Advertisement

மின்னொடு வானம் நீ… 18

எங்கும் தடுமாற்றம் சுமதியிடம்… கண்திறந்து கணவனை பார்க்க முடியவில்லை… ஏதோ நிழலாக தெரிகிறார்.. பயம்… ‘என்னவோ எனக்கு…’ என கண்கள் தன்போல் மூடிக்கொள்ள.. அவசர அவசரமாக… அந்த பெரிய மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் நுழைகிறது… சுமதியை தாங்கிய ஸ்ட்ச்சர்…

கோவையை நெருங்கும் சமயம்… சுமதி ஈன ஸ்வரத்தில்… “என்… என்னங்க…” என அழைத்தபடியே நெஞ்சை பிடித்துக் கொண்டு தடுமாற தொடங்கினார்… அடுத்த பத்து நிமிட தொலைவில் இருந்த பெரிய மருத்துவமனையில் கார் நின்றது… உடனே… வந்துவிட்டனர்… அதுவரை நிம்மதி…

முரளிக்கு, ஒன்றும் புரியவில்லை, டிரைவர்தான் போன் செய்தார் அமருக்கு, அவர் எப்போதும் இரு வீட்டாருக்கும், நெடுந்தூர பயணம் என்றால் வண்டி எடுப்பவர்… அமருக்கு… போன் செய்தார்…

மருத்துவமனையின் பெயரை சொல்லி… “உங்க அம்மாக்கு முடியலைங்க… தம்பி, சீக்கிரம் வாங்க” என சொல்லி வைத்துவிட்டார்… அந்த டிரைவர்..

முரளி ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டார்… இவரை போல அங்கும் சிலபேர்… இருந்தனர்… முகம் முழுவதும் கலக்கத்துடன்.. அடுத்து என்ன என புரியாத நிலையில் அமர்ந்திருந்தனர். அதில் முரளியும் இப்போது சேர்ந்து கொண்டார்…

அடித்து பிடித்து வந்தனர்… அமரும், சபரியும். அதுவரை மருத்துவர் வெளியே வரவில்லை…. தன் தந்தையின் கைகளை பற்றிக் கொண்டான் அமர்… ஏதும் பேசவில்லை.

அடுத்த அரைமணி நேரம் சென்றுதான் வெளியே வந்தனர் மருத்துவர்கள்.. முரளிக்கு, தெம்பே இல்லை, எழவே முடியவில்லை… அமர்ந்து கொண்டார் ஓய்ந்து போய்… தன் மனைவி குறித்து எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை அவர், எனவே அமர்ந்து கொண்டார்.

சபரியும், அமரும் மருத்துவரின் அறைக்கு ஓடினர்… மருத்துவர்… “ரொம்ப மையிட் அட்டாக்… வேரவோன்னுமில்ல…

அப்சர்வேஷன்ல இருக்காங்க… பார்க்கலாம்,

வெயிட் பண்ணுங்க… ஒன்னும் பயப்படும்படி இல்லை” என்றவர்… தேவையானவற்றை சொல்லி அனுப்பிவைத்தார்..

மீண்டும் வந்து தன் தந்தையின் கைகளை பிடித்துக் கொண்டான் அமர்… வேறேதும் சொல்ல முடியவில்லை.. தான், தந்தையிடம் என்ன விளக்கம் சொன்னாலும் செய்தது தவறுதானே… அதனால்தானே அம்மாவிற்கு இப்படி ஆனது… என புரிந்தது அமருக்கு… முரளிக்கு எந்த வருத்தமும், எந்த கோவமும் இப்போது இல்லை போல… அமரின் கையை விளக்கவோ… இவனின் செய்கைக்காக கோவம் கொள்ளவோ இல்லை… அந்த மனநிலையில் இப்போது இல்லை அவர்.. கவனமெல்லாம் இப்போது சுமதிமேல்தான் இருந்தது எனவே ஏதும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்…

சபரி மருத்துவர் சொன்னதை சொன்னார்… முரளியிடம்.

அடுத்த அரைமணி நேரத்தில் சபரியின் குடும்பம் வந்தது… ஜெயந்தி கதறினார்… அமரை… மாறி மாறி கன்னத்தில் அறைந்தார்… “என் அண்ணிய எப்படி படுக்க வைச்சிதான்… உனக்கு நல்லது நடக்குமா…” என கதறி தீர்த்துவிட்டார்… யாரும் தடுக்கவில்லை… அமரும் மரம்போல் நின்றான்.

யாருக்கும் யாரும் சமாதனம் சொல்லவில்லை… அமைதியாக நின்றனர்… ஜெயந்தி தான், முரளியிடம் “ஒன்னுமாகாது அண்ணா…. “ என மனப்பாடமாக சொல்லிக் கொண்டிருந்தார். விஸ்வம் ஜெயந்தியை கடிந்து கொண்டார்தான் ஆனால், அவரின் கதறலில் இது யார் காதிலும் விழவில்லை..

முரளியை சுற்றி… விஸ்வம், சபரி, ஜெயந்தி என எல்லோரும் நின்றிருந்தனர்… அமர் ஜெயந்தி தன் தந்தையின் அருகில் வந்தவுடன்… நகர்ந்து கொண்டான்.. அமருடன் நரேன் அமர்ந்திருந்தான் தனியே.

அமர்க்கு மாலையில் இருந்த திடமெல்லாம் கரைந்து காற்றோடு போனது… எதையெதையோ  எண்ணி.. பயம் வந்தது. ஜெயந்தி வருவதற்கு முன் இருந்த திடம் கூட இப்போது அவர் வந்து, அழுததும்… பயம் வந்தது அவன் கண்ணில்…

#%#%#%#%#%#%#%#%##%             #%#%#%#%#%#%#%#%#%#

அபியின் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.. அகிலனை தவிர.. சம்பூரணம், அமைதியாகவே இருந்தார்… ஏதும் சொல்லவில்லை.. மகாக்கும் அதே பொறுமையே, சுவாமிதான் அமர் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்… தன் பெற்றோரிடம் “நாமதான் இனி பேசணும் ப்பா,

அதுவும் நாங்கதான்… ம்…

நானும் மகாவும்தான் ஒருதரம், வீட்டுக்கு போயிட்டு வரணும்…

அப்புறம்தான் எல்லாம் பேசணும்…” என்றார் யோசனையாக.

அபி அமர்ந்து உண்டு கொண்டிருந்தாள்… இதையெல்லாம் கேட்டபடி அகிலன் இப்போது இங்கு இல்லை… அபியின், சந்தோஷ முகம் அவனை ஏதோ… செய்ய… அமர், சென்றவுடன் வெளியே சென்றவன்தான் இன்னும் வரவில்லை…

மகாவும் ஏதும் பேசாது தன் கணவனின் பேச்சில் கவனமாக இருந்தாள்… சம்பூரணம் அடிக்கடி தன் மருமகள் முகத்தை பார்த்தார் அவ்வளவுதான் ஏதும் சொல்லவில்லை…

சுவாமியின் பதிலை உள்வாங்கிய அந்த பெரியவரும்… “சரிதான் சாமி…. போயிட்டு வாங்க, எல்லாம் நல்லபடியா முடியும்…” என்றார் ஆசீர்வாதமாக.

மகாக்கு அதுவே போதுமானதாக இருந்தது. இனி, எப்படி.. என பார்க்க வேண்டும் என எண்ணியபடியே இருந்தார். இருவத்தெட்டு வருட பொறுமை மகாவினுடையது, தன் மாமியாரின் பார்வை சற்று பயத்தை தந்தாலும்… இந்த முறை மகா.. சற்று தைரியமாகவே இருந்தாள். இன்னும் எதோ பேச்சு சென்று கொண்டிருந்தது அங்கு.

அபி உண்டு முடித்து மேலே சென்றாள்… அம்ரிடம் போன் பேசும் எண்ணத்துடன். 

அமரின் போன் ஒலிக்க தொடங்கியது.. அபியிடமிருந்து அழைப்பு வந்தது. … ஆசையாக அழைத்தால் தன் அண்ணனிடமிருந்து போன் வந்துவிட்டது என சொல்ல.

அமர் முதல்தரம் போனை எடுக்கவில்லை… விடாமல் அபி அழைக்க…  நான்காம் முறை எடுத்தான்… அபியின் குரல் உற்சாகமாக ஒலித்தது “அண்ணன் போனை கொடுத்துட்டான்” என்றாள் ஆர்பாட்டமாக.

அமர் “ம்… நான் அப்புறம் கூப்பிடறேன்” என்றான் ஏதோ மாதிரி குரலில்.

“ஏன், என்னாச்சு… ஒருமாதிரி இருக்கீங்க… உ…உங்க அம்மா அப்பா… ஏதாவது சொன்னாங்களா” என தயங்கி தயங்கி கேட்க…

அமருக்கு “ச்சு… அப்புறம் கூப்பிடுறேன்… ப்ளீஸ், நான் ஹோஸ்ப்பிட்டல் இருக்கேன்…” என சலித்த குரலில் சொல்லி வைக்க போனவனிடம்.. அபி “ஏன் என்னாச்சு… எந்த ஹோஸ்பிட்டல்… ப்ளீஸ் சொல்லுங்க” என்றாள்.

அமருக்கு மறுக்க முடியவில்லை போல மருத்துவமனையின் பெயரை சொல்லி “ப்ளீஸ்… காலையில் பேசுறேன்” என வைத்துவிட்டான்.

அபி யோசிக்கவேயில்லை… கீழே ஓடினால்.. “அம்மா.. கோச்… அப்பா.. கோச் எதோ… ஹோஸ்பிட்டல்ல இருக்காங்களாம்… என்னான்னு தெரியல… போய் பார்த்துட்டு வரலாம் ப்பா…” என்றாள் படபடப்பான குரலில்.

மகாக்கு மூளை தாறுமாறாக வேலை செய்தது… பதட்டமாகினார் “போலங்க… என்னான்னு தெரியலை…” என தன் கணவனிடம் கேட்க… சுவாமிக்கும் அதுவே சரியென பட… கிளம்பினர்… மணி ஒன்பதரை… மூவரும் அந்த மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.

உள்ளே வந்து விசாரித்து… வந்துவிட்டனர்… மூவரும். மகாக்கு… காரில் வரவரவே யோசனை யாருக்கு என்னவென்று தெரியலையே… அண்ணனுக்கா… அண்ணிக்கா… என உள்ளே இருதையம் துடிக்கும் சப்தம்.. தன் காதுக்கே கேட்க… வந்து கொண்டிருந்தார்…

இப்போது தன் அண்ணனை, நாற்காலியில் அமர்ந்த கோலத்தில் பார்க்கவும்… ப்பா… பார்த்துட்டேன்… நல்லார்க்கார்… அய்யோ இப்போதுதான் மூச்சு சரியாக வருகிறது மகாக்கு.

அடுத்து ‘ஐயோ அண்ணிக்கா…’ என தடுமாற்றம் எழ… தன் அண்ணன் அருகில் சென்றார் மகா… தடையேயில்லை அவருக்கு.. திக்கிய குரலில் “ண்ணா…” என அழைக்க… அங்கு அருகில் அமர்ந்திருந்த விஸ்வம், ஜெயந்தி, முரளி என மூவரும் ஒரே நேரத்தில் நிமிர்ந்தனர்.

மகா பட்டென… முரளியின் காலில் கீழ் அமர்ந்து கொண்டார்… “ண்ணா… இதுல, அவன்.. அமர், தப்பு எதுவும் இல்லண்ணா,

இது என் தப்பு ண்ணா, என்னோட தப்பு ண்ணா….

அவன ஏதும் சொல்லாத ண்ணா…” என சொல்லியபடியே தன் அண்ணனின் கைகளை பற்றிக் கொண்டார்..

விஸ்வமும் ஜெயந்தியும் நகர்ந்தனர்… சுவாமியை பார்த்த முரளி எழுந்துதார் அனிச்சையாய்… முரளி “எழுந்திரு மகா” என்றார்.

மகா “ண்ணா பையன ஒன்னும் சொல்லிடாத ண்ணா…. க்கு…” என அழுகை வந்தது மகாக்கு, தன் அண்ணனின் தோளில் சாய்ந்தார்… மீண்டும் “பாவம் ண்ணா, அவன்… அண்ணிக்கு இப்படி ஆனதுக்கு காரணம் நான்தான் ண்ணா” என அழுதார்.. மகா..

முரளி “விடும்மா…. நீ எதுவும் நினைக்காதே “ என்றார்.

சுவாமி அருகில் வந்து “மகா… அமைதியா இரு…” என்றார்.

முரளியிடம் திரும்பி  “என்னாச்சு….” என கேட்க…

முரளி “காரில்… வரும் போதே” என தொடங்கி எல்லாம் சொன்னார்… “பசங்கதான் டாக்டர்ர பார்த்து பேசியிருக்காங்க… மையில்டு அட்டாக்ன்னு சொல்லியிருக்காங்க… இன்னும் கண் முழிக்கல” என மெல்லிய குரலில் சொன்னார்..

சுவாமி “சரியாகிடுவாங்க… தைரியமா இருங்க…” என்றவர் அடுத்து என்ன பேசுவது என தெரியாமல் நின்றார்.

சில நிமிடம் இடைவெளிவிட்டு “ஏதாவது சாப்பிட்டீங்களா…” என்றார் அருகில் நின்றிருந்த விஸ்வத்தையும் பார்த்து… பொதுவாக.

விஸ்வம் “இல்லங்க… இப்போதான் வந்தோம்… இன்னும் அத பத்தி யோசிக்கல” என சொல்லிக் கொண்டிருக்க…

சுவாமி “சரிதான்… வாங்க டாக்டர பார்த்துட்டு வரலாமா…” என்றார் பொதுவாக முரளியை பார்த்து.. அவர், மனைவியின் நிலை பற்றி தெரியாமல் அந்தபக்கம் இந்தபக்கம் நகர்வார் போல் சுவாமிக்கு, தோன்றவில்லை… எனவே கேட்டார்.

ஆக ஆடவர் மூவரும் சென்றனர், எந்த மருத்துவர் கவனிக்கிறார் சுமதியை, என அறிந்து சென்றனர்… சுவாமி பொதுவாக தங்களை அறிமுகம் செய்து கொண்டார்.. சுமதி பற்றி தெளிவாக கேட்டுக்கொண்டனர்…

மருத்துவரும் ‘என்ன நேர்ந்தது’ என கேட்க, பொதுவாக… ‘குடும்ப சண்டை’ என முடித்துக் கொண்டனர். மூவரும்.

முரளிக்கு பெரிய நிம்மதி… அந்த நேர டென்ஷன்… கூடவே… பழைய கோவம் எல்லாம் சேர்ந்து தன் மனைவியை படுத்திவிட்டது என உணர்ந்தார்… மூடி வைக்க வைக்க… அழுத்தம் அதிகம்தானே… எனவே சற்று ஆசுவாசமாக அமர்ந்தார்… இப்போதுதான் சுற்றுபுறம் உணர தொடங்கினார்..

வெளியே  வந்ததும் சுவாமி “சாப்பிட ஏதாவது வாங்கி வர சொல்லவா… கொஞ்சமா… சாப்பிடுங்க…” என சொல்லி முரளியின், பதிலை எதிர்பார்க்காமல்… பசங்க மூவரும் நின்றிருந்த இடத்திற்கு சென்றார்… சபரியிடம் “சரியா வந்துட்டீங்களா… நீங்க வந்து எவ்வளவு நேரமாச்சு” என பேச்சு கொடுத்தார்..

அதன்பின் அமரிடம் “போ ப்பா, அப்பா இன்னும் சாப்பிடல, நீங்க எல்லோரும் சாப்பிட்டு… அவங்க ரெண்டுபேருக்கும் வாங்கி வந்திடுங்க… ஹோட்டல் மூடிடுவான்” என அவர்கள் மறுக்க முடியாமல் பேசி அனுப்பி வைத்தார்.

ஜெயந்தியுடந்தான் பேசிக் கொண்டிருந்தார் மகா… ஜெயந்திக்கு ஒன்னும் சொல்லமுடியவில்லை.. மகாமேல் கோவம்தான் என்றாலும் வந்தவுடன் ‘பையன் மேல் எந்த தவறும் இல்லை, தன்மேல்தான் தவறு’ என அழவும் ஜெயந்திக்கே சற்று சங்கடமாக போய்விட்டது.

எத்தனை வருடமாகிறது திருமணமாகி… இப்போது திருமண வயதில் பிள்ளைகள். இன்னமும் இந்த பெண் செய்த தப்பை எல்லார் முன்னும் சொல்லி அழும் என எதிர்பார்க்கவில்லை அவர்.. எவ்வளவு பெரிய செயல்… என மகாவை ஆராய்ச்சியாக பார்த்த்துக் கொண்டிருந்தார்…

மகா ஜெயந்தியின் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார்… இருவரும் ஏதும் பேசவில்லை.

அபி, அங்கு வந்தது முதல் யாருடனும் பேசவில்லை… அவளுக்கு எதோ பயம் எப்போதும் போல. அமரை பார்க்கவே முடியவில்லை அவளால்… இவள்புரம் திரும்பவில்லை அவன். மேலும் அப்படி இருந்தான், ஓய்ந்து போய்…

அவர்கள் வந்தவுடன் எதோ சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவன்… பின்பு கண்டுகொள்ளாமல் தலையை கையில் தாங்கி குனிந்து அமர்ந்து கொண்டான்.

அபிக்கு ஏதோபோல் ஆனது, என்னை நெருங்கிவிடாதே… என அமர்ந்திருந்தான்..  நிராதரவான நிலையில்.. ஓய்ந்து போய் அமர்ந்திருந்தான் அமர்…

இதுவரை எப்போதும் அமரை அசால்டுடன் பார்த்திருந்த அபிக்கு, இப்போது இவனின் தோற்றம் அச்சத்தை தந்தது… அவங்க வந்தது வீட்டில் பிடிக்கலை, அதன் தாக்கம்தான் என அப்பட்டமாக உணர்ந்தாள் அபி.. அமைதியாக ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள். கூடவே அமரின் பாராமுகம் வேதனையை தந்தது.

முரளி இப்போதுதான் கவனிக்க தொடங்கினார் வந்தவர்களை.. ஜெயந்தியிடம் “போம்மா… போ சாப்பிட்டு வா, சுமதி கண்ணுமுழிச்சா உன்ன தேடுவா… போயிட்டு வா” என்றார்.

மகாவையும் பார்த்து “நீ சாப்ப்பிட்டியா மகா… போயிட்டு வாங்க… ரெண்டுபேரும்” என்றார்.

தள்ளியிருந்த அபியை இப்போதுதான் பார்த்தார்… அனிச்சையாய் பார்வை அமரை தேட… அவன் அங்கு இல்லை, எனவே மகாவை பார்க்க மகா “அபி இங்க வா” என்றார் அபியை.

அபி அருகில் வரவும் “ண்ணா… அபி… அபிராமி, என் பொண்ணு” என சொன்னார்.. எந்த ஆனந்தமும் இல்லை குரலில்… ஏதோபோல் சொன்னார் கடமையாய்.

அபிக்கு, கண்களில் பயம் அப்பட்டமாக தெரிய எப்படி ரியாக்ட் செய்வது என தெரியாமல்… லேசாக சிரித்தாள்.. முரளிக்கு என்ன பேசுவது என தெரியாமல் “என்ன படிக்கிறம்மா” என கேட்டார்…

அபி எதோ சொன்னால்… அதை கொண்டு முரளி இன்னும் எதோ கேட்டார்.. அமர், அங்கு தூரமாக நின்றிருந்தான்… அவர்களின் வார்த்தைகள் காதில் விழவில்லை என்றாலும்.. செய்கைகளை பார்த்தபடி நின்றிருந்தான்.. தன் அப்பாவும், அபியும் எதோ பேசுவது தெரிந்தது.. கொஞ்சம் தெம்பு வந்தது அவனுக்கு. மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டான்… தன் கைகளால் தலையை கோதியபடியே திரும்பிக் கொண்டான்.

அமர் இப்போது நினைவு வந்தவனாக, ஜெயந்தியும் மகாவும் நிற்குமிடம் பார்த்து பொதுவாக “த்த வரீங்களா” என்றான் சத்தமாக.  

விஸ்வம், சுவாமி இருவரும் பொதுவாக பேசிக் கொண்டிறுந்தனர். சுவாமி, இப்போது அவனையே பார்த்திருந்தார்… ‘தெளிவானவன்’ என தோன்றியது அவருக்கு.. அந்த நேரத்திலும், இருவரின் முகத்திலும் லேசான புன்னகை அரும்பியது.

எல்லோரும் உண்டு… விஸ்வத்திற்கும் முரளிக்கும் வாங்கி வந்தனர்… இருவரும் உண்டு முடித்து எல்லோரும் காத்திருக்க தொடங்கினர்… சுமதியின் நினைவு திரும்புவதற்காக… இன்னும் சுமதி திறக்கவில்லை…

நேரம் நடுநிசியாக தொடங்கியது… விஸ்வத்திற்கு புரிந்தது நீண்டநாள் சென்று சேர்ந்த சொந்தம் எனவே, தன் மனைவியையும் மகனையும் அழைத்து கொண்டு கிளம்பினார்.. காலையில் வருவதாக சொல்லி.

முரளியும் ஏதும் சொல்லவில்லை.. ஆக இப்போது இவர்கள் குடும்பம் மட்டும் இருந்தது. ஆண்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்… மகா, அண்ணின் அருகில் அமர்ந்திருந்தார்.. அபியும் அமரும் இன்னும் எதிரேதேரே அமர்ந்திருந்தார்..

எல்லோரையும் இன்னும் இரண்டு மணி நேரம் காக்கவைத்து அதிகாலை இரண்டுமணிக்குதான் கண் திறந்தார் சுமதி… நல்ல முன்னேற்றம் என்றனர் மருத்துவர்கள்…

முதலில் தன் மகனைத்தான் பார்த்தார்… கோபமெல்லாம் வரவில்லை போல, அமைதியாக பேசினார்… அமருக்கு நிம்மதி… அவரின் கைகளை பிடித்துக் கொண்டு அமர்ந்து கொண்டான்.

அடுத்து அரை மணி நேரம் சென்றுதான் வந்தான் வெளியே… எதுவும் சொல்லவில்லை அவன், அன்னையும் எதுவும் கேட்கவில்லை..

இப்போது முரளி… தன் தங்கையுடன் உள்ளே சென்றார்.. சுவாமி, அபி, அமர் மூவரும் வெளியே நின்றனர். சுமதிக்கு, இந்த நேரத்தில் அதிர்ச்சி வேண்டாம் என மருத்துவர் சொன்னெதெல்லாம்… காற்றில் விட்டார்.. முரளி.

இன்னும் எத்தனை நாளைக்கு மறைக்க முடியும், இன்றே… என ஒருமுடிவோடு… உள்ளே அழைத்து சென்றார்… சுவாமியிடம் “நீங்க இருங்க, நான்… மகாவை கூட்டி போறேன்” என சொல்லி அழைத்து சென்றார்.

மகா, தன் அண்ணனிடம் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் சுமதியிடமும் சொன்னார்… இப்போதும் அதே குற்றவுணர்ச்சியுடன்தான் சொன்னார். 

சுமதி ஏதும் சொல்லவில்லை… அமைதியாக தலையசைத்தார்… மற்றபடி, அழாதே என்றோ… புன்னகையோ, ஏதும் செய்யவில்லை.. கண்களை மூடிக் கொண்டார்.

மகாவும் ஏதும் பேசமுடியாமல் வெளியே வந்துவிட்டார்… முரளி தன் மனையாளுடன்.. அமர்ந்து கொண்டார்.

சுவாமி “போலாம் மகா…” என்றார். மகா, மட்டும் தன் அண்ணனிடமும் அண்ணியிடமும் சொல்லிக் கொண்டு வந்தார். சுமதி இப்போது கண் திறந்திருந்தார்… லேசாக தலையசைத்தார்..

அபி, அமரை பார்க்கவில்லை… அமரும் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை… மகாவின் குடும்பம் கிளம்பியது.

சுமதியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை… எல்லாம் முன்னேற்றமாகவே இருந்தது.. அடுத்த இரண்டு நாளில் வீடு வந்தார் சுமதி.

“காலம் என்பது மாறும்

வலி தந்த காயங்கள் ஆரும்….

மேற்கு சூரியன்…. மீண்டும் காலையில்…

கிழக்கில் தோன்றிதான் தீரும்…

நதியோடு போகின்ற படகென்றால் ஆடாதா…

ஆனாலும்… அழகாக கரை சென்று சேராதா…”

Advertisement