Advertisement

மின்னொடு வானம் நீ.. 14

அன்று பேசியதோடு சரி, அதன்பிறகு முரளியும் அமரிடம் பேசவில்லை.. புரிந்துகொள்வான் மகன், என்ற எண்ணத்தில் இருந்தார்.. ஆனால் அவன் புரிந்து கொண்ட நிலையே இப்போது வேறாக இருக்கிறதே…

அமர்க்கு முன்பிருந்த குழப்பம் கூட இல்லை எனலாம்… தெளிவாக இருந்தான்… முரளி, பெண்ணின் கல்யாண வேலைகளை பார்க்க.. அமர்.. தன் தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தொடங்கினான்..

இப்போது அலுவலகத்தில்… தங்களது பிரிண்டிங் யூனிட்டை விரிவாக்கினான்.. தங்களது குடோன்களில் ஒன்றை புதிய தொழில் நுட்பத்தில், பிரிண்டிங் அண்ட் டிசைனிங் டீம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தான்.

எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு அதில் ஆட்கள் எடுப்பது மிஷினரிஸ் வாங்குவது… என அந்த வேளையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். முத்து, அவர்களின் கம்பனி மேனேஜர் இப்போது GMமமாக பதவி உயர்வு பெற்றிருந்தார்…

அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து சுத்தமாக செய்தார்… கிட்ட தட்ட இந்த மூன்று மாதங்களில் முழு வேலையும் முடிந்துவிட்ட நிலை… இப்போதுதான் பேங்க் லோன் கிடைத்திருந்தது…

மோகனிடம் வாங்கியிருந்த வீட்டை… அடமானம் வைத்து எல்லாம் நடத்திக் கொண்டான் அமர்… கூடவே முரளி எல்லாம் செய்து கொடுத்தார் தன் தனையனுக்கு…

தான் தொழில் தொடங்கும்போது பணத்திற்காக பட்ட கஷ்ட்டத்தை தன் மகன் படகூடாது என எல்லாம் செய்தார், கொஞ்சம் கெடுபிடியாகவே.

எனவே முன்போல் அப்பா மகன் உறவு இருந்தாலும்… இப்போது புதிதாக பண கணக்கும் சேர்ந்தது.. சேர்த்துக் கொண்டான் அமர்.

இப்போது அமருக்கு, ஒரு வாய்ப்பு வந்திருந்தது… ஸ்டார்ட்டப்… கம்பனிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தனர் சுவாமிநாதனின் “சுவாமி மில்ஸ்”. அவர்களிடம் ஆடர் எடுத்து, செய்வதற்கான அழைப்பு அது.

பொதுவாக பனியன் தொழில் நுட்பத்தில்… புதியவைகளை அதிகம் ஏற்பார்கள்… அது ஏற்றுமதியை அதிகாரிக்கும்… பயர்களை அதிகம் ஈர்க்கும்.

எனவே பெரிய மில்கள் எல்லாம், ஏற்றுமதி ஆடர்களை எடுத்து செய்வது பெரிய ப்ராசஸ்… பொதுவாக ரா(வ்) மெட்டிரியல், டையிங், ப்ரிண்டிங், எம்ப்ராயிடரி.. பிசுறு வெட்டுதல், மடித்தல் என தனி தனி இடங்களுக்கு சென்று வரும்.. அதற்கு சிறு கம்பனிகளை பயன்படுத்திக்கொள்வர்.

எனவே அமருக்கு யோசனையாக இருந்தது… இதில் இறங்கலாமா… யாரென்று தெரிந்தால்… ஆடர் வருமா… வராதா… தொடர்ந்து செய்து தர வேண்டும்… இது சரி வருமா.. என யோசித்துக் கொண்டிருந்தான்.

பழைய இரண்டு யூனிட்டிலும் முடியாது… ஏற்கனவே எடுத்த ஆடர்கள் நிறைய இருந்தன. மேலும் முரளி… சுவாமி மில் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டார்…

எனவே முத்துவை வைத்து மூவ் செய்து பார்க்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தான்…

அப்படியே மாதம் சென்றநிலையில்… ஒருநாள் பரபரப்பாக அலுவலகம் வந்த அமர்… “முத்து சர்” என அவர் அரை சென்று அழைத்து வந்தவன் “அந்த சுவாமி மில்லுக்கு… நீங்க பேசுங்க… என்ன காண்ட்ராக்ட் கேளுங்க…

நமக்கு ஒத்து வருமா.. பாருங்க…

இப்போ யாருக்கும் சொல்லவேண்டாம், அப்பாக்கு கூட….

புரியுதா” என்றான் கடைசி வார்த்தையை அழுத்தி. ஆக அலுவலகமே இவன் பேச்சிற்கு தக்கதான் வேலை செய்தது.

ஆனால் வீட்டில், அலுவலகத்திற்கு முற்றிலும் எதிரான நிலை… அவனை நிமிர்ந்து பார்ப்பதில்லை அம்மா சுமதி, தான் நின்ற இடத்திலிருந்து இம்மியளவும் நகரவில்லை… அவனிடம் பேசுவதும் இல்லை… உன் வாய் திறந்து சொல்… ‘நான் யாரையும் விரும்பவில்லை’ என சொல், நான் பேசுகிறான் என்பதாக இருந்தார்.

அமருக்கு, அவரிடம் பேச வேண்டும், தன் நிலை சொல்ல வேண்டும், இதெல்லாம் இப்போது பெரிய விஷயமில்லை என பேசி புரிவைக்கதான் நினைக்கிறான்… ஆனால் அவர், அவனை அருகில் நெருங்க விடவில்லை.

எனவே, இருக்கும் வேளையில்… சற்று தள்ளிவைத்தான் அவரை… முரளி எப்போது கணக்கு வழக்கு… ஆடர்… டெலிவரி.. குறித்து இரவு மறக்காமல் கேட்பார்.. அவ்வளவுதான்.

நரேன் அவ்வபோது வந்து செல்வான்தான்… நண்பனாய், தன் தங்கையின் திருமணம் போல தானே வந்து ‘என்ன மாமா… ஏதாவது உதவி வேணுமா… சொல்லுங்க’ என வருவான்… இயல்பாய் அமர்ந்து ப்ரியாவை கலாய்த்துவிட்டு செல்வான்.

ஆனால், அமரிடம் முன்போல் பேச தயக்கம் வந்தது… தான்தான் எதோ அமரை தூண்டி விட்டாதாக எண்ணம் அதனால் அவன் அமரிடம் நெருங்குவதில்லை. அமர்க்கு இது தெரியவில்லை… ப்ரியா சொல்லுவாள்… ‘நரேன் ண்ணா  வந்தாங்க’ அப்படின்னு… அதனால் அமர், தானிருக்கும் பிரச்சனையில் நரேனை பெரிதாக எடுக்கவில்லை.

அமர்க்கு, ப்ரியாதான் தோழியாகினால்… தங்கையிடம் பொறுமையாக பேச தொடங்கினான்… ப்ரியாவும் எல்லாம் சொல்ல தொடங்கினாள்.. அடிதடி… என இருந்த பதின்ம வயது தாண்டி… அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தனர் அண்ணன் தங்கை இருவரும்…

கேலி கிண்டல்கள் எல்லாம் காணமல் போனது… அலுவலகத்தில் வந்ததும்… அவள்தான் இப்போதெல்லாம் உணவு பரிமாறுகிறாள் தன் அண்ணனுக்கு.

எனவே.. பேச்சு இயல்பாய் செல்லும்… அமர் “என்ன சொல்றார் வசந்த்..” என தொடங்கினால் போது, அவனால் நிறுத்தவே முடியாது, தன் தங்கையின் பேச்சை.

அமர் கதறுவான் “நிறுத்துடி… ரொம்ப பேசுற…” என்பான்.

ப்ரியா “போ ண்ணா… அவர் நான் பேசவே மாட்டேன்கிறேன்ன்னு சொல்றாரு..” என்றாள் முறைப்பாக..

அமருக்கு சிரிப்பாக வரும்… “நடத்து டா வசந்தா” என மனதில் நினைத்து ஏக்க பெருமூச்சு வரும் அவனிடம்.

ப்ரியாவும், வசந்த்… பெங்களூரிலிருந்து வந்தால், தன் அண்ணனிடம் தான் வந்து நிற்பாள் தன் பெற்றோரிடம் அனுமதி வாங்க… முரளி, ‘சரிம்மா… ஜாக்கரதையா போயிட்டு வா’ என்பார்… சுமதிதான் ‘வேண்டாம்… மாப்பிளை வீட்டில் ஏதாவது சொல்லுவாங்க’ என்பார்.

அமர் “அதெல்லாம் இப்போ இல்ல, நீ போயிட்டு வா, ப்ரியா… வசந்த்த, இங்க வந்து கூட்டிட்டு போக சொல்லு” என்பான் சற்று அதிகாரமாக. சுமதி ஒன்றும் சொல்வதில் அதன்பிறகு.

இப்படியான நெருகடியில் நாட்கள் நகர்ந்த நேரத்தில்தான் அபியிடமிருந்து அந்த வாட்ஸ்அப் வந்தது… அது, அவள் இந்தியா வருவதற்கான டிக்கெட். மும்பை வரை என இருந்தது… அவளின் ஒருத்திக்கு மட்டும் இருந்தது.

முதலில் அமருக்கு மெல்லிய கோவம் ‘அத கூட வோர்டிங்ல அனுப்பமாட்டாலா’ என, ஆனால் இவள் தனியாக வருகிறாள் என்ற செய்தி அனைத்தையும் தள்ளி வைத்து…  

இன்னும் ஒருவாரம்தான் இருக்கு… எப்போ அனுப்பறா பாரு… கொலைகாரி… புக்கிங் டேட்  என்பது நான்கு மாதம் முன்பே, புக் செய்தது என காட்ட… அமருக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை அப்படி ஒரு கோவம்…

தானும் அவசர அவசரமாக அதே விமானத்தில் மும்பை டு கோவை என  டிக்கெட் புக் செய்தான்.. முதலில் வேறுதான் நினைத்தான், ‘ரொம்ப ஓவர் த’ என தனக்குதானே சொல்லிக் கொண்டு மும்பைக்கு புக் செய்தான்.

அதை அவளிடம் சொல்லவில்லை. ஏன் அவன் அண்ணன் வரலையா… தனியா விடமாட்டானே… என உள்ளே ஓடத்தான் செய்ததது.

அடுத்து வந்த நான்கு நாட்களும் அவள் வருகிறாள் என்பதே ஒரு உற்சாகத்தை கொடுத்தது அவனிடம்… படிக்கும் காலத்தில் அப்பா., ஆசிரியர், நட்பு என எதற்கும் அடங்காமல் காற்றாக.. சுற்றிக் கொண்டிருந்தவன்…

இந்த இரண்டு வருடங்களில்… தனக்குதானே… தளைகள் இட்டுக் கொண்டு, சிலபல கட்டுபாடுகளுடன்… தனக்கென ஒரு வழி செய்துக் கொண்டிருக்கிறான்..

யாரும் செய்ய சொல்லியோ… கட்டுபடுத்தியோ இது நடக்கவில்லை.. தன்போல் கட்டுப்பட்டு நிற்கிறான்… இதுவும் நன்றாகத்தான் இருந்தது அவனுக்கு. அதில் அவன்… ஜெயித்தே தீர வேண்டிய நிலை… என்னெனில் தன்னை நம்பி இன்னொருவளும் உடன் வருவதால்.

அப்படி உடன் வருபவள், ஊரிலிருந்து வருவதால்.. எதோ தான் அவளுடன் அனுப்பி வைத்த பலமெல்லாம் திரும்ப வருவதாக உணர்ந்தான். அவன் அனுமதியின்றியே… கண்கள் சிரித்தது.. எப்போதும் எதோ கனவு லோகத்தில் இருந்தான்..

இன்று மாலை கல்லூரியில்… எப்போதும் கோச்சாக பயிற்சியளிப்பவன் இன்று நீண்ட நாள் கழித்து பசங்களுடன் விளையாடினான்… ஒவ்வரு பக்கமும் பால் பாய்ந்தது… அவனின் கால்களில் நடுவில் சிக்கிய பாலை பசங்களால் மீட்கவே முடியவில்லை… அத்தனை லாவகம்.

அம்மா தன் பிள்ளையிடம் எப்படி டா விளையாடின என கேட்கும் போது, எதோ பிள்ளைகள் எல்லாம் சொல்லுமே ‘விளையாடும் போது… நான் அடிச்சேன் ம்மா… செம்ம அடி…  அந்த தென்ன மரத்த தொட்டு வந்துது ம்மா… என கதை கதையாக அளக்குமே…’ சற்று குறும்பு பிள்ளைகள், அப்படி இவன் உண்மையாக விளாசினான் இன்று. இப்போது அமருக்கு சந்தோஷத்தில் தலைகால் தெரியவில்லை..

அந்த நாளின் அழகான விடியல்… இவன் அதிகாலையில் மும்பை செல்கிறான்… கொச்சினிலிருந்து மும்பை… கோவையிலிருந்து டைம்ங் ஒத்துவரவில்லை எனவே, கொச்சினிலிருந்து கிளம்பினான்.

வரும் போது அவளுடன்தான் கோவை… எனவே காலையில் டிரைவருடன் காரில் சென்று கொண்டிருந்தான்… முரளி கிளம்பும்போதுதான் கேட்டார்… “ஏன் டா… என்ன இப்போ மும்பை..” என்றார். இன்னும் பத்து நாளில் ப்ரியாவின் திருமணம்… இவன் இப்போது எங்கு செல்கிறான் என தெரியாது அவர் விழித்தார்.

அலட்டாமல் பொய் சொன்னான்… “காலேஜ் ஸ்போர்ட்ஸ் விஷயமா போறேன்… நைட் வந்திடுவேன்…” என்றான். பெய்யில்லாமல் காதல் இல்லையே.

முரளிக்கு சற்று சந்தேகம்தான்… இவன் வேலையே தலைக்கு மேல் இருக்கிறது… இதில் இவன் வேறு… காலேஜ் வேலைக்கு போறானா… என எண்ணினார்.

மும்பை சென்று அவளின் அரைவெல் ப்லைட் அனோன்ஸ்மென்ட் வர… பரபரப்பானான் அமர்.. கனக்ஷன் ப்ளைட் என்பதால்.. அவள் அங்கேயே அமர்த்து கொண்டாள்…

உள்ளே ஜே ஜெவென கூட்டம்… இவனுக்கு ஏனோ கோவம் கோவமாக வந்தது.. எல்லோரும் எப்போதும் வெளிநாடு சென்றபடியே இருப்பார்களா… என உள்ளுக்குள் முனகிக் கொண்டான். ஒருவழியாக உள்ளே சென்றான் அமர்…

கொஞ்சம் இயல்பாகியது அந்த இடம். அவள் அப்போதுதான் ஏதாவது வாங்கலாமே என லாபிக்கு அருகே வர… அமர் வந்தான் அவளை நோக்கி…. மைக்ரோ செக்குடு ஹல்ப் ஹன்ட் கேஸ்வல் ஷர்ட், பொறுத்தமான ஜீனில் அவளை நோக்கி வந்தான்..

பக்கவாட்டில் திரும்பு போது பார்த்த அபிக்கு, முதலில் அவன் என தெரியவில்லை… அவன் தானோ என திரும்பி பார்க்க, வந்தே விட்டான் அருகில்..

அமர் அமர் என வெளியே ஒரே சத்தம், அபி மிரண்டு போனாள்.. அவளின் இருதையம்தான் வெளியே வந்து கதறியது அவனை பார்த்ததும் போல, அமருக்காவது எதரியும் அவளை பார்ப்போம்மென.. அபி இவனை எதிபார்க்கவில்லையே… அப்படியே ஸ்தம்பித்து போய் நின்றாள் அதே இடத்தில்…

லேசான புன்னகையுடன் நெருங்கினான் அவளை… ஆயிரகணக்கான ஜனத்திரள்… அவளின் கையை கூட பிடிக்க முடியவில்லை அமரால்… “அபி…” என்றான் மென்மையாய்….

அபியின் புத்திக்கு ஏறவேயில்லை இவன் வரவு… “ம்…” என குரல் வந்தது அனிச்சையாய் அவளிடமிருந்து. முழு ஐந்து நிமிடங்கள் சென்றுதான் நிமிர்ந்தாள்.

அபியின் கண்கள் அவளையும் மீறி… அவனை பார்க்க தொடங்கியது அழகாக தெரிந்தான், இப்போது பளிச்சென… கொஞ்சம் எடை குறைந்திருந்தான்… முக்கியமாக அவன் கண்கள் சிரித்தது இவளை பார்த்து… என்ன செய்வது என தெரியவில்லை அவளுக்கு…

இவள் பயண களைப்பில் இருந்தாள்… கைகளில் லேசாக தலையை ஒதுக்கி ஒரு போணியை போட்டிருந்தாள்… போனா போகுதுன்னு ஒரு தோடு காதோடு இருந்தது… ஒரு முக்காகால் டெனிம்… மேலே புல் ஹன்ட் டிஷர்ட்… ஸ்போர்ட் ஷூ… கையில் ட்ரவல் பாக்… என சற்று சோர்ந்த மெழுகு சிற்பமாக தெரிந்தால் அவன் கண்களுக்கு…

இரு நொடிகள் சென்று மீண்டும்  “அபி…” என்றான் மெதுவாக…

அவள் இருந்த இடம் பார்த்து “என்ன வேணும்… கேக் ஏதாவது வாங்கவா…” என்றான், மிக சாதாரணமாக

அபிக்கு இன்னும் நம்பமுடியவில்லை அவன் வரவை.. அபி திரும்ப சென்றால், இருக்கைக்கு…

பின்னாடியே வந்தான் அவனும்… அவளின் நிலையில் இவன் இல்லையே “என்னாச்சு…” என்றான் தள்ளி நின்று…

குடிக்க என்பதாக செய்கை செய்து “காபி” என்றாள்.

அமரும் வாங்கி வந்தான்.. அவளின் எதிரில் அமர்ந்தான்… முன்னாடி இருந்த டேபிள் மேலே அதை வைக்க… அபி அசையாது அமர்ந்திருந்தாள்… அமருக்கும் என்ன பேசுவது என தெரியவில்லை…

இருவரும் ஒருவரை ஒருவர்… உணர… நேரம் வேண்டுமாக இருக்க… குலுக்கிய ஷாம்பையின் பாட்டிலின் நிலையில் இருவரும்… யார் திறப்பர்… பொங்கி வழியலாம் என்ற நிலை…

ஆனால் இடம், பொருள்… சூழல்.. இப்படி ஏதும் அவர்களுக்கு சாதகமாக இல்லையே… எனவே அபி தனக்குள்… ‘காம்..காம் ‘ என சொல்லிக் கொண்டாள்… பின்… மெல்ல நிமிர்ந்து, கரகரத்த குரலில் “எப்படி இருக்கீங்க “ என்றாள்.

ப்பா… அவளின் இரண்டு வார்த்தை ஆறுதல் தருமா.. அமர், கண்மூடிக் கொண்டான்… இப்போது எந்த இரைச்சலும் கேட்கவில்லை… உதடுகள் அவ்வளவு நேரமிருந்த சிரிப்பை தொலைத்தது… உணர்ச்சிகளால் அழுந்த மூடிக் கொண்டான் தனது உதடுகளை..

அமர், தொண்டையை செரும்மிக் கொண்டே… “என்னென்னமோ சொல்லனும்னு தோணுது… ஆனா, இப்போ… நல்லா இருக்கேன்… குட்…” என்றான். அழகான நிமிடங்கள்… கொஞ்சம் அவஸ்தையான நிமிடங்கள் கூட..

மீண்டும் மெல்ல சுதாரித்து காபியை கையிலெடுத்தால் அபி.. “உங்களுக்கு” என்றாள்.

“இல்ல நீ, குடி… எனக்கு வேண்டாம்” என்றான். அவளை இப்போது ஆராய தொடங்கினான்.. கொஞ்சம்… வளர்ந்திருந்தால், அதனால் உடல் ஒல்லியாக காட்டியது.. பயணத்தால் வந்த களைப்பு… இப்போது தன்னை பார்த்ததும் வந்த தடுமாற்றம்.. அதனால் அவளின் கன்னங்கள் சற்று தன்னிருப்பை தெரிவிக்க  அமர் அதில் தன் நிலையை தொலைக்க தொடங்க…

அவனின் பார்வை இவளை எதோ செய்ய… கைகள் நடுங்கியது, காபியை கீழே வைத்துவிட்டால்.. அமர் அவள் தனக்குத்தான் வைக்கிறாள் என நினைத்து கையில் எடுத்துக் கொண்டான்..

அபிக்கு அது புரிய என்ன செய்கிறான் என பார்த்திருந்தாள், கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை பார்த்துக் கொண்டே குடித்துவிட்டான் அமர்… இருவருக்கும் பேச்சு வரவில்லை… தடுமாற்றம்தான் வந்ததது.. அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

உள்ளுக்குள்… ஏதேதோ கேள்வி… அதை கேட்கும் சந்தர்ப்பம் இல்லை இருவருக்கும்… எதோ குழந்தைகள் விளையாடியது… யாரோ செக்யூரிட்டியிடம் எதோ வாக்குவாதம் என அனைத்தையும் அந்த       அரை மணி நேரத்தில் பார்த்திருந்தனர் இருவரும்.

ஒருவழியாக இவர்கள் செல்லவேண்டிய விமானத்தின் அழைப்பு வர… மெதுவாக சென்றனர்… உள்ளே இவளொரு இடம், அவனொரு இடம்…

அபிக்கு மனமெல்லாம் அடித்துக் கொண்டது… எதுக்கு வந்தாங்க..  என கோவம் பாதி, சந்தோஷம் மீதியாக அபி கலவையான நிலையில் கண்டுண்டு அமர்ந்திருந்தாள்.. விமானம் பார்க்க தொடங்கிய பத்து நிமிடத்தில்… மெல்ல இவளருகில் வந்து அமர்ந்தான் அமர்..

இந்த ஒருமணி நேர பழக்கத்தில் அவளின் கைகளுக்குள்… தன் கைகளை நுழைத்துக் கொண்டான். அவளின் கண்களிலிருந்து நீர் வழிய… அமரின் ஆண் மனம் கர்வம் கொண்டது.. என்மேல் நம்பிக்கை கொண்டவள்… எனக்கான கண்ணீர் இது… எனக்கான சந்தோஷ கண்ணீர் இது என எண்ணி அவளின் கண்ணீரை துடைத்தான்…

இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நிலை… என்ன பேசினார்கள் இதுவரை.. என்ன புரிந்து கொண்டார்கள்.. என எந்த தயக்கமும் இல்லை போல அவர்களிடம், எதை சொல்லி எதை புரியவைக்க… எல்லாம் இருவருக்கும் தெரிந்ததுதான்..

எனவே.. அவளை மாற்றும் பொருட்டு “எப்படி போகுது படிப்பெல்லாம்… என்னையே நினைச்சிகிட்டு… கோட்ட விட்டுடாத” என்றான் முயன்று வரவைத்த இலகுகுரலில்.

அபியும் “ம்… ம்கூம்….” என்றாள் கண்களை துடைத்தபடி..

“எப்போ எக்ஸாம் “ என்றான்…

“ஹேய்… உங்களுக்கு தெரியுமா… நான் அதுக்குதான் வரேன்னு…” என்றாள்.

“ம்…” என்றான் அந்த குழந்தைதனத்தை ரசித்தபடி…

அபி “அடுத்தவாரம்… “ என்றாள்.

பின் தடுமாரியவாறே.. கடைசியாக “நீங்க வருவீங்களா காலேஜ்” என்றாள்…

“எக்ஸாம் டைம் ல எனக்கென்ன வேலை” என்றான் ராகமாக..

“ச்சு…” என சலித்துக் கொண்டாள்..

“அட, எக்ஸாம் எழுதத்தானே வந்த… என்னய்யா பார்க்க வந்த.. என்னமோ இப்படி பீல் பண்ற…

என்னை மறக்கதானே… போன அங்க…” என்றான் சீட்டில் சாய்ந்து கண் மூடிக் கொண்டு… அந்த சீட்டில் இப்போதுதான் கம்போர்ட்டாக அமர்ந்தான்… அவளுக்காக தன்னை கொஞ்சம் அதனுள் திணித்து கொண்டவன்… இப்போதுதான்… கொஞ்சம் தளர்ந்து அமர்ந்தான்.

அபி “என்ன.. என்ன… எப்படி, யாரு போனா.. “ என கொஞ்சம் குரல் உயர்த்த..

அமர் சிரித்தபடியே… “சரி டி, நான்தான் துரத்தினேன்… போதுமா..” என்றபடி அவள் தோளில் கைபோட… அபி நெளிய தொடங்கினாள்.

அமர் சட்டென விலகிக் கொண்டான்.. அபிக்கு ஏதோபோல் ஆனது. அமைதியாக அமர்ந்து கொண்டாள். அமர் மீண்டும் கைகளை கோர்த்துக் கொண்டு “இப்ப பரவாயில்லையா” என்றான்.

அபி லேசாக சிரித்தாள்.. அவளுக்கு இப்போது எதுவும் தெரியவில்லை அவனின் முகம் வாட, பொறுக்கவில்லை எனவே, சரி என்பதாக அமர்ந்திருந்தாள்..

ஏனோ பேச்சு இப்போதும் தடுக்கி தடுக்கித்தான் வந்ததது.. பயம் தயக்கம் இருவருக்கும் இருந்தது. யோசித்து யோசித்து பேசினர்… ஆனால் கைகளை விளக்கவோ பிரிக்கவோ இல்லை இருவரும் அந்த பயணம் முழுவதும்.

இறங்கி அபி, முன்னே நடக்க… அமர் வந்தான் அவளுடன், லக்கேஜ் இடம் சென்று அவளுக்கு உதவி செய்ய… சரியாக வந்தான் அகிலன்.  

Advertisement