Advertisement

மின்னோடு வானம் நீ…. 2
அமர் தன்னிரு கைகளை கீழே விரித்து… நட்ட நாடு மொட்டை    மாடியில் மல்லாந்து படுத்து, நட்சத்திரங்களை பார்த்து ஏங்கிக்கொண்டிருந்தான்.
அமருக்கு என்னவோ நிலவை விட கண் சிமிட்டும் நட்சத்திரமே பிடிக்கும்… அதுவும் ஒரே போல்… மூன்று நட்சத்திரம் பளிச்சென தெரியுமே அது அவனின் தோழிகள்… இரவு தோழிகள்…

தன் தோழிகளை பார்த்தவுடன்… அந்த சின்ன தென்றலாய்.. மதியம் தன்னை கடந்தவளின் நினைவு வந்ததது அவனுள்… மெல்லிய கோவம் ,சின்ன ஆற்றாமை ‘எல்லாம் தெரிஞ்சும்… எங்கிட்ட விளையாடறா அவ…
ம்… இனி அவ்வளவு சீக் கிரம் என்னை பார்க்க முடியாதுடி…
நான் இப்போ ஸ்டாப்… ம்…
ஸ்டாப்.. ஸ்டுடென்ட் இல்லை…. ‘ என அவளிடம் சொல்லுவதாக எண்ணி தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான் மனதால்தான்.
ஆனால் அடுத்த நிமிடம் ‘இன்னிக்கு என்னாவோ பளிச்சுன்னு தெரிஞ்சாலே…. ம்… என்ன… புது டிரஸ்ஸா… இல்ல…
ஏதோ முகம் பிரெஷ்ஷா இருந்ததே…. ம்… ஏதாவது இருக்கும்” என ஆராய்ச்சி  செய்தது… அவனின் இளயமனம்.

இன்னும் அவனின் சபரிண்ணா வருவதாக காணம்… அதுவரை அபியின் நினைப்பு துணையிருந்தது அவனிற்கு… ஒரு அரை மணிநேரம் சென்றுதான் வந்தான் சபரி…

க்ரே கலர் ஷாட்ஸ்… மேலே ஒரு டி-ஷர்ட் அணிந்து, லேசாக தொப்பை எட்டிப்பார்க்க… அடர்ந்த சிகை, ஆராயும் கண்கள் என கையில் போனுடன்…  ஒரு முப்பந்தைந்து வயதில்… ஒரு உருவம் அந்த மாடியில் நின்றது ஐய்யனார் போல அமரின் தலைமாட்டில்.
அமர் அவரின் முகத்தை தலைகீழ் பிம்பமாக உள்வாங்கி லேசாக சிரித்தான்.
சபரி “அமர்… என்ன டா….” என்றான் பொறுமையான குரலில்.. அவனின் அருகில் அமர்ந்தபடி.
எழுந்ந்து அமர்ந்து கொண்டான் அமர் “ண்ணா…  என்ன, பையன் தூங்கிட்டானா… “ என்றான் சிரித்தபடியே…

சபரி “ம்… தடுப்பூசி போட்டு வந்தது… அதான், படுத்திட்டான்.
நீ ஏண்டா… இவ்வளவு நேரம் இருக்க… நீ போயிருப்பேன்னு நினைச்சேன்…
என்ன, ஏதாவது பிரச்சனையா” என்றார், ஒரு வசீகரிக்கும் குரலில்.
பள்ளியில் லீடர், டீச்சரை பார்த்ததும் ‘இவன் பேசினான், இவன் எழுந்து வெளியே போனான்’ என ஒப்பிப்பது போல, கடகடவென சொன்னான்   தன் டீச்சரரிடம் “என்னை புட்பால் கோச்சா காலேஜ்ல… வர சொல்றாங்க…” என்றான்.
சபரி முகம் ஒளிர்ந்தது… அந்த மகிழ்ச்சியில் வார்த்தை திக்கியது… “ஹேய்…. காங்கர்ட்ஸ் மேன்… காங்கர்ட்ஸ்…
அப்புறம் என்ன, அமர… கையில் பிடிக்க முடியாது…
நீ நினைச்சத சாதிசிட்ட.. சூப்பர் டா… எல்லோருக்கும் கிடைக்காது டா… பிடிச்சிக்கோ…” என்றபடி தனது மாணவனின் கைபற்றி குலுக்கினான்,  அமரின் போதிமரம்.

அமர் முகத்தில் இன்னும் கலக்கம் தான்.. அது குரலிலும் தெரிய… “ச்சு… ண்ணா..
அப்பா… இத விட்டுட்டு… பிசினஸ்க்கு கூப்பிடுறார்” என்றான் இத்தனை நேரம் மனதில் அழுத்தி வைத்திருந்த கலக்கத்தை சொன்னான்.
சபரி சற்று நேரம் பேசவில்லை… இதை இவன் தாண்டத்தானே வேண்டும் என தோன்றியது… மேலும் அவர்கள் வீட்டில் அவன் ஒரே மகன்… தன்போல்… பிசினஸ் பார்த்துதானே ஆகவேண்டும் எனவும் எண்ணம் வர அமைதியானான் சபரி, என்ன பேசுவது என தெரியாமல்.
அமர் தொடர்ந்து “ண்ணா… எனக்கு ஒரே குழப்பமா இருக்கு ண்ணா… அப்பாட்ட சொல்லிட்டேன், என்னால வரமுடியாதுன்னு…             அவர் முகமே சரியில்ல ண்ணா…” என்றான் வெறுமையான குரலில்.. சிலசமயம் அனைத்தையும் கேட்கும் மனம்.
சபரி “விடு டா… பொறுமையா சொல்லு… அத்தோட அவர் நிலையையும் யோசி, அமர்” என்றார் மெதுவான குரலில். அமர் நிமிர்ந்து சபரியை பார்க்க.
மீண்டும் சபரியே “நீ ஒரே பையன் உன்கிட்ட அவர் எதிர்பார்ப்பது நியாயம்தானே” என்றார் சின்ன குரலில், அவனிற்கு புரிய வேண்டும்   என்ற பார்வை பார்த்து.
ஆனால், அமர் புரிந்து கொள்ள தாயாராக இல்லையே… எனவே   “நீங்களும் இப்படி சொல்றீங்க… நான் இத்தனை வருடம் கஷ்ட்டபட்டதெல்லாம் வீண்ணாகனுமா… என்னால முடியாது..”       என்று சட்டென குரல் உயர்த்தினான்.
சபரிக்கு அவனின் ஆற்றாமை புரிகிறதுதான்.. அவனின் பயிற்ச்சியை கூடவே இருந்து பார்த்தவன் சபரி. இந்த ஐந்து வருடங்களில் அவன் தொட்டது உச்சம்தானே…
பின்னே, சந்தோஷ் கோப்பையில் விளையாடி தமிழக அணியில்   இவனும் ஒரு கோல் அடித்தான் என்பதே பெருமைதானே.
மேலும் அதற்காக தேர்வாவது என்பதே… பெரிய செயல்… அதற்கான அவனின் உழைப்பு… அதையெல்லாம் அறிந்தவன் சபரி, எனவே இன்னும் பல இடங்களிலிருந்து கூட அவனிற்கு அழைப்பு வரலாம்… எனதான் தோன்றியது சபரிக்கு.
அத்தோடு… அமரின் பயிற்சி… காலை நான்கு மணி தொட்டே, தொடங்கி விடுவான். ஒரு வெறியோடு தன்னை மெருக்கேற்றிக் கொண்டான். சில  இடங்களில் அவமானமும் உண்டுதான், ஆனாலும் கலங்கவில்லை அவன். கருமமே கண்ணாக பயின்றான்… இப்போது ஜெயித்தும் விட்டான்.
மேலும் அந்த பந்தை அவன் நேசிக்கும் அழகே தனிதான்… ஒரு காதலியாக எப்போதும் கூடவே வைத்திருப்பான்.. மற்றவரை தொடக்  கூட விடமாட்டான். முதல் முதலில் இன்டெர் காலேஜ் டீம்மில் வென்ற பந்தை, இன்னமும் வைத்திருக்கிறான்… இப்படி புட்பால் மீது   ஒரு அன்பு… ஏதோ, எனக்கு வரும், என்று விளையாடாமல்… அதனை நேசித்து.. ரசித்து உணர்ந்து விளையாடுகிறான்…
இப்படி காதலாக, வெறியாக, பக்தியாக பயின்றவனை சட்டென ‘அது உனக்கு வேண்டாம், விட்டு வா’ என்றால்… சற்று என்ன, நிரம்ப     கோவம் வரத்தானே செய்யும்…
ஆகவே, இந்த சத்தம் எல்லாம் அவனின் கட்டுபடுத்திய குரல் எனதான் தோன்றியது சபரிக்கு.. அதனால் பெரியதாக எடுக்காமல்… மெல்லிய நிதானமான, அதட்டலான சப்தத்துடன் “போடா… போய் தூங்கு… எல்லாம் சரியாகிடும்” என்றார் சபரி.

அமரிடம் பெருமூச்சு வந்தது…. போன் ஒலிக்க தொடங்கியது… அவனின் அப்பாதான் அழைத்தார்… பெருமூச்சு விட்டு, போனை எடுத்தவன் “சொல்லுங்க…” என்றான் அசித்ரையாக…
முரளி “எங்க டா இருக்க… எனக்கு, உன்கிட்ட கொஞ்சம் பேசனும், வீட்டுக்கு வா” என்றார் பல்லை கடித்தபடி.
அமர் “நரேன் வீட்டில்தான் இருக்கேன்… இன்னும் அரைமணியில் வந்துடுவேன்” என்றான் பொறுமையாக.
முரளி “இங்க வந்துட்டு, அப்புறம் போ” என்று பல்லை கடிக்க… இந்த பக்கம் காது வலித்தது தன் தந்தையின் பேச்சில்… அமருக்கு.

ஏதும் சொல்லாமல் போனை கட் செய்தவன் கிளம்பினான்.. “சரிண்ணா… பாய்… “ என்றபடி இருவரும் கீழே இறங்கினர். சபரி முதல்மாடியிலேயே தனதறைக்கு சென்றார்.

அமர் கீழே வர… அங்கு ஹாலில் விஸ்வம் அங்கு அமர்ந்திருந்தார் நரேனின் தந்தை, இலகுவான உடையில்… உணவு முடித்து… ஏதோ  நியூஸ் சேனல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்…
மாடியிலிருந்து இறங்கிவரும் அமரை பார்த்ததும் “வா அமர்..” என்றார் தனது பக்கத்தில்… அமரும்படி செய்கை செய்யது… இந்த நேரத்தில் அவனை பார்த்தது அதிரவெல்லாம் இல்லை அவர்… இவர்கள் இருவரும் எங்கும் இருப்பார்.. அதுவும் சிலசமயம் அமர், நரேன் வீட்டிலேயே கூட உறங்கிவிடுவான்.
நரேனை அப்படி அனுமதிப்பதில்லை அவர்கள்… இங்கு நரேன் வீட்டில் இரண்டு பசங்க… அதனால் பிரச்சனையில்லை.. முன்பெல்லாம் படிக்கிறேன் என எல்லாம் ஒரே அறையில் உருண்டு கொண்டிருக்கும்.
அங்கு அமர் வீட்டில் அவனின் தங்கை இருப்பதால்… இரவு பத்து மணியுடன் சரி… வீடு வந்துவிட வேண்டும் நரேன்.
அமர் இப்போது, அமராமல் “இல்ல மாமா… அப்பா அங்க வெயிட் பண்றார்… நான் அப்புறம் வரேன்… குட் நைட்  மாமா” என்றவன் கிளம்பிவிட்டான்..
சந்தன வண்ணத்தில் என்பதுகளை நினைவுபடுத்தும் வீடு… இப்போதுதான் முகப்பை மாற்றமால் உள்ளே எல்லாம் நவீன வசதிக்கு மாறியிருந்தது வீடு..
பெரிய டீக்வூட் ஷோபா… நடுவில் கண்ணாடியிலான டீபாய்… அதன் அகல, நீளத்தை அளந்து கொண்டிருந்தார் அமரின் தந்தை முரளி…
அமர் வரவும், இன்னும் வேகமாக நடக்க தொடங்கினார்… அமர் நேரே உள்ளே சென்றான்… கிட்சேனுக்கு சென்றான், தன் அன்னையை தேடி…
அவனின் அம்மா பால்காய்ச்சிக் கொண்டிருந்தார்… இவனை பார்த்ததும் “ஏன் டா… கூப்பிட்டா, வர மாட்டியா… எவ்வளோ நேரமா வெயிட் பண்ணறார் உன் அப்பா” என அவரும் பொரிய தொடங்கினார்.
அமர் ஏதும் சொல்லாமல்… வந்தான், ஹாலுக்கு.
முரளி “என்னடா முடிவு செய்துருக்க… இன்னும் இந்த பந்த வைச்சி விளையாடிக்கிட்டே இருக்க போறீயா” என்றார் அமைதியான குரலில்.

அமர் அமைதியாகவே இருந்தான்… அவனிற்கு வாழ்க்கை குறித்த   தீவிரம் இன்னும் தெரியவில்லை… தன் தந்தை சிக்கியிருக்கும் நிலை தெரியவில்லை அவனிற்கு.  எனவே… அமைதி, தனக்கு பிடித்ததை மறுக்கும் பெற்றோரிடம் திமிறி நிற்கும் குழந்தையின் அமைதி இது…
முரளி “என்ன டா பதில் சொல்லு…” என்றார்.
அமர் “ப்பா… எப்போதும் ஏன் ப்பா… என்னை கம்பல் பண்றீங்க… எனக்கு இந்த பிசினஸ் செட் ஆகாதுப்பா… “ என குரல் உயர்த்தி கத்தினான்.
முரளி தோற்றே போனார்… தனக்கு ஒரு துணை தேவையாக நினைக்க தொடங்கிவிட்டார் அவர்… இத்தனை வருடம் கட்டி காத்த அவரின் தொழில், இப்போது… அபரிவிதமாக வளர்ச்சியடைந்து விரிந்து பரந்து நிற்கிறது…
அதில்தான் ஏதோ நெருடல் அவர்க்கு… எங்கோ ஏதோ உறுத்த தொடங்கியது…. அப்படிதான் அவரின் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருக்கிறது… அதை கடக்க… தன் தனையனின் துணையை நாட…  அவனோ இன்னும் விளையாட்டு பிள்ளையாய்…
முரளி தொய்ந்து போய் அமர்ந்தார் சோபாவில்… சுமதி, அமரின் தாய் இதனை பார்த்து தன் கணவனின் அருகில் வந்து நின்றுகொண்டார்…  ஏதோ சரியில்லை என தோன்றுகிறது… பையனும் புரியாமல் நடக்கிறானே என வருத்தம் தான் அவருக்கு, ஆனால்… ‘ஒன்றை அழுத்தி சொல்ல… சொல்ல.. அது அவனிற்கு பிடிக்காமல் போகுமோ’ என எண்ணமும் வர அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்.
முரளி ஏதோ சொல்ல நினைக்க…. சுமதி “விடுங்க… பார்த்துக்கலாம்” என்றார் அமரை குற்றம்சாட்டும் பார்வை பார்த்தபடி.
அதற்குமேல் அமர் அங்கு இல்லை.
அமர் இப்படியாக வீட்டை ரணகளம் செய்து தனது கோச் பணியை தொடங்கினான்.  யாருக்காகவும் என்னை இழக்கமாட்டேன் என ஒரு வீம்புடன் சென்றான் பணிக்கு. அப்படி ஒரு பிடித்தம் அவனிற்கு.
இதில் வீட்டினருக்கு உடன்பாடே இல்லை… யாரும் இன்றுவரை சரியாக  அவனிடம் பேசுவது கூட இல்லை. அவனின் தங்கை மட்டும் எப்போதும் போல இருந்தாள்… அவனிடம்… அதுவே அவனிற்கு போதுமானதாக இருந்தது. போக போக சரி செய்துவிடலாம் என எண்ண தொடங்கினான்.
இப்படியே இரண்டுமாதம் சென்றது… காலையில் ஐந்து மணிக்கு எழுவான்… உடற்பயிற்சி செய்வான்… குளித்து கிளம்பி கல்லூரி செல்வான்.. பின் மாலைதான் வருவான்… மீண்டும் தனியார் பயிற்சி நிறுவனத்தில் கோச்சிங்கு செல்வான். யாரிடமும் பேசுவதில்லை… அவ்வபோது நரேனிடம் மட்டும் பேசுவான்… அவனின் சபரி அண்ணாவை கூட தள்ளி வைத்து பழகிக் கொண்டான்.
ஆனால் என்ன முயன்றும், அந்த சின்னசிறு காற்றை கடக்க முடியவில்லை அவனால். அதை நினைக்கும் போது  சிலசமயம் கோவம் வரும்தான்… கூடவே ஒரு இதத்தை உணர தொடங்கினான்… என்னவோ இருக்கு அவ பார்வையில்… என எண்ணம்தான். ஆனாலும் முழுதாக அதில் தொலைய மனதில்லை அவனிற்கு, என்ன செய்வது.. கொஞ்சம் நாட்கள் செனறால் கடந்து விடுவேன் என தனக்குதானே சமாதானமும் சொல்லிக் கொண்டான்.
அன்று கல்லூரியில் எப்போதும் போல, மாவட்ட அளவிலான போட்டிக்கு பயிற்சி சென்று கொண்டிருந்தது… மாலை கல்லூரி முடிந்து, எப்போதும் போல, அவனை கண்களால் தொடர்ந்தபடியே… அந்த பெரிய கிரவுண்டை நோக்கி தவமிருந்தால் அபிராமி.
இது அவளின் வழக்கம், இதை அமர் அறிந்தாலும் கண்டுகொள்வதில்லை… அப்படி காட்டிக் கொண்டான்போல.  ஆனால் மனதில் எப்போதும் ஒரு பயம் இருக்கும்… நான் அவள் மனதில் நம்பிக்கையை கொடுக்கிறேனோ என. ஆனால் அதற்காக சென்று அவளுடன் பேசி.. புரியவைக்க இவன் விரும்பவில்லை… அவளை பொருட்படுத்தாமல் இருந்தாள்.. விலகிவிடுவாள் என எண்ணம் அவனிற்கு.
இருவரும் ஏதும் பேசியதில்லை இதுவரை… அதுவும் அவள் யாரென தெரிந்த அன்றிலிருந்து அமரின் மனதில் இருப்பது “நீ எனக்கில்ல” என்ற வாசகம்தான்… ஆனால் என்ன  சொல்லியும் கேளாமல் அவள் வரும் திசை பார்த்துவிடுவான் அமர்.
கல்லூரியில் எல்லோருக்குமே கிட்டத்தட்ட தெரிந்த கதைதான் இது. அவன் போகுமிடமெல்லாம் அவள் வருவது மாணவர்கள் அறிந்ததே.. அதனால் அவளை சிலர் வம்பிழுப்பது கூட உண்டு, ஆனால் எல்லாம் அளவாய்தான். அதான், கடோத்கஜன் கோச்சே, அவளை ஒன்றும் சொல்லவதில்லை… எனவே தான், இந்த ‘அளவு’.
அன்றும் அப்படிதான், ஏதோ ஒரு மர நிழலில் தூரமாக அமர்ந்து அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அபி. எப்போதும் இரண்டு பசங்க, அல்லது ஒரு தோழியாவது கூடவே இருப்பார்கள், இன்று யாரும் இல்லை.
பயிற்சி மும்முரமாக சென்றுகொண்டிருந்தது… அமருக்கு ஏனோ அதில் இணங்க முடியவில்லை… ‘இன்று தனியாக வேறு அமர்ந்திக்கிறாளே’ என மனது கிடந்தது அடித்துக் கொண்டது. ஆனாலும் கிட்டே செல்லவில்லை.
ஒரு பிரேக் முடிந்தது… நேரமும் சென்றது.. ஒரு பையனை அனுப்பி, செக்யூரிட்டியை வர செய்தவன், அவளிடம் வீட்டிற்கு போகும் படி  சொல்ல சொன்னான்… அவள் என்ன சொன்னாளோ, செக்யூரிட்டி… ஏதும் பேசாமல் சென்றுவிட்டான்.
இதையெல்லாம் பார்த்தபடி இருந்த அமர்க்கு கோவம் தலைக்கேற… பசங்க… பிரேக் சென்ற நேரம் பார்த்து… அந்த அழுக்கு நிற பந்தை  அவளை நோக்கி உதைத்தான்…. அவ்வளவு கோவம்… எதற்கு இங்கு இவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்ற கோவம். உண்மை என்னமோ… ஒரு ஆற்றாமை… எதற்கு இந்த காத்திருப்பு… நடக்காத ஒன்றுக்காக… என்ற ஆற்றாமை அவனிற்கு.
அதன் தாக்கம் அவன் உதைத்ததில் தெரிய… பந்து என்ன செய்யும் பாவம்… சற்றும் திசை பிசகாமல் அவளின் இடது கன்னத்தில் வந்து விழுந்தது அந்த பந்து…
இதை சற்றும் எதிர்பாராத அபி “ஆ…” என்ற அலறலுடன்… துடித்துவிட்டாள். கண்ணில் நீர் வடிய… அந்த கன்னமே சிவந்து வீங்க… ஏனென்றே தெரியாத அடி… நினைக்கவேயில்லை அவள்… எழுந்து நின்றாள், பந்தை கையில் வைத்தபடி…
இப்போதும் அவளருகில் வரவில்லை அமர்… ஒரு பையனை அனுப்பி.. பந்தை வாங்கி வர பணித்தான்.  வந்தவன், “கோச் உங்கள இனி, இங்க வர கூடாதுன்னு சொன்னார்… பால், எங்க வேணா வருமாம்… உங்கள, இந்த பக்கம் வர வேண்டாம்னு சொன்னாங்க…” என்றான் மூச்சு வாங்கியபடி… சொல்லி கை நீட்டினான் பந்திற்காக
அபிக்கு இப்போது ஏதோ பொறி தட்ட… “யார் அடித்ததோ … அவரே வந்து சாரி சொல்லிட்டு, வாங்கி போகணும்… நீயா அடிச்ச…
ஒரு பேசிக் மேன்னஸ் கூட தெரியாதா.. உங்க கோச்சுக்கு..” என ஆர்பரித்தாள்.. இப்போது வீங்கிய கன்னத்திற்கு சமமாக இன்னுரு கன்னமும்… சிவப்பு நிறம் கொண்டது.
இவர்களின் இரண்டுபேர் நிலைதான் அனைவருக்கும் தெரியுமே… எனவே என்ன செய்வது என தெரியாமல் அவனும் சென்று அமரிடம் சொல்லிவிட்டு வேறு பால் வைத்து விளையாட தொடங்கினர்.

அமர், இதனை பொருட்படுத்தாமல்… இவள் எழுந்து சென்றுவிடுவாள் என பார்த்து, கிரௌண்ட்டில் நின்றிருந்தான். ஆனால் எங்கும் நகரவில்லை அவள். நேரம் சென்றது கொஞ்சம் இருட்ட தொடங்கியது… பசங்க… ப்ராக்டிஸ் முடிந்து… ஒவ்வருவராய் கிளம்பினர்.

Advertisement