Advertisement

பூக்கள்-5

பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள்

“மழை…. மழை… என் உலகத்தில் வருகின்ற முதல் மழை…

நீ முதல் மழை….

அலை…. அலை…. என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை…

நீ முதல் அலை….

என்ன திண்மை ….

என்ன வண்மை….

எந்த பெண்ணும் அதிசைய விண்கலம்

போக.. போக… புரிகின்ற போர்க்களம்….

ஒன்று செய் இப்போதே… உள் நெஞ்சை உடைய செய்…..”

   குருமூர்த்தி….. ருத்ரமூர்த்தியாய் நின்றார்….. சுப்ரமணியத்தால் பேசவே இயலவில்லை….. பேசி பழக்கப்படாதவரும் கூட…… எல்லாவற்றையும் கல்யாணியே பேசி முடித்துவிடுவார்…..

இப்போது அனைவர் முன்பும் குருமூர்த்தி “உன் பெண்ணுக்கு எப்படி திருமணம் செய்கிறாய் என பார்க்கிறேன் “ என்று கூறவும்…. கொஞ்சம் மிரண்டு தான் போனார் சுப்பிரமணியம்….

கைலாஷ் அந்த இடத்தில் நிற்கவில்லை….. தன்னுடைய பெரியாம்மா, பெரியாப்பாவை மற்றும் தன் சொந்தங்ககளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்….

குருமூர்த்தியும் கிளம்பும் சமயம் தான்…..  தன் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த கல்யாணி…. இப்போது தான் நிலைமையின் தீவிரம் உணர்ந்து…..

கல்யாணி… “குருமூர்த்தி ண்ணா…. இருங்க அவசரப்படாதீங்க….. காயத்ரி சிறு பெண் அவளுக்கு என்ன தெரியும்…… பெரியவர்கள் நாம் தான் சொல்லி தர வேண்டும்…..

அவளிற்கு நான் புரிய வைக்கிறேன் அண்ணா….. நீங்க அமைதியா இருங்க…. வெளிநாட்டுல வளர்ந்த பொண்ணு, நம் மதிப்பு என்னனு தெரியாம பேசுற…. நான் சொல்லி புரிய வைக்கிறேன்னா…..” என நிலைமையை கையில் எடுத்துக் கொண்டார் கல்யாணி.

இப்போது தான் சற்று ஆசுவாசம் ஆனார்…..  குருமூர்த்தி, அவர்க்கு தன் பையன் விரும்பிய பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும் அது தான் அவரின் எண்ணம்…..

குருமூர்த்தி, தாமோதரனும் கைலாஷ் வீட்டினரிடம்….. “எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்….. ஏதோ சின்ன பெண்…. அம்மா அப்பா தனியா இருப்பாங்கனு நினைத்து சொல்லி விட்டாள்… அவ்வளவு தான்….. அவளின் விளையாட்டு பேச்சை பெரிது படுத்தாதீர்கள்….” என்றனர் தன்மையாகவே.

அவர்கள் என்ன சொல்ல முடியும்…. கைலாஷ் அங்கே வாசலில் நின்றிருந்தான்….. எனவே அவர்கள் ஒரு தலையசைப்புடன் கிளம்பினர்…..

குருமூர்த்திதான் தன் அண்ணனிடம் அமைதியாக ஏதோ சொல்லிவிட்டு  நின்றிருந்தார்….

சுப்ரமணியனும் “சம்மந்தி…. நீங்க எங்களை மன்னிக்கணும்…. ஏதோ தெரியாம பொண்ணு பேசி விட்டாள்….. நீங்க தான் மன்னிக்கணும் நாங்க எடுத்து சொல்டோறோம்….”  என்று அவரும் தன் பங்கிற்கு மன்னிப்பை வேண்டினார்……..

காயத்ரிக்கு இப்போதும் செய்த செயலின் அளவு தெரியாவில்லை….. நான் உண்மையை தான் சொன்னேன்…. எனக்கு இங்கு பிடிக்கவில்லை…. அதனால் வெளிநாட்டில் என்னுடன் செட்டில் ஆகும் கணவர் வேண்டும் என்று கேட்டேன்….. இது தவறா….. என்று தான் அவள் எண்ணம்.

இப்போது… தன் அம்மா, அப்பா மாமா அனைவரும் மன்னிப்பு கேட்கவும் தான்….. அதை எல்லோர் நடுவிலும் சொன்னது தவறோ….. என்று தான் தோன்றியதே தவிர…..

தன் எண்ணம் தவறென அவளுக்கு தெரியவில்லை…..  தவறும் இல்லை தான்…..சொல்ல போனால்…. காயத்ரியின் எண்ணம்…. அவளுடைய கண்ணோட்டத்தில் சரியே….. அதை மறுக்க முடியாது.

காயத்ரி இப்போது அமைதியாக நின்று அனைவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்….. இதை பார்த்த குருமூர்த்திக்கு….. சங்கடமாக இருந்தது….

ஒளிவு மறைவில்லா அந்த முகம் அவரை கனிவு கொள்ள செய்தது….. அவளுடைய சம்மதத்தை கேட்ட பிறகு தானே தன்னுடைய எண்ணத்தை பகிர்ந்தால்….. அதுவரை அமைதியாக தானே நின்றிருந்தாள்…..

அத்தோடு பையனிடம் மட்டும் தனியே எதையும் சொல்லமால்….. பெரியவர்கள் முன் சொல்வது அவருக்கு கொஞ்சம் நல்ல எண்ணத்தை  விதைத்ததோ……

மேலும் தன் பையனுக்கோ இந்த பெண்ணை பிடித்திருக்கிறது….. அவன் எங்கிருந்தால் என்ன…. இனிமேலாவது சந்தோஷமாக இருந்தாள் சரி…..    

ஒரு சிறு பெண்ணிடம் தன் கோவத்தை காட்டிவிட்டோமோ….. வெளிநாட்டில் வளர்ந்ததால் இந்த சொந்தங்களின் மதிப்பு தெரியவில்லையோ…. பெரியவர்கள் நாம் தான் அமைதியாக இருந்திருக்க வேண்டுமோ…. என்று காயத்ரியின் மன நிலையில் இருந்து சிந்தித்தவர்….

காயத்ரியை பார்த்து…” இங்கே வாம்மா…..” என்றார்.

காயத்ரி அவரின் அருகில் கீழே அமரவும்…. “பரவாயில்லை ம்மா…. மேலே உட்கார்….” என்றார்.

காயத்ரி “இட்ஸ் கம்போர்ட்டா இருக்கு அங்கிள்….” என சிரித்த முகமாகவே கூறினாள்.

வாஞ்சையாக அவளின் தலையை கோதி கொடுத்தார் குருமூர்த்தி….” காயத்ரி நீ…. என்னையும் உங்க கூட கனடா கூப்பிட்ட பார் அதுவே எனக்கு போதும்மா…..” என்று பெருமூச்சு விட்டவர்.

பின் எதையோ யோசித்தவாறே…. “நம்ம வீட்டுக்கு நீ தாம்மா வந்து விளக்கேத்தனும்….. அத மட்டும் மாட்டேன்னு சொல்லிறாதே…… அதன் பிறகு மருமகளே உன் சாமர்த்தியம்….. நீ இங்கிருந்தாலும் சரி…. அவன் அங்கிருந்தாலும் சரி…… எனக்கு சம்மதம் தான்……….” என்றார் சிரித்துக் கொண்டே…..

அதை கேட்டதும் அவளிற்கு என்ன சொல்லவதென்றே தெரியாவில்லை….. ஏன்னென்றால் அவளிடம் கைலாஷை பற்றி எந்த சிந்தனையும் இல்லை…..

திருமணம் என்றாள் ஏதோ ஒரு கமிட்மென்ட் என்ற எண்ணம் மட்டுமே அவளிற்கு…… அதன் மூலமாக வரக்கூடிய உறவுகள்….. பொறுப்புகள்…… எதையும் அவள் உணரவில்லை.

“அங்கிள் என்னை நீங்க… ஏதோ எமோஷனல் பாண்டிங்கில்….. லாக் பண்றிங்கன்னு நினைக்கிறேன்…… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல… அங்கிள்…..” என்றாள் தோளை உலுக்கி…. உதட்டை மூடி…..

குருமூர்த்தி “ஹ…ஹா ….. ஹா…..” என சிரித்தவாறே……… “நீ எல்லாவற்றையும் மூளையால் யோசிக்கிறாய்…. மனத்தால் சிலவற்றை யோசி…. அப்போது புரியும்…..” என்றார்.

காயத்ரியுடம்  ஒரு அமைதி மட்டுமே…..  “சம்மந்தி நான் கிளம்புகிறேன்….” என்றவர்….. தான் வர சொல்லியிருந்த வண்டியில் ஏறி சென்றுவிட்டார்…. அனைவரும் வாசல் வரை வந்து வழியனுப்பினர்….. கூடவே…. இன்னொரு முறை மன்னிப்பையும் வேண்டினார் சுப்ரமணியம்…..  

அங்கிருந்த அனைவருக்கும் குருமூர்த்தியின் இந்த செயலை பார்க்கவும்…. குற்ற உணர்ச்சி தான் வந்தது…. தாமோதரனுக்கு சொல்லவே வேண்டாம்….

இவ்வளவு நல்ல மனிதர்க்கு…. அதன் அருமை புரியாதா மருமகளா…. என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை….. தன் தங்கையின் பெண் என்றாலும்….

தன் வாழ்வை பாதியில் தொலைத்து….. மகன் மட்டுமே உறவென்று கொண்டு….. இப்போது தன் மகனிர்காவது…. நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என எண்ணும்……  ஒரு அற்புதமான மனிதற்கு… நல்லதே நடக்க வேண்டும் என்று தான் வேண்டினார்….

கல்யாணி…… டிபிகல் இந்தியன் உமன்….. “அப்படி ஒரு கோவம்….. காயத்ரியின் மேல்….. இவ்வளவு தூரம் குருமூர்த்தி இறங்கி வாருவரென நான் நினைக்கவில்லை….

ஆனால்…. இவள், இப்படி லாக் பண்றிங்க…. அது இதுன்னு பேசறா…. கையில் விழும் வாழ்க்கையை பிடித்துக் கொள்ள தெரியவில்லையே….. என்ற எண்ணம் தான்…..” கல்யாணிக்கு.

கல்யாணி, இதே சிந்தனையில் இருந்ததால் உள்ளே வந்த சுப்ரமணியத்தின் மாற்றத்தை கவனிக்க வில்லை….. காயத்ரி, அமைதியாக சென்று உள்ளே படுத்துக்கொண்டால்….

அவளிற்கு இதெல்லாம் புதிது…. மரியாதை, மன்னிப்பு இப்போது தான் முதல் முதலில் பார்க்கிறாள்…….. மனம் ஏதோ ஒரு யோசனையில் இருந்தது.

உள்ளே வந்த சுப்ரமணித்திற்கு….. எங்கோ தவறிவிட்டோமோ… என் பெண்ணை நான் சரியாக வளர்க்கவில்லையோ…… என்ற யோசனை….. மேலும் அங்கு ஊரில் என்னோமோ நடக்கிறது என்ற எண்ணமும் சேர்ந்துகொள்ள…..

அப்படியே மயங்கி சரிந்தார்…… சோபாவில்….. முதலில் தாமோதரன் தான் பார்த்து….”மாப்பிள்ளை…..” என்ற அழைப்புடன் அருகில் சென்று தூக்கினார்…..

உடனே காயத்ரி கல்யாணி ஓடி வந்தனர்….. காயத்ரி இயல்பு போல் கார் எடுக்க செல்லாவும் தான்….. நினைவு வந்தவள்….. இது கனடா இல்லை என உணர்ந்தவள்…..

பின்பு பொறுமையாக, தந்தையின் நாடி பிடித்து பார்த்து …. தானே …..  சுகர் செக் செய்யும் கருவி எடுத்து….. செக் செய்து இனிப்பு கொடுத்து….. சிறிது நேரம்…. அமர வைக்கப்பட்டார்…..

பின் அந்த வீட்டில் வேலை செய்யும் செல்லியை அழைத்து உணவு தர சொல்லி தானே அப்பாவிற்கு ஊட்டி விட்டு….. மாத்திரை எல்லாம் கொடுத்து….. ரூம்மில் சென்று ஏசி போட்டு உறங்க வைத்த பின்பே….. நிம்மதியானாள் காயத்ரி

அந்த நேரம் வரை யாரும் எதுவும் பேசவில்லை….. அவளுக்கு உதவி மட்டும் செய்தார் கல்யாணி.

காயத்ரிக்கு தெரியும் அப்பாவிற்கு டென்ஷன் ஏறினால்….. லோ சுகர் ஆகிவிடுமென. மேலும்… அங்கு முதலுதவி பற்றி தனியாக படித்தவள் கூட….. இது போன்ற சமயங்களில் அவளே சமாளித்துக்கொள்வாள். சிறிது நேரம் சென்று ஹோஸ்பிட்டல் கூட்டி செல்வாள்.        

சுப்ரமணியத்திற்கு உறக்கம் வரவில்லை ஏதேதோ யோசனை, நான் பழசை மறந்து விட்டேனோ……  வீடு, வாசல், சொத்து எல்லாம் வந்தவுடன் எனது வேரை விட்டுவிட்டேனோ…..

என பலவாறாக யோசனை….. ஒரு கட்டத்தில் முடியாமல்….. “கல்யாணி….” என்று கூவினார்.

அங்கு அப்போது தான் உணவு உண்ணத் தொடங்கிய….. கல்யாணி உடனே வந்து என்னவென்று பார்க்க….. உடலெல்லாம் வேர்த்து அப்படியே… நனைந்து போய் இருந்தார்…..

அப்போது தான் காயத்ரி கூகுளில்…. எந்த ஹோச்பிடல் பக்கம், எந்த டாக்டர் பார்க்கலாம் என பார்த்துக் கொண்டிருக்க…. சத்தம் கேட்டு போய் பார்த்தாள்….

என்ன செய்வது யாரை கேட்பது….. கல்யாணி பக்கத்து வீட்டில் சென்று பார்க்க… அங்கு எல்லோரும் வேலைக்கு சென்றிருந்தானர்….. பின்பு செக்கியுரிட்டியை அழைத்து….. விவரம் சொல்லி…. ஒரு டாக்ஸி எடுத்து சென்றனர்.

அங்கு சென்று… சுப்ரமணியத்தை செக் செய்த டாக்டர்கள் ஒன்றுமில்லை… லோ சுகர்… பீப்பியும் சற்று லோ எனவே இன்று  ஒரு நாள் அப்சர்வேஷனில் இருக்க வேண்டும் என கூறினார்கள்.

இங்கே….. கைலாஷோ, முற்றிலும் வெறுத்த நிலையில் இருந்தான்….. காயத்ரி வீட்டிலிருந்து கிளம்பி சென்றவன் அனைவரையும் அவரவர் இடத்தில் சேர்த்தவன்……

தன் பெரியம்மாவின்…. “விடுப்பா….. எல்லாம் சரியாகிவிடும்….. அதெல்லாம் உன் அப்பா சரியாக செய்து தான் திரும்புவார்….” என்ற நம்பிக்கை வார்த்தைக்கு கூட…… உதட்டை வளைத்தான் அவ்வளவே…….

தன் அலுவலகத்துக்கு சென்றுவிட்டான்….. எதுவும் என்னை பாதிக்காது….. என்று சொல்லிக் கொண்டு…..

அவனுடைய சிவந்த தேகம் இப்போது வெளுறி போய் இருந்தது…. காலையில் இருந்து அவன் கண்ணில் இருந்து வந்த துள்ளல் மறைந்தது…. ஒரு ஏமாற்றம் வந்து அமர்ந்து கொண்டது….   

ஏமாற்றம்….. அதுவும் நாம் நேசிப்பவரிடமிருந்து வரும் ஏமாற்றம்….. அவளை நோக்கி தான் எடுத்து வைத்த முதல் அடியே ஏமாற்றம்…..       

யாரிடம் சொல்வது தான் ஏமாந்த கதையை….. நண்பர்களிடமா…… அப்பாவிடமா….. யாரிடமும் சொல்லி பாழக்க பாடாதவன் வேறு….. உள்ளுக்குள் எரிந்துக் கொண்டிருந்தான்….

ஆனால், வெளியே அமைதியான முகம்…. எதுவும் காட்டாத பாவம்….. ஆபிஸ் வந்தவுடன்….. தன் இயல்பு போல் வேலை ஓடியது…..

தனது உதவியாலரிடம்….. “என்ன சம்பத்….. அந்த பேங்க் ஆபீசர்…. பாமிலி ட்ரிப் டேட் கண்போர்ம் பண்ணிட்டிங்களா….. பேக்கேஜ் டிட்டைல்ஸ் சொல்லிட்டிங்களா…..”

“அந்த தாய்லாந்த் போன பார்மசி குரூப் ரீச் ஆகி இருப்பாங்களே…. ரூம் அலாட் பண்ணியாச்சா…. கூப்பிட்டு அந்த மித்ரா ஏஜென்சிகிட்ட கேட்டு அப்டேட் கொடுங்க……”என அடுக்கடுக்காக வேலை சொன்னவன்….. தனது…. ட்ரவெல்ஸ் மூலம்   ட்ரக்கிங் கூட்டி சென்ற காலேஜ் ஸ்டுடென்ட் பேச் ஒன்றின் நிலை அறிய….. போன் செய்து கொண்டிருந்தான்….

ஒருவரையும் நிற்க விடவில்லை….. மதியம் லஞ்ச் டைம்…. என்பதெல்லாம் மறந்து போனது….. அவனிற்கு….. சம்பத் வந்து சொல்லிய பிறகும் கூட உண்ணவில்லை அவன்.

இரவு 7 மணி வரை…… சுழன்று கொண்டே இருந்தான்….. தன் ஆபிஸின் பின்னால்….. எங்கே ஓய்ந்தால் வந்து நெற்றி பொட்டில் அமர்ந்துகொள்வாலோ என ஓடிக் கொண்டேயிருந்தான்……

இனி எங்கே சென்று மறைவது…..  பார்த்த இந்த ஒருவாரத்தில் அவள் தன்னை இவ்வளவு ஈர்ப்பாள்…. அதுவும் இத்தனை வயதில்…. என அவன் நினைக்கவேயில்லை….

இது வேண்டாம் என நினைக்கும் போது தானே….. ஒன்றை அதிகம் நினைக்கிறோம்…..  அதே கைலாஷிற்கும் பொருந்தியது

தளர்ந்து அப்போது தான் சாய்ந்து… அந்த நாற்காலியில் அமர்ந்தான்……… உடனே….. ஏதோ தனது கேள்விக்கு பதில் சொல்லாத விக்ரமாதித்தன் முதுகில் உடனே அமரும் வேதாளம் போல….. வந்து அவன் நினைவில் அமர்ந்தாள்………

அவளின் அலட்சிய முகம் உடனே கண்ணில் மின்னியது………. “எங்கே கொண்டு தொலைப்பேன் இவள் நினைவை…… ஏதோ காலகாலமாக என்னுடன் வாழ்ந்தவள் போல் உணர செய்யும் அவள் முகத்தை……”      என ஒரு வெறித்த பார்வையுடன் அந்த வால் கிலோக்கை பார்த்தே அமர்ந்திருந்தான்….. வாட்ச்மேன் வந்து கதவை தட்டியே பிறகே….. நிலைக்கு வந்தவன்…..

“வாங்கண்ணா….” என கூறி எழுந்து கொண்டான். அவரின் கூறிய பார்வையை பொருட்படுத்தாது கிளம்பி சென்றான்.

கார் எடுத்து இலக்கிலாமல் பறந்தான் ECR ரோட்டில் …… அவன் செல்லும் போதே அழைத்தார்….. குருமூர்த்தி…..  வரவழைத்துக் கொண்ட தெளிவான குரலில் “ம்ம்… ப்பா…. சொல்லுங்க …” என்றான்.

அவர் என்ன சொன்னார் என தெரியாது ….. “இல்ல ப்பா… ஸ்ரீராம்….. வந்திருக்கிறான் நான் அவனுடன் போறேன்…. பாய் ப்பா…” என்றவன் போனை வைத்துவிட்டான்.

தன் நண்பன் ஸ்ரீராம்க்கு அழைத்த கைலாஷ்…. அவனை வர வைத்தான்

அந்த ஹைவேயில்…… ஒரு ஓரமாக….. தனது காரை பார்க் செய்து….. தூரத்தே தெரிந்த….. இருட்டை வெறித்துக் கொணட்டிருந்தான்…..

சிலு சிலுவென காற்று….. கண்ணுக்கு தெரியாத கடலின் சத்தம்….. மனதில் தவிர்க்க முடியாத அவளின் நினைவு…..

சிரித்துக் கொண்டான்…. கைலாஷ்…. என்ன அழகாக தன்னை அவள் பிடிக்கவில்லை என சொல்லி இருக்கிறாள்….. அதை கூட உணராமல் அவளிடம் நான் “அடுத்த முகூர்த்ததில் கூட தாலி கட்டுவேன்….” என கூறி வந்திருக்கிறேன்….. இட்ஸ் அ கிரேட் இன்சல்ட் போர் மீ…..” என்று எண்ணி தான்.           

அவனின் நண்பன்…… வந்து சேர்ந்தான்….. கைலாஷ் சொன்ன இடத்திற்கு….. கூடவே….. பீர்ருடன்…….

வந்த ஸ்ரீராம்…. “என்னடா வீக் டேஸ் ல …… என்னாச்சு…..” என்க

கைலாஷ் அமைதியாக இருந்தான்……  எப்போதும் எதையும் சொல்லி பழக்கப்படாதவன்….. இப்போது மட்டும் தான், ஏமாந்த கதையை சொல்லவா போகிறான்….

வாங்கி வந்த பொருட்களை , காரின் மேல் கடை பரப்பி….. தங்களது கச்சேரியை ஆரம்பித்தனர்….. கைலாஷ் அவளை மறக்கும் விதமாக அவளை தவிர ஏதேதோ பேசினான்….. தன் நண்பனிடம்…..

ஒரு மணி நேரம் கழித்து தத்தமது வீட்டிற்கு சென்றனர்….. தேவையில்லாதது உள்ளே சென்ற உடன்…. இவ்வளவு நேரம் இருந்த ஏமாற்ற உணர்வு மறைந்து……. ஒரு வெறி வந்தது அவனிற்கு…… “எப்படி… எப்படி…. நான் வேண்டாமா உனக்கு…..” என அவளிடம் பேசுவது போல் தனக்குள்ளேயே பேசிக் கொண்டான் கைலாஷ்………….     

   

Advertisement