Advertisement

மின்னொடு வானம் நீ…10

அகிலன், ஏதும் வழியில் பேச்சுக் கொடுக்கவில்லை அமைதியாகவே அபியை கல்லூரியில் இறக்கிவிட்டான். அபி, நல்ல மனநிலையிலிருந்தாள்… காலை அவளின் மனநிலையை அவளின் குடும்பம் மாற்றியிருந்தது… அது தந்த இதம்… முகத்தில் தெரிய மெல்ல… கல்லூரிக்குள் நுழைந்தாள்.

இன்று அவளின் ஆடை தயாரிப்புகளை, மற்றவர்களுக்கு காட்டும் நாள்… மூன்றாவது வருடமாதலால்… மாணவர்கள், தங்களின் படைப்பை தாங்களே அணிந்து அறிமுகம் படுத்துவர்… அதற்கான தளம் அமைத்து கொடுத்திருந்தது கல்லூரி…

பரபரப்பாக… அந்த பதினெட்டு மாணவகளும் தயாராகிக் கொண்டிருந்தனர்… எட்டு மாணவர்கள் உற்பட… அழகான அரங்கம்… மெல்லிய வெளிச்சம் லேசான இசையோடு… கண்களை கவர்ந்தது அந்த அரங்கம்…

பேஷன் சென்னை என சொல்ல கூடிய ஒரு மாடல் மட்டுமே பெண்… மற்ற மூவரும் ஆண்கள்… நாற்பதுகளை கடந்தவர்கள்… துணியின் தரம்… அவர்களின் ஸ்டைல்… அதன் நுணுக்கம் என ஆராய மூவர்…

இவர்கள்.. ஒரு பெயர் பெற்ற கம்பனிகளின் நிறுவனர்கள்… எனவே மாணவர்களுக்கு இது முக்கியமான இடம்… சில கல்லூரிகள் மட்டுமே இது போல… மாணவர்களுக்கான தடம் அமைத்து தரும்… அதை தக்க வைப்பது மாணவர்களின் கையில் தான்.

தொடங்கியது அவர்களின் ப்ரைடு… இது துணியின் தரம் மற்றும் அதன் வடிவமைப்புக்கான இடம் என்பதால்… மெல்லிய ஒப்பனைதான்… இயற்கை முறையிலான துணிகளின் இழைக்கு முதலிடம் கொடுத்திருந்தனர் மாணவர்கள்… கண்களை உறுத்தாத வண்ணங்களில்… இயற்கை முறையில் சாயம் ஏற்றியிருந்தனர்…  அதற்கான அவர்களின் விளக்கங்கள்…. நடுவர்கள் கேட்ட கேள்விக்கான பதிகள்.. என நேரம் சென்றது…

அமர் அன்று காலை அட்டனன்ஸ்சுக்காக எப்போதும் நேரமே கல்லூரி வருபவன்… இன்று டீம் செலக்ஷன் வேலையிருப்பதால் பனிரெண்டு மணிக்குதான் வந்தான்…

கல்லூரி முதல்வர், மற்ற ஆசியர்களுடன் இன்று அவனுக்கு ஆலோசனை கூட்டம் இருந்தது. எனவே அமர் சரியான நேரத்திற்கு வர… அமரை “வெயிட் பண்ணுங்க தம்பி, ஒரு பதினைந்து நிமிடத்தில் வந்துடுவார்… சர்” என விளக்கம் தந்து அமர வைத்தார் ப்யூன்.

பத்து நிமிடம் கடந்தது… பதினைந்து நிமிடம் கடந்தது… யாரையும் காணம்… காண்டாணன் அமர்… எங்கே, இருக்காங்க… நான் போய் பார்த்துக்கிறேன்  என இவன் கார சாரமாக ப்யூன்னிடம் கேட்டான்…

அவரும் இரண்டு தரம் முதல்வரிடம் சொல்லிவிட்டார்… முதல்வரால் வர முடியாத நிலை… எனவே ப்யூன், அமரிடம் அந்த அரங்கத்தை கைகாட்டி நகர்ந்து கொண்டார்… 

அமர் கதவை திறந்து உள்ளே செல்ல… தேவலோகமாகதான் தெரிந்தது அந்த இடம்… மெல்ல வெயிலின் தாக்கம் குறைந்து கண்கள் இயல்பாக பார்க்கும் சக்தி பெற… முதல்வரைத்தான் தேடினான் அவன்..

ஆனால், விதி அவனை எங்கே விட்டது… கண்ணில் பட்டது என்னவோ… அவனின் தங்க தாரகைதான் தெரிந்தாள்… மேடையில்.. சைனீஸ் காலர் வைத்து பிங்கும் ஆலிவ் கிரீன்னும் கலந்த செக்குடு ஷர்ட்டில்… காபி ப்ரௌன்… ப்ன்ட்… கழுத்தில் ப்ரௌன்னும் வைட் நிறமும் கலந்த ஸ்டோல்… பாம்பாக சுற்றியிருக்க… எதையோ விளக்கிக் கொண்டிருந்தாள் அபி.. கையில் கத்தை, க்ளோத் சாம்பிள்ஸ்…

இரண்டு நிமிடம்…  சையாது நின்றான் அமர், பின் நிமிர்வாக உள்ளே சென்றான்… முதல்வரின் பின்னால் நின்று… “சர்… குட் மோர்னிங்” என்றான்… பின்னால் திரும்பி பார்த்தவரும்… “ஒ… சாரி அமர்… ஜஸ்ட்… பெவ் மினிட்ஸ்…” என எதோ சொல்ல…

அமர் “நோ ப்ரோப்லேம் சர்.. “ என சொல்லி அமர்ந்து கொண்டான் அவரின் அருகில்… கண்ணில் கூலருடன்.

அபி மட்டுமே கண்ணுக்கு தெரிந்தாள்… இவ்வளவு அருகில்.. மிகவும் பவ்யமான தோற்றம் அவளிடம்.. நேர் பார்வையாக… சபையை பார்த்து… ஏதோ.. சொல்லிக் கொண்டிருந்தாள்… பாவம் அவனிற்கு.. அமருக்கு, காது கேட்கவில்லை… இப்போது கண்கள் மட்டுமே வேலை செய்தது… வானம் பார்க்கும் கவிஞனான் அமர்.. ஆராய்ச்சியாளன் பாக்கும் வானத்திற்கும் கவிஞன் பார்க்கும் வானத்திற்கும் எத்தனை பெரிய வேறுபாடு… அந்த நிலை அமரிடம்…

கொஞ்சம் வளர்ந்துட்டாள்ள.. ஒரு இரண்டு வருஷம் இருக்குமா… இல்ல மூணு… பாரேன்… நான் பார்த்த குழந்தை முகம் இல்லை இப்போது தெளிவான.. சிந்தனை முகம்… நெளிநெளியாய்  கூந்தல்.. அழகான வளைவு நெளிவுகள்.. ப்பா… அமர்… என தனக்குள் சிரித்துக் கொண்டான்… ப்பா… இந்த ஸ்மைல்… மின்னலா இருக்கு..டி… அபி… யூ ஆர்… மைன்..

யூ ஆர் மைன்ன்ன்…  அபி… என மனம் பிதற்ற தொடங்கியது அமருக்கு…

அபி தன் வேலை முடித்து வந்து அமர்ந்து கொண்டாள்… உள்ளே, அப்போதுதான் அவளின் தோழிகள்… “என்னடி… உன் ஆளு வந்துட்டார் போல…” என வம்பிழுக்க தொடங்கினர்..

அபிக்கு துக்கிவாரிபோட்டது… “எங்க” என குரல் நடுங்க கேட்டாள்.

“ஹேய்… தெரியாதா… அங்க… வெளிய போய் பாரு…” என சொல்லி சிரித்தனர்…

அபி மின்னலாய் வெளியே வந்தாள்.. அந்த அறையிலிருந்து… எதிரே பார்க்க.. அங்குதான் அமர்ந்திருந்தான் அமர்… கண்களை மறைக்கும் கண்ணாடி அணிந்து. அபிக்கு, ஒரு நொடி திக்குமுக்காடி போனது… போடா.. என செல்ல கோவம் கூட வந்தது.

அபிக்கு… கண்கள் உப்பு முத்துகளை சிந்த தொடங்க… மனம் இதுவரை வாங்கிய காயங்களை மறக்காமல்… அவளிடம் சொல்ல.. மூளை கேட்டது… எதுக்கு வந்த… ஒ… இது.. இங்க தானே வொர்க் பண்றார் அதான்… சும்மா.. பிரின்ஸி கூப்பிட்டுருப்பாங்க… எனக்காக இல்ல… எதோ… வொர்க்.. சம்மந்தமா… வந்திருப்பாங்க.. என சட்டென மாறியது அவளின் வானிலையும்.

மெல்லிய சாரலாய்.. அந்த ரூமிலிருந்து வந்த அபியின்,  பார்வை தேடல்.. இவனை நனைக்கவே செய்தது… மெல்ல சுவாசம் தப்ப… ரசனையாய் நோக்கினான் தன்னவளை.. அடுத்த நிமிட அவளின், வெறுமை முகமும் தெரிய.. நிதர்சனம் தெரிய… அமரால் அதனை பார்க்க முடியவில்லை.. அதே ஏமாற்றம் அவனையும் தாக்க.. சட்டென இடம் விட்டு எழுந்து வெளியே வந்தான் அமர்…. 

அமர்க்கு அடுத்த அரைமணியில் முதல்வருடன் சந்திப்பு. அது முடியவே போதும் போதுமென ஆனது… அமர் ஓய்ந்து போனான்… ஒரு சுமுகமான முடிவு வரும் வரை விடவில்லை அமர்… தனக்கு வேண்டியதை நடத்ஹ்டிக் கொண்டே வெளியே வந்தான் அவன்… மனம் தெளிவாக தொடங்கியது…

அபியை தேடியபடியே  தனது வண்டி எடுக்க சென்றான் அமர்… ஆம், டூ வீலரில்தான் வந்திருந்தான் அவன்… தில்லிக்கே… ராஜாவானாலும் பள்ளிக்கு பிள்ளைதானே இன்னும் அவன்… எனவே இங்கும் டூ வீலர்தான்…

அரை கிலோ மீட்டர் சென்றிருப்பான்.. தனக்கு முன் அபி, தோழியின் வண்டியில் சென்று கொண்டிருந்தாள்… ஒரு நாலு வண்டி.. சேர்ந்தார் போல்.. ரோட்டை அடைத்துக் கொண்டு சென்றது…

அவன்பாட்டில் போயிருந்தால்.. அவர்களை ஓவர்டேக் செய்திருப்பான்.. எதோ விளையாடும் எண்ணம் போலும்… கிட்டேபோய் ஹாரன் அடித்தான், வேண்டுமென்றே வழி கேட்டு..

அபியின் தோழிகள்… “ஹேய்..” என கத்தினர் அமரின் வண்டி பார்த்து….. அபி “ஹேய்… வழி விடாதடி..” என்றாள்… அவளும் விளையாடும் எண்ணத்துடன்.

“என்னடி… உங்க சண்டைக்கு நாங்க பஞ்சாயாத்தா..

ம்… நடத்து நடத்து, இன்னிக்கு தீர்த்திடுவோம்…“ என்றாள் சிரித்தபடியே..

அமர் மீண்டும் விளையாட்டாய் ஹார்ன் அடித்தான்.. இப்போது நடு ரோட்டிற்கு வந்தனர்.. தோழிகள் நாலு அக்டிவா.. இரண்டு அப்பாச்சி பைக் வேறு.. எல்லாம் சேர்ந்து அமருக்கு வழிவிடாமல்.. அணை கட்ட..

அமர்… தன் ஹெல்மெட்டின் கண்ணாடி உயர்த்தி பார்த்தான் அனைவரையும்.. அவர்களின் விளையாட்டும் புரிய.. தானும், அபி பின்னால் அமர்ந்திருந்த வண்டி நோக்கி நகர்ந்தான்..

அபியின் காலில் இடிப்பது போல… பயம் காட்டிக் கொண்டிருந்தான் அமர்.. அபி அசராமல் அவனையே பார்த்திருந்தாள்.. அவனின் கண்கள் சிரித்ததா… இல்லை.. உரிமை கொண்டதா… ஏதோ புரியவில்லை…

ஆனால் அபியின் பார்வை மட்டும்… கேள்வி கேட்டது… அப்பட்டமாக குற்றம் சொன்னது.. அதை அவனால.. பார்க்கவே முடியவில்லை.. ஆனால் தவிர்க்கவும் முடியவில்லை.. பதில் சொல்லவும் முடியவில்லை.

அப்பாச்சி வண்டியில் வந்த பசங்க.. “ஹேய்… என்ன..  கோச்… பயங்கர… டிஸ்டன்ஸ்.. வேணாம் கோச்…” என கலாய்க்க தொடங்க.. அபிக்கு எதோ போல் ஆனது… எல்லோருக்கும் ஏதோ தெரிந்திருக்கிறது என எண்ணி.. தன் தோழியிடம் “போலாம் போடி… அவர சீண்டாங்க பசங்க…” என்றாள்.

தோழி “சரிதான் உன்னை யாரு பேச சொன்னா.. பசங்கதானே கேட்கறாங்க..” என வாதம் செய்ய.. அபி “முன்ன போடி” என கடிந்தாள்.. அதன்பிறகு  வண்டி வேகமெடுத்தது…

ஆனால் அமர் விடாமல் வேகமெடுத்தான்.. பசங்க பேசியது மனதில் ஏற.. அபியின் வண்டிக்கு முன் சென்று.. அந்த சாலையோர.. கபேக்கு சென்றான் அமர்… கூடவே அனைவரையும் ஹாரன் அடித்து கூப்பிட… மதித்து வந்ததது.. ஜூனியர் கூட்டம்..

அபிக்கு அதிரி புதிரி ஆகிபோச்சு… ஐயோ.. எதுக்கு கூப்பிடுறான்.. எல்லாம் வேற வராங்க… ஏதாவது சொல்லுவானோ.. சும்மாவே தள்ளி போன்னு சொல்லுவான்… சும்மா போனவன… இழுத்து விட்டுட்டனோ… என வந்து அமர்ந்தாள் தன் தோழிகளுடன்…

அமர் “கைய்ஸ்.. என்ன வேணும் சொல்லிடுங்க… இன்னிக்கு, என்னுது… நான் பே பண்றேன்..  சொல்லுங்க… “ என சொல்லி அமர்ந்தான் தனியே.. 

தேவையானதை அவர்கள் கலந்து பேசி சொல்லவே ட்வென்டி மினிட்ஸ் ஆனது.. அதுவரை வேடிக்கை பார்த்திருந்தான் அவர்களை.. பசங்க நால்வரும் வந்து அமர்ந்தனர் அவனுடன்…

கேர்ள்ஸ்… ஓரமான டேபிள்… அதில் ஆறு பெண்கள்.. அதற்கு பக்கவாட்டில் உள்ள டேபிளுள் பாய்ஸ்.. அமருடன் சேர்ந்து ஐந்து நபர்கள்… ஒருவன் ஆரம்பித்தான் “சாரி கோச்.. சும்மாதான்..” என எதோ சொல்ல வர…

அமர்.. “விடுங்க கைய்ஸ்… இப்போதான் யாரவேனா.. கிண்டல் பண்ண முடியும்.. எங்க வைச்சும் கேள்வி கேட்க முடியும்… நைஸ்…” என ஆரம்பித்தவன் தலையை உலுக்கி நிமிர்ந்து அமர்ந்தான்..

“பாருங்க… நானும் உங்கள விட… ஜஸ்ட்..” என தோள்களை உலுக்கி கொண்டான்.. “பெரியவன்… எதோ… டைம், பார்த்தேன்.. அவ்வளவுதான்.. பின்னாடி, நான் எந்த நம்பிக்கையும் தரல.. யாருக்கும்.. கிளியர்… எல்லாம் சரியாகிடும்… என்ஜாய் தி டே… ப்பா..

அங்க பாருங்க… பில் நம்பர் சொல்றாங்க.. “ என சொல்லி எழுந்தான்… அந்த ஸ்க்னக்ஸ் வாங்கி வர…

அபி அப்படியே… நிலத்தில் அமிழ்ந்து போனாள்.. சோர்ந்துதான் இருந்தாள்… ஆனால், மொத்தமாக சிதறடித்தான் அவளை.. முகம் நிமிர்த்த முடியவில்லை அவளால்.. உதடுகள் துடித்தது… நாலுபேர் எதிரில் என்ன சொல்லிவிட்டான்.. மனம் கூட வருமா… அதுவும் அமருக்கு.. என்னை தெரிந்தவனுக்கு.. பேச வருமா இப்படி பொதுவில்… விளகிதானே இருக்கிறேன்… அவன் பக்கம் கூட திரும்பவில்லையே.. அவளின் கண்கள் எதையும் சிந்தவில்லை… கைகள் தன் தோழியின் கைகளிலிருந்து வண்டி சாவியை வாங்கியது… அவன் கவுன்ட்டரில் நிற்க..

இவள் “நீ.. இன்னிக்கு மட்டும்.. வைஷாலி கூட போ.. ப்ளீஸ்…” என தன் தோழியிடம் சொல்லி விடுவிடுவென நகர்ந்தாள் அந்த இடம் விட்டு…

அமர் வந்து பார்க்க… “ஏன் கோச் “ என்றனர் அவளின் தோழிகள்..

அமர் ஏதும் சொல்லவில்லை.. தனது பானத்தை எடுத்து பருகியபடியே… “அவ கிட்ட என்னை பற்றி இனி பேசாதீங்க… கவனமா பார்த்துக்கோங்க… இன்னும் ஜாலியா இருங்க… பார்த்துக்கோங்க…” என்றபடியே எழுந்து கொண்டான்.

“பாய் கைய்ஸ்…” என சொல்லிக் கிளம்பினான். அதன் பிறகு எப்போதும் போல நாட்கள் சென்றது…

அடுத்த ரெண்டு மாதத்தில்… அபிக்கு விசா ரெடி… ஸ்டுடன்ட் விசா… டிசைனிங் சம்மந்தமான படிப்புக்காக… ஆதியே ஏற்பாடு செய்திருந்தான். தனது கல்லூரியில்… எனவே, எளிதாக கிடைத்தது..

மேலும்.. இப்போது சென்று அங்கு உள்ள கல்லூரியில் சேர்ந்து கொண்டு… வந்து, இங்கு இந்தியாவில் செமஸ்டர் மட்டும் கம்ப்ளீட் செய்துகொள்ள கல்லூரி நிர்வாகமும் ஒத்துக் கொண்டது… “ப்டாபட்….” பணம் எல்லா பக்கமும் பாய்ந்தது… ஒன்றே மதியாய் அபி, ஆதியுடன் வெளிநாடு கிளம்பினாள்…

பாட்டிதான் பாவம் தன் மகனை குடைந்து கொண்டிருந்தார்… “எதுக்கு இப்போ புள்ளைய அவங்க அனுப்புறீங்க…

கல்யாணம் செய்து கொடு, பரவாயில்ல…

இது.. எதுக்கு… இப்போ அங்க போய் படிப்பு…

இது நல்லா இல்ல.. சொல்லிட்டேன்” என பலவாறாக புலம்பினார்…

பெரியவர் அபியின், தாத்தா.. அவருக்கு எதோ புரிந்தது போல… பேரன் தன்னிடமிருந்து மறைக்கிறான் என உணர்ந்தார்… “போடம்மா… உனக்கு என்ன சரின்னு படுதோ செய்…

ஆனால்… சொல்லு, எதா இருந்தாலும் சொல்லு… உன் தேவையை கேட்க நான் இருக்கிறேன்… “ என்றார் புகடகமாக.. அபி மையமாக தலையசைத்து வந்தாள்.

அபிக்கும் இந்த மாற்றம் தேவையாக இருந்தது போலும்… கிடைக்காது என்ற தோற்றம் வந்தவிட்ட பின்… அதிலிருந்து வெளிவரவே நினைத்தாள்… நினைக்க வைத்துவிட்டான் அமர்.. அன்று..

மேலும் அவளின் குடும்பம்… எதையும் அவளுக்காக செய்யும் எனும் போது, அவர்களுக்காக, தான் இதை செய்யவும் நினைத்தாள்… இப்படி ஆயிரம் சமாதனான்கள்… பலபல… ஈடுகட்டல்களுடன் ஆதியின் அருகில்… போர்டிங் பாஸ் எடுத்து அமர்ந்திருந்தாள்….

எத்தனை இருந்து என்ன… அந்த ஜன நெரிசலான இடத்தில் கூட அபியின் கண்கள் அவன் டிபியைதான் பார்த்திருந்தது… இப்போது அவனும் அவன் தங்கையும் சேர்ந்து இருந்தது அந்த டிபி…

ஒரு பார்மல் உடையில் அவன் இருக்க… தங்கை எதோ திருமண உடையில்  இருந்தால்…’இது அவர் தங்கைன்னு நினைக்கிறேன்’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள்… இன்டர்நேஷனல் சிம் ஒன்று வாங்கியிருந்தாள் அபி… அதில் அவனின் எண்ணை சேர்த்தே வைத்திருந்தாள்….

கடைசியாக ஒரே ஒரு மெஸ்சேஜ்.. என கைகள் அலைபாய.. மனமோ.. தடுமாறித்தான் நின்றது… அன்னிக்கு அப்படி சொன்னான்… எனக்கு மட்டும் கோவமே வர மாட்டேங்குதே… ஏன் இப்படி அவன் பேர் சொல்லி துடிக்காத குறையாக இதயம் துடிக்குதே… வேண்டாம்… என மூளை அவளை கட்டளையிட..

அதெல்லாம் தோற்று போயிற்று காதலின் முன்… கன கச்சிதமாய்… தன்னுடைய இந்தியன் நம்பரில் இருந்து அவனுக்கு தனது புது எண்ணை அனுப்பினாள்…

அமைதியாக தனது டிபியை Aa என மாற்றி.. “எப்போவாது என் நியாபகம் வரும் போது கூப்பிடுங்க கோச்” என அனுப்பிவிட்டு போனை ஆப் செய்தாள்… அவளிற்கே தன் செயல்.. அதிகப்படியாகவும்… அனர்த்தமாகவும்தான் தெரிந்தது…

என்னையும் மீறி நான் அவனிடம் சிக்கி இருக்கிறேனே… என்ன செய்ய… என்னாலேயே விடுவித்துக் கொள்ள முடியாத நிலையில்..

நான், எங்கே சென்றால் என்ன… அவன் நினைவு என்னை தாக்காமல் இருக்குமா.. ‘ லேசான புன்னகை அவளின் முகத்தில்…

மனமொரு குரங்கேதான்..

“நிலம்.. நீர்.. காற்றிலே..

மின்சாரங்கள் பிறந்திடும்..

காதல் தரும் மின்சாரமோ…

பிரபஞ்சத்தை கடந்திடும்…

அமைதியான பயணம் தொடங்கியது… நீண்ட பயணம்.. வழி துணையாய் அமரின் நினைவும், AR ரஹ்மானும்தான் அபிக்கு.

அமர்.. அவளின் வாட்ஸ்அப் பார்க்கவே மறுநாள் ஆனது… அவன் சிரித்துக் கொண்டான்… புரிகிறது எனக்கு… என்னை தொலைக்க வெகு தூரம் போறீயா.. போ… போ… ம்..

அவன் சிரிப்பதை பார்த்து நரேன்.. “என்னடா… ஏதாவது ஸ்பெஷல் மெசேஜ்ஜா..” என கேட்க…

இன்று ப்ரியாவை பெண் பார்த்து சென்றிருந்தனர்… எனவே விழா முடிந்து இருவரும் அமைதியாக அதை அசைபோட்டபடி… எப்போதும் போல் மொட்ட மாடியில் அமர்ந்திருந்தனர்…

மிகவும் சந்தோஷமாகவே இருந்தான் அமர்… எதோ கணக்கிடுதளுடன் இருந்தான்.. நரேன் கூட…”என்ன டா ரூட் கிளியர்ன்னு… முகம் மின்னுதா” என்றான் மாலையில்…

அமர் “இருக்காதா பின்ன… “ என்றான் கலையாக சிரித்தபடி…

ஆனால், இப்போது எதையோ பார்த்து அமரின் முகம் வாடவும்… நரேன் கேட்க… அமர் கண்மூடிக் கொண்டே “ம்… அபி… அப்ரோட் போயிட்டாளாம்… மெசேஜ் பண்ணியிருக்கா… ச்சு… அவ்வளவுதான்..” என்றான் ஸ்ரத்தையே இல்லாமல்…

வலிகள் பொதுவானவை… இது..

தானே, அவளை நெருங்கி… தானே, அவளை கவர்ந்து… பின் தானே, அவளை கடிந்து… தானே, அவளை ஒதுக்கியும் வைத்த வலி…

நீ போபட அபி… நிம்மதியா இரு…

ஆனா.. எனக்கு.. வலி மட்டும்தான் மிச்சம்… போ… நானுனை நீங்க மாட்டேன்… நீங்கினால் தூங்க மாட்டேன்… என மெல்ல முணுமுணுத்துக் கொண்டான்…

“உடையாத சொல்லின் பொருளை…

மொழியிங்கு தாங்குமோ…

உறவாக அன்பில் வாழ…

ஒரு ஆயுள் போதுமோ…”

அன்பே.. அன்பே… பேரன்பே…

Advertisement