Advertisement

மின்னொடு வானம் நீ… 9

அபி… எப்போதும் டிப்பென்டடுதான்… ஆசையாய்… நமது கால்களை ஈழிக்கொண்டு நடக்கும் பூனை குட்டி அவள்… ஆம் அப்படிதான் அவள் சுபாவம்… எப்போதும் யாரையாவது… சுற்றிக் கொண்டிருப்பாள்… அதற்கு தக்க… வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அவளுடன் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பர். எப்போதும் தனிமையை உணர்ந்ததேயில்லை அவள்…

ஆனால் இன்று… அவளின் நீண்ட அறையில்… அத்தனை சாமான்கள் இருந்தும்… அந்த சிவப்பு நிற கார்பெட்டில்… உருண்டு கொண்டிருந்தாள்.. கைகளில் போன்… கண்ணில் வெறுமை  திட்டக்கூட அவளிற்கு பிடிக்கவில்லை போல… தன் மனதுள்… ‘எல்லோருக்கும் வரும் அபி… எல்லோருக்கும் எல்லாம் நடக்காது, விடு அபி… இது இயல்பு… விடு…’ என முணுமுணுத்துக் கொண்டாள்.

அவனின் டிபியை கைகள் வருடியது… ரொம்ப திமிர்… ஒரு போன் செய்ய கூட தோணலை… ஏண்டா கிருஷ்ணா, இவன என் கண்ணில் காட்டுன…, நான்னுண்டு, என் வேலையுண்டுன்னு இருந்தேன்… ஏண்டா… என்ன இப்படி புலம்ப வைக்கிற… என தன் போல அவளின் மனம் அரற்ற தொடங்கியது…

ஏதோ ஒரு கட்டத்தில் உறக்கம் வந்தே வந்தது… அடுத்து வந்த நாட்கள் ஒருவித அமைதியில் கழித்தாள் அபி… தனியாகவே சுற்றினாள்.. அவளின் பாட்டி சம்பூரணம் பேசினாலும் முன் போல் ஏதும் பதில் தரவில்லை, ஒதுக்கமும் குற்றவுணர்ச்சியுமாக இருந்தாள்..

இந்த நிலையிலேயே இரண்டுநாள் சென்றது. மகாக்கு தன் மகளின் நிலை உறுத்த தொடங்கியது… ஏதோ சரியில்லை என உணர்ந்தார்… அவ்வபோது “என்னடா அபி… ரொம்ப டிஸ்டப்பா இருக்க..” என ஒரிருமுறை கேட்டும் பார்த்துவிட்டார்… நின்று பேசுவத்தில்லை அவள்.

இப்படியே ஒரு வாரம் பார்த்திருந்த மகா, தன் கவலையை அன்று  அகிலனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்… அபியை பற்றி… ஆனாலும் அகிலன் பெரிதாக எடுக்கவில்லை… “ம்ம்மா… நீங்க ரொம்ப கவலை படுறீங்க… அன்னிக்கு கூட வந்தான் இங்க… நான் சொன்னேன்ல்ல…. இங்க பார்த்தேன்னு…

அவனுக்கு நாம இங்கதான் இருக்கோம்னு கூட தெரியாது… அப்படி அந்த அமர், நம்மை தேட கூட இல்லை…

அதவிட.. உங்க அண்ணன், அவருக்கு தெரியும்தானே… உங்களை இத்தனை வருஷம் தேடவேயில்லை…

அப்படியிருக்க… அவன் இவளை நெருங்கமாட்டான் ம்மா…” என்றவன் தன் அன்னையின் கைகளை எடுத்து தனக்குள் வைத்தவன்.. “ம்மா… உங்களை, பழைய உறவு… ஏத்துக்காதும்மா… நீ… நீங்..க ஆசைபடாதீங்க ம்மா… ப்ளீஸ்” என்றான் மெல்லிய குரலில் அதட்டலாக…

மகா… “நான்தான்  டா தப்பு பண்ணினேன்… அவங்கள எதுவும் சொல்ல கூடாது…. பாவம் என் அண்ணன்…  அண்ணி… ம்ச்சு…

என்ன செய்ய… அப்போ புரியலை… “ என இதற்கு மேல் மகனிடமே கூட சொல்ல முடியாமல்… கண்களை துடைத்துக் கொண்டார் மகா….

அப்போதுதான் உள்ளே வந்தார்… சுவாமிநாதன்… அகிலன் தன் பெற்றோரின் அறையில்தான் தன் அன்னையுடன் பேசிக் கொண்டிருந்தான்… தன் தகப்பனை பார்த்ததும் எழுந்தான் அகில்… சுவாமிநாதன் “என்ன டா… அம்மாவும் பிள்ளையும் ரகசிய திட்டமா…. என்னாச்சு” என்றார் இயல்பாய்…

அகில்… “அதெல்லாம் இல்லப்பா… சும்மாதான் பேசிக்கிட்டிருந்தோம்..     அபி பத்தி…. அவள… ஆதியோட ஒரு ரெண்டுமாசம் அங்க அனுப்பி வைத்தால் என்ன… அம்மா, பயப்படறாங்க” என்றான்.

தன் மனைவியை உற்று பார்த்தார்.. அவர்… “என்ன மகா… நீங்க ஒன்னும் சொல்லாதீங்க… அப்படின்னு சொன்ன… “ என்றார் கேலியாய்…

மகா “பொண்ணு ரொம்ப வாடி தெரியுறா… அவள எங்கையாவது அனுப்புங்க… சரியாகிடுவா..” என்றார் மகா, தன் காதல் மனைவியின் ஏமாற்றமான குரலை உணர்ந்தவர்… அமைதியானார்.. சுவாமிநாதன்.

அகிலன் தொடர்ந்தான் “கொஞ்சம் சேஞ்ச்.. வேனும்மில்ல ப்பா… “ என்றான் அகில்.

சுவாமிநாதன் “என்ன இப்போ… “ என்றார் அங்குள்ள ஈஸிசேரில் அமர்ந்தபடியே…

மகாதான் “ஒன்னுமில்லதான்… அமைதியா இருக்க… ஏதோ ஒரு மாதிரி தெரியுறா… கொஞ்சம் அவள கவனிக்கணும்..” என்றார் அன்னையாக.

“நீ விசாரிக்கலையா” என்றார் தன் மனைவியை கூர்ந்து பார்த்து .

“கேட்டேன்… சரியாய் பதில் வரல… “ என சொல்லிக் கொண்டிருக்க..

அகில் “ப்பா… அவன்… அதான் அமர்… நாம யாருன்னு தெரிஞ்சி.. அமைதியாகிட்டான் போல.. அவன் இவளிடம் நெருங்கல… அதான் அபிக்கு கோவம் போல, நாம பார்த்துக்கலாம் ப்பா…

நான் அபிகிட்ட பேசறேன்… ஆதி கூட அவள அனுப்பறோம்… “ என்றவன் கிளம்பிவிட்டான் அங்கிருந்து. தன் தங்கையை ஒருவன் நிராகரிப்பதா… என்ற எண்ணம்.. அகிலனுக்கு.

அபி அடிவாங்கிய அன்றே… பிடித்துக் கொண்டார் சுவாமிநாதன்… ‘இது சரியில்ல மகா…  உனக்காகத்தான்… சரி, நடந்தால் நல்லது என அமைதியாக இருந்தேன்…

அம்மாவ கூட சமாளிக்கலாம்னு நினைச்சேன்… ஆனா… அவன பாரு… எப்படி பண்ணி வைச்சிருக்கான் பாரு… இது விளையாட்டில்ல… மகா… “ என அன்றே பொறிந்து தள்ளிவிட்டார் சுவாமிநாதன்.

சுவாமிநாதனுக்கு தன் மனைவியின் எண்ணம் புரிந்து அமைதியாகவே இருந்தார்… திருமணமான இத்தனை வருடங்களில் மகாவின் குற்றவுணர்வு புரியும்தானே அவருக்கு… ஒரு கணவனாக அதை எப்படி சரி செய்வது என தெரியவில்லை அவருக்கு.

ஒரு பக்கம் எதையுமே… கேட்காமல், அந்த நேரத்தில் தன்னுடன் நின்ற பெற்றோர்… மற்றொரு புறம்… தன்னை மட்டுமே சகலமும் என நம்பி வந்த மகா… அவளின் நிலை புரிந்தாலும்… வயதான பெற்றோரின் பக்கம் மனம் இன்னும் இழுத்தது…

எனவே தன் அம்மாவின் பேச்சை.. இன்று வரை… சிரமேற்று செய்கிறார் சுவாமி… எனவே எப்போதும் மகாவின் மனகுமறளை அமைதியாக சமாதானம் செய்தார் சுவாமி…

ஏதோ இப்போது தன் பெண்… விழயத்தில் அவர்க்கு சற்று உறுத்தல்தான்… ஆனாலும் மகாவின் கண்ணீர் முகம்… எல்லாவற்றையும் அமைதியாக பார்க்க வைத்தது..

அந்த அமைதி இப்போது ஒரு பெருமூச்சாக வர… தன் மனைவியிடம் நெருங்கியவர்… “சரி மகா… அபிய, அங்க அனுப்பலாம்… நீ எதையும் நினைக்காதா…

நாம ஒன்னு நினைத்தோம்… சரி வரல…

இனி நீ… இப்படி அதையே நினைச்சி அழுகை கூடாது… புரியுதா…” என தலை கோதி… மகாவை தன் தோள் சாய்த்துக் கொண்டார். (காதல் எப்போது… சைட் எபக்ட் கொண்ட மாத்திரை போல… மாத்திரையால் நோய் தீரலாம்… ஆனால், மாத்திரை பக்க விளைவை காட்டியே தீரும்.. காதலும் அது போலதான் எதோ ஒரு பக்க விளைவை கொண்டது…)

அமர் அங்கு… எப்போதும் போல் இருந்தான்… அபி என்றவளை தள்ளி வைத்துவிட்டேன் எனும் விதமாக ஓடிக் கொண்டேயிருந்தான். ஆனால் எங்கே… கல்லூரியில், சரியாக மாலையில், அவளை, கண்கள் தேட தொடங்கியது… அதை வேண்டாமென தடுக்கவோ… கூடாதென… சொல்லவோ.. அவனுக்கு அதிகாரம் இல்லை போலும்… அமைதியாக தன் நிலையை நொந்து கொண்டு செல்வான்….

அமரின் ஒன்டே ஷேட்டியூல் நீண்டது.. காலையில் ஜாக்கிங், அடுத்து கல்லூரி சென்று ஒரு அட்டனன்ஸ்… பின் அலுவலகம், அதன் பின் தனது கல்லூரிக்கான பயிற்சி என.. ஆர்டர்க்கு வந்திருந்தான்.

ஆம்… இப்போது மாலையில் மட்டுமே பயிற்சி, இவனின் தேவை தெரிந்த கல்லூரி நிர்வாகம்… அமரை சிறப்பு பயிர்ச்சியாலராக நியமித்து… சும்மா அல்லவே அவன்… சந்தோஷ் கோப்பைக்கு விளையாடியவன் என்ற பெருமையை கல்லூரி இழக்குமா என்ன… அவனுக்கு தக்க மாற்றங்களை செய்து தந்தது, மாலையில் தேவையான பயிற்சி கொடுக்க வந்துவிடுவான்… அமர், கல்லூரிக்கு… அப்படி அவன் வரும் நேரத்திதான் அவனின் கண்கள் தன்னவளை தேடும்… ஆனால், பாவம் அவளின் தேவை இப்போதெல்லாம் அவனை நோக்கி தவமிருப்பது இல்லை…

ஆனாலும், அமர் பிஸி.. பிஸி.. பிஸியோ பிஸி… வீட்டில் இப்போது அமரை கொண்டாட தொடங்கினர்… சுமதிக்கு தன் சொந்தகளிடம் தன் பையனின் பெருமை பேசவே நேரம் சரியாக இருந்தது…

முரளிக்கு சொல்லவே வேண்டாம்… வாய் திறந்து சொல்லவில்லையே தவிர அமரின் நடவடிக்கைகளை ஒத்துக் கொண்டு இப்போது அவன் வழி நடக்க தொடங்கினார்.

அவனின் இந்த புதுமைகளை ஏற்க்கவே செய்தார்… இப்போது ஆடர்களை… அவர் கவனிக்க… நிர்வாகம் இவனின் கைக்கு வந்தது… 

எனவே முரளி, இதை பெருமையாகவே செய்தார்… எங்கும் தன் மகனை முன்னிலை படுத்தினார்… எல்லா தொழில் முறை கூட்டங்கள் எல்லாவற்றிலும் “அமர்நாத் தி க்ளோபுல் ப்ரிண்டிங்க்ஸ்” எனவே பதிவு செய்தார்.. அதில் அவருக்கு மிக்க பெருமை…

ஆம்… அமர் அலுவலத்தை… தனக்கேற்ப மாற்றினான்…

முரளியின் பழைய நடைமுறைகளை சற்று ஓரம் கட்டி வைத்தான்… பழைய ஆட்கள்… அவர்களுக்கு, நிர்வாகம் செய்யும் அதிக செலவுகள், சலுகைகள் என எல்லாவற்றையும் சற்று கட்டுபடுத்தினான்…

கிட்ட தட்ட ஒரு MNC போல எல்லாவற்றிலும் டெக்னாலஜி கொண்டு வந்தான். அழகாக ஷிப்ட் முறை கொண்டு வந்தான்… கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது… என நிறைய மாற்றம் எல்லாவற்றிலும்…  

மோகன்… ஏஜன்சி மூலமாகவே அவரை, விசாரித்தனர்… ஆனால் மிகவும் திறமையான மனிதர்… எந்த இடத்திலும் தன் மகளையும் மாப்பிளையையும் விட்டு தராமல் பேசினார் மோகன்.. “டைம் கொடுங்க சர்… திருப்பி தந்திடுறேன்…” என்றார் நல்லவராக…

கேட்டிருந்த அமருக்குதான் ஆயாசமாக இருந்தது… அதே ஏஜென்சியில் அவரின் சொத்துகளை பற்றி விசாரிக்க சொன்னான்… ஒன்றும் இவரின் பேரில் இல்லை எல்லாம் சென்னையில் உள்ள மகளின் பெயரில் இருந்தது… இனி இவரிடம் பேசி… வேலைக்காதாது என எண்ணியபடியே சென்றது அந்த வாரம்….

எனவே அமருக்கு… வேலை சரியாக இருந்தது… எப்போதும் எதையோ ஒன்று செய்துக் கொண்டே இருந்தான்… இதில் அபி நினைவு மட்டும்… அவனை யோசிக்க வைத்தது… ‘நான் ரொம்ப யோசிக்கிறனோ… போய் ஒரு தரம் பார்க்கணும்… இல்ல வேண்டாம், கூப்பிட்டு பேசலாமா…’ என அதுவும் அந்த ஓட்டத்தில் அடக்கம்… 

அன்று, எப்போதும் போல் அபி, கல்லூரிக்கு கிளம்பி கீழே வந்தாள்… ஏதோ பேச்சு சென்று கொண்டிருந்தது பெரியவர்களிடம்… நேரே உணவு அறைக்கு சென்றாள்…

எப்போதும் அவர்களின் பேச்சில் காதை வைத்திருப்பாள்… தன் கருத்தையும் சொல்லுவாள்… பின் ஏன் கேட்கவில்லை என சண்டையும் போடுவாள்… பின் பெரியவர்கள் காரணம் சொல்லும்போது சரியென சமாதானமும் ஆகுவாள்… இவளின் இயல்பு அது…

இன்று அப்படிதான் சம்பூரணம்… தன் மருமகள்களுக்கு இப்போதுள்ள… டிசைனில்… வைர கற்கள் பதித்த ஒரே மாதிரியான தாலி செய்யின் செய்த்திருந்தார்… அதனை காலையிலேயே கொடுக்க, கொண்டு வந்தார் கடை உரிமையாளர்…

வைரத்தின் மீது எப்போதும் அபிக்கு ஒரு மையல்… அவளிடம் உள்ள நகைகளில் கள் வைத்த, வைரம் பதித்ததுதான் அதிகம்… எனவே பாட்டியும் பெரியவர்களுக்கு செய்யும் போது தன் பேத்திகளை விடுவாரா…

அவர்களுக்கும் சின்னதாக ஒரு தோடு ஆடர் செய்திருந்தார்… ஒருவாரமாக தன் பேத்தியின் சோர்ந்த தோற்றம் பார்த்தவர்… இதை பார்த்தால்… உற்சாகம் ஆகுவாள் என எண்ணி… “அபி… இங்க வா” என அழைக்க சோர்ந்தே சென்றால் அபி…

அவளிடம் பாட்டி விளையாடிய படியே அந்த எமர்ல்டும் வைரமும் பதித்த ஜோடி காதணிகளை காட்ட… அதை பார்த்தும் உயிர்ப்பில்லை அவள் கண்களில்… ஏனோ தானோவெனவே இருந்தது முகம்…

பாட்டி “பிடிச்சிருக்கா அபிம்மா…. போட்டு காட்டேன்” என ஏதோ சொல்ல அபியின் கவனம் இங்கில்லை போல… அமைதியாக இருந்தாள்… தலையை கூட அசைக்கவில்லை..

ஆடவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தனர்… சுவாமிநாதன் கூட “அபி… அபி “ என அழைத்தும் பலனில்லை…. அகிலன் சற்று அதிர்ந்தான் இவளின் நிலை பார்த்து… தன் அன்னை சொல்லும் போது கூட நம்பவில்லை… இப்போது இது.. இவளில்லையே என அகிலன் சிந்திக்க தொடங்கினான்..

அகில் “அபி…” என ஒரே சத்தம்… எல்லோரும் திரும்பி பார்த்தனர் அவனை.. அபி இப்போது திடுக்கிட்டு பார்த்தால் அவனை.

“எல்லோரும் கேட்கறாங்க… பதில் சொல்லு…” என உறுமினான்…

அபி சுதாரிக்க நேரம் கொடுத்து ஆதி “என்ன அகில்… எதுக்கு கத்தற.. அவளுக்கு இந்த டிசைன் பிடிக்கலையா இருக்கும்… வேற எடுக்கலாம்” என்றான் அனைவரையும் சமாதனபடுத்தும் விதமாக.

அபி “இல்ல ல்ல… இது சூப்பரா இருக்கு…. எனக்கு இன்னிக்கு… பேஷன் ப்ரைடு இருக்கு…. சீக்கிரமா போகணும்… ஈவ்னிங் வந்து போட்டு காட்டறேன்…” என பட படவென பேசினாள்.

சுவாமிநாதன் “அதானே… பிடிக்கலைனா… இந்நேரம்… அம்மாவ உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பா….

என் பொண்ணுக்கு டென்ஷன்.. அதான்…” என்றவர்… தன் மகளை நோக்கி இங்கு வா என்பதாக கை நீட்டினார்…

ஆசை மகளும்… அவரிடம் வர… தன் மகளை தன் மடியில் அமர்த்திக் கொண்டவர்… “ஏன்… கண்ணெல்லாம் கலங்கியிருக்கு… இன்னிக்கு என்ன ஸ்பெஷல் காலேஜ்ல…” என ஏதோ பேச…

அபி ஏதும் சொல்லாமல் தன் தந்தையின் தோள் சாய்ந்து கொண்டாள் “அபி… என்னடா… ஆதி சொன்ன மாதிரி பிடிக்கலையா” என தந்தையாக கனிவான குரலில் கேட்க..

அவர்களின் குழந்தை அழகாக சிரித்து… e\தன்னுள் எல்லாவற்றையும் விழுங்கி… “அப்படியில்லா ப்பா… இன்னிக்கு சீக்கிரம் போகணும்… அதான், தோடு சூப்பர்ரா இருக்கு… அந்த எமரால்டு… செம…,

பாட்டி எப்படி இப்படி… மாடலா எடுத்த… “ என தன் பாட்டியை சீண்டவும் செய்தாள்.

பாட்டி “அடி… நான் பார்த்து வளர்ந்தவளுக்கு… பேச்ச பாருடா…

டேய்… உன் பிள்ளைகிட்ட சொல்லி வை…

அடுத்த ஆறு மாசத்தில் கல்யாணம்…

சும்மா… இப்படி, அப்பா மடியில உட்கார்ந்து கொஞ்சிக்கிட்டு இருக்க கூடாது… ” என சம்பூரணம்  ரிட்டன்ஸ்சானார்.

சுவாமி “என்னம்மா… அவசரம்… என் பெண் இன்னும் குழந்தைதான்… இன்னும் இரண்டு வருஷம் ஆகட்டும்… “ என சொல்ல… அபி தன் தந்தையின் கழுத்தை இறுக்கி, அவரின் கன்னத்தில் ஆசை முத்தம் வைத்து தன் பாட்டியை பார்த்து… கட்டை விரலை கீழே காட்டி சிரித்தாள்..

பாட்டி “போதும் செல்லம் கொஞ்சினது… இறங்கு…” என சிரித்தபடியே சொல்ல..

“பொறமை பிடித்தவர்கள்… ம்க்கும்” என சொல்லி மேலும் தன் தந்தையின் கழுத்தை இருக்க…

சுவாமி “நீ கிளம்பு டாம்மா… ஈவ்னிங் பார்க்கலாம்” என்றார் அவளை தாங்கி பேசி, அவளை இயல்பாக்கிதான் எழவிட்டார் தன்னிலிருந்து.. கூடவே அவரின் பார்வை அர்த்தமாக அகிலனை பார்க்க… அகிலனும் தலையசைத்து ஏற்றான் அதை.

அபி அவசர அவசரமாக கிளம்பினாள்…. மகா “வா… அபி.. சாப்பிட்டு போ… அப்படியே ஓடாத” என இயல்பாக சிறிது அதட்டினார்.

அகிலன் “நீ சாப்பிட்டு இரு… வெயிட் டா… நான் ட்ரோப் பண்றேன்…” என சொல்லியபடியே கார் கீய் எடுக்க தனதறைக்கு சென்றான்…

அபி தனக்கான மேக் அப் திங்க்ஸ், ட்ரெஸ் உள்ளிட்ட பொருட்களை வைத்த பாக் எடுத்தபடியே நகர்ந்தால் தன் அண்ணனுடன்…

சம்பூரணம்… தொடர்ந்தார் மனதில் கவலை வந்தது போல… “சாமி… அபிக்கு சீக்கிரம் வரன் பாரப்பா…. புள்ளைக்கு படிப்பு இந்த வருஷம் முடியபோகுதுள்ள… சரியான வயசப்பா… ஆரம்பிப்போமா..” என்றார்.

அபியின் தாய் தந்தைக்கும் அதுவே சரியென பட்டது… அமைதியாக “பார்க்கலாம் ம்மா… இன்னும் ஆறுமாசம் இருக்குள்ள… பார்க்கலாம்” என்றார் தன் மனைவியை பார்த்தபடியே சுவாமிநாதன்.

Advertisement