Advertisement

பூக்கள்-2
“மேகம் திறந்தாள்… அதற்குள்ளும் முகம் பார்க்கிறேன்…….
பூக்கள் திறந்தாள்…. அதற்குள்ளும் உன் குரல் கேட்கிறேன்….
கண்களை திறந்தும்… கனவுகள் வளர்க்கும்….
காதலின் விரல்கள்… கல்லையும் திறக்கும்….
உன்னை தேடியே… இனி.. எனது பயணமோ….
எந்தன் சாலைகள்.. உன் வீட்டில் முடியுமோ ….
ஏய்… கனவு மங்கையே…….
உனது மனது… எனது மனதில் இணையுமோ……
கண்டு கொண்டேன்… கண்டு கொண்டேன்….
காதல் முகம்  கண்டு கொண்டேன்…..
விரல் தொடும் தூரத்திலே….
வெண்ணிலவை கண்டு கொண்டேன்…”
சுப்ரமணியனும் கல்யாணியும் அதிகாலை……….. 6 மணிக்கு வந்து சேர்ந்தனர்….. கல்யாணிக்கு பெண் வந்திருப்பாள்….. என்ன சொல்லி அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது என்ற யோசனை மட்டுமே…..
தன் மற்ற பெண்களை போல்….. “நீ சொன்னால் சரி…” என செல்லும் ரகம் அல்ல அவள்….. எப்படியாவது இந்த முறை அவளிற்கு திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று நினைத்தார்……
ஆனால் சுப்ரமணியத்திற்கு….. பல யோசனை….. இவள்… கல்யாணி செய்வது சரியா….. இதற்கு நானும் எப்படி சம்மதிக்கலாம்….. இது மாபெரும் பாவம் அல்லவா….. என்ற யோசனையில் அவர்க்கு தூக்கமே வரவில்லை.
வந்து காலை இறங்கிய, உடன்…… காயத்ரியை அவளின் அன்னை தான் முதலில் அழைத்தார்….”வாடாம்மா…. ட்ராவெல் எல்லாம் ஓகே தானே….. போ குளிச்சிட்டு சாப்பிட்டு….. அப்புறம் போய் தூங்கு….” என தொடர் ஆணைகள்  தான் அவளிற்கு…….
சுப்ரமணியத்திற்கு இப்போது தான் தன் மகள் வந்ததை கவனித்தார்…… ஆனால் எதுவும் பேசவில்லை…..
தன் அப்பாவை பார்க்க அவர் தளர்ந்து இருந்தார்….. உடனே காயத்ரி…. “என்ன ப்பா…. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…. “ என கேட்க…..
கல்யாணியிடமிருந்து பதில் வந்தது “இந்த வெய்யில்…  கூடவே அலைச்சல்… அதான்… அப்பாக்கு ஒத்து போகவில்லை…” என்றார். அவசரமாக….
காயத்ரிக்கு ஏதோ சரியில்லை என தோன்றியது…. இப்போது கேட்டால் அப்பாவிடம் இருந்து பதில் வராது…. பிறகு கேட்க்கலாம் என நினைத்து காயத்ரி தன் வேலையை  பார்க்க சென்றாள்.
சுப்ரமணியத்திற்கு இரண்டு தம்பிகள்…. பலாமுருகன்…. ஷண்முகம்…. இதில் ஷண்முகம்….. சுப்பிரமணியம் டெல்லி சென்றதும்…….. தானும் சென்னை வந்துவிட்டார்…. தன் பிழைப்பை பார்ப்பதற்கு…..
அவர்களின் அக்காகள் மூவரும் ஒருவர் சென்னை….. ஒருவர் சிங்கப்பூர்…. மற்றவர் கோவை  வளர்ந்து பரவி இருந்தனர்…..
இதில் பாலமுருகன் மட்டும் உள்ளுரில் தனது…. அப்பாவின் தொழிலான…. வக்கீல்லுக்கு படித்து….. ஏதோ சின்ன சின்ன கேஸ்கள்…. நோட்டரி…. குட்டி குட்டி பஞ்சாயத்துகள் என தனது அமைதியான வாழ்வை தொடர்ந்தார்…..  பிழைக்க தெரியாதவன் என்ற பெயருடன்……
ஷண்முகம் சென்னை சென்று…. தனது மாமனாரின் பஸ் கம்பெனி பொறுப்பை ஏற்றார்…. இவர்க்கு மட்டுமே இரு பையன்கள்…..
பாலமுருகனுக்கு 3 பெண் பிள்ளைகள்….. முதல் பெண்ணின் திருமணம் மட்டும் முடிந்திருந்த நிலையில்….. கோவைக்கு தன் கடைசி அக்காவை பார்க்க சென்ற போது…. ஒரு விபத்தில் அவர் உயிர் பிரிந்து 2 வருடம் ஆகிறது…..
சொல்லும்படியான வருமானம் இல்லை என்றாலும்…. ஊரில் நல்லா வாழ்ந்த குடும்பம் என்ற பெயர்….. கௌரவம்….  சொந்த வீடு…. எல்லா சொந்தங்களையும் அரவணைத்து போவது என அருமையாகவே வாழ்ந்தார் பாலமுருகன்.
தன் அக்காக்களுக்கு சீர் செய்வது…. அவர்களின் பிள்ளைகளின் திருமணத்திற்கு தாய் மாமனாக முன்னிர்ப்பது என அனைத்தும் இவர் பொறுப்பானது…. அண்ணன் தான் வெளிநாடு…. தம்பி மாமியார் வீட்டில்….. எனவே பாலமுருகன் அவரின் மனைவி விசாலாட்ஷி தான் எல்லாம்….      
இவர்களின் இரண்டாவது மகள் தான் அகல்யா….. சென்னையில் தான் ஒரு IT கம்பெனியில் வேலை பார்க்கிறாள்………. கடந்த ஒன்றரை வருடங்களாக….. முன்றாமவள்…. வைஷணவி கடைசி வருடம் engg…. படித்துக் கொண்டிருக்கிறாள்….. வைஷன்வியும் விசாலட்ஷியும் மட்டும் திருவாரூரில் வசிக்கிறார்கள்…..
கைலாஷ் 29 வயது…. .. ஆண்களிடம் இவ்வளவு நிதானமா…. என்னுமளவுக்கு நிதானமானவன்….. அம்மா, அக்கா, தங்கை, தோழி என பெண்களே…அவன் வாழ்வில் இதுவரை இல்லை….. அவை அனைத்துமாக…. அப்பா….. என்ற ஒருவர் மட்டுமே நின்றார்…..
கைலாஷ்ன் அம்மா அவனின் மூன்றாவது வயதிலேயே இறந்துவிட்டார்…. அடுத்த குழந்தை…. உண்டாகி இருக்கும் போது….. அது களைந்து அதில் அவர் உயிர் பிரிந்தது……  அதனால்….. அவனிற்கு ஒரு மாதிரி …. தனித்து நின்றே பழகி விட்டான்…… யாரின் கிட்டையும் நெருங்கத் தெரியாது…..
கடந்த 26 வருடங்களாக….. மாற்றமே இல்லாதது போல் ஒரு வாழ்க்கை முறை….. அதனால் ….. பெரிதாக எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை……  தந்தையும் மகனும் மட்டுமே வாழ்வில்……
ஆனால் எல்லாவற்றிலும் நேர்த்தி…..  அவனின் அப்பா ஆரமித்த ட்ரவல்ஸ் பிசினஸ்ஸை…. இப்போதிற்கு ஏற்றாற்போல்…..  டூர்ஸ் அண்ட் ட்ரவல்ஸக மாற்றி…. டூர் பேகேஜ், அட்வென்சர்ஸ் விசிட் என தொழிலை விரிவு படுத்தி இருந்தான்……
அதனால் அவனிற்கு மக்களுடன் தான் வேலை…. சில சமயம் பேசியும் பல சமயம் பேசாமலும் காரியம் சாதிப்பான்….     
காயத்ரியை….. வீட்டில் இறக்கி விட்டு வந்தவனுக்கு….. ஒரு துள்ளலாகவே இருந்கிறது……
ஜாகிங் சென்று விட்டு வந்த அவனை…. அந்த வீட்டில் பல வருடமாக வேலை செய்யும்  நாகு தான் கவனித்தார்….”என்ன தம்பி இன்னக்கு சீக்கிரமே கிளம்பிட்டிங்க…..” என்க…..
“ம்ம்…. என்னனு தெரியல்லை ண்ணா….. ஒரு பிக்கப் சென்று வந்தேன் படுக்க தோனல…… அதான் அப்படியே கிளம்பிட்டேன்….. ண்ணா …. எனக்கு இன்னைக்கு காபி….. ப்ளீஸ்……” என்றான் சிறு வயது பிள்ளை போல் …..
“ம்…. சரிப்பா….. உன்னக்கு இல்லாததா…..” என்றவர் “நீ தான் டயட்… அது இதுன்னு எதுவும் சாப்பிடறதில்லை…..” என்றார் குறைபடும் குரலில்….. அதற்கு சிறு உதட்டசைவே பதில்….. அது சிரிப்பாகா தான் இருக்க  வேண்டும் என நினைத்தே கடந்தார் நாகு.
காபி, பீர்… இரண்டும் அவனின் அசைபோடும் பாணங்கள்….. ஏதாவது சிந்திக்க வேண்டும் என்றாலோ,, அசைபோட வேண்டுமென்றாலோ நேரத்தை பொறுத்து அவனுடைய சாய்ஸ் மாறும்….                                                    
அவனிற்கு தான் அகல்யாவின் ஜாதகம் பொருந்தி இருந்தது….. ஆம்….. பாலமுருகனின் இரண்டாவது பெண்ணின் ஜாதகம் தான்…..
குருமூர்த்தி இதனை கல்யாணியின் அண்ணன் சிவநேசன் மூலமாக…. அனுகி இருந்தார்….. சிவநேசனும் எந்த பாரபட்சமும் இல்லாமல்….. அப்பா இல்லாத பெண் நம் மூலம் நல்லது நடந்தாள் சரிதான் என நினைத்து…. ஏற்பாடுகளை செய்தார்…….                                                                   
காயத்ரி…. கனடாவில் வேளையில் இருப்பவள்…. இப்போது 3 மாத விடுமுறையில் வந்திருக்கிறாள்…… அவளிற்கு திருமணத்தில் எல்லாம் பெரிதாக விருப்பம் இல்லை……
தன் அக்காக்கள்…. முன்று பேர் இந்தியாவில் தான் இருக்கிறார்கள்… ஆனால், அவர்கள் குடும்ப வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை……
அதனால், தான்……… திருமணம் செய்யும் நபர் தன்னுடம் கனடாவில் வந்து வசிக்க சம்மதிக்க வேண்டும் ……….. என்பது தான் அவளின் ஒரே ஒரு விண்ணப்பம்……     
நிறைய பார்த்தார்கள்…காயத்ரிக்கு….. ஒருவர் கூட பொருத்தமானவர்களாக தெரியவில்லை…… கல்யாணிக்கு….. கைலாஷை தவிர…..
ஆம்…. கல்யாணியின் மனதில் கைலாஷை மாப்பிள்ளையாக மனதில் வைத்துக் கொண்டு….. அதே கண் வழியாக மற்றவர்களை பார்த்தால்….. பொருந்தாது அல்லாவா …..    
காயத்ரி தூங்கி எழுந்து மதியம் போல் உண்ண வந்தவள்….. தன் தந்தையின் அறை சென்று பார்க்க…. அங்கே அவர் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார்…. அமைதியாக வெளியே வந்தவள்…..
பின்பு…..  மதியம் உண்டு சிறிது நேரம் அமர்ந்து இருந்தாள்….. பிறகு பார்த்தாள்….. ஒரே சத்தம் “காத்தி…… சித்தி…….” என…..   என்னவென்று பார்க்க…… தன் முதல் அக்காவின் பசங்க வருவது தெரிந்தது….. லிப்ட்க்கு காத்திராமால் மாடி படியில் கத்திக் கொண்டே ஏறி வந்தனர்…..
தட தட என வந்து செப்பல்லை  அங்கொன்றும் இன்கொன்றுமாக வீசி விட்டு விட்டினுள் பார்க்க….. காயத்ரியை காணம்….. அவளின் பெண் சுவாதி மிகவும் மரியாதையாக….”ஏய்  காத்தி….. எங்க இருக்க…” போட்ட சத்தத்தில் அவர்களின் தாத்தா விழித்து வெளியே வந்தார்…..
ஆனால் காயத்ரியை காணவில்லை…… சுவாதி தேடி தேடி ஓய்ந்து போய் அழ ஆரம்பிக்கவும்….. தான் காயத்ரி வந்தாள்….. வந்தவள்………”என்ன பெயர் சொல்லியா கூப்பிடுற…….” என்று சுவாதியை தூக்க நினைக்க….. அவளால் முடியவில்லை…..” அய்யோ……. வளந்திட்டியா……….. “ என கூறி நெற்றியில் முத்தம் வைத்து அவளை சமாதனப்படுத்தினாள்…..               
தன் அக்கா பிள்ளைகள் என்றாள்….. தானும் பிள்ளையாக மாறிவிடுவாள்….. அவர்களுக்கு வாங்கி வந்த கேம்ஸ் கிட்டை கொடுத்து விட்டு தன் அக்காவிடம் வந்தாள்…..
முதல் அக்கா…. ராஜேஸ்வரி…… இவர்களின் அப்பார்மென்ட் பக்கத்திலேயே இன்னொரு அப்பார்மென்ட்டில் குடி இருக்கிறார்கள்….. நிறைய பேசுவாள்….. கணவர் பேச்சிற்கு மறுபேச்சு கிடையாது…. என்னும் ரகம்….
காயத்ரி “என்ன க்கா….. எப்படி இருக்க…. காலையிலே நான் வந்தாச்சு…. இப்போதான் என்ன வந்து பாக்குறியா…..” என கேட்க….
அதற்கு ஒரு பெரிய விளக்கம் தன் பெரிய கண்களை விரித்து…. மாமா இப்படி…. அப்படி…. என எல்லா இல்லத்தரசி போலவும்….. கதை …. சொல்ல…. கேட்கவே ……… காயத்ரிக்கு சுவாரசியமாக இருந்தது கூடவே தன் அக்காவின் இன்னொசென்ட் பார்த்து “சோ……..ஸ்வீட் ..” என தனக்குள் சொல்லிக் கொண்டாள்…..   
அந்த மாலை பொழுது அழகாக கழிய…… இரவு உணவு முடித்து….. பொடி  நடையாக நடந்து…. தன் அக்கா, அக்கா பிள்ளைகளுடன் பேசிக் கொண்டே….. அவர்களின் அப்பார்ட்மென்ட்டில் விட்டு விட்டு…. திரும்ப…. அவளின் மாமா…. ஸ்ரீராம் அப்போது தான் வந்தார்… “உள்ளே வாம்மா…. “என அழைத்தவர்…. சிறுது நேரம் பேசிக்கொண்டிருக்க….. நேரம் சென்றது….
தன் அம்மாவின் போன் வந்த பிறகே….. “ஓ….. அக்கா டைம் ஆச்சு க்கா…..நான் கிளம்பறேன் …” எனக…
ஸ்ரீராம் “இரு காயத்ரி நான் வரேன் …” என்க….
“நான் என்ன….. குழந்தையா…மாமா…. நானே போயிடுவேன்…. நீங்க ரெஸ்ட் ..எடுங்க…..” என பெரிதாக சொன்னால்…
ராஜி அப்பொழுதும் “வழி தெரியுமா….” என்க…
“க்கா…. பிரஸ்ட் லெப்ட்….அண்ட் திரட் ரைட்…..” என சரியாகதான் சொன்னாள்…
ஆனால் நடந்து செல்லும் பொது …… தன் அருகே ஒரு கார் வந்து ஸ்லோவ்வாகி  செல்லவும்….. ஏதோ வேடிக்கை பார்த்து வந்தவள்….. அதை கவனிக்க…. பின் அந்த கார்….  வேகமெடுக்கவும்…… யார் என்ன என நினைத்து வந்தவள்… இரண்டாவது கட்டிலேயே திரும்பி நடக்க….
அப்போதும் உணரவில்லை…. அவள்…….. ஏதோ மிட்டாய் கடையை பார்த்த சிறுமி போல் நடக்க……. இது தான், போகும் வழியல்ல என தெரியாமல்…. வந்துவிட…. திரும்பவும் அதே கார்….. இப்போது அவளின் எதிரில் வந்தது…. நின்றே விட்டது…. அதிலிருந்து ஒருவன் இறங்கி வந்தான்…..
“மேடம்…. நீங்க எங்க போகனும் …. சார் வேன்னுனா…. டிராப் செய்யவானு  கேட்டாங்க…..”என்றான் மிகவும் பவ்யமாக….
யாரடா அது நம்மை தெரிந்தவர்கள் என நினைத்து காரின் அருகே செல்ல….. அப்போது தான் காரின் விண்டோவ்வை இறக்கினான்…. கைலாஷ்…. பார்த்த காயத்ரிக்கு…. யாருடா இவன்…. என யோசிக்க…..
“ச்ச…. மறந்துவிட்டாலா….ம்ம்….” என முகத்தில் எதையும் காட்டாமல் சிந்திக்க….. “காலையில் இருந்து நான் யார் இவன்னு யோசிச்சா….. இவ கூல் லா இருக்கா……”.
இப்போது நல்ல மூடில் இருப்பாள் போல  “ஹாய்….. “ என ராகமாக இழுக்க…….. இவனிற்கு புரிந்தது…. தன்னை தெரியவில்லை என ……          
இப்போது கைலாஷ் …… “உல்லாசம் ட்ரவெல்ஸ்…. மோர்னிங்….” என ஆரம்பிக்க……
என்னை தெரியாமல் எப்படி இருக்கலாம் நீ என்னும் விதமாக ஒரு கணீர் குரல் அவனிடத்திலிருந்து….  இப்போது காயத்ரியிடம் மரியாதையை பன்மை…. “சாரி…… எனக்கு நியாபகம் இல்லை….. தப்ப நினைக்காதீர்கள்….. நான் போய் விடுவேன் எனக்கு வழி தெரியும்…” என தயக்கமாகவே சொல்ல……
அவளின் நிலை புரிந்து “ம்ம்…..வாங்க ….. மிஸ்….” என இழுக்க…..
“காயத்ரி……” என்றாள்.
காரையும் இவனையும் மாறி மாறி பார்க்க…… இவ்வளவு அருகே பேசும் விழியை பார்த்தவன்…….. கொஞ்சம் நிலை பிறழ்ந்து தான் போனனான்…..   சேர்ந்து நடக்க தோன்றியது…… உடனே காரிலிருந்து இறங்கியவன்…..
“சேது…. அந்த அப்பர்த்மென்ட்க்கு வந்து விடு……” எனறு  அதன் பெயர் சொல்லி இவன் இறங்க….
அப்போது தான் பார்த்தாள் கைலாஷை….. நல்ல ஆறடி உயரத்தில்….. சற்று சிவந்த நிறம்….. அதற்கேற்ப ட்ராக் ப்ளூ கலர் போர்மல் ஷர்ட் ல்….சாண்டல் கலர் பேன்ட்…. என புல் போர்மல் ட்ரஸில்…. இவன் இறங்க ……. இவள் தன்னை குனிந்து பார்த்துக் கொண்டாள்……..
ஒரு லாங் ஸ்கர்ட் …… ஒரு குட்டி டாப்…. அதே தலை விரி கோலம்….. அவளின் அம்மா சொல்வது போல்….. ஒரு சின்ன பொட்டு…. கையில் போன்….   
இவன் எதற்கு தன்னுடன் வர வேண்டும் என நினைத்தவள்……. “இல்ல மிஸ்டர்….. நீங்க வழி மட்டும் சொல்லுங்க…..” என வாய்விட….
கைலாஷ் “ஓ…உங்களுக்கு வழி தெரியாதா……..” என லேசாக சிரித்தவாறே கேட்க்க………
காயத்ரி  “இல்ல கரெக்ட்டா தான் வந்தேன்….. என்னன்னு தெரியல…” என்க….
“ம்…. வாங்க” என்றவன்…… அவள் வந்த வழியே அழைத்து சென்று அடுத்த திருப்பத்தில்… திரும்பி வீட்டில் விட…..
“தேங்க்ஸ்….. வீட்டுக்கு வாங்க…..” என்றாள்
இவனும் மேலே செல்ல……… கதவை திறந்த கல்யாணி இவர்கள் இருவரையும் சேர்ந்து பார்த்தவர்…… இப்போது முடிவே செய்து விட்டார்….
“வாப்பா… கைலாஷ்…..” என்று வரவேற்றவர்….. தன் கணவரை அழைத்து பேச செய்தவர்…….. பின்  
அதிக ஆர்ப்பாட்டங்கள் செய்யாமல் பேசி விடை கொடுத்து அனுப்பினார்….          
பின் என்ன ஆயிற்று என்ன என கல்யாணி விசாரிக்க…. காயத்ரி சொல்லிக் கொண்டிருந்தாள்…..
அதன்பின் இனி எல்லாவற்றையும் சீக்கிரம் செய்ய வேண்டும் என நினைத்தார் கல்யாணி……..
அடுத்த நாள் காலை எழுந்த உடன்……. போன் செய்தார்…” என்ன விசாலம்…. வீடு பாத்துட்டியா…..” என்றார் எடுத்த உடன்.
      
                   

Advertisement