Advertisement

அவன் சென்ற மூன்று நாட்களில் அலுவலகத்தை தனியாக கவனித்துக் கொண்டவள் சற்றுத் திணறித்தான் போனாள்.  அவனில்லாது சரியாக உணவு உண்ணாமல் , உறங்காமல் உடலும் சோர்வைத் தந்தது. நான்கு நாட்களும் எப்போது நகரும் என்று இருந்தவளுக்கு அலுவலகத்தில் பிரச்சினை ஒன்றுக் காத்திருந்தது.

அவர்களது உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியர்களுக்குள் ஏதோ பிரச்சினை என்று வர கணவனை அழைத்து விட்டாள்.

அவனோ ” நீ தான் சால்வ் பண்ணனும் , உன் கூட நிறைய சீனியர்ஸ் இருக்காங்க அவங்கள கேட்டு எப்படி ஹேண்டில் பன்றதுனு பாரு… ஒரு எம்.பி.ஏ ஸ்டூடண்ட்டா உனக்கு இது  பிராக்டிகல் கிளாஸ்னு நினைச்சுக்கோ…. உன்னால முடியும் டியர் … அப்படி முடியலனு தோணினா மட்டும் நான் ஹெல்ப் க்கு வருவேன். போ போய் பிராக்டிகல் பண்ணு….” என்று சிரித்து விளையாடினாலும் உறுதியாக இருந்தான்.

கணவன் சொன்னது போல மீட்டிங் ஏற்பாடு செய்து அலுவலக உயரதிகாரிகளை வர வைத்து , பிரச்சினை என்ன என்பதை ஆராய்ந்தவள் , அங்கிருந்தே போனில் பேசித் தீர்த்துக் கொள்ளப் பார்த்தாள். அது சரி வரவில்லை என்றதும் தானே அந்த தொழிற்சாலை இருக்கும் இடத்திற்கு பல முன்னேற்பாடுகளோடு சென்றாள். அவ்விடம் கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் இருந்ததால் வீட்டில் ஜானகிக்கு தெரிவித்து விட்டுக் கிளம்பினாள்.

அங்கு இரு பிரிவுகளாக நின்றிருந்த ஊழியர்களில் முன்னின்றுப் பேசியவர்களில் இருவரைத் தனியாக அழைத்து அவர்களுக்கு ஏற்றார் போல் பேசி பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைத்தவள் , இரவு ஒன்பது மணிபோல் வீட்டிற்கு வந்தாள்.

வந்தவள் கண்களில் தன் கணவன் மட்டுமே உபயோகிக்கும் அவனது ‘போர்ச் ஜி டி 3 ” (Porche gt3)நின்றுக் கொண்டிருந்தது .

காரை விட்டு இறங்கியவள் வரவேற்பறையில் அமர்ந்திருந்த யாரையும் கவனிக்காது ,மாடி படியேறி தங்கள் அறை நோக்கி ஓடினாள் .

கதவை திறந்தவள் அரவிந்த் கைகளில் தான் இருந்தாள். கண்களில் கண்ணீர் பொங்க .. அவனை கைகளால் அடித்தவள் , ” வந்துட்டு  என்னைப் பார்க்க வரல …. உங்கள”  கட்டிலில் விட்டவன் கன்னத்தை கடிக்க ஆரம்பித்து முத்தத்தில் கொண்டு வந்து நிறுத்தியவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“ஏன்… ஏன் வரல… பொய் …பொய்.. நாளைக்கு வாரேன்னு பொய்…. எவ்வளவு தவிச்சுட்டேன் தெரியுமா …. இன்னைக்கு ஆஃபிஸ்ல வேற … .. முடியாது  நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது…. ஐ மிஸ் யூ … ஐ மிஸ் யூ லாட்”

அவளை இறுக அணைத்துக் கொண்டவன் , “அதெப்படி உன்னையப் பார்க்க வராம இருப்பேன்…. நீ எடுக்கிற முடிவுகளை நேர்ல பார்த்து அசந்துட்டேன் டியர்…. உன்னால கடைசி வரை முடியலன நான் அங்க நின்றிருப்பேன்…. ஆனா என் ரதி சோ ஸ்மார்ட் .. இப்ப நம்புறேன் நீ கிளாஸ்ல கே கே வா இல்லனு”

“பாஸ் …. தேங்க்ஸ் சொல்லணும்”

” சொல்லலாமே” என்று அவளோடு படுக்கையில் சரிந்தவனை , ரமேஷின் எண்ணிலிருந்து வந்த அழைப்புத் தடுக்க , அதே வேளையில் அறையின் தொலைபேசியும் அடித்தது.

கணவன் மனைவி இருவரும் ஐந்து நாள் பிரிவை சரிகட்டலாம் என்ற வேளையில் அவை ஒலிக்கவும் புன்னகையோடு எழுந்தார்கள்.

ரமேஷும் ,அனன்யாவும் வந்திருப்பதை அறிந்து கீழே வர , அனன்யா ராதிகாவைப் பார்த்து , “அண்ணி அண்ணன நாலு நாள் பார்க்கலனா நாங்க கண்ணுக்கு தெரிய மாட்டோம் போலயே ., வீட்டுக்குள்ள வந்ததும் நேரா மாடிக்கு ஓடிட்ட “

“அச்சச்சோ நான் கவனிக்கல அனு சாரி… “

“அது பரவால்ல …நீ இன்னைக்கு ஒரு பெரிய பிரச்சினைய தனியா சால்வ் பண்ணிட்டியாம், அம்மா உனக்காக பால் பாயாசம் செய்துருக்காங்க இந்தா ” என ஒரு ஸ்பூன் எடுத்து அவள் வாயில் வைக்க .. அதைச் சாப்பிட முடியாமல் குமட்டிக் கொண்டு வர வாஷ்பேசினை நோக்கி ஓடினாள் ராதிகா . அவள் பின்னயே ஜானகியும் ,அனன்யாவும் வேகமாகச் சென்றனர்.

அதிர்ந்த அரவிந்த் அவள் பின் போகப் போக கைப்பிடித்து ரமேஷ் தடுத்து நிறுத்தினான்.

அவனைப் பார்த்து சிரித்த ரமேஷ் தோளோடு அணைத்து” வாழ்த்துக்கள் மச்சான் … நம்மள போலவே சீனியரும் இல்லாம ஜூனியரும் இல்லாம சேம் டைம்ல ஜூனியர்ஸ் ரெடி பண்ணிட்டோம் போல ….”

“என்னடா சொல்ற விடு , உன் தங்கச்சி உடம்பு சரியில்லாம இருக்கா நீ சிரிக்கிற “

அதற்குள் அங்கு வாந்தி எடுத்து  விட்டு முகம் கழுவியவள் அருகில் நின்றவர்களிடம் ,

“ஒன்னும் இல்ல அத்தை … நாலு நாளா சரியா சாப்பிடலயா … அதான் இனிப்பு சாப்பிட்டதும் இப்படியாகிருச்சு”

அவள் பதிலில் முகம் வாடிய ஜானகி , ” கடைசியா எப்பம்மா தலைக்கு குளிச்ச “

“இன்னைக்கு காலையில கூட தலைக்குத் தான் அத்தை குளிச்சேன்.. “

அவள் பதிலில் பட்டென்று  சிரித்த அனன்யா , ” ம்மா நீங்கப் போய் அண்ணனுக்கும் , உங்க மருமகனுக்கும் பாயாசம் கொடுங்க … உங்க அருமை மருமககிட்ட நான் பேசுறேன்…” என தலை குனிந்தவளைப் பார்த்த ஜானகி … உணர்ச்சிவசப்பட்டு , அனன்யா கையைப் பிடித்துக் கொண்டவர் ,

” அனுமா என்னடா சொல்ற …. எங்கண்ணனும் வரப்போறாரா “

” ஆம் ” என்று தலையாட்டியவள் தாயைக் கட்டிக் கொண்டாள். தாய் மகள் இருவரையும் புரியாத பார்வைப் பார்த்த ராதிகாவை ,கை பிடித்து சமையலறை அழைத்துச் சென்றவள் ,

“அண்ணி அம்மா என்னக் கேட்டாங்கனா…. ” என்றவள் விளக்கிச் சொல்ல… அவள் சொல்ல சொல்ல தனக்குள் கணக்கிட்டவள் … அனன்யாவை இறுக அணைத்துக் கொண்டாள்.

“அண்ணி இரு ஒரு நிமிஷம் … எனக்கு டவுட் வந்துரும்னு ரெண்டு மூணு வாங்கி வச்சேன் ” என்றவள் வேகமாக வெளியே சென்று சோதிக்கும் கருவியைத் தந்து அவளை பின்புறம் இருந்த பாத்ரூம் அனுப்பி விட்டாள்.

அவள் வரும் வரைக் காத்திருந்தவளுக்கு அவளது முகமே தெளிவாக்கிவிட …

அருகில் வந்த அனன்யா ,அவள் வாயை மூடிவிட்டு “இங்கயே இரு” என்று சமையலறையை விட்டு வெளியே சென்றாள். எந்தப் பெண்ணுமே இப்படி ஒரு விஷயத்தை கணவனிடம் சொல்லத்தான் முதலில் விரும்புவாள் .. தான் அனுபவித்தது என்றவுடன் தான் அவள் வாயை மூடினாள் அந்த நல்ல தோழியும் , நாத்தனாரும் ,அண்ணியுமான அனன்யா.

வேகமாக சமையலறையில் நுழைந்தவன், தனக்கு முதுகு காட்டி நின்ற மனைவியை நெருங்கி , ” ஸ்வீட்டி” என , திரும்பியவள் அவன் நெஞ்சில் தலைவைத்து அணைத்துக் கொண்டாள். அவள் உச்சந்தலையில் இதழ் பதித்தவன் ஒன்றும் பேசாமல் நின்றுக் கொண்டான்.

மெளனமே மொழியாகிப் போனது அங்கே …, மெளனம் உணர்த்தாதயா வார்த்தைகள் உணர்த்திவிடும். மனைவியை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவன் மனைவியுடன் தாயின் பாதம் பணிந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.

ரமேஷை அணைத்துக் கொண்டவன் …”மாப்ள நீ சீனியரா நான் சீனியரா ” என்று கண் சிமிட்டவும் ,

“போடா மச்சான் போய் டாக்டரப் பாரு … நான் பார்த்துட்டு வந்துட்டேன் …அப்ப நான் தான் சீனியர் “

பலமாக சிரித்தவன் , “நல்லா பேச கத்துக்கிட்ட “

” எல்லாம் என் வீட்டம்மா பிராக்டிஸ் தான்…”

என்றவன் அனன்யாவோடு ஜானகியின் காலில் விழுந்தான். ஆசிர்வதித்தவர் , ” அனுமா நீ எங்கண்ணனையும் , ராதா மா நீ உங்க மாமாவையும் எனக்கு திருப்பிக் கூட்டிட்டு வந்துருங்க… ” என்றார்.

ரமேஷ்  அனன்யாவை அருகில் இழுத்து, “பப்ளி … குழந்தை பெத்து எவ்வளவு நாள் உன் பக்கத்துல வரக்கூடாது… “

“என்ன அத்தான் நீங்க … இப்பவே இதெல்லாம் கேட்டுட்டு …” என்று முகம் சிவந்தவளை ,

“அத்தை முதல்ல எங்கப்பாவ கூட்டிட்டு வரச் சொல்றாங்க … நான் எங்கம்மாவப் பார்கணுமே அதுதான் கேட்டேன்.” எனவும் , ‘ஆங்’ எனப் பார்த்தவள் கன்னத்தில் தட்டி விட்டுச் சென்றான்.

இரவாகி விட்டதால் காலையில் சென்று மருத்துவரைப் பார்க்கலாம் என முடிவெடுத்து அறைக்குச் சென்றனர். தாயம்மாவிற்கு அழைத்து விவரம் சொன்னதும் மறுநாளே கிளம்பி வருவதாகச் சொல்லவும் , அவர் வருவதற்கான ஏற்பாட்டையும் செய்தனர்.

அறைக்குள் வந்தவளை வழக்கம் போல் தூக்கிக் கொண்டவனிடம் , ” நாளைக்கு உங்க பிள்ளை வந்ததும் கேட்கப் போறாங்க… அம்மாவ தூக்கிட்டே இருக்கீங்கனு “

“என் பிள்ளைக்கு பிள்ளை வந்தாலும் என் பொண்டாட்டிய நான் தூக்குவேன்னு சொல்லுவேன்”

“பாஸ்….” , ” ம் … “, “அத்தான்…. ” இப்ப இப்படிக் கூப்பிட்டா எப்படி … நாளைக்கு டாக்டர் பார்த்ததுக்கப்புறம் … கூப்பிடுடா….”

“எனக்கு தேங்க்ஸ் ….. சொல்லணும் போல இருக்கு…”

“டியர் … இப்ப சின்ன தேங்க்ஸ் போதும்” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு இறக்கி விட , அவன் சட்டைக் காலரை இறுகப் பற்றி அவனை விடாமல் ,

“வேணும் …. தேங்க்ஸ் வேணும்…. நீங்க வேணும்…” என உணர்ச்சிகளை கண்களில் தேக்கி கேட்டவளிடம் மறுக்க மனமில்லாது யோசித்தவனிடம் ,

” என் அத்தான எனக்குத் தெரியும் …, என்னையே பூப்போல பார்த்துக்குறவங்க….அவர் பிள்ளைய பார்த்துக்க தெரியாதா … ஆமா தெரியாதத எல்லாம் தெரிஞ்சுக்கோனு எனக்கு போன் வாங்கி தந்தீங்க … நீங்க அதை யூஸ் பண்றதே இல்லையோ “

அதற்கு மேலும் விட்டு வைப்பானா அரவிந்த் … மனைவியை பூப்போல் கையாண்டான். கூடல் முடிந்து கணவன்  நெஞ்சில் தலை வைத்திருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து அவன் மார்பை நனைக்க பதறியவன்,

“என்னடா எங்கும் வலிக்குதா… டாக்டர் கிட்ட போவோமா….”

“இல்லை என்பதாக தலையாட்டியவள் , “நீங்க சொல்ற காதலுக்கும் மேல நான் ஏதோ ஃபீல் பன்றேன், அது… அது … என்ன உணர்வுனா இப்பவே செத்துடலாம் போல இருக்கு….. உலகத்துல உள்ள அத்தனை சந்தோஷத்தையும் நீங்க எனக்கு தந்துட்டீங்க…. அனாதையாநின்னப்பக் கூட இப்படி நினைச்சது இல்ல…. இப்ப நினைக்கிறேன்.” என்று அழுதவளை,

“டியர் நீ எனக்கு காதலயே சொல்ல வேண்டாம் … இப்படி ஒரு வார்த்தைய இனி சொல்லிப் பாரு என்ன செய்றேன்னு…. இப்ப தூங்கு … நீ தூங்கினா தான் நம்ம குட்டியும் தூங்குவாங்க… ” என்றவன் அவள் தலை கோத , “அத்தான் பாட்டு… நீங்க பக்கத்துல இல்லாதப்போ போன்ல கேட்டேன் … இப்ப நீங்க தான் அந்த பாட்ட பாடணும்”

“பூவிலே மேடை …..”

          நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் ராதிகா , பல மணி நேரமாக இல்லை … பல மாதங்களாக … கிட்டத்தட்ட ஆறு மாதமாக …

கட்டில் அருகில் அவள் தலையோடு தலை சேர்த்து காதிலே “கும்பகர்ணி எப்ப எழுந்திருப்ப ,….போதும் நீ தூங்குனது ….இனி உனக்கு பாட்டே பாட மாட்டேன்… பாடுங்க பாடுங்க தூங்கணும்னு சொல்லு ….”

அவள் உணர்வில்லாத கரம் பற்றியவன் …”காதலாம் காதல் … இனி சொல்லவே மாட்டேன் …நீ உணரவே வேண்டாம் …. வந்துரு எழுந்து வந்துரு ஸ்வீட்டி… நல்லா கேட்டுக்கோ…. காதல் அசி….. “அவள் கரம் எடுத்து முத்தம் பதித்தவன் , நீ எழுந்து வா காதல் அழகானதா இல்லையானு சொல்றேன்.” என்றவன் அப்படியே கண்ணயர்ந்தான்.

காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே

 

கணவன் என்ற சொல்லின் அர்த்தம்

கண் அவன் என்பேன்

உனது உலகை எனது கண்ணில்

பார்த்திட செய்வேன்

             காதல் அழகானது….

Advertisement