Advertisement

மின்னோடு வானம் நீ…. 7
அபி போனை கையில் வைத்தபடியே நின்றிருந்தாள்… என்ன செய்வது என தெரியவில்லை… போனை அமர் ஆப் செய்தவுடன்… ‘போடா’ என கோவம்தான் வந்தது… 
ஆனால், எதுக்கு அடிச்ச… ஒரு சாரி சொல்லல, இன்னிக்கு திரும்பி கூட பார்க்கல பதில் வேண்டும் எனக்கு’ என பிடிவாதம் வர… மீண்டும் மீண்டும் அழைத்தாள்… அந்த போனிடமிருந்து.. ஒரே பதில் வந்து… சுவிட்ச் ஆப் செய்யபட்டுள்ளது ‘ என..
அங்கு அமருக்கும் மனதேயில்லைதான், ஆனால் என்ன செய்வது… நடக்காது என தெரிந்த ஒரு செய்யலை அவன் மனம் ஏற்க மறுத்தது.. இதை பற்றி சிந்திக்க அவனுக்கு நேரமே இல்லை… எனவே பயிற்சி முடித்து… எட்டு மணி போல் வீடு வந்தான்…
சோர்வாக சோபாவில் அமர… சுமதி “என்ன டா… ரொம்ப, டயர்டா இருக்க… சாப்பிடுறீயா..” என்க.
பதில் வரவே லேட் ஆனது… “கொஞ்ச நேரம் ஆகட்டும்.. எங்க ப்பா… இன்னும் வரல…” என்றான்.
“இன்னும் வரல… அசோஷியேஷயன் மீட்டிங்ன்னு சொன்னாங்க… வந்திடுவார்… நீ சாப்பிட்டு போய் படு” என்றார்.
இவனும் டிவியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்… அதில் ஏதோ நாடகம் ஓடிக் கொண்டிருந்தது. இந்நேரம் நல்ல மூடில் இருந்தால்… அந்த ஷனம், சேனலை மாற்றி ஏதோ ஒரு ஸ்போர்ட்ஸ் சேனல் போட்டிருப்பான்… எனவே சுமதி அவனை இப்போது உற்று பார்த்தார்…
அதை கூட உணரவில்லை அமர்….
சுமதி “டேய்… குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” என்றார் அதட்டலாக.
அமர் எழுந்து சலித்தபடியே மாடியேறினான்… அவனுக்கு மனதெல்லாம் போனிலேயே இருந்தது… ஆன் செய்யலாமா.. வேண்டாமா… இருக்கட்டும்… நீ ரெஸ்பான்ஸ் பண்ணாதா… விட்டுடுவா..
ம்… விட்டுடுவா… வேணாம்… 
உனக்கும் கஷ்ட்டம் அவளுக்கும் கஷ்ட்டம்… 
கூட இருக்கிறவங்களுக்கும் கஷ்ட்டம்…

சவுத் ஆப்பிரிக்கா மாதிரி நானு… வேர்ல்ட் கப் மாதிரி நீயி… என்ன உருண்டு… பிரண்டாலும்… உன்னை நான் சேரவே முடியாது…. அவனின் தலை கோதியது விரல்கள்… யாரிடமும் பகிர முடியாத நிலை.. தன்னுள் விழுங்கினான் எல்லாவற்றையும்…
பசி வயிற்றை கிள்ள… அடுத்த அரை மணி நேரத்தில் நேரே கீழே வர… அவனின் தந்தை… ஏதோ இரண்டு மூன்று பேருடன்… ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்….
அங்கு அபி உணவு முடித்து… திரும்பவும் போனை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்…. வாட்ஸ்அப்பில் … அவனின் டிபியை வருடியது அவளின் விரல்கள்… தனது புட் பாலை ஆள்காட்டி விரலாலும், கட்டை விரலாலும் தாங்கியபடியே எங்கோ வெறித்து பார்த்தபடி இருந்தான் அமர் அதில்… 

பெரிய வராக பெருமாள்னு நினைப்பு… கொஞ்சமாவது சிரிச்சா என்ன… இப்படி வச்சு வெச்சே முகம் இப்படி உர்ன்னு ஆகிடிச்சு போல… இன்னும் போனை ஆன் பன்னால நீ… எப்போதான் நான் தூங்கறது… போன ஆன் பண்ணுங்க கோச்… என புலம்பியபடியே அமர்ந்திருந்தாள்…
இங்கு அமர், யாரோ.. என்னவோ பேசுகிறார்கள் என எண்ணி அமைதியாக தனது சப்பாத்தியை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்… ப்ரியா வந்தாள்… அவளுக்கு தன் தந்தையின், பேச்சு சத்தம் கேட்டு வந்தாள் அறையிலிருந்து. 
ஏதோ அவர் பரபரப்பாக இருப்பது போல் தோன்றியது என்னவோ ஏதோ என வந்தாள்… அவர் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்க… யார் இருக்கிறார்கள்… என பார்க்கவெல்லாம் இல்லை, அவரின் அருகே சென்று அமர்ந்தாள்… 
அவர் “நீ உள்ளே போம்மா” எனவும் அவரை தோளோடு அனைத்து “மெதுவா… பேசுங்க ப்பா…” என சிரித்த முகமாக கூறி வந்தாள் தன் அண்ணனிடம்.. 
பெண் பிள்ளைகள் இப்படிதான் கேள்வி கேட்கமுடியாது…  செல்லம் கொஞ்சியோ, மிரட்டி பேசியோ தங்கள் இருப்பை சொல்லிவிடுவதுண்டு…
தன் அண்ணனை பார்த்து “என்ன இன்னிக்கு சீக்கிரமா… சாப்பிடுற… செகன்ட்  ஷோ போறியா…. ண்ணா” என்றாள் ஆவலாக.
அமர் முறைத்தான்… நான் இருக்கற மூட்ல… சினமா… என எண்ணாமல் இருக்க முடியவில்லை அவனால், அமைதியாக “இல்ல தர்ஷி… பசிக்குது… நீயும் வா சாப்பிடலாம்” என்றான்.
“ம்கூம்…. எனக்கு இப்ப சாப்பிட்டா… பனிரெண்டு மணிக்கு பசிக்கும்…. “ என்றாள் சிறுபிள்ளையாய்.
அமர் சிரித்தபடியே “நடக்கவே மாட்ட… சாப்பிட்ட உடனே படுத்துடுவ… அப்புறம் எப்படி டி… பசிக்கும்…” என்றான் கிண்டல் தொனியில்.
ப்ரியா கொஞ்சம் ஹெல்த் கான்ஷியஸ்… எனவே தன் அண்ணன் இப்படி சொல்லவும்… “யார் சொன்னா, காலையில் நான் வாக் போறேன் தெரியுமா, என் பிரிண்ட்ஸ் எல்லாம் நான் ஸ்லிம் ஆகிட்டேன்னு சொல்றாங்க…” என்றாள் பாதி கோவமாக, பாதி பெருமையாகவும் சொல்ல..
அமர் “பாவம் கண் தெரியாது போல” என்றான்..
“டேய் அண்ணா… உனக்குத்தான் கண்ணு தெரியல… எல்லாம் பூட்பாலா… தெரியுது போல… “ என அவர்களின் பேச்சு நீண்டது..
அவனின் அப்பா முரளி, அப்போதுதான் பேச்சை முடித்தவர்… கண் மூடி தலை சாய்த்தார்… இவர்களின் பேச்சு காதில் தன்போல் விழ…. மனதில் பாரம் ஏறியது….
‘குழந்தைகள்… விளையாட்டு பருவம்தான்… யாரையோ நம்பி ஏமாந்துட்டனே… நான் ஏமாந்ததுக்கு என் மகன் என்ன செய்வான்… நான்தான் சமாளிக்க வேண்டும்’ என எண்ணியவராக பெருமூச்சு விட்டு எழுந்து சென்றார் தன் அறைக்கு.
அவர் உடைமாற்றி வரும் வரையும் அமர் உண்டுகொண்டிருக்க… கோவம் சிரிப்பு என மாற்றி மாற்றி வந்தது அவனின் தந்தைக்கு… அவனின் அருகில் டைனிங் சேரில் அமர்ந்தவர்… “இன்னும் முடிக்கலையாடா… நீ “ என்றார்…
சுமதி உள்ளே இருக்க, அங்கிருந்த பிரியா… “அவன் இப்போதான் எட்டு முடிச்சிருக்கான்… இன்னும் எட்டு பாக்கியிருக்கு….” என்றாள் சிரித்தபடியே….
அமர் அலட்டாமல்… “இதோ ஆச்சுப்பா…” என முனகினான்… தன் தங்கையை பார்த்து… “போடி…. படிக்கற வழிய பாரு…” என்றான் பல்லை கடித்தபடியே…
பிரியா “போடா” என மெல்ல சொல்லியபடியே ஹாலில் சென்று அமர்ந்து கொண்டாள்.
சுமதி “நீங்க சாப்பிடுங்க…” என்றார்.
“இல்ல மா… கொஞ்ச நேரம் ஆகட்டும்… “ என்றவர்.
தன் மகனின் புறம் திரும்பி “அமர், நாளைக்கு நீ எழும்பும் போதே, என்னை எழுப்பிவிடு….” என்றார்.
அமர் “சரி” என்றான் வேறேதும் கேட்கவில்லை…
பிரியா “என்னப்பா.. நீங்க அவன் கூட சேர்ந்து வார்ம்மப் பண்ண போறீங்களா…” என்றாள் சிரித்தபடியே…
என்ன நினைத்தாரோ அவர்… “தெரியலை டா…. போகற போக்க பார்த்தா… நானும் இவன் கூட சேர்ந்து… விசில் ஊத வேண்டி வரும் போல” என்றார் சங்கடமான குரலில்.
அமருக்கு கோவம் வந்தது… தன் வேலையை எப்படி இப்படி சொல்லலாம் என, ப்ரியக்கு சிரிப்புதான் வந்தது… சுமதிக்குதான் ஏதோவென கலக்கம் வர “என்னங்க இது பேச்சு…” என்றார் அதட்டலாக… 
உடனே உள்ளே சென்று வேலை செய்யும் ருக்கு அம்மாவிடம் “சப்பாத்திய தேச்சிட்டீன்களா… முடிஞ்சிதுன்ன… உங்களுக்கானத எடுத்துட்டு கிளம்புங்க… ஆத்தா” என்றார் சம்பந்தமே இல்லாமல்…
வேலாயுதம் ருக்கு… இருவரும் அருபதை நெருங்கும் தம்பதி… பிள்ளைகுட்டி என எதுவும் இல்லை… அமர் பிறந்த போது… துணைக்கு என சுமதியுடன் வந்தவர்கள்… வேலாயுதம் தோட்டம்… வெளிவேலை என பார்க்க… சமையலை ருக்கு கவனித்துக் கொள்வார்… 
சுற்று வேலைக்கு.. தினமும் ஒரு பெண்மணி வருவார்… இந்த தம்பதி இருவரும் இங்கேயே பின்னால் தங்கியிருப்பர்… அவர்களை, வயது காரணமாக எட்டு மணிக்கு அனுப்பிவிடுவார் சுமதி… 
இன்று ருக்குவே “ பேரன் சீக்கிரம் வந்திருக்கான்… நான் சுட சுட சுட்டு தரேன்… நீ பரிமாறு தாயி” என்கவும் பேசாமல் செய்தார் சுமதி…
இப்போது விரட்டினார் சுமதி… அந்த ருக்கு அம்மாளும் வெளியே வந்து “போய் வரேன்… தம்பி” என முரளியை பார்த்து சொல்ல…
அமர் “நீ இன்னும் போகலையா பாட்டி… கிளம்பு… மாத்திரை இருக்கா… சாப்பிடுரீயா…. காலையில… நான் ஜாக்கிங் போனதுக்கு அப்புறமாதான் வரணும்…. முன்னாடியே எதையாவது உருட்டின… கரண்ட புடிங்கிட்டு போய்டுவேன் பார்த்துக்க…” என்றான் மிரட்டலாய் உதார் குரலில்…

“சரிப்பா… சரிப்பா… நீ நேரங்காலத்துல… படுப்பா” என்ற படியே கிளம்பினார் அந்த பெண்மணி. இது ஒருவகை பிணைப்பு…
அமர், பொறுமையாக உண்டு சோபாவில் அமர… மகன் அந்தபக்கம் செல்லவும் சுமதி, தன் கணவரிடம்… “என்னாச்சு… சீக்கரமா… எங்க போகணும்” என்றார் விசாரணையான குரலில்.
முரளிக்கு சலிப்பாக வந்தது… இருந்தும் “அந்த  GMம…. நாளைக்கு காலையிலேயே வீட்டில் போய் பிடிக்கணும்… போலீசுன்னு போனா… நாமதான் அலையணும்…. திருட்டு பயலுக…. நம்பினேன் எமாற்றிட்டானுங்க… அதான்… நானும் பிர்ண்டிங் யூனிட் மேனேஜரையும் வர சொல்லியிருக்கேன்…போகணும்…. பார்த்துடலாம் நானா அவனான்னு” என்றார் கடுப்பாக.
சுமதி “நீங்க எதுக்கு இதுகெல்லாம்… யாரும் ஆளுங்ககிட்ட சொல்லலாம்ல…” என்றார் ஆற்றாமையாக.
“வேணாம் சுமதி… இப்போதான் ஒருத்தன நம்பி ஏமாந்தேன்… இனியும் ஏமாற முடியாது… கிட்ட தட்ட ஒரு கோடி கிட்ட சுருட்டிருக்கான்… கைல கிடைக்கடும்…” என்றார் வேதனையும் வன்மமும் போட்டி போடும் குரலில்.
சுமதி என்ன சொல்வது என தெரியாமல் தன் கணவரை பார்த்தபடியே இருந்தார்… அமர்… அங்கிருந்த படியே காதில் வாங்கி இருந்தான் இதையெல்லாம்… 
மனம் வலித்தது… யாரோ தந்தையை ஏமாற்றி விட்டார்களா… எப்படி முடியும்… இப்படி ஓயவே மாட்டாரே… நான் உருவாக்கியது என எப்போதும் கர்வமாகவே சுற்றுபவர் இன்று சலிப்பாக இருக்கவும் அமருக்கு சற்று பயம் வந்தது… நாளை பார்க்க வேண்டும் என நினைத்தபடியே மேலே ஏறினான். வெளிப்படாத அன்பு மகனினுடையது…
தலைகொள்ளா சிந்தனை அவனிடம்… வலது மூளை அபி அபி என்க… இடது மூளை அப்பாக்கு என்னாச்சு… என இருவேறு பக்கமும் எண்ணி தேய்ந்து போனான் அமர்… அவனின் கைகள் தன்போல் சார்ஜ்ஜில் இருந்த போனை ஆன் செய்ய…
இவன் எப்போதடா போனை ஆன் செய்வான் என காத்திருந்த அபி… அவன் போனை ஆன் செய்த அடுத்த நொடி கால் செய்திருந்தாள்… ‘அபிராமி சுவாமிநாதன்’ என்ற பெயரை பார்த்ததும்… மனம் என்ன உணர்கிறது புரியவில்லை அவனிற்கு… அமைதியாக போனை வெறிக்க தொடங்கினான்…

மீண்டும் மீண்டும் போன் ஒலித்துக் கொண்டே இருந்தது… ‘அப்படி என்ன பிடிவாதம்… நான் பேசமாட்டேன் ‘ என தீர்மாணித்தபடியே அமர்ந்திருந்தான் அமர்…
இப்போது வாட்ஸ்அப் மெசேஜ்… “ஏன் போன் எடுக்கல கோச்… ஒரே ஒரு தரம் எடுங்க…” என அனுப்பியிருந்தாள்.
அமர் அவளின் மெசேஜ் பார்த்து… யோசனையுடனே இருந்தான்… எப்படி பேசுவது எப்படி சொல்லுவது என… அவளின் டிபி பார்த்தான்… இரண்டு  கேபிட்டல் AA என இருந்தது அவளின் டிபியில்.. அதை பெரிதாகி பார்த்தப்படியே இருந்தான்… மீண்டும் கால் வர எடுத்தான்…”ஹலோ… கோச்…” என்றாள் அபி.
“ம்…” என்றான்.
அபி “போன் பண்ணா… எடுக்க மாட்டீங்களா..” என்றாள் மெல்லிய குரலில்தான்.
அமர் ஆழமாக “நான் எதுக்கு எடுக்கணும்…” என்றான்.
“அப்போ எதுக்கு அடிக்கணும்” என்றாள் அவளும் ஆழமாக…
அமர் “எதுக்கு வந்து உட்கார…” என்றான்
“நீங்க எதுக்கு பாத்தீங்க…” 
“அப்ப, யார் பார்த்தாலும் இப்படிதான் போன் செய்வியா…” என்றான், அபியினிடத்தில் மௌனம்… அவன் சொன்னதன் வலி அமைதியாகினாள் இரண்டு நிமிடம்…
‘நீங்க எல்லோர் மாதிரியும் பார்க்கல’ எனதான் சொல்ல நினைத்தாள்… ஆனால் வரவில்லை… 
என்னை யாரும் இப்படி பேசியதேயில்லை… அவர்கள் பேசும்படி நான் நடந்ததேயில்லை… இ… இவன்… எப்போதும் அதிகம்தான்… திமிர்பிடித்தவன்…  என மனம் எண்ண…
அவனிடம் அந்த திமிர் பிடித்துதானே பேசுகிறேன்… அப்போ இதெல்லாம் கேட்டுதான் ஆகணும்… என மூளையும் மனமும் மாற்றி மாற்றி வகுப்பெடுக்க்… கண்களும் உடைபெடுத்தது…
இப்போது அமர்க்கு தான் பேசியது அதிகப்படி என தெரிந்து மெல்ல “சரி, சொல்லு எதுக்கு கூப்பிட்ட” என்றான்…
அமரின் இந்த மெல்லிய குரலை கேட்கவும் மீண்டாள் அபி.. “என்ன… என்னனவோ பேசுறீங்க…. என் அண்ணன் கிட்ட சொன்னேன் என்ன ஆகும்ன்னு தெரியுமா….” என்றாள் இவளும் மிரட்டல் குரலில்.
அசந்து போனான் அமர்… இந்த த்வனியில்… நீ நடந்து போகும் போது ஒரு எறும்ப மிதிச்சா கூட அது சாகாது… அப்படி ஒரு மென்மை நீன்னு நினைச்சா… அண்ணன்ட்ட சொல்லுவியா… என நினைத்து சிரித்துக் கொண்டான் தன்னுள்… 
அபி “என்ன பேச மாட்டேங்கிறீங்க… அண்ணன் ட்ட சொல்லமாட்டேன் “ என்றாள் சிரித்தபடியே…
அமருக்கு சுருக்கென வலித்தது… கள்ளம்மில்லா பெண்ணை என்ன வார்த்தை சொல்லிவிட்டேன்… என தோன்ற… 
அமர் “எனக்கு வேலையிருக்கு… என்னை இனி நீ டிஸ்ராப் பண்ண கூடாது “ என்றான் கட்டளையாக…
அபி “சரி அடிச்சதுக்கு சாரி சொல்லுங்க இனி உங்களை கூப்பிட மாட்டேன்” என்றாள்.
“என்ன விளையாடுறீயா… நான் எப்போ அடிச்சேன்…” என்றான் கோவமாக
“ஐயோ ம்மா… என்ன விட பயங்கரமா பேசுறீங்க… அன்னிக்கு பாலால அடிக்கல” என்றாள்
“அது தெரியாமா வந்தது… சும்மா ஏதாவது காரணம் சொல்லி என்னை கூப்பிட கூடாது… 
போ படிக்கிற வழிய பாரு…. 
நாம யாரு என்னான்னு தெரியுமில்ல…. அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும்… 
புரியுதா… போ… நல்லா படி… நல்லா பாடு… மனச குழப்பிக்காதா…” என்றான் இறுதி வாக்கியத்தில் அவனின் குரல் அவனை மீறி கரகரத்தது…
அபி அமைதியாக இருந்தாள்… அவனும் போனை வைக்க மனமில்லாதவனாக அப்படியே இருக்க… “வேற ஒன்னுமில்லையே…” என்றாள் அவள்…
கல்நேஞ்சகாரன் “ம்கூம்…. அந்த AA எடுத்திடு” என்றான் ஆழ்ந்த குரலில்…
அபி “என் பர்த்டே… வர ஃப்ரைடே… அது வரைக்கும் இருக்கடுமே… நீ நீங்க பார்க்காதீங்க” என்றாள்
அமருக்கு சிரிப்புதான் வந்தது… ‘அதுக்கும் பர்த்டேக்கும் என்ன சம்மந்தம்’ கேட்கத்தான் தோன்றியது… தன்னை கட்டுபடுத்திக் கொண்டே போனை கட் செய்தான்….
அபிக்கு “மனசெல்லாம் மழையே…
நனைகிறேன்…. உயிரே….
என் நெஞ்சி வந்து… சாரல் அடித்தால்…
என்னாகும் உயிரே….” என கண்கள் ஈரமாக வாய்திறந்து பாடினாள்….
இது நிலைக்காது… நீடிக்காது… அவளின் கண்களில் வழிந்த நீர் அதை சொல்ல… மனமெல்லாம் விடு… அவன்தான் எனக்கு என எப்போதும் போல… தனக்கு வாகாக ஜால்ட்ரா  கொட்டியது…
அமருக்கும் தன் மீதே கோவம்… ஏண்டா… நீ கேட்டு இல்லன்னு சொல்லிடுவாங்களா… உன் வீட்டில்…

ஆனால், 
வேண்டாம்… எனக்கு வேண்டாம்… 
எங்க அம்மா… சுமதி… பாவம் சுமதி நீ…
அவ… அபி புரிஞ்சிப்பா… 
சமாத்தா… இருப்பா…
ம்… எவ்வளோ ஆசையா பேசினா… 
ஒரு வார்த்தை எப்படி இருக்கன்னு கேட்க கூட இல்ல… 
ம்… போதும் அமர்… போ.. விடு அவள…” என மனம் அவனிற்கு எதிராகவும்… ஆதரவாகவும்… பேச… அமர் அப்படியே பெட்டில் சாய்ந்து கண்களை மூட நினைத்தான்… முடியவில்லை அவனால்… பயம்.. ஏதோ அவள் கண்ணில்தான் இருப்பதாக பயம்… அந்த இமைகளும் மூடவில்லை… விழித்தேகிடந்தான் வெகு நேரம்…

Advertisement