மின்னோடு வானம் நீ…. 4
அபிக்கு முதலில் அமர் யாரென தெரியாது… சொல்ல போனால் தன் அம்மா வழி சொந்தம் யாரென தெரியாது… ஆம், சம்பூரணம் அந்த விஷயத்தில் மிகவும் கெட்டி…
சுவாமிநாதன் மகாலஷ்மி திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் தான் நடந்தது. ஆனால்… அதிலெல்லாம் பெரிய சிக்கல்.
முன்பெல்லாம் காதல் என்பது அவ்வளவு எளிதல்லவே… அதுவும் முரளி போன்று வெளியூரிலிருந்து வந்து இங்கு காலுன்றி… நின்று… அதன் பிறகு தன் தங்கைக்கு திருமணம் செய்தவது என்பதெல்லாம் மிக பெரிய விஷயம்.
அப்படிதான் முரளி, வீடு கட்டிமுடித்து… அடுத்து தங்கையின் திருமணம் என ஆரம்பிக்கும் போது… அப்போது மகா… கல்லூரி சேர்ந்த புதிது… மேலும் பெரிதாக வயது ஏறவில்லை    
எனவே முதலில் முரளிக்கு வரன் பார்த்து சுமதியை மணம் முடித்தனர். அது தொட்டு… சுமதியின் அண்ணன்… மாணிக்கவாசகத்திற்கு மகாலஷ்மியை மணம் முடிப்பது என பெரியவர்களிடையே பேச்சு சென்றது.
மாதங்கள் ஓடியது… சுமதிக்கு வளைகாப்பு… அப்போது… மகாவை பெண் கேட்டனர் சுமதி வீட்டினர், சந்தோஷமாகவே சம்மதம் சொன்னார்கள்… முரளி வீட்டிலும்.
வளைகாப்பின் காலையில் ஒப்புதாம்பூலம் செய்துகொள்ளலாம் என எண்ணி.. பேசி, வேலைகள் நடக்க தொடங்கியது.

அப்போதெல்லாம் பெண்ணிடம் சம்மதம் வாங்குவது என்பது கொஞ்சம் பெரிய இடங்களில் நடைமுறையில் இருந்திருக்கலாம்… மகாவின் வீட்டில் அந்த நடைமுறை, பேச்சுக்கூட கிடையாது… அப்படியே கேட்டிருந்தாலும்.. பெண்கள் பெரிதாய் எதையும் சொல்லும் பழக்கமும் இல்லை…

ஆனால் மகாவிற்கு தன் திருமண செய்தி காதில் எட்டியது முதல்… என்ன செய்வது என தெரியாமல் தவிக்க தொடங்கினாள்… சுவாமிநாதனை கல்லூரியில் பார்த்தாலும்… பெரிதாக பேசி, பழகி, வெளியே சென்று என எந்த செயலும் இல்லை, அவர்களிடம். எனவே… அவரிடம் விஷயம் சொல்லவே நாட்கள் சென்றது.
ஆக சுவாமிநாதனுக்கு தன் அன்னையிடம் சொல்லவே கால அவகாசம் இல்லை… மேலும் மகா சுவாமிநாதன் இருவருக்கும் இடையில் பேச்சு என்பது அறிதாக இருக்க… எங்கே, திருமணம் பற்றி யோசிப்பது.
அப்படியே அந்த ஒரு வாரமும் கரைய… அடுத்த நாள் வளைகாப்பு என்ற நிலையில்… முதல்நாள்… சுமதி வீட்டிலிருந்து எல்லோரும் வந்திருந்தனர்…
சொந்தங்களுக்கிடையே இயல்பாய் ஓடும் விளையாட்டு பேச்சில் மணியையும் மகாவை சேர்த்து வைத்து பேச்சு சென்று கொண்டிருக்க…
மகாக்கு பொருக்க முடியவில்லை, என்றோ தனக்கு கிடைத்த சுவாமிநாதனின் போன் நம்பர் தவிர வேறு துணையை நாடாமல்…  வீட்டில் சின்னதாக குறிப்பு எழுதி வைத்துவிட்டு இரவு ஏழு மணி போல… வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டிருந்தாள் மகா.

எது தந்த நம்பிக்கை என்ற கேள்விக்கே இடமில்லை, தன் வீட்டாரை கூட நினைக்காமல், தன் காதலனின் ஒற்றை போன் நம்பரை மட்டும் கையில் எடுத்து… கால்கள், வீடுதாண்டும் எனில்… காதல் எந்த காலத்திலும் பெரியது… அது தரும் அபரிவிதமான நம்பிக்கை அதனினும் பெரிது…
சுவாமிநாதனுக்கு போன் செய்து தான் இருக்குமிடம் சொல்லி வர செய்துவிட்டார்தான் மகா.. ஆனால் அப்போதுதான் தெரிந்தது, அதாவது சுவாமிநாதன் வந்த பென்ஸ் காரை பார்த்ததும்தான் அவரின் உயரம் தெரிந்தது மகாக்கு.
நேரே வீட்டிக்கு கூட்டி வந்தார் சுவாமிநாதன். வீடு இன்னும் பயமுறுத்தியது. ஆம் மகாக்கு அவரின் செழுமை தெரியாது. மெல்லிய குரலில் மகா “இங்க வேலை செய்றீங்களா” என்றாள் இன்னும் நம்பாமல். அப்படியொரு அப்பாவி மகா… சுவாமிநாதன் லேசாக சிரித்தார்… உள்ளே சென்று தன் தந்தையை அழைத்து பேசினார். அதுவரை மகா… அங்கிருந்த கெஸ்ட் ஹவுஸ்சில் அமர்ந்திருந்தாள்.
அதன்பின் இரு வீட்டிலும் என்ன நடந்தது என மகாக்கு தெரியவில்லை. சுவாமிநாதன் ஒரு டம்பளரில் பால் எடுத்து வந்து கொடுத்தார்.. அங்கேயே தன் உறவுக்கார பெண்மணி ஒருவரை துணைக்கு வைத்து மகாவை உறங்க வைத்தார்.
ஆனால் அந்த இரவு அபி வீட்டில்….
எல்லாம் தலைகீழ்… விடிந்தால் வளைகாப்பு.. உறவுகள் வந்துவிட்டது.. சிறிதாக கோவில் மண்டபம் பார்த்திருந்தனர்… பேச்சும் சிரிப்புமாக இருந்த வீடு, அந்த ஒருமணி நேரத்திற்கு பிறகு… புயலுக்கு பின் உள்ள அமைதியாக மாறியது.
புயலுக்கு முன் என்ன நடக்கும் என தெரியாதா அமைதி.. புயலுக்கு பின்னுள்ள அமைதி… நடந்ததன் தாக்கம் சொல்லும் அமைதி.. என்ன செய்வது என தெரியாத அமைதி..
வீடே களையிழந்தது.. யார் சென்று எங்கு தேடுவது.. அதுதான் சீட்டு எழுதி வைத்துவிட்டு சென்றிருந்தாலே… அப்போது… மகாவின் பெற்றோர் இருந்தனர். எனவே அங்காளி பங்காளி என ஊரையே அலசினர். ஆனால் இவர்கள் சற்றும் எதிர்பாத… பெரிய இடம் என தகவல் அடுத்த ஒருமணி நேரத்தில் வந்தது.
ஆள்ளாளுக்கும் ஒவ்வரு பேச்சு… கூட்டி வரலாம் என ஒருவர்… வேண்டாம் போனது போனதுதான் என ஒருவர்..
ஒரு பெரியவர்… விடப்பா… போன இடம் நல்ல இடம்தானே… புள்ள நல்லா இருந்தா சரி என ஒருவர்… அதெப்படி… அடுத்து எம் புள்ளைக்கெல்லாம் கல்யாணம் ஆக வேண்டாம்… வா ப்பா… பெருசுக்கு… சித்தம் கலங்கி போச்சு… என அந்த நான்கு பேர் பேச பேச…
அப்போது மகாவின் தந்தைக்கு மயக்கம் வர, அப்படியே அவரை பிடித்து ஏதோ வைத்தியம் செய்து கொண்டிருக்க… பங்காளி எல்லாம் வாங்க போய் கூட்டி வரலாம் என ஏதோ பேசிக் கொண்டிருக்க… வீட்டு வாசலில் கார் வந்து நின்றது.
சுவாமிநாதனின் தந்தை இன்னும் சில முக்கிய உறவுகள்… என பெரியமனிதர்கள் கூட்டம் வீட்டை நெருங்கியது. அதன்பின் எல்லாம் அவர்கள் வசம்தான். மகா வீட்டில், பேசுவதற்கு ஒன்றும் இல்லை.
பெண் எங்கள் வீட்டில் பத்திரமாக இருக்கிறாள் என்றார்கள்… நீங்கள் வந்தால் போதும் என்றார்கள், நாளை அதிகாலை திருமணம் என்றார்கள்…  இப்படி எல்லாம் அவர்கள் முடிவே..
இங்கே மருமகளின் வளைகாப்பு… இவர்கள் என்ன சொல்கிறார்கள் என யோசிக்க யாருக்கும் அவகாசம் இருக்கவில்லை… எல்லாம் அவன் செய்யலாகியது.
இப்போது என்றால் முரளி சட்டையை பிடித்திருப்பார்… அப்போதுதான் வளர்ந்து வருபவர்… நடப்பதை உணரவே அவருக்கு முடியவில்லை… எல்லாம் பெரியவர்களிடையேதான் பேச்சு முரளிக்கு என்ன செய்வது என தெரியாமல் நின்றிருந்தார்… கூடவே விஸ்வம் குடும்பத்தினர் நின்றனர்.
இதில் அதிகம் காயம்பட்டது மகாவின் பெற்றோர் தவிர… சுமதியும் சுமதியின் தம்பி மணியும்தான். சுமதி தன் நாத்தனாரை… தன் அண்ணன் மனைவியாகவே நினைக்க தொடங்கிவிட்டார்… எங்கும் அதே நினைவே… அதில் அதிக உரிமையும் தெரியும்… அன்பாகவே பழகுவார்… பேதம் காட்டவெல்லாம் மாட்டார்.. ‘என்னிடம்மாவது ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்… இப்படி ஒரு இக்கட்டு வந்திருக்காதே’ என எண்ண தோன்றியது சுமதிக்கு.
தன் அண்ணன் முகத்தை, எப்படி இனி தன் கணவன் பார்ப்பார்… தன் அண்ணன் மனதில் ஆசையை வளர்த்துவிட்டு, இப்படி ஒரு இக்கட்டில் அவரை நிறுத்தி… என அந்த ஆதங்கம் கோவமாக மாற தொடங்கியது சுமதியிடம்.
மேலும் எல்லோரும் அவளை பாவமாக பார்க்க தொடங்கினர்… அது இன்னும் கோவத்தை கொடுத்தது. மேலும் திருமணம் என்ற சூழ்நிலையும் யாரையும் ஏதும் யோசிக்க விடாமல் செய்ய… சுமதி அமைதியாக அமர்ந்து கொண்டாள். மணி அப்போதே இரவே ஊருக்கு கிளம்பிவிட்டான்.

அதிகாலை நான்குமணி… வண்டி வந்தது சுவாமிநாதன் வீட்டிலிருந்து. திருமணம் மலை மீதுள்ள கோவிலில் என்பதால் சுமதியை அனுப்பவில்லை மகாவின் அம்மா… ஆம், அந்த நேரத்தில் அவர்   மட்டுமே சுமதியை கவனித்துக் கொண்டே இருந்தார்.
சுமதியின் வீட்டினர்… கையை பிசைந்து நின்றனர்… பெண் இங்கு வாழ்கிறாள்… வயிற்று பிள்ளைகாரி இன்று வளைகாப்பு இட்டு தங்களின் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும்… அவர்களின் பெண் அங்கு நிற்கிறாள் எதை வேண்டாம் என சொல்லுவது… என தெரியாமல்.
முதலில் பெண்கள் யாரும் திருமணத்திற்கு செல்லவில்லை… ஆண்களில் மகாவின் தந்தை அந்த முதியவர் என ஒருசிலர் மட்டும் சென்றனர்…

ஆனாலும் சம்பூரணம் அம்மா, அப்போதும் பெண்கள் வராமல் எப்படி என கேட்டு… இன்னும் சில வார்த்தைகள் கூட சேர்த்து சொல்லி மகாவின் அம்மாவையும், மற்ற எல்லோரையும் அழைத்தே சென்றார்..
எனவே இவர்கள் சென்றவுடன்… மற்ற அத்தமுறை மாமி பெரியம்மா முறை உறவுகள்தான் சுமதி மனதை வாட விட கூடாது, தலைச்சன் பிள்ளை என சொல்லி… பேருக்கு ஒரு வளைகாப்பு செய்து… ஊருக்கு அனுப்பினர் சுமதியை. ஆம் அவர்கள் திருமணம் முடித்து, வருவதற்கு முன்பே இவர்கள் கிளம்பி விட்டிருந்தனர்.
அங்கு….
என்னதான் சம்பூரணத்திற்கு பிடிக்கவில்லை என்றாலும், தன் மகனை நம்பி வந்துவிட்டாள் என்ற ஒன்றிர்காகவே… எல்லாம் செய்தார் அவர்.
அந்த அதிகாலையிலும் சுற்றம் சூழ… முறைப்படி எல்லாம் சடங்குகளும் நடக்க… சர்வாலங்காரபூஷிதையாக தன் அருகில்… தன்னவள் ஜொலிக்க… பெருமிதமாக அமர்ந்திருந்தார் சுவாமிநாதன்…

மகாக்கு சற்று பெருமிதமே… ஆனாலும், தன் வீட்டை விட்டு வந்த நிலை, அதன் சூழல் எல்லாம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அது தெரிந்துதான், என்னவோ சுவாமிநாதன் மகாவின் வீட்டில் பேசி எல்லோரையும் அழைத்து வந்திருந்தார்.
அப்போதுதான் உள்ளே வந்தனர் மகா வீட்டினர்… மகாவின் பெற்றோருக்கே தங்கள் பெண்ணை அடையாளம் தெரியவில்லை… அவர்களின் மருமகளாக மாற்றி வைத்திருந்தன்ர் மகாவை… புடவை நகை என எல்லா அவர்களின்  செழுமையை சொல்லியது.
இப்போதுதான் மகாவும் பார்த்தாள் அவர்களை , பார்த்த மகாவிற்கு… கலவையான உணர்வு… முதலில் குற்ற உணர்ச்சி… ஆச்சிரியம்… எனக்கு மன்னிப்பை யாசிக்க தகுதியுண்டா… என்ற எண்ணம்… அழுகை… இப்பபடி அன்னியமாய் நின்று பார்க்க வைத்துவிட்டேனே என்ற எண்ணம்… அப்படியே எழ நினைக்க, அந்த ப்ரோகிதர்… “இரும்மா… மனையிலிருந்து இப்போ எழக்கூடாது” என சொல்லி அமரவைத்தார்.
திருமணம் சிறப்பாக நடந்தது… அதன்பின் சடங்குகள் என மகாவிற்கு சரியாக இருந்தது… சம்பூரணம் இந்த இடத்தில் தெளிவாக இருந்தார்… மகாக்கு இனி தாங்கள்தான் எல்லாம், அந்த மிடில் கிளாஸ் குடும்பத்துடன் ஒட்டுதல் இருக்க கூடாது என்பதில்…
அதன்படிதான் நடந்தது. சடங்கு… அதன்பின் நல்ல நேரம் முடிவதற்குள்… வீட்டிற்கு அழைத்தல்… என எல்லாம் சரியாக நடந்தது. மகாவின் வீட்டினர்க்கு ஏதோ புரிய… அப்படியே திருமணம் முடித்து கிளம்பி விட்டனர்..  
மகா இவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்திருந்தால், இல்லை நாம் வீட்டிற்கு செல்லுவோம் என நினைத்திருந்தால் ஆனால் எதுவும் நடக்கவில்லை. யாரையும் கேட்கவும் முடியவில்லை.
அப்படியே நாட்கள் நகர தொடங்கியது… அவ்வபோது சம்பூரணம்… பலவித வார்த்தைகளிலும், செயல்களிலும் காண்பிப்பார்… ‘நீ மிடில் கிளாஸ் நினைப்பை விடவேண்டும் என்பதாக… அதுவும் நடந்தது.
மகா தங்களின் வீட்டிற்கு சென்று வரலாம் என சுவாமிநாதனிடம் கேட்டும் பார்த்தாள்… ஆனால், அவருக்கு அப்போது அனுமதி வழங்கப்படவில்லை… ஆம், சம்பூரணம் சொல்லிவிட்டார்… பெண் மட்டும்தான் உனது விருப்பம்… அவளின் நடவடிக்கை எனது விருப்பமாகதான்  இருக்கும். இதில் நீ தலையிடாதே என்றார்.
சுவாமிநாதனும் சொல்லிவிட்டார்… இனி இப்படி நடக்காதே.. நம் வீட்டு மனிதர்களுடம் பழகு… உன் வீட்டை மறந்துவிடு என.

அதுவேதான் நடந்தது. முதலில் எங்கும் இவளின் விருப்பம் ஏற்கடவில்லை… இவளின் பழக்க வழக்கங்களை மாற்றினார்… தங்களின் உலகத்தில் இவளை நுழைத்தார்… அதன் ஸ்டேட்ஸ் சொல்லி தந்தார்…
முதலில் இரட்டை மகன்கள் பிறந்ததும் வீடே கொண்டாடியது மகாவை.. தன் முதல் மகனுக்கு வாரிசு இல்லை என்பதே கவலையாக இருந்த சம்பூரணத்திற்கு இது நிறைவை தந்தது.

மகாக்கு சொல்லவே வேண்டாம் சுவாமிநாதன் தரையில் விடவில்லை அவளை… அப்படி தாங்கினார். எப்போதும் அதிகம் பேசாத தன் மாமியார் கூட அவளின் அருகில் அமர்ந்து அன்பாக தலைகோதி பேச தொடங்கினார்.
வீட்டில் இவளின் விருப்பம் கருத்தில்கொள்ளப்பட்டது. மாமனார்.. இவளின் பெயரில் தொழில் தொடங்கினார். இப்படி ஒவ்வரு அங்கீகாரமாக கிடைத்தது மகாவிற்கு. மெல்ல மெல்ல… உப்புகல், வைரமாக மெருகேறியது… இப்போது வைரமும் சர்வ சாதரணாமாக தெரிந்தது மகாக்கு.
இப்போதும் பிறந்தவீட்டுடம் தொடர்பு இல்லைதான்… கடைசியாக அவளின் அன்னை இறந்த போது… சென்று வந்தாள் அவ்வளவே…

மற்றபடி தனக்கு தெரிந்த டிரைவர் மூலமாக… அதாவது அந்த டிரைவர் மனைவியின் உறவு பெண் யாரோ, தன் அண்ணன் வீட்டில் வேலை செய்வதால்… அமர்… பிரியா.. பற்றி தெரியும்… அப்படியே காதில் வாங்கி… ராமன் பெருமை சொல்லும் இடங்களில் எல்லாம் ஹனுமார் இருப்பது போல… தன் அண்ணனின் குடும்ப பெருமையை கேட்டுக்கொள்வாள் யாருக்கும் தெரியாமல்.
ஆனால் மகாக்கு எப்போதும் போல… தான், பிறந்த வீட்டிற்கு செய்த… செயல்… நினைவில் இருந்து கொண்டே இருக்கும்… அதை உதறவோ… ஒதுக்கவோ… மறுக்கவோ முடியாது என உணர்ந்து… அந்த உணர்வுடன் நாட்களை கடக்க பழகிக் கொண்டாள் மகா.
என்ன சொல்லு.. தன் அன்னை வீட்டுக்கு ஈடு உண்டா..
“சின்ன சிறு கூட்டுக்குள்ள… சொர்க்கம் இருக்கு…
அட சின்ன சின்ன அன்பில்தானே
ஜிவன் இன்னும் இருக்கு…
பட்டாம்பூச்சு கூட்டத்துக்கு பட்டா எதுக்கு…
அட… பாசம் மட்டும் போதும் கண்ணே…
காசு பணம் என்னத்துக்கு…”
#%#%#%#%#               #%#%%##% #%#%#%#%
அபி எப்போதும்போல… அன்றும் அவனை பார்க்க… கிரௌண்ட்டில் தவமிருக்க… அமர் எப்போதும் போல அவளை புறக்கணித்தான், கூடவே முகம் சிடுசிடுவென இருந்ததது.
அவனின் முகம்மேல்லாம் வேர்த்து வடிய தலையில் ஏதோ புதிய காப் போட்டுக் கொண்டு… நிற்காமல் சுழன்று கொண்டிருந்தான். மெல்ல மெல்ல அமரை உள்வாங்க தொடங்கினாள் அபி…
இந்த கிரௌண்ட்டில் அவன் மட்டும் தனித்து தெரிய… மற்றவர்கள் எல்லாம் ஏதோ புள்ளியாக தெரிந்தனர் அபிக்கு… தன்னை முதல் முதலில் பார்த்த போது ஏதோ சாது பூனை போல… அமைதியான உடல் மொழியில் ஒரு ரசிகனாக தன்னை அவன் பார்த்த பார்வை இல்லை இப்போது… இலக்கை நோக்கி பாயும் நீண்ட ஈட்டியின் வேகம் வந்திருந்தது அவனிடம்.. என அவனை பற்றிய நினைவு அபியிடம்..
அமர்… பயிற்சியின் போது விசிலை வாயிலிருந்து எடுக்கவே இல்லை.. அத்தனை விரட்டு விரட்டினான் பசங்களை… எப்போதும் தட்டிக் கொடுத்து அவர்களை வழி நடத்துபவன்.. இன்று பொங்கினான்… விசில் சத்தம் தவிர வேறு கேட்கவேயில்லை..
இதனை பார்த்த அபிக்கு… கண்ணில் நீர்தான் வந்தது… தூரத்திலிருந்துதான் பார்க்கிறாள், அத்தனை கோவம் அவன் உடல் மொழியில்.. ஏனோ ஒவ்வெரு அசைவும் தன்னை பாதிப்பதாக உணர்ந்தாள்.
அபிக்கு தன்னிலையை எப்படி விளக்குவது என தெரியவேயில்லை. தன் அம்மாவிற்கு தெரியும்தான். ஆனாலும் இவன் கோவபடுவது போல, நாங்கள் ஒன்றும் இவனை ஒட்டிக் கொள்ள நினைக்கவில்லை… என எண்ணம்.
தன் அன்னை மூலமாகதான் எல்லாம் தெரியும் அபிக்கு என்றாலும்… மனதில் வலிதான்… ஆனால், எல்லாம் அம்மா பற்றிய வலிதானே தவிர… அந்த குடும்பம் பட்ட வலி… ஒரு இருவது வயது பெண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லைதானே… எனவே கோவம் அமர் மேல்… நான் சொல்வதை கேட்க கூடாதா… நான் என்ன செய்தேன்… என கோவம்.
நீ எவ்வளோ கோவமா வேணா இரு… ஆனா நீ என்னை பார்க்காமல் நான் போக மாட்டேன்.. அதென்ன முகத்த அப்படி சிடு சிடுன்னு வைச்சிருக்க… இன்னிக்குதான் காலேஜ் வந்திருக்கேன்… எத்தனை நாள் ஆச்சு உன்ன பார்த்து… என்னவோ முகத்த அப்படி வைச்சிருக்க… என மனதில் திட்டி தீர்த்தாள் உரிமையாய்…