Advertisement

மின்னொடு வானம் நீ…15

மிக மெதுவாக இருவரும்… அந்த லக்கேஜை எடுத்துக் கொண்டிருந்தனர்… சிறிய உரிமை அமரின், குரலில் இருக்க… இன்னும் பட்டும் படாமல் அபி… அவனிடம் “அது… இங்க…” என பொதுவாக சொல்லியபடி இருவரும் அதனை பார்த்து, எடுத்து வெளியே வந்தனர்…

இப்போது இருவரும் பிரிய வேண்டிய நிலை, அதற்குள்ளா… வந்தது கோவை என எண்ணியபடி அபி நிமிர்ந்து பார்க்க… மிக ஏமாற்றம் அமருக்கு… எதுவும் பேச முடியவில்லையே… என்ற ஏமாற்றம், அதை கண் வழியே அவளுக்கு கடத்த முயல… அபஸ்வரமாய் ஒரு குரல்… “அபிராமி…” என… அமரின் உயரத்தை ஒத்த அதே திடகாத்தரமான உடலுடன்.. சர்வ நிச்சையமாய்… அவனை சுட்டெரிக்கும் கோவத்துடன் நின்றான் அகிலன்…

அபி வெடவெடத்து போனாள், கைகள் தன்போல் நடுங்க… “ண்ணா, அவர் கோச்… அ” என எதோ சொல்லவர…

அகிலன் “மூவ் அபி” என சொல்லியவன் அவள், அப்படியே நிற்கவும் “போ…ன்னு சொன்னேன்” என்றான் அதட்டலான சிறிய குரலில்.

அமரும் கண்ணசைத்து “போ, அபி” என வாய் திறந்து சொல்லவும்தான் அபி, நகரவும்… அகிலன் இன்னும் உக்ரமானான்.

அபியிடம் காட்டிய இலகு உடல்மொழி மாறி.. அமர், முழு உயரத்திற்கு நிமிர்ந்து அகிலனை பார்த்தான்.. ஆனால் குரலில் சினேகம் த்வனிக்க “சொல்லுங்க ” என்றான் கிண்டல் குரலில்.

அகிலனுக்கு அப்படியொரு வெறி… இவன்தானே என் தங்கையை வேண்டாமென்றவன், மேலும் அடித்து, அவள் நெருங்கும் போது மனதையும் காயப்படுத்தியது… கிட்ட தட்ட.. வெறுத்த நிலையில்தானே… வெளிநாடு அனுப்பி வைத்தோம்…

இப்போது அவளை எதற்கு நெருங்க வேண்டும்… கூடவே கம்பனியிலும் இவனுடைய அப்ப்ளிகேஷ்ஷன்… என்ன நினைத்து கொண்டிருக்கிறான்… இவன்…

இவன் கூப்பிடும் போது வருவதற்குத்தான் நாங்களா, நாங்கள் நெருங்கும் உயரத்திலா இருக்கிறோம்…

எல்லாம் அம்மாவுக்காக… ஆனால் இவன், வேறு மாதிரி… இது சரியாக வராது… மாறி மாறி பேசி, செய்து… ஸ்திரமில்லாதவனை எப்படி நம்புவது..

இந்த அபிக்கு அறிவே இல்லை… முடிஞ்சது முடிஞ்சதுதான்…

திரும்பவும் ஆரம்பிக்கிரானா… முடியாது,

எப்படி அவளை நெருங்குகிறாய் என பார்க்கிறேன் என எண்ணியபடியே அமரை கண்களில் மென்று தின்று வெளியேறினான் அகிலன்.

அமரிடம் பேசவில்லை… அகிலனுக்கு அமரிடம் தன் உயரத்திற்கு… இவனிடம் பேசி… ரவுடி… என ஏனோ ஒரு தோரணையில் சென்றுவிட்டான்.

ஆனால், எல்லா கோவமும் தன் தங்கை மீதுதான் திரும்பியது, வேண்டாம் என்றவன்… வந்து நின்றால்… உருகி நிர்பாளா இவள்…

கொஞ்சம் கூட அறிவில்லை, இவளை அங்கு அனுப்பிவிட்டு பாட்டியை சமாளிக்கவே முடியவில்லை.

அபி, தன்போல்… கவலையே இல்லாமல் அவனுடன் ஏர்போட்டில்…

எத்தனைபேர் வருகிற இடம்… கொஞ்சம் கூட அறிவில்லை.. என அண்ணனாக மனதுள் போராடியபடியே வீடு கூட்டி வந்தான் அபியை.

அபி வீட்டினுள் நுழையவும்… குடும்பமே… வந்து அவளை கொண்டாடியது… அதுவும் பாட்டி.. “என்ன டா.. ரெண்டு நாள் முன்னாடி பேசினப்ப, போனுல  பார்க்கும் போது நல்லா இருந்த…

இந்த ஒருநாளு பயணத்துல, இப்படி இளைச்சு போயிட்ட அபிம்மா..” என தொடங்க கண்கள் கரிக்க… எப்போதும் போல பூனை குட்டியாய் தன் பாட்டியிடம் ஈஷிக் கொண்டாள்… அபி. அவரும் அவளின் சமையல்… கல்லூரி… நண்பர்கள் என எல்லாவற்றியும் கேட்க தொடங்கினார் சம்பூரணம்.

அபி இன்னும் தன் அண்ணனின் மிரட்டலிலும் பாரமுகத்திளிருந்து வெளிவராமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் தன் பாட்டிக்கு.

அகிலன் அங்கேயே அமர்ந்திருந்தான் ஏதும் பேசாமல்… தன் அண்ணனை பார்த்தபடியே தன் பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தாள் அபி.

மகாக்கும், சுவாமிக்கும் கூட அபியின் தோற்றம் நிம்மதியைதான் தந்தது. ஆனால், அகிலனின் தோற்றம் எதோ என மனதுள் மணியடிக்க தொடங்கியது..

நேரம் செல்ல, எல்லோரும் இரவு உணவு முடிந்து, அபி மேலே தனதறைக்கு செல்லவும்… அகிலன் வந்தான் கூடவே… “அபி” என்றபடி அவளுடன் சென்றவன்… “ உன் போன் கொடு” என்றான்.

அவளும் யோசனையின்றி போனை தன் அண்ணனிடம் கொடுக்க… வாங்கியவன், சென்றுவிட்டான்… ஏதும் சொல்லாமல். அதில் அகிலன், தெரிந்து கொண்டது எல்லாம் காலையில் அவளுக்கு வினையாக வந்தது.

இரவு முழுவதும் யோசனைதான் அகிலனுக்கு… அம்மாவிடம் சொல்லுவதா, வேண்டாமா?

வேண்டாம்.. அவர்களுக்கு பிறந்த வீடு முக்கியம். ஆனால், அபியை இப்படி படுத்தி எடுப்பவன் எப்படி அவளை பார்த்துக் கொள்வான் வேண்டாம்… முதலிலேயே அந்த அமரை தள்ளி நிறுத்தியிருக்க வேண்டும்… என பல பக்கம் யோசனை, அகிலனுக்கு….

ஆனால், அபிக்கு இரவு முழுவதும்… ஏதேதோ எண்ணங்கள்… அமரின் கைப்பிடி தன்னுடன் இருப்பதாகவே ஒரு ப்ரம்மை… எங்கும் கைகளில் ஒரு இறுக்கத்தை உணர்ந்தாள்… அதிலிருந்த நம்பிக்கை, பாதுகாப்பு, உரிமை என எல்லாம் அவளுள் இனிமையாய் இறங்க.. அமைதியாக உறக்கத்தில் இறங்கினால் அபி.

அமர், வீட்டிற்கு சென்றவனுக்கு அபியின் சுவாச காற்று தன்னையே சுற்றுவதாக ஒரு எண்ணம்… அந்த இரவு வேளையில் தன்னறை முழுவது அவளது மூச்சுகாற்றும், அவளின் இதமான நறுமணமும் சேர்ந்து கொண்டதாக ஒரு பிரமை… அதை திரும்ப திரும்ப நினைத்தபடியே.. உறங்கினான் அவன்.

மறுநாள்… அபிக்கு அகிலன் புதிதாக தெரிந்தான்… ஒரே இரவில் எல்லாம் மாறும் என உணர்ந்தாள் அபி..

அப்போதுதான் எழுந்தாள், எப்போதும் எழுவதை விட சற்று அதிக நேரம் தூங்கிவிட்டாள் அவள்.. கீழே வரவும் மகா… எதோ கை வேலையாக இருந்தார்.

மகா “என்ன அபி, காபி குடிச்சியா” என்றார்.. அவளின் பரபரப்பை பார்த்து. தன் அன்னையின் அருகில் வந்து நின்று… அவர் என்ன செய்கிறார் என பார்த்தபடியே.. அபி “ம்… ம்மா… ஸ்வாதி வீட்டுக்கு போகணும்… போன் பண்ணனும் போன் கொடு, என கேட்க…” மகாவே அதிசையமாக பார்த்தார் அவளை.

மகா..”ஏன், உன் போன் எங்க” என

“அண்ணன் வாங்கிட்டான்… எங்க வைச்சிருக்கான்னு தெரியலை” என்றாள்.

“சரி, முதல்ல சாப்பிடு… அப்புறம் அகிலன் கிட்ட கேட்கலாம்” என்றார்.

அபிக்கு உண்ணும் எண்ணமெல்லாம் வரவேயில்லை.. கைகளும் மனதும் குறுகுறுக்க தொடங்கியது… அமரிடம் பேச. எனவே உணவை கொறிக்க தொடங்கினாள்…

அபோதுதான் அலுவலகத்திற்கு தயாராகி வந்தான் அகிலன் அவனிடம் “ண்ணா… என் போன் எங்க” என கேட்க.

“எதுக்கு உனக்கு” என்றான் அவளை ஆராய்ச்சியாய் பார்த்தபடி.

மகா அங்கு இல்லை இப்போது, சம்பூரணத்திற்கு இப்போதெல்லாம் முடிவதில்லை, அதனால் அவர் அறைக்கே, உணவு எடுத்து சென்றார் மகா.

அபி இப்போது “என்ன ண்ணா, நான் என் பிரிண்ட்ஸ் கிட்ட பேசணும்… மீட் பண்ணனும், நிறைய பேசணும்… இன்னும் ஒன் வீக் தானே இருக்கு… ஏதாவது எக்ஸாம் பத்தி கேட்க வேண்டாமா” என்றாள் ஆற்றாமையாக.

“அதான் எல்லாம்… முன்னாடியே.. உனக்கு அனுப்பினுதே…

நான்தானே அதை செய்தேன்…

போதும் பிர்ப்பர் ஆனா வரைக்கும்… இருக்கறத எழுது, பேசிக்கலாம்…” என்றான் நேர் பார்வை பார்த்து, அந்த பார்வை அபியை எதோ செய்ய, அமைதியாக இருந்தாள்.

இதற்கு என்ன சொல்வது என தெரியவில்லை அபிக்கு, நேற்று அமரை தன்னுடன் பார்த்ததிலிருந்து இப்படிதான் என தெரிகிறது. ஆனால், தான் என்ன செய்வது, சொல்லுவதா.. இல்லை அமைதியாக இருப்பதா.. என தெரியவில்லை… எனவே கண்கள் நிலம் பார்க்க… அமைதியானாள் அபி.

அகிலனுக்கு தன் தங்கையா என நம்பவே முடியவில்லை… மறைக்க தெரியாதே… எதாக இருந்தாலும்… தன் அம்மாவிடம் சொல்லும் குழந்தையென நினைத்தேனே… இன்னும் ஒன்றையுமே யாரிடமும் சொல்லவில்லை… என இன்னும் ஆழமாக பார்த்தான் தன் தங்கையை.. எதையும் வாய் மொழியாக கேட்காமல்…

மீண்டும் அகிலனே “பழைய கதையெல்லாம்… இனி நடக்காது…

எதுக்கு நீ, ஆதியோட போனியோ அத மட்டும் பார்…

இந்த ஒருமாசம்… எந்த சத்தமும் இல்லாமல்…

ஒழுங்கா… எக்ஸாம் எழுதிட்டு… கிளம்பற…

புரியுதா…” என்றான் அடக்கப்பட்ட கோவமான குரல்தான்… ஆனால் மிக நிதானமாக, குறை சொல்லாமல்.. பேச்சாக இருந்தது. அதற்குமேல், தன் குட்டி தங்கையிடம் சத்தம் செய்ய அவனின் எந்த அணுவும் தயாராக இல்லை போல.

தன் அண்ணன் இப்படி சொல்லவும், கொஞ்சம் தைரியம் வந்தது அபிக்கு “இல்ல ண்ணா, கோச்…. இப்போ… முன்னாடி மாதிரி இல்ல,

நல்லா பேசறாங்க… உன் கிட்ட சொல்லனும்ன்னு நினைச்சேன்…

அவங்க மும்பைக்கு வந்தாங்க…

நேத்திக்குத்தான் பேசினேன்… அதுக்கு முன்னாடி நான் பேசவேயில்ல,

உன்கிட்ட சொல்ல நினைச்சேன்…

பயமா இருந்தது..” என அவளும் கொஞ்சம் தயங்கி தயங்கினாலும் சொல்லிவிட்டாள்.

அகிலனுக்கு அதிசியமே… எப்படி இப்படி… அபி பேசுகிறாள்… எப்போதும் செல்லம் கொஞ்சியே… காரியம் சாதிக்கும் குழைந்தைதானே என் தங்கை… இல்லையா… வளர்ந்து விட்டாளா… அவளுக்கு நல்லது கேட்டது தெரியுமா… என யோசனையோடு பார்த்தான்.

ஆனால், நேற்று அவளின் போனை கையாளும் போது தெரிந்ததே… அவனிடமிருந்து தினமும் மெசேஜ் வர, இவள்.. ஏதும் அனுப்பவில்லை எனபதும் தெரிந்ததுதான்.

ஆனாலும், அமரிடம் ஏதோ.. அவனால் ஏற்கமுடியவில்லை. மறக்க நினைப்பவளை… விடாமல் துரத்துகிறான் என தோன்றியது.

“இல்ல அபி… முதலில் என்ன செய்தான்” என்றான்… நிதானமாக.

அபி அமைதியாகத்தான் இருந்தாள்… அகிலனே “உன்னை எப்படியெல்லாம் காயபடுத்தினான்… தேவையா அபி இவன்… அது சொந்தமே ஆனாலும் வேணாம் அபிம்மா…” என்றான் எப்போதும் அவளிடம் பேசும் அன்பான குரலில்.

“இல்லண்ணா… அவங்களுக்கு முதலில் என்னை யாருன்னு தெரியாது ண்ணா, அதான் உன்கிட்ட கூட அப்படி பேசினாங்க…

அப்புறம் தெரிஞ்சி யோசிச்சு இது நடக்காதுன்னு வேண்டாம் நினைச்சாங்க… அதானே தவிர… என்னை விரும்பறேன்னு சொல்லி ஏமாத்தலையே… பொய் சொல்லலையே” என்றாள் பெண்.

அகிலன் “ஒரு முடிவு எடுக்க தெரியாதவன்… இப்போ மட்டும் எப்படி இது சரி வருமாம்….

அவனுக்கு வேற ஏதோ… பிளான் அபி, அதான்… நம்ம கம்பெனியிலும் உள் வர பார்க்கிறான்…

எனக்கு அவன் சரியா படல அபி… வேண்டாம்…

நேற்றுதானே பார்த்தான்…

அதெல்லாம் சரியாகிடும் அபி…

நாங்க உனக்கு நல்ல இடமா பார்ப்போம்…

இவனை விட மேலானா இடமா…

உனக்கு ஏற்ற இடமாக நாங்க பார்ப்போம் அபிம்மா…

நமக்கென ஓர் ஸ்டேட்ஸ் இருக்குடா…” என்றான் அவளின் அருகில் வந்து… அவளின் தலை கோதி.

இப்போது குழந்தைக்கு காதல் பிடிவாதம் வந்தது.. உணவு உண்டு கொண்டிருந்தவள்… அவன் கையை தட்டிவிட மனமில்லாமல் எழுந்தாள் விருட்டென… தன் அண்ணனை நேராக பார்த்து

“இப்போ நீ பேசறது சரியில்ல….

எனக்கு தெரியும் அவர,

நான் அப்பாகிட்ட பேசறேன்” என்றாள் திடமான குரலில்… அத்தனை உறுதியாக.

அந்த அபியை இதுவரை அகிலன் சந்தித்ததேயில்லை இத்தனை உறுதியானவளா என் தங்கை என தோன்றியது ஒரு நொடி… அடுத்த நொடி… “பார்க்கலாம்…

அதுவரைக்கும்…

என்கிட்டையே.. போன் இருக்கட்டும்…” என்றான்.

அபி “எதுக்கு, எனக்கு என் போன் வேணும்…” என திமிறி பேசினாள்.

“முடியாது…  

எங்க போகனும்ம்னு சொல்லு நான் கூட்டி போறேன்… 

என் எதிரில் பேசு… அவ்வளவுதான்…” என சொல்லி உணவு உண்ண அமர்ந்து கொண்டான். அபி எழுந்து போய் கைகழுவி வந்து அமர்ந்து கொண்டாள். என்ன செய்வது என தெரியாமல்.

அகிலன் எல்லாவற்றையும்… சிந்தித்தபடியே… அமர்ந்து கொண்டான். அதேதான் அபியும், என்னதான் என் அண்ணனுக்கு பிரச்சனை… அமர் ஒன்றும் தெரியாதவர் இல்லையே… அம்மாவின் சொந்தம்தானே… அப்பாக்கிட்ட சொல்லணும்… என அவளுக்கும் சிந்தனை செல்ல தொடங்கியது.

ஆக அடுத்து வந்த நாட்கள் எல்லாம் அகிலனின் கையே ஓங்கியிருந்தது. அபி மொத்தமாக தன் அண்ணன் அகிலனை இழந்து, ஒரு காப்பாளன் அகிலனைதான் உணர்ந்தாள்… போன் பேசும் போது தவிர மற்றபடி போன் அவனிடமேயிருந்தது…

எங்கும் அபி தனியே செல்ல அனுமதியில்லை, எல்லா இடங்களுக்கும் கூடவே வந்தான் அகிலன். மேலும் தன் அப்பாவிடம் பேசியும் தோல்வியே அபிக்கு.. அவர் “இல்ல அபி, முதலிலேயே… நான் சொல்லிவிட்டேன்…

இது சரிவராது என, அவர்கள் உன்னை பெண் கேட்டு வரமாட்டார்கள் அபி…

நீ அண்ணன் சொல்றமாதிரி கேள்…” என்றார் வேறு பேசவில்லை அவர். அபி ஒன்றும் செய்யமுடியாதவளாக தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

#$%##%#%#%#%#%#%#%##%

நாட்கள் சென்றது… சிலருக்கு அழகாய்… சிலருக்கு பரபரப்பாய்… சிலருக்கு காலில் கட்டிய இரும்பு குண்டாய்… சிலருக்கு கடமையாய்… அவரவர் நிலையில் நேரம் செல்ல…

ப்ரியாவசந்த் திருமணம் இனிதாக முடிந்தது… அமர் தன்னிடத்தை அழகாக நிரப்பினான்… நல்ல அண்ணனாக, உடன் வரும் மைத்துனாக வசந்துக்கும் தனது இருப்பை உணர்த்தினான் அமர்.

அதுவரையில் சுமதிக்கு மிக நிம்மதி. ஆனாலும் ஏதும் அமருக்கு அதரவாக ஒரு வார்த்தை பேசவில்லை. முரளிக்கு ஏற்கனவே தன் மகன் மீது அவ்வளவு நம்பிக்கை எனவே, அவன் பொறுப்பானவன் என மனதில் நினைத்துக் கொண்டார்.

கல்யாண வீடு… அடுத்த ஒரு வாரத்தில் இயல்பாக தொடங்கியது.

ப்ரியா பெங்களூர் கிளம்பினாள் வசந்துடன்… தன் அண்ணனை அழைத்தால் தன்னுடன் வரும்படி… அவனுக்கோ மனமேயில்லை அவளுடன் செல்ல “இல்ல டா… நீ இந்த தரம் போ… நான் ஒரு வாரம் கழித்து வரே, ப்ளீஸ்..” என வேண்டினான்.

அமருக்கு இப்போது தன் கவனமெல்லாம் அபியின் மேல் திரும்பியது… இந்த இரண்டு வாரத்தில், அபியை சற்று தள்ளி வைத்தான்.. திருமண வேலையின் மும்முரத்தில்…

எக்ஸாம் எப்படி எழுதுகிறாள் என போன் செய்து கூட அவனால பேச முடியவில்லை… அந்த போனைத்தான் அகிலன் அபியிடமிருந்து வாங்கி வைத்துவிட்டானே. பாவம் அமருக்கு தெரிய வாய்ப்பில்லை.

அமரினால் கல்லூரிக்கும் செல்ல முடியவில்லை… திருமண வேளையில். எனவே இன்று, வீட்டிலிருந்து எல்லோரும் கிளம்புவதால், இவன் சென்று அபியை பார்த்து வரலாம் என எண்ணி, ப்ரியாவிடம் மறுத்துவிட்டான்.

ஏனோ அமருக்கு எதோ சரியாகப்படவில்லை… அகிலன் ஏர்போர்ட்டில் பார்த்ததும்… கொஞ்சம் உறுத்த தொடங்கியது… மேலும் அவன் பேசாமல் சென்றது அதைவிட உறுத்தியது.

இது எல்லாத்தையும் விட… அமர் அவர்களுக்கு அனுப்பிய… காண்ட்ராக்ட் கான்செல் ஆகியது. எனவே ஒட்டு மொத்த குழப்பம் அமருக்கு. கூடவே ஒரு தெளிவு… தன்னை தள்ளி நிறுத்துகிறார்கள் என.

தடுமாற தொடங்கினான்… அமர், முன்பிருந்த நிலைகளை சுத்தமாக மறந்தான்… இப்போது என்ன என்ன என சிந்தனையே வந்தது..

காலையிலேயே அபியை பார்க்க கல்லூரி கிளம்பினான்… நேரம் சரியாக இல்லை போல, கொஞ்சம் லேட் ஆகிவிட்டது. அபியை காண முடியவில்லை.

மனமெல்லாம் கிடந்தது அடித்துக் கொண்டது அமருக்கு… கண்டிப்பாக எதோ நடக்கிறது அவளை சுற்றி… எனக்கு தெரியவில்லையா… நான்தான் அவளை சிக்க வைத்துவிட்டேனா…

எக்ஸாம் எழுத வந்தாளா.. வரலையா… யாரை கேட்பது… என தெரியாமல் விழித்துக் கொண்டு, கல்லூரியில் தனக்குண்டான இடத்தில் அமர்ந்திருந்தான் அமர்..

அவனுக்கு முத்துவிடமிருந்து போன் வரவும், அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் கிளம்பினான் அமர்… திருமண நேரத்தில் அலுவலகத்தில் இருந்த ஆடர்கள் எல்லாம் சற்று தங்கிவிட… இப்போ முடித்துக் கொடுக்க வேண்டிய நேரம்… ப்ரஷர் ஜாஸ்தியாக.. இவனும் அங்கு இருக்க வேண்டிய சூழல் எனவே… அமர் அங்கு கிளம்பினான்.

ஆனாலும், தனது வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வந்தான், மாலையில் சீக்கிரமே அவளை பார்க்க…

ஆனால், அபி, தன் அண்ணனுடன் காரில் சென்று கொண்டிருந்தாள்..

என்னை நிறைய தேடியிருபாள் போல, இப்போது அந்த கண்ணில் கூட பாவை அசையவில்லை… இவன் வரமாட்டன் என எண்ணிவிட்டாள் போல நிமிர்ந்து கூட பார்க்காமல்… எங்கோ வெறித்து பார்த்தபடி போறா.. என அமர் திண்டாட தொடங்கினான்.

கூடவே அகிலனை பார்க்க… அவனின் முகம் எதோ கோவத்தில், எதோ… இறுக்கத்தில்… இப்போது அமருக்கு புரிய தொடங்கியது, ஆக இவன்தான் ஏதோ… விளையாடுகிறான் என கோவம் ஏற தொடங்கியது.

அமர்… ஒன்றை நினைத்து ஏங்கும் ரகமல்லவே… தனக்கு தெரிந்த வகையில் அதை எடுத்துக் கொள்ளும் ரகம்… அதுவும் இப்போது எடுக்க நினைப்பது அவனனது அபியை.

எப்படியெல்லாமோ யோசித்து… அவளை மறக்க நினைத்து, தள்ளி வைத்து.. அவளையும் காயப்படுத்தி… கடைசியாக, ‘முடியாது அவளில்லாமல் என் வாழ்வு’ என தெரிந்து கொண்டவன்.

இப்போது அபியை எளிதில் விட்டுவிடுவானா… அதுவும் அந்த அகிலனிடம் தோற்று… ம்… அகிலன்தான் இப்போது அவனின் எதிரியானான்.. அமரின் தன்மானம் சீண்டப்பட்டது…

என்ன, நான் பேசினால் என்னிடம், திரும்பி பேசாமல் போவனா…

என்னுடைய.. கம்பெனி பிடிக்காதா… ஏதோ உப்புசப்பில்லா காரணம் சொல்லி அந்த கான்ட்ராக்ட் தரவில்லை…

இப்போது மொத்தமாக என் அபியை என்னிடம் நெருங்க விடமாட்டேன் என்கிறான்… என காதல் எப்போதும் போல கண்ணையும், கூடவே ஈகோ அறிவையும் மறைத்து.

இப்போது அமர் தனது அப்பாச்சியை விரட்டிக் கொண்டிருந்தான்… அபியின் வீடு நோக்கி…. இவன் எதிர்த்து, நான் தோற்பதா… என்ற எண்ணம் எங்கும் படர… ஏன் போகிறேன்… எதற்காக போகிறேன்… அவனுக்கே தெரியவில்லை…

ஆனால், அபியை பார்க்க வேண்டும் அவளிடம் பேச வேண்டும்… அவளை அந்த அகிலன் ஏதோ சொல்லியிருக்கிறான் அதான், அவள் முகம் சரியில்லை… பார்க்க வேண்டும் அவளை…

இவன் தடுத்தால் நான் அபியை விட்டு விடுவேனா… என அந்த எந்திர குதிரையை இவன் விரட்ட… சொல்லுபேச்சு கேட்கும் அதுவும் சமர்த்தாக சென்று… அபியின் வீட்டு முன் நின்றது.

கூர்க்க இவனை யாரென கேட்க… தனது விசிடிங் கார்ட் கொடுத்தான்.. அமர். ஆனால் நிற்கவில்லை… நேராக வண்டி அபி வீட்டு போர்ட்டிகோவில்தான் நின்றது.

கூர்க்க உள்ளே வர, அமர் வரவேற்பறை சென்றிருந்தான்… “அபி… அபி…” என இரண்டுமுறை அழைத்தும் இருந்தான் சத்தமாக, உரிமையாக…

“நதியிலே ஒரு இலை விழுகிறதே…

அலைகளில் மிதந்தது தவழ்கிறதே…

கரை சேருமா…

உன் கை சேருமா… எதிர்காலாமே…”

Advertisement