Advertisement

மின்னொடு வானம் நீ…
11
சுமதி… அவரின் விருப்பத்திலேயே இந்த அதிரடி பெண் பார்ப்பு படலம் என சொல்லலாம் அவர்கள் வீட்டில்… ஏனோ, முரளி கூட… “என்ன சுமதி அவசரம்… இன்னும் படிப்பு முடியலையே…” என வாதிட்டார்…
சுமதிதான் “அதெல்லாம் சரி வராது… 
ஏற்கனவே பட்டாச்சு… 
எல்லாம் காலாகாலத்துல… நடந்திடணும்… 
படிக்கட்டும், கல்யாணம் செய்துக்கிட்டு படிக்கடும்… யார் வேண்டான்னா…” என்றார் ஆதங்கமாய்.
முரளிக்கு முதலில் வந்த அந்த வார்த்தை… ஒரு சறுக்கலை தர.. பதறினார்  “என்ன சுமதி இன்னும் அதையே நினைச்சு பயந்துகிட்டு…
நம்ம பிள்ளைகள் எல்லாம் அப்படி இல்ல…” என்றார் இத்தனை வருடம் தன் மனைவியின் மனதில் இது இருக்கும் என தெரியாதவர்.
சுமதி “போனவங்க மட்டும்… யாராம்” என்றார் சொல்லியவர் உள்ளே சென்றுவிட்டார்.
சுமதி பொதுவாக வாய் திறக்க மாட்டார் மகா பற்றி… அவர் இந்த வீட்டில்தான் வாளர்ந்தார் என்பதை கூட தன் பிள்ளைகளுக்கு சொல்லி தரவில்லை… ஏனென்று ஆராயவும் இல்லை முரளி. கண்டுகொள்ளாமல் இருந்தார். அதற்கு மகாவின் வீடும் காரணம் தானோ…
முன்பே மகா உறவு தொடர்ந்திருந்தாலவாது பரவாயில்லை… அல்லது பெற்றோர் உடனிருந்தாலாவது… பேசி.. செய்து.. சமாதானம் ஆகியிருக்குமோ என்னமோ.. அவர்களும் இல்லை. 
அவர்களின் இறப்பிற்கு மகா வந்த போது கூட… மகாவின் கணவரோ… அவர்கள் வீட்டிலிருந்து யாரேனும் வந்திருந்தாள் கூட தொட்டு தொட்டு பேசியிருப்பார்கள்… 
மகாவின் வீட்டிலிருந்து எந்த அழைப்பும்.. சுமுகமாக உறவுக்கான கைகளும் வரவில்லை… எனவே முரளி எல்லாவற்றையும் மறந்துவிட்டார்… முக்கிய காரணம் மனைவிக்கு பிடிக்கவில்லை என்பதுதான்… இருந்தாலும்… தங்கை என்பவளும் நெருங்கவில்லைதானே…
இப்போது முரளிக்கு நீண்ட நீண்ட வருடங்கள் சென்று… தங்கையின் நினைவு வந்தது… இன்னும் தன் மனைவி அதை மறக்கவில்லையா… எனவும் தோன்றியது…
சுமது, உள்ளிருந்து வந்து “என்ன அப்படியே உட்கார்ந்திட்டீங்க, 
கேட்டீங்களா.. ப்ரியா கிட்ட… போட்டோ பார்த்தாளாமா” என்றார் ஆராய்ச்சியாய்…. 
முரளி, மற்றது தள்ளி வைத்தார், தன் மனைவியின் பயம் அவருக்கு சிரிப்பைதான் தந்தது… சிரித்தபடியே “ஏன் இவ்வளோ பயம்… அவளுக்கு ஒகே தான்” என்றார்..
“அப்போ சீக்கிரம் அவர்களை வர சொல்லலாம்… நாள் பார்த்திடுங்க” என்றார்…
“ஏண்டி… அவசரபடர… இன்னும் கேசவ அண்ணன்கிட்ட கூட சொல்ல வேண்டாமா… 
இந்த மாசம் முடியட்டும்…” என தொடங்க…
“அதெல்லாம் நான் ஒருநாள் லேசுபாசா… ஆரம்பிச்சு வைச்சாச்சு… 
நீங்க… தகவல் மட்டும் சொல்லுங்க… நிச்சையத்தப்ப… எல்லோருக்கும் சொல்லி செய்துக்கலாம்…
அமர் கிட்ட கேட்டீங்களா… மாப்பிள்ளைய பத்தி விசாரிச்சிட்டானா..” என அதற்கும் கொக்கி போட்டார். ஆக தன் மனைவி எல்லாவகையிலும் ரெடியாக இருக்கிறார் என புரிந்தது முரளிக்கு.
அதற்கு மேல்… தான், சொல்லுவதற்கு ஒன்றுமில்லை… அவளின் பயத்தை களைவதே முக்கியம் என நினைந்து, மகளின் திருமண வேலைகளை தொடங்கினார்.
அபி ஊருக்கு சென்ற நாள் அன்றுதான் ப்ரியாவை பெண் பார்க்க வந்தனர்… இருவருக்கும் பிடித்திருந்த நிலையில் எல்லாம் சுமுகமாக முடிந்தது.
மணமகன்… டெக்ஸ்டைல்ஸ் சம்மந்தமான பணிதான்… பெங்களூரில் வேலை… அதிலுள்ள மெஷின்களை சரிபார்ப்பு… அதற்கு பயிற்சியளித்தல் போன்ற வேலை.
எனவே… இப்போது அவர் வெளிநாடு செல்லுவதால்… ஒரு மாதத்தில் நிச்சையம்… பின், ப்ரியாவின் படிப்பு முடிந்து திருமணம்.. என முடிவு செய்யப்பட்டது.
ஆக அமர்க்கு அபி எங்கோ தூரத்தில் நன்றாக இருக்கிறாள் என தோன்றியது. இனி அவளின் நிலை குறித்து தான், கவலை பட கூடாது. மறக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்…
என்ன, பாட்டு… என்ற ஒரு விஷயம்தான் அவளை நினைவு படுத்தும் என எண்ணி.. எப்போதாவது கேட்கும் பாட்டை கூட நிறுத்திக் கொண்டான். 
ஆனால் எங்கே.. தன் தங்கை அணியும் ஜிமிக்கியும்… வாட்ஸ்ஸாப்பும்… கல்லூரியில், மாலைவேளையில்.. அந்த மரத்தடியும்… ஏன்! அவளை அடித்த பந்தும் அவனை, கொஞ்சம் இடரவே செய்யும்.. 
ஆனால்… நான் எல்லாம் கடந்தவன் என்ற மனநிலை வந்தவனுக்கு அபியை நினைவால் தள்ளி வைக்க தெரியவில்லை… இதுவும் காலம், சென்றால் காணாமல் போகும் என எண்ணினான்…
அப்படியே நாட்களை கடக்க தொடங்கினான்.  
அடுத்த இரண்டு வாரத்தில் நிச்சையம்… கொஞ்சம் சிறப்பாகவே செய்ய நினைத்தார் முரளி. அதில் அவர், பரபரப்பாக இருக்க… அமர்தான் இப்போது எல்லாம் அலுவலகத்தில். நேரமேயில்லை போலும் முரளி, நரேனை பார்க்க கூட… 
அன்று சபரியின் திருமண நாள். அமரின் வீட்டிற்கு வந்திருந்தார்… முரளிசுமதியிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக. எப்போதும் அமர் அதனை நினைவு வைத்திருப்பான்… இல்லை நரேன் சொல்லுவான்.
இப்போதுதான் நான்கு வருடம் முடிந்து இது ஐந்தாவது வருடம் தொடக்கம்.. முரளிக்கு, இந்த வருடம் மறந்து விட்டான் அமர்.
அமர் அலுவலகத்திற்கு கிளம்பி வர… அங்கு வரவேற்பறையில் அமர்ந்திருந்த சபரி.. “என்ன டா… அதுக்குள்ளே கிளம்பிட்ட… 
வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போ…” என்றான்.
அமருக்கு இப்போது இவர்கள் இருவரையும் பார்த்தும்தான் நினைவு வந்தது, இன்று இவர்களின் திருமண நாள் என… 
மறந்தேனே… என்பதை முகத்தில் காட்டியபடி “சாரி ண்ணா… அண்ணி நீங்களாவது சொல்ல மாட்டீங்களா… இந்த நரேன் கூட சொல்லல…” என எல்லோரையும் உரிமையாய் கடிந்து கொண்டான்.
சபரியின் கை பற்றி “மேனி மோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஆப்தே டே… ண்ணா… சாரி மறந்துட்டேன்… அண்ணி உங்களுக்கும்தான்… ஹாப்பி வெட்டிங் ஆன்வசெரி… பையன் எங்க…” என்றான்.
சபரியின் மனைவி கௌசல்யா “ தேங்க்ஸ் அமர்… இன்னும் தூங்கறான்…“ என்றவள் தானும் உரிமையாய் அமர் மீது குற்றபத்திரிக்கை வாசிக்க தொடங்கினாள்.
“எங்க.. சார், வரீங்க… இப்போல்லாம்… உங்களை கண்ணிலேயே காணல… 
உங்க அண்ணன் கூட சொன்னார்… அமர் பெரிய பிசினஸ் மேன் ஆகிட்டான்… முன்ன மாதிரி அவன் விளையாட்டு பையனில்லைன்னு சொன்னார்… 
இப்போ உன்ன பார்த்த உடன் எனக்கு நம்பிக்கை வந்திடுச்சி…” என்றாள். 
அந்த புகழ்ச்சியில், அமரின் முகம் லேசாக வெட்கம் கொண்டது… தன்னை தெரிந்தவர்கள்.. உண்மையான அன்பு உள்ளவர்கள் சொல்லும் வார்த்தைகள்… இனிக்கத்தான் செய்யும் போல “இல்ல அண்ணி… நீங்க வேற… சும்மா இருங்க” என்றான் அதிகம் பேசாமல்..
அதற்குள் சுமதி ஸ்வீட்டுடன் வந்தார் “இந்தா ம்மா.. சௌமி… “ என நான்கு கிண்ணங்களில் பால் பாயசம் எடுத்து வந்தார். சபரிக்கு பால் பாயசம் என்றால் மிகவும் பிடிக்கும்.. 
எப்போதும் அவரின் பிறந்த நாளின் போது… சுமதி இதை செய்துவிடுவார். இந்த இரண்டு வருடமாக திருமண நாளின் போதும் ஸ்பெஷல். அவ்வபோது செய்யும் போதெல்லாம் சபரிக்கு தனி கவனிப்பு நடக்கும் சுமதியிடமிருந்து.
எனவே சபரி பாயசத்தில் கவனமாக சுமதி “நானும், உங்க சித்தப்பாவும் பயந்துட்டே இருந்தோம்… என்ன பண்ணுவானோ… எங்கையாவது வேலைக்கு போறேன்னு நிப்பானோன்னு பயந்தேன்… எதோ அந்த முருகர் புண்ணியம்… நம்ம தொழிலுக்கே வந்துட்டான்….
அப்படியே… நல்லபடியா இவனுக்கும் கல்யாணம் செய்திடணும்…
ப்ரியா கல்யாணம் முடிஞ்சி, அடுத்து இவனுதுதான்… “ என்றார் பொறுப்பான அம்மாவாக.
சௌமியா “சொல்லுங்க சித்தி… பொண்ணு பார்த்திடலாம்… நரேனுக்கும், அமருக்கும் சேர்த்து… ஒரே வீட்டில் பார்த்திடலாம்” என்றாள்.
அமர் முகம் அமைதியை தவிர வேறு எதையும் காட்டவில்லை.. ஆண்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும்… இவர்களின் பேச்சில் தன் தலை  உருளவும்… காதை இங்கேதான் வைத்திருந்தான்… அமர்.
அப்போதுதான் அமரை பார்த்தார்… சபரி, முகம் இறுகி… எதையோ கட்டுபடுத்திக் கொண்டு அமர்ந்திருந்த அமரை… முன்போல் இல்லை இவன் எனதான் தோன்றியது… அவருக்கு. 
என்ன பேச்சு நடந்தது என சபரிக்கு தெரியவில்லை.. ஆனால் அவனுக்கு பிடிக்காத விஷயம் போல எனமட்டும் கண்டுகொண்டார் அவர்.
இந்த அமைதியெல்லாம் அவனுக்கு வரவே வராது… எதுவாக இருந்தாலும்.. நேரே பேசி.. வெட்டு ஒன்னு.. துண்டு ரெண்டு.. எனும் விதமாக பேசிவிடுவான். எனவே இறுக்கம்… அமைதி… பொறுமை எல்லாம் எப்படி என தெரியாது, அவனையே பார்த்திருந்தார் சபரி..
அந்த மோகன் விஷயத்திற்கு பிறகு… கிட்ட தட்ட ஒருமாதம் ஆகிறது அமரை பார்த்து… மேலும் அவனின் நிலையை தளர்த்தவும் அருகில் வந்த சபரி “என்ன டா… வீட்டு பக்கமே வரதில்ல.. என்னாச்சு” என கேட்டார் அவனை இயல்பாக்கும் பொருட்டு.. 
அமர் “ம்… எங்கண்ணா… சரியா இருக்கு…
வரேன்…” என்றே பதில் தந்தான். முகத்தில் கலையில்லை எதோ போல் ஒரு தோற்றம்… 
சபரி பொறுக்க முடியாமல் மீண்டும் “என்ன டா… ஏதாவது பிரச்சனையா” என கேட்க…
லேசாக சிரித்தான் அமர்… “அதெல்லாம் ஒண்ணுமில்ல ண்ணா… எதாவதுனா… உங்ககிட்டதான் வருவேன்” என்றான் ஒட்டாத குரலில் சொன்னான். எதோ மறைக்கிறான் எனதான் புரிந்தது சபரிக்கு..
சபரி “என்ன ஆச்சு.. அந்த மோகன் விஷயம்” என கேட்டார்… 
அமர், சொத்தை எழுதி வாங்கிட்டேன் என சொன்னால்… ஏதாகிலும் சொல்லுவார், பின் தன் தந்தையும் பிடித்துக்கொள்வார் என… எண்ணி “அப்புறம் வரேன் ண்ணா..” என பட்டும் படாமல் சொல்லி எழுந்து கொண்டான்.
“ம்மா.. கிளம்பறேன்… அங்க குனியமுத்தூர்… மில் வரைக்கும் போறேன்… டைம் ஆச்சு” என்றவன் 
மீண்டும் “சபரிண்ணா.. எங்கையாவது வெளிய போயிட்டு வாங்க… அப்புறம் பார்க்கிறேன்… பை அண்ணி, பை.. அண்ணா” என்றபடி சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
சுமதிக்கு அவனின் நடவடிக்கை பெரிதாக தெரியவில்லை.. சொல்ல போனால் சற்று பெருமை கூட… மகன் வேலை.. அலுவலகம் என பொறுப்பாக இருக்கிறான் என பெருமை. 
ஆனால் சபரிக்கு அவனின் ஒதுக்கம் நன்றாக தெரிந்தது… பேச வேண்டும் என நினைத்துக் கொண்டார்… இப்படி நல்லவர்கள் சூழ இருப்பது வரம்…
ஆனால் அமர் அடுத்த வாரம் வரை கூட சபரியின் கண்ணில் படவில்லை.. அமருக்கும் தெரியும்தானே… சபரியை பற்றி எனவே அவரிடமிருந்து ஒதுங்க தொடங்கினான்..
ஒருவாரம் பொறுத்த சபரி… நரேனை அழைத்து… சொன்னார்.. அவன் உன் கூட பேசறானா… இல்லையா… அவங்கிட்ட கொஞ்சம் பேசு… முரளி மாமா வேற கவலை படறார்… அந்த மோகன் விஷயம் என்னான்னு கேளு என சொன்னார்.
ஆனால் நரேனாலும் அமரை பார்க்கவே முடியவில்லை… எப்போது போன் செய்தாலும்… “சொல்லு மச்சி” என்பவன் நரேன், ஏதாவது பேச தொடங்கினால்  “வேலையிருக்கு அப்புறம் பார்க்கலாம்“ என்று விடுகிறான்.
இன்று நேரே அலுவலகம் வந்து விட்டான் நரேன்… கையேடு அவனை இழுத்து சென்றான்… ஓடி ஒழிபவன் சிக்கிக் கொண்டான் தன் நண்பனிடம்..
குளிருட்டப்பட்ட அறை… அதிக சத்தமில்லா… இடம்… சுற்றிலும் தினுசு.. தினுசாய்… கோப்பைகள்… அதை விட தினுசான மனிதர்கள்… நரேனும் அமரும் அந்த பெரிய ஹோட்டலின் பாரில் அமர்ந்திருந்தனர்.. 
நரேனின் ட்ரீட் இன்று… அப்படிதான் நரேன், சொல்லி அழைத்து வந்தான் அமரை…
அமர் இப்போது மிகவும் டெண்சுடாக… இருப்பதாக தோன்றியது அவனுக்கு… அவனுக்கு மட்டுமல்ல… வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அப்படித்தான் தோன்றியது.
தன்னிடம் கூட அவன், எதையும் பகிர்வத்தில்லை என சபரி சொன்ன பிறகுதான் தோன்றியது நரேனுக்கு, அதில் வருத்தம் கூட உண்டு அவனுக்கு… எனவே ஒரு வாரம் பொறுத்தவன் இன்று எதோ சொல்லி, பேசி அமரை தள்ளிக் கொண்டு வந்திருந்தான் பாருக்கு…
அவனிடம் எத்தனை கேள்வி கேட்டும் பதிலில்லை… இறுக்கமாகவே அமர்ந்திருந்தான் அமர். இளகும் தன்மையே இல்லை அமரிடம்.. எப்படி கேள்வி கேட்டும் அவனிடமிருந்து பதிலே வரவில்லை நரேனுக்கு.
அந்த தங்கநிற திரவம் நரேனுக்கு உதவியது… முதலில். கடைசியில் ஆப்பும் வைக்கும்…
நரேன், மெல்ல ஆரம்பித்தான் “என்ன டா ஆனார் அந்த மோகன்” என கேட்டான். அமர் கையில்.. மதுவுடன் அமர்ந்திருந்தான்… 
அமர் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.. “ம்… அவர் பொண்ணு பேரில் இங்க இருந்த வீட்ட… என் பேரில் எழுதிக்கிட்டேன்…” என்றான் அலட்டிக்காதா பாவத்துடன். 
அவனே தொடர்ந்தான் ”அவர் அடிச்சத விட… ஒரு மடங்கு கம்மிதான்… 
கூடவே… அந்த நகை, அதையும் அவங்க, அதான் அந்த பொண்ணு கொண்டு வந்து கொடுத்துட்டாங்க…
அப்புறம்தான் அவங்க அப்பாவ.. பார்க்கவே விட்டேன்… “ என்றான் ஒரு பெருமூச்சுடன்…
தானே மீண்டும் தொடர்ந்து “என்ன செய்ய… அமர் கொஞ்சம்… டேரர்… ஹா…ஹ… ஹா…” என சிரித்தான்… 
பின் மெல்லிய குரலில் வெறுமையாய் “பாவமாதான் இருந்தது…. 
என்ன செய்ய… இப்போ வரைக்கும் வட்டி நாங்கதானே கட்றோம்… ச்சு… 
பின்னாடி குத்துன்னா… இப்படிதான்…
பாவம் பார்க்க கூடாது…
அப்பா கூடவே இருந்திருக்கார்… ‘அப்பா, வேண்டாம் டா’ அப்படின்னார்… 
அவருக்கென்ன… 
இன்னும் ரெண்டு பேர் அடிச்சாலும்.. இவர ஏமாற்றினாலும் ‘அவங்க சூழ்நிலை என்னமோ…’ அப்படின்னு சொல்லி, தானே பணம் கட்டுவார்… அவ்வளோ நல்லவர் டா” என சிரித்தான் வெறுமையாய்…
இது நரேனையும் பயமுறுத்தியது… இந்த கடுமை… அது அவனை பயமுறுத்தியது… முன்பு இது போல் இல்லை இவன்.. பேசுவான்… யாருக்கும் அடங்கமாட்டான் அப்படிதானே தவிர, இந்த வன்மம் மாதிரி இல்லவே இல்லை அவன்… 
அவரை, மோகனை பணத்தை திருப்பி கொடுக்க சொல்லி, விட்டு விடுவோம்… இல்லை கேஸ் ஏதேனும் போட்டு கொள்ளலாம்… அல்லது… ஏதேனும் ப்ராப்பர்ட்டிக்கு பவர்ஆப் அட்ராணி வாங்கிக் கொள்ளலாம் எனதான் சபரி மற்றும் அவனின் அப்பா என அனைவரும் சொன்னது… 
ஆனால் அமர்… ஒரே தடாலடியாக… அவரிடமிருந்து எல்லாவற்றையைம் எழுதி வாங்கியே அவரை விட்டான்… அதுவும் முழுதாக தெரியாது விட்டு விட்டானா என… 
எனவே நரேன்… “அவர விட்டுட்டியா..” என்றான் ஆராய்ச்சியாய்..
அமர் லேசாக சிரித்தபடியே, கண்டு கொண்டான் தன் நண்பனை “என்ன, சபரிண்ணா, அப்பாவும் கேட்க சொன்னாங்களா” என்றான் நெத்தியடியாய்…
நரேனுக்கு கோவம் வந்தது… “என்ன டா… யாரும் உன்னை கேள்வி கேட்க கூடாதுன்னு நினைக்கிறீயா… 
அப்படியெல்லாம் விட முடியாது டா…. 
நீ என்ன பண்றேன்னே தெரியல வர வர…
நீதான் எல்லாத்தையும் சொல்லணும்…
தங்கச்சிக்கு நிச்சையம் அடுத்த வாரம்…
நீ என்னடான்னா… இன்னும் ஆபீசே கதின்னு கிடக்க…
வீட்டில் கூட பேசறதில்லையாம்… 
என்ன டா நடக்குது…” என்றான் முழுமூச்சாக நரேன் கடுமை காட்டினான்…
அமர் இப்போதும் அலட்டாமல்… “ச்சு… என்னடா சொல்லணும், எல்லாம் சரியா தானே இருக்கு… நீங்க… நினைக்கிற மாதிரிதானே நடக்குது… அப்புறம் என்ன…” என்றான் ஆற்றாமையாய் அவனின் எண்ணம் வெளிவந்திருந்தது.
நரேன்.. “நீயா ஏதாவது நினைச்சிக்கிட்டா… நாங்க பொறுப்பா… என்ன இப்போ உன் விருப்படி நடக்கல” என்றான்… ஆராயும் வண்ணம்.
அமர் சிரித்தான்… “மச்சான் டேய்… எல்லாம் என் விருப்படிதான் நடக்குது… யார் இல்லைன்னா… “ என்றான் சிரித்தபடியே, ஏனோ அந்த சிரிப்பு பொய் என அவனின் உடல் மொழி சொன்னது.
நரேன் “உன் லைப்ப நீயே கெடுத்துக்காதா அமரா… 
இதெல்லாம் பாசிங் க்ளவ்ட்..ஸ்….” என முடிக்க கூட இல்லை… அமர் எழுந்து விடு விடுவென வெளியே சென்றிருந்தான். 
நரேன் திணறி போனான்… பின்னாடியே… அவசர அவசரமாக பே செய்து ஓடினான். நல்லவேளை… இருவரும் ஒரே வண்டியில் வந்திருந்தால்… அமர் அங்கு பார்கிங்கில் அமர்ந்திருந்தான்…
அவனின் தோளில் கைபோட்ட நரேன்… “என்ன டா சொல்லிட்டேன்… உண்மைய தானே சொன்னேன்… 
நீயே சொல்லிட்டிருந்த விஷயத்த… நான் இப்போ உன் கிட்ட சொன்னேன்… அவ்வளவுதானே…
இதுக்கு உனக்கெதுக்கு கோவம் வரணும்…
என்ன டா.. நினைக்கிற சொல்லுடா…” என நரேன் உலுக்க…
அமர் தன்னிலையிழந்தான்…. “என்ன செய்ய… என்ன சொல்ல…
அவ இல்லாமா முடியல டா…
எதோ மாதிரி இருக்கு…
பக்கத்தில் இருக்கற வரைக்கும் தெரியல..
இங்கதானே இருக்கான்னு தோணிச்சு….
இப்போ…” என்றவன்… நரேனின் முகம் பார்த்து…
“அவ மட்டும் எனக்கு சொந்தமா, இல்லாமா இருந்திருந்தா… நான் இவ்வளோ யோசிச்சிருப்பனாடா…
சொல்லு… டா.. 
நீ சொல்லு…
அவ என்னோட… பலத்தை எல்லாம் எடுத்துகிட்டு போயிட்டா…
என்னை கோழையாக்கிட்டா…
சொல்லு, நான் இப்படியா…
சொல்லு…” என்றவன்.. நரேனின் கையிலிருந்த வண்டி சாவியை பிடுங்கிக் கொண்டான்.
பரபரவென வண்டி எடுத்தான்… நரேன் பின்னாடி அமர்ந்து கொண்டான்… என்ன.. எது… என காற்றை கிழித்துக் கொண்டு செல்லும் அவனிடம் கேட்க முடியவில்லை நரேனால். 
ஆனால்.. எதோ பேச போகி, எங்கையோ திரும்பிக் கொண்டது என மட்டும் தெரிந்தது அவனுக்கு. ஒன்றும் செய்வதற்கில்லாமல் அவனுடம் பயணித்தான் நரேன்.
நேரே வண்டி… வீடு நோக்கி சென்றது… நரேனிடம் வண்டியை கொடுத்தவன் உள்ளே சென்றான் வேகமாக… மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.. ப்ரியா உள்ளே படித்துக் கொண்டிருந்தாள் போல, ஹாலில் அமர்ந்து முரளியும் சுமதியும் ஏதோ முக்கியமாக பேசிக் கொண்டிருந்தனர்…
பெல் சத்தம் கேட்டு முரளி… கதவை திறக்க… வேகமாக உள்ளே வந்தான் அமர்.. அவனின் வேகத்தையும் அவனிடமிருந்து வந்த ஸ்மேல்லையும் வைத்தே முரளி “என்ன டா டிரிங் பண்ணியிருக்கியா” என்றார்..
அமர் “ஆமாம் இப்போ என்ன” என்றான் திமிராக.
உடனே அவன்.. தன் மகன் எதோ சரியில்லை என கணித்த சுமதி “நீ வா அமர்… சாப்பிட்டு படு” என அழைக்க…
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
சுமதி “சரி, சாப்பிட்டு பேசு” என அவனை குளிர்விக்க நினைக்க…
அமர் “நான் லவ் பண்றேன்…” என்றான் தடாலடியாய்.
முரளிக்கு அதிர்ச்சி… சுமதிக்கு கேட்கவே வேண்டாம்.. “என்ன டா சொல்ற” என அவனின் முன்னே வந்து உக்ரமாய் கேட்க… அதற்குள், வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்தான் நரேன்.
முரளி, நரேனிடம் “என்ன டா சொல்றான்” என நம்பாமல் கேட்க… நரேனுக்கு புரியவில்லை… என்ன நடந்தது என தெரியவில்லை…
அமரே தொடர்ந்தான், தன் தந்தையை பார்த்து  “உங்க தங்கச்சி பொண்ணுதான் வேறயாருமில்ல ” என்றான்.
“ஐயோ…” என அவன் கன்னத்தில் மாறி மாறி அடி விழுந்தது… வேறு யார் சுமதிதான் அடித்திருந்தார்… ப்ரியா உள்ளிருந்து வந்தாள்.
அமர் அசையாது நின்றிருந்தான்… அன்னையின் கைகள் சீக்கிரமே வலித்தது போல, அந்த முரட்டு வாலிபனை அடித்து… சீக்கிரமே அவன் மீதே விழுந்தார்…
யாருக்கும் ஏதும் புரியவில்லை, முதலில் இவனின் பேச்சில் அதிலேயே அனைவரும் நிற்க… சுமதி அழுகிறார் என நினைத்து முரளி உற்பட எல்லோரும் பார்க்க… அமர் தன் அன்னையை தோள் சாய்க்க… மயங்கினார் அவன் மேலேயே…
அமர் கைகளில் ஏந்தி சோபாவில் படுக்க வைக்க… 
முரளி “ப்ரியா தண்ணி கொண்டு வா” என்றார்.. அவளும் உள்ளே சென்று தண்ணிருடன் வர… துணியில் நனைத்து முகத்தில் லேசாக ஒற்றி எடுத்து மயக்கத்தை தெளியவைத்தனர்…
சுமதிக்கு முன்பிருந்த தைரியம் இல்லை போல… ஈனஸ்வரத்தில் “என் குடும்பத்தை இன்னும் இந்த சாபம் தொடருதா… 
ஏன் டா… இப்படி பண்ணின…
எது நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ…
அப்படியே அடி மாறாமா வந்து நிக்கிறியே டா…” என கண்களை மூடிக் கொண்டார்… விழி நீர்… வழிந்தது.
அமர் ஏதும் சொல்லாமல் மேலே சென்றான்… தனதறைக்கு. நரேனும் கிளம்பினான். அந்த இரவு… தூக்கமில்லா இரவு… யுத்தகளமாக இருந்தது. மௌனகளம்… அப்படிதான் இருந்தது.
“தூக்கம் என்பது 
தூக்கணாங்குருவிக் கூடு
யாரும் கலைக்கலாம்…
எவரும் கட்டிவிட முடியாது
தூங்ககூட வைத்துவிடலாம்.. 
உறக்கத்தை திரவமாக்கி…
ஊசிவழி ஏற்றிவிடலாம்…
அறுந்துபோன கனவுகளை…
முடிச்சுபோட முடியுமா?”(வைரமுத்து)
சுமதிக்கும் தன் மகன் குறித்த கனவு அறுந்தது… 
 
 

Advertisement