பூக்கள்-10

ரிசப்ஷன் இப்படியே முட்டல், மோதல்களுடன் நிறைவடைய….. மறுநாள் காலை, திருமண நாளும் விடிந்தது……

அந்த அதிகாலையில் குருமூர்த்தி தான் வந்தார்….. கைலாஷின் அறைக்கு கைலாஷிடம் ஏதாவது பேச வேண்டுமோ அவனை சரி செய்ய வேண்டுமோ என…..

ஆனால்… கைலாஷ் தானாகவே ரெடியாகி நின்றான்….. ஏதோ ஒரு ஆபிஸ் மீட்டிங் செல்வது போல்…..

பார்த்த குருமூர்த்திக்கு ‘அப்படா….’ என்றிருந்தது…. ஆனாலும், இது என்ன மனநிலை…. என்றும் தோன்றியது…. கைலாஷ் முகத்திலிருந்து எதுவும் படிக்க முடியவில்லை அவரால்….. கூடவே ஒரு பெருமூச்சு எழுந்தது அவரிடம்….

ஏதோ கடமையை செய்யும் செயல் வீரன் போறதொரு தோற்றம் அவ்வளவே….. வந்த குருமூர்த்தியயை பார்த்து…. லேசாக உதடு வளைத்தான்….. பிறகு “போலாம்ப்பா….” என்றான்.

நெடு நெடுவென உயரமாக….. பட்டு வெட்டி சட்டையில்…. இரவெல்லாம் தூங்காத கண்களோடு…. கல்யாண கலை என்பதே மருந்துக்கும் அவன் முகத்தில் இல்லாமல்…  தன் முன்னே நடந்து சென்றவனை பார்க்க…..

கடவுளே….. “அவனிற்கு, இனியாவது அமைதி தர கூடாதா…..” என்று வேண்டினார்.

இளம் சிவப்பு ரோஜா பெட்டல்ஸ் மாலையில்…. கம்பீரமாக மணமேடையில் அமர்ந்திருந்தான்…. கைலாஷ்…. அப்போது தான் அகல்யாவை அழைத்து வந்தனர்….

அழகான சிவப்பு வண்ண பட்டில்…. தனது பெரிய விழிகளில்….. இன்றாவது தன்னை பார்ப்பானா… என்ற எதிர்பார்ப்பை தவிர வேறு கனவுகள் இல்லாமல் வந்தமர்ந்தாள் அவனருகில்……                    

கைலாஷ் வந்தவளை கூட பார்க்கவில்லை…. மற்றவர்களை வரவேற்கும் சாக்கில்… நேரே பார்த்து… சிரித்தான்…. ஆனால் அதையும் தனது ஓர கண்ணில் உள் வாங்கினாள் அகல்யா……

கைலாஷ்…. மங்கள நேரத்தில்…. மங்கள நாண் பூட்டி….. அவளை தன்னவள் ஆக்கினானா…. அல்லது தனியவள் ஆக்கினானா….. தெரியவில்லை…..   அப்போதும் அவனிடம் மாற்றம் இல்லை தான்…..

தனது பார்வைக்காக ஒருவள் இருக்கிறாள் என்ற எண்ணமே அவனிடம் இல்லை…… காரியமே கண்ணாக செய்தான்….. இதை நினைத்து தான் அவள் கண்ணில் நீர் வந்தது……

பின்பு…… மெட்டி போடும் நிகழ்வு….. இதுவரை, தன் நகக்கண் கூட அவள் மீது படாமல் இருந்தவன்….. இப்போது அவளின் பாதம் தொட்டு…. ஏழு அடி எடுத்து வைத்தான்……

பாதம் தொட்ட நொடி முதல்….. அகல்யா….. அவனை தான் பார்த்துக் கொண்ருந்தாள்…. மிக அருகில்….. தன் பாதம் தொட்ட இரும்பு கணவனை….. அனல் பார்வை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்….. அந்த இரும்பு இப்போதாவது உருகுமோ என…..

கைலாஷ், நிமிரவே இல்லை அவன்….. நான் இப்படிதான் ஏன்னும் விதமாக….. நிமிர்ந்து பார்த்து இன்னுரு முறை சலனப்பட நான் என்ன….. முட்டாளா…. என்னும் விதமாக….

உன் பார்வை என்னை ஒன்றும் செய்யாது….. என அவளுக்கு உணர்த்தினான். தனக்குள்ளும் உணர்த்திக் கொண்டான்…. பாவம், தன் கண்வனை அருகில் பார்த்த நிறைவுடன் நின்றாள் அகல்யா…..

நேரங்கள் சென்றது….. அணைத்து சடங்குகளும் முடிந்தது….. அகல்யாவின் வீட்டிற்கு செல்ல வேண்டும்….. விசாலாட்சி இப்போது தான்  கைலாஷிடம் பேசினார் “வாங்க மாப்பிள்ளை போகலாம் நம் வீட்டிற்கு…” என்றார்.

நேற்றிலிருந்து வாய்மூடி இருந்தவன்…. இப்போதும் தலையசைப்பை பதிலாய் தர….. நொந்தே போனால் அகல்யா…..

அகல்யாவின் வீட்டிற்கு சென்று 10 நிமிடம் இருந்தவன்….. ஒரு போன் வரவும் பேசிக்கொண்டே….. “ஆன்ட்டி…. அர்ஜென்ட் வொர்க் சீக்கிரம் போகணும்….. நான் கிளம்பவா….” என்றான் விசாலாட்சியை பார்த்து….

அவர் கையை பிசைந்துக் கொண்டு நிற்க…. கைலாஷின் பெரியம்மா தான்… “ என்ன கைலாஷ் இது…. நம் வீட்டிற்கு நல்ல நேரத்தில் செல்ல வேண்டும்… இப்போது எங்கும் போக கூடாது…” என கடுமையாக சொன்ன பிறகே அங்கிருந்தான்…..  

அங்கிருந்த வரை கைலாஷ் தனது அண்ணன்… பெரியப்பாவின் மகனை முறைத்து.. முறைத்து… தான் பார்த்து இருந்தான்….. சீக்கிரம் கிளம்ப சொல்லி….. இதை பார்த்த அவனின்… பெரியாம்மாவும்…..    சரி என நல்ல நேரம் அது இது என சொல்லி கிளம்பினார்…..

கைலாஷின் வீட்டிற்கு வந்த மணமக்களை வரவேற்றார் குருமூர்த்தி…..  அப்படி ஒரு மகிழ்வு அவர் முகத்தில்….. நிறைந்த முகத்தோடு…. அனைவரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார்…..

அகல்யா பூஜை அறை சென்று விளக்கேற்றி…… வணங்கி, தன் மாமியார் படத்தின் முன்பும் அவ்வாறு செய்து….. இப்போது குருமூர்த்தி முன் வந்து நின்றாள்……

“ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா” என….. அகல்யா கூறவும் ஏற்கனவே சந்தோஷத்தில் இருப்பவர்…… இப்போது சொல்ல முடியாத ஆனந்தத்தில் இருந்தார்…..

பார்… என்பது போல் ஒரு பார்வையை தன் மகன் மேல் செல்லுத்தி….. காலில் விழ இருந்த அவளை நிறுத்தி….. “எதுவாக இருந்தாலும்…. இனி உன் கணவனுடன் சேர்ந்து தான் செய்ய வேண்டும்….”  என்றார் அர்த்தத்துடன்…..

“போம்மா போய் ஓய்வெடு…… அப்புறம் பேசலாம்…”என்றவர், அவரின் அண்ணன் மகளை அழைத்து…. அவளிற்கான அறையை காட்ட செய்தார்….  

கைலாஷ் தான்…. என்ன செய்வது என தெரியாமல் தன்றையில் அமர்ந்திருந்தான்…… என்ன செய்வது என தெரியவில்லை அவனிற்கு…. எதை பற்றியும் நினைக்கும் நிலையில் அவன் இல்லை…..

இந்த கூட்டம்.. கும்பலிடமிருந்து… எங்காவது சென்றால் பரவாயில்லை போல் இருந்தது…… எங்கோ சிக்கிக் கொண்ட உணர்வு…… படுத்து கண் மூட முடியவில்லை… அவனால், தனது அறையை அளந்துக் கொண்டிருந்தான்……

மாலை நேரம் சென்று, இரவு… இவர்களுக்கான நேரமும் வந்தது….. கைலாஷின் அண்ணி தான்….. அகல்யாவை தாயார் செய்து கையில் பால் சொம்புடன் கைலாஷ் அறைக்கு அனுப்பினார்…..

இவளும் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் செய்யவில்லை….. அமைதியாக உள்ளே சென்றாள்…… பார்த்தவள் அதிர்ந்து போனால்……  

அந்த அறையில் கைலாஷின் ஆளுயர போட்டோ ஒன்று இருந்தது….. அப்படியே தன்னை பார்ப்பது போல இருந்தது…… முதலில் பயந்தே போனால்….. அவன் தான் நிற்கிறான் என……

அழகாக…. சிரித்த முகமாக….. நீல வண்ண புல் ஹன்ட் டிஷர்ட்டில்…. ஒரு புறமாக திரும்பி நின்று பார்ப்பது போல் இருந்தது….. அப்படியே உறைந்து போனால்….. இவன் சிரித்தால் இவ்வளவு அழாகா என…..

உள்ளே வந்தவள் அந்த அறையை பார்க்க எந்த அலங்காரமும் இல்லாமல் அப்படியே இருந்தது……. அவனும் அங்கு இல்லை…..  ஒரு வெறுமை வந்தது…..

என்ன தான் எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், ஏதோ நடக்கும்… தன்னிடம் தனிமையில்…. தன் நிலை பேசுவான்… என நினைத்து தான் வந்தாள்…. ஆனால், இப்போது…. தன் மனது போல் அறையும் வெறுமை…..    

கல்யாணம் என்று சொன்ன நாளில் இருந்து கைலாஷ் என்ற பெயரை தவிர வேறு ஏதும் அவள் அறிந்ததில்லை…..  வேறு எந்த பிம்பமும் இல்லாத.. அவளின் கண்ணாடி மனதில் அவன் மட்டுமே இந்த ஒரு மாதமாக…..

ராம்… ராம்… என்று சொல்லும் இடங்களில் எல்லாம் ஹனுமார் இருப்பாராம்….. அது போல் கைலாஷ் எனும் பெயர் கேட்டாலே இவள்….. அங்கு இருந்தாள்….. அப்படி அவளின் மனதில். .கணவனாக பதிக்கப்பட்டது  கைலாஷின் பெயர்……..

கைலாஷ் நல்லவனா கெட்டவனா….. அழகானவனா….. எதுவும் தெரியாமலேயே… இவன் தான்… என்னவன் என அகல்யாவின் மனதில் பதிந்தது….. பெரும்பாலனா…. பெண்களுக்கு நடப்பது போல்….

இப்போது அவனே தன்னை பார்ப்பது போல் இருக்கவும்…. அந்த போடோவின் அருகில் சென்று பார்க்க வேண்டும் போல் தோன்ற……

அங்கே இருந்த டேபிளில் பாலை வைத்து விட்டு….. அந்த அறை முழுவதும் சுற்றி வந்தாள்….. நல்ல பெரிதாக இருந்தது….. அந்த அறையின் வாயிலை பார்த்த படி….. கைலாஷின் போடோவின் அருகில் சென்றவள்….

தன் கணவனின் சிரித்த முகம் அவளை இழுக்க…. அந்த போட்டோவுடன்…. தான், ஒரு திருட்டு செல்பி… எடுத்துக் கொண்டாள்….. தன் போல் தன்னவனின் உருவத்தை ஆசையாக வருடியது அவள் விரல்கள்….

மெட்டியிடும் போது பள பளத்த அவன் சிகையும்…. நிமிர்ந்து நின்று மற்றவரை பார்க்கும் போது….. அவன் முகத்தில் தோன்றும் ஒரு புன்னகையையும் நினைத்தவளுக்கு….. தன்னவன் என்ற கர்வம் வந்தது…..    

அதன்பின் அந்த அறையின்….. திறக்கபடாத பால்கனி கதவை சிரமப்பட்டு திறந்தவள்…. அங்கே சென்று சிறிது நேரம் வேடிக்கை பார்த்தாள்….. பாவம் அவளும் என்ன செய்வது என தெரியாமல்….. இப்போது வருவான்…. இதோ வருவான்…. என நினைத்து….

ஒரு கட்டத்தில் முடியாமல்….. உள்ளே சென்று கட்டிலில்…. ஒரு பக்கமாக படுத்துக் கொண்டாள்…… மதியமும் தூங்காதால்…. அசந்து தூங்கிவிட்டாள்.

நடுநிசி 1 மணிக்கு தான்…. கீழே இறங்கி வந்தான்…. கைலாஷ், வந்தவன், லைட் அப்படியே எரிந்து கொண்டிருந்தது….. பால்கனி கதவு திறந்திருந்தது….. ஏசி போடாமல் அப்படியே…. வேர்த்து போய்…. தான்  உடுத்தி வந்த புடவையுடன்…. தன் உயரத்திற்கு நிமிர்ந்து படுத்திருந்த அகல்யாவை இப்போது தான் அருகில் பார்த்தான்…..

சந்தன நிறத்தில்…. பெரிய விழகள் நீண்டு… பளிங்கு போன்ற அந்த முகம்….. நிர்மலாமாக…. அமைதியாக….. இருந்தது.

அதிலெல்லாம்  அமைதியாகவில்லை அவன்….. இவளிற்கு எனது நிலை தெரிந்தும் என்னை திருமணம் செய்திருக்கிறாள் என்று தான் தோன்றியது……

கூடவே…. இவள் உறங்கிக் கொண்டிருக்கவும்….  கோவமும் வந்தது…… அப்படி ஒரு கோவம் வந்தது…. எப்படி அப்படியே படுத்திருக்கிறாள்….. பொறுப்பே இல்லை….. கதவுகளை சாற்றாமல்… அதுவும் என்னோட பெட்ல…. என நினைத்தவன்…. கதவுகளை சாற்றி… ஏசி போட்டு அமர்ந்தான்….

வைஷ்ணவி….. அவளின் அக்காதான் இந்த அகல்யா என தெரிந்தது முதல்…. அவனினுள் ஒரு எண்ணம்….. தன் தந்தை…. அகல்யாவின் தாய் அனைவரும் சேர்ந்து…… என் பரிதாப நிலை பார்த்து….. இவளை எனக்கு  கட்டி வைத்துவிட்டார்கள்…..

ஆகவே இவள்…. இவளும் போனால் போகுது என தான் திருமணம் செய்திருப்பாள்….. என தான் நினைத்தான்….. ஏதோ அவனிற்கு உறுத்தியது….. அப்போ, இவள் என்னிடம் காட்டும் முகம் பரிதாபம்…… என தோன்ற தொடங்கி விட்டது…. கைலாஷிற்கு…..

ஆகவே கைலாஷ்…. அகல்யாவின் முகம் பார்க்க நினைக்கவில்லை….. தன்னுள்ளேயே ஒடுங்கிக் கொண்டான்……

எப்படி தன் இணை…. தன்னில் பாதியாக வருபவளின் பரிதாப பார்வையை எந்த ஆண்மகனாலும் ஏற்க முடியாது தானே….. அதே தான் கைலாஷிற்கு…. ஆனால் இந்த முகம்….. ஏனோ நிர்மலமாக இருக்கவும்….. அவனிற்கு குழப்பம் தான் வந்தது…..   

ஆனால் அவனின் இன்னொரு மனம்….. உனக்கு பயம்…. எங்கே அவள் கண்ணை பார்த்தாள்…. நீ அவளை ஏற்க்க தொடங்கி விடுவாய் என பயம்…. அது தான்… இப்படி…. என்ற குரல் கேட்காமல் இல்லை….. ஆனால் அதை அவன் கேட்க தயாராக இல்லை….. தன் மனமே அவளிற்கு சாதகமாக யோசிப்பதா….. கூடாது என நினைத்தான்…..       

அவளை அருகில் பார்க்க…. பார்க்க…. எனக்கு இறக்கம் காட்ட….. இவள் யார்….. நான் என்ன அவ்வளவு….. தெளிவில்லாதவனா….. எனக்கு எதுவும் தேவையில்லை….. யாரும் தேவையில்லை…. என்று எண்ணினான்.

இப்படியே விடிய.. விடிய… யோசித்து எப்போது தூங்கினானோ தெரியவில்லை…..

அதிகாலை அகல்யாவின் செல்லில் இருந்து…. 6:15 க்கு அவளின் ரெகுலர் அலாரம் அடிக்க….. அதை எப்போதும் போல் ஆப் செய்து உறங்க போக….. ஏதோ ஒரு உறுத்தலில் திரும்பி பார்த்தாள்…… தன் அருகில்….. தன் கணவன்…..

இந்த காலை அகல்யாவிற்கு மிகவும் பிடித்தது….. அந்த கனத்திலேயே அவளின் மனம் உற்சாகம் கொண்டது…. நிமிர்ந்து படுத்து….. ஒரு கையை நெஞ்ச்ச்சிலும் மற்றொரு கையை தலைக்கு மேலும் தூக்கி வைத்து….. ஏதோ ஒரு நல்ல கணவை காண்பவன் போல்…. உறங்கிக் கொண்டிருந்த கைலாஷை சிறிது நேரம் படுத்தவாறே… ரசித்தவள்…. பிறகு தான் எழுந்து சென்றாள்…..

குளித்து முடித்து கீழே சென்றாள்…. அது வரை அவன் எழவில்லை…. கீழே…. கைலாஷின் அத்தை, பெரியம்மா…. இருவரும் கிட்சென்னில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தனர்….

சத்தம் கேட்டு அங்கே சென்றவள்….. “அத்தை..” என்றாள் பொதுவாக…. இருவரும் திரும்பி பார்த்து….

“வாம்மா…”என்ற பெரியம்மா… அவளிற்கு காபி கலக்க சொல்லி.. நாகுவிடம் சொன்னார்…

நாகு மற்றும் அங்கு வேலை செய்பவர்களை அறிமுகம் செய்து வைத்தார்….

“கைலாஷிற்கு காபி எடுத்து போம்மா…. “ என்றார்.

அகல்யா தானும் குடித்து…. கைலாஷிற்கு எடுத்துக் கொண்டு மேலே ஏறினாள்….. அங்கு, அவன் இன்னும் எழுந்திரிக்கவில்லை….

அவனை எப்படி எழுப்புவது என நின்றவள்….. எழுப்பிதானே ஆக வேண்டும் என நினைத்து….. “என்னங்க….. “ என கூப்பிட….

சட்டென விழித்துக் கொண்டான் கைலாஷ்…. கை இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி…. சிறு கொட்டாவியுடன்… தன்னருகில் இருந்த அகல்யாவை பார்க்க….

இவ்வளவு நேரம் இருந்த இயல்பு முகம் மாறி….. ஏதோ வேண்டாத ஜந்துவை பார்ப்பது போல் பார்த்தவன்…. எழுந்து குளியல் அறைக்கு சென்றுவிட்டான்….

அவன் செல்வதையே பார்த்திருந்தாள் அகல்யா…..            

“குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா….

கை நீட்டினேன்… என்னை.. கரை சேர்க்க வா….

நீயே அணைக்கவா…. தீயயை அணைக்கவா….

சில பூக்கள் தானே.. மலர்கின்றது…

பல பூக்கள் ஏனோ.. உதிர்கின்றது….

கதை என்ன கூறு…..

பூவும்.. நானும்.. வே…று….

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…..

உன் கையில் என்னை கொடுத்தேன்….

நீதானே புன்னகை மன்னன்…. உன் ராணி நானே….

பண் பாடும் பாடகன் நீயே… உன் ராகம் நானே….”