Advertisement

“ஹேய் கேகே (KK) எழுந்திரி “

பட்டென்று கண் விழித்தவள், எழுந்து தலையணைக் கொண்டு அவனை அடித்து , ” நானா கேகே… நீங்கதான் தான் கேகே….என்னை நைட் தூங்க விடுறதில்லை , காலையில ட்ரைவிங் வானு எழுப்புறது … அப்புறம் …நீ புக் எடுத்தது போலவே இல்லனு சொன்னதால எம்.பி.ஏ புக்ஸ எடுத்து படிச்சிட்டு …. கொஞ்ச நேரம் தாயம்மா கூட யும் அத்தைக் கூட யும் பேசிட்டு….அப்புறம்  ஆஃபிஸ் ….. இதுல எனக்கு கும்பகர்ணி பட்டம்”

அவளிடம் இருந்து தலையணையைப் பிடுங்கி கீழே போட்ட வன், அவளை அணைத்துப் பிடித்து , “அப்படிக் கூப்பிட்டதால தான எழுந்த… சரி அத விடு …. நீ என்னை என்னனு கூப்பிட்ட “

” என்னனு கூப்பிட்டேன் …”

“ப்ளீஸ் விளையாடாம சொல்லுடா … நீ கூப்பிட்டது அப்படி ஒரு ‘ கிக் ‘….ப்ளீஸ் ப்ளீஸ்”

“அது.. அது.….அத்தையும் தாயம்மாவும் உங்கள என்கிட்ட அப்படி சொல்லி தான் பேசுவாங்க … நானும் மனசுல அப்படியே தான் உங்கள நினைச்சுப்பேன் …அதான் தூக்கத்துல அப்படியே வந்துருச்சு போல….”

“அப்படி.. அப்படி..னு சொல்றதற்கு பதிலா அத்தான் … அத்தான்னு கூப்பிடலாமே … அப்படியே குளு குளுனு இருக்குத் தெரியுமா”

” இருக்கும் இருக்கும் … போய் ரெடியாகிட்டு வாறேன்”

“வெய்ட்…வெய்ட் நீ இன்னைக்கு எங்கயும் வர வேண்டாம். தங்கச்சிட்ட சொல்லி உனக்குத் தேவையானது எல்லாம் வாங்கி வச்சுட்டேன். இப்ப உனக்கு ரொம்ப முக்கியமானதுனு தோணுறத மட்டும் எடுத்து வச்சுக்கோ டா”

” என்ன…. அனுவும் ஒரு பெரிய சூட்கேஸ் கொடுத்து விட்டுருக்கானு தெரியும் , என்னதுனு தெரியாது … எங்க போறோம்ங்க”

“ஒரு _ பதினஞ்சு நாள் நம்ம ரெண்டு பேருக்கும் லீவு , ஆஃபிஸ் , உன் படிப்பு , டிரைவிங் இப்படி எல்லாத்துலருந்தும் , நாம ஹனி மூன் போறோம். உனக்கு பாஸ்போர்ட், விசா எல்லாம் ரெடி பண்ணோம் தானே… இப்ப எல்லாம் கிடைச்சாச்சு… எடுத்து வை நான் வந்துடுறேன்”

அதன் பிறகு நேரம் விரைவாக சென்றது போல் இருந்தது. ரமேஷும் அனன்யாவும் கோவை வந்து அவர்களை வழியனுப்பி வைத்தனர்.ஜானகியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் , தாயம்மா தன் மகள் வீட்டிற்குச் சென்று வருவதாக சொல்லிவிட்டு அவரது ஊரான உடுமலைபேட்டை சென்று விட்டார். கணவனை இழந்து மகளை திருமணம் செய்துக் கொடுத்து விட்டு தனியாக இருந்தவரைத்தான் ஜானகிக்கு துணையாக அழைத்து வந்தது.

இப்பொழுது ஜானகியின் உடல்நிலை தேறவும், எப்பொழுதுதாவது பார்த்து விட்டு வரும் மகளுடன் சிறிது நாட்கள் சென்று இருக்க விரும்பினார் .எனவே அவரை அனுப்பி வைத்துவிட்டு ரமேஷும் அனன்யாவும் ஜானகியுடன் இருந்தனர்.

           பனிப் பிரதேசம் மட்டுமல்ல இயற்கை இளம் தம்பதியர்களுக்காகவே உருவாக்கி தந்த இடமென்று சுவிட்ஸர்லாந்தின் ஜூன்ஃப்ரா (jungfrauh, இதன் உச்சரிப்பு ஒவ்வொரு விதமாக சொல்வர் ) முழுக்க பனிப் படர்ந்துக் காணப்பட்டது. ஒவ்வொருவரும் பனியில் சறுக்கி விளையாட , போட்டோ எடுக்க என்று ரசித்துக் கொண்டு இருந்தனர்.

அனன்யா அங்குப் போட்டுக் கொள்ள ராதிகாவிற்கு வாங்கிய அத்தனையையும் போட்டு முகம் மட்டுமே தெரிய அந்த அழகை ராதிகாகண்களில் நிரப்ப, அவளை கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தான் அரவிந்த்.

திடீரென்று பின்னாலிருந்து அணைத்தவன் அவளை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான். பொது இடத்தில் என்ற நினைவில் நெளிந்தவளை,

“ஹேய் ஸ்வீட்டி இது இந்தியா இல்ல … இப்ப நீ தள்ளிப் போன அடுத்து நான் அது தான் செய்வேன்” என்று அங்கு நெருங்கி முத்தமிட்டுக் கொண்டிருந்தவர்களைக் காட்டினான்.

“ஐயோ… அப்படியெல்லாம் நாம இங்க செய்ய வேண்டாம்… , இப்படியே இருக்கலாம் … எப்படி எல்லா இடமும் கரெக்டா வாறீங்க …. நீங்க அடிக்கடி வருவீங்களா இங்க”

“ம் … பிஸ்னஸ் விஷயமா வருவேன் … நீ இடங்களப் பாரு … நான் உன்னைப் பார்க்கிறேன் ….”

“பாஸ்…. தேங்க்ஸ் சொல்லணும் போல இருக்கு…”

” இங்கயே சொல்லலாம் … நோ ப்ராப்ளம் “

“அத்தான்ன்ன்ன் “அவளின் அந்த அழைப்பில் ,

“கிளம்பு கிளம்பு ரூம்ல போய் தேங்க்ஸ் சொல்லிக்கலாம்” என்றவன் அழைத்துக் கொண்டு அறைக்கே வந்து விட்டான்.

“ஏன் டியர் , என்னமோ நான் கொடைக்கானல்ல பிறந்து வளர்ந்தவ குளிரெல்லாம் அப்படி எனக்குப் பெரிசில்ல சொன்ன … இப்ப இந்த முகத்தை தவிர எல்லா இடமும் கவர் பண்ணிருக்க ” என்றவாறே அவள் குளிருக்கு  அணிந்திருந்த  குல்லா , கிளவுஸ் ஒவ்வொன்றாக கழற்ற ….

“எ… எ …. எனக்கு குளிரும்….” என மெல்லியக் குரலில் சொல்லியவளை….” குளிருக்கு என்ன செய்வ” என்றான்.

அவனைத் தள்ளி விட்டு அந்தப் பெரிய மெத்தையின் , மெத்தைப் போன்ற போர்வைக்குள் சென்றவள்,

“பாஸ் …..போர்வை போர்த்திக்குவேன்” என்றவாறு முகத்தையும் மூடிக் கொண்டாள். அதன் பிறகு அந்த போர்வைக்குள் போர்வையாக அரவிந்தே ராதிகாவிற்கு மாறிப் போனான்.

அரவிந்த் அந்த பதினைந்து நாட்களும் அவளுக்கு தந்தது ‘காதல்… காதல்… காதல் மட்டுமே … ஓர் இளம் கணவன் தன் மனைவிக்கு அளிக்கும் அத்தனை பரிசுகளையும் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பூர்த்தி செய்திருந்தான். கிளம்பும்போது எல்லோருக்கும் அங்கிருந்து பரிசுப்பொருட்கள் வாங்கியவள், தனக்கென்று எதுவுமே வாங்கிக் கொள்ளவில்லை என்பதை விட அந்த எண்ணமே இல்லாமல் இருந்தாள்.

அரவிந்த் கேட்டதற்கு “உங்களைத் தவிர இந்த உலகத்தில் எனக்கு எதுவுமே வேண்டாம்” என்றவளிடம் ,

“ஐ லவ் யூ டியர்” என ,

குறும்புடன் கண்ணைச் சிமிட்டி , ” ஐ டூ அத்தான் “

” ஐ க்கும் டூக்கும் நடுவுல ‘லவ் யூ’ போட மாட்ட … ஆனா அத்தான்ன்ன் ….ன்னு சொன்னப் பாரு அது போதும் “

 இன்றோடு வீட்டிற்கு வந்து மூன்று வாரங்கள் ஆனது. அரவிந்த் இன்னும் இரண்டு நாட்களில் சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தது .அதனாலயே வந்தவுடன் மறுபடியும் அவளை அலுவலகம் அழைத்துச் சென்று சில வேலைகளை பயிற்றுவித்தான்.

அவனுடனான உள்ளம் மற்றும் உடல் நெருக்கத்திற்குப் பிறகு நிகழும் முதல் பிரிவு என்பதால் அவள் சோர்ந்து போய்க் காணப்பட்டாள். அவன் கிளம்பும் நாள் நெருங்க நெருங்க சரியாக சாப்பிடாமல் உறங்காமல் அவனருகிலேயே இருந்தாள்.

மறுநாள் மதியம் விமானம் என்பதால் அன்றிரவு எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்தவன் , “ஹேய் கேகே தூங்கல”

“எனக்கு தூக்கம் வரல” , “கும்பகர்ணிக்கு தூக்கம் வரலயா நம்ப முடியலயே…. “

” எப்போ வருவீங்க” என்று அழுகையை அடக்கிக் கொண்டு கேட்டவளிடம் ,

“ஸ்வீட்டி… பக்கத்துலயே இருந்துட்டு திடீர்னு கிளம்பினா அப்படித்தான் இருக்கும்… ஒரு அஞ்சு நாள் ஓடியே போயிரும். தூங்குடா ‘நான் இதையெல்லாம் சரிபார்த்துட்டு தூங்குறேன் ஓகே… “

“எனக்கு தூக்கம் வரல , நீங்க படுக்கும்போது தூங்குறேன்”

மனைவியின் அவன் மீதான அன்பு நெகிழ வைத்தாலும் அவள் உடல் நலத்தை எண்ணியவன் ,

அவளை கைகளில் சிறு குழந்தைபோல் தூக்கிக் கொண்டு,

          “பூவிலே மேடை… நான் போடவா..

           

            பூவிழி மூட …… நான் பாடவா …

 

             தோளிரண்டில் இரு பூங்கொடி ….

             

               என் சொந்தமெல்லாம் இது தானடி : ..”

“அத்தான்…. நீங்க ரொம்ப நல்லா பாடுறீங்க … இது நீங்களே கிரியேட் பண்ண கவிதையா” என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கேட்டவளிடம் ,

“டியர் இருந்தாலும் நீ என்னை ரொம்பத்தான் கிண்டல் பண்ற… நான் கவிதை எழுதுற அளவுக்கு பெரிய அறிவாளி லாம் இல்லை” என்றவன் , கட்டிலில் அமர்ந்து மடியில் அவளை இருத்திக் கொண்டவன் , மியுசிக் சிஸ்டம் ரிமோட்டை எடுத்து அந்தப் பாடலை ஒலிக்க விட்டான்.

அந்தப் பாடலை கேட்டவாறே தோளில் அவளை சாய்த்துக் கொண்டவனிடம் ,

“கிண்டல் பண்ணலங்க, எனக்குப் புதுப்பாட்டேத் தெரியாது … நீங்க பழைய பாட்டெல்லாம் போட்டா எனக்கு எப்படித் தெரியும் … ” என்றவளிடம் ,

“என்னா …… து பழைய பாட்டா” நடிகர் வடிவேல் பாணியில் பேசியவன்,

“இது இளையராஜா எய்டீஸ்ல போட்ட பாட்டு டியர்”

“நான் நைன்டீஸ் கிட் ஆக்கும் ” என்று செல்லமாக அவன் மீசையை இழுத்தவளிடம் ,

“நானும் நைன்டீஸ் தான் … நானும் நைன்டீஸ் தான்…” என்று சிரித்தவன் ,

“ஜோக்ஸ் அபார்ட் …., ரதி எங்கப்பா பெரிய இளையராஜா விசிறி …. இந்தப் பாட்ட எங்கம்மா ஒரு பக்கம் , நான் ஒரு பக்கம்னு தூக்கி வச்சு பாடுவாங்க…. நான் இதைக் கேட்டாலே தூங்கிடுவேன்…. எங்கப்பா அம்மாவ அவ்வளவு லவ் பண்ணாங்க….” என்று பழைய நினைவுக்குப் போனவன்,

தலையை உலுக்கி , “இதை அடிக்கடி கேட்டதால அனு குழந்தையா இருக்கும் போது அவளுக்கு பாடி தூங்க வைப்பேன் … இப்ப உனக்கு …” என்றவன், அந்தப் பாடலை சிஸ்டத்தில் ஆன் செய்யப் போக அதைத் தடுத்தவள் ,

தன் மொபைலை ஆன் செய்து ” நீங்க பாடுங்க… நான் ரெக்கார்ட் செய்துக்கிறேன்” மனைவிக்காக அவளை தோளில் சாய்த்து ,

            “பூவிதழ் போல முல்லை என் கிள்ளை

 

             புன்னகை செய்தால் கண் படும் ….

 

             கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட

 

             கண்ட என் நெஞ்சம் புண்படும் …..

 

              நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழ

 

               வரமும் வேண்டி தினமும் தவமிருக்கும் ….

மறுபடி மறுபடி பாட சொல்லி அந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டே உறங்கி விட்டாள் ராதிகா .

Advertisement