Advertisement

மிட்டாய் புயலே-24

கதீஷின் அக்கா ஜெயம், அன்று மாலையே சாக்க்ஷி வீட்டிற்கு சென்று…. ‘நாங்கள் பெண் பார்க்க வருகிறோம்’ என சொல்லி, வந்தார்.

பாக்கியம் கூட “ஏன் பா, அவங்க வீட்டுல இப்போதான் கல்யாணம் வர போகுதுல்ல, அது முடியட்டும் பார்த்துக்கலாம்” என்றார்.

ஆனால், ஜெகன் பெண் பிள்ளைகளை பெற்றவர் “அதெப்படிம்மா…. சின்ன பிள்ளைக்கு கல்யாணம் செய்யறாங்க…. நம்ம பையன் நமக்காக…. காத்திருக்க சொல்லியிருக்கான்…. அவங்களும் சம்மதிச்சு, தங்கை கல்யாணத்தை செய்யறாங்க…

அப்போ நம்ம மரியாதையை, நம்ம தரத்தை நாம காட்டனுமில்ல….

அவங்க புது சம்மந்திகள் எல்லாம் என்ன நினைப்பாங்க…. நம்ம வீட்டுக்கு வர போற பொண்ண தப்ப நினைக்க கூடாதுல்ல….

நிச்சையம் செய்துட்டு, இரண்டு மாசத்துக்கு இவங்களுக்கு, நாள் பொருந்தி வரலை, அதனால கல்யாணம் தள்ளி வைச்சிருக்கோம்னு சொல்லி….. நாம அங்க நின்னா மதிப்புத்தானே…

அதவிட்டுட்டு, இப்போ போயி, போட்டி போட்டுக்கிட்டு இருக்க முடியாது பாக்கியம். இதெலல்லாம்…. நான் பார்த்துக்கிறேன் விடு” என்றார் கறாராக.   

பாக்கியம் இப்போது தவறாக நினைத்து சொல்லவில்லை. ஆனால் இந்த சூழ்நிலையில் அவரின் வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அவ்வளவே.

ஆனால் இப்போது பாக்கியம் முகம் சுளிக்காமல். “சரிப்பா” என சொல்லி உள்ளே சென்றுவிட்டார்.

ஜெயம் வந்து சென்றதிலிருந்து, இருவரின் வீடும் பரபரப்பானது. கதீஷ் போன் செய்து சாக்க்ஷியிடம் பேசி…. வைத்திருந்தான். ஆனால் சரியாக விஷயத்தை சொல்லவில்லை.

எனவே, இவள் கிளம்பி மில்லுக்கு சென்றுவிட்டாள். மாலை போல்தான் சாக்க்ஷிக்கு விஷயமே தெரிந்தது.

ஹாலில், அமர்ந்து கொண்டு காபி குடித்துக் கொண்டிருந்தவளிடம், வரதன்தான், விஷயத்தை சொன்னார்… இல்லை கேட்டார்…. “என்னாம்மா, இவ்வளவு சீக்கிரம் பொண்ணு பார்க்க ஒத்துக்கிட்டாங்க” என்றார்.

முதலில் அசட்டையாக “யாரு சித்தப்பா…” என்றாள் புரியாதவளாக.

எல்லோரும் இவளையே வினோதமாக பார்க்க, ‘என்ன’ என்பதாக தன் அன்னையை பார்த்தாள் சாக்க்ஷி. அவரும் சாந்தாவும் சிரித்துக் கொண்டே நின்றிருந்தனர்.

அப்போதுதான் எல்லோருக்கும் தெரிந்தது சாக்க்ஷிக்கு இன்னும் செய்தி தெரியாது என. அக்க்ஷராதான், தன் அக்காவின் அருகே வந்து அவளை காட்டிக் கொண்டு “மாமா வீட்டிலிருந்து, ஜெயக்காவும் அவங்க வீட்டுகாரரும் வந்தாங்க…. இந்த புள்ளைய, போனா போகுதுன்னு எங்க தம்பிக்கு பாக்க வரோம்ன்னு சொன்னாங்க” என்றாள் ராகமாக இழுத்து இழுத்து…      

என்ன சொல்லுவது… எப்படி தன் உணர்வை வெளிப்படுத்த்துவது… என சாக்க்ஷி விக்கித்து நின்றாள் அந்த ஹாலில்.

அனைவரும் அவள் முகத்தையே… ஏதோ, எக்ஸிமிஷன் போல பார்த்திருக்க… சாக்க்ஷிக்கு வெட்கத்திற்கு பதில் கண்ணீர் வந்தது.

அக்க்ஷரா அவளின் கண்ணீர் துடைத்து…. “மாமா, இப்போ ஏழு மணிக்கு வருவாங்க…. உன்னை ரெடியாக சொன்னாங்க… கிளம்புங்க… கிளம்புங்க…” என்றாள் அக்க்ஷரா.

தன் அம்மாவை ஒரு பார்வை பார்த்தாள்…. சாக்க்ஷி ‘என்னோடு வாங்க’ என்ற செய்தி இருந்தது அதில். நேரே அவருடன் சமையலறை சென்றாள்.

கூடவே சாந்தாவும் சிரித்துக் கொண்டே வந்தார். சாக்க்ஷி விசாரிக்க தொடங்கினாள் “உண்மையா அவங்க வீட்டிலிருந்து வந்தாங்களா..” என தொடங்கி… எப்போது வந்தாங்க, என்ன சொன்னாங்க, எப்போ பார்க்க வரேன்னாங்க என்பது வரை… எல்லாம் கேட்டுக் கொண்டாள் அவள்.

இன்னும் முழுதாக அவளால் நம்ப முடியவில்லை. சாந்தாதான் “போடி போ… என்னமோ இப்படி கொடையர… எல்லாம் சரியாதான் நடக்குது… நீ கல்யாண பொண்ணா லட்சணமா…. இருக்க பழகு… அப்புறம் பெரியவங்க நாங்க பார்த்துக்கிறோம் எல்லாம்….” என்றார் கட் அண்ட் ரைட்டாக.   

ஆனால் சாக்க்ஷிக்கு இதெல்லாம் ஏதும் நம்ப முடியவில்லை… அவள் இன்னும் நேசம், திருமணம், சந்தோசம் என்ற அமைப்புக்குள் வரவே இல்லை…

அக்க்ஷரா சொல்லியவுடன்… இன்னும் ஏதோ ஒரு சிந்தனையில்தான்  உள்ளே சென்றாள் சாக்க்ஷி. பலவித குழப்பம்… அதற்குள் எல்லாம் நடக்குமா, அவர்கள் குடும்பம் அதற்குள் ஒத்துக் கொண்டதா… ஏதேதோ கேள்விகள் அவளிடம்.

அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நின்றான் கதீஷ்… முறையான வரவேற்பு முடிந்து “சாக்க்ஷிய கூப்பிடுங்க அங்கிள், நாங்க கொஞ்சம் வெளியே போயிட்டு வரோம்…” என்றான்.

வரதனும் அழைத்தார் அவளை. உடனே வந்தாள் சாக்க்ஷி… ‘ஏனோ தானோ என ஒரு புடவை, கண்ணில் ஒரு ஒளியில்லை, முகத்தில் மலர்ச்சியில்லை அப்படியே வந்து நின்றாள்.. ஏதோ வேண்டாதவனை பார்க்க போவது போல’…

கதீஷுக்கு கோவம் வந்தது முதல் முறையாக… இதென்ன இப்படி வந்து நிற்கிறாள், வானத்தை அளப்பாள்… பூமியில் குதிப்பாள் என நினைத்தால்… இப்படி ஒரு முகம்…. என நொந்து கொண்டான் கதீஷ்.

ஒன்றும் சொல்லாமல் அவளை கூட்டிக் கொண்டு வெளியே சென்றான். அவனின் கனவுகள், ஆசைகள் எல்லாம் அவனை பார்த்து சிரிக்க தொடங்கின…

எங்கு செல்வது இந்த நேரத்திற்கு என தெரியவில்லை கதீஷுக்கு. எனவே, தனது திருமண மண்டபத்திற்கே கூட்டி சென்றான்.

நல்ல பெரிய மண்டபம்…. நாலாயிரம் பேர் அமர கூடிய…. பெரிய ஹால், அதில் நடுவில் இரண்டு சேர் போட்டு, அதில் ஒரு சேரில் இவளை அமர வைத்தான்.

இவர்களுக்கு அருகில், தங்கள் மீது ஒளி படாத வண்ணம் LED விளக்கை போட்டு விட்டான். பின்பு அங்குள்ள ஸ்பீக்கரில் திருமணத்திற்கென்று தனியாக உள்ள பாடல் சிடிகளில் இருந்து, ஒரு சிடியை ஒலிக்க விட்டான்….

மெல்லிசையாய் அந்த மண்டபம் முழுவதும் இளையராஜா… தனது இசையால் நிறைய தொடங்கினார்… எல்லோராலும் சூழ்நிலையை உருவாக்க முடியாது. ஆனால் கதீஷ் செய்தான் இப்போது தங்களுக்காக….

இதெல்லாம் ஒரு பத்து நிமிடத்தில் முடித்து வந்து அவள் அருகில் அமர்ந்தான் கதீஷ்… ஆனால், இதை எதுவுமே உணராமல், ஏதோ நிச்சிந்தனையாய், அங்கிருந்த மீனாட்க்ஷி சுந்தரேசர்…. சிற்பத்தையே பார்த்திருந்தாள் சாக்க்ஷி.

கதீஷின் துள்ளல், துடிப்பு, ஆசை, நேசம் இதெல்லாம் அவளில் கண்ணை எட்டவே இல்லை. அவளின் இந்த தோற்றம்.. கதீஷுக்கு பொறுக்கவே இல்லை.

அவன் அருகில் அமர்ந்ததை கூட உணராமல், வெறித்துக் கொண்டிருந்தாள் சாக்க்ஷி…. கதீஷுக்கு இப்போதுதான் தோன்றியது, அவளுக்கு தந்தையின் நினைவு வந்து விட்டது என…..

என்ன சொல்லுவது, எப்படி கையாள்வது அவளை என புரியவில்லை. ஆனாலும் ‘அந்த உறுத்தலை தவிர்க்க முடியாது அவளால்’ என புரிந்தது அவனிற்கு.

இது வாழ்ந்து தீர்க்க வேண்டிய உறுத்தல் என எண்ணிக் கொண்டான். ஒரு பெருமூச்சு வந்தது அவனிடம். அவளிடம் பேசியோ, சொல்லியோ, திட்டியோ மாற்ற முடியாது.

அவளாக உணரவேண்டும்…. அது அவளின் உணர்வில் கலக்கும்…. அது வரை இந்த உறுத்தலை பொறுத்துதான் ஆக வேண்டும் என திண்ணம் வந்தது கதீஷிடம்.

இப்போதுதான் அந்த ஸ்பீக்கர் வழி வந்த இசை அவன் காதில் விழுந்தது. என்ன நினைத்தானே, அவளை கை பிடித்து எழுப்பி தனது மடிமீது அமர்த்திக் கொண்டான்….

இப்போதுதான் சாக்க்ஷிக்கும் ஏதோ புரிவது போல் இருக்க, அவளை இடையோடு சேர்த்து இறுக்கி கொண்டே கண்களை மூடி அமைதியானான் கதீஷ்…..

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், தானும் அவனுடன் இசைய தொடங்கினாள்…. இசையுடனும் இணைய தொடங்கினாள்….

“இடது விழியில் தூசி விழுந்தால்…

வலது விழியும்…. கலங்கி விடுமே………..

இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்……..

இறுதி வரைக்கும்….ம்… தொடர்ந்து வருவேன்….

சொர்க்கம் எதற்கு…. என் பொன்னுலகம்….

பெண்ணுருவில்… பக்கம் இருக்கு….

கண்ணே வா….. “ என நீண்டது.. ஏதும் பேசவில்லை இருவரும். அந்த பாடல் முடியும் வரை.

நேசத்தை எல்லோராலும் சொல்லி விளக்கிட முடியும்மெனில்… இசை, கவிதை, பாடல் இதற்கெல்லாம் தேவையே இருக்காது போலும்…

சற்று நேரம் சென்று ஒரு பெருமூச்சுடன் சாக்க்ஷி, அவனிடமிருந்து எழுந்து தனது சேரில் அமர்ந்து கொண்டாள்… குற்ற உணர்ச்சி மேலோங்க “சாரி கதீஷ், உன் ரொம்ப சங்கட படுத்தரனா…” என்றாள்.

கதீஷ் “ப்பா…. என்னை இப்போவாது  கண்ணு தெரிஞ்சதே…. பரவாயில்ல, என்றவன் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

பல நேரம் பேச்சு தொடர்ந்தது. நிறைய… பேசினார்கள். சொல்லபோனால் சாக்க்ஷி அக்கு அக்காக அவனை பிரித்தெடுத்தாள்….

‘எப்படி அதுக்குள்ள ஒத்துகிட்டாங்க, உங்க பாக்கியம் அக்கா என்ன சொன்னாங்க, நாம இப்போவே கல்யாணம் செய்துக்கனுமா….’ என பல கேள்விகள்.

சிலதுக்கு பொறுமையாக பதில் சொன்னவன், அவளின் இப்போ கல்யாணம் செய்துக்கணும என்ற கேள்வியில், முறைத்து நின்றான். அந்த முறைப்பில் சிறிது அடங்கினாள்….

சாக்க்ஷிக்கு ஏதோ அலைபுறுதல்…. எல்லாவற்றையும் மனிதன் சரி செய்ய முடியாது, சிலதை காலம்தான் சரி செய்யும்.

எனவே அவளின் நிலை உணர்ந்து, ஏதேதோ பேசி சரி செய்தான்…. சரி செய்தான் அவ்வளவே. சாக்க்ஷியும் அவனின் நிலையுணர்ந்து நடந்து கொண்டாள்.

இப்படி இருவரும் ஏதோ ஒன்றை புரிந்தவர்களாக, ‘எதையும் தீர்க்க முடியாமல், பேசி மட்டும்’ வீடு வந்தனர்.  

தேர் நகர வேண்டுமானால்….. ஊர் கூடியே ஆகவேண்டும்…. அப்படிதான் கதீஷின் பெண் பார்க்கும் வைபவமும் நடந்தது. நேசம் என்னும் தேரை இழுக்க, எல்லோரையும் சேர்த்துக் கொண்டான் கதீஷ். அழாகாவும் செய்து விட்டான்.  

வரதன், தங்களின் எல்லா சம்மந்திகளையும் அழைத்திருந்தார். எனவே மூன்று பெண்களுக்கும் ஒத்தார் போல் மாப்பிள்ளை அமைந்தது பெரிய திருப்தி அவர்களுக்கு.

ஒரு திருமணம் என்றாலே தட்டாமாலை சுற்றும் வீடு.

இப்போது மூன்று திருமணம்…. எனவும், வீடே அதிர்ந்தது…. வண்ணம் பூசியக் கொண்ட குழந்தை என துள்ளிக் கொண்டிருந்தது…

சாக்க்ஷிக்கு பார்த்து, பார்த்து எல்லாம் செய்தனர் கதீஷ் வீட்டினர். ஜெகன் தோரணையுடன் அனைத்தையும் வழி நடத்திக் கொண்டிருந்தார்.

பூ வைக்கும் இடத்தில், பாக்கியம்தான் எல்லா முறையும் செய்தார் சாக்க்ஷிக்கு. அப்போது கூட சாக்க்ஷியும், பாக்கியமும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.

எல்லோரும் அவர்களையே குறு குறுவென பார்த்தனர். அதுவே அவர்களை விளக்கி வைத்தது. ஜெயமும், பூங்கொடியும் நன்றாக பேசினார் எல்லோருடனும்.

பெரியவர்களுக்குள், எந்த ஒதுக்கமும் இல்லை போலும்…. அனைவரிடமும் சந்தோசம் நிறைந்து வழிந்தது.  

இந்த சந்தோஷ குழ்நிலையே சாக்க்ஷியை…. கொஞ்சம் தளர செய்தது. கலகலப்பு இல்லை என்றாலும், புன்னகை முகம் காட்டினாள். அதுவே கதீஷுக்கு போதுமானதாக இருந்தது.

கதீஷையும் சாக்க்ஷியையும் அருகருகே நிற்க வைத்து போடோஸ் எடுத்தனர். அது அவர்களுக்கு புதிதில்லைதான். ஆனால் பார்த்திருந்த ஜெகனுக்கும், பூங்கொடிக்கும்…. கண் நிறைந்தது.

‘இது ஏதோ இன்று, நேற்று வந்த பந்தமல்ல…. பிறந்தது முதல் அவர்களுடனே வளர்கின்ற நேசம்….. இதையா… என்ன, என்னமோ சொல்லி, காரணங்கள் காட்டி விளக்க நினைத்தோம்’ என எண்ணி அவர்கள் இருவரின் சிரித்த முகத்தையே பார்த்திருந்தனர் பெற்றோர்.

சாக்க்ஷிக்கு நிற்கவே முடியவில்லை அவனுடன். புதிதாக ஒரு உணர்வு அவளை மையம் கொள்ள தொடங்கியது…. எத்தனை தரம் அவனுடன் நின்றிருப்பேன்… அப்போதெல்லாம் அவனுக்கு ஈடாக நிமிர்ந்து நிற்பேன்.

இப்போது மட்டும் ஏனோ, அவனுள் அடங்க தோன்றியது. கட்டு செட்டான அவனிற்கு இணையாக இருக்கிறேனா என ஆராயவும் தோன்றியது.

அவனை விட நான்தான் முதல்…. எனும் நட்பு போய், அவனுக்குள் நான் என்ற நேசம் எட்டி பார்க்க தொடங்கியது அவளுள்…

அவனின் கர்வமான, சிரித்த முகம்…. இவளின் மதிப்பை வெளி உலகுக்கு சொல்லுவதகவே இருந்தது. என்னால் இவன் இவ்வளவு மகிழ்வானா… என சாக்க்ஷியை எண்ண வைத்தது.

ஆனால் அப்பாவும் இருந்திருந்தால், சரின்னு சொல்லியிருந்தால்… நானும், அவனுக்கீடான கர்வ புன்னகை கொண்டிருப்பேனோ என முகம் வாடினாள்.

பார்த்திருந்த கதீஷ்… அவளை தோளோடு அணைத்து, புருவம் உயர்த்தி, ‘என்ன’ என கேட்க… இந்த செய்கையில் தானாக வெட்கம் வந்தது சாக்க்ஷிக்கு.

இந்த அழகான தருணம் எல்லாம், சாக்க்ஷியின் சித்தப்பா பையன் கெளதம், தனது, செல் பேசியில் உள்வாங்கினான். விழா இனிமையாக நடந்து முடிந்தது.

வரதனும், சாந்தாவும் சென்று முறையாக அக்க்ஷரா திருமணத்திற்கு அழைத்து வந்தனர்…. சாக்க்ஷி எதிர்பார்த்தது போல், அவளில் மரியாதையை, காலம் காத்து தந்தது.  

இப்படி அப்படி என நாட்கள் அசுர வேகத்தில் சென்றன…. அக்க்ஷராவின் திருமணமும் நல்ல முறையில் நடந்தது. அவள் தன கணவருடன் வெளிநாடு சென்றாள்.

வீடு அமைதியாக இருந்தது. சாக்க்ஷி தன் மில், தனது தொழிலை, புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றுவது என தினபடி வேலைகளை தொடங்கினாள்.

ஒருமாதம் முழுவதும் அமைதியாக சென்றது. அதன் பிறகு, திருமண நாள் குறிக்கப்பட்டு….வேலைகள் நடக்க தொடங்கின.

முதல் வேலையாக கதீஷ், அக்க்ஷராக்கும், அவள் கணவருக்கும் டிக்கெட் புக் செய்தான் தனது செலவிலேயே…

சாக்க்ஷி எப்போதும் போலவே இருந்தாள். எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல். எல்லாவற்றுக்கும் அவளை அழைத்த போது, ஒன்று தொழிலின் பின் பதுங்கிக் கொண்டாள், இல்லை கதீஷின் பின் நின்றாள். ஆகவே, கதீஷ் அதனை சுகமாகவே ஏற்றான்.

ஒரு சுபயோக சுப தினத்தில்…. அனைத்து உறவுகளும் சூழ… முப்பத்து முக்கோடி தேவர்களுடன், கடவுளும் வந்து அட்சதை தூவ…. இப்பிறவியை கடக்க…. வழித்துணையாய்…. வாரும் என சாக்க்ஷி கை பிடித்தான் பிரகதீஷ்வரன்.

மங்களநாண் பூட்டி, அவளை சுற்றி, தன் தோள் சாய்த்து, அவளின் உச்சி வகிட்டில், தனது மோதிர விரலால் குங்குமம் வைத்த…. அந்த நொடி பொழுதில், எதையும் யோசிக்காமல், உச்சி முத்தமும் வைத்து… சிரித்துக் கொண்டே கர்வமாய் படாரென விலகி நிமிர்ந்தமர்ந்து கொண்டான் அவளின் கதீ…… அதில் ஈர்க்க தொடங்கினாள்… சாக்க்ஷி.

 

  

   

 

     

 

Advertisement