பூக்கள்-14

“காந்தமாய் என்னை ஈர்க்கும்…

உந்தன் அன்பு….  இன்று சாந்தமாய்

என்னை கட்டி போடும் மாயம் என்ன…

கேட்கிறேன் கூறடி பெண்மையே….

வாழ போகும் தூரம் நீயும் நானும் போக வேணும்….

எந்தன் நெஞ்சல் கோடி ஆசை தோனுதே…

நீ எந்தன் பாதி என்றும்…

நானுந்தன் மீதி என்றும் ….

காதல்.. காதுக்குள் வந்து வந்து ஓதுது ….

ஓ… நெஞ்ச்சாத்தியே  நெஞ்ச்சாத்தியே..

நீ தான்னடி என் வாழ்க்கையே…..

நீ… என்பதே நான் என்கிரா நீயே….  “

கைலாஷ் எப்போதும் ஆர்ப்பாட்டம் இல்லாதவன்…. தன்னுடைய எந்த உணர்வையும் வெளிப்படுத்த தெரியாதவன்….. எனவே மறுநாள்…. எப்போதும் போலே தன் வேலைகளை செய்தான்…..

அது ஒரு கொகுசு கப்பலில் ட்ராவெல்… மற்றும் தங்குவதற்கான…. ஒப்பந்தம் அது…… எனவே … அந்த கப்பலை பார்வையிடுவது மற்றும் அதை சார்ந்த விஷயங்கள்…. என அதை முடிக்கவே மாலை ஆனது….

அதன் பின்…. இவர்கள், வெளிநாட்டவர் வந்து ஒரு மாதம் இரண்டு மாதம் என தங்குவர்…. அதனால் அதற்காக வீடு, ரூம் என பல ஏற்பாடுகள் இவர்கள் நிறுவம் செய்து தரும்….

அது தொடர்பான வேலைகள்…. என இவனை மூன்று நாள் வேலை இழுத்துக் கொண்டது….. அதன் பிறகே சென்னை வந்தான் கைலாஷ்…..    

அன்று பேசியதுடன் சரி அதன் பிறகு….. அகல்யாவை அவன் நினைக்க கூட நேரம் இல்லை….. அகல்யாவும் அவ்வாறே…. காலை அவன் சொல்லி சென்ற டிரைவிங் கிளாசுக்கு சென்றாள்….. ஆனால் வேலையை விட வில்லை…..

அகல்யாவும் அதன் பிறகு அவனை அழைக்கவில்லை….. அவளிற்கு அந்த போன் பேச்சே போதுமானதாக இருந்தது…. மேற்கொண்டு ஏதுவாக் இருந்தாலும்… நேரில் பேச வேண்டும்.. என தான் நினைத்தாள்..

குருமூர்த்திக்கு…. சற்று திருப்தி தான்…. ஏதோ அவர்களுக்குள் சரியானால் சரிதான் என இவர் இருந்தார்….. அவர் வேலையை அவர் பார்க்க என மூன்று நாட்கள் சென்றது…

கைலாஷ் வேலை முடிந்து…. சனி இரவு…. லேட் நைட் பிளைட்… அதற்கு முன் வரை அவன் வேலை அவனை துரத்தியது…. கடைசியாக கிளம்பும் போது தான் நினைத்தான்….

அய்யோ…. வீட்டில் ஒருத்தி இருக்காளே அவளிற்கு ஒன்னும் வாங்க வில்லையே…  என…. கார் வந்து விட்டது…. ஆனாலும் அவன் தங்கியிருந்த ஹோட்டலில்… ஷாப்பிங் ஏரியா சென்று பார்க்க….

என்ன வாங்குவது என்றே தெரியவில்லை……. லேடிஸ் ஐட்டம் அத்தனை இருந்தது….. பொட்டு முதல் செப்பல் வரை…. முதல் முதலில் பார்ப்பவனுக்கு தலை சுற்றியது….. என்ன வாங்குவது….. என்ன…. என்ன…..            

அவசரம் வேறு…. அந்த விற்பனை பெண்ணிடம்…. கைலாஷ் “கண் மை….” என கேட்க…. அவள் ஐ லைனெர் எடுத்து தர…..  

இவனிற்கு என்ன தெரியும்….. ‘ஓ…. இப்போயெல்லாம் மை இப்படி தான் வருது போல என நினைக்க……’ என நினைத்து பார்க்க…. அவன் செய்கையை பார்த்த அந்த பெண்…

‘காஜல்…. மஸ்காரா….’ என எல்லாவற்றையும் எடுத்துக் கொடுந்தாள்….

பார்த்த கைலாஷிற்கு மகிழ்ச்சி…. எல்லாவற்றையும் வாங்கி கொண்டான்…..

கைலாஷ் விடியற்காலை 3:30 தான் வந்து சேர்ந்தான்…. சென்னைக்கு….. வீட்டிற்கு வர…. 4மணி……

வந்தும்.. மேலே தன் ரூமிற்கு….. ஒரு மோன புன்னகையுடன் சென்றான்….. எத்தனை வருடங்கள்….. மிக நீண்ட 26.. வருட தனிமை…. நொடியில்  கழிந்தது அவளால்…. தனிமை எந்த வயதிலும் கொடுமையே…..

இதோ இப்போது தன்னை எதிர்பார்த்து… தன் அறையில் ஒரு ஜீவன் இருக்கிறது… என்ற எண்ணமே அவனிற்கு இனித்தது…..     

தன்னில் பாதி…. தனக்கானவள் அங்கு தான்…. தனக்காக காத்து இருக்கிறாள்…. என அந்த படியை நான்கு நான்காக ஏற….

கதவு திறந்து இருந்ததும்…. ‘என்ன அப்படியே….’ என லைட் போட ரூம் வெறுமையாக இருந்தது….. கைலாஷிற்கு புரியவில்லை….. அகல்யா அங்கு இல்லை…

இங்கு தானே இருப்பாள்…. என அவன் தேட….. வெறுமை வந்தது…. கூடவே கோவம் ஏமாற்றம்…. என எல்லாம் சேர்ந்து வந்தது….

எப்போதும் போல்….. தன்னை ரெப்ரஷ்…. செய்து… அவள் நிற்கும் பால்கனியில் கதவை திறந்து நின்று கொண்டான்…….

அதிகாலை காற்றும் குளுமையும் அவனை சூழ்ந்தது……….. அந்த ஏமாற்றம் குறைந்தது…..

அகல்யாவிற்கு கைலாஷ் வருவது தெரியாதே…. இவன் போன் செய்தும் சொல்லவில்லை….

சனிகிழமை தானே…. என தன் அம்மாவீட்டிற்கு சென்றாள்…. அவன் வருவது தெரிந்தால்…. சென்றிருக்க மாட்டாள் தான்….

நாகுவிடம் சொல்லிவிட்டு தான் சென்றாள்…… ‘அவர் வந்தால்… கால் செய்ங்கண்ணா…..’ என சொல்லி தான் சென்றாள்….

அவரும் அதிகாலை என்பதால்…. பிறகு சொல்லலாம் என நினைத்து உறங்கி விட்டார்….. குருமூர்த்தியிடம் சொல்லி சென்றாள்….. அனாலும் அவர்க்கு தெரியாதே இவன் வருவது……         

கைலாஷிற்கு ‘போன் செய்யலாம், அம்மா வீட்டிற்கு தான் சென்றிருப்பாள்….’ என நினைக்க அதிகாலை நேரம் வேறு அவனை தடுத்து….

இவன் கிளம்பி ஜாகிங்… சென்றுவிட்டான்…. திரும்ப வந்தவன்…. எப்போதும் போல தன் வேலையை தொடர….. குருமூர்த்தி தான்…. “ஏம்ப்பா…. நீ வரது அகல்யாவிற்கு தெரியுமா….” என்க…

கைலாஷ் இடவலமாக தலையசைத்தான்….அவ்வளவே….

நாகு தான் ‘நான் போன் செய்து சொல்லி இருக்கேன்… இப்போ வந்துருவாங்க…. “என கூறி சென்றார்..

இவன் மேலே சென்று…. குளித்து ரெடியானான்… வெளியில் செல்வதார்காக….

நாகு போன் செய்து சொன்னதும்…. அதிவிரைவாக கிளம்பி வந்துவிட்டாள்……..வந்தவள்.. ‘என்ன… ஏது..’  என கிட்சென்னில்… சென்று பார்த்து….

தன் மாமனாரை பார்த்து விட்டு மேலே வந்தால்…. இவன் கிளம்பிக் கொண்டிருந்தான்….. வந்தவள் “ஹாய் எப்போ வந்தீங்க….” என இயல்பாய் கேட்க….

கைலாஷிடமிருந்து பதில்லில்லை….. இவள் ‘திரும்பவுமா….’ என நினைக்க…. அவன் தன் பகிலிருந்து…. அவளிற்கு வாங்கி வந்த காஜலை எடுத்து கொடுத்து விட்டு…

அவன் வெளியே செல்ல போக…. ‘என்ன… இது…” என கேட்டு லேசான ஆர்வத்துடன்…. அதனை பிரிக்க….. அதிலிருந்த காஜல், என தெரிந்து… அதனை உடனே அவள்…. நிமிடத்தில் போட்டுக் கொள்ள….      

அகல்யா…. “என்னங்க ….. “ என அழைத்து திரும்ப…. சென்றவன் திரும்பி பார்த்து….. இவளின் செய்கை பார்த்து… கதவை தாழ் போட்டு… அமைதியாக கதவின் மேல் சாய்ந்து அவளை பார்க்க….

அவன் மனம் அவளை தவிர யாரை கேட்கும், எதுவும் இல்லை…. அவன் மனதில்… அவளை தவிர…. பார்வை அவளை தவிர…. வேறு எங்கும் இல்லை…..

அவள், இவன் பார்வை உணர்ந்து…. “என்ன…” என புருவங்கள் உயர்த்த….. அந்த உயர்ந்த புருவ அசைவில் இவன் வீழ்ந்தே போனான்….

அவளிற்கு பதிலாக…. நான் உன்னை ஹக் பண்ணவான்னு…. சைகையால்….  அவளை அணைப்பது போல் காட்டி.. கேட்க…

இவள்… கண் கலங்க…. கை இரண்டையும் கீழ் விட்டு அமைதியாய் நிற்க… அவள் அருகே வந்தவன்…. அவளை அணைக்க…. அவன் கைகள் நடுங்கியது…. அவள் உடலும் தான்….               

அவள் நிமிர்ந்து…. மையிட்ட கண்ணில் நீருடன் அவனை பார்க்க….. தாங்க மாட்டாதவனாக…….. அதை முத்தமிட்டு… சுவைத்தான்.. இன்னும்.. இன்னும்… அவளின் உப்பு முத்துகளை… அதில் தெரிந்த உவர்ப்பு சுவைக்கு…. தனது நேசம்… ஈடாகுமா….

தெரியவில்லை.. அவனிற்கு…. ஈடு செய்யவே…. துணிந்தான்…. ஒரு கண்ணை விடுத்து மறு கண்…. அந்த கண் விடுத்து இது.. என…. அத்தனை நேசத்தையும்…. அவளின் கண்களின் வழி… உயிரில் திரிக்க…..

அகல்யா ஓரிடத்தில் அவன் பல் பட்டு… “ஸ்…” என லேசாக திமிர…. சலாரென…. அவளை… தன்னிடமிருந்து பிரிக்க…. கண்கள் சிவந்து….. கன்னம் சிவந்து…. உதடுகள் வெளிறி….

அவள் நின்ற கோலம் பார்த்து…. “ஸ்…” என நெற்றியில் கை வைத்து…. விரல்களால்….. தட்டிக் கொண்டவன்…..

அவளை அமர வைத்து….. அங்குள்ள மினி ப்ரிஜ்ல் இருந்த தண்ணீர் எடுத்து  தந்து…. ஒரு டவலை ஈரம் செய்து எடுத்து வந்து…. அவளின் கண் களை துடைத்து…. ஐஸ் கியூப் வைத்து…. அதற்கு…. மருத்துவமும் செய்தான்….

அந்த வலி சற்று குறையவும் தான்…. அகல்யா… கைலாஷ் முகம் பார்க்க…. அய்யோ பாவமாக இருந்தது அவளிற்கு…. அவன் அப்படி பயந்து போய் இருந்தான்….

இவள் லேசாக சிரிக்க….. “அடியேய்….. கண்ணாத்தா….. என்ன டி பண்ணாங்க உன்ன…. புசு.. புசுன்னு.. சிவந்து நிக்கிற….” என சத்தமில்லாமல் லேசான அதட்டலுடன் கேட்க…..                  

இவள் அவனை தள்ளிவிட்டு…. “டைம் ஆச்சு…. கீழ மாமா…. உங்களுக்காக…. வெயிட் பண்ணுவாங்க…..” என சொல்லி இறங்கி விட்டால்….                                           

இவன்…. கீழே வந்த போது… தன் தந்தையை பார்த்தவன்…. அவருடன் கொச்சின் விஷயம் பேசி விட்டு.. உண்டு கிளம்பி விட்டனர்… இருவரும்…

அன்று சண்டே என்பதால்….. குருமூர்த்தி…. ஆபீலிருந்து… சீக்கிரமாக வந்து விட்டார்…. இவள் இப்போது தான்.. மதிய உணவிற்காக.. நாகுவுடன் நின்று கொண்டிருந்தாள்…                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

யோசனையாக….. “அகல்யா…..” என அழைத்தவர்….. “உன் அம்மாவை…. இன்னிக்கு லஞ்ச்க்கு கூப்பிடும்மா….. வைஷ்ணவியையும் வர சொல்….” என்றார்….

அகல்யா “ஏன்… மாமா…” என தயங்க….

“ஒன்னும் இல்லம்மா…. சும்மா தான்…. தனியா தானே இருக்காங்க…. நம்ம ஆப்ஸ்க்கு போன் பண்ணி “மணியை வண்டி எடுத்து…. போக சொல்லும்மா….. அம்மாவை கிளம்பி ரெடியாக சொல்லு….” என்றார்.

குருமூர்த்தி தன் மகனிற்கு போன் செய்து….. “எப்போப்பா வருவ…. “ என கேட்டார்…..

அகல்யா என்னவோ என நினைக்க…. குருமூர்த்தி சிரித்துக் கொண்டே அவள் முகம் பார்க்க…. “போம்மா… போய் வேலையை பார்…” என்றார் சிரித்துக் கொண்டே….

எது எப்படியோ அம்மா வருகிறார்கள் என்றதே அவளுக்கு….. உற்சாகம் தந்தது…. எனவே தன் மாமனாரிடம்…. சிரித்துக் கொண்டே தலையாட்டி சென்றாள்….  

எல்லா வேலைகளையும் பர பரவென முடித்தவள்…. சுடிதாரில் இருந்தவள்…. புடவைக்கு மாறினால்…. ‘அம்மா வந்தா திட்டுவார்கள்….’என..

அகல்யாவின் வீட்டிலிருந்து வந்தனர்….  அவளின் அம்மாவும் தங்கையும்… கைலாஷ் வர 2 மணி ஆகிவிட்டது…..

கைலாஷ் வந்த உடன் வைஷ்ணவி…. அவன் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாள்…. மற்ற படி அவனை விட்டு தூரவே நின்றால்…. தன் மாமா என்ற நினைப்பில் கைலாஷை பார்க்க முடியவில்லை… அவளால்….

எனவே ஒதுக்கம்…. ‘இதை சொல்லியே தான் கூட்டி வந்தார் விசாலாட்சி…. அங்கெல்லாம் தலையை.. தலையை.. ஆட்டியவள்….’ இங்கு வந்து ஒதுங்கி நிற்க…..

‘ஏன்…’ என அகல்யாவின் கவனத்தை ஈர்த்தது…. கைலாஷ் மனதில் இப்போது எதுவும் இல்லை அதனால் அவன்…. வைஷ்ணவியை குறித்து…. நினைக்கவில்லை…. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அகல்யாவின் முகம் மலர்ந்தே தான் இருந்தது….. கைலாஷ் வந்த பிறகு….       

அகல்யா பார்த்து.. பார்த்து.. கைலாஷிற்கு செய்ததையும்…. தன் கணவனிடம் உரிமையாக பேசுவதையும், பார்த்த.. விசாலாட்சிக்கு பெரிய நிம்மதி….  

அனைவரும் உணவு உண்டு…. எல்லாரும் பேசிக் கொண்டிருந்தனர்…. அப்போது தான்…. குருமூர்த்தி…. விசாலாட்சியிடம் “அகல்யா வேலையை…. விட்டுட்டு நம்ம ஆபிஸ் போகட்டும்….. அத பத்தி கேட்க தான் கூப்பிட்டேன்…” என்றார்.

அகல்யா தான் வாயை திறந்தாள்…. “அது மாமா….. எப்படி…. நான் முன்னமே சொன்னேன்னே….. “ என திக்க…

இப்போது விசாலாட்சி…. “அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க அண்ணா…. உங்க பொண்ணு…. நீங்க ஏது சொன்னாலும் செய்வா….” என அவளை பார்த்துக் கொண்டே கூற….

அதன் பின் அகல்யா வாயை திறக்கவில்லை…. கைலாஷை தான் முறைத்தால்….. ஏதோ அவன் சொல்லி தான் நடப்பது போல்….

அடுத்து குருமூர்த்தி…. அடுத்தடுத்து…. விசாலாட்சியிடம் தனது யோசனைகளை ஒவ்வென்றாக சொல்லிக் கொண்டிருந்தார்…..

எல்லாம் முடிந்து அக்ல்யாவிடம் திரும்பி “என்னம்மா… சரி தானே..” என்றார். சிரித்த முகமாகவே….

அவளுக்கும் இது பிடித்து தான் இருந்தது….. ஆனால் கைலாஷை பார்க்க…. அவள் எதற்கு பார்க்கிறாள் என தெரியாதவன்…. ஒருவாறாக யோசித்து…. “இத்தானே, நான் அப்போ சொன்னேன்….” என்றான் ஒரு சலிப்பான குரலில்…

அதன் பிறகே இவள் “சரி…. மாமா….” என தலையாட்ட…. கைலாஷ் முகத்தில் அத்தனை மென்மை…. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்…

அப்போது தான்… வைஷ்ணவிக்காக ஆர்டர் செய்திருந்த…. ‘ஜிகர்தண்டா…’ வரவும் அதை வாங்கியவள்….  தன் அம்மாவிற்கும், மாமனார்க்கும் பழரசம் தந்தவள்….

தனக்கும் சேர்த்து மூன்று கப்களில்… ஜிகர்தண்டா எடுத்து வந்து பருகிக் கொண்டிருந்தனர்….         

வைஷ்ணவி தான் இவர்களின் இந்த நிலையை…. வாய் திறந்து பார்த்திருந்தாள்…. கல்யாணத்தின் போது இருந்த நிலை என்ன இப்போது இவர்களின் நிலை என்ன….  பாவம் என் அக்கா…. ஏமாந்தவ …. என தான் தோன்றியது…. அவளிற்கு

முன்பு கைலாஷை மட்டும் முறைப்பவள்…. இப்போது தன் அக்காவையும் சேர்த்தும் முறைத்தாள்…..   

இப்போது கைலாஷிற்கு சிரிப்பு தான் வந்தது…. வைஷ்ணவி என்ற பெண்ணிற்கு தோன்றியது எல்லாம்… கைலாஷ், காயத்ரியை விரும்பினான் என்பதே…..

நேசம் என்பது…. ஏதோ பார்த்தவுடன் வருவது அல்ல…. அது சலனம்… அதிலிருந்து கைலாஷ் எப்போதோ வெளிவந்துவிட்டான்…. வாழ்வில் சில சலனங்களை தவிர்க்க முடியவதில்லையே….

அதனால் அதை கொண்டு மட்டும் மற்றவர்களை அளப்பது தவறு தானே…. இரவு உணவு முடித்தே …. இருவரும் கிளம்பினர்….

அந்த இரவில்… கைல்லாஷ் தனது பைக்கில்….. அகல்யாவுன் பீச் சென்றான்.,…