Advertisement

அழகு 37

       அந்த படுக்கை அறையின் பால்கனியில் நின்று எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் ராதிகா . அங்கிருந்துப் பார்த்தால் கொடைக்கானல் முழுமையும் தெரியும். பார்க்கவே ரம்மியமாக இருக்கும். ஆனால் அவள் கண்ணிலும் கருத்திலும் அந்த அழகு தெரியவில்லை.

அறையினுள் வந்த அரவிந்த் மனைவியைத் தேடி அங்கு வந்தவன் அவளை பின்புறமாக நின்று அணைத்துக் கொண்டான். அவள் கைகளோடு கைகளைக் கோர்த்துக் கொண்டவன்,

“ஏன்டா ஸ்வெட்டர் கூட போடாம நிக்கிற , குளிரல….”

திரும்பி அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் இடையைக் கட்டிக்கொண்டவள் ,

“எனக்கு இது பழக்கம் தான் ….” என்றவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து ஏதோ சொல்ல வரவும் ,அறைக்கதவும் அவனது போனும் ஒரே நேரத்தில் சத்தம் எழுப்பியது.

“பார்த்தியா மறந்தே போய்ட்டேன் … சீக்கிரம் ரெடியாகி வாடா… நாம கொஞ்சம்  வெளிய போய்ட்டு வரலாம்” என்றவன் மொபைலை எடுத்துப் பேசிக் கொண்டே சென்றான்.

அவன் அவளுக்காக வாங்கியிருந்த புத்தம் புதிய சுடிதாரில் கிளம்பியவள் வெளியில் வந்து யாரிடமோ பேசிக் கொண்டு இருந்த அரவிந்த் அருகில் வந்து நின்றாள்.

அவளைப் பார்த்ததும் பேசிக் கொண்டு இருந்தவரை அனுப்பி வைத்துவிட்டு , “கொடைக்கானல்ல பூக்கிற ரோஜாலாம் அழகுனு நினைப்பேன். நீ அந்த நினைப்பை பொய்யாக்கிட்ட  மை டியர்”

“பொய்…. பொய் … பொய் ” என்றவள் நாணத்துடன் அவன் தோளில் அடிக்க,

அடித்த கையை விடாமல் கோர்த்துக் கொண்டவன் ,

“மெய்….மெய் ..…மெய்….”

“ச்சூ… போதும் விளையாட்டு … எங்க போறோம்ங்க … “

“சஸ்பென்ஸ் அன்ட் சர்பிரைஸ்ஸ்ஸ்ஸ்”

” உண்மையச் சொல்றேன் …நீங்க தர்ற சர்பிரைஸ்லாம் பார்த்து எனக்கு ஹார்ட் அப்ப அப்ப நின்னுட்டு துடிக்கிற ஃபீல் …. இன்னும் இப்படி பண்ணிட்டே இருந்தீங்கனா … எனக்கு ஹார்ட் அட்டாக் தான் வரப்போகுது”

அவளை வேகமாக பிடித்து திருப்பியவன் , கண்கள் சிவக்க , “விளையாட்டாக் கூட அப்படி சொல்லதடா… என்னால தாங்க முடியாது”

எப்போதும் அவளிடம் மென்மையாகவே அவளை கையாலும் அவனது கை அழுத்தத்திலயே அவனது உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவள் , அது நடுக்கூடம் என்பதையும் மறந்து அவனை இறுக கட்டி அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழுதவள் ,

“முடியலங்க … நிஜமா உங்க அன்ப சுமக்க முடியலங்க, நெஞ்செல்லாம் வலிக்குது…. அப்படி என்கிட்ட என்ன பிடிச்சதுனு என்னை கல்யாணம் பண்ணீங்க…. உங்க அன்பு, பாசம், அக்கறை… இது எல்லாம் என்னைய மூச்சு முட்ட வைக்குது. எல்லாம் எனக்காக எனக்காக அப்படிங்கும் போது….. நான் இதே அளவு அன்பு, பாசம் எல்லாம் உங்க மேல வச்சுருக்கனானு கேட்டா …. நிச்சியமா எனக்கு சொல்லத் தெரியாது. ஆனா உங்கள ரொம்ப …ரொம்ப பிடிச்சிருக்கு ” என்றவள் அவனை இறுக கட்டிக் கொண்டாள்.

தானும் கட்டிக் கொண்டவன் , “டியர் வித் யுவர் பெர்மிஷன் கோவிச்சுக்காம இந்த ஒரு வாட்டி அந்த வேர்ட் யுஸ் பண்ணிகிட்டா “

நிமிர்ந்து முகம் பார்த்தவள் , “என்ன வேர்ட் …ம் பர்மிஷன் க்ரான்டட் ” என்று புன்னகைத்தாள்.

நிமிர்ந்தவள் நெற்றியோடு தன் நெற்றியை குனிந்து ஒட்டியவன்,

” சொல்லித் தெரிவதில்லை காதல்…. அது உணரப்படும். இப்ப நீ என்னை என் அன்பை உணர்ற இல்லையா ….அதுதான் காதல் … அப்புறம் பிடிக்கலனா யாரும் காரணம் சொல்லலாம். ஏன் பிடிச்சதுணு காரணம் தேட முடியுமா … என் வாழ்க்கைல பெரிய பொக்கிஷம் டா நீ… அதையும் இதையும் போட்டுக் குழப்பி ரோஜா பூவ (அவள் கன்னத்தில் முத்தமிட்டு)வாட விட்டுறாத … வா போகலாம்”

அவன் அழைத்துச் சென்றது அவள் பிறந்து வளர்ந்த பூம்பாறை கிராமத்திற்குத் தான். அங்குள்ள குழந்தை வேலப்பர் ஆலயம் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் பெற்றவர்கள் , அந்த கோயில் சந்நிதியில் சிறிது நேரம் அமர்ந்தனர்.

கணவனிடம் இருந்து குங்குமம் வாங்கிக் கொண்டவளை அங்கிருந்த அர்ச்சகர் பார்த்து விட்டு அரவிந்திடம் ஏதோ சொல்லி சென்றார்.

அவனையேப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளிடம் , “ஸ்வீட்டி இப்படி என்னையே விடாம சைட் அடிக்கிற … .. இது கோவில் தான ….”

” எப்படி … எப்படி தெரியும் “

” இப்ப அம்மா வர்ற வரை … சமையலுக்கு ஆள் இருந்தும் செய்ய விடாம … எனக்கு பிடிச்சதா உன் கையால சமைச்சு தந்த … எனக்கு பிடிச்ச கலர்ல எனக்கு மட்டுமில்ல … உனக்கும் அதே கலர்ல டிரஸ் போட்டுக்கிற … ஐ… நோ .. உனக்கு பிங்க் கலர்தான் பிடிக்கும் , ஆனா எனக்கு பிடிக்கும்னு இந்த ரெட் கலர் போட்டு இருக்க… சொல்லு நானா உன் கிட்ட இது இது பிடிக்கும் , இது பிடிக்காதுனு சொல்லவே இல்லையே … எப்படி எப்படி தெரியும் ” என அவளைப் போலவே பேசிக் காட்டியவன் புருவங்களை ஏற்றி இறக்கினான்.

“அது… அது…” என்று திணறியவளிடம்,

“அது .. அது… நமக்கு ஒருத்தங்கள பிடிச்சதுனா.. அவங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது … அவங்களுக்கு இது செய்தா சந்தோஷப்படுவாங்க அப்படினு அவங்களுக்காகவே யோசிச்சு எல்லாம் செய்யத் தோணுது இல்லையா… அப்படித்தான்  .. உன்னை பத்தின அத்தனை விஷயங்களையும் தெரிஞ்சுகிட்டேன் …உனக்கு இந்தக் கோவில் ரொம்ப பிடிக்கும் , கொடைக்கானல்ல காலேஜ் விக்கெண்ட் குறிஞ்சி ஆண்டவரை பார்க்காம வரமாட்ட … இப்படி நிறைய …பிகாஸ் ஐ லவ் யூ டியர் … ஐ லவ் யூ சோ மச்… இந்தக் காதல் எனக்கு எல்லையில்லா சந்தோஷத்தை , வாழ்க்கைல உனக்காக நிறைய செய்ய என் வேலைல ஒரு உத்வேகத்த தருது … இப்படி நிறைய சொல்லலாம் …. “அவள் முகம் பார்த்தவன் , “ஒரு நாள் நீயும் உணர்வங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு… எஸ் வில் பி சூன் ( will be soon)என்றவன் அவளை அழைத்துக் கொண்டு அவள் அம்மா வீட்டிற்குச் சென்றான்.

ராதிகாவைக் கண்டதும் அருகில் இந்தவர்கள் வந்து குழ்ந்துக் கொண்டார்கள்.

” ராதிகா நீ உங்கப்பா வீட்டுக்கு போய்ட்டீயாமே”

” உன் வீட்டுக்காரர் உன் அத்தை பையனாமே”

பல கேள்விகள் கேட்டு அவர்களே ஒரு பதிலும் சொல்லி எல்லோரையும் சமாளித்து அனுப்பி வைத்தவள் .. தனது பொருட்கள் சிலவற்றை அங்கிருந்து எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அவர்கள் வீட்டை அடைய  இரவாகி விட்டது. வீட்டிற்குள் கார் நுழையவுமே அங்கு அவர்களுக்காக காத்திருந்தவர்கள் வந்து சூழ்ந்துக் கொண்டனர்.

காரை விட்டு இறங்கியவளுக்கு கண்ணீரை அடக்கவே முடியவில்லை.… வந்திருந்தவர்கள் அனைவரும் அவள் பள்ளி , கல்லூரிக் கால தோழிகள்.

கணவனையே வைத்தக் கண் வாங்காது பார்த்தவளை, அவளது தோழி  பானு கையோடு தோட்டத்துப் பக்கம் இழுத்துக் கொண்டு சென்றவள் , ” ராதிகா உன் ஹஸ்பண்ட அப்புறம் சைட் அடி … முதல்ல எங்களுக்கு பதில் சொல்லு , காலேஜ் முடிச்சதும் கல்யாணம் , அதுவும் உங்க அத்தை மகனோடவேனு ஏன்டி சொல்லல …. சொல்லியிருந்தா இந்த ஹான்ட்சம் ஹீரோவ நாங்கலாம் சைட் அடிச்சிருவோம்னு பயமா… சரியான அமுக்குனி டி நீ….”

தோழிகளின்  கிண்டல் பேச்சில் கணவனை திரும்பிப் பார்த்தவள் அவனது கம்பீரமான தோற்றத்தில் மயங்கித்தான் போனாள். ஒரு சாதாரண ஜுன்ஸ் டீ ஷர்டில் குளிருக்கு இதமாக ஜெர்கின் போட்டிருந்தவன் அதை கழட்டிக் கையில் போட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.

எல்லோருக்கும் பஃபே முறையில் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அங்கங்கே அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள். வந்திருந்தவர்களுக்கு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்து அவர்களை நல்ல முறையில் வழியனுப்பி வைத்த பின் , ஒரு தட்டில் கணவனுக்கான உணவு எடுத்து வந்தவள் , அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். இப்பொழுது பிறர் முன்னிலைத் தவிர மற்ற நேரங்களில் ஒரே தட்டில் தான் உணவு.

அவளுக்கும் ஊட்டியவன் , அவள் கண்கள் கலங்கி இருப்பதைப் பார்த்து ,

“என்னடா நீ… சந்தோஷமா இருந்தாக்கூட உன் கண்ல கண்ணீரப் பார்க்க முடியல … ப்ளீஸ் அழாத … ” என தட்டை கீழே வைத்து விட்டு கை கழுவி வந்தவனிடம் ,

“நான் அழல …. எனக்கு தேங்க்ஸ் சொல்லணும்”

“நம்ம தேங்க்ஸ் எப்படி சொல்லனும் தெரியும்ல ஸ்வீட்டி… அப்..”

நின்றுக் கொண்டிருந்தவன் அருகில் வேகமாக வந்தவள் அவன் கழுத்தை வளைத்து முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தாள். அரவிந்தோ திக்குமுக்காடி விட்டான். எப்போதும் கேட்டுப் பெறும் ஒன்றை விட கேட்காமல் விரும்பியது கிடைத்தால் அது தரும் சுகமே தனிதான் அதைத்தான் அவன் அனுபவித்தான்.

அவன் உதட்டை முற்றுகையிட முயன்றவளை தனக்கு வசதியாக கைகளில் தூக்கிப் பெற்றுக் கொண்டவன் …அதன் பிறகு கொடுக்க மட்டுமே செய்தான்.

அங்கிருந்த இரு நாட்களும் அவர்கள் எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பதும் , அவளுக்குப் பிடித்த இடங்களுக்கு அவளை அழைத்துப் போவதும் , அவள் வேலை செய்த தொழிற்சாலையிலயே அவளை முதலாளியாக நிற்க வைத்து அழகுப் பார்ப்பதும் என்று எல்லாம் அவளுக்காக அவளுக்காக மட்டுமே செய்தவன்…. வீட்டிற்கு வந்தால் கொடைக்கானல் குளிரை விரட்டும் அளவிற்கு நெருக்கம் காட்டி தம்பதியர் தாம்பத்தியத்தை அனுபவித்தனர் .

Advertisement