Advertisement

ராதிகாவின் உலகில் அரவிந்தைத் தவிர வேறு ஒன்று மே அவளுக்குத் தென்படவில்லை. கிளம்பும்போது அரவிந்தின் தோள் சாய்ந்துக் கொண்டவள் ,

“நான் இந்த பங்களாவக் கடக்கும் போது எல்லாம் , எங்க மாமா என் அப்பா யாருனு கேட்க வந்தப்போ கிடைச்ச கேவலமான பதில் தான் ஞாபகத்துக்கு வந்து வெறுப்பு வரும். ஆனால் இப்போ திகட்ட திகட்ட சந்தோஷத்த தந்த வீடா மட்டும் தான் என் நினைவில இருக்குங்க … இங்க வந்தப்பக் கூட அப்படி தான் மனசுக்கு இருந்துச்சு ….. எல்லாம் உங்களால … “

“தேங்ஸ் சொல்லத் தோணுதா ஸ்வீட்டி, அப்படினா சொல்லு உள்ள போயிரலாம்” என்று கண் சிமிட்டவும்

“ம்… ம்ஹூம்….” என்றவள், “கிளம்புங்க கிளம்புங்க இருட்டறதுக்குள்ள மலையவிட்டு இறங்கணும். அங்க வீட்ல போய் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். புன்னகையுடன் காரை எடுத்தவன் அதை லாவகமாக வளைவுகளில் திருப்பும் போதெல்லாம் அவனை நெருங்கிப் பிடித்துக் கொண்டவள்,

“இந்தப் பொம்மைக் கார மெதுவா ஓட்டுங்கனா , நான் மெதுவா தான் ஓட்டுறேன் சொல்றீங்க … இந்த சத்தமே பயமாருக்குங்க”

” போனதும் உனக்கு டிரைவிங் சொல்லித்தரது தான் என் முதல் வேலை ” என்றான்.

வீட்டிற்கு இவர்கள் வந்து சேரவும் , ரமேஷும் அனன்யாவும் கிளம்பத் தயாரானர்கள்.

“மாப்ள … நாங்க தான் தனிமைய அனுபவிச்சது போல இருக்கு … ராதிகாவுக்குத் தான் விசா கிடைக்க லேட்டாகும் , நீயும் அனன்யாவும் ஸ்விஸ்க்கு போய்ட்டு வாங்கனு சொன்னா கேட்க மாட்டிக்குற….”

“மச்சான் , நாம வருஷா வருஷம் வேர்ல்ட்டூர் போவோம் , சில சமயம் அத்தைக்கு ட்ரீட்மென்ட் னு போவோம் … நீ என்ன பண்ணுவ அத்தையவும் அனுவையும் என் பொறுப்புல வெளிய கூட்டிட்டுப் போக சொல்லிட்டு , நீ பொறுப்பான பிள்ளையா பிஸ்னஸ் பார்க்கப் போய்டுவ…, தங்கச்சிக்கும் வெளிநாடு புதுசு … அதனால நீ தான் ஹனிமூன் போகணும்”

” இருந்தாலும்….”

“மச்சான்… ஒரு பிரண்டா சொல்றேன் … நானும் உன் தங்கச்சியும் சந்தோஷமா இருக்கோம்டா… சின்ன வயசில இருந்து இப்படி எனக்காக எல்லாம் செய்ய அம்மா இல்லையேங்கிற வருத்தம் இப்ப துளிக் கூட இல்லாம உன் தங்கச்சிப் பார்த்துக்கும் போது எனக்கு வேற என்ன வேணும் சொல்லு…. நாங்க இப்பவே ஹனி மூன் பீரியட்ல தான் இருக்கோம்…. அதனால எங்கள யோசிக்காம நீ நிம்மதியா லைஃப என்ஜாய் பண்ணு ஓகே”

தன் மனைவியுடன் சிரித்துப் பேசிக் கொண்டே வந்த தங்கையின் புன்னகையைக் கண்டவன் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.

ஜானகி தான் அரவிந்திடம் “அரு என்கிட்ட சொல்லாம அங்க போயிருக்க … அதுவும் நீயே காரை ஓட்டிட்டு  வேண்டாம் யா .. அம்மாவுக்கு நீ வேணும் … உன் மூலமா உன் அப்பா எனக்கு வேணும்..”

என்றவரை தேற்றியவன் இனி டிரைவர் போட்டுக் கொள்வதாக சொன்ன பிறகுதான் அவர் சமாதானமடைந்தார்.

” பாரேன் நான் இத்தனை நாளா சொன்னா கேட்கல .. அப்ப அத்தை மூலமாவே நானும் வாறேன்…. “

” என்ன … “

“டிரைவிங் கத்துக்க மாட்டேன்னு தான் “

” நோ சான்ஸ் மை டியர் … அந்த விஷயத்துல அம்மாவ எப்படி சமாளிக்கனு எனக்குத் தெரியுமே… “

அவனை முறைத்துக் கொண்டே சென்றவளை முறுவலுடன் பின் தொடர்ந்தவன் , அவன் சொன்னது போல் தான் செய்தான். தினமும் காலையில் அவளை எழுப்பி டிரைவிங் கற்றுக் கொடுப்பவன் , வீட்டிற்கு வந்து அவளையும் கிளப்பிக்கொண்டு தான் அலுவலகம் சென்றான்.

வீட்டில் அவளிடம் காதல் மன்னனாக வலம் வருபவன் , அலுவலகத்தில் அதற்கான அறிகுறியே இல்லாதவனாக , அலுவலர்களிடம் ஓர் ஆளுமையையே கடைப்பிடித்தான்.

அன்று அப்படித்தான் யாருடனோ கோபமாக போனில் பேசிக் கொண்டிருக்கையில் அவனது கேபினுக்குள் வந்தவள் அவனது கடினத்தில் பயந்து போய் எதிரே அமர்ந்து கொண்டாள்.

போன் பேசி முடித்தவன் , மனைவியிடம் புன்னகையுடன் “என்னடா எதுவும் டவுட்டா….”

“ம்… ஆமா…. இல்ல … ஆமா”

சிரித்துக் கொண்டே , “என்ன சொல்லு…. “

“உங்களுக்கு கோபம் கூட வருமா” என்று கண்களை அகல விரிக்கவும் …

“நான் மனுஷன் தானே … கோபம் வராம எப்படி இருக்கும் “

“இப்ப தான் உங்க கிட்ட இவ்வளவு கோபம் பார்க்கிறேன்.. சரிங்க இதுல சைன் வாங்கிட்டுப் போக வந்தேன்.”

“நீயும் ஒரு எம்டினு மறந்துட்டியா , நீயே சைன் பண்ணு, நான் இங்க இல்லனா நீ தான் போடணும், இப்பவே போட்டுப் பழகிக்கோ டியர்”

எழுந்து அவனருகில் வந்தவள் , ” இங்க CCTV இருக்கா பாஸ்… “

” இருக்கு டியர் … ஆனா அந்த சோஃபா கிட்ட போனா எதுவும் தெரியாது …. என்னடா எதுவும் ஸ்பெஷல் “

“ஆமாங்க ஸ்பெஷல் தான் ” என்று கண் சிமிட்டியவளிடம் மயங்கியவன் ,

“டியர் …. பக்கத்துல வேற வாறே … இரு இந்த ரூமோட  கனெக்ஷன் கட் பண்ணிட்டு வாரேன்” அவன் டேபிளில் அவனறையில் இருந்த அதன் ஸ்விட்சை அணைக்கவும் ,

புடவை அணிந்திருந்தவள் அதன் முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகியவள் ,

அவன் மீசையை பிடித்து இழுத்துக் கொண்டே , ” எப்ப பாரு நான் இல்லைனா , நான் இல்லைனா … இனி இந்த வேர்ட் யுஸ் பண்ணீங்க … “

“ஆ….. வலிக்குதுடா ….இனி சொல்லல , வேணும்னா சொன்ன வாய்க்கு அடிக் கொடுத்துரு “

“இதோ” என்றவள் … அவன் உதட்டை கடித்து வைத்தாள். “வலிக்குதா “

“இல்லையே” … மறுபடியும் கடித்து விட்டு “இப்ப “

“ஏதோ கொசு கடிச்ச மாதிரி இருக்குது, நான் கடிச்சு எப்படினு பிராக்டிஸ் தரட்டா”

“ஒன்னும் வேண்டாம். இனி இப்படி சொல்லாதிங்க … என்னால அது கேட்கவே முடியல… நான் சொல்லட்டா … நான் இல்லைனா நீங்க தானே பார்ப்பீங்க ” என்று கண் கலங்கியவள் அவன் மடியில் அமர்ந்து கழுத்தில் தலை வைத்து கட்டிக் கொண்டு அழுத வளை அணைத்துக் கொண்டவன்,

“சாரி டா சாரி இனி அப்படி சொல்லல நீயும் விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதே …. ” என்று முதுகை தடவிக் கொடுத்தான்.

சிறிது நேரத்தில்  சத்தமே இல்லாது இருக்கவும் , “ஸ்வீட்டி… டியர்” என அழைத்துப் பார்க்க அவள் எழவில்லை என்றதும் பயந்து  போய் அவள் முகத்தை நிமிர்த்தப் பார்க்க , ” ம்ம் …தூங்க விடுங்க…. நைட்டும் தூங்க விடுறதில்ல … காலையிலயே எழுப்பியும் விட்டாச்சு” என்று முனங்கியவள் அவன் தோளில் வாகாகப் படுத்துக் கொண்டாள்.

அரவிந்திற்கு சிரிப்பை கட்டுப்படுத்துவது பெரும்பாடாகிவிட்டது. சிரித்தால் எழுந்து விடுவாள் என்றெண்ணியவன் அவளை குழந்தையை தூக்குவது போல் தூக்கி கொண்டு போய் அந்த பெரிய சோஃபாவில் படுக்க வைத்தான்.

அவளை தூங்க விட்டு வேலையைப் பார்த்தவன் அவள் எழும் வரைக் காத்திருந்தான்.

மதியம் பனிரெண்டு மணி போல் படுத்தவள் மாலை நான்கு மணிக்குத்தான் எழும்பினாள். மெல்ல எழுந்து அமர்ந்தவளுக்கு அப்பொழுதுதான் இருக்கும் இடம் உணர , வேகமாக எழுந்தவள் , அவளையே பார்த்துக் கொண்டிருந்த கணவன் அருகில் வந்து , “என்னங்க என்னை எழுப்பிருக்கக் கூடாதா … மணி நாலாகுது.. வாங்க வீட்டுக்குப் போகலாம்… நான் சாப்பிடாம நீங்களும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க” என்றவாறே அங்கிருந்த ரெஸ்ட்ரூமில் நுழைந்து கொண்டாள்.

அவள் சொல்லிய வார்த்தைகள் முறுவலைத் தந்தாலும் யோசிக்க ஆரம்பித்தான்.மறுநாளில் இருந்து மதியம் சாப்பிட வரும் போது அழைத்துப் போவதாக தெரிவித்தவன் , அதன்படியே செய்தான். ஒரு வாரம் கழித்து , அதிகாலையில் எழுப்பியவனிடம் ,

“ப்ளீஸ் அத்தான் … கொஞ்ச நேரம் ….” என்று புரண்டவளை .. புன்னகை மலர தன்புறம் திருப்பியவன், ‘

” என்ன… என்னனுக் கூப்பிட்ட “அவளிடம் பதிலில்லாது இருக்கவும் , சமீபத்தில் அவளைக் கிண்டல் செய்யும் விதமாக அவன் அழைக்கும் அழைப்பை உபயோகித்தான்.

Advertisement