பௌர்ணமி வர்ணம் – 13
மூவரும் வீடு வரவும்… வர்ணாவை தூக்கியபடி… ஈஸ்வர் வந்தான்.. தீபி “இங்க அம்மா ரூமில் விடுங்க…. இப்போ கிஷோர் கிளம்புவான், நான் அவன டிராப் செய்ய போகணும்….” என்றாள் சின்ன குரலில்.
ஈஷ்வரும் அங்கேயே விட்டு வந்தவன்… கிஷோரின் அறைக்கு சென்றான். தீபி அங்கேதான் இருந்தாள்… எனவே அதனை பார்த்தவன். தங்களறைக்கு வந்துவிட்டான். டிவியை போட்டு விட்டு, படுத்துக் கொண்டான்.
இதோ… படுத்தவுடன் தூங்கிவிட்டான். எப்போதும் ஈஸ்வர் இப்படிதான். நினைக்கும் நேரத்தில் எழுவான். பத்து நிமிஷம் தூங்கினா போது என நினைத்தாலும்… படுத்துடன் உறக்கம் வரும் வரம் பெற்றவன் அவன். எனவே இப்போதும் படுத்து தூங்கனும்ன்னு நினைத்தான் தூங்கியும்விட்டான்.
தீபி அங்கு சண்டை கிஷோருடன் “அவன் வந்ததும் என்னை வர வேண்டான்னு சொல்றல்ல…. இப்போ வந்தவங்க எல்லாம், உனக்கு முக்கியமாயிட்டாங்க…. இப்போ நான் வேண்டாம் உனக்கு..” என சொல்லிக் கொண்டிருந்தாள்.
கிஷோர் “இல்ல தீபி, மதியமே மாமா நான் வரேன்னு சொல்லிட்டாங்க…. உனக்கு எதுக்கு கஷ்ட்டம்… நீ ரெஸ்ட் எடு… மாமான்னா தனியா வந்திடுவாங்க, நீ வந்தா சித்தப்பா… வரணும், அதனால சொன்னேன், நீயும் வேண்ணா மாமா கூட வா” என்றான் சிரித்தபடியே…
கடைசி வார்த்தைதான் அவளை என்னமோ செய்தது…. எப்போதும் அவள் வரவில்லை என்றால் கூட பேசி பேசி அவளை அழைத்து செல்பவன் இப்போது விட்டேற்றியாக நினைப்பதாக தோன்றியது. புவன் வந்த உடனே, நான் வேண்டாமா… என்று என்ன தொடங்கினாள் சிறுபிள்ளையாக.
அத்துடன் கூடவே, ‘நீ ரெஸ்ட் எடு… மாமா வராங்க … இல்லை மாமா கூட வா’ என்ற வார்த்தை அவளை கொஞ்சம் காயப்படுத்தியதோ…
பேக்கிங் எல்லாம் முடிந்து எடை போட்டு பார்த்து எல்லாம் சரியாக செய்துவிட்டான் கிஷோர்… தீபியிடம், கிஷோர் “போக்கா, நான் குளிச்சிட்டு வரேன்… உன் கையாள ஓர் காப்பி கொடு” என சொல்ல…
தீபி “போடா இதுக்கு மட்டும் நான் எதுக்கு…. உங்க நோமாவா… வந்து தர சொல்லு” என சொல்லி இன்னும் அழுத்தமாக அங்கேயே அமர்ந்திருந்தாள். ஏனோ இந்த தீபி புதிதாக தெரிந்தாள் கிஷோருக்கு.
இந்த வாய்சண்டை, அழுத்தம் எல்லாம் இருக்கவே இருக்காது. சொன்னால் சரி என்பாள், இல்லை பிடிக்கவில்லை என்றால் எதுவும் பேசாமல் சென்றுவிடுவாள்.
இப்படி கூட கூட பேசுவது என்பதை இதுவரை பார்த்ததில்லை அவளின் தம்பி. எனவே என்ன செய்வது என தெரியாமல்… “குளிச்சிட்டு வரேன் “ என சொல்லி பாத் ரூமில் புகுந்து கொண்டான் கிஷோர்.
இவளும் அமர்ந்து இருந்தவள் தன் அறைக்கு வந்துவிட்டாள். ஈஸ்வர் தூங்கிக் கொண்டிருந்தான். இப்போது திடுக்கிட்டு எழுந்தான். ப்ரஷாகி வெளியே சென்றான். அவனின் அரை மணி நேர தூக்கம் முடிந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் தீபி. இவளும் ஏதும் சொல்லவில்லை. அவனும் ஏன் என எதுவும் கேட்டவில்லை.
கிஷோரின் அறையில், கிஷோர் ரெடியாக இருக்க… லக்கேஜ்களை கீழே இறக்க தொடங்கினர் ஈஷ்வரும், கிஷோரும்… அப்போது தீபியின் அறையில் தீபி அமர்ந்தபடியே எங்கோ வெறித்து இருந்தாள். இவர்களை பார்க்க கூட இல்லை.
கிஷோர் சென்று தீபியிடம் சமாதனம் பேசினான், வரவேயில்லை அவள். ஏனோ நன்றாக ஈஸ்வரை முறைக்க தொடங்கினாள் தீபி. ஈஷ்வருக்கு புரிகிறது தன் மேல்தான் ஏதோ கோவம் என ஆனால் கண்டுகொள்ளவில்லை அவன். திரும்பியும் பார்க்கவில்லை அவளை.
சுந்தரி வேறு கிஷோரிடம் “டேய் மணியாச்சு… இந்தா சாப்பிடு” என தட்டில் எதையோ கொண்டு வந்து கொடுத்தார்,
இப்போது சுந்தரியும் “போடி… கிஷோர் ஏதோ தெரியாம சொல்லிட்டான்…. நீ போ அதான் மாப்பிள்ளை வராருள்ள..” என எவ்வளவோ சொன்னாலும் கேட்டவில்லை தீபி.
கிஷோர், பேசி பேசி பார்த்தவன் எழுந்து சென்று “மாமா… அவளையும் கூட்டிதான் வாங்களேன்” என்றான்.
ஈஸ்வரும் “அவள் வந்தா… கூட்டி வரேன், இதில் என்னை சேர்க்காதே…. நீயாச்சு, உன் அக்காவாச்சு…” என அமைதியாக அமர்ந்து கொண்டான். ஆனால் தீபி இப்போது கிஷோரை முறைப்பதை விடுத்து ஈஸ்வரைதான் முறைத்திருந்தாள்.
ஈஸ்வர் கையில் காப்பியுடனும்… உதட்டில் ரகசிய புன்னகையுடனும்… ஏதோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். தீபிக்கு கோவமாக வந்தது அவன் ஒரு வார்த்தை வாவென சொல்லவில்லை என.
உள்ளே வரும்போதே…. நான் கிஷோருடன் போவேன்னு சொன்னேன்… அப்போது கூட ‘போலாம்ன்னு சொல்லவேயில்லை…. திமிர்… சிப்பாய்க்கு திம்ர்தான் உடம்பு….’ என முனு முனுத்தாள்.
கிஷோர்… பார்த்தான் தீபி வருவதாக தெரியவில்லை. அவளை விட்டு செல்லவும் மனமில்லை எனவே கைபிடித்து இழுத்து சென்றுதான் காரில் அமர்த்தினான். இப்போதுதான் அவள் முகமே தெளிந்தது. எனவே அமைதியாக அமர்ந்துகொண்டாள்.
ஈஷ்வரும்…. கிஷோரும் பொதுவாக பேசினார்…. சீக்கிரமே ஏர்போர்ட் சென்றுவிட…. ஏனோ தீபியால் அவர்களின் உரையாடலில் கலக்கவே முடியவில்லை.
தன்னை புவன் ஒதுக்குகிறான் என மட்டுமே தோன்றியது. ஈஸ்வரிடமிருந்து தனியே வந்து தன் தமக்கையின் அருகில் அமர்ந்த கிஷோர்… அவளின் கைகளை தனக்குள் பொதித்து கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.
ஏனோ இந்த செய்கையில்… தீபி சற்று ஆசுவாசப்பட்டால்… தன் கண்மூடி சீட்டின் பின்புறம் சாய்ந்தாள். கிஷோர் “அக்கா, அவர் நம்ம வீட்டுக்கு புதுசா வந்தவர்… அவர நாமதானே நல்லவிதமா பார்க்கணும்… அதனாலதான். நீ எப்போதும் ஸ்பெஷல்க்கா… ப்ளீஸ்… ச்சில் தீபி….” என்றான் வர்ணாவிற்கு சொல்லுவது போல்.
இதெல்லாம் தீபிக்கு புரிகிறது ஆனால்… ஏதோ ஒன்று ஈஸ்வரை பற்றி நல்ல விதமாகவும் சரி, தப்பாகவும் சரி அவளால் ஒத்துக் கொள்ளமுடியவில்லை. எங்கேயோ திக்குகிறது.
கொஞ்சம் தீபியை பேசி பேசியே திடப்படுத்தியவன்.. கிளம்பும் போது “ஒரு செல்பி மாமா “ என்றான் ஈஸ்வரிடம். தீபி சற்று உம் என இருந்தாலும் ஈஸ்வர் நன்றாகவே போஸ் கொடுத்தான்… ஆக கிஷோர் கிளம்பினான்… போர்டிங் பாஸ் வாங்க… இவர்களும் அவனை உள்ளே அனுப்பி கிளம்பினர்.
வாடி போனவாளாக வந்தாள் ஈஸ்வருடன்…. அவனும் இத கவனிக்கவே செய்தான்… காரின் வேகம் கூடவேயில்லை… ஏதோ மாப்பிள்ளை ஊர்வலம் போல் அந்த… ஏற்போர்ட்டின் ப்ளை ஓவரிலிருந்து… அதே வேகம்தான்.
ஈஸ்வர் காரிள் உள்ள மியூசிக்கல் பிளேயர்ரை ஆன் செய்தான்… ஏதோ ஒரு பாட்டு ஓடியது தீபி இன்னும் வெறித்து பார்த்து அமர்ந்திருந்தாள்… எதையும் உணரவில்லை. ஈஸ்வருக்கும்… இதே போதுமானதாக இருந்தது…
மறுநாளிலிருந்து ஈஸ்வர் தன் வேலைகளை பார்க்க தொடங்கினான்… தீபியை, ரேசொர்ட்டில் விடுவது பின்பு… தந்தையுடன் கடைக்கு சென்றான்.
கூடவே கதிரேசனுடன், சென்று, வர்ணாவை தத்தெடுக்கும் பேப்பர்சையும் ரெடி செய்யும் வேளையிலும் இறங்கினான். நடேசனின் அட்வகேட்.. எல்லாம் பார்த்துக் கொண்டார்தான். ஆனாலும் ஈஸ்வர் கூடவே அலைந்தான்…
கிஷோர் கிளம்பிய பிறகு…. ஈஸ்வரை பார்ப்பதை கூட தவிர்க்க தொடங்கினாள் தீபி. ஆனாலும் பொறுப்பாக ஈஸ்வர்தான் அவளை ரேசொர்ட்டில் இறக்கி விடுவான் கூட்டி வருவான். அப்போதெல்லாமும் தீபயை சீண்டுவதேயே குறியாக கொண்டான் ஈஸ்வர்.
ஈஸ்வர் “உன் தம்பி போன் பண்ணான்… ரீச் ஆகிட்டானாம்…. உன் கிட்ட சொல்ல சொன்னான்.” என்பான்.
வீட்டில் சமையல் என்னவென கந்தனிடம் சொல்ல தொடங்கினான்… அப்படியே இது நல்லது அதையே வர்ணாக்கு கொடுங்க என… வர்ணாவின் மெனுவையும் அவனே தீர்மானித்தான்.
அன்று வரவேற்புக்கு என… ஜவுளி எடுக்க சென்றிருந்தனர். சுந்தரி, ஈஷ்வரின் குடும்பம் என… அனைவரும் சென்றனர். அப்போதும் அப்படியே… தீபியை ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை… ஈஸ்வரே “அந்த ரெட் கலர் எடுங்க….” என்றான்.
அனைவரும் “ம்…. சூப்பர்…” என்கவும்… தீபயை திரும்பி கூட பாராது…. “பெர்பாக்ட்… இதே ஓகே..” என அவளுக்கும் சேர்த்து தானே முடிவெடுத்தான்.
அதேபோல் வர்ணாவின் உடையும் அதே போல்தான்… கவனமாக தங்கள் இருவரின் வர்ணமும் வருமாறு பார்த்து அழகாக தேர்வு செய்தான். அதற்காகத்தான் கடையையே சற்று திருப்பி போட்டான்… ஈஸ்வர்.. ‘இது பட்டு இல்லை’ என்றான் ‘இது வெயிட்டா… இருக்கு, பாப்பாக்கு… சரிவராது ‘ என்றான்…. ‘இந்த கலர் இல்லை இன்னும் ஒரு ஷேட்டு அதிகமா வேணும்’ இப்படி நிறைய பார்த்த பின்தான் சமாதானமாக ஒன்றை எடுத்தான். இவனின், ஈஸ்வரின் அந்த அழகை பார்த்து அனைவரும் வாய் பிளந்து நின்றனர்.
பூரணி அங்கு இவனை போல் கடையையே வேலை வாங்கி தங்கள் குடும்பத்திற்கு மட்டும்… தெளிவாக அழகாக எடுத்தாள்… மற்றவர்களை கண்டுகொள்ளவில்லை அவள்.
பாட்டி வரவில்லை அப்போது எனவே யாரும் தீபியை எதுவும் கேட்கவில்லை… ராம் என்றொரு ஜீவனையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து அவர்களின்… இணைகள் கலக்கி கொண்டிருந்தனர்.
இவர்களை வேடிக்கை பார்த்தபடியே ஆனந்தி… ஏதோ ஒன்றை எடுத்துக் கொண்டார். மேலும் முக்கியமான சொந்தகளுக்கும் புடவைகள் வாங்கிக் கொண்டே கிளம்பினர் அனைவரும்.
அன்று தீபிக்கு தூக்கமே வராமல் அந்த பொதுவான பால்கனியில் உலவிக் கொண்டிருந்தாள்… ‘இந்த ஈஷ்வரின் செயல்கள் அவளுக்கு பயத்தைத்தான் கொடுத்தது.
எப்போதும் தன்னை… அவனின் விரலில் உள்ள நகங்கள் போல்… வளரவே விடாமல் அவன் இஷ்ட்டப்படி… எப்போதும் வேண்டுமானாலும் கத்தரிக்கிறான்…
இல்லை ஏதோ ஆக்டோபாஸ்… போல் அத்தனை கைகளாலும் என்னை கட்டி இழுத்து கக்கத்தில் வைக்கிறான்… மூச்சு முட்டுகிறது… இதற்கு தீர்வே இல்லையா என கோவம் பொங்கியது.
ஆனால் அவனை முழுதாக மனத்தால் கூட ஏற்காதவளால்… அவனிடம் சண்டையிட முடியவில்லை… எனவே அவனை தவிர்க்க பழகினாள்…
மேலும் வர்ணாவை எப்போதும் தன்வசமே வைத்திருந்தான். ஏனோ அதுவும் தீபியை பாதிக்க செய்தது.
இப்படியே வாரமும் செல்ல… முதலில் ஈஷ்வரின் கடை பணியாளர்கள் மற்றும் தீபியின் ரேசொர்ட் பணியாளர்களுக்கான வரவேற்பு தனியாக ஒரு மண்டபத்தில் நடந்தது. அதனை தொடர்ந்து…
பொதுவாக ஒரு வரவேற்பு, நகரத்தின் மத்தியில் உள்ள ஒரு ஹோட்டலிலேயே… மிக எளிமையாக நடந்தது. மிக மிக முக்கிய புள்ளிகளுக்கு மட்டும்தான் அழைப்பு.
பிரத்யோகமாக இவளுக்கெனவே நெய்த போன்ற சிவப்பு வர்ண பட்டில்… தீபியும், அழகான வெண்பட்டு வேட்டி சட்டையில்… மிடுக்குடன் ஈஷ்வரும்… அனவைரையும் வரவேற்க தொடங்கினர்.
அவர்களின் அருகில்…. அதே வெண்பட்டு பாவாடையில்…. மேல் சட்டை சிவப்பு நிறத்திலும்.. ஈஸ்வரின் கைகளில்… கொஞ்சும் கிளியாய் வர்ணா… எல்லாவற்றையும் விட அழகாக அமர்ந்திருந்தாள்.
அமைச்சர் மகளின் இரண்டாவது திருமணம் என பல மீடியாக்களில் மின்னினாலும்… இதை தவிர்க்க முடியாது… பொறுத்தே சென்றனர்.
கமலநாதன் வந்திருந்தார் அமைதியாக…. சாதாரண காட்டன் வெள்ளை வேட்டி சட்டையில்…. பத்து பவுன் மெல்லிய சங்கிலியில்…. அவர் சிரிக்கும் போதெல்லாம் அந்த பல்வரிசையில்…. தங்கபல்லும் தன் மின்னலை அவ்வபோது… காட்டி சென்றது.
அவர்களின் கட்சியில் அவர்க்கென ஒரு மரியாதை. இருந்த இடத்திலிருந்து எல்லாவற்றையும் செய்யும் வல்லமை பெற்றவர். எப்போதும் அந்த முகத்தில் சிரிப்பை தவிர வேறு பாவங்களை காட்டாதவர்.
குடும்பவே வந்திருந்தனர்… மணமக்களை ஆசிர்வதித்தனர். தீபியும் தயக்கங்கள் ஏதும் இல்லாமல் இயல்பாய் “வாங்க அங்கிள்” என்றாள். நடேசனே சற்று பயந்துதான் நின்றிருந்தார். அவர், கமலநாதன் ஏதேனும் சொல்ல கூடுமோ என. ஆனால் ஈஸ்வர் தன் கையிலிருந்த வர்ணாவை கமலனாதனிடம் கொடுத்தான்.
மனிதன் இந்த செய்கையை எதிபார்க்கவில்லை போல்…. அவரின் சிரித்த முகம்… கலையானது. தன் பேத்தி வர்ணாவை தூக்கியபடி மணமக்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார் கமலநாதன்.
ஈஸ்வர் “எப்படி இருக்கீங்க….” என்றான் போர்மளாக.
கமலநாதனும் “ம்…” என்று தலையசைத்தார் யோசனையுடன்.
ஈஸ்வர் தன் தந்தையை அழைத்தான் “அப்பா… இவங்க கமலநாதன்” என அவரை பற்றிய முழுமையான அறிமுகம் தந்தான்.
கமலநாதனுக்கு ராமலிங்கத்தை எங்கோ பார்த்தது போலிருந்தது. போசனையுடனேயே “எங்கேயோ உங்களை பார்த்திருக்கிறேன்” என்றார் ராமலிங்கத்திடம். இப்படியே அவர்களின் பேச்சு சென்றது.
அமர கூட நேரமில்லை மணமக்களுக்கு… இருவரும் சிரித்த முகமாகவே இருந்தனர். வர்ணாவும் தீபியிடம் கூட செல்லாமல் ஈஸ்வரனுடனேயே இருந்தாள்… இதனை கவனிக்க தவறவில்லை கமலநாதனின் கண்கள்.
தீபியின் நண்பர்கள் படை எல்லாம் குடும்பத்துடன் வந்திருந்தனர். தீபிக்கு இப்போதுதான் சற்று தெம்பே வந்தது. கிஷோர் வேறு இல்லாததால்… சற்று திண்டாடித்தான் போனாள் அவளின் சிப்பாயுடன். இப்போதுதான் முகத்தில் சற்று தெளிவு தெரிந்தது.
எனவே அத்தனை ஒளி அவளின் முகத்தில்… கலகலவென சிரிப்பும், ஓயாத பேச்சும் கலந்து தீபி ‘த்வ்யமாய்’ தெரிந்தால் ஈஷ்வரின் கண்களுக்கு… இப்போதுதான் அவனும், அவள் மீதிருந்து கண்களை எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ப்பா… இவ்ளோ… அழகா… இவ” என பார்த்திருந்தான் வியப்பாய். முதன்முதலில் ஏதோ இம்சித்தது அவனை… ‘அவளை பாரேன்… நீ வாங்கிக் கொடுத்த புடவை, இன்னும் பாரேன்…. நீ கட்டிய தாலி… பாரேன்’ என யாரோ, ஏதோ, எங்கோ சொல்வது போல்.. பிரம்மை… விழி எடுக்காது… விழுங்க தொடங்கினான் அவளை.
தீபியின் நண்பர்கள் குடும்பத்துடன் நிற்பதால்… அங்கே மேடையில் நிற்பதால், இவன் ஓரமாக நின்று அவளை விழுங்க தொடங்கினான், பின் கழுத்தை ஒட்டி… கொண்டையில் அவளின் ஸ்டைலான முடிகள் அடங்கி இருக்க… முன் புறம் அவளின் நெற்றியின் ஓரம் மட்டும்… அடங்காமல் கற்றை சுருளாய் மூடி கற்றைகள்…. அதை அவ்வபோது ஒதுக்கும் பிங்க் நிற விரல் நுனிகள்…. இப்போதும் அவனை ஈர்க்க…
அளவான வைரங்கள் அவளை தன்னுடன் இழைத்துக் கொண்டிருந்தன… வர்ணம் பூசிய மலரென இதழ்கள் அசைந்து அசைந்து பேசி மின்ன… அவளின் மைதீட்டிய விழிகளும் அதற்கு தக்க பாவம் காட்ட… திரும்பவும் அதே எண்ணினான் ஈஸ்வர் ‘ப்பா.. இவ இவ்வளோ அழகா..’ என நினைத்து நின்றது நின்றபடியிருந்தான்.
நண்பர்கள் பேசி முடித்து ‘போனால் போகுது போட்டோஸ் எடுக்க… ஈஸ்வரையும் கூப்பிடலாம்’ என அவனை அழைத்தனர். அவனும் அருகில் வந்து நிற்க… அதே ஒளி முகம் மாறாது தீபி… நண்பர்களின் பெற்றோரை அறிமுகம் செய்து… ஒவ்வெரு குடும்பமாக தனித்தனியே போட்டோஸ் எடுத்துக் கொண்டனர். அவளின் சிப்பாய் அங்கு, அவளின் இனிமையான மொழியில் சிதறிக் கொண்டிருந்தான் முதல் முதலாக.