Advertisement

மின்னோடு வானம் நீ…. 3
அமரும்… இவள் கிளம்பிவிடுவாள் என பார்த்திருக்க…, ம்கூம்… எப்போதும் பசங்க போகும் போதே… அவளும் கிளம்பிவிடுவாள். இன்று நின்றிருந்தாள்.
அமருக்கு மனது கேட்கவில்லை… அடித்தவனுக்கு தெரியாதா?.. அதன் தன்மை… எனவே சற்று நேரம் சென்று அங்கு சென்றான், அவளை மனதில் திட்டியபடியே.. அருகில் செல்ல செல்ல… அவளின் தோற்றம் பயத்தை கொடுத்தது அவனிடம்.
மெழுகு பொம்மை என வளம் வரும் அவளின் முகம் இப்போது வீங்கி… அந்த அரை மணி நேரத்தில் சிவந்து… எப்படியோ இருந்தது. அமருக்கு…  தன்னை மன்னிக்கவே முடியவில்லை… இருந்தும் ‘இனி இங்க உட்காருவ…’ என மனதில் அவளை திட்டிக் கொண்டே அவளிடமிருந்து பாலை வாங்கினான்..

சட்டென… பின் சென்றது பால்… அபி, அவனின் எண்ணம் புரிந்து தனக்கு பின்னால் பாலை பிடித்துக் கொண்டாள். அமர் எங்கோ பார்த்திருந்தவன் இப்போது இந்த செயலில்.. அவளை பார்க்க… அபி அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள்.
அமருக்கு அவளின் பார்வை குற்ற உணர்ச்சியை கொடுக்க… கூடவே அவள், இங்கேயே தவமிருப்பது  கோவத்தை கொடுக்க… “என்ன விளையாடுறீயா.. கொடு பால… கிளம்பு முதல்ல… “ என்றான் காரமாக.
அபி அப்படியே அவனை பார்த்தபடியே நின்றிருந்தாள்… அந்த பார்வையை தவிர்க்க முடியவில்லை அவனால். அவளின் பார்வை அமரை என்னவோ செய்தது… விழி வழி இதயம் நுழைந்தவள் பார்வை, இப்போது… மௌனமாய் கேள்வியும் கேட்க…
அமர் தொலைந்து போனான் அந்த பார்வையில்… சொல்லபோனால் முதலில் அவள் அவனை பார்க்கவில்லை… இவன்தான் எங்கோ ஒரு பார்ட்டியில் அவளை பார்த்தான்…
இவள் யாரென தெரிந்திருந்தால்… பார்த்திருக்க மாட்டானோ என்னோவோ… ஏதும் அறியாமலே… அவள் அவனை ஈர்த்தாள். இப்போது தெரிந்த பிறகு… அவளை தள்ளி வைக்க… நினைக்க… அவளோ.. இப்போது தொடர்ந்து கொண்டிருக்கிறாள்…
அவளின் பார்வையில், அமர் “என்ன” என்றான்..
அபி “எதுக்கு அடிச்சீங்க…” என்றாள்.. அத்தனை உரிமையான குரல்… சட்டென வருமா… ஒருவரிடம் உரிமை கொண்டாட… மனதின் மொத்தமாக நிறைந்திருந்தால் அன்றி அப்படி ஒரு குரல் வரவே வராது…
அமரும் அந்த குரலில் ஈர்க்கப்பட்டான், ஆனால் குரல் கரகரப்பாக வந்தது “பால் தெரியாம வந்திருக்கும்… நீ எதுக்கு இங்க உட்காருந்து இருக்க… கிளம்பு முதல்ல… வந்துட்டா.. என்னை கொஸ்டீன் பண்ண… கொடு பால..” என்றான் குரலில் காரம் காட்டி.
இப்போது அபிக்கு, இவனின் பொறுமையெல்லாம் இல்லவே இல்லை… அவனின் பதிலில் கோவம் வந்தாலும் அவனிடம் காட்ட தெரியாமல்… அவனின் அருகில் சென்று, எம்பி… இலையில்லை… லேசாக குதித்து அவனின் தலையில் இருந்த ஆரஞ்சு வண்ண கேப்பை எடுத்துக்   கொண்டு வேகமாக நகர்ந்தாள்.

அமருக்கு என்ன நடக்கிறது என புரியவே ஒரு ஷனம் ஆக “அபி நில்லு” என்றான் சத்தமாக… அப்போதுதான் இரண்டடி எடுத்து வைத்தவள்… இவனின் அழைப்பில் திரும்பி நின்று.. “ஹேய்…. சொல்லுங்க சொல்லுங்க… என் பேரை இன்னொரு தரம் சொல்லுங்க” என்றாள் குழந்தையாய்..
ஒரு கையில் பால்… மற்றொரு கையில் கேப்… முகத்தில் காயம்… ஆனால் அப்படியும் மலர்ந்த முகமாய்… கண்ணில் ஆசையுடன் நிற்கும் தன்னவளை பார்க்க… பார்க்க… அமர் தன்னிலை இழக்க தொடங்கினான்… அவனின் கைகள், அவள் கைகளை தன்போல் பற்றியது..
அபி அவசர அவசரமாக… கைகளை பின்னால் இழுத்துக் கொண்டாள்… எங்கே பாலை பிடுங்கிவிடுவானோ என, இவனும் தன் கைகளை  பின்புறம் கட்டிக் கொண்டு “சரி… நில்லு” என்றான்.

அவளிடமிருந்து கேப்பை வாங்கும் எண்ணத்தில் அமர் “எப்படி அடிபட்டுதுன்னு கேட்கமாட்டாங்களா… வீட்டில்” என்றான், பேச்சை வளர்க்கும் விதமாக.
அபி… “ம்… விளையாடும் போது பால் பட்டுடிச்சின்னு சொல்லுவேன்… நம்பமாட்டாங்க… அதான் அம்மாக்கு எல்லாம் தெரியுமே, அவங்க சமாளிப்பாங்க…” என்றாள் சாதரணமாக…
அமர் “என்ன தெரியும் “ என்றான் ஒருமாதிரி குரலில்.
“எல்லாம் “ என்றாள் யோசியாமல், அவன் தன்னிடம் பேசுகிறான் என்ற எண்ணத்தில்… கொண்டாட்டத்தில்… உளறினாள்.
எங்கோ சென்றிருந்த கோவம் இப்போது அவனிடம் வந்து ஒட்டிக் கொள்ள… “என்ன தெரியும் அவங்களுக்கு…” என்றான்.
அபிக்கு சர்வமும் ஆடியது அவனின் குரலில்… ‘உளறிட்டேனா…’ என எண்ணியபடியே… ஏதும் பதில் சொல்லாமல் நின்றிருந்தாள்.
மீண்டும் அமர் “என்ன தெரியும்… ஓ… அப்போ திட்டம் போட்டுதான் எல்லாம் நடக்குதா… எனக்குதான்…” என ஏதோ சொல்ல வந்தவன் அவளிடமிருந்து முரட்டுதனமாக பந்தை பிடுங்கினான் “இது காலேஜ்  பால்…“ என்றபடி… அவளிடமிருந்து தன் கேப்பையும் வாங்க முற்பட… அபி அதனை மறைத்துக் கொண்டாள்… அவனிற்கு நிற்க முடியாத.. கோவம் எனவே “போ வைச்சிக்க..” என ஏதோ சொல்லியபடியே கிளம்பினான்
அதை பார்த்த அபி “இல்ல இல்ல… அப்படியெல்லாம் இல்ல…ங்க…   கோச்…“ என்றாள் திக்கி திக்கி… அவனை எப்படி அழைப்பது என தெரியாமல். இதுவரை அவனின் அருகில் நின்று பேசியது கூட இல்லை, இதில் எங்கே, அழைப்பது… எனவே அவனின் குற்றசாட்டில்  சிறிது பயம் வந்தது.
அபிக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை… உள்ளங்கை வேர்க்க தொடங்கியது, தன் அன்னைக்கு தெரியும்தான் தன் நிலை… மேலும் தன் கோச்சையும் தெரியும்…  
அதிலும் அமர் பற்றி பேசுகையில் அவர் கண்ணில் கசியும் நீர் சொல்லும் அவரின் அன்பை…  ஆனாலும், கோச் சொல்லுவது போல… ஏதும் தவறாக இல்லையே…
ஆனால் அதை கேட்பதற்கு அமர் அங்கு இல்லை… அந்த பாலை மட்டும் எடுத்துக் கொண்டு இவளை திரும்பியும் பாராமல் சென்றுவிட்டிருந்தான். அவள் இறுதியாக திக்கி திக்கி சொன்ன கோச் என்ற வார்த்தை கூட காற்றோடுதான் போனது.

அபி, செல்லு அவனை அழைக்க வழியில்லாது… தன்னை பற்றி சொல்லவும் முடியாது.. அவனின் கேப்பை மட்டும் கையில் எடுத்து    வீடு வந்தாள்.

அமருக்கு மனதே ஆறவில்லை… ஆக எல்லாம் தெரியும்… இப்போது எங்கள் குடும்பத்தை என் மூலமாக நெருங்க பார்க்கிறார்கள்… ம்.. அப்படிதானே… போடி… நான்தான் நேசம்… காதல்… அன்பு… என தப்பு தப்பா.. போ.. என வண்டியில் வர வர மனம் குழம்பி தவிக்க… கூடவே அவளின் வீங்கிய கன்னமும் நினைவு வர… வண்டி தானாக… பார் நோக்கி சென்றது.

அபிராமியை தாங்கிய கார் வீட்டு வாயிலில் நிற்க… அங்கேயே… முன்பக்க தோட்டத்தில்… நடை பயிற்சியில் இருந்த அவளின் பாட்டிதான் முதலில் பார்த்தார்.. அவளை.
காரிலிருந்து கீழிறங்கியதும்… “அபி “ என்றழைத்தவர்… அவளின் முகம் பார்த்து, அவளிடம் கேள்வியே கேட்காமல்… “கோவிந்தா, என்ன டா புள்ளைக்கு இப்படி அடிபட்டிருக்கு… நீ என்ன செய்துகிட்டு இருந்த” என அந்த ரெட்டைநாடி தேகத்திலிருந்து கர்ஜனையாக வந்தது குரல்.
அந்த டிரைவரும்… பதட்டமாக இரண்டடி பின் சென்று நின்றார்.. அபி அதனை பார்த்து “பாட்டி… ஒன்னும் இல்ல, தோ… பால் விளையாடும் போது கீழ விழுந்துட்டேன்..” என தன்னருகில் வந்த பாட்டியின் தோள்மேல் கைபோட்டு உள்ளே அழைத்து சென்றாள் அபி.
பிரமாண்டமான வீடு… அந்த கார் வழிதடம் சுற்றிலும் கார்டன் ஏரியா.. ஏதோ அலங்கார செடிகள் இல்லை, எல்லாம் மரங்கள்… நாட்டுமரங்கள்.. அதனை அடுத்து நான்கு படிகள் ஏறினால் வராண்டா…
அதனை அடுத்து வெளியாட்கள் அமரகூடிய வரவேற்பறை… அதனை அடுத்துதான் வீட்டு மனிதர்கள் அமரகூடிய ஒரு பெரியஹால்… பழைய கட்டிடம்தான்… ஆனால், அவ்வபோது புதுபித்துக் கொண்டே இருப்பதால்… வீடு பொலிவாக இருந்தது.
அபி உள்ளே சென்றதும்… அவளின் பாட்டி எல்லோரையும் வேலை ஏவ தொடங்கினார்… அங்கு நின்றிருந்த வேலையாட்களிடம் “மாரி… போ… வேப்பில… பறிச்சு வா…
மணி… மஞ்சள் எடு…  போ…
கண்ணாத்தா புள்ளைக்கு பூஸ்ட் கொண்டு வா” எல்லோரையும் நிற்கவிடாமல் வேலை வாங்கினார்…
அடுத்த அரைமணி நேரத்தில் அபிக்கு குடிக்க கொடுத்து, மஞ்சள் வேப்பிலை கலந்து.. அவளின் கன்னத்தில் பத்துபோட்டு என எல்லாம் முடிந்து அபியை அவளின் அறையில் விட்டுதான் வந்தார்… பச்சையம்மாள்சம்பூரணம்.
பழமையும் புதுமையும் கலந்த மனுஷி…. எங்கு எது தேவையோ அதை சரியாக செய்பவர். தன் கணவர் வைத்தியலிங்கத்தை கைபிடித்த நாள் முதல்… இந்த வீட்டில் எல்லாம் அவர்தான்…
வைத்தியலிங்கம் பச்சையம்மாள்சம்பூரணம் தம்பதிக்கு இரண்டு மகன்கள்…  மூத்தவர் சுந்தரலிங்கம்… இவருக்கு, தங்களுக்கு சமமான தன் அண்ணன் மகள், வைஷ்ணவிதேவியை மணமுடித்தார் சம்பூரணம். அவர்களுக்கு ஒரே மகள்… சீதாலட்சுமி.

அடுத்து சுவாமிநாதன்… அவர்தான் கல்லூரி காலத்தில் மகாலஷ்மியை  விரும்பி திருமணம் செய்தார்.. இது மட்டுமே சம்பூரணம் அம்மாவிற்கு  மிகுந்த வருந்தம்…
மகாலஷ்மி வீட்டிலும் இவர்கள் அளவுக்கு வசதிவாய்ப்பு இல்லை என்றாலும்… அவர்களும் சமூகத்தில் மதிப்பான இடத்தில் இருப்பவர்கள்தான்.
இந்த தம்பதிக்கு முதலில் ஆதித்யா அகிலன் என இரட்டை மகன்கள்… இதில் தொலைந்தது சம்பூரணம் அம்மாவின் கோவம் எல்லாம்… அடுத்துதான் அபிராமி… மொத்த வீட்டின் இளவரசி… குணத்தில் தன் அம்மாவையும் பாட்டியையும் சரிவிகிதம் கலந்த கலவை… அபி.
இவர்களின் தொழில் நூற்பாலை. பெயர் சொல்லி கொள்ளும்படியான தலைமுறை தொடரும் தொழில். இது ஒரு சிஸ்டமேடிக் என சொல்லுவது போல தாத்தா பார்த்தார், மகன் பார்த்தார்.. இப்போது அதித்யா… அகிலன் பார்க்க தொடங்கியிருக்கின்றனர்…
மாறுபாடு கிடையாது… எங்கும் இவர்கள் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல்… தன் வேலையின் பொறுப்பு உணர்ந்து செயல்படும் தொழிலாளர்கள் இவர்களின் சொத்து.
இவர்களும் அதற்கு தக்க… தொழிலாளர்களின் நலன் கருதி அனைத்தும் செய்யும் பண்பு… பள்ளி நன்கொடை தொடங்கி எல்லாவித சமூக பொறுப்புகளிலும் ஆர்வமுடன் ஈடுபடும் இவர்களின் மில். எல்லாவித சமூக செயல்பாடுகளிலும் இவர்களின் மில் பெயர் இருக்கும்.
ஆக தங்குதடை இல்லா வளம்… கட்டு செட்டான நடைமுறை… எங்கு தப்பு நடைபெறும் என எளிதில் கணிக்க கூடிய தொழில் அறிவு, இவர்களின் வம்சாவழி சொத்து… இது ஒரு தனி அரசாங்கம் போல… தன் வேலையை செய்து கொண்டிருக்கும் தொழில் முறை இவர்களுடையது.

மறுநாள் காலை அபியின் வீட்டில்… எல்லா இடங்களிலும் உள்ள ஸ்பீக்கர் வழியே..
“கந்தா போற்றி…
கடம்பா போற்றி
தகப்பன் சாமியே போற்றி போற்றி…” என கந்தகுரு கவசம் ஒளித்துக் கொண்டிருக்க… அபியின் உதடுகளும் தன்போல அத்துடன் சேர்ந்து முணுமுணுத்தபடியே காலை வேலைகளை முடித்து… ஹவுஸ்மேடு குடுத்த காலைபாணத்தை பருகிய படியே வெளியே வந்தாள்.
காலையில் சாம்பிராணி மணம், மனதை நிறைக்க… தன் தாத்தாவும் பாட்டியும் பூஜை அறையிலிருக்க… அவளின் அன்னை கிட்சனில், தன் கையால் அவர்களுக்கு காபி கலந்து கொண்டிருந்தார்…
அபியின் பெரியம்மா… வைஷ்ணவி தேவி… சற்று பணத்தின் தாக்கம் கொண்டவர்… எப்போதும் பொது சேவையில்தான் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்… சில அலுவலக பொறுப்பும் செய்வார்.. எனவே, வீடு, சொந்தம் எல்லாம் அடுத்த இடம்தான் அவர்க்கு. அதனால் இயல்பாய் வீட்டின் பொறுப்பு எல்லாம் லஷ்மி மருமகளிடம்தான்.
கீழே வந்த அபியை பார்த்த அவளின் பாட்டி… “கண்ணு வாடா… பரவாயில்லையே… உடம்பு சரியில்லைனாலும் சீக்கிரம் எழுந்துட்ட, இப்போ எப்படியிருக்க அபிம்மா… “ என்றார்.
நேற்று இரவே… தன் பாட்டியின் கைவைத்தியத்துடன் சேர்ந்து… டாக்டரிடமும் சென்று வந்துவிட்டால் அபி… எனவே இப்போது சற்று முகம் தெளிந்துதான் இருந்தது.
அபி “ம்… ஓகே பாட்டி… தாத்தா… எங்க, என்ன, இன்னும் வேண்டுதல முடிக்கிலையா…” என்றாள்.
லஷ்மி அப்போதுதான் தன் அத்தை மாமாவிற்கு காபியுடன் வந்தவர்… இவளின் கேள்வியில் “என்ன அபி… எச்சு பேச்சு பேசற…” என்றார் கண்டிக்கும் விதமாக.
சம்பூரணம் “விடு லக்ஷ்மி… இவள தவிர யார், அவுக தாத்தவ கேள்வி கேட்ப்பா… தோ வராரு பார் அவரையே கேளு” என சொல்லி தன் பேத்தியை திசை திருப்பினார்.
எப்போதும் பூஜையின் போது… பட்டுவேட்டிதான் கட்டுவார் வைத்தியலிங்கம்… சரியாக எழுவத்து ஐந்து வயது… அதன் தாக்கம் அவ்வபோது தெரியும்தான்.. ஆனால், இன்னும் அந்த கம்பீரம் தொலையாத நிமிர்வான தோற்றம்… அவரின் வலது மணிக்கட்டில்… பிரபல கம்பனியின் வைரம் பதித்த… கோல்டு வாட்ச்தான் அவரின் ஒரே அணிகலன்… கௌரவத்தின் அடையாளம் அவ்வளவே… அதே மிடுக்குடன் வந்தார் தன் பேத்தியிடம்…
அபி “என்ன தாத்தா… வேண்டுதல் முடிந்ததா… என்ன சொன்னார் அந்த ஆண்டி…” என்றாள் வம்பிழுக்கும் எண்ணத்தில்.
ஏதோ தன் பேத்தி என்பதால் லேசாக சிரித்தார் வைத்தியலிங்கம் “ம்… என்ன செய்வது… என் குடும்பம் மட்டும்ன்னா… பரவாயில்ல… என்னை நம்பி… ஒரு இரண்டாயிரம் குடும்பமாவது இருக்கே… அப்போ வேண்டுதலும் பெருசா தானே இருக்கணும்….” என்றார்… அபியை ஆராய்ந்தபடியே.
அதற்குள் லட்சுமி காபி கொடுக்க, எடுத்துக் கொண்டவர்… அவரிடம் “என்னாச்சும்மா… ஏதோ விளையாட்டுன்னு சொல்றா…
இவ எங்க விளையாண்டா… இவளுக்கு ஓட கூட தெரியாதே…” என்றார் சிரித்தபடியே அபியை வம்பிழுக்கும் எண்ணத்திலும், உண்மையை அறியும் நோக்கிலும்..
லட்சுமி “அது மாமா.. ஏதோ பிரிண்ட்ஸ் எல்லாம் விளையாடுறாங்கன்னு… சும்மா… வேடிக்க பார்க்க போய்…” என மெல்லிய குரலில் சொல்ல.
அபி…”என்ன எனக்கு… விளையாட தெரியாதா… பாட்டி… நான் டென்னிஸ் கிளாஸ் போறேன்னு சொன்னேன்… நீங்கதான் என்னை எங்கயும் விடல… இப்போ பாருங்க தாத்தா எப்படி சொல்றாருன்னு….” என்றாள் லேசாக சிணுங்கியபடியே…
அப்போது உள்ளே வந்த ஆதி “ஏது… யாரும் இல்லைன்னு தெரிஞ்சு… சும்மா அடிச்சு விடற…
அக்கா கூட சும்மா வேடிக்கை பார்க்கத்தானே போறேன்னு சொன்ன… விளையாட, மாஸ்டர் கூப்பிட்டா…
அப்போ அழுதா பாருங்க தாத்தா… ஒரு அழுகை… பாவம் அக்கா, இவள சமாளிக்க பெரும்பாடுபட்டாங்க…” என்றான் கிண்டலான குரலில்.
அபி தன் பாட்டியின் தோளில் சாய்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுவது போல் பாசாங்கு செய்ய… சம்பூரணத்திற்கு தாங்கவில்லை “டேய்… அதென்ன விளையாட்டு, பொம்பள பிள்ளைக்கு… என் பேத்தி மாதிரி உங்களுக்கு பாட வருமாடா…
ப்பா ப்பா… எத்தனை பாட்டு.. எத்தனை பாட்டு… நீங்கெல்லாம் கூட…  ஏதோ கச்சேரிக்கு கூட்டிட்டு போய் பாட வைக்கிறீங்களே… வந்துட்டான்… பெருசா…
அபிம்மா… நீ இனிமேல்… இவங்க கூப்பிட்டா… பாட போகாத டா… “ என்றார் அபியின் தலையை வருடியபடியே.
அபி எல்லோரையும் பெருமிதமாக பார்த்து தன் பாட்டியை கட்டிக் கொண்டாள்… இப்போது அகிலன் வந்தான், தனது யோகா முடித்து.. “ஹேய்… அபி, என்னடா முகம் இப்படி இருக்கு…” என பாசகாரனாய்  கேட்க…

அவளின் தாத்தாவும் மற்றொரு அண்ணனும் சேர்ந்து ஒரே குரலாக “அவ விளையாடினாலாம்… அதான், அடி பட்டுடிச்சு” என கோரஸ் போட.. அபி மீண்டும் தன் பாட்டியிடம் ஒன்றினால்.
அகிலன் லேசாக சிரித்தாலும்… தன் அன்னையை பார்த்தான்… லக்ஷ்மி ‘இவன் கண்டுபிடிச்சிடுவானே….’ என்ற முக பாவனையை தாங்கி.. சங்கடமாக நின்றார்.
அகிலன் அறிந்துகொண்டான்…. ஏதோ என.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கல்லூரிக்கு வரவில்லை அபி… அடுத்து வாரவிடுமுறை என ஒரு வாரம் சென்றுதான் கல்லூரி வந்தாள் அபி. இப்போது முகம் நன்றாக இருந்தது. அமரின் முகம்தான் சிடுசிடுப்பாக மாறியிருந்தது.
 

Advertisement