Advertisement

மிட்டாய் புயலே-7

இந்த இரவு எல்லோருக்கும் வெவ்வேறு மனநிலை, இதில் சுந்தரராஜன்தான் தந்தையாக, மிகவும் கவலை கொண்டார். எல்லா தந்தையின் கனவும் போல்தான் இவருடையதும்.

தன் பெண்ணை மகாராணியாக உணரவைக்க கூடிய, தன்னை போல் பாதுகாக்க கூடிய, தன்னைவிட அதிகமாக அன்பு செய்யக்கூடிய, மாப்பிள்ளை பார்த்து ஊர் மெச்ச திருமண மேடை ஏற்றுவதுதான், பெண்ணை பெற்ற அப்பாக்களின் கனவு.

அதே நினைவுதான் ராஜனுக்கும். அந்த தந்தையின், கனவில் ஏனோ ப்ரகதீஷ் வரவேயில்லை போல, இரவு அவன் பார்த்த பார்வையும், உரிமையும் அவரை வேறு விதமாக யோசிக்க வைத்தது.  

ராஜனுக்கு, சாக்க்ஷியின் திருமணம் முதல் தரமே தடங்களில் சென்று முடியவும், அதன் மூலமாக எழுந்த பேச்சுக்களும் நினைவில் வர, இந்த முறை அதே போல் ஏதும் நடக்காமல் இருக்க எண்ணினார்.  

மறுநாள் காலை, ராஜன் நேரே ப்ரகதீஷின் தந்தையை பார்க்க சென்றார் அவர்களின் ரைஸ் மில்லிற்கு. எப்போதும் போல், ஒரு பெண்ணை பெற்ற தந்தையின் பேச்சி வார்த்தைதான் நடந்தது அவர்களிடம்.

ஆனால் ஜெகன் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். “நீங்க ஏதோ இந்த விஷயத்தை பெருசா நினைச்சி இருக்கீங்க, நம்ம பசங்க அப்படியில்லை, நீங்க கவலை படாதீங்க, நான் சொல்லி விடுகிறேன்”  என்றார் அமைதியான குரலில்.

கடைசியாக வெளியே வரும் போது ராஜன் “இங்க பாருப்பா, புதன் கிழம பெண் பார்க்க வராங்க, அங்க ஏதும் குழப்பம் வந்திட கூடாது பார்த்துக்க” என சொல்லித்தான் கிளம்பினார்.

பெண்ணிற்காக எங்கும் பரிந்து செல்லும் ஒரு தந்தையாக, இத்தனை நாள் அவர்களின் நிழல் கூட மிதிக்காதவர் இன்று அவர்கள் இடம் தேடி சென்று மிரட்டினாரா, இரைஞ்சினாரா தெரியவில்லை. ஆனால் எங்கும் அவன் வேண்டாம் என சொல்லிவிட்டார், அதுவே அவருக்கு நிம்மதியாக இருந்தது.

சாக்க்ஷிக்கு, இதையெல்லாம் தெரியவில்லை. தன் நண்பன் எப்போதும் இது போலெல்லாம் தன்னை நினைவு வைத்து, ஏதும் வாங்கி வந்தது இல்லை. அதும் தனக்கு பிடித்த ரசகுல்லா வேறு.

அதைதான் இந்த ஒரு வாரமாக வரிந்து கட்டிக்கொண்டு உண்டு கொண்டிருந்தாள். அவளிற்கு அவனின் இந்த நேசம் எல்லாம் தெரியவே இல்லை. அந்த ரசகுல்லாவை சுவைக்கும் போதெல்லாம் வாட்ஸ்அப்பில் “தேங்க்ஸ், சூப்பர்” என செய்தி வேறு அவனுக்கு பறக்கும்.

சாக்க்ஷிக்கு, இந்த திருமணம் இப்போது வேண்டாமே, படிப்பு முடியட்டுமே என்ற எண்ணம் வந்தது இப்போது. எனவே, அதை பற்றியே அவளின் யோசனைகள் இருந்தது.

அதனால், அவள் கதீஷ்க்கு, போன் செய்யவோ., அவன் ஏன், அழைக்கவில்லை என பார்க்கவோ அவளிற்கு நேரமில்லை. மேலும் ‘அவன் வீட்டிற்கு வந்து விட்டான். என் நண்பன் என்னை, பார்க்க வீட்டிற்கு வந்துவிட்டான்’ என்ற எண்ணமே போதுமானதாக இருந்தது அவளிற்கு.

தன் அம்மாவிடம் அவ்வபோது பெருமை வேறு “பாத்தியா என் கதீஷ…… எனக்காகவே வந்துட்டான் வீட்டிற்கு, நீங்கதான் என்னமோ, அவன குத்தம் சொல்லறீங்க” என சண்டைக்கு நின்றாள்.  

அவளின் அம்மா “நான் ஒன்னும் சொல்லலடி, எல்லாம் உன் அப்பாதான். இரண்டு பேரையும், சின்னதிலிருந்து பார்க்கிறேன் எனக்கு தெரியாதா, ஆனாலும் இந்த ரசகுல்லாதான் எதுக்கு திடிர்ன்னு” என மேகலையும் கேட்டுக்  கொண்டிருந்தார்.

“போம்மா, அவனே இத்தனை வருஷத்தில் இப்போதான், ஏதோ வாங்கிட்டு வந்திருக்கான், அதபோய் “ என அதற்கும் பதில்தான் சொன்னாள், ஆனால் மனதில் பதித்துக் கொள்ளவில்லை.

எனவே, சாக்க்ஷி வர போகிற எந்த நிலையையும் எதிர்கொள்ள தயாராகவே இருந்தாள்.

****************************************************

அன்று மதியம் வீட்டிற்கு வந்த ஜெகன், வீட்டில், தனது மனைவியிடம் சத்தம் “எங்க அவன், சாப்பிட வந்துட்டானா” என்றார்.

பூங்கொடி “வந்துடுவாங்க… சொல்லிட்டுதான் போனான், சீக்கிரம் வரேன்னு” என்றார்.

ஜெகன், ராஜன் முன் ஏதும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், தன்னிடம் வந்து தன் மகன் பற்றி சொல்லுவது, கொஞ்சம் கோவத்தை வரவைக்கவே செய்தது.

எனவே, ‘எதுக்கு இவனுக்கு இந்த தேவையில்லாத வேலை’ என்ற சிந்தனையிலேயே இருந்தவருக்கு, பூங்கொடி “ஏனுங்க, என்ன ஆச்சு” எனதான் கேட்டார்.      

பொங்கிவிட்டார் ஜெகன் “என்னடி பிரச்சனை உன் பையனுக்கு, நல்லாதானே இருந்தான், போயும் போயும் பக்கத்து வீட்டுகாரன் பொண்ணுதான் கிடைச்சுதா அவன் ஆசை பட, சீக்கிரமா பொண்ணு பார்க்கணும்.

அவன் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி, இவன் கல்யாணத்த முடிச்சிடலாம்”  என, வந்த போது இருந்த பொறுமையெல்லாம் காற்றில் பறக்கவிட்டவராக கர்ஜித்துக் கொண்டிருந்தார்.  

பூங்கொடிக்கு சற்று நேரம் பிடித்தது. அவர் சொன்ன செய்தியை உள்வாங்க, ஆனால் சந்தோஷமோ, துக்கமோ இல்லை, யோசனைதான் வந்தது அவர்க்கு. ‘எப்படி முடியும், எப்போதும் அடித்துக் கொண்டும், ஒரு எல்லையிலிருந்து விலகாமல் செல்லும், மிகவும் மெச்சுர்டான தன் பசங்களிடம் இப்படி ஒரு விருப்பம் வருவதற்கு வாய்ப்பேயில்லை’ எனதான் யோசித்தது அந்து தாய் மனம்.

ஜெகனோ கைகால் கழுவி வந்தவர். தன் மகனிற்கு அழைக்க தொடங்கினார் தனது கைபேசியிலிருந்து. அவனின் போன் சத்தம் வீட்டு வரவேற்பறையில் கேட்கவும், நிமிர்ந்து பார்த்த போது, அப்போதுதான் உள் வந்து கொண்டிருந்தான் ப்ரகதீஷ்

ஜெகன், ஏதோ யோசனையில் நின்று கொண்டிருந்த பூங்கொடியிடம் “உன் அண்ணன் பொண்ணு யாராவது இருந்தா, கட்டிக்கிரானா கேளு உன் பையங்கிட்ட” என்றார், ஒரு புரியாதா கோவம் அவருள் கனன்ற கொண்டிருக்கிறது.

பூங்கொடிக்கு ‘ஐயோ, நானெங்கு போறது புது அண்ணனுக்கு, அதுவும் ஒரு பொண்ணோட வேற வேணுமாம்’ எனதான் நினைத்துக் கொண்டிருந்தார்.

ஜெகனுக்கு, அப்படியொரு கோவம் அவர்க்கு, தன் பெண்டாட்டிக்கு அண்ணன் இல்லை தம்பிதான், அதுவும் அவர்க்கு பசங்க மட்டும்தான் என புரியாத கோவம்.

‘இத்தனை வருடங்களில் எனை பார்த்து யாரும் இப்படி சொல்லியதில்லை’ என்ற கோவம். ‘இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறேன்., இப்போது பையன் விஷயத்தில் போய் ஒரு சறுக்கல்’ எனவே, அப்படியில்லை என நிருப்பிக்கும் கோவம் அவர்க்கு.

இந்த பேச்சை கேட்டுக் கொண்டே உள்ளே வந்த ப்ரகதீஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் இவர்களின் பேச்சில் கலக்க நினைக்காது மேலே செல்ல நினைக்க, பிடித்துக் கொண்டார் ஜெகன் “என்னடா காரியம் செஞ்சு வைச்சிருக்க, இன்னுமாடா பெண் பிள்ளை பின் சுற்றற” என்றார் வார்த்தைகளில் கணம் கூடியது அவரிடம்.

ப்ரகதீஷிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை “என்ன, யாரு” என்றான். அசித்தையாக.

இது தந்தை மகன் பேசும் பேச்சும் அல்ல, வீட்டில் பொதுவாக, இருவரும் நல்ல முறையிலேயே பேசிக் கொள்வர். எங்கும் எந்த திருத்தம் சொல்லுவதற்கும் கூட மகன் தவறு செய்யாதவன்.

சிறு வயது முதலே அவன் அப்படிதான். வளர்ப்பு ஜீவன்கள் விஷயத்திலிருந்து அவரின் தொழில் வரை அனைத்திலும் கூடவே நிற்பவன் இப்போது மட்டும் எப்படி வேறாகி போனான் என இப்போதுதான் யோசிக்க தொடங்கினார்.

எனவே கொஞ்சம் அமைதியானார். “சரி, முதலில் சாப்பிடலாம் வா” என்றார் தன்மையாய். ப்ரகதீஷிற்கும், ஏதோ புரிவது போல் இருந்தது. மேலும், அவனிற்கு சற்று நேரமும் தேவைப்பட, “சரியென” எதுவும் சொல்லாமல் உணவு மேசை சென்று அமர்ந்து கொண்டான்.

பூங்கொடிதான் அமைதியாக இவர்களை, எந்த லிஸ்டில் சேர்ப்பது என தெரியாமல், உணவு பரிமாற சென்றார். ப்ரகதீஷிற்கு உணவு இறங்கவில்லை. அவனின் இடது கை விரல்கள் மேசையில் எதையோ தட்டிய வண்ணம் இருந்தது. பெற்றோர்க்கு இது புரியத்தான் செய்தது. ஆனாலும் இருவரும் தங்கள் வேலையை பார்த்தனர்.

இப்போதுதான் அவளை, தோழி என்ற நிலையிலிருந்து தனக்கானவள் என்ற நிலைக்கு எப்படி நகர்த்துவது என சிந்தனை செய்துக் கொண்டிருக்கிறான்.

அதற்குள் வீடு வரை தெரிந்து, அதுவும் தன் தந்தையில் காதிற்கு செல்லுமளவிற்கு தனது செயல் இருந்ததா! என யோசனை வேறு அவனிடம்.

உணவு முடித்து, ஹாலில் சோபாவில் சென்று, பின்புறம் தலை சாய்த்து அமர்ந்து கொண்டான். தன் தந்தையை எப்படி எதிர்கொள்வது என்ற சிந்தனை எழுந்தது. கூடவே, நேற்று இரவு கண்கள் தெறித்து விழும் அளவிற்கு, தன்னிடமிருந்து ரசகுல்லாவை வாங்கிக்கொண்ட ‘தன் சுந்தரி’ நியாபகமும் வந்தது.

எல்லாவகையிலும் உள் புகுந்து, இத்தனை நாள் அவன் உணராத ஒரு மந்திரம் போல் ‘என்னை பார்க்க வந்த மாப்பிள்ளைகிட்ட உன் பெயர் சொல்லிட்டேன்’ என அப்பாவியாய் விழி விரித்து நின்றவளை, விட மனமில்லாமல்தான், என்ன செய்வது என தெரியாமல் அமைதியாக இருக்கிறான்.

இப்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது, சொல்ல வேண்டும், கேட்க வேண்டும், பேச வேண்டும் இப்படி நிறைய வேண்டும் மட்டும்தான் அவனிடம். எனவே பெருமூச்சொன்று எழுந்தது அவனிடத்தில்.   

தந்தையையே எதிர்கொள்ள பயந்தால், இன்னும் அவளை எப்படி சமாளிப்பது என தோன்ற, இறுகிக் கிடந்த முகத்தசைகள் எல்லாம் நாலு கப் பூஸ்ட் குடித்த மினு மினுப்பை காட்டியது. ஒரு மந்திர புன்னகை வந்துதது அவனின் இதழ்களில்.

அவர் தந்தை வந்து அமரும் சத்தம் கேட்டு நிமிர்ந்து அமர்ந்தான். தன் தந்தையை, சங்கடப்படுத்தாமல் தானே தொடங்கினான் “ப்பா, அது…… அவ….., சாக்க்ஷியையே எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கப்பா” உடைத்து விட்டான். தயக்கங்கள் இல்லை அவனிடம்.

அவனின் தந்தை ஒன்றும் சொல்லவில்லை,  தன் மகனிடமிருந்த இந்த சொல்லை அவர் எதிர்பார்க்கவில்லை, மிகவும் கட்டுபட்டவன். எங்கும், குடும்பம் தாண்டிதான், மற்றது பற்றி சிந்தனை வரும் அவனிற்கு.

அப்படிதான் அவரின் வளர்ப்பு இருந்தது. அக்காக்களின் விசேஷம் என்றால் முன் நிற்பது, குடும்ப விழாக்கள் என்றால், அனைத்துக்கும் உதவுவது என அனைத்தும் பழக்கி இருந்தார் ஜெகன். தனது மகனின்றி, தனது சொந்த பந்தங்களிடம் ஒரு நகர்வு இருக்க கூடாது என்பதே அவரின் எண்ணம், அப்படியேவும்தான் நடந்து கொண்டிருக்கிறது.  

அதனால்தான் “சென்னைக்கு வேலைக்கு செல்கிறேன்” என்றவனிடம் “இல்லப்பா, இதுதான் நமக்கானது, இத பாரு, போதும்” என சொன்ன போது.. சிறு முக சுளிப்பை கூட முகத்தில் காட்டாமல். அழகாய் தன் பாதையையே, அவனின் பாதையாக செய்து கொண்டிருப்பவனிடமிருந்து இப்படி ஒரு வேண்டுகோளை எதிர்பார்க்கவில்லை அவர்.   

இரண்டு நிமிடம் அமர்ந்திருந்தார். ஏதும் சொல்லாமல் எழுந்து உள்ளே சென்றுவிட்டார். ஆனால், கதீஷின் நம்பிக்கைதான் உடைந்து போனது. தன் தந்தை, தனக்கு உதவுவார் என நினைத்தான் அவன். அவரின் இந்த புறக்கணிப்பு அவனிற்கு பெரிய ஏமாற்றம்.  

தன் அன்னை ஏதேனும் சொல்லுவாரா என நிமிர்ந்து பார்த்தான்.

பூங்கொடியும் “விட்டுடா, நமக்கு சரி வராதுடா” என்றார்.

கதீஷ் “ஏம்மா” என்றான் கொஞ்சலாக.

“என்னடா, புரியாம பேசற, நமக்கு இதெல்லாம் ஒத்து வராதுடா, நம்ம சொந்தத்தில் நிறைய பொண்ணுங்க இருக்குடா, அவள விட அழகா, என்ன சொல்ல, அவள விட ” என அவர் இன்னும் எதுவோ சொல்ல வர.

“அம்மா அவளும் சுத்தி சுத்தி பார்த்தா எங்கையாவது நம்ம சொந்தமாதான் இருப்பாங்க” என்றான் வேண்டுதலான குரலில்.    

“அதெல்லாம் அவ அப்பா ஒத்துக்க மாட்டார்டா, அத்தோட உங்க அப்பா, அங்க போய் நிக்க மாட்டார்டா, விட்டுடு” என்றார் கறாராக. மேலும் அவனிடம் நின்று பேசவும் இல்லை வெளியே சென்றுவிட்டார்.

அதன்பின், தினமும் ஒவ்வெருவராக வந்தனர், அவனின் தாய் மாமா, அக்காக்கள், அவர்களின் வீட்டுகாரர்கள் என பெரும் படைகளே அவனை தங்கள் வழிக்கு கொண்டு வர போராட்டம் நடத்த..

எதற்கும் மசியாமல் நின்றான். அவர்களின் பேச்சுகள் வேறு இன்னும் இன்னும் அவனின் வெறியை அதிகமாக்கியதே தவிர குறைக்கவில்லை.  முடிவாக “நான் சொல்லறத நீங்க எப்படி கேட்கலையோ, அதே போல் நீங்க சொல்றத நான் ஏன் கேட்கணும்” என்றான் எல்லோரிடமும்.

தன்மையானவனை, வன்மையானவனாக மாற்றினாள் அவனின் சுந்தரி. ஆனால், அவளிற்கு இதெல்லாம் தெரியவேயில்லை. இப்போது எங்கும் அவள் நினைவே அவனிடம்.

இந்த ஒரு வார சண்டையில் அவனின் அப்பா “இங்க பாருடா, அந்த ராஜன் வந்து எங்கிட்ட கத்திட்டு போய்ட்டான், புதன் கிழம பொண்ணு பார்க்க வராங்களாம், நீ போய் ஏதும் பிரச்சனை பண்ணி, என் மானத்தை வாங்கிடாதா” என்று சொல்லியே இருந்தார்.

இவனிற்கு அப்படியொரு எண்ணமெல்லாம் இல்லை. மேலும் அவ்வளவு தரம் தாழ்ந்தவனா நான், இப்படி தன்னை நினைத்துவிட்டாரே தன் தந்தை எனதான் தோன்றியது அவனிற்கு.

மேலும் தன் விருப்பம் தன்னோடு மட்டுமே, தன்னை தாண்டி தன்னவளுக்கு கூட தெரியாத நிலையில், தான் செய்வதற்கு ஏதுமில்லை என் தோன்றியது. மேலும் தன் குடும்பத்தை எதிர்த்து, அவர்களை தலை குனியவைத்து, தனக்கும் மட்டுமான வாழ்வை தேடுபவனா நான் என பல யோசனை, அதனால், தன் நேசத்தை அவளிடம் இட்டு நிரப்ப வழியில்லாமல், தனது விழியினுள் வைத்து, மட்டும் காத்துக் கொண்டான்.

இந்த ஒரு வாரமும் அவனிடம் இப்படி பல போராட்டங்கள், எதிலும் மனம் செல்லவில்லை. சில சமயம் என்ன ஏது என யோசிக்காமல் அவளிடம் தன் நேசத்தை சொல்லி விடலாமா, என கூட தோன்றியது.

அவளிடமிருந்து வரும் எந்த வாட்ஸ்அப் செய்திக்கும் கூட இவன் பதில் அனுப்புவதில்லை. கைகள் ஆசையாக அதை வருடும்.. ‘அருகில் இருந்த போது அவளின், அருமை தெரியவில்லையடா உனக்கு’ என அது கிண்டல் செய்வதாக தோன்றும்.  

அவளின் வீட்டை கடக்கும் போதெல்லாம், வாசலிலே எங்காவது நிற்பாளா, என கண்கள் தன் போல் அவளை தேடுவதை தடுக்க முடியவில்லை அவனாள். ஒரு கட்டத்தில் ஏதும் வேலை ஓடாமல், அந்த திங்களன்று கிளம்பிவிட்டான், சென்னைக்கு, அவனின் நண்பர்கள் அங்குதான், சோழிங்கநல்லூரில் ஒரு அப்பார்மேன்டில தங்கியிருக்கின்றனர். அங்கு போய் நின்றான், அன்று இரவு. கேள்வியே கேட்டகாமல் அவனை வரவேற்றது நண்பர்கள் கூட்டம்.   

.  

 

  

 

  

 

       

     

      

 

                             

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

 

Advertisement