளுக்கு.. தன் பேச்சு பொருள் புரிந்து, சட்டென பேச்சை நிறுத்தினாள்.

நொறுங்கிபோனான் சுப்பு… முகமே வீழ்ந்துவிட்டது.. உண்மையோ… வாய்தவறி வந்ததோ.. ஏதோ ஒன்று அவனுக்கு இருந்த வேதனையில் இதுவும் சேர… திரும்பி நடந்தான்..

வர்ஷினி கதவை திறந்து பார்த்தாள்.. அவனின் வாடிய முகம்தான் தெரிந்தது.. போகும் அவனை நிறுத்த வார்த்தை வரவில்லை… அவள் கதவு திறந்த சத்தம் கேட்டு… சுப்புவே “ஈவினிங் வருவேன் ரெடியா இரு” என்றவன் அவளை பார்க்காமல் கிளம்பிவிட்டான்.

வர்ஷினிக்கு கண் கலங்கியது… கயப்படுதல் அவளுக்கு தெரியும்தானே.. எவ்வளவு வலிக்கும்… அதையே தன் கணவனுக்கு.. அவளேதான் தந்தாள்.. விரும்பியோ விரும்பாமலோ வார்த்தை வந்துவிட்டது.. ஆனாலும், மனது கேட்கவில்லை. ஒன்றும் செய்யமுடியாமல் பள்ளிக்கு கிளம்பினாள்.

இந்த நாள் இருவருக்கும் நகரவே மறுத்தது… எப்படி அவள் சொல்லாம் என அவனுக்கும்… அய்யோ இப்படியா பேசுவ என அவளும் நினைத்து நினைத்தே நகர்த்தினர் நாளை.

ஒருவழியாக மாலையில் சீக்கிரமே வந்து.. பொறுப்பாக தயாராகினாள் வர்ஷினி. பானுமதி வந்தார் அந்த நேரத்தில்.. “தங்கம்… கிளம்பிட்டியா.. இந்தா” என பெரிய ஹாரம் ஒன்று போட்டார் அவளின் கழுத்தில்.

வர்ஷி “ஏன் அத்த.. எனக்கு நகை.. சொத்து இதெல்லாம் கொடுக்கலைன்னுதான் உன் பையன் என்னை வீட்டுக்கு கூப்பிடலையோ…” என்றாள் அந்த நகையை சரிபார்த்தபடி.. முகமெல்லாம் மாறவில்லை.. சாதரணமாக கேட்டாள்.

பானுமதி “அப்படியெல்லாம் இல்லடா தங்கம்… உன்னோட அம்மா நகை அப்படியே வைச்சிருக்கேன் டா… நான். அதெல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை டா… நீ வந்து நின்ன பாரு என் பையனுக்கு ஜோடியா… அதுவே போதும் டா… வேறேன்ன வேண்டும்…

சுப்புக்கு அதெல்லாம் தெரியாது டா.. அவன்.. அப்படியில்ல டா.. ஏதோ அப்பா அப்பான்னு சொல்லுவான்.. அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்கான்.. அதான்..

நீ ஒன்னும் மனசுல நினைக்காத தங்கம்…” என சொல்லிக் கொண்டிருக்க வந்தான் சுப்பு, வெள்ளை வேட்டி… அடர் நீல லினென் ஷர்ட்டில்…

தன் அம்மாவிடம் பேசியபடியே, பார்வையால் அவளிடம் “போலாம்…” என்றான்..

“இருங்க…” என சொல்லிய செண்பா… ஜாதிமல்லி பூச்சரம் ஒன்றை அவளின் பின்னிய முடியில் சூடி அனுப்பினார்.

அழகான ராமர் பச்சையில்… ப்ரௌன் நிற பார்டர் போட்ட காஞ்சி பாட்டு புடவையில்.. தனக்கெனவே வரைந்த ஓவியமாக.. லேசாக பட படபடப்புடன் இவள் மயக்குகிறாளா.. அவள் சூடிய பூ மயக்குகிறதா என புரியாமல் ஒரு புது துள்ளலுடன் நடந்தான் சுப்பு. சின்ன பூரிப்பும் வந்தது அவனுள்.. காலையில் இருந்த சுணக்கம் போயி துள்ளல் வந்தது அவனிடம்.

பெரிய வண்டிதான் எடுத்து வந்திருந்தான்.. அவனின் காத்ரமான அமைப்புக்கு அது பொருந்தி போக.. இவளும் அவனுடம் பொருந்தினால்.. மெல்ல ஸ்கார்பியோ நகர்ந்தது…

ஏசியில்… இதமான அவளின் நறுமணம் சேர வண்டி வேகமெடுத்தது.. ஏதும் பேசவில்லை இருவரும், மௌனம் இனிக்கும் என அப்போது புரிந்தது.. அவ்வபோது கேட்ட அவளின் வளையோசை.. சின்ன சின்ன ஹாரன் சத்தம் தவிர வேறு இல்லை… என்ன பேசுவதென தயக்கத்தையும் மீறி… பேசினால் கயபடுத்திடுவோமோ என்ற எண்ணம் இருவரிடமும்.. அதனால் அமைதிதான் நிறைந்திருந்தது.

ஈரோட்டில் வரவேற்பு.. இன்று இவர்கள் சென்றால்.. நாளை திருமணத்திற்கு பானுமதி தம்பதி செல்லுவார்கள்..

சரியான நேரத்திற்கு வந்தனர்… புதிதாக இருந்தது வர்ஷினிக்கு.. அப்படியொரு வரவேற்பு அவள் கணவனுக்கு… அவனின் அத்தை முன்னின்று வரவேற்றார்.. அவர்களின் சம்பந்தி.. அந்த வகை உறவுகள் என எல்லா பெரியவர்களும் வந்தனர்… எல்லோருக்கும் தன் கணவனை தெரிந்தது..

வர்ஷிணியும் வணக்கம் வணக்கம் என சொல்லி மாளவில்லை.. சுப்புவின் அத்தை, தன் மருமகனை பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்.. அவனின் அருகில் வர்ஷினி பாந்தமாக நின்றிருந்தால்.. எல்லோர் கண்களும் இவர்களை மொய்க்க தொடங்கியது…

மெல்ல மெல்ல விஷயம் அங்கு பரவியது ‘அதான்.. அந்த பொண்ணு போயிட்டுதுள்ள.. அப்புறம் அவங்க வீட்டில் வளர்ந்த பெண்ணையே கல்யாணம் செய்துக்கிட்டாருள்ள… அவர்தான்’ என பற்றி எரிந்தது செய்தி.. ஒன்றும் இவர்களை பெரிதாக பாதிக்கவில்லை…

சுப்பு அவளிடம் எல்லா உறவுகளையும் சொல்லிக் கொண்டிருந்தான்.. “இவர்தான் அந்த பொண்ணு வீட்ட சொன்னவங்க” என அவரையும் பற்றி பேசி, அவரையும் காண்பித்தான்..

வர்ஷினி “ம்…” என்றாள். பின் சுப்பு “இப்போ வந்து பார்த்தாங்களே… அந்த மஞ்சள் சட்டை அவங்க, உன் மாமா வீட்டில் பெண் எடுத்திருக்காங்க” என எல்லோரையும் சொன்னான்.

இவளிடம் பேசினர் அத்தையின் மருமகள்கள் எல்லாம்.. வர்ஷிணியும் அமைதியாக சற்று நேரம் அவர்களுடன் அமர்ந்து பேச தொடங்கினாள்… இயல்பாகவே கலகலப்பான குணம் அவளுடையது எனவே, ஒட்டிக் கொண்டாள் எல்லோருடனும்.

திருமணம் மாற்றம் தரும் என உணர்ந்தாள். அவ்வபோது தன்னை யாரோ உற்று பார்ப்பதாக ஒரு குறு குறுப்பு வந்தது அவளுக்கு.. இது பெரிதாக உறுத்தவில்லை.. இதமாக இருந்தது.. அந்த குறுகுறுப்பு கொடுப்பவன் தன்னவன் என மனம் உணர்ந்தததோ… நளினம் கூடியது.. கவனமும் அவன்மேல் கூடியது..

நேரம் சென்றது.. அத்தை வந்து “போ வர்ஷினி, சுப்பு கூட சாப்பிட்டு கிளம்பு” என உணவருந்த அழைத்து சென்றார்.

பின் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே வந்தனர். மணி ஒன்பதை நெருங்க.. வண்டி வீடு நோக்கி சென்றது.. இந்த முறை மெதுவாக.. செலுத்தினான் சுப்பு.. எதையோ அசைபோட்டபடி வண்டி நகர்ந்தது.

இப்போது கூட்டத்தில் இயல்பாய் சென்ற பேச்சு, தனிமையில் இருவருக்குள்ளும் சிக்கியது.

“சொல்லபோனால் என் நாட்களை

வண்ணம் பூசி தந்தவளும் நீதான்…

தூண்டில் இல்லா… என் பார்வையில்..

தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்…

எத்தனை எத்தனைநாள் பார்ப்பது…

எட்டி நின்று எட்டி நின்று காய்வது…

கள்ளகுரல் பாடல் உள்ளே ஓடுது..

கண்மூடி.. கண்மூடி…

காதோரம் காதோரம்.. பாடுது..”

Advertisement