Advertisement

“டேய் டேய் இதோ கிளம்புறோம்டா … ரொம்ப பண்ணாத “

“ம் என் தங்கச்சிக்கு ஒரு நியாயம் , உன் தங்கச்சிக்கு ஒரு நியாயமா…”

“அதுதான் கிளம்புறேன் சொல்லிட்டேன்ல … நான் ஒரு வாரம் கழிச்சு ஆபிஸ்க்கு வாறேன் போது மா”

“அதெல்லாம் முடியாது … நான் ஒரு மாசம் மாப்பிள்ளை கெத்த மாமியார் வீட்ல காட்டணும் … சோ ஒரு மாசம் விருந்துக்கு வரப்போறேன்.. அப்படியே மச்சான் ஆபிஸையும் பார்த்துக்கப் போறேன்.”

“தாராளமா விருந்தாட வா … ஆனா…”

” என்ன ஆனா ஊனா …. யு.எஸ் டிரிப் தள்ளி வச்சாச்சு, தங்கச்சிக்கும் பாஸ்போர்ட் விசா எல்லாம் அப்ளை பண்ணி அது கைல கிடைச்சா தான் இனி உனக்கு இந்தியா விட்டு வெளியேற அனுமதி”

“சரிடா சரிடா மாப்ள … அப்புறம்  சாப்ட்டியா .. பாப்பா கல்யாணத்துக்கு முன்ன கிச்சன்ல ஏதேதோ அத்தானுக்கு செய்து தர ரிகர்சல் நடந்த போல இருந்துச்சு”

“ஆமாடா மச்சான் உனக்கு ஒரு பல் வலிக்குது சொல்லிட்டு இருந்தியே சரியாகிடுச்சா “

” என்ன மாப்ள சம்மந்தம் இல்லாம கேட்கிற ….”

“ம் ….. என் பொண்டாட்டி செய்து தந்த சப்பாத்தி சாப்பிட்ட.. நீ டென்டிஸ்ட்ட போக வேண்டாம் ,தானா பல் விழுந்துரும் அதான் சொன்னேன் … ஆ …..அடிக்காத பப்ளி…. உண்மையதான உங்கண்ணன்ட்ட சொன்னேன் “

மறுபக்கம் கேட்டுக் கொண்டிருந்த அரவிந்த் புன்னகையுடனேபோனை வைத்து விட்டு , அலுவலக பொறுப்புக்களை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு மனைவியுடன் வீட்டிற்குச் சென்றான்.

மூன்று நாட்களில் வீடு திரும்பிய தாயம்மாவையும் ஜானகியையும் பார்த்துத்தான் நாட்கள் நகர்ந்ததையே அரவிந்தும் ராதிகாவும் உணர்ந்தனர். அவர்கள் வரும் வரை புதுமணத் தம்பதியருக்கே உரிய தனி உலகில் தான் இருந்தனர்.

அவர்கள் வந்ததும்  ஜானகி,ராதிகாவைத் தவிர மற்றவர்களிடம் எங்கு செல்கிறோம் என்பதை தெரிவித்து விட்டு ராதிகாவை அழைத்துக் கொண்டு சென்றான் அரவிந்த்.

ரமேஷ் ஏற்கெனவே எல்லா ஏற்பாடுகளும் செய்ததால் அவன் கிளம்புவதற்கு சரியாக இருந்தது. சிறிது தூரம் சென்றதும் வழியை அறிந்தவள் , “நாம திருப்பூரா போறோம். அங்க குட்டிபையன் கிட்ட இந்தக் கார காட்டணும்ங்க…. அவனுக்கு பிடிக்கும். அவன் இது போல நிறைய குட்டி குட்டி கார் சேர்த்து வச்சுருக்கான் “

வாய் விட்டு சிரித்தவனிடம் , “இப்ப எதுக்கு உங்களுக்கு இப்படி சிரிப்பு … குட்டி சந்தோஷப்படுவான்னு சொன்னேன்…” என்று போலியாக முறைத்தவளிடம் ,

“உனக்காக மட்டுமே இந்தக் கார வாங்கினேன். இதோட விலை இந்திய மதிப்புல இரண்டேகால் கோடி ….’நீ என்னனா பொம்ம கார் போல சொல்லிட்டு இருக்க… , உன் சந்தோஷத்துக்காக அவனுக்குமே இதே கார் வாங்கிக் கொடுத்துடலாம் .. இதே விலைல நம்ம வீட்ல நாலு கார் நிக்குது. அதோட  குட்டிபையனுக்கும் ஒன்னு ஒகே யா”

“அவ்வ்வளவு விலையா ….”

“ஆமா இதுல இல்லாத ஸ்பெஷலிட்டிகளே இல்லனு சொல்லலாம்… ஏன் எதுலயாவது இடிச்சிகிட்டாக் கூட நமக்கு ஒன்னும் ஆகாது….அப்ப அந்தப் பணம் வொர்த் தானே… சீக்கிரம் உனக்கு கார் டிரைவ் பண்ண கத்துத் தாறேன் பழகிக்கோ …ஓகேடியர்”

” கார் டிரைவிங்கா …. சைக்கிளே சரியா ஓட்டத் தெரியாது பாஸ்….இதுல கார் , அதுவும் இம்போர்டட்… ம் ம்ஹூம்…. சான்ஸே இல்ல….”

” சொல்லித் தர நான் இருக்கும் போது நீ யோசிக்கவே வேண்டாம் … .., நான் இப்ப சொல்லித் தந்த பாடங்களை கரெக்டா கத்துக்கிற .. அது போல இதுவும் ஈஸியா கத்துக்கலாம்” என கண் சிமிட்ட ,

” என்ன பாடம்….” என்று இழுத்தவள் , அவனின் கண் சிமிட்டலில் புரிய , அவனது மீசையை இழுக்கப் போனக் கைகளைவிடாது பிடித்து இடக்கையில் கோர்த்துக் கொண்டவன் .. “பீ சீரியஸ் ஓகே…., நிஜமா நான் சொல்லித் தருவேன் , நீ பழகி தான் ஆகணும்”.

அவளும் அவன் விரல்களை இறுக்கிக் கொண்டு ,

“ஒன்னு நீங்க கூட்டிட்டு போவீங்க … இல்ல டிரைவர் கூட்டிட்டு போவாங்க…… அப்புறம் நான் ஏன் கத்துக்கணும்… எனக்கு பயமாயிருக்கு பாஸ்” என்று சிணுங்கினாள்.

“ஸ்வீட்டி…. புரிஞ்சுக்கோடா … நான் இல்லைனாலும் நீ தனியா எல்லாம் சமாளிக்கணும். பொண்ணுங்க பிளைட்டே ஓட்டுறாங்க … நீ இந்த சின்ன விஷயத்தை கத்துக்க மாட்டியா …. “

அவள் கரத்தினை விடுவித்து , “அதென்ன எப்ப பார்த்தாலும் நான் இல்லைனா , நான் இல்லைனா னு ஒரு டயலாக் , படி, கத்துக்கோ அப்படினு சொல்லுங்க கேட்டுக்கிறேன் …சும்மா இப்படியே சொல்லிகிட்டு … ” என்றவள் திரும்பி சாலையைப் பார்த்து அமர்ந்து கொண்டாள்.

அதன் பிறகு பேசவில்லை … அமைதியாக கண்களை மூடிக் கொண்டவள் , அவன் கார் கதவு திறந்து அவளை வெளியே அழைக்கும் போது தான் விழித்தாள் .

கையில் இரு டீ கப்புகள் வைத்திருந்தவன் கார் கதவைத் திறந்து தோள் தொடவும் தான் விழித்தாள். அவன் தந்த டீ கப்பினை வாங்கி பருகிக் கொண்டே வெளியே பார்த்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள் , அவன் வண்டியை  நிறுத்தியிருந்த இடத்தை , அன்று பேருந்தை தவற விட்ட இடம் .

முகம் பிரகாசமாக “என்னங்க நான் அன்னைக்கு பஸ்ஸ மிஸ் பண்ண இடம் தானே இது “

“பஸ் மிஸ் பண்ணிருக்கலாம் .. ஆனா என் லைஃப்பே இங்க தானே கிடைச்சது….சோ என்  மிஸ்ஸஸ்ஸே ஒரு கிஸ் கொடு உனக்கு ஒரு கிப்ட் இந்த இடத்துல தரதுக்கு வச்சுருக்கேன் அது தாறேன்…”

“உங்க மிஸ்ஸஸ்க்கு வாங்க தான் தெரியும் , கொடுக்க தெரியாது பாஸ்”

“அப்ப நான் கிளாஸ் ஒழுங்கா எடுக்கலயோ… சரி பரவால்ல இந்த வாரம் முழுசும் கிளாஸ் எடுக்கிற வேலை தானே … “

“முதல்ல என்ன கிப்ட் இந்த இடத்துல … அதை சொல்லுங்க … அப்புறம் எனக்கு கிளாஸ் எடுக்கலாம் “

“வா என் கூட “என்றவன் அங்கு புதிதாய் தெரிந்த ஒரு ரெஸ்டாரன்ட் க்குள் அழைத்துச் சென்றான்.

அரவிந்தைக் கண்டதுமே இருக்கையை விட்டு வெளியே வந்தவர் , வேகமாக அவனருகில் வந்து , ” வாங்க சார் , வாங்க மேடம், உங்க ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க”

புன்னகையில் அவரது வரவேற்பை ஏற்றவள், யார் , என்ன என்பதாக அரவிந்தைப் பார்க்க , அவனும் புன்னகையோடு அவளை அழைத்துக் கொண்டு அங்கு போடப்பட்டு இருந்த சோஃபாவில் அமர வைத்தான் .

அவர்கள் இருவருக்கும் சில தட்டுகளில் உணவைக் கொண்டு வந்த அவர் , “மேடம் உங்களால தான் நான் இப்போ இந்த நிலமையில் இருக்கிறேன் …. ரொம்ப நன்றி மேடம்… நன்றிங்கிறது சின்ன வார்த்தை தான் … ” என்றவர் கைகுவிக்கவும் , பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவள் ,

“ஐயோ என்னங்கண்ணா நீங்க என்னை விடப் பெரியவங்க நீங்க போய் … அப்படியே என்ன நடந்திருந்தாலும் அதுக்கெல்லாம் (அரவிந்தைக் காட்டியவள் ) என் ஹஸ்பென்ட் தான் காரணம் … நீங்க நன்றி சொல்ல வேண்டியது அவருக்குத்தான் , எனக்கில்லை….”

” முத்து நீங்க மற்றவங்கள கவனிங்க … நாங்க சாப்பிட்டுட்டு கிளம்புறோம்…”

என்று அவரை அனுப்பி வைத்தவன் , ” நான் வேற நீ வேற யா …. நான் செய்தாலும் நீ செய்தாலும் ஒன்னு தான் டியர்…”

“அது சரி.. அப்படி என்ன அவருக்கு செய்துருக்கீங்க..”

“நான் ஒன்னும் செய்யல , ஒரு அவசரம்னு சொன்னதும் என் மனைவிக்கு ஹெல்ப் பன்னிருக்கிங்க , அவ அதனால இந்த டீக்கடைய பெரிய ரெஸ்டாரன்டா மாத்திக் கொடுங்க சொன்னானு சொல்லி மாத்திக் கொடுத்தேன்…. ஆனாலும் அவர் சின்ன உதவிக்கு இவ்வளவு பெரிய பரிசு வேண்டாம் சொன்னார் .. நான் மாசா மாசம் உங்களுக்கு வர்ற வருமானத்தில ஒரு பகுதிய எங்க டிரஸ்ட்ல கொடுத்திருங்க சொன்னேன்…. சிம்பிள் அவ்வளவுதான்… அவருக்கும் நிம்மதி , எனக்கும் சந்தோஷம்….”

கண்களில் நீர் பொங்க பார்த்துக் கொண்டு இருந்தவள் , கையை ஆதரவாக பற்றியவன்.., “ஆஃபிஸ்ல பார்த்தப்போ ஒரு ஈர்ப்பு இருந்தது…. ஆனா அது வெறும் ஈர்ப்புக் கிடையாது… அது உன் மேல எனக்கு வந்த காதல்னு புரிய வச்சது இந்த இடம் தான் …. அவர்கிட்ட அந்த கொலுச வாங்கும் போது என் மனைவியோட கொலுசுனு சொல்லி தான் திருப்பி வாங்கினேன். இது எல்லாம் நீ எனக்கு கிடைச்சதுக்கான சின்ன சின்ன பரிசுகள் டா,இந்த இடத்தையும் நம்ம ட்ரஸ்ட் மூலமா பராமரிக்க ஏற்பாடு செய்துருக்கேன்.முக்கியமாரெஸ்ட் ரூம் மெய்ன்டன் செய்ய சொல்லிருக்கேன். அன்னைக்கு நீ பணமில்லாம பேக் பஸ்ல விட்டு தவிச்சப் போல யாரும் தவிக்க கூடாது இல்லயா .. அங்க கபோர்ட் போட்டு இருக்கும். அங்க லக்கேஜ் வச்சுக்கலாம் … எப்படி ஓகேயா”

ராதிகா எதுவுமே பேசாமல் எழுந்து அங்கு அமர்ந்திருந்தவரிடம் சொல்லிக் கொண்டு காருக்குச் சென்றாள்.

அதன் பிறகு அவன் செல்லும் வழியைத் தெரிந்துக் கொண்டவள் அமைதியாய் அமர்ந்துக் கொண்டாள்.

கொடைக்கானல் மலைப்பாதையை அடைந்தவன் காரை மெல்ல செலுத்தி , போகும் வழியில் உள்ள பெருமாள் மலை என்ற இடத்தில் காரை நிறுத்தினான். அவன் நிறுத்தியதும் தானும் இறங்கிக் கொண்டவள் கையைப் பிடித்துக் கொண்டு சாலையோரம் அழைத்துச் சென்றவன் ,

“ரதி….இந்த இடம் வரும் போது நான் கொஞ்ச நேரம் கண்ண மூடி நின்னுட்டுத்தான் கிளம்புவேன் … வா கொஞ்ச நேரம் அதுல உட்காரலாம்” என்றவன் ஒரு பாறை மீது அமர்ந்து , அவளையும் அமர வைத்துக் கொண்டான் .

இந்த இடம்… இடம் … உன் அப்பா , என் அப்பா , ரமேஷ் அப்பா அம்மா … நாலு பேரையும் கடவுள் தன்னோட கூப்பிட்டுக்கிட்ட இடம் டா. உங்கம்மாவ அழைச்சிட்டு வர வந்தவங்க … இங்கயே …..”

அவன் கையை இறுகபற்றிக் கொண்டவள், “அவங்க எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு கிளம்புவோம்ங்க… ” என்றவள் கண்களை மூடி சிறிது நேரம் அமைதியாக நின்று விட்டு வந்தாள்.

கொடைக்கானல் நகரை அடையும் வரை அமைதியாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவள் .. நகருக்குள் வந்ததும் முகம் பிரகாசமடைய தொடங்கியது. அந்த மகிழ்ச்சியை அரவிந்திடம் “பாஸ்… அங்க பாருங்க அதுதான் என் ஸ்கூல் , நான் இப்படியே நடந்து வந்து அதுகப்புறம் பஸ்ல வீட்டுக்குப் போவேன் , அது எங்க காலேஜ் … இது என் ஃபிரண்ட் ஜெயஜோதி வீடு … ” என சொல்லிக் கொண்டே வந்தாள். அது மலைகளில் அடுக்கடுக்காக தெரியக்கூடிய இடங்கள் என்பதால் அவள் காட்டிய இடங்களை மனதில் பதித்தானோ இல்லையோ… அவளின் மகிழ்ச்சி நிறைந்த முகம் அவனது மனதில் பதிந்துக் கொண்டேப் போனது.

குழந்தையாய் குதூகலிக்கும் அவளின் இந்த சந்தோஷத்தைக் காணவே அவன் அவளை அங்கு அழைத்துக் கொண்டு வந்தது.தான் பிறந்து வளர்ந்த இடத்தை வெகு நாட்களுக்குப் பின் கண்டதில் உள்ளம் மகிழ விவரித்துக் கொண்டு வந்தவள்..

“பாஸ் நான் சொல்றேன் நீங்க கேட்கறீங்களா தெரியல..” என சிணுங்கியவளை இடைப்பிடித்து தன்னருகே இழுத்தவன்…. “நீ சொல்றது எல்லாம் கேட்டுட்டுத்தான் இருக்கேன் …. ஆனா இந்த சிரிப்பும் ,இந்த முகமும் நான் இத்தனை நாள் பார்க்காதது “

அவன் கன்னத்தில் இதழை அழுந்த விட்டவள், “தேங்க்ஸ் பாஸ் ….தேங்க்யூ வெரி மச்….” என மறுபடி மறுபடி முத்தமிட்டவள் … நகர்ந்து கைகளுக்குள் முகம் பதித்து தன் மகிழ்ச்சியை அழுகையில் கரைத்தாள். அவள் தலைக் கோதியவன் அவளிடம் மேலே பேசவில்லை .

  பெரிய அலங்கார கதவின் முன் காரை நிறுத்தி  அவன் காத்திருக்கும் போது தான் கவனித்தாள்… எப்போதும் தான் வெறுப்புடன் கடந்து செல்லும் அந்த ஆங்கிலேயர் கால மாளிகையைின் முன்பு நின்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை. இதுவரை இருந்த மகிழ்ச்சி காணாமல் போவது போல் இருந்தது.

எனை மாற்றும் காதலே!

எனை மாற்றும் காதலே!

எதையும் மாற்றும் காதலே!

காதலே…..!

 

                    காதல் அழகானது …..

Advertisement