Advertisement

பூக்கள்-6

         சுப்ரமணியன் இப்போது தான் ஹோஸ்பிடலில் இருந்து வந்திருந்தார்…… மூன்றாம் நாள் தான் டிஸ்சார்ஜ் செய்தனர்…… அவரின் அக்காக்கள் எல்லாம் இவர் உடல் நலம் விசாரிக்க வந்திருந்தனர்…..

சுப்ரமணியத்திற்கு இது ஒரு தெம்பை கொடுத்தது…… ஆக நம் உறவுகள் நம்மை மறக்கவில்லை…. நாம் தான் உறவுகளை மறந்துவிட்டோமோ என என்ன வைத்து……

வீடே சற்று கலகலப்பானது போல் இருந்தது….. சுப்பிரமணியம் கல்யாணியின் மகள்கள் இருவர் சென்னை தான் இருப்பதால் அவர்களும் சேர்ந்துக்கொள்ள வீடு சற்று ஆட்டம் தான் கண்டதோ…..

காயத்ரிக்கு இது புதிது…. காயத்ரி அனைத்தையும் பார்த்திருந்தாள்…… முன்று அத்தைக்களும்….. அவளை மாறி மாறி தாங்கவும்…… தான் சிறு பெண் போலவே உணர்ந்தாள்…..

அந்த இரண்டு நாட்களில்….. அத்தைகள், அக்கா பிள்ளைகள் தான் அவளின் உலகமாக் தெரிந்தது….. பிள்ளைகளுடன் சேர்ந்து உண்டு உறங்கி…… கேம் விளையாடி….. என இனிமையாக பொழுது கழிந்தது……. அவளுக்கு…

அத்தைகள் எல்லாம் வந்த சமயம்…. அப்போது தான் அவளின் கடைசி சித்தப்பா…… சுப்ரமணியனின் தம்பி….. ஷண்முகம் தனது குடும்பமாக வந்தார்…..

காயத்ரிக்கு….. இவர்கள் அனைவருமே….. பேஸ் புக் ப்ரிண்ட்ஸ்….. ஆனால் நேரில்….. இவர்களை எல்லாம் தனது முதல் மற்றும் இரண்டாவது அக்கா கல்யாணத்தில் பார்த்தது தான், அதன் பிறகு அவள் இந்தியா வரவில்லை…….

படிப்பு…. நட்பு….. என காயத்ரியின் வட்டம்…… அங்கேயே பின்னிக் கொண்டது….. உறவுகள் யாவும் இப்போது பேஸ்புக்கில் மட்டும் இருந்தனர்.

அவர்களை எல்லாம் நேரில் பார்த்தாள்….. அதுவும் தன் அப்பாவின் சாயலில்  அவளின் சித்தாப்பாவை….. கொஞ்சம் இளமையாகவும், சற்று கம்பீரமாகவும்….. தன் அப்பாவையே மிரட்டி…. “என்ன அண்ணா…. உடம்பை பார்ப்பது இல்லையா…. இப்படி தான் இழுத்துக் கொள்ளவதா….. எது என்றாலும் என்னை கூப்பிட வேண்டடியது தானே….” என உரிமையுடன் கடியும் அவரை…. பார்க்க பார்க்க….

இத்தனை வருடங்களாக…. எங்கே போனார்கள் இவர்கள் எல்லோரும்…. என்று தான் தோன்றியது அவளிற்கு

அங்கே கனடாவில் எது ஒன்று என்றாலும்…. தாங்களே செய்துகொள்ள வேண்டும்…… இங்கு தன் அப்பாவிற்கு ஒன்று…… என்றதும் இத்தனை பேர் ஓடி வர்கிறார்கள்…… எவ்வளவு நாங்கள் இழந்திருக்கிறோம்…. என அவள் இப்போது தான் பார்த்தாள்………….

ஷண்முகம்….. அவளின் சித்தப்பா….. இயல்பாக அழைத்தார்….. காயத்ரியின் முதல் அக்காவை….. “ராஜி…. எப்படி இருக்க….. மாப்பிள்ளை நல்லா இருக்காறா…..” என்றவர்…..”இந்தம்மா…… ஸ்வீட்…… உள்ள வை…..” என்று இயல்பாக பேசவும்……

ராஜியும்…..” வாங்க சித்தாப்பா….. சித்தி…..” என்றவள் அவரின் கேள்விக்கு எல்லாம் பொறுமையாக பதில் சொல்லி… அவர் தந்தவற்றை வாங்கி உள்ளே வைத்து…..  அவர்க்கு தேவையானவற்றை செய்த பின்பே அமர்ந்தாள்…..

கடைசியாக தான் காயத்ரியை பார்த்தவர்…. உணர்ச்சி மிகுதில் கண்ணில் நீருடன் “என், பெண்ணையே நான் பேஸ்புக்கில் தான் பார்க்க வேண்டியுள்ளது……” என கூறவும்…. ஒரு பெருமூச்சு எல்லோரிடமும்…..

அதன் பின் தெளிந்தவர்கள்…. என்ன செய்கிறாள்….. படிப்பா… வேலையா… என ஆரமித்த பேச்சு…. எங்கோ சென்று…. கடைசியாக, பாலமுருகனிடம் வந்து நின்றது….               

காயத்ரிக்கு மூன்று அத்தைகள்….(பேரர்கள் வேண்டாம்…… நீங்க குழப்பிக்கொள்ள கூடாது என) அதில் முதல் அத்தை தான்….. சற்று வயதானவர், ஆனாலும் தம்பியை காண வந்திருந்தவர்…. “அவன் தான் எனக்கு வருடா வருடம் பொங்கல் சீர் அனுப்புவான்….. 50 ரூபாய்….. மூன்று வருடம் முன்பு கூட வந்தது……” என கண்ணில் வந்த நீரை துடைத்துக் கொண்டு சொன்னவர்….

“அவன் தான் இப்போது இல்லை….. எல்லோருக்கும் எல்லாம் செய்தான்…..” சுப்ரமணியத்தையும் கல்யாணியையும் ஒரு பார்வை பார்த்தவர்…… “அவன் பிள்ளைகள் மட்டும் இப்போது தனியா நிக்குதுக…..” என ஒரு ஆதங்கமாக சொல்லவும் செய்தார்…..      

கேட்டு கொண்டிருந்த சுப்ரமணியத்திற்கு… இது ஒரு பாதிப்பை தந்தது….. நிமிர்ந்து கல்யாணியை சற்று யோசனையுடன் பார்த்தார்….. பின்பு, தன் தம்பி மக்களை விட்டு விட கூடாதென உறுதி வந்தது அவரிடம்…. அதையே யோசித்தாவாறே அமர்ந்திருந்தார் சுப்ரமணியம்.   

அப்படியே அவர்களின் பேச்சு நீண்டு கொண்டே சென்றது….. பழங்கதைகள் பேசினார் அனைவரும்….. இதை எல்லாம் தன் சித்தப்பாவின் அருகே அமர்ந்து விழிவிரிய கேட்டுக் கொண்டிருந்தாள் காயத்ரி….. எங்கே இமைத்தால் கண்ணில் இருந்து நீர் விழுந்து விடுமோ என்று தான்….

கல்யாணி பண விஷயத்தில் கொஞ்சம் கெட்டி……, மற்றபடி  உறவுகள் வேண்டும் தான், பணம் என வரும் போது சற்று தள்ளி தான் இருப்பார்……

இங்கு எல்லோரும் மிக மிக நீண்ட நாட்களுக்கு பின் ஒன்று கூடியதால் ….. அனைவரும் உண்ண….. ஹோட்டல்க்கு சென்றனர்……. காயத்ரியின் அத்தைகள் மூன்று பேர்…. சுப்ரமணியம் வரவில்லை என்றவரையும் வற்புறுத்தி…… இட்லி மட்டும் சாப்பிட்டா போது என கூற அழைத்து வந்தனர்….. , ஷண்முகம் அவரின் மனைவி…… பெண் மாப்பிள்ளை இரு தம்பதி, அவர்களின் பிள்ளைகள்….. கல்யாணி, அவர்களின் அண்ணன் அண்ணி, கடைசியாக ஷண்முகம் சித்தப்பாவின் மகன்கள் இருவர் வந்து ஹோட்டலில் சேர்ந்து கொண்டனர்….. கிட்ட தட்ட 25 பேர்…… அந்த சைவ உணவகமே மேலே நிரம்பி வழிந்தது……

அனைவர்க்கும் இது ஒரு மறக்க முடியாத இரவாக அமைந்தது….. அனைத்து இளையவர்களும் தங்களுக்குள் செல்பி….. எடுத்து,  நம்பர் கொடுத்து வாங்கிக் கொண்டனர்……..

உடனே fb யில் அப்டேட்…… செய்தனர்…… இவர்களில் சித்தப்பாவின் fb இருப்பவள் அகல்யா……. உடனே அவளும் கமெண்ட்டில் “நானும்” என போடவும் தான் அனைவருக்கும்…… அய்யோ என்றானது……      

உடனே போனும் செய்தாள்…… தன் சித்தப்பாவிற்கு…… அனைத்து அத்தைகளிடமும் பேசியவள்…… தனது பெரியப்பா பெரியாம்மா ….. அனைவரிடமும் பேசி கடைசியாக காயத்ரியிடம் போன் வந்தது…….  

காயத்ரிக்கு அகல்யாவை தெரியவில்லை…… அகல்யாவிற்கு காயத்ரியை நன்கு தெரிந்தது….. எடுத்த உடன் “ஹாய்….. க்கா….. எப்படி இருக்கீங்க…… “ என ஆரம்பித்து பட படவென பேசினால்……

காயத்ரி தான் ஏதோ தெரியாதவரிடம் பேசுவது போல் “ஆம் இல்லை” என பதிலளித்தால்…… அகல்யாவே அதனை புரிந்து கொண்டு….. “என்னை உங்களுக்கு தெரியாததால இப்படி பேசுறிங்க…… அடுத்த தரம் நல்லா பேசணும்….” என கட்டளையுடன் தான் போனை வைத்தாள்…. அகல்யா…..

காயத்ரிக்கு இரு நாட்களில் தான் தெரிந்தது தனக்கு எத்தனை உறவென…… அதுவும் இத்தனை நாள் அவர்களை காணாது இருந்ததும்…… இப்போது அவர்களின் அன்பில் நனைவதும்…… என காயத்ரி அனைத்தையும் தனக்குள் உள்வாங்கி கொண்டிருந்தாள்

இத்தனை விஷயாங்கலும்….. இரு நாட்களில் நடக்கவும் அதை ஏற்க்கவும் முடியாமல்….. ஒதுக்கவும் முடியாமல் திணரிக் கொண்டிருந்தாள்…… காயத்ரி.

அனைவரும் இருந்த இரண்டு நாட்களும் நேரம் சென்றாதே தெரியவில்லை காயத்ரிக்கு…… அவர்கள் எல்லோரும் கிளம்பிய உடன்…. வீடே “விரோச்சு….” ன்னு இருந்தது அவளிற்கு.

அன்று காலை தன் அப்பாவிற்கு மாத்திரைகள் கொடுத்துக் கொண்டிருந்தாள்….. அப்போது வந்தமர்ந்த கல்யாணி காயத்ரியை பார்த்தாவாறே….. தன் கணவரிடம்…… “என்ன முடிவு சொல்வதுங்க குருமூர்த்தி அண்ணாக்கு…..” என மெதுவாக ஆரமித்தார்.

சுப்ரமணியமும் எதுவும் சொல்லாது காயத்ரியை பார்க்க….. தன் அப்பாவின் அமைதியை உணர்ந்து இவள் நிமிர்ந்து பார்க்கவும்…… தான்….. “ஏம்மா….. உனக்கு பிடிக்கலையா…..” என்றார்…. அவர் குரலில் அப்படி ஒரு வருத்தம் .

காயத்ரி…”அப்பா நீங்க யாரை பார்த்தாலும் எனக்கு ஓகே தான்….. ஆனா, நான் இந்த இடத்துல பொருந்தி போவேனா….. தெரியலைப்பா….. என்னோட ஜோப்….. என் ப்ரிண்ட்ஸ்….. என்னோட இடம்ன்னு…. எல்லாத்தையும் விட்டுட்டு இங்க…. வந்து , அது என்னால முடியும்னு….. நினைக்கிறிங்களா……” என்றாள் அவரையே கேள்வியாக….     

“ம் ….கூம்….” என்றவர். “இந்த எண்ணம் சரின்னு நீ நினைக்கிறியா…..” என்றார். காயத்ரி திரு திருவென முழிக்க……

அவரே தொடர்ந்து….. “நீ இப்போ யோசிக்க வேண்டியது கைலாஷ பத்தி மட்டும் தான்….. அவர உனக்கு பிடித்தால்…… இதெல்லாம் சாதாரணம் என்பதாக உனக்கே தோன்றும்…… அதனால…… அத மட்டும் யோசிச்சு எனக்கு சொல்லு போதும்……” என்றவர்.  “நீ உள்ளே போ” என்றார் காயத்ரியிடம்.

காயத்ரி திரும்பவும்…. வாசலில் அழைப்பு மணி ஒலித்தது….. காயத்ரி சென்று கதவை திறக்கவும்….. குருமூர்த்தி தான் நின்றிருந்தார் வாசலில்….

“வாங்க அங்கிள்…..” என்றவள்…. அவரை உள் விட்டு இவள் கதவை சாற்ற போக…. கதவு சாற்ற முடியவில்லை…… இவள் வேகமாக அழுத்த பார்க்க….. அப்போதும் முடியவில்லை

தன் ஒற்றை கையால் கதவை திறந்து கொண்டு வந்தான் கைலாஷ்…

கதவின் பின் இவள்….. அதற்கு முன் அவன்…. கதவு மட்டுமே நடுவில்….. இவனை பார்த்த நொடி சொல்லாமல் மலர்ந்தது அவள் கண்ணும்…. உதடும்….. அதை ஒரு நொடி பார்த்தவன்…..

அவளிடம் செல்ல இருந்த மனதை அடக்கி “என்ன நான் இப்படியே போய்டவா….” என்றான். சம்மந்தமே இல்லாமல்.

இவள் என்ன என அதிர்ந்து பார்க்க….. அந்த ஷண நேரத்தில் அவளை கதவோடு சேர்த்து நகர்த்தி விட்டு உள்ளே வந்தான் கைலாஷ்.       

வந்தவனை அனைவரும் வரவேற்று அமரவைத்து…. கல்யாணி “என்ன மாப்பிள்ளை சாப்பிட்ரிங்க …” என்க.

“ஆன்ட்டி…. என்ன கைலாஷ்னே கூப்பிடுங்க….. ப்ளீஸ்…..” என்றான் ஒதுக்கமான குரலில்…..

கல்யாணியின் முகம் சற்று வாடி தான் போனதோ….. பெண் பார்க்க வந்த போது எவ்வளவு உரிமையாக பேசினான்…. என தான் நினைக்க தோன்றியது அவர்க்கு….. சங்கடமான அமைதி அனைவரிடமும்.

பின் அவனே நிலைமை உணர்ந்து  “எனக்கு காபி போதும்…” என்றான். உடனே அவனது போன் அடிக்கவும்…”ஒரு நிமிஷம் வந்துடன்றேன்…..” என  எழுந்து வெளியில் செல்ல…… காயத்ரி அங்கேயே தான் நின்றிருந்தால்…. அவளை பார்க்க கூட இல்லை…. அவன்.

கல்யாணி தான் அவளை அழைத்து “செல்லி கிட்ட காபி வாங்கி கொடு…”என்று பணித்தார்.

காயத்ரி அங்கே செல்லவும் “இவர் பெரிய இவன்… இவனுக்கு நான் காபி கொடுக்கனுமா….’ என்று புலம்பவும்…. பார்த்த செல்லி “என்னங்க சின்ன பாப்பா…. சொன்னிங்க…” என்க.

“அய்யோ ஒன்னும் இல்ல…” என்றாள் சலிப்பாக.

காயத்ரி காபி எடுத்து வந்த போதும் அவன் வந்திருக்கவில்லை….. காபியை உள்ளே வைத்து விட்டு வரவும்…… குருமூர்த்தி காயத்ரியை அழைத்து பேசிக் கொண்டிருந்தார்.

கைலாஷும் காயத்ரியும் அந்த பக்கம் சென்ற பிறகு….. குருமூர்த்தியும் சுப்ரமணியம் ஏதோ பேசினார்…… இவள் வந்ததும் பேச்சு மாறியது….. இதையெல்லாம் காயத்ரி கவனித்தே இருந்தாள்.

கைலாஷ் வந்தமர்ந்ததும் கல்யாணி வேறு காபி கொடுக்கவும்….. சுப்ரமணியம் “சம்மந்தி நாளைக்கு காயத்ரி திருவாரூர் போகணும் கார் ஏதாவது ப்ரீயா இருக்கா…” என ஆரமித்தார்.

குருமூர்த்தி “என மருமகளுக்கில்லாததா…..” என்றவர்

கைலாஷை பார்த்து “நாளைக்கு நீ காயத்ரியை கூட்டிட்டு போப்பா….. பார்த்துட்டு…… வந்துருங்க….. இங்க நான் பார்த்துக்கிறேன்.” என்றார் சாதாரணமாக.

கைலாஷ் “அப்பா…. எனக்கு நிறைய வேலை இருக்கு…. இப்ப… இப்போ முடியாதுப்பா….” என்றான். எல்லாரையும் வைத்துக் கொண்டு இவர் பேசுகிறாரே என்றிருந்தது அவனிற்கு.

“கைலாஷ் எனக்கு தெரியும்….. எல்லாம் உங்க நல்லதுக்கு தான் சொல்றோம்….. ஒரு தரவ பேசி பாருங்க…. உங்களுக்கான ஸ்பெஸ் தரோம்…. இரண்டு பெரும் நல்ல முடிவா சொல்லுங்க…… அப்படி இல்லைனா…. பரவாயில்ல…. பார்த்துக்கலாம்……” என்று ஒரு முடிவாக சொன்னார். அவனால் மறுத்து பேச முடியாவில்லை.

 

அதன்பின் குருமூர்த்தியிடம் சுப்ரமணி                                        யன் “ஒரு அப்பார்ட்மென்ட் லீசுக்கு பார்க்கணும்…” என்றார்.

என்ன.. ஏது.. என குருமூர்த்தி கேட்காது “சரி சம்மந்தி பார்க்கிறேன்…. என்ன அமௌன்ட்க்கு பார்க்கலாம் எங்கு வேண்டும்” என கேட்டுக் கொண்டு விடைபெற்றனர்…. கைலாஷ் காயத்ரி பக்கம் திரும்ப கூட இல்லை சென்றுவிட்டான்.

“போடா… “என்று தான் முதலில் நினைத்தால்…. பிறகு தனிமையில் அவள் அறையில் வந்தவுடன்….. தான் …. ஏன் அவன் என்னை பார்க்கவில்லை…..” என்ற எண்ணம் வந்தது.   

காயத்ரிக்கு இப்போது சற்று சங்கடமாக இருந்தது அவனின் நிராகரிப்பு….. தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாது….. தன்னை நிமிர்ந்து கூட பார்க்காது….. எப்படி முடிக்கிறது அவனால்…. என்று தான் தோன்றியது….

அன்று….  வந்து அடுத்த முகூர்த்தாத்தில் தாலி கட்டுவேன் அப்படி… இப்படி.. சொன்னனான்…. ஏன், நிமிர்ந்து கூட பார்க்கல….. அதெப்படி …. மூணு நாள்ல என்னை பிடிக்காம போடுமா……

நான் என்ன அவ்வளவு ஈசியா….. அவனுக்கு, என்றேன்னியவள்….. பர பரவென….. தேடினாள்….. அவன் அன்று கொடுத்த விசிடிங் கார்டை…..

ஆனால் கிடைக்கவில்லை….. “உனக்கு கைலாஷ் என்ன அவ்வளவு ஈஸியா…..” என அவள் மனசாட்சியே கேட்டது.

காயத்ரிக்கு ஒரே அழுகை வந்தது…… ஏன் என்றே தெரியவில்லை….  காரணமே இல்லாமல்… மனம் தனக்கு பிடித்த ஒருவரை தேடும்போது… வரும் அழுகை….

திரும்ப திரும்ப அவனது முகமே வந்த போனது அவளுள்….. அந்த கதவின் பின் நின்று….. “இப்படியே போய்டவா….; என்று கேட்டதே அவளுள் வந்து வந்து போனது…..

“எல்லோரும் சேர்ந்து நீ தான்.. எனக்குன்னு… சொல்றாங்க…. என்ன அப்படியே நம்ப வைக்கிறார்கள்…… நான் என்ன செய்வது…. ஒரு பக்கம் அன்பு….. ஒரு பக்கம் என் விருப்பம்…… அய்யோ நான் எங்கே போவது…..” என அவள் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்….

அவளின் நிலை இவனும் வேண்டும்…… இப்போது,  தனது கனடாவும் வேண்டும் என்ற நிலை…… மனதில்…..

“கொஞ்சம்.. கொஞ்சம்.. எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா……

ஏன் புரியவில்லை……

கொஞ்சம்.. கொஞ்சம்.. எனக்குள் ஆசை இருக்கா……

ஏன் புரியவில்லை…….

இவன் இருளா… இல்லை ஒலியா…. எனக்குள் குழப்பபம்…..

புரியவில்லை…..

இவன் விரலா…. இல்லை நகமா….

சின்ன தயக்கம்…..

எனக்குள் இவன் இல்ல….. இவனுக்குள் நான் இல்ல……

இது சரியா…..

புரியவில்லை…..

காதல் வரவில்லை….. வந்துவிட வழில்லை…..

வந்துவிட்டதா புரியவில்லை…..”

 

Advertisement