Advertisement

மின்னோடு வானம் நீ…. 5
அவள் திட்டியது எல்லாம் மனதில் என்பதால், அமருக்கு கேட்கவில்லை போல என்ன செய்தும் அபியை பார்க்கவில்லை அமர்… 
அந்த கிரவுண்டில் எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை என அவள் நிற்க… அவன் ப்ராக்டிஸ் முடித்து கிளம்பிவிட்டிருந்தான்… அவளும் கோவத்தில் அங்கேயே நின்றிருந்தாள்… விடைதான் இல்லை.
ஏதோ போன் வர அமர், பேசியபடியே சென்றவன் இவளை மறந்துவிட்டான்… கடைசியாக வந்த வாட்ச்மேன்… பார்த்து, வெளியே அனுப்பிவிட்டார் அபியை. தனது வண்டியெடுத்து வீடு வந்தாள் அவளும்… 
உள்ளுக்குள்… முழுவதும் கோவமே…. ‘என்னை பார்த்தால்… அவ்வளவு வெறுப்பா உங்களுக்கு… பார்த்த அன்னிக்கு என்னமோ.. என் அண்ணன்கிட்ட சண்டைக்கு போன…. எல்லாம் சும்மா…. நான் யாருன்னு தெரிஞ்ச்சதும்… என்கூட பேச கூட பிடிக்கலியா…
அப்போல்லாம் எப்படி வந்து வந்து பேசின… இப்போ… நா… நான் வெயிட் பண்ணா… திரும்பி பார்க்காமா போயிட்டா…” என முழு கோவம்தான்… ஏதும் செய்ய முடியாதா கோவம் அவன் மேல்… 
வீடு வந்தவள் யாருடனும் பேசவில்லை. வீட்டில் யாரும் இல்லை. ஆதி இப்போது லீவ்வில் வந்திருக்கிறான்… அவன் அயுத்த ஆடை ஏற்றுமதி தொடர்பான படிப்பை ஜெர்மனில் படிக்கிறான்… எனவே விடுமுறைக்கு வந்திருக்கிறான்.
அகிலன் MBA இறுதி வருடம்… உள்ளூரிலேயே படிக்கிறான்… எப்பவாது கல்லூரி செல்வான்… மற்றபடி அவனிற்கு அவர்களின் மில்தான் பிடித்த இடம். மில், குடோன், ஆபிஸ் என தங்கள் அலுவலகத்திலேயே ஏதாவது ஒரு யூனிட்டில் இருப்பான். எங்காவது நின்று… எந்த வேலையையாவ
வேடிக்கை பார்த்திருப்பான்…
அகிலன் திறமையானவன்… தங்கள் மில்லிற்கே செல்கிறான்…. அனுபவ அறிவு அவனிற்கு, எனவே தேவைக்கு மட்டுமே படிப்பு… எப்போதும் வேலைதான் அகிலனுக்கு.
எதற்கும் அலட்டிக் கொள்ளாத ஒரு ப்ரக்டிகல் பெர்சன்… ‘ஆதி மாதிரி பாரின் போய் படிடா’ என வீட்டில் எல்லோரும் சொல்ல… 
அகில் “அதுக்கு ஆகார செலவ, என் பேரில் இரண்டு ஏக்கர் நிலமா வாங்கி கொடுத்துடுங்க… கணக்கு நேராகிடும்…” என்பான்.
கூடவே “படிக்கணுமாம்… எதுக்கு படிக்கணும், வேலைக்குதானே… அதான் எனக்கு இருக்கே… என் பரம்பரை அறிவும் இருக்கே… அப்புறம் என்ன… 
ஒரு மனுஷன் பத்து பதிஞ்சி வருஷம் படிக்கலாம்…. அதுக்காக… இருவத்தைந்து வயது வரை படிக்கனும்மா… ப்பா, அதுக்கு நான் இல்லப்பா… உங்க இன்னொரு பேரன பாருங்க..”.  என வகை வகையாக பேசுவான்… ஆனால் காரியத்தில் கெட்டி.
ஆதி இன்றைய எல்லா பிள்ளைகளையும் போல…. படிக்கு வரை… நிம்மதியாக இருக்கவேண்டும், பொறுப்புகளை ஏற்க நேரும் போது    அதை சரியாக செய்ய வேண்டும் என்ற கொள்கை உடையவன்… படிப்பும் அவனிற்கு இயல்பாக வரும் அதனால்… கொஞ்சம் ஜாலி… கொஞ்சம் படிப்பு என இவன் ஒரு வகை.
அபி நேரே தன் அறைக்கு சென்றுவிட்டாள்… எப்போதும் பாட்டியுடன் இருப்பாள்… ஹாலில் அமர்ந்து பாட்டு கேட்பாள்… அவளால்தான் அந்த பங்களா உயிர்ப்புடன் இருக்கிறது என சம்பூரணம் சொல்லுவதுண்டு… இல்லையெனில் அவரவர் வேலை அவரவர்க்கு… என நேரம் செல்லும்.
மணி எட்டு வீட்டில் சத்தமே இல்லை… தன் சின்ன மகன் மருமகளுடன் சேர்ந்து சம்பூரணமும் ஏதோ விழாவிற்கு சென்றிருந்தனர். பெரிய மகனும் மருமகளும் பத்துநாட்கள் தொழில் காரணமாக வெளிநாடு சென்றிருக்கிறார்கள். 
தாத்தாவும், பேரன் அகிலனும் வரவில்லை அலுவலகத்திலிருந்து… ஆதி நண்பர்களுடன் வெளியே சென்றிருக்கிறான். அபிதான் வீட்டில்.
எனவே கீழே வரவில்லை… அப்படியே சோர்ந்து படுத்திருந்தாள். உள்ளே… அமரின் எண்ணமே.. ‘போடா… என்னை திரும்பி கூட பார்க்காமா… போயிட்ட… 
எப்படியிருந்தாலும் நீங்க, வருவீங்கன்னு பார்த்திருந்தேன்… அப்படி ஒரு மனசா… உனக்கு… இல்ல… நான்தான் ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டனோ… நீ சும்மா… டைம்பாசுக்குதான் பார்த்தியோ… எல்லாமே உங்களுக்கு ஈசில்ல… 
பார்த்த அன்னிக்கு அப்படி சண்ட போட்ட என் அண்ணன்கிட்ட… இப்போது நான் யாருன்னு… தெரிஞ்ச உடன… என்னை பிடிக்கல….” என கண்ணீர் வழிந்தது அவளுக்கு.
மனம் ஆறவேயில்லை எனவே கெளதம்க்கு போன் செய்தாள்… “ண்ணா… உங்க பிரின்ட்… அமர் நம்பர் தாங்க” என்றாள்.
கௌதமுக்கு என்ன செய்வது என தெரியவில்லை… அவனின் இப்போதைய நிலை தெரியும் எனவே “எதுக்கும்மா.. அதான் காலேஜ் வரான்ல்லா… அங்க பேசுடா… உன் அண்ணனுக்கு தெரிஞ்சா… பிரச்சனை டா…” என்றான் பொறுமையாக.
“இப்போ மட்டும் தெரியாதா… எல்லாம் தெரியும்… நீங்க நம்பர் கொடுங்க…” என்றாள்.
இதற்குமேல் என்ன செய்வது என தெரியாமல் கெளதம் நபர் கொடுத்தான்.
அவனிடமிருந்து நம்பர் வாங்கியவள்… அமர்க்கு… அழைக்க… என்கேஜிடு டோன் வந்தது… அபிக்கு பொறுமையே இல்லை…
மீண்டும் மீண்டும் அழைத்தாள்… அமர் அங்கு… தனியார்… ஸ்போர்ட் அக்கடமியில் கோச்சாக இருக்கிறான்… எனவே, ஏதோ அவசரமான கால் என்பதால் திரும்ப அழைத்தான்… 
பத்து நிமிடம் சென்று அவனிடமிருந்து அழைப்பு வந்தது… அபி பட்டென… கட் செய்தாள்… மீண்டும் அழைப்பு வந்தது… இப்போதுதான் அவளிற்கு திருப்தி… போனை அட்டென் செய்தாள்…. அமர் “ஹலோ… யாருங்க…” என்க..
அமைதியாக இருந்தாள்… அபி. மீண்டும் அமர் “ஹலோ… ஹலோ…” என நான்குமுறை சொல்லியும் ஏதும் பதிலில்லை.. அமைதி மட்டுமே. ஆனால் அவனின் குரலை அபி ரசித்துக் கொண்டிருந்தாள்.
அமர்க்கு இப்போது ஏதோ புரிய அவனும் அமைதியாக இருந்தான்… போனை வைக்கவில்லை… இப்போது யார் பேசுவது என இருவரும் அமைதியாகினர்…
மெல்ல அபியே… “ஹலோ… நான் அபி…” என்றாள். அப்படியே அமர்ந்தான் அமர்… உடபெல்லாம் புது ரத்தம் பாய்ந்தது… அந்த குரலில், மனமெல்லாம் பரவசமானது… வாங்கிட்டாளா… என் நம்பர… ‘அபி’ என உள்நாக்கில் அவளின் பெயரை ஒருமுறை சொல்லி பார்த்தான்… கூடவே.. எதிலோ தோற்ற உணர்வு… நீ எனக்கு இவ்வளோ தேவையா… என மனமெங்கும் சத்தம்… அபி… அபி… என அவன் மனமும் உள்நாக்கும் உச்சரிக்க… அமர் அமைதியாகவே இருந்தான்.
எல்லாம் அந்த ஷனம்தான்… பிறகு… நிதர்சனம் தெரிய… போனை கட் செய்து… ஆப் செய்து வைத்துவிட்டு வேலையை பார்க்க சென்றான். எங்கே… மனத்தால் துரத்தினாள் அவள்… சீக்கிரமாக வந்துவிட்டான் வீட்டிற்கு… எதுவும் பிடிக்கவில்லை… உணவு, தாகம் எதுவும் இல்லை… அவள் நினைவே… அவளே இழுத்தால்… அவனை… அவளை முதல்நாள் பார்த்த நினைவு வந்தது…. அமருக்கு  
அன்று அழகான மாலை நேரம்… அது ஒரு கெட்டுகெதர்… அமர் அமர்ந்திருந்தான்… தனது நண்பன் கெளதம்மின், தந்தையினுடைய ஐம்பதாவது வயது கொண்டாட்டம் அது…
மேல்தட்டு மக்களின் வாசம் வீசியது அந்த இடமெங்கும்… ஒரு சில முக்கிய சொந்தங்கள்… நல்ல நட்புகள் … விழா இனிதாக தொடங்கியது…. பெரிதாக விருப்பமில்லை அமருக்கு இங்கு வர, நரேனின் கம்பலில் வந்திருந்தான்…
அவனிற்கு இந்த விருந்து, விழா இதெல்லாம் அலர்ஜி… அப்படியே பொழுது மெதுவாக நகர்ந்தது… இவர்களின் நண்பர்களின் கூட்டம் ஆங்காங்கே அமர்ந்து கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க… அமர் அதிலெல்லாம் பொருந்தாது…. போனுடன் அமர்ந்திருந்தான்.
ஏதோ ஒரு பேண்ட் வந்தது. ஆம், ஒரு மெல்லிய வெள்ளை நிற ஷர்ட்டி குர்த்தி அணிந்து.. சின்ன பியானோவுடன் ஒரு பையன் வந்தான்..  ஒரு தடித்த தேகம் கிட்டார்ருடன் வந்தது… பின் ஒரு தாடி வைத்த அமைதியான முகம்… சின்ன அட்டையா… டின்னா என தெரியாத ஒன்றை எடுத்து வந்தது… எங்கிருந்தோ.. நாலு ஸ்டூல் போட்டு அமர்ந்து அவர்களாக… எதையோ சரி செய்து பாட தொடங்கினர்…
“ம்…. மை நேமேஸ் பில்லா…” என ஏதோ…. பாடல்…
சில நிமிடங்களுக்கு முன் வரை… ஏதோ பேசியபடியே இந்த அந்த கூட்டம்… இப்போது சிறுக சிறுக அமைதியாக…
மெல்லிய பெண் குரல்… 
“ம்…. 
ஏ..தே..தோ… எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்… 
நீதானே புன்னகை மன்னன்… 
உன் ராணி… நானே…” என சின்னதாக தொடங்கியது.
அதை தொடர்ந்து, அடுத்து சாங் மேல்வாய்சில்..  
“மன்னவனே… உன் விழியால்…
பெண் விழியை மூடு….
ஆதரவாய்  சாய்ந்துவிட்டாள்…
ஆரிராரோ பாடு….
யாரிவர்கள்… சிறு பூங்குயிகள்….” இப்போது பெண் குரலும் இணைந்து “என்ன சத்தம் இந்தநேரம்…. 
உயிரின் ஒலியாய்…” என இணைந்து ஒலிக்க… அமர் அங்கு அந்த பெண்ணின் குரலிலும், விழியிலும் கரைந்து கொண்டிருந்தான். ஏதோ   ஒரு ஈர்ப்பு… சொல்ல தெரியவில்லை அவனிற்கு.. ‘எங்கையோ பாத்தாமாதிரி இருக்கே….’ என அவளை கவனிக்க தொடங்கினான்… 
பின் அவளின் பாடல் இன்னும் அவனை நனைக்க… சுயநினைவே இல்லை அவனிடம்… கையை கட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான். அவனின் அகலா பார்வை… அபியை தீண்டவே செய்தது… 
அபிக்கு இது புதிது… எனவே சற்று தடுமாறினாள்… பதின்ம வயது பூம்பாவையவள்… சின்ன தடுமாற்றம்… மெல்ல உடல்மொழி மாற்றம் என அபி திணறினாள்… ஆனால் அதுவும் அழகாக தெரிந்தது அமருக்கு… அதில் சுவாரசியமும் கூடியது அவனிற்கு.
அபி சற்று நேரம் தள்ளி நிற்க… இப்போது ஆடவரின் குரல்கள் களைகட்டியது “என்னடி மீனாட்சி… நீ சொன்னது என்னாச்சி….” என கலக்கல் சாங் சென்று கொண்டிருக்க.. நரேன் இப்போது ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
அமர், நரேனை சுரண்டினான் “என்ன டா…” என்றான் எரிச்சலாக நரேன். 
“டேய்.. யாருடா… அந்த பொண்ணு… கேளேன்… அந்த பக்கிகிட்ட…” என்றான்.. அவளையே பார்த்தபடி.
நரேன்… “யாரு…” என ஒருமாதிரி குரலில் கேட்க… அமரின் பார்வை வட்டத்தில் நரேனின் பார்வையில் விழுந்தாள் அபி….
அமர் “இப்போ பாடினாலே…. அந்த பொண்ணு…” என்றான்.
நரேன் “டேய்…. எ… என்ன… அதுவா… டேய் பார்க்க சின்ன பொண்ணா தெரியுதுடா… ஸ்கூல்தான் படிக்கும் போல, 
சின்ன பொண்ணு டா… உன் தங்கச்சி… வயசுதான் இருக்கும்” என முடிக்க கூட இல்லை…
அமர் அதிராத பாவமாக “பல்ல பேத்துடுவேன்… இந்த செண்டிமெண்டேல்லாம் சொல்லி எதையாவது சொதப்பாமா… கேளு யாருன்னு” என்றான் 
நரேன் முகம் அஷ்ட்ட கோணலாக… “இரு டா… போகும் போது கேட்கலாம்” என்றான்…
அமர் அதில் குதுகலமாகி “டேய்… அப்போ, இன்ட்ரோ கொடுக்க சொல்லு… போதும் “ என்றான்.
“டேய்…” என நரேன் அலற…
அமர் சுறு சுறுப்பாக அமர்ந்தான்… மீண்டும் அதே ஜீனும், வெள்ளை நிற ஷாரட் குர்த்தியும் அணிந்து… அபி வந்தாள் கையில் மைக்குடன்.. “நானுனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே… நம் ஜீவனே…” என மீண்டும் அவனை மெஸ்மரைஸ் செய்தாள் அபி.
நரேன் அவனை உலுக்கினான்… “டேய் பசிக்குதுடா… வா… எல்லாம் போயிட்டானுங்க… நாம மட்டும்தான்” என்றான் நான்காவது முறையாக. ஆனால் எல்லாம் வீண்.. இன்னும் சுயநினைவு வரவில்லை அமர்க்கு. இது மெல்லிசை குழு… மியூசிக் ஆர்வம் உள்ள… அபியின் அண்ணன் ஆதவின் நபர்கள் சேர்ந்து நடத்துகிறார்கள்… அதில் அபியின் குரலும் அவ்வபோது இடம்பெறும்… 
இப்போதெல்லாம் இந்த மாதிரி இசை எங்கும் ஒலிக்க தொடங்கியுள்ளது… அதில் இவர்களுக்கும் ஓரிடம்… எப்போதாவது சென்றது பாடுவார்கள்… மூன்று மாதத்திற்கு ஒருதரம் சேர்ந்து பாடுவார்கள்… வேவ்வேறு தொழில் படிப்பு என சேர்ந்த குரூப் என்பதால் நேரம் ஒதுக்கிதான் இவர்கள் பிரக்டீஸ் செய்ய வேண்டும்…
எல்லோரின் விழாக்களுக்கும் வந்து, இதுபோல கச்சேரியாக செய்வதில்லை, தனியாக இவர்கள் குழு கச்சேரி செய்யும்… தங்கள் நண்பனின் பெற்றோர் பிறந்தநாள் விழா, எனவே தங்கள் வீட்டு விழா… அதனால் இந்த கச்சேரி. 
ஒரு வழியாக அந்த ட்ரூபின் பாடல்கள் எல்லாம் பாடி, தீர்த்து.. அவர்களும் உணவு உண்ண வரவும்தான் அமர், தன் இடத்திலிருந்து எழுந்தான்.
அவனை பொறுத்தவரை… இந்த பாட்டு… மியூசிக்… இதெல்லாம் எப்போதாவது காரில் செல்லும் போது தூங்குவதற்காக கேட்பது அவ்வளவே… இதில் இவ்வளவு பாவமா… அதுவும் அந்த கருப்பு ஜிமிக்கி அவளின் வெள்ளை கன்னத்தில் உரச… ரோஜா இதழ்கள் அலட்டாமல் அவ்வளவு மென்னமையாய் பாடுமா… 
என்ன பாட்டுடா… 
நீங்கமாட்டேன்… 
ம்.. கூம்… நா..னும்..தான்… “ என அமரின் உதடுகள் லேசாக வளைந்தது, அவனை அறியாமலே மோன நிலையில் அமர்ந்திருந்தான்.
ஒரு வழியாய் நரேன் அவனை பேர்த்து, எடுத்துதான் உணவு உண்ண கூட்டி போனான்… அப்போதும் அவளை தேடியபடியே எதையோ கொறித்தான்.
இப்போது நரேன் தன் நண்பர்களிடம் அமரின் நிலை சொல்ல.. அப்போதே அபியை இன்றோ கொடுத்தான் அவனின் ஆருயிர் நண்பன் கெளதம்… “அபி ஒரு நிமிஷம் இரு… உன் ப்பேன்… ஒருத்தார் உன்னை பார்க்கணுமாம்” என சிரித்தபடியே சொல்லி யாருக்கோ போனில் ரிங் செய்து காத்திருந்தான்.
நரேனுடன் அமர்… அழகான கருப்பு வண்ண ஜீன்… அதற்கு தோதாய்… க்ரே கலர் ஆலென்சோலே… டிஷர்ட்… முகத்தில் ‘தொலைந்தேன்’ என காட்டிய புன்னகையுடன் தன்னவளை நெருக்கினான் அமர்..
கெளதம் “என் பிரின்ட்…. இப்போலிருந்து உன் ப்பேன்..” என சொல்லி சிரிக்க… நரேன் ‘நல்லா கோத்துவிட்டர டா’ என ஒரு பார்வை பார்க்க… கெளதம் அசட்டு சிரிப்பொன்றை சிந்தினான்.
அபி “ஹாய்…. “ என சொல்லி அமைதியாகினாள்.
அமர்க்கு தயக்கமே இல்லை “என்ன பண்றீங்க…” என்றான்.
அபி “இப்பதான் ஸ்கூல் முடிச்சேன்…. நெக்ஸ்ட் பார்க்கணும்” என்றாள்.
“நைஸ்…. நான் அமர்… அமர்நாத்… உங்க வாய்ஸ் செம்ம… செம்மயா இருக்கு… “ என்றான்
“தேங்க்ஸ், அண்ணா வெயிட் பண்றாங்க… பை….” என முடிக்க கூட இல்லை
அமர் “என்ன பேர், சொன்ன….” என்றான் தன்னை விட சின்ன பெண் என தெரிந்ததும் சற்று ஏமாற்றம்தான் ஆனாலும் ஒதுங்க நினைக்கவில்லை ஒருமையில் அழைத்தான்.
அபிக்கு சிரிப்பாக வந்தது கூடவே பயம்… டி-ஷர்ட் போட்டா, ஆதித்த வர்மன் இப்படிதான் இருப்பானோ என எண்ணம் வந்தது அபிக்கு… இப்போதுதான் பொன்னியின் செல்வன் படிக்க தொடங்கியிருப்பதால் வந்த தாக்கம் அது… அதை பார்வையில் காட்டி அபி அவனை பார்த்து அமைதியாகவே இருந்தாள் ஏதும் பதில் சொல்லாமல்…
அமர் “பேர் என்ன சொன்னேன்னு கேட்டேன் “ என்றான் அதிகாரமாக, அவள் இன்னும் அவனை பயமாக பார்க்க… இப்போதுதான் அமருக்கு என்னாச்சு பயப்படறா… என தோன்றியது அவளின் மைவிழி பார்த்ததும்…
அதற்குள் அங்கு அகிலன் வந்தான் “அபி… போலாமா….” என கேள்வியோடு… அவள் ஆண்களின் மத்தியில் தனியே நிற்பதை பார்த்துதான் வந்தான். 
பொதுவாக இவர்களின் தங்கை என தெரிந்தாலே… யாரும் அவளுடன் அளவுக்கு அதிகமாக பேசுவதில்லை, எனவே எங்கும் பயம் இல்லை அகிலனுக்கு. இன்று ஏனோ தொடர்ந்து பத்து நிமிடமாக நாலுபேர் மத்தியில் நிற்கவும் வந்தான் அண்ணன்.
அகிலனும் டி ஷிர்டில் எப்போதும் போல் இருந்தான் அமைதியாக.. அமரை விட ஒருவயது சிறியவன் எனவே… பார்பதற்கு அமரின் வயதை போல் தோற்றம்… இருவரும் சமமாக தெரிந்தனர்.
அகிலன் இயல்பாய் அபியின் கை பிடிக்கவும்.. அமருக்கு ஏதோ கோவம்…  அமர் “ஹேய்… பேசிகிட்டிருக்கேன் ப்பா.. இருங்க” என்றான், யாரென தெரியாது.
இப்போது கெளதமுக்கு பயம் வந்தது… எனவே “அமர்… இது இவங்களோட அண்ணன் அகிலன்… “ என்றான்.
அகிலனிடமும் “அகில் இது என் பிரின்ட் அமர்… சொல்லுவனே… புட்பால் பிளேயர்… அவன்தான்… ஆதிக்கிட்ட சொல்லியிருக்கேன், 
அபி, குரல் நல்லா இருக்குனு சொல்லிக்கிட்டு இருந்தான்… அதான் பேசிக்கிட்டிருந்தோம்…” என்றான்.
அகிலன் “ஓ… ஓ… தேங்க்ஸ்… வா அபி” என்றான் ஒருமாதிரி குரலில்.
அமர் விடாது “ஹேய்… பேர் சொல்லிட்டு போ…” என்றான்.
அபிக்கு கண்ணில் தண்ணீரே வந்துவிடும் போல் ஆனது. அண்ணன் கைபிடித்து நிற்கிறான்… யாரென்றே தெரியாத ஒருவன்… பேர் கேட்டு நிற்கிறான்… அதுவும் அண்ணனை எதிர்த்து பேசுகிறான்… யார் ரா நீ என தன்னை இழுக்கும் அண்ணன் நோக்கி செல்லாது “அபி…” என தன் பெயர்  சொல்லி சென்றாள். 
அமரின் முகத்தில் மின்னலாய் புன்னகை கோடு.. கூடவே கொஞ்சம் கர்வமும்… ‘நான் நினைத்து ஒன்று நடக்காமல் போகுமா… அண்ணனாக இருந்தால் என்ன… அப்பாவாக இருந்தால் என்ன… எனக்கான இடம் இருக்கு’ என்ற கர்வம் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

ஆனால் அகிலனுக்கு எங்கோ பொறிதட்ட… தன் தங்கையை தோளனைத்து சென்றான்.

     

Advertisement