Advertisement

பூக்கள்-7

 

காயத்ரி…. அதன் பின் ரூமில்லிருந்து வெளியே வரவே இல்லை…. இரவு உணவிற்கு அழைத்த போது கூட வரவில்லை எனவும் தான் கல்யாணி வந்து பார்த்தார்……

காயத்ரியின் அறை களைந்து கிடந்தது…. எதையோ தேடுகிறாள்….. என தெரிந்தது…… அதனை ஒழுங்கு படுத்திக் கொண்டேயிருந்த போது தான் சரியாக குருமூர்த்தி கல்யாணிக்கு போன் செய்தார்…..

கல்யாணியிடம் “காலை…. 6 மணிகெல்லாம்…. கைலாஷ் வந்துவிடுவான் ம்மா…. கிளம்பி இருக்க சொல்….. என் மருமகளை….. “என்றவர்.

அங்கு போன் செய்து சொல்லிவிடுங்கள்….. மதியம் போலே இவர்கள் போய் சேர்ந்துவிடுவார்கள்…. என்றார் குறிப்பாக.

கல்யாணியும் “ண்ணா….. அதெல்லாம் சரியாக நடக்கும்…..” என்றார் கம்பீரமாக…… கல்யாணிகே ஆடர் போடுவதா…… என நினைத்த வண்ணம்…….   

கல்யாணி….. தங்கத்தின் மீது சற்று மோகம் அதிகம்….. அதனால் பழைய மாடல் முகப்பு வைத்த இரண்டு வடம் சங்கிலி தான் எப்போதும் அணிந்திருப்பார்…. அத்தோடு மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிந்திருப்பார்… உள் கழுத்தில் ஓம் டாலருடன் கூடிய சின்ன செய்யின்….

தன் நிலைமையை சொல்லும் விதமாக….. வைர மூக்குத்தி, வைரத்தோடு.. காதோடு சேர்ந்த மாட்டளுடன் தான் அணிந்திருப்பார்……

நல்ல சிவந்த தேகத்துடன்….. இரட்டை நாடி உடம்பு.. நல்ல உயரம்….. எப்போது எதையும் சமாளிப்பேன் என்னும் விதமான பார்வை……

உள்ளே வந்தது முதல் தன் அம்மாவை கவனித்துக் கொண்டிருந்த காயத்ரிக்கு……. பெண் பார்த்துவிட்டு போனதிலிருந்து தன்னிடம் சரியாக பேசவில்லை அம்மா… என அப்போது தான் தோன்றியது……

உடனே “ம்மா…” என்றாள் மெல்லிய குரலில்……

காயத்ரி அப்படி அழைக்கவும்…. இவர் திரும்பி “என்னடா….. என வாஞ்சையாக கேட்டகவும்…. இவளது பால்கனி வழியாக…. வந்த தெருவிளக்கின் ஒலி பட்டு அந்த மூக்குத்தி ஒரு மின்னல் வெட்டு வெட்டியது……

“ப்பா…. எப்போதும் ஜொலிக்கிரம்மா…. நீ…” என்றாள்.

“நீயும் அப்படி இரேன் யார் வேண்டாம் என்றது…..” என்றார்.

காயத்ரிக்கு தன் அம்மாவின் நிமிர்வு மிகவும் பிடிக்கும்…. இப்போது அது தன்னிடம் இல்லையோ….. என எப்போதும் போல் கவலை வந்தது…….

கொஞ்சம் பெரிய அறை காயத்ரியினுடையது…… இரு சுவர் முழுவதும் கபோர்டால் அமைக்கப்பட்டு…… நடுவில் கட்டில்…… அதனை ஒட்டி இருந்த…. அந்த ஈசி சேர்ரில் தான் ஆடிக் கொண்டிருந்தாள் காயத்ரி…..

தனது கையை…. அறை வாயிலில் நின்றுக் கொண்டிருந்த அன்னையை நோக்கி நீட்டவும்….. அவளின் அம்மாவும், தனது முகத்தில் அத்தனை சந்தோஷத்தையும் காட்டிக் கொண்டு அவளின் கையை பற்றி அருகில் உள்ள கட்டிலில் அமர்ந்தார்….     

தனது அம்மாவிடம் அந்த கேள்வியை கேட்டாள் காயத்ரி…… “ம்மா….. உனக்கு….. எப்படிம்மா….. ஐந்து பொண்ணு பொறந்தும் கோவமே வரலயா……” என்றாள்.

கல்யாணி… “இதென்னாடா…. இப்படி கேட்கற…… என்னாச்சு…..” என்க.

அப்போது சுப்ரமணியமும் உள்ளே வந்தார்…… “என்னடா….. உள்ளே போய் வெகு நேராமாகுதே இன்னும் காணோமேன்னு பார்த்தேன்…. அம்மாவும் பொன்னும் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்களா….” என்றவர் கட்டிலி வந்து அமர்ந்தார்….

அவரை கண்டவுடன் எழுந்து தன் அப்பாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு…. அம்மாவின் மீது கால் நீட்டிக் கொண்டாள்….. சுகம் தான்…… கடைக் குட்டிகள் எப்போதும் பெற்றவர்களின் காலை சுற்றும் குழந்தைகள் தான்…..

இப்போதும் அதே கேள்வியை தான் கேட்டால் இருவரை பார்த்தும்….. கல்யாணிதான்…. “இப்போது என்ன…. எங்கள் நான்கு பிள்ளைகளுக்கும் ஜாம்.. ஜாம்.. என திருமணம் செய்து வைத்தாயிற்று…. தோ.. இப்போது நீ தான் பாக்கி உனக்கும் பார்த்தாயிற்று…. இன்னும் 3, 4… மாதங்களில் செய்து வைக்க போகிறோம்….. எங்களுக்கென்ன….. இன்னும் ஐந்து பெண்ணை பெற்றிருந்தாலும்…. கவலை பட்டிருக்க மாட்டோம்…..” என்றார். நிமிர்வாகவே…..

இப்போது காயத்ரி எழுந்து தன் அன்னைக்கு முத்தம் வைத்து விட்டு மீண்டும் படுத்துகொண்டாள்….. இந்த நிமிர்வு தான் தன்னிடம் இல்லையோ என எண்ணி….

“நடக்குமா……” என்றாள் தன் தந்தையை பார்த்து….. கண்ணில் ஏக்கத்துடன்….. பதறித்தான் போனார் சுப்ரமணியம்….. அவர் கண்களும் கல்யாணியை பார்க்க……

இப்போதும் கல்யாணி தான்….. “அதெப்படி என் பெண் ஒன்று நினைத்து நடக்காமல் இருக்குமா….. “ என்றார்…. இப்போது குரலில் திமிர் வந்திருந்ததோ…..

“எப்படிம்மா…” என்றாள்.

“நீ இன்னும் குழப்பத்தில் இருக்கேன்னு நினைக்கிறேன் டா…… நாளைக்கு எல்லாம்.. பேசி இரண்டு பேரும் முடிவு பண்ணுங்க….. இது உன்னோட லைப்…..” என்றார் சற்று பொறுப்பற்று சொல்வது போல்…..                 

அதன் பின் காயத்ரி எதுவும் பேசவில்லை….. அமைதியாக இருந்தாள்….. கல்யாணி தான் “காலையில் 5 மணிக்கு எழுப்புவேன் எழுந்துக்கணும்…”என்றார். கண்டிப்புடன்.

“சும்மா மிரட்டாதம்மா…” என்றாள் பெண்…

சிரித்துக் கொண்டே எழுந்து சென்றுவிட்டார் கல்யாணி… சுப்ரமணியம் தான் அவளை தலை கோதி.. அவள் உறங்கிய பிறகே சென்று படுத்தார்.

அந்த இரவு  முழுவதும் காயத்ரிக்கு குறை தூக்கம் தான்…. ஏதோ கனவு….. ஏதோ யோசனை…. பின் கைலாஷ் முகம்…. தான் இத்தனை நாள் படித்து.. தேடிய வேலை நியாபகம்…. என அவளை பாடாக படுத்தி விடிந்தது…

கல்யாணி செல் முலம் அவளை எழுப்பி விட… உடனே எழுந்து ரெடியாகி…. ஹாலி வந்து அமர்ந்துவிட்டாள் 6 மணிக்கு முன்பாக….. செல்லி தான், காபி பிஸ்கட் எல்லாம் கொடுத்து பேசிகொண்டிருந்தார்…..

5:55க்கு எல்லாம் வந்துவிட்டான் கைலாஷ்….. ஒரே கால் கல்யாணிக்கு….”ஆன்ட்டி நான் கீழே வெயிட் பண்றேன்….. வர சொல்லறிங்களா….” என்றான்.

“சரிப்பா…” என்றார்.

அப்போது சரியாக….. சுப்பிரமணியம் வாக்கிங் முடித்துக் கொண்டு வந்தவர்….. கைலாஷின் காரை பார்த்துவிட்டு, கைலாஷை மேலே அழைத்து வந்தார்…. மேலே இருவரும் படி ஏறி வந்தனர் அப்போது…

காயத்ரியும் தன் அம்மா கூறிய உடன் “சரி ம்மா… பாய்…. “என கூறி வெளியே வரவும்.

கல்யாணி அவசரமாக தண்ணிர் பாட்டில் ஒன்றை அவள் கையில் கொடுக்கவும்….. கைலாஷ் அதை பார்க்கவும்…. சரியாக இருந்தது…. அப்படியே நின்றுவிட்டான்.

சுப்ரமணியன் “வாப்பா…. ஒரு கப் காபி குடிக்கலாம்….” என்றார்.

அதில் கலைந்தவன் “இல்ல அங்கிள்…. வரும் போது வரேன்….” என கூறி கட கடவென படி இறங்கி சென்று காரில் அமர்ந்துவிட்டான்…..

நல்லாதானே படியேறி வந்தான்….. இப்போது என்னாடா ஆச்சு என பார்த்திருந்தார்……. சுப்பிரமணியம்.

காரில் இருந்தவனுக்கு நிலை கொள்ளவில்லை…… ஏதோ நியாபகம்….. காயத்ரியின் மேல் ஏனென்றே…. தெரியாமல் ஒரு ஈர்ப்பு…… இப்போது, அவள் கிளம்பி இருக்கவும் ஒரு பர பரப்பு தான் அவனிடம்….

எல்லாம் நல்லபடியாக நடந்து விடுமோ…. நடக்க வேண்டும்….. நடந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வர….. உடனே…..  தனது எண்ணம் குறித்து அவனுக்கே ஒரு குறை வந்தது “க்கூம்…இப்போது வந்து என்ன சொல்ல போறாளோ… “என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை அவனால்……

அதே நினைத்திருந்தவன் முகம் சற்று இறுகி இருந்ததோ தெரியவில்லை….. ஆனால்,    

காயத்ரி அருகில் வர வர….. ஒரு இதம் பரவியது அவனுள்…. அதுவரை, ஏதோ கடமைக்காக வந்தவன் போல் இருந்தவன்….. அவளின் மலர்ந்த முகத்தை பார்த்தும் கொஞ்சம் இளகினான்….

மையில்ட் கிளி பச்சை கலர் ஸ்லீவ் லெஸ் சல்வார்…. க்ரே கலர் பாட்டம்…. இரண்டும் சேர்ந்தாற் போல் ஷால்…. ப்ளாக் மெட்டல் முத்து வைத்த ஜிமிக்கி காதில் ஆட….. அவசர அவசரமாக…. இவனை நோக்கி கிட்ட தட்ட ஓடி வந்தாள்…..                          

அந்த ரெட் கலர் வோல்ஸ் வோகன் அருகில் வந்ததும்….. அவனை நோக்கி “ஹாய்…” என்றாள்…. இயல்பாக….. நேற்றிலிருந்து சரியாக நடக்க வேண்டும் என்ற நினைப்பு இப்போது இவளிடம் வேலை செய்தது.

அவனும் “ஹாய் …. “ என்ற மில்லி மீட்டர் புன்னகையோடு நிறுத்திக் கொண்டான்.

அவள் காரின் உள்ளே அமர்ந்த உடன்….. இதமான வேகத்தில் நகர்ந்தது….. சிட்டி தாண்டி….. கொஞ்ச தூரம் செல்லும் வரையிலும் இருவரிடமும் அமைதி…..

கைலாஷிற்கு….. நான் அவளை நோக்கி….. பல அடிகள் வைத்தாயிற்று….. இனி அவளாக தான்.. தன்னிடம் வர வேண்டும் என்ற எண்ணம்.

காயத்ரிக்கு, அவன்  ஏதாவது பேசினாள் பாரவாயில்லை… பதில் சொல்லலாம்… தான் ஆரம்பித்து தப்பாகி விட்டாள் என்ற எண்ணம்…..       

இப்படியே யோசித்து யோசித்து…. ஒரு இடத்தில் நிறுத்தி காலை உணவை உண்டனர்…… அதன் பின்னும் அமைதி….. கைலாஷின் பொறுமை பறந்தது… காரும் தான்….

காரின் வேகம் இப்போது தான் கொஞ்சமாக தெரிய ஆரம்பிக்கவும்…. அவனை திரும்பி பார்த்தாள்….. ஏதோ இறுகி இருக்கிறான் என உணர்ந்தாள்…. அவனிடம்.. தான், தான் பேச வேண்டும் என உறுதியாக இப்போது புரிந்தாது… அவளிற்கு.

அன்று, அவனின் முகத்தில் இருந்த சிரிப்பும் மலர்ச்சியும்  நினைவில் வந்தது காயத்ரிக்கு….. இத்தனை இறுக்கம் இவனிடம் இருக்குமா….. என நினைத்துக் கொண்டே…. “என்னால்…. நான்… நாம் ப்ரிண்ட்ஸ்சா  இருக்கலாமா….” என்று ஒரு வழியாக கேட்டேவிட்டாள்.

கைலாஷ் திரும்பவோ…. அவள் தன்னிடம் தான் பேசுகிறாள் என காண்பித்துக் கொள்ளவோ இல்லை… ஆனால் அவள் பேசியது காதில் விழுந்தது தான்….. “அதென்ன ஏதோ மரத்துக்கிட்ட பேசற மாறி….. என் பேர் கூட சொல்ல கூடாதாமா.. அவளுக்கு…. பாக்கறேன் டி….. “ என உள்ளே நினைத்தவன் …. அதே நேர் பார்வை…. அதே இறுக்கத்துடன் அமர்ந்திருந்தான்…..

காயத்ரி திரும்பவும் தயங்கி தயங்கி ….. லேசாக “கை…கைலாஷ்….” என்று அவனுக்கு கேட்ட்க்குமோ….. கேட்காதோ…. அப்படி ஒரு குரலில் அழைக்க….

“ம்ம்….” என்றான். சாதரணமாக.

அவனிடம் பேசுவதற்கு ஏற்றார் போல் திரும்பி அமர்ந்து…. அவனை நோக்கி…அவன் கண்களை பார்க்கவில்லை….. அவன் விரல்களை பார்த்துக் கொண்டே…..

“நாம் பாஸ்ட் ப்ரிண்ட்ஸ் ஸா இருக்கலாமா…” என ஆரம்பிக்க…

வண்டியை ஒரு மரத்தின் நிழலில் நிறுத்தியவன்…….. அவளை நோக்கி திரும்பி அமர்ந்தான்…… இப்போது சொல் என்னும் விதமாக…….

திரும்பவும் திக்கி தெணறி அவள் கேட்க…… கைலாஷிற்கு கொதி நிலை…..விட்டாள், அவளை இப்போதே இழுத்து வைத்து நான் உனக்கு பிரின்ட்டா டி….. சொல்லு நான் உனக்கு பிரின்ட்டா டி …… என கேட்டு அவளின் உதட்டை சிறை செய்து…… இன்னும் என்னனமோ….. அப்படி ஒரு மனநிலை…. அதை எல்லாம்…… சமாளிப்பவன் போல்…. கண்ணை முடி லேசாக தனக்குள் சிரித்துக் கொண்டான்….   

இப்போது கைலாஷ் தளர்ந்தே போனான்….. என்ன தான் தன்னை அவன் மறைக்க நினைத்தாலும் குரலில் வேகம் வந்தே தீர்ந்தது….  “நான் எங்கு நிற்கிறேன்….. நீ ஏதோ lkg பிள்ளை போல்….. பிரின்ட்… பாய் பிரின்ட் என….. இப்போது தான் a,b,c,d படிக்கிற….. உனக்கு புரியாதாடி….. எல்லாமே நான் தான் உனக்கு…..” என அவளிடம் கதகளி ஆடினான்……         

ஆனால் அவன் பார்வை என்னமோ அவளின் உதட்டின் மேல் தான்…… இவன் குரலிலும் பார்வையிலும் தன் பின்னால் இருந்த காரின் கண்ணாடியில் ஒன்றினாள்….. அவள்.

பார்த்தவன் திரும்பிக் கொண்டான்….. அவளிடம் திரும்பவில்லை….. அவளின் பயந்த நிலை கண்டு தன் மேலேயே கோவம் வந்தது….. கைலாஷிற்கு

திரும்பிய படியே பேசினான்….. “இத விடு வேறு பேசலாம்….” என்றான்….. வரவழைத்துக் கொண்ட குரலுடன்….

இவளும் ஒரு நொடி அமைதியாகி பின் “நான் அதை தான் சொன்னேன் அப்போதே “என்றாள்.

“ம்ம்ம்….” என்று கூறிக் கொண்டே காரிலிருந்து இறங்கினான்…..

அருகிலிருந்த சர்பத் கடையை பார்த்தவன்….. “வரியா…..” என்றான் அதனை குறிப்பாக காட்டி…..

இவளும் அவனுடன் இணைந்து நடக்க…… கடைக்கு சென்றதும்…  அவளிற்கு இந்த சர்பத் வகை எல்லாம் தெரியாது என அவன் புரிந்து…”ஒரு நன்னாரி… ஒரு லெமன் சோடா “ என்றான்.      

குடித்து முடித்ததும்….. இணைந்தே காரிலேறி கிளம்பினர்……  இப்போது இவனே ஆரம்பித்தான்…”என்ன வேலை செய்யிறீங்க அங்க ….”என்றான். ரொம்ப ப்பார்மளாக…..

காயத்ரி இப்போது “என்ன மரியாதையா பேசுறிங்க…..” என்றாள்

“ஒ…. அப்போ இது பிடிக்கிலையா…… என்னடி பண்ணற அங்க….” என்றான்.

இப்போது அவள் முறைத்துக் கொண்டே சிரித்தாள்….

“ஈசி….. சும்மா…..” என்றான் சற்று சிரித்த முகமாக…

“ப்பா…. சிரித்தாளல்….. இவன் இன்னும் அழகாக இருக்கிறானே….”என நினைத்து சில நொடி அவனையே பார்த்திருந்தாள் அவள்….

“ம்…” என்றான் புருவம் உயர்த்தி…..

அவள் இது தான் சமயம் என “ப்ரிண்ட்ஸ்…” என கை நீட்ட…..

“போ… போடி…..”என கூறிக் கொண்டே அவள் கையை லேசாக தட்டி விட்டான்…..

இவளும் “போடா….. “ என லேசாக சத்தாமில்லாமல் சொல்லி, உதட்டை வளைக்க…..       

“ம்ம்ம்…. சொல்லு டி….” என்றான் அழுத்தி.

“அப்பாடா… என்னை பற்றி இப்போதாவது கேட்டானே…. என நினைத்தவள்….. தான் வேலை செய்யும் கனடா அரசு அலுவலகம் …. அதில் சேர்ந்து ஒரு வருடம் ஆன கதை…. எப்படி வேலை கிடைத்தது… இன்னும் 6 மாதம் சென்றாள் கிடைக்கும் பதவி… என சொல்லிக் கொண்டே வந்தவள்……  

தன்னை விலக்கி கொள்ளும் நோக்குடன்….. “அந்த கனடா அரசாங்கத்தில் வேலை கிடைப்பது எவ்வளோ பெரிய விஷயம் தெரியுமா… இப்போ சொல்லுங்க…. அதனால் தான் நான் என்னுடன் வரக் கூடிய ஒருவரை திருமணம் செய்ய நினைத்தேன்…. இது தவறா….   ”என அவனிடமே கண்ணகள் மின்ன காதில் ஜிமிக்கி ஆட…. தன் மலர்ந்த முகம் கொண்டு இவள் கேட்க…..

பாவம் கைலாஷின் தலை தான்… அவனிற்கு எதிராக….. அவளிற்கு சாதகமாக ஆடியது….

காயத்ரி “பார்த்திங்களா….. நீங்களே சரின்னு சொல்லிட்டிங்க….”என ஆர்வமாக சொல்ல…..

இப்போது சுதாரித்த கைலாஷ் அவள் உதடுகளை பார்த்துக் கொண்டே………. ”நான் சொன்னா சரியா இருக்குமா…” என்றான் ஆழ்ந்த குரலில்.. கண்ணில் சிரிப்புடன்….

காயத்ரி “என்… என்ன….” என கன்னங்கள் பள பளக்க திக்க…..

“சோ…. எனக்கான பதில் என்ன…. “என்றான் அதை ரசித்தவாறே…    

இப்போது இவள் தெளிந்தால் “நீங்க என்ன கார்னர் பண்றிங்க…..” என்றாள். அவனை பார்க்காமல்…..

“ஆமாம்…. ஆமாம்… யு கரெக்ட்….” என்றான்…… வேகமாக்

தொடர்ந்து அவனே “அங்கே யாரையாவது…..” என இழுக்க….      

“இல்ல…. ல்ல…. “ என அவள் மறுக்க….

“அப்போ அந்த வேலையை விட நான் உனக்கு கம்மி….. அதாவது…… “என அவன் பேச போக….

“அப்படியில்லை கைலாஷ்…… அதுவும்….. நீயும் இகோல் பாயிண்ட்….” இவள் ராகம் இழுக்க…..

“ப்பா….. தன்யனானேன்….. தன்யனானேன்….  என்ன பெருமை கைலாஷ் உனக்கு….” என தன்னையே அவன் மெச்சிக்கொள்ள…..

காயத்ரிக்கு குப்பென வேர்த்தது…. அய்யோ தாப்பா ஏதோ சொல்லிட்டோமோ….. என எண்ணி….. “கைலாஷ்..” என கூப்பிட…..

அவன் காதில் வாங்கவே இல்லை…. தன் போனில் கூகுளே மேப்பில் அட்ரஸ் பார்த்து வண்டி ஓட்டியவன்……

காயத்ரி “அப்புறம் பேசலாம் இன்னும் 10 மினிட்ஸ்ல உங்க சித்தி வீடு வந்துடும் ரெடியா இரு…… அஹ… அப்புறம் நல்ல யோசிச்சிக்கோ…. போகும் போது எனக்கான பதில் இட் மீன்ஸ் உண்டு….. இல்ல ….. சொல்லிடு……”      என்று அதே மில்லி மீட்டர் புன்னகை…. அவனிடம்.

கேட்ட காயத்ரிக்கு……  

“நான் மாட்டிக் கொண்டேன்….. உனில் மாட்டிக் கொண்டேன்….

உடலுக்குள் உயிரை போல… உன்னுள் மாட்டிக் கொண்டேன்…

நானே மாட்டிக் கொண்டேன்… உனில் மாட்டிக் கொண்டேன்….

உன் குரலுக்குள் இனிமை போல… உன்னில் மாட்டிக் கொண்டேன்…

உந்தன் சுருள் முடி இருளிலே….. கண்ணை கட்டிக்  கொண்டு தொலைகிறேன்….

என்னை நானே கண்டு பிடிக்கிறேன்…..    

உன் பார்வையில்… உன் வார்த்தையில்…..”

      

 

Advertisement