மின்னோடு வானம் நீ…. 8
 இன்னும் இருள் விலகா அதிகாலை… சீக்கிரமே எழுந்து ரெடியாகி கீழே வந்தான் அமர். ஹாலில் அமர்ந்தபடியே… தன் தந்தையின் செல்லிற்கு அழைத்தான்… அவரும் எடுத்து “கிளம்பிட்டேன் டா… நீ ஜாக்கிங் போ… நான் பார்த்துக்கிறேன்” என்றார் தெம்பான குரலில்..
முன்னமே எழுந்துவிட்டார் முரளி… தூக்கம் வரவில்லை போலும்… என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு… அதில் ஏதோ அரை குறையாய் ஒரு தூக்கம்… எப்போதடா… விடியும் என எழுந்துவிட்டார்…
அமர் அங்கேயே அமர்ந்திருந்தான்… முரளி வரவும்… தன் மகனை பார்த்து “நீ இன்னும் போகல” என்றார்..
அமர் “எங்க போறீங்க இந்த நேரத்துக்கு…. “ என்றான்.
“நான் பார்த்துகிறேன் டா… அவர்… முத்துகுமார், வருவாரு ” என்றார்.
ஏதும் சொல்லவில்லை அமர், அமர்ந்திருந்தான். பத்து நிமிடம் சென்று முரளியின் போன் அழைக்க எடுத்த முரளி… “வரேன்… வாசல்ல வெயிட் பண்ணுங்க” என்றபடி… கார் சாவி தேட… அமர் “நான் வரேன் வாங்க…” என்றபடியே கார் சாவியுடன் கிளம்பினான்.
“வேணாம் டா… ஒண்ணுமில்ல… அமரா…, நாங்க பாத்துக்கிறோம்” என்றார். அமைதியாக
அமர் காதிலே வாங்காமல்… “சும்மா வரேன் வாங்க” என சொல்லி… அந்த சிறிய ஸ்கோடா… வைட் ராபிட்டை எடுத்தான்.
முரளி, முத்து… அமருடன் சேர்த்து மூன்று நபர்களை சுமந்த, அந்த கார்… முத்துகுமார் வழி சொல்ல சொல்ல… ஒரு பெரிய வீட்டின், அதாவது அந்த வீடு இருந்த சாலையில் வீட்டின், எதிர்புறமாக கார் நின்றது.
முத்து நாற்பது வயது மதிக்க தக்க மனிதர்… அவர் இறங்கி அந்த வீட்டின் சைடில் நிற்க… அமர் இறங்கி… முரளியை பார்த்து ”நீங்க இங்க வெயிட் பண்ணுங்க “ என்றான். 
பின் முத்துவிடம் சென்று பேசியபடியே சுற்றிலும் ஆராய்ந்து கொண்டிருந்தான். 
முத்து இவர்களின் திட்டம் ஒவ்வென்றாக சொல்ல சொல்ல… ‘போங்க பாஸ்….. நீ அவன கேட்டு, அவன் சொல்லி, காச திருப்பி வாங்கிடுவீங்க’ எனத்தான் தோன்றியது. இருந்தும் பொறுமையாய் கேட்டுக் கொண்டு நின்றான் ஏதும் பேசவில்லை…. 
முத்து சொன்னவரை… பெரிதாக தங்கள் பணத்தை சுரண்டியிருக்கிறார் என புரிந்தது… ‘எப்படி தந்தை நம்பினார்… இன்னமும் அவருக்கு தெரியவில்லை… தொழிலில் நண்பன் கூட திருடுவான் ‘ என தாடையை தடவியபடியே காத்திருந்தான். 
மையிருள் மாறி, அழகான விடியலுக்கான நிலை சூழ தொடங்கியது… அடுத்த ஒரு இருபது நிமிடம் கழித்து… அந்த வீட்டிலிருந்து முரளியின் வயதுடைய ஒருவர்… ஜாக்கிங் ஜுட் அணிந்து வெளியே வந்தார்… 
முத்து வந்தவரின் அருகில் சென்று… “ஹலோ மோகன் சர்… வாங்க… முரளி சார் வந்திருக்கார் உங்களை பார்க்க…” என்றார் மெல்லிய குரலில்.
அந்த மனிதர் இதை எதிபார்க்கவில்லை போலும்… சிறு அதிர்ச்சி… கூடவே தடுமாற்றம்… வார்த்தைகள் த்ந்தியடிதது… “ஓ… வா…ங்.. வாங்க உள்ள போய் பேசலாம்…” என்றார் நட்பாய், வயதும் அனுபவமும் கைகொடுக்க… சுதாரித்தார் போலும்… பின் பாதி வாக்கியத்தை தெளிவாக சொன்னார்.
அமர் சூழ்நிலையை தனதாக்கினான்.. “வாங்க சர்… காருக்கு போகலாம்… அப்பா ரொம்ப நேரமா வெயிட் பண்றார்… உங்க போன் வேற எடுக்கல… வாங்க” என்றான், என்ன இருந்தது அவன் குரலில் மிரட்டலா… கட்டளையா… நட்பு கரமா… தெரியவில்லை .
அந்த மனிதரும் அனுபவம் மிக்கவர்தானே… “அட… தம்பியா… வாங்க உள்ள போய் பேசலாம்… முத்து நீ போய்… சர்ர கூப்பிடு “ என சொல்லி அமரின் கை பிடிக்க…
அமர் சுதாரித்தான்… இதெல்லாம் அங்கிருந்த வீட்டு வாசலில் உள்ள கேட் தாண்டி நடைபெற்ற விழயம்… 
எனவே அமர் சுற்றும் முற்றும் பார்த்தான்… வெளியே யாரும் இன்னும் காணம்… யாரோ ஒரிருவர்தான் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தனர்… எனவே அந்த மேனேஜரை… லேசாக தனது ஸ்போர்ட்ஸ் ஷூ காலால் தட்ட… நிலை தடுமாறி… அவர் பற்றுகோலை தேடி தடுமாற… அழகாக அவரின் தோளை பற்றினான் அமர்… “ஏன் சார் நடக்க முடியலையா… பொறுமையா வாங்க” என ஏதோ பேசியபடியே அவரை இரும்பென பிடித்து, தனது பிடிக்குள் கொண்டு வந்தான். 
எதிர்பாராதவிதமாக அப்போது, அங்கு ஜாக்கிங் சென்று கொண்டிருந்த அகிலன் கண்ணில் இதெல்லாம் பட்டது.., ஒருவரின் கால்களை யாரோ ஒருவர் தட்ட… அந்த நபரே அவரை கை தாங்கி பிடிப்பது கண்ட அகிலனுக்கு.. அவர்களின் உடல்மொழி ஏதோ சரியில்லை என விவரம் சொல்ல… அவர்களின் அருகில் வந்தவன்  “என்னாச்சு, என்னாச்சு இவருக்கு… யாரு நீங்க” என கேட்டு அந்த மேனேஜரின் தோள் தொட… 
அமர் திடுக்கிட்டு பார்த்தான்… பார்த்தவுடன் கண்டுகொண்டான்… அபியை தெரிந்தவனுக்கு அகிலனையும் தெரியும்தானே… ‘எங்கடா வந்தான் இவன்’ என முறைத்தான் அவனை… அகிலன் மீண்டும் “யாரு நீங்க” என்றான்.
அமர், அசால்ட்டாக அந்த நேரத்திலும் “மச்சி…. என்ன மச்சி,
என்னை தெரியலையா… இவர் எங்க மேனேஜர்… கொஞ்சம் உடம்பு சரியில்லை… அதான்… நீ போ… அதோ… கார் இருக்கு நாங்க பார்த்துக்கிறோம்… 
சர்… நீங்க காரெடுங்க… “ என முத்துவை ஏவிய படியே நடந்தான் அமர்… 
அகிலனுக்கு இப்போது புரிந்தது யாரென… அந்த மிரட்டல் த்வனியும் திமிரும் சொல்லியது அவன் யாரென ‘அமர்’ என உதடுகள்  முனுமுனுக்க… 
அகிலனுக்கு கோவம் வந்தது… “ஹேய் நில்லு… நில்லு… எங்க ஏரியாகாரர் விடு, நாங்க பார்த்துக்கிறோம்… விடு அவர…” என நிமிர்ந்து நின்று மிரட்ட…
அமருக்கு கோவம் வர… அகிலனை லேசாக இடித்தபடியே, அந்த நாலேட்டை, விரைவாக கடந்தவன்… மோகனை… காரிலே கிட்ட தட்ட  திணித்து… நிமிர்ந்து “என்ன டா… பிரச்சனை உனக்கு… 
போ.. வேலைய பார்த்துக்கிட்டு…. 
இத நான் பார்த்துகிறேன்… 
உன் பணத்தை எடுத்தா தெரியும்… 
போடா… வந்துட்டான்” என கையை தூக்கிக் கொண்டு எகிறிக் கொண்டு சென்றான் அமர்…
அதற்குள் முரளி… காரிலிருந்து இறங்கி… “டேய் அமரா… வாடா… இதுக்குதான் நான் உன்னை வரவேண்டாம்னு சொன்னேன்.. பாரு… எப்படி ரகளை பண்றேன்னு… ஏறு டா வண்டில…” என கைபிடித்து அவனை… காருக்கு தள்ள…
அமர் “விடு ப்பா…” என தன் டி ஷர்ட்டை இழுத்தபடியே… அகிலை முறைத்தபடியே… சென்று காரில் அமர்ந்தான். கார் அடுத்த ஷனம் நகர…
அகிலனுக்கு, வந்தது.. யாரென சற்று மண்டையில் ஏற தொடங்கியது… ’அப்பா ‘ என்றானே… அப்போ அவர் என் மாமா வா… நல்லா கூட பார்க்கலையே… என எண்ணியபடியே மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்தான்…
அம்மா கிட்ட சொல்லணும்…. உன் அண்ணன்.. வந்தார் நான், பார்த்தேன்னு சொல்லணும்… இந்த அமர்தான் ரவுடி… ரகளை… திமிர் பிடிச்சவன்.. எப்படி பேசுறான்… என எண்ணியபடியே வீடு வந்தான் அகிலன்.
காரில் அமருக்கும் அப்பாக்கும் சண்டை… “ஏண்டா இப்படி… அவரை அடிச்சியா… நாங்க பார்த்துக்கிறோன்னு சொன்னேன்ல…” என சலிப்பாக முரளி கூற… 
அதற்குள் அந்த மேனேஜர்… “என்ன சர்… இப்படி பண்றீங்க… இது டிசண்டானா ஏரியா சர்… “ என ஏதோ சொல்ல வர 
அமர் “பீப்புள்ஸ்சும் டீசண்டா இருக்கணும்…” என்றான் வெடுக்கென… வாயை மூடிக்கொண்டார் அந்த மனிதர். 
அவனின் கோவம் ஏதோ அதிசியமாக கட்டுக்குள் நிற்கிறது…. அதை இப்போதுதான் அகிலனும், முரளியும் விசிறி விட்டிருந்தனர்… இதில் இவர் வேறு பேசவும்… மிதமிஞ்ச்சிதான் இருந்தான் அமர் ‘யார் பணத்தை எடுத்துக் கொண்டு… யாரிடம் வாய் பேசுவது… என் அப்பாவை போல் நினைத்துவிட்டான் போல…. அமைதியாக இருப்பேன் என… இருக்கு உனக்கு’ என உள்ளம் துள்ளிக் கொண்டேதான் இருக்கிறது… ஆனாலும் பொறுமையாக இருந்தான்…
தன்னை அமைதிபடுத்திக் கொண்டு அமர் “முத்து, எங்க போறீங்க..” என்றான்.
அவர் “வீட்டுக்கு சர்…. அங்கதான் சர், போக சொன்னார்…” என்றான்
“அதெல்லாம் வேண்டாம்… நீங்க… குடோனுக்கு போங்க… அந்த வெள்ளளூர் குடோனுக்கு போங்க” என்றவன்..
தன் தந்தையின்புறம் திரும்பி “எந்த ஏஜன்சி வைச்சு விசாரிச்சிங்க” என்றான்.
முரளி “டேய் அப்படியெல்லாம் இல்லடா… சும்மா… ஆடிட்டர் சொன்னார் கணக்கு பார்க்கும் போது… அப்படி தேடினப்போ… இவர்தான்னு தெரிஞ்ச்சது,  போனும் எடுக்கல… அதான், பார்த்துட்டு போலாம்னு வந்தோம்…” என்றார் சாவகாசமாய்…
அமருக்கு சொல்லமுடியாத ஆத்திரம் வந்தது தன் தந்தையின் மேல்…  இருந்தும் அமைதியாக இருந்தான்… குடோன் வரவும் அமைதியாக அவரை ஆபிஸ் அறையில் முத்துவை, துணைக்கு வைத்து.. இருக்க வைத்தவன் தன் தந்தையிடம் வந்து… “என்ன பிரச்சனை” என கேட்டான்…
முரளி பொறுமையாக தொடங்க… ஒன்றும்மில்லை என்பதானா த்வனியில் “அது டா… என்னோட கிரடிட் கார்ட… யூஸ் பண்ணி இருக்கார் “ என சாவகாசமாக பேசினார்… அமருக்கு அது பிடிக்கவில்லை “ஆடிட்டர வர சொல்லுங்க” என்றான்.
அவரும் வர சொல்ல.. அடுத்த அரைமணி நேரத்தில் ஆடிட்டரும் வந்தார்… இப்போதுதான் முழுவதுமாக விவரம் வந்தது.
அதாவது முரளி அந்த GMமை முழுவதுமாக நம்பி… தனது கம்பனியின் வரவு செலவு… கடன் என எல்லாவற்றிற்கும் அவரை நம்பி நீட்டிய இடத்தில் கையெழுத்து… எல்லாவற்றின் பாஸ்வோர்ட் எல்லாம் சொல்லியுள்ளார்… 
பெரும்பாலும் முதலாளிகள் செய்வதுதான்… ஆனால் போன் நம்பர் எப்போதும் இவர்களுடையதாக இருக்கும்… எனவே வரவு செலவை பேங்க் டிடையில்ஸ்சை… அந்த மெசேஜ்… ஈமெயில் மூலம் அறிய முடியும்… 
அனால் முரளி… அதிலும் இவரையே நம்பி எல்லாவற்றிகும் இவரின் நம்பரே கொடுக்க… வசதியானது அந்த மோகனுக்கு… தன் மாப்பிளையின் வரவு செலவுக்கு எல்லாம் கம்பனியின் கிரிட் கார்டு பயன்பட்டது… கம்பனியால் அது அறியபடவில்லை எனவும் சொந்தமாக வைர நகை வாங்கும் அளவிற்கு சென்றுவிட்டது… மேலும் அவர் தனது வேலையை இங்கு முடித்துக் கொண்டு வேறு ஒரு கம்பனிக்கு வேறு மாநிலத்தில் GMமாக செல்கிறார் எனவே… கிட்டத்தட்ட கிளம்பிவிட்ட நிலை… வீட்டில் எல்லாம் ஒழுங்கு செய்து… அவர்களை பாக் செய்து அனுப்பிவிட்டார்… இந்த வாரத்தில் இவரும் கிளபுவதாக ஏற்பாடு… அந்த நேரத்தில் எதோ தெய்வ செயலாய்… முரளி கோவம் கொண்டு அவரை நெருங்கி வந்துவிட்டார்….
எல்லாவற்றையும் கேட்ட அமர்… அங்கிருந்த டேபிள் மேலே… தன் தலையை தாங்கி அமர்ந்துவிட்டான்… முரளி “டேய்… நான் பேசுறேன்டா… விடு…. வாங்கிடலாம்…” என்றார்.
அமருக்கு அப்படி ஒரு கோவம் “எப்படி வாங்குவீங்க… எல்லாத்தையும் துடைச்சு வைச்சிருப்பான்… அவன் எப்படி வேலை பார்த்திருக்கான் பார்த்தீங்கள்ள… வாங்கிடுவாராம்….” என கடுப்பாக சொல்ல அமைதியானார்… முரளி.
ஆடிட்டர், அமரின் கோவம் பார்த்து “அமர்… அவனோட மாப்பிள்ளை நம்பர் வாங்கி பேசுங்க… விட்டுடாதீங்க… முடிஞ்சா கம்ப்ளைன்ட் கொடுங்க… டிட்டையில்ஸ் நான் தரேன்…” என எடுத்து கொடுத்தார்…
அவரே தொடர்ந்து “நம்ம கிரடிட் ஸ்கோர்… தாறுமாறா இருக்கு தம்பி… எதுவும் சரியில்ல… இவர விடாதீங்க…” என சொல்லி கிளம்பினார்.
தலை வலித்தது அமருக்கு… என்ன செய்வது என தெரியவில்லை… இப்படி தங்களிடம் வேலை பார்த்துக் கொண்டே எப்படி தங்களுக்கு துரோகம் செய்ய முடியும் என சிந்தனை… 
“முத்து  சர்” என்றழைத்தவன்… அவர் வரவும் “நீங்க இவர பாருங்க… நம்ம ஆபிஸ்ல… எல்லோரும் வந்தவுடனே… செக்யுரிட்டி ஆரேஞ் பண்ணி வைச்சிட்டு… அங்க ஆபிஸ் வந்துங்க” என சொல்லி தன் தந்தையுடன் வீடு நோக்கி வந்தான்.
இருவரும் வீட்டில் ஏதும் பேசவில்லை… அமைதியாக கிளம்பினான் அமர்… கல்லூரி சென்று பதினோரு மணிபோல்… தன் தந்தைக்கு அழைத்து “எங்கு இருக்குறீர்கள்” என்றான்…
“இங்கதாண்டா… பிரண்டிங் யூனிட்ல… “ என்றார்.
“முத்து சர் வந்தாச்சா… ” என்றான்.
“ம்… அவர் அங்க ஆபீஸ் போயாச்சு…” என்றார்.
“நீங்க அங்க போங்க, நான் வரேன்” என்றான்… கிரௌண்டில் விளையாடிய அதே… உடை… ஒரு ப்ளக் ஸ்போர்ட்ஸ் பண்ட… ரவுண்டு நெக் ஆரஞ்சி டி ஷர்ட் சகிதம்… வேர்வை ஸ்மெல் அந்த AC அறையை அடைக்க வந்த அமர்ந்தான் அமர், தங்களின் மெயின் அலுவலகத்திற்கு..
இதுதான் அவர்களின் நாலு யூனின்ட்டின் அலுவலகம்… மற்றதெல்லாம் யூனிட்… ரெண்டு எம்ப்ராய்டு, ரெண்டு பிரிண்டிங்… அதெல்லாம் வெவேறு இடங்களில் உள்ளது.
அமர் வந்ததும் அலுவலகத்தில் யாருக்கும் தெரியவில்லை… முத்து “சர்… உங்கள, இண்டர்டியூஸ் பண்ணலாம் வாங்க “ என்றார்..
அமர் “ச்சு… அதெல்லாம் அப்புறம், hrருக்கும், அக்கௌண்ட்ஸ் மட்டும் கூப்பிடுங்க… மத்ததெல்லாம் அப்புறம் பாரத்துக்கலாம்” என்றான் கடுப்பாக. 
முரளி “என்னடா இது… ஒரு ஆபீஸ் டிசன்ஸி வேண்டாம்… இப்படியா வருவா… தெருவில் விளையாடும் பிள்ளையாய்” என்றார் முகத்தை உர்ரென வைத்து..
அமர் “ப்பா… விடுங்க… இன்னிக்கு… நோர்மல் டிரஸ் எடுக்க மறந்துட்டேன்… அதான்… வேலைய பார்ப்போம்” என்றான் அமைதியாகவே.
அப்போது அலுவலகம் சென்றவன்தான் அமர்… வெளிவர இரண்டுநாள் ஆனது… தனது தந்தையின் முப்பது வருட உழைப்பை… இரண்டு நாளில்… ஆராய்ந்தான்.
முரளியும் வேலை… சம்பளம்… குறித்த நேரத்தில் டெலிவரி என சுத்தமாக இருந்தவர்… கடன், வட்டி, பாங்க் சமாச்சாரங்களை கண்டுகொள்ளாமல் அலுவலர்களை நம்பி இருந்திருக்கிறார்… `
எனவே அமருக்கு… என்ன செய்ய வேண்டும் என ஒரு தெளிவு வரவே இரண்டு நாள் ஆனது. அதுவரை அந்த மோகன் அங்கேயே இருந்தார்.. அமரின் கண்காணிப்பில்…
அவர்களின் வீட்டிலிருந்து போன் வரத்தான் செய்தது… ஒருநாள் தாமதித்து எடுக்க செய்தவன்… “பழைய ஆபிஸ்ல… கணக்கு வழக்கெல்லாம் பார்த்திக்கிட்டிருக்கேன் ம்மா… வந்திடுவேன்..” என மேகனையே பேச செய்தான் அமர். 
இப்படியாக அமருக்கு அவனின் அலுவலகம் வரும் முன்பும், பின்பும் முத்துவின் மூலம் அவன் புகழ் பரவியது… இப்படி அவர்களுக்கு உள்ள வெளியிடங்களில் எல்லாம் “சின்னவர்… ரொம்ப கெடுபிடியாம்… அந்த மோகன் மேனேஜர… பிடிச்சு வைச்சிருக்காராம்… 
பெரியவரு மாதிரி கிடையாது… கணக்கெல்லாம் கேட்கராராம்… 
லீவெல்லாம் கிடையாதுன்னு சொல்றாங்க… லீவ் போட்ட சம்பளம் பிடிப்பாங்களாம்… இனி…” லேபர்கள் மத்தியில் இப்படியாக பரவ தொடங்கியது அவன் புகழ்.
ஸ்டாப் மத்தியிலும்… அதே போலதான்… “கண்டுபிடிச்சிட்டார்… கொஞ்சம் கறார் பேர்வழி” என காற்றுவழி… முத்து வழி என செய்திகள் வந்தது.
அமர் இந்த ஒரு வாரமாக அலுவலகம் வர தொடங்கியிருந்தான்… காலை பதினோரு மணிக்கு மேல்தான் அலுவலகம் வருவான்… 
இப்போதெல்லாம் அழகான ஹல்ப் ஹன்ட் போர்மேல்ஸ்சில் வர தொடங்கியிருந்தான்… அழகான ஓட்ட வெட்டிய முடி… சுகந்தமான நறுமணம்… திமிரான உடல் மொழி… என்னிடம் கயமை கூடாது என நேர்பார்வை பார்த்து வர… அவன் கம்பீரமாகவே தெரிந்தான்… அத்தனைபேர் விழிகளுக்கும்… 
முன்போல் அல்லாமல்…  மோகனை.. விசாரிக்க… ஏஜென்சியை நாடினான் அமர். காரணம் முரளிதான்.. அன்று இரவு அமர், மோகனை நெருங்கிய விதத்தில் பயந்தது என்னமோ முரளிதான்… “டேய்.. விடுடா அவர, ஏதாவது ஒண்ணுகடக்க ஒன்னு செய்து வைக்காதா… 
முத்து நீ கேளுப்பா…” என்றார் அமரை விளக்கி முத்துவிடம் சொல்லினார்.. பாவம் முத்து பிள்ளைகுட்டிகாறார்.. அமரின் மிரட்டலிலே குரலே வரவில்லை அவர்க்கு… 
எனவே… எப்போதும் போல, அமர் போன் செய்தது சபரிக்குதான் “அண்ணா… உங்க மாமாவ… இங்கிருந்து கூட்டி போ… ரொம்ப படுத்துறாரு…” என இப்போது சிறுபிள்ளையாய் மாறி கம்பளைண்டு செய்தான்.
அந்த இரவில் முரளி அந்த குடோனுக்கு வந்தார்…  மோகனிடம் ஏதும் கேட்க வேண்டியதாக இருக்கவில்லை… அந்த மனிதர் தன் தவறை உணர்ந்தே இருந்தார்… ஆனால் இப்போது அவரிடம் ஒன்றும் இல்லை… அவரின் பேங்க் பாலன்ஸ் வரை நில்…. மண்டை காய்ந்தது சபரிக்கும்.
மேலும் சபரிக்குதான் தெரியுமே அமரின், வேகம் எனவே “அமர் இதுக்கெல்லாம் ஆட்கள் இருக்காங்க… நாளைக்கு உனக்கு சொல்றேன்… பார்க்கலாம்” என்றார்.
அப்பாடா என பெருமூச்சு விட்டார்… முரளி.

இதே சிந்தனையில் இருந்தவனுக்கு அந்த வாரம் சென்றதே தெரியவில்லை… உணவு உண்டு… தன் அப்பாவுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் அமர்… 
மேலே அவனின் தொலைபேசி… தொல்லை செய்ய தொடங்கியது விடாமல்.. முழுதாக ஒலிக்கவில்லை.. ஆனால் இரண்டு மூன்று ரிங்கில் கட்டாகியது… அமர் “சரி… ப்பா.. குட் நைட்” என்றபடி மேலே சென்றான்…
இப்போதும் அபிதான்… முதலில் அமருக்கு, சலிப்புதான் வந்தது… எதுக்கு இப்போ.. போன் பண்றா… கூப்பிட கூடாதுன்னு சொன்னா கேட்கமாட்டாளா… என்று எண்ணியபடியே… வாட்ஸ்சப்… பார்க்க தொடங்கினான்… 
இப்போது அபியிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ்… வேண்டாம்.. ஓபன் பண்ண கூடாது… இன்னிக்கு அவ பர்த்டே வேற… நீ எடுக்காத அமர்… என மூளை சொன்னாலும்… விரல்கள் தன்போல்… அங்கு சென்றது…. 
இனிமையான குரலில், இவனின் என்னத்திற்கு முற்றிலும் வேறாய் ஆர்பாட்டமாகதான் ஆரம்பித்தாள் அபி “இன்னிக்கு என் பர்த்டே… 
ரொம்ப எதிர்பார்த்தேன்… ஒரூ விஷ் பண்ணுவீங்கன்னு… 
பட் நீங்க ஸ்டாரங்… ஜெயிச்சீட்டீங்க… விஷ் பண்ணாம…
நைஸ்ல்ல..
அ..பி… இப்படியெல்லாம்…
இல்ல… இத்தனை நாள்…” ஒரு சின்ன இடைவெளி… இதுவரை இருந்த குரலில்லை இப்போது… 
“ச்சு…. கூடாதுல்ல… அப்படி நடக்காதுள்ள கோச்… 
தெரியும்… தெரியும்… ஆனா… 
நீங்க என்னோட மாமா பையன்தான்… வேறு யாருமில்ல…
வேறு யாருமில்ல… 
நா, நான் வேறு எதையும் கேட்கவும் மாட்டேன்… 
எஸ், எனக்கு என்னோட லிமிட் தெரியும் கோச்… க்… க்ம்…” என ஏதோ சத்தம்… அத்தோடு அந்த மெசேஜ் முடிந்திருந்தது….
கூடவே அவளின் டிபியில் வைத்திருந்த AA… எடுக்கப்பட்டு…  ப்ளங்காக இருந்தது…
அமருக்கு வின் வின்யென தலை தெறிக்க தொடங்கியது… அம்மா, தங்கை, பாட்டி, தோழி என பெண்கள் படைசூழ வளர்ந்தவன்தான், அவர்களின் உணர்வுகள் புரியும்தான்… 
ஆனால் ஒரு பெண், தான் நேசிக்கும் பெண்.. தன் நிலை உணர்ந்து, குடும்ப சூழல் உணர்ந்து தன்னை அவளும் தள்ளி வைக்கும் போது……. இப்படி விலகி செல்லும் போது… வெறுமை மட்டுமே அவனிடம்…
இதே வலியை அவனும் உணர்ந்து கொண்டுதானே இருக்கிறான்… ஆனால் இப்போது, தனக்கு பிடித்தவள் உணருகிறாள்… என் புறக்கணிப்பில் அவளும் அதையே உணருகிறாள் எனும்போது…
அமர்… தரையில் விழுந்து துடிக்கவில்லை அவ்வளவுதான்… மறக்கலடி… உண்மையா மறக்கல… முழுசா தோத்துட்டேண்டி…  
நானும் இப்படி இருந்ததில்ல… இப்படி மறைச்சி… ஒளிச்சி… ம்ச்சு… மனசெல்லாம் இன்னிக்கு நீயேதான் இருந்த… யார்கிட்ட சொல்ல…  
நானும் மிஸ் பண்றேன்… நிறைய… சொல்லவா முடியும் உன்னமாதிரி.. போ.. என அமர் அந்த வானம் பார்த்து நின்றான் ஏதும் செய்ய முடியாதவனாக…
அன்றைய இரவு அவனிற்கு நீண்டது…
மறந்தாலும் நானுன்னை 
நினைக்காதா… நாளில்லையே…

பிரிந்தாலும் என்னன்பு… 
ஒருபோதும் பொய்யில்லையே…
தொலைதூரம் சென்றாலும்…
தொடுவானம் என்றாலும்… நீ…
விழியோரம் தானே மறைந்தாய்…
உயிரோடு முன்பே கலந்தாய்…