Advertisement

மின்னோடு வானம் நீ…. 6

வீடு வர வர  அகிலனுக்குதான், உள்ளே ஏதோ ஓடிக் கொண்டே இருந்தது. யார் அது… இந்த வட்டத்தில் புதிதாக தெரிகிறான்…. கெளதம் பற்றி தெரியும் இவன் யார் என எண்ணம் வந்தது…

இனி அபியை தனியே எங்கும் அனுப்ப கூடாது…. அபி இன்னும் சிறிய பெண் அல்ல… அவன் பார்வையே சரியில்லை… பார்க்கணும் என சிந்தனையிலேயே வந்தான் அகிலன்.

அபிக்கு இது ஒரு கொண்டாட்டமாக இருந்தது… எனக்கு ப்பேன்… செம்மையா பாடுனேன்னு சொல்றாங்க… ம்… எண்ணியவள், தன் அண்ணனிடம் “ண்ணா… நான் எப்படி பாடுனேன்…. “ என்றாள் குதுகலமான குரலில்..

இது ஒரு வகை எதிர்பார்ப்பு… அவனும் அவளை குளிர்விக்க… “எப்போதும் போல சூப்பர் டா அபிம்மா… அதுவும் பஸ்ட் சாங் சூப்பர்… முடிக்கும் போது வந்த ஹம்மிங்…. சூப்பர்…” என்றான் இயல்பாய், ஆனால் அபிக்கு அந்த டி ஷர்ட் ஆதித்த வர்மனே நினைவு வந்தான்.

அங்கேயே அவனிடமே மையம் கொண்டாள் பெண்… யாரும் இவளிடம் இவ்வளவு அழுத்தமாக பேசியது இல்லை. அதுவும் அண்ணன் எதிரில்… இல்லவே இல்லை…

பள்ளியில், எல்லா கலாட்டாக்களும் உண்டுதான். ஆனால் வெளி உலகம் என்பது அபிக்கு இப்படிதான், யாராவது ஒருவர் கூடவே இருப்பர்.. எங்கும் துணை, எதிலும் கண்காணிப்பு…

முக்கியமாக அவள் வெளியே வந்ததே இல்லை எனலாம்… ஆசிரியர் முதற்கொண்டு வீடு வருவர்… கண்ணில் பார்ப்பது முதல், நெட்டில் பார்ப்பது வரை.. எது கேட்டாலும் கிடைக்கும். இப்படி சிறிதும் பெரிதுமான குழந்தைகளுக்கான வட்டம்தான் அவளுடையது.

ஆனால் இன்று எல்லாவற்றையும் மாற்றி… புதிதாய் ஒரு அனுபவம்.. அவளுக்கு, புதியவன்தான் அந்த கூட்டத்தில் அவன், மற்ற எல்லோரையும் பார்த்திருக்கிறாள்… இயல்பாய் பேசவும் பழகவும் செய்திருக்கிறாள்.

ஆனால் இவன்.. முதலில் அவனின் தோற்றம்… அவன் பார்வை எதுவும் அவளுக்கு தெரியவில்லை, நினைவில் இல்லை. ஆனால், அவனின் துணிவு… அதன் திமிர் மட்டும்தான் அவளை கவர்ந்தது… என்ன தைரியம்.. எனதான் அபி எண்ணினாள்.

பேர் என்ன சொன்னாங்க… ‘அமர்…’ சத்தம் வராமல் சொல்லிக் கொண்டாள்… மெதுவாக அண்ணனை திரும்பி பார்த்தாள்… அவனின் சிந்தனையில் இருந்தான் அகிலன்… இப்போது அபிக்கு, அமர் பேய் பிடித்துக் கொண்டது அழகாய்.

சீட்டில் சாய்ந்தாள்… கண்கள் மூடவில்லை.. இதழ்கள் சேரவில்லை… கனவில் மிதந்தாள்… பதின்ம வயது, கனவுகளுக்குதான் முதலிடம்…

அகில்..”அபி அபி “ என வீடு வந்து நான்கு முறை உலுக்கிதான் இறக்கினான் அவளை.

அபி துள்ளி குதித்து உள்ளே ஓடினாள்… ஹாலில் தன் அம்மாவை பார்த்ததும் “அம்மா… மா… நீ வந்திருக்கலாம்… எல்லோரும் சூப்பரா பாடுனேன்னு சொன்னங்க… போ… நீ வரல…” என்றாள் குறைபட்ட குரலில்.

மகா “எங்க டா… அப்பா வெளியில் போகணும்னு சொல்லிட்டாங்க… இன்னொரு தரம் கண்டிப்பா வரேன்… எனக்கு தெரியும் என் பொண்ணு சூப்பரா… பாடுவான்னு” என்றார் தன் மகளை செல்லம் கொஞ்சியபடியே

அதிலிருந்து அவளின் பேச்சு சத்தம்தான் அந்த வீட்டை நிறைத்தது.. இரவு உணவிற்காக வந்த தாத்தா… பாட்டி… அப்பா என எல்லோரையும் தன் பேச்சில் இணைத்தால் அபி..
பாட்டி சுற்றி போட்டார்… அவளுக்கு. அன்று பேசியபடியே தன் அன்னை தந்தையின் அறையிலேயே உறங்கினாள் அபி… அகிலனுக்கு சற்று நிம்மதி. இயல்பாக இருக்கிறாள் என…

அமரின் நிலை முற்றிலும் வேறாய்… ஏதோ திளைப்பிலிருந்தான்.. அவளின் குரல் வசீகரித்ததா… இல்லை அவள் முகமா என தெரியாத குழப்பம்,

ஏன் இப்படி அந்த பொண்ணுகிட்ட இருந்து மட்டும் கண்ண எடுக்கமுடியல…. ம்…. இது அதிகம்தான் அவன் அண்ணன் முன்னாடியே… பேர  சொல்லு, பேர சொல்லுன்னு… பாவம்… பயந்துட்டா… ‘ லேசாக சிரித்துக் கொண்டான்.

‘நரேன் சொன்னது போல, சின்ன பெண்… என்னை நம்புவாளா… பார்க்கலாம்…’ என்ற எண்ணம்… ஆனால் மனம் அவளிடமே நிற்க தொடங்கியது.

ஒவ்வரு நாளும் அவளின் முகம் வந்து அவனை இம்சிக்க தொடங்கியது. எங்கும் அவள் முகம் வர தொடங்கியது அமர் தடுமாறினான்… இதற்கு நடுவே பயிற்சி வேறு… கவனம் சிதற தொடங்கியது.

ஐயோ என்னாச்சு எனக்கு… ஏதோ பார்த்தமா… விட்டோமான்னு இருக்கணும் என அவன் மூளை சொல்ல… மனம், அவளின் குரலிலும் விழியில் சிக்கி கொண்டது.

வேண்டாம் எனும் பொழுதில்தான்… அருகில் வருவதாக உணர்ந்தான் அமர்…. ஏனோ நிறைய யோசனை அவனிடம்… விட்டு விடல்லாம் எனத்தான்… ஆனால் யாரை பார்த்தாலும் அவளின் முகம் மின்மினியாய் எங்கோ அவன் மனதில்… மின்னிக் கொண்டேயிருந்தது.

நாட்கள் நகர நகர அபிராமியின் பித்தனான் அமர். அவளை ஒருமுறை பார்க்க வேண்டும் என எண்ணம் எழுந்தது… யாரிடமும் பேச பிடிக்கவில்லை… நண்பர்களை தவிர்த்தான்….

இன்றோடு ஒருமாதம் ஆகிறது.. எங்கே பார்ப்பது யாரிடம் கேட்பது மனமெல்லாம் அதே ஓடிக் கொண்டிருக்க… அமர் அயர்ந்து போனான்…
அவசர படாதடா… வெயிட் பண்ணு என தனக்குதானே முனகி கொண்டே இருந்தான்.. காதலா, ஈர்ப்பா என புரியாது அமர் அலைபாய தொடங்கினான்.

தன்னை கட்டயாமாக பயிற்சியில் ஈடுபடுத்த தொடங்கினான்… நிறைய மன போராட்டத்துடன் அவளை விளக்கி நிறுத்தினான். அதற்கு அவனின் பயிற்சி உதவியது. இப்போது மனம் ஒருநிலைக்கு வந்தது…

அமர் அப்போது MBA முதல்வருடம்…. எனவே தெளிவாக இருந்தான்… ‘அவளை நினைக்காமல் இருக்க முடியாது’ என்ற தெளிவுதான் அது… எனவே விசாரிக்கலாம்… என முடிவு செய்து கொண்டான்.

பாவம் கிணறு வெட்ட பூதம் வந்தது…

அன்று எப்போதும் போல…. கல்லூரியில் வகுப்புகள் சென்றுகொண்டிருக்க… இவன் கிரௌண்டில் பயிற்சியில் இருந்தான்… அப்போது அபியை அவனின் அண்ணனுடன் அங்கே கண்டான்.

அவள்தானா என்ற சந்தேகமே இல்லை அவனிற்கு… தன் அண்ணனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு… தலையையாட்டி செல்பவளை பார்த்தது, பார்த்தபடி நின்றான்…

அவனின் பயிற்சியாளர் ஊதிய விசிலுக்கெல்லாம் இவன் அசரவேயில்லை… இவன் மட்டும் இங்கிருக்க… அவனின் மனம்     அங்கே அவளுடன் சென்றது… ‘அபி…. என்னை தெரியுதா…. இங்க  பாரேன்… ஹேய்… கொஞ்சம் குண்டாகிட்ட… ‘ என ஏதேதோ பிதற்ற…   தன் மேல் வந்து விழுந்த பந்தில் சுயநினைவுக்கு வந்தான் அமர்.

கிரௌண்ட்டிலிருந்து வெளியே போய் அமர்ந்து கொண்டான் ஒரு அரைமணி நேரம்… எங்கே இவள் இப்போது… ப்ஸ்ட் இயர் ஸ்டார்ட் ஆகியாச்சே…. லாஸ்ட் வீக்தானே… ஆச்சு… என தாடையை தடவியபடி யோசனை… எதற்கும் விடை கிடைக்கவில்லை… ஆனால் உள்மனம் அவனிற்கு சாதகமாக ஏதோ சொல்லியது… பெருமூச்சுடன் எழுந்து விளையாட சென்றான்.

அன்று இரவு முழுவதும் மீண்டும் அவள்… இங்க எங்க வந்தா… எதுக்கு வந்தா… அவன் அண்ணன் வேற வந்திருக்கான்… ம்.. என எப்போது தூங்கினானோ தெரியாது…

அடுத்தநாள் காலை அமருக்கு மெதுவாகவே விடிந்தது… ஜாக்கிங் செல்லவில்லை… குளித்து கிளம்பி கீழே வந்தான்… வீட்டில் ப்ரியா வேறு.. அப்போதுதான் கல்லூரிக்கு கிளபிக் கொண்டிருந்தாள்…

இவனின் கல்லூரியில் சேரவில்லை அவள்… ‘அது வேண்டாம்… என் பிரிண்ட்ஸ் எல்லாம் வேற காலேஜ்.. நானும் அங்கேயே போறேன்’ என ஊரில் உள்ள… பெரிய கல்லூரியில் சேர்ந்தாள்.

அதனால்… வேறு வேறு… திக்கு இருவருக்கும்… இப்படி எப்போதாவதுதான் பார்ப்பர் இருவரும்.. பிரியா “என்ன ண்ணா… பிராக்டிஸ் போகல… தூங்க மாட்டியே நீயி… என்னாச்சு…” என கிண்டல் பாதி… அக்கறை மீதியாக அவனின் தங்கை கேட்க…

சலிப்பானது அமருக்கு… “ச்சு… போகலடா… நீ கிளம்பிட்டியா…. எப்படியிருக்கு காலேஜ்… செட்டாகிடிச்சா…” என இப்போதான் கேட்டான் தன் தங்கையிடம்.

“ம்… ஒகே ண்ணா… டைம் ஆச்சு கிளப்றேன்… பை…” என்றபடி… தங்கையும் கிளம்ப… ஏனோதானோவென அமர்ந்திருந்தான் அமர்.

அவனின் அன்னை வந்து… “என்னடா…  டல்லா இருக்க, பயிறு… அங்க தாளிச்சு வைச்சிருக்கேன்… எடுத்துக்க… ஏன் இவ்வளோ லேட்… சீக்கிரம் கிளம்பி டைம் ஆச்சு” என விரட்டினார்…

இப்படி சோம்பேறியாகவே கிளம்பி கல்லூரிக்கு வந்தான்… இன்ப அதிர்ச்சி… அபி அப்போதுதான் காரிலிருந்து இறங்கினாள்…

தயக்க நடையுடன் செல்லும் அவளை பார்த்தபடியே அவளின் பின் சென்றான்… அவள் எந்த பிளாக் என கண்டு கொண்டான்… அவளை நெருங்கவில்லை… பேச நினைக்கவில்லை…

அதன்பிறகு ஒரு பத்துநாள்… அவள் வரும் நேரத்திற்கு சரியாக கல்லூரி வாசலில் நின்றான்… அவளின் நடவடிக்கைகளை கவனித்தான்.. ஆனால் அபி அவனை இரண்டு நாட்களில் கண்டுகொண்டாள்…

நாட்கள் நகர்ந்தது… அபி கல்லூரியை பழகினாலோ இல்லையோ அமரின் பார்வைக்கு பழகினாள்… நெருங்காத அவன் கண்ணியம் அவளை அசைத்தது… மேலும் கல்லூரி முழுவதும் இவர்களின் புகழும் பரவியது. நெருங்காமல் நெருங்கினான் அமர்..

நண்பர்கள் எல்லோரும் வேண்டாம்… சும்மா டைம் பாஸ்ன்னா பராவயில்ல… நீ சீரியஸா இருக்க… பொன்னு பேரு கெட்டுடும்… பார்த்துக்க என பலவிதமான கட்டுபாடுகள் விதித்தனர்..

ஆனால் எதுவும் அப்போது அவன் காதில் வாங்கவில்லை… நிமிர்ந்து நின்று… ‘நான் பார்த்துக்கிறேன்… விடுங்கடா, என்ன விட நீங்கதான் கவலை படுறீங்க…. போங்கடா…” என்பான்..

முதல் வருட நாட்கள் முழுவதும் அப்படியே நகர்ந்தது… ‘விளையாட்டு… அபி’ என அவனும், ‘படிப்பு அமர்’ என அவளும் கடத்தினர்.

இரண்டாம் வருட தொடக்கத்தில் ஆரம்பித்தது மீண்டும் இவர்களின் பார்வை… இது அப்படி இப்படி என சபரியின் காதுகளை எட்டியது.

சபரியிடம் எதுவுமே மறைக்காத அமர் இதை மறைத்தான்… நரேன் ஏதோ பேச்சுவாக்கில் சொல்ல, அந்த வார கடைசியில் சபரி… அமரை பலவிதமாக கொடைந்து அவன் வாயிலிருந்து வாங்கினான் வார்த்தையை.

ஒருவழியாக அமர் அபியை பற்றி சொல்லி… “இப்போ எதுவும் அவகிட்ட சொல்லா… ண்ணா… படிக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்” என்றான்.

“ம்… வெளியூரா… “ என்றார்.

“இல்ல ண்ணா… *….. * மில் இருக்கில்ல… அவங்க பொண்ணு” என்றான் அசால்ட்டாக… ஆனால் இந்த வார்த்தை அவனின் எல்லா சந்தோஷத்துக்கும் வேட்டு வைக்கும் என தெரியாது.

சபரி… “யாருடா… சுவாமிநாதன் அவங்க.. பொண்ணா…” என்றார் தெளிவுபடுத்தவது போல…

“அவங்க அப்பா பேர்ரெல்லாம் தெரியாதுண்ணா… நரேன் சொன்னான்…” என்றான்.

“கூப்பிடு அவன…” என்றார்.

தொடர்ந்து நரேனிடம் விசாரணை சென்றது… சபரி தலையில் கை வைக்காத குறையாக அமர்ந்தான்… எப்படி சொல்வது இவனிடம் என அலைபாய்ந்தான்.

சபரி பட்டென… “இது எந்த காலத்திலும் நடக்காது அமர்…. மறந்திடு… ஒன்னும் பெருசா நீ ஆரம்பிக்கல… இப்பவே எல்லாததையும் தூக்கி போட்டுட்டு… மேட்ச்ல கான்ஸன்ரேட் பண்ணு… போடா…” என்றான்.   

இந்த வார்த்தையில் நரேனுமே அதிர்ந்து போனான்… அமரின் பாதி தைரியத்திற்கு காரணமே… சபரிதான்… இதில் இவரே இப்படி சொல்லவும்… அமர் வாடித்தான் போனான்.

நரேன்… தொடங்கினான் இப்போது சபரியின் வேலையை…

சபரி இப்போது பொறுமையாக எல்லாம் சொன்னானர்… அமரின் வீட்டை பற்றியும் அவர்களின் உறவு பற்றியும்… எங்கும் கூட்டவும் குறைக்கவும் இல்லை… நடந்ததை சொன்னார்.

இது தலைமுறைகள் தாங்கிய அழகான நட்பு… அதனால் வந்த உரிமையில்… தன் தம்பி போன்றவனை காக்க… அவன் மனம் வருந்தாமல் இருக்கதான் சொன்னார் சபரி.

கேட்ட அமருக்கு… சந்தோஷ படுவதா… துக்க படுவாதா தெரியாத நிலை.. இதுவரை வீட்டில் யாரும் சொல்லாத உறவு… விளக்காத உறவு…

வீட்டில் மகாவின் பேச்சை எடுப்பதில்லை யாரும், மறந்தே போயினர்… இல்லை அப்படியே பழகிக் கொண்டனர். மகாவின் அன்னை தந்தை இருந்தவரை… எதற்காவது மகாவை பற்றி பேசி, கண்ணை கசக்குவார்கள்தான்…

எல்லாம் அவர்கள் காலத்துடன் முடிந்தது…. அவர்களின் காலமும் அமரின் சிறுவயதிலேயே முடிந்தது… எனவே… மறைக்கப்பட்டதா… மறக்கபட்டதா தெரியவில்லை… அமரின் நினைவடுக்கில் மட்டும்… மகா என்ற பெயர் அடிபட்டது… மற்றபடி அவரை பற்றி ஏதும் இதுவரை தெரியாது அவனிற்கு…

மேலும்… சுமதி… அந்த நாட்கள் மிகவும் கடினமானவைதானே… தன் கணவனை பார்க்காமல் கிளம்பி பிள்ளைபேருக்காக தன் பிறந்த வீடு சென்றாள்..

அடுத்து என்ன நடக்கும் என தெரியாத நிலை… தன் கணவன் வந்து தன்னை பார்ப்பானா… தெரியாது… தன் அண்ணன் அவரை பார்ப்பாரா தெரியாது… மடியில் பிள்ளை மனதில் கனமும்மாக சென்ற தருணமது….

முரளியின் அன்னை தந்தை இருவருமே… மகாவின் திருமணம் முடித்து… முரளியுடன்… சுமதி வீட்டிற்கு சென்று பேசி சமாதானம் செய்தனர்… எல்லாம் சரிதான் ஆனால் வலியைத்தான் யாராலும் வாய்விட்டு பேசமுடியவில்லை…
மகாவின் அன்னை தந்தைக்கு ஒரு வலி… அண்ணன் முரளிக்கு… தன் மச்சினன் முகத்தை பார்ப்பது இன்று வரை… வலிதானே… அத்தோடு… சுமதிக்கு… தோழியாக பழகி… பிறந்த வீடு புகுந்த வீடு என இரண்டு இடத்தின் வலியும் சேர்ந்து அவளை மௌனமாக்கியது…

எனவே இத்தனை வருடங்களில்… ‘மகாலக்ஷ்மி’ என கடவுளின் பெயரை கூட அவர் சொல்லவதில்லை… தன் நாத்தனாரை பற்றி பேசுவதேயில்லை… எனவே அமருக்கும் பிரியாவிற்கும் எதுவும் தெரியவதற்கில்லை.

இப்போது அமருக்கு எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலை… அந்த வெட்டவெளி, மொட்ட மாடி… அவனை நிராதரவாக்கியது…

‘போடி… நீ எனக்கில்ல…. போ… வேண்டாம்… எங்களை உதறிய உறவு எனக்கும் வேண்டாம்… போ… நீ வேண்டாம்…

விடு… என்ன…. நீ விட்டுட்டு போ… இல்ல, நான் விட்டுட்டு போறேன்… போ… எனக்கில்ல… இந்த கணீர் குரலும்… ஈர்க்கும் பார்வையும் எனக்கில்ல…

அவ்வளவுதான்… எல்லாம் முடிஞ்சி போச்சி… போ…

எதுக்கு என் கல்லேஜ்க்கு வந்த…. அப்படியே எங்கையாவது போயிருக்கலாம்ல… நானாவது நிம்மதியா இருப்பேன்…. இனி… கூடாவே இருப்பியே….

நான் வேற… சும்மா இல்லாமா… எல்லோருக்கும், அவ என் ஆளுன்னு… சொல்லாத குறையா பார்த்து வைச்சிருக்கேனே….

டேய் அமர்… சின்ன பொண்ணு… விட்டுடு… உன்னால யாரும் பாதிக்க கூடாது… இனி அவ கிட்ட பேசாதா… பார்க்காத… 

எல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிடும்… விட்டுடு…. பார்த்துக்கலாம்…” ஆக எல்லா முடிவும் அமரே எடுத்தான்…

முன்பு அவள் வேண்டும் எனும்போதும் அவனே முடிவு செய்தான்… அது ஏதோ… அபியின் பார்வையும் இவன் பக்கம் விழுந்தது…
இப்போது அவள் வேண்டாம் என்பதையும் இவனே முடிவு செய்தான்…

பாவம் அபிக்கு இது எதுவுமே தெரியாமல்… அடுத்த நாளிலிருந்து அவள் வாடிபோனாள்… எதற்கு என தெரியாத புறகணிப்பில்… அந்த பளிங்கு சிற்பம், மங்கி போனது.

எப்போதும் வாசலில் தவமிருக்கும் அவன் கண்கள் இப்போது எங்கும் தென்படவில்லை அவளிற்கு… எங்கிருக்கிறான் என தெரிவதேயில்லை அவளுக்கு… இரண்டு வாரம் வரை… எதுமே தெரியாத நிலை…

அபி காய்ந்து ஓய்ந்து போனாள்… காய்ச்சல்… அவன் நினைவில்…

வீடே… ரெண்டுபட்டது… அவள் டைபாய்டு காய்ச்சலில் விழுந்தபோது. உணவே வேண்டாம் என மறுத்தாள்… அடம் அதிகமாகியது… சமாளிக்க முடியவில்லை… எப்போதும் கத்தல் கூச்சல் என அபி தன்னிலையிழந்து ஒருநாள் மயக்கமாகி விழுந்தாள்… அமர் என சொல்லியபடியே…

அப்போது வீட்டில்… மகாவை தவிர யாரும் அவளுடன் இல்லை… அதுவரை நிம்மதி மகாவிற்கு. உடனே… தன் மகன் அகிலனை அழைத்தார் உதவிக்கு… மருத்துவமனையில் அட்மிட் செய்து… கவனித்துக் கொண்டனர்..  

அமர்… இந்த வார்த்தையை மகாவும் புதிதாக கேட்டார் அபியிடமிருந்து… இதுவரை… என்ன காரணம் என தெரியாதவருக்கு, லேசாக புரிந்தது எல்லாம்..

அகிலனுக்கு முதலில் தடுமாற்றம்தான் யாரிது என அதன்பிறகு… முற்றிலும் விளங்கியது…

எப்படி இந்த இரண்டு வருடம் ஏமாந்தேன்… என தன்னைத்தானே திட்டிக் கொண்டான்… அதன்பின்தான் அகிலன், இப்போதுதான்… விசாரித்தான் ‘அமர்’ யாரென…

அப்போதுதான் அமரின் தொழில் குடும்பம் என ஒவ்வன்றாக தெரிய தெரிய… முதலில் அதிர்ந்தது மகாதான்… அப்போதும் அகிலனுக்கு ‘உன் மாமாவின் மகன்தான் அமர்…’ என மகாதான் விளக்கினார்…

ஆக இதில் மகிழ்ச்சியில் துள்ளியது மகாவின் மனம்தான்… அன்னையாக இது தவறுதான் என்றாலும்… பிறந்தவீட்டு சொந்தம்… பற்றிக்கொள்ள… நினைக்கும் போது, தவறாகப்படவில்லை அவருக்கு…

ஆனால் அகிலன் நொந்து போனான்… ஏதோ… கல்லூரி நாட்களில் ஏற்பட்ட நட்பு… லேசாக தட்டிவிடலாம் என நினைத்தவனுக்கு… மலையென… உறவுமுறை சொல்லி வந்த அமரின் பெயர்… மலைக்கதான் வைத்தது.. இதில் தான், ஏதாவது செய்து… அன்னை மனம் சங்கடபட்டுவிட்டால்… என எண்ணியே அமைதியானான் அகிலன்.

இப்படியாக அபியின் மருத்துவமணை வாசம் அடுத்த இரண்டு  நாட்களில் முடிய… அபியை கவனமாக கையாண்டான் அகிலன்..

தன் அன்னையை விட்டு பேச செய்தான்… நம்மின் உறவுதான் அமர் என புரியவைத்தான்… ஆனால், நமக்கும் அவர்களுக்கும் ஒத்து வராது எனவும் விளக்க செய்தான்… எல்லாம் தன் அன்னையின் மூலமாகத்தான்… எங்கும் அகிலன் வரவில்லை ஒதுங்கியே நின்றான்.

இது அபிக்கு புரிந்ததா… தெரியாது. ஆனால்… திக்கு தெரியாமல் சுற்றிய மனதிற்கு… ஒரு திசை தெரிந்தது. தன் அன்னையின் நிலை புரிந்தது. தன் குடும்ப நிலை புரிந்தது… அமைதியாகினாள் கொஞ்ச நாட்கள்.

அமைதியாக கல்லூரி சென்று வந்தாள்… நன்றாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் அதுவும் நீண்ட நாட்களுக்கு தாக்குபிடிக்க  முடிவதில்லை அபியாள்… அவனின் பார்வை வேண்டும் எனும்போது அவள் தன்னிலை இழக்க தொடங்கினாள்.. அவ்வபோது இப்படிதான் ஏதாவது செய்து… அமர் கவனத்தை… ஈர்பாள், களைப்பால், தன்னையும் வதைத்து… அவனையும் படுத்துவாள்…

Advertisement