Advertisement

மிட்டாய் புயலே-6

ப்ரகதீஷ் மற்றும் சாக்க்ஷியின் குடும்பத்திற்கு முக்கிய தொழிலே ரைஸ் மில்தான். அது அவர்களின் வழி வழியான தொழில், அதுவும் கூட அவர்களின் இந்த குடும்ப விலகலுக்கு காரணமாக இருக்கலாம்.

பிள்ளைகளின் இனிஷியலை கொண்டு தொடங்கியதனால், எப்போதும் ஒரு போட்டி இருக்கும் அவர்களுக்குள். அது வீட்டிலும் ஒலிக்கும். இந்த நிலையில், பூங்கொடிக்கு, இவர்களின் நட்பு மேல் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை.

எப்போதும் இருதலைகளும் சேர்ந்தே செல்லுவதும், அடித்தக் கொள்வதும் என இருப்பதை மிகவும் ரசிக்கதான் செய்வார். இப்போதெல்லாம் அது போன்ற நிகழ்வுகளும், சிறிய சிறிய சண்டைகளும், அதை, தான், தீர்த்து வைப்பதுமாக இருக்கும் ஒரு தாய்க்கு இவர்களின் விலகல் கண்ணை உறுத்தியது.

மேலும் எப்படி கேட்பது என தயங்கி தயங்கி நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அதேகெல்லாம் அவசியமே இல்லாமல், விடை வந்தது அவர் கணவரிடமிருந்து.

***************          

ப்ரகதீஷின் சென்னை பயணம் தோழியான சாக்க்ஷிக்கு தெரியவில்லை. இரண்டு நாள் சென்ற நிலையில், தன்னிடம் பேசுவான், ஒரு மெசேஜ்ஜாவது செய்வான் என பொறுத்து பார்த்தள்.

இந்த இரண்டு நாளில் அவனிடமிருந்து எந்த அழைப்பும் இல்லாததால், அவனிற்கு போனில் அழைத்தாள். முதல் தரம் எடுக்கவில்லை….. ‘சரி, ஏதோ, வேலை’ என விட்டு விட்டாள்.

கல்லூரி முடித்து வந்து, மாலையும் அழைத்தாள், இப்போதும் பதிலில்லை. ஒரு ரிட்டென் மெசேஜ்ஜும் இல்லை. எனவே, கோவம் வந்து. தொடர்ந்து நாலு முறை அழைத்தாள்.

அவன், அங்கு அப்போதுதான் மீட்டிங் முடித்து கொண்டு, ஊருக்கு கிளம்பி விட்டிருந்தான். வண்டியை டிரைவ் செய்துக் கொண்டிருந்தான். காலையிலேயே போன் பார்த்தான் ‘இப்போது வேண்டாம், அப்புறம் பேசலாம்’ என்றிருந்தான். பிறகு வேலை இழுத்துக் கொண்டது.

இப்போது மாலை, கல்லூரி முடிந்து, இவன் எண்ணியிருந்த நேரத்திற்கு முன்னதாக அழைக்கவும். போனையே பார்த்திருந்தான். இப்போதுதான்., தான் சென்ற மீட்டிங்கில், அந்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல், தாங்கள் கட்ட உள்ள பெட்ரோல் பங்க், இடத்தில் அமைவது குறித்து, பேச்சு வார்த்தை முடித்து, ஒரு சாதித்த மனநிலையில் வந்து கொண்டிருந்தவனுக்கு……. இவளின் அழைப்பு, ஏதோ உள்ளுக்குள் உடையும் சத்தத்தை தந்தது. கூடவே ஒரு அமைதியையும். தன்னை தேடுபவர்கள் இருப்பதுதான் வாழ்க்கையை ருசிக்க வைக்கும். அதுவும் இப்போதுதான்…… கொஞ்சமாக தடுமாற தொடங்கி இருப்பவனும், இந்த அழைப்பில் கசிய தொடங்க………

அவளின் இரண்டாவது அழைப்பை ஏற்று, “ம்…….” என்றான் ஏதோ கனவில் இருப்பவன் போல ‘மாரியாத்தா, சாக்கி’ என்ற வார்த்தையை தவிர வேறு எதிர்பார்த்திராதவளுக்கு இந்த ஒரேழுத்து சொல், கொஞ்சம் அதிர்ச்சியைதான் தந்தது..                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

இவளும் “என்ன பிஸியா, நான் அப்புறம் கூப்பிடவா’ என்றாள் அமைதியாகி விட்ட குரலில்.

கோவமாக இருந்தவளுக்கு இப்போது அந்த உணர்வு போய், ஏதோ அவன் வேலையாக இருப்பதாக தோன்ற இவளும் அமைதியாக வினவ.

கதீஷ் “இல்ல, சொல்லு“ என்றான். ‘இது என்ன குரல்’ என அவளிற்கு புரியவில்லை. ஏதோ கட்டுண்டவன் போல் பேசினான்.

சாக்க்ஷி, வரவழைத்துக் கொண்ட குரலில் “என்ன ரெண்டு நாளா, போன் பண்ணால, எங்க வெளியூரா” என்றாள் கேள்வியாய்.

ஆனால், அவளின் இந்த கேள்வியில் எங்கோ உள்ளே இருந்த அசுரன் வெளிவர “எதுக்கு சொல்லணும்” என்றான்.. உள்ளே முணுக் முனுக் என்றிருந்த கோவம் ஏனோ வெளியே வந்தது.

உரிமை கோவம் ‘அன்னிக்கு இறக்கி விட்டப்ப, உள்ள வான்னு கூப்பிடல, அவ அப்பா என்னை வெளிய போன்னு சொன்னப்பா, அவர ஒன்னும் கேட்கல, இப்போ மட்டும் நான் இவ கிட்ட சொல்லிட்டு போகலையேன்னு கோவமாம், போடி போ, நல்லா தேடு, இனிமேல் உன்னை எப்படி தேட வைக்கிறேன் பார்’ என உள்ளே குமரிக் கொண்டிருந்தான் கதீஷ்.    

ஆனால், சாக்க்ஷி “என்னாச்சு, நான் அப்புறம் பேசறேன்” என சொல்லி போனை வைத்து விட்டாள். எங்கோ இடறியது இவளிற்கு. ‘என்ன சொல்லறான் இவன்’ ‘ஏன், எங்கிட்ட சொல்லிட்டு போகல, ஊருக்கு போகும் போதுன்னு கேட்டேன், ஆனா, என் மேல் கோவமா இருக்கான்’ இதே யோசனையுடன் கீழே வந்தாள்.

அவளின் தந்தையும், தாயும் ஏதோ தீவிர வாக்குவாதத்தில் இருக்க, அதெல்லாம்   தெரியவில்லை அவளிற்கு. அவனின் நினைவே இவளிடம், ஆனால் அதற்கு இது தகுந்த நேரமில்லை போலும், அவளின் அப்பா அழைத்தார் “சாக்க்ஷி, இங்க வா” என.   

திரும்பவும் அவளிடம் திருமண பேச்சு எடுக்கப்பட்டது. இப்போதும் ஏதும் மறுத்து சொல்லவில்லை “பா நீங்க பாருங்க, கதீஷ் மட்டும் வரட்டுமே” என்றாள் தன் வேலையில் கண்ணாக.

ராஜன்  ‘பார்த்தாயா’ என்பது போல் ஒரு பார்வை தன் மனைவியை பார்த்தார். அவருக்கு என்னமோ மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ‘நாம் சிறு வயதிலேயே கண்டித்திருக்க வேண்டுமோ’ என்ற எண்ணம் எழ தொடங்கிவிட்டது.

ஆனால் என்ன தேடியும் மாப்பிள்ளை சரியாக அமையவில்லை. மேலும் ஏதோ ஒரு பரவலான செய்தி வேறு தன் பெண் பற்றி அடிபடுவதுமாக இருக்க, ‘அப்படி இல்லை’ என தனக்கு சொல்ல நினைத்தாரோ, இல்லை ‘பேசுபவர்களுக்கு சொல்ல நினைத்தாரோ’ ஆனால், ஏதோ ஒரு இக்கட்டில் மட்டும் உள்ளார் என தெரிந்தது அவர் முகம் பார்க்கும் போது.

இந்த இவரின் நிலை மற்றவர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. ‘இன்னும் அதிகமாக கதைகள் பரப்பப்பட்டன’. இரண்டு பெண்கள் மட்டும்தான், சொத்து வேறு நிறைய இருப்பதால், இப்போது தானாகவே மாப்பிள்ளை தேடி வந்தது. ஏதோ அவர்கள்தான் வாழ்க்கை தருபவர்கள் போல் பேச்ச்சு வேறு…

இதில் கொஞ்சம் கொஞ்சமாக உடைய தொடங்கினார், சுந்தரராஜன்

அப்படி தன் பெண்ணை ‘ஏனோ தானோவென திருமணம் முடிக்கவும்’ அவர்க்கு விருப்பமில்லை. எனவே, பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தார். கடைசி கடைசியாக ‘இந்த வரனேனும் அமைய வேண்டுமே’ என்ற எண்ணம் மட்டுமே அவரிடம். மேலும் ‘கதீஷ்’ என்பவன் இனி, என் மகள் வாழ்வில் இருக்க கூடாது என நினைத்துவிட்டார்.

இப்போது தன் பெண்ணிடம் பேசிய பிறகு திருப்திதான் என்றாலும், ‘கதீஷ் மட்டும் வரட்டும்ப்பா’ என்ற வார்த்தை, ஒரு எரிச்சலை தர. இதுவரை தன் பெண்ணை நினைத்து இளகி இருந்த அவரின் மனம் மீண்டும் மலை உச்சிக்கு ஏறியது.

ராஜன் “ஒழுங்கா கல்யாணம் செய்து போற வழியை பார்“ என்ற வார்த்தைதான் வந்தது அவர் வாயிலிருந்து.

கேட்டிருந்த சாக்க்ஷிக்கு எதிர்த்து பேசத்தான் தோன்றியது. ஆனால் ஏனோ அமைதியானாள். தன் தந்தையையே பார்த்திருந்தாள் மௌனமாக. தன் தந்தை உணவு உண்ண அமரவும் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ராஜனும் அவளை பார்த்துக் கொண்டே உண்ண தொடங்கினார். ஏதும் பேசவில்லை. உணவு முடித்து, வெளியே உள்ள வராண்டாவில் சென்று அமர்ந்து கொண்டார். கொஞ்ச நேரம் சிந்தனை சென்றது போலும், இப்போது “சாக்க்ஷிம்மா” என்றார். குரல் தெளிவாக இருந்தது.

இவளும், துள்ளி கொண்டுதான் சென்றாள் அவரின் அழைப்புக்கு “என்னாப்பா, கிளியர்டா, உங்க பொண்ணுப்பா நான்” என்றாள் அவர் ஏதும் கேட்க்காமல்.

ராஜனுக்கு, அந்த வெள்ளை சிரிப்பு பெரிய நிம்மதியை தந்தது. “கண்டிப்பாடா, அது கொஞ்சம் குழப்பம், அவ்வளவுதான், விடு “ என பெருமூச்சு விட்டார்.

“கோவிலில் வைத்து பெண் பார்க்கும் நிகழ்வு செய்து விடலாம்மா, நீ நார்மலா இரு போதும், மாப்பிள்ளை பற்றி நல்லா விசாரிச்சாச்சு” என்றார் சிரித்தவாறே.

சாக்க்ஷியும் “எந்த ஊருப்பா” என்றாள் அந்த பேச்சில் இயல்பாய் ஒன்றி. பெருங்குரலெடுத்து சிரித்தார் ராஜன். தன் மனைவியை அழைத்து “மேகலை, இங்க பாரு, உன் பொண்ணு எந்த ஊருன்னு கேட்கறா” என்றார் சந்தோஷமாக..

பின் தன் முட்டியை நீவிக்கொண்டே “வரட்டும்டா, பார்த்துட்டு போகட்டும், எல்லாம் சரியாக வரட்டும், சொல்றேன்“ என்றார். இதை சொல்லும் போது அவர் முகம் சற்று கவலை ரேகை கொண்டதோ.

பார்த்திருந்த மகள் எழுந்து சென்று அவரின் தோள்களை அழுத்திவிட தொடங்கினாள் “ப்பா, ரிலாக்ஸ், நீங்க சொன்னா சரிதான்” என்றவாறே.

அதன்பின் பேச்சுகள் அவரின் தொழில் குறித்து சென்றது. எப்போதும் சாக்க்ஷிக்கு தங்களது ரைஸ் மில் மிகவும் பிடிக்கும். என்ன வகையான அரிசி, எப்படி கணக்கு வைத்து நெல்லை அரிசியாக்குகிறார்கள், என தந்தையை கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பாள்.

அதானல், எப்போதும் அவர்களிடம் தொழில் குறித்த பேச்சு வார்த்தை இயல்பாய் எழும். இப்போதும் அப்படிதான் தொடங்கியது. “என்னப்பா, இப்போ எல்லாம், அதிக நேரம் வீட்டில் இருக்கீங்க, இப்போ சீசன் இல்லையா” என்றாள்.

“இல்லடா, உனக்கு ஒரு நல்லது செஞ்சிட்டா, கொஞ்சம் நிம்மதியா, இருக்கும்ன்னு பார்த்தேன். அத்தோட, இனி குத்தகை மாத்தனும்டா, அதுக்கும் கொஞ்சம் அலைச்சல், அதான்” என்றார். பிள்ளையிடம் கணக்கு சொல்லும் தந்தை சாமியாக.

“ம்ம். சீக்கிரம் செய்ங்கப்பா, இப்படி சோம்பேரியா இருந்தா, எனக்கு எப்படி வைர ஒட்டியாணம் போடறது” என்றாள். குரலில் கவலை ரேகையுடன்.

இவளின் குரல் மட்டும் தந்தையின் காதில் விழுந்ததே தவிர, வார்த்தைகள் விழவில்லை. எனவே, ராஜன் “அதுக்கென்னடாம்மா, உங்க ரெண்டு பேருக்கும்தானே எல்லாம், செய்திடலாம்” என்றார் நிறைவாக, மகளின் கவலையான குரல் பொறுக்காத தந்தையாக.

கேட்டிருந்த மேகலைதான் “ஏங்க, அவ வைர ஒட்டியாணம் கேட்கறா, ஏதோ, ஒட்டு போட்டு கேட்கல, நீங்க என்னமோ இரண்டுன்னு சொல்றீங்க, பொண்ணுக எப்போதும் பிடுங்கரதிலேயே குறியா இருங்கடி.” என இன்னும் என்ன சொல்லியிருப்பாரோ

வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்டது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருந்தனர். யாருடா இது! இந்த நேரத்தில் எனதான் யோசனை, மணி இரவு பத்தரைக்கு மேல் இருக்கும்.

ராஜன் சென்று கதவை திறக்க, நின்றிருந்தான் கதீஷ்……. உதட்டில் புன்னகையும், கண்ணில் சோர்வு கலந்த பிடிவாதமுமாக. பார்த்தவருக்கு ஏதோ போல் ஆனது ‘வா வெனவும்’ சொல்லவில்லை., ‘போவென விரட்டவும் முடியவில்லை.

இது வரை, அவரிடமிருந்த இலகுத் தன்மை விடைபெற, வந்து அமர்ந்து கொண்டார் ஹாலில்.

சாக்க்ஷிக்கு தன் தந்தையை நினைத்து சிரிப்புதான் வந்தது. ஆனால், தன்னை பார்க்க வந்த தோழனை நினைத்து முகம் பெருமையில் மின்னியது. ‘எதற்காகவும் என்னை விட்டு கொடுக்கமாட்டான்’ என தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

அவளிற்கு தெரியவில்லை ‘உனக்காக கூட அவன் உன்னை விடமாட்டான்.’ என யார் சொல்வது அவளிடம்.  

‘இன்று மாலை தனது பேச்சின் நிலை உணர்ந்து வந்துவிட்டான் பார்’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டு, ஆர்பாட்டமாக “ஹேய்ய், கதீஷ் வா வா” என வரவேற்றாள் சாக்க்ஷி.

ராஜனின் முகம் வீழ்ந்துவிட்டது. ஆனால் ஒரு தந்தையாக வீம்பு இருக்கவே செய்தது, ‘என் பேச்சை கேட்ப்பாள், என் மகள்’ என்ற எண்ணத்தை மனதில் பதியவைத்துக் கொண்டவர். அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தார்..        

யாரையும் கண்டுகொள்ளவில்லை கதீஷ், இப்போதுதான் புதிதாக பார்ப்பது போல் பார்த்தான் தனது சாக்க்ஷியை.. பார்வையில் ரசனை கூடி தெரிந்தது, அவளை துகள் துகளாக துளைத்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வை புரியவில்லை அவளிற்கு, “பாருங்கப்பா, ரோஷக்காரன் கடைசியா என்ன பார்க்க வீட்டுக்கு வந்துட்டான், ஏதோ சண்டைக்காரன் மாதிரி வெளியவே இறக்கி விட்டு போறவன் வீட்டுக்கு வந்துட்டான், இரு இரு உனக்கு ஒரு நியூஸ் இருக்கு, அப்புறம் சொல்லறேன்” என தன் போல இயல்பாய் பேசினாள் சாக்க்ஷி..

நினைவு வந்தவளாக “ஏதாவது சாப்பிடுறியா” என்றாள். ராஜனும் மேகலையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கதீஷ் “காபி மட்டும் கொடு சாக்க்ஷி “ என்றான்.. இவளும் உள்ளே சென்றாள்..

ராஜனுக்கு, கதீஷ் இப்போது உரிமையாக வீட்டில் அமர்வதும், அவளை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதும், ஒரு தந்தையாக, அவர் மனதில் ஒரு தட தடப்பை கொடுத்தது. பொறுக்க முடியாமல் எழுந்து உள்ளே சென்றார்.

கதீஷ் சிரித்துக் கொண்டான்.. சாக்க்ஷி, காபியுடன் அவனின் எதிரில் வந்து அமர்ந்தாள். அவளிடமிருந்து காபியை வாங்கிக் கொண்டவன் “உனக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்“ என்றான்.

“ம்…… “ என்றாள் சுவாரசியமே இல்லாமல். ஆனால், கதீஷ் அவளின் ஒவ்வெரு அசைவையும் கவனிக்க தொடங்கினான். அழகான லெமன் எல்லோ கலர் டாப், அதற்கு பொருத்தமான பச்சை கலர் லெகின், தனது அளவான கூந்தலை., தூக்கி கொண்டையிட்டு, அவன் முன், தனது நகங்களை வருடியவண்ணம் ஏதோ அழ்ந்த யோசனையிலிருந்தாள்.

அவளின் நெரித்த புருவம் கண்டு வாடியது அவன் முகம், ஆனால் இயல்பாய் நெருங்க முடியவில்லை அவளிடம். என்னதான் இரண்டு மாதமாக, அவள் தனது மனதில் மையம் கொண்டிருந்தாலும், சிறுவயது நட்பு இன்னும் ஒட்டிக் கொண்டிருக்க, கண்ணியம் காக்கும் காதலனானான் கதீஷ்.       

சாக்க்ஷி “அப்பா, மாப்பிள்ளை பார்த்திருக்கார்” என்றாள் வெறுமையான குரலில்.

கதிஷுக்கு உள்ளுக்குள் வலித்தாலும் “இப்போ எதுக்கு இவ்வளவோ அவசரம், நீ இன்னும் படிப்பை முடிக்கலையே” என்றான்..

சாக்க்ஷிக்கு புரியவேயில்லை இவனின் பேச்சு ‘முதல் முறை வரன் வந்த போது, ஓகேன்னு சொல்லிடுன்னு சொன்ன கதீஷா இது’ என பார்த்திருந்தாள் சாக்க்ஷி.  

அவனிற்கு, அவளை பார்க்க வந்த ஆவலே குறைந்து போய், எரிச்சல் வந்தது “தனது இரு கைகள் கொண்டு தனது கண்களை தேய்த்துக் கொண்டான் “சரி விடு பார்த்துக்கலாம், காலையில் வரேன்” என்றான் ஒட்டாத குரலில்.

பின் கிளம்பியவனாக “சரி வெளியே வா, ரசகுல்லா வாங்கிட்டு வந்தேன், கார்ல இருக்கு, வா எடுத்து தரேன்” என்றான்.

கண்கள் ஒளிர சாக்க்ஷி அவனிடம் “என்ன புதுசா இருக்கு, யாருக்கு பா வாங்கிட்டு வந்த, கேர்ள் பிரின்ட்டுக்கா, மிச்ச மீதியெல்லாம், இங்க கொடுக்காத” என்றாள் விளையாட்டாய்.

ஒரு தெய்வீக புன்னகை ப்ரகதீஷிடம்….. “வா” என்றான் “டி” என்ற எழுத்தை உள்ளே விழுங்கியவண்ணம்.

ஏதோ கால் கிலோ, அரை கிலோ என நினைத்து சென்றவளுக்கு , அழகாக பேக் செய்யப்பட்ட, அவள் விரும்பும் கடையின் பெயர் இடம் பெற்ற இரண்டு கிலோ கண்டையினர் டப்பாவை, அவன் வெளியே எடுக்கவும்

சாக்க்ஷி பயந்து போய், இரண்டடி பின் சென்றாள்…….. இந்த அன்பின் வழி புதிது அவளிற்கு. கொஞ்சம் மிரட்டவும் செய்தது அவளை. கண்விரித்து நின்றவளிடம்  டப்பாவை, அவளின் கைகளில் திணித்தான் கதீஷ்.

பின் ஏதும் சொல்லாமல் வண்டியெடுத்து சென்றுவிட்டான்.             

   

  

  

    

  

 

 

 

   

   

 

 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

Advertisement