Advertisement

     அழகு 36

     சமையலறையில் இருந்தவள் அவனுக்கு பிடிக்கும் என்று தாயம்மா சொன்னவற்றில் சிலவற்றை செய்து வைத்து விட்டு திரும்ப , அந்தப் பெரிய சமையலறை வாயிலில் அலுவலகம் செல்லும் உடையில் கைகளை குறுக்காக கட்டி , நிலையில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்த கணவனைக் கண்டதும் முகம் பூவாய் மலர்ந்தது. அவன் பார்வையில் நாணம் கொண்டவள் பாத்திரம் எடுப்பது போல் திரும்பிக் கொள்ள ,

 “வா…ங்க சாப்பிடலாம், ஆபிஸ்க்கு கிளம்பிட்டீங்களா , சாப்டுட்டுப் போங்க” என கைகள் நடுங்க தட்டை எடுத்தாள்.

அவள் பின்புறம் வந்து நின்றவன் , இடுப்பில் கைப்போட்டு , ” கிளம்புறேன் இல்ல …. கிளம்புறோம்…. ஆனா உடனே கிளம்புற மூடு போயிருச்சு”.

“உங்க ஷர்ட் கசங்கப் போகுது..”

“… இப்ப சட்டைய கழட்டித்தானே வைக்கப் போறேன். அப்புறம் எப்படிப் டா கசங்கும் …அப்படியேக் கசங்கினாலும் வேறப் போட்டுக்கலாம் ….  “

அடுத்து அவன் என்ன செய்வான் என்று யூகித்தவள் ,

“ஒரு நிமிஷம் இதை டேபிள்ல வச்சிடுறேன்” என்றவள், கையை விலக்கிக் கொண்டு ஓட , பின்னாலையே சென்றவன் கைப்பிடித்துக் கொண்டான்.

” பாஸ்…. சாப்பிடுங்க பசிக்கும் நேத்து சிவாண்ணன் வீட்லயும் நீங்க சரியா சாப்பிடல “

“நைட் நீ கொடுத்த சாப்பாடு எல்லாம் சாப்பிட்டேனே”

” அண்ணன் வீட்ல கொஞ்சம் சாப்பிட்டது தானே அதுக்கப்புறம் எங்க சாப்பிட்டோம்.”

“இந்த ‘ ஆப்பிள்’ கன்னம் , ‘ மீன் ‘விழிகள் , ‘தேனூறிய இதழ்கள், வெண்டைப் பிஞ்சு விரல்கள் …. ” சொல்லப்பட்ட இடங்களை கைகளால் வருடியவன் முத்தம்மிட்டுக் கொண்டே வர…

“போதும்…. போதும்..…, இப்ப இந்த சாப்பாட சாப்பிடலாமே பசிக்குது பாஸ்” , மோகத்தில் திளைத்துக் கொண்டிருந்தவன் அவளது ‘ பசிக்குது’ என்ற வார்த்தையில் மோகம் தெளிந்தான்,

” ஷ் … மன்னிசிருடா… நான்…. வாடா சாப்பிடலாம்” என்றவன் டைனிங் டேபிள் முன் அமர வைத்து அவளுக்கு இட்லி சாம்பார் ஊற்ற ,

“நீங்களும் சாப்பிடுங்க” , ” முதல்ல நீ சாப்பிடு அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” என்றவன் அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான்.

கண்கள் கலங்க அதை வாங்கி கொண்டவளுக்கு மனம் என்னவோ போல் ஆகிவிட்டது. குழந்தைக்கு பசி என்றால் தாய் தன்னை மறந்து குழந்தையை மட்டுமே பார்ப்பாள். இங்கு அரவிந்த் அவளுக்கு அந்நொடித் தாயன்பை அறியாத அவளுக்கு தாயாகி உணவூட்டினான்.

அவளுக்காகப் பார்த்து பார்த்து செய்யும் அரவிந்துக்காக உயிரையும் தரத் தயாராக இருந்தாள் ராதிகா. இது நாள் வரை பசி என்று சொல்லும் முன்னே அவள் வயிறு நிறைந்து விடும் .. அப்படியே பசித்தாலும் யாரிடமும் உரிமையாய் இப்படி கேட்டது கிடையாது.

எனவே அவளுக்கு இப்போது நடப்பதெல்லாம் ஆச்சரியத்தை தந்துக் கொண்டிருந்தது.மகிழ்வுடனே வாங்கிக் கொண்டு இருந்தவள் ,அதே தட்டில் இருந்து அவனுக்கும் எடுத்து அவள் ஊட்ட… அந்த தருணத்தை இருவருமே ரசித்தனர். இருவரும் உண்டதும் , “கிளம்புறோம் சொன்னீங்க நானும் வாறேனுங்களா”

“ஆமாம்ங்க நீங்களும் தான்ங்க , சீக்கிரம் போய் டிரஸ் மாத்திட்டு வாங்க”

உயிரையே அவனுக்காக தரத் தோன்றியவளுக்கு .. அவன் விரும்பும் உடலைத் தரவா யோசிப்பாள். டிவியை ஆன் செய்து அமரப்போனவனிடம் ,

“பா…ஸ்… ” ,

” டோன் வேற மாதிரி இருக்கே டியர்…”

“ம் … நிறைய ஊட்டி விட்டீங்களா … நிறைய சாப்பிட்டதால நடக்க முடியலயா…அதனால மேல ஏறி போக முடியல பாஸ் … “

அவள் அருகில் வந்தவன் அவள் நெற்றி முட்டி , “அடடா அப்பஆபிஸ்க்கு லேட்டா தான் போக முடியும் பரவால்லயா…”

“பரவால்ல “

“என் சட்டை கசங்கும் “

” எப்படி கசங்கும்… அது தான் …… “அதற்கு மேல் பேச முடியாது நாணங் கொண்டவள் ,விடுபட்டு மாடியேறப் போக , அடுத்த நொடி அரவிந்த் கையில்தான் இருந்தாள் ராதிகா .

கணவனும் மனைவியும் அதன் பிறகு மதிய உணவு முடித்துத் தான் அலுவலகம் கிளம்பினார்கள். போர்டிகோவில் நின்ற காரைப் பார்த்த ராதிகா , “இதென்னங்க பொம்மைக் கார் போல இருக்கு … சிவாண்ணன் பையனுக்கு இப்படிக் கார்னா ரொம்ப பிடிக்கும் “

அவள் சொன்னதைக் கேட்டு வாய் விட்டு சிரித்த அரவிந்த் , “ஏன்டா நாம ரெண்டு பேர் மட்டுமே போறதுக்காக நம்ம கல்யாணம் பண்ண மறுநாளே புக் பண்ணி நம்மவரவேற்புக்கு கைல கிடைக்குறமாதிரி ஏற்பாடு செய்து வச்சு உன்னை அசத்தலாம்னுப் பார்த்தா நீ ரொம்ப கூலா பொம்மை கார்னு சொல்லிட்ட ….”

அவளையும் அமர வைத்து அலுவலகம் சென்றவன் , அங்கு இருந்தவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவனிடம் பணியாற்றிய அனுபவம் இருந்ததால் ,வேலைகளை சுலபமாக செய்து விடுவாள். ஆனால் இந்த எம்.டியின் மனைவி என்ற அடையாளம் அவளுக்கு சங்கடத்தை தர ,

“எனக்கு என்ன வேலைங்க , சொன்னா போய் செய்றேனுங்க”

“ம் வேலை வாங்குற வேலை … வீட்ல என்னைய “கண் சிமிட்டிக் கொண்டே குறும்புடன் சொன்னவன் , …” இங்க மற்றவங்கள வேலை வாங்குற JMD … ஜாய்ன்ட் மேனேஜிங் டைரக்டர் .”

” என்ன …இவ்வளவு பெரிய பொறுப்பா… வேற ஏதாவது வேலை கொடுங்க எனக்கு நான் செய்றேன்”

” ரமேஷ் , அனுவ திருப்பூர் பார்க்க சொல்லிட்டேன். இனி நாம தான் இங்க பார்க்கனும்டா நான் இல்லனா எல்லாப் பொறுப்பையும் நீதான் எடுத்துப் பார்க்கணும் அது தான் இன்னைக்கே கூட்டிட்டு வந்தேன் டா”

அவன் சொன்ன வார்த்தைகள் நெஞ்சுக்குள் ஏதோ செய்ய , அதைக் காட்டாது,

“நீங்க பக்கத்துல இல்லாம எப்படி …. அதெல்லாம் முடியாது”

அருகில் வந்தவன் அவள் கைப் பிடித்து அவனது இருக்கையில் அமர வைத்தான்.பின் அவளெதிரே வந்து அமர்ந்து கொண்டவன் , “மேடம் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க , நமக்கு இங்க மட்டுமில்ல இந்தியா முழுசும் பிரான்ச் இருக்குனு உனக்கு தெரியும் தானே … நான் பிஸ்னஸ் பார்க்க ஆரம்பிச்ச பிறகு வெளிநாட்டிலயும் நம்ம பிரன்ச்சஸ் திறந்துட்டேன் அப்ப அதெல்லாம் நேர்ல போய் செக் பண்ணனும் இல்லையா…”

“அப்போ …. அப்போ நீங்க அடிக்கடி வெளியூர் போக வேண்டி இருக்குமா … ” என கண்களை அகல விரித்துக் கேட்டவள் அருகில் சென்றான் . தொலைபேசியில் யாரும் தொந்திரவு செய்யாதவாறு சில ஏற்பாடுகளை செய்தவன் , அவள் கைப் பிடித்து எழுப்பி அங்கிருந்த நீள சோஃபாவில் அமர்ந்து அவளையும் அருகில் அமர்த்திக் கொண்டவன்,

“நான் அன்னைக்கு சொன்னத விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைச்சுட்டியா “

“ஆம்” என்பது போல் தலையாட்டியவளின் தாடையைப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டவன் ,

“ஸ்வீட்டி.. நீ கொடுக்கிற எக்ஸ்பிரஷன்லாம் பார்த்துட்டு வீட்டுக்கு போயிடலாம்னு தோணுது” என்றவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவள்,

“நான் சென்னேன்ல உங்கள ரொம்ப மிஸ் பன்னேன்னு … இப்ப திரும்பவுமா ….” அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டவள் , அவளே தீர்வு கண்டவளாக,

“ஏங்க வேற யாரையாவது நம்பிக்கையானவங்கள அனுப்பி வச்சா என்ன …. இல்ல நீங்க எங்கல்லாம் போறீங்களோ , அங்கெல்லாம் என்னையும் கூட்டிட்டுப் போங்க ப்ளீஸ்”

“உன்னைய பக்கத்துலயே வச்சுக்கணும்னு எனக்கு மட்டும் ஆசையில்லாமயா, அங்கல்லாம் போனாலும் நான் வெளிய போய்ட்டா நீ தனியா தானே இருக்கணும்….”

“ஆமாம் …. ஆனா “

“என்னடா நீ ரொம்ப தைரியமான பொண்ணுனு நினைச்சேன் … இப்படி யோசிக்கிற … ப்ளீஸ்டியர் இந்த விஷயத்துல எங்கம்மா போல நீ இருக்க வேண்டாம்…. அம்மா இப்படித்தான் அப்பாவ பிரிஞ்சு அதிகம் இருக்க மாட்டங்களாம். அதனாலயே அப்பா பிஸ்னஸ் இந்தியாவ தாண்டிப் போகல ….அதைவிட நம்ம தாத்தா அம்மாவ நல்லா படிக்க வச்சாலும் பிஸ்னஸ் பார்க்க பெண்கள் வேண்டாம்னு முடிவு பண்ணதால எவ்வளவு சிக்கல் , பிரச்சினைகள் …..”

” அப்பா , பெரிய மாமா சின்ன மாமா எல்லாரும் போனதும் தாத்தா ஒற்றை ஆளா எங்க எல்லாரையும் பார்த்துக்கிட்டார். அதனால நிறைய பிஸ்னஸ் போச்சு ….அதையெல்லாம் நான் இப்ப மீட்டுட்டேன் இருந்தாலும்…. அம்மா மனசு கொஞ்சம் தைரியமா இருந்திருந்தா சமாளிச்சுருப்பாங்க இல்லையா … அனுவக் கூட அது தான் படிக்கும் போதே ஆபிஸ் வர சொல்லி பிராக்டிஸ் தந்தேன்.”

அவன் சொல்வதெல்லாம் சரிதானே , தான் எந்த விதத்திலும் அவனுக்கு தெரிந்திரவு தரக்கூடாது என்று முடிவெடுத்தவள் ,

“ஓகே பாஸ்… இப்பவே வேலை ஆரம்பிக்கலாம் … ” என்றவளை தோளோடு அணைக்க , அவனது அலைபேசி பாட ஆரம்பித்தது , ரமேஷ் அழைக்கிறான் என்பதை அறிந்துக் கொண்டவன் ,

“மாப்ள …. என்ன சாப்டியா “

“டேய்…. என் வாய்ல வாங்காத … கைல கிடைச்ச… உன்னை வீட்லதான இருக்கச் சொன்னேன் … அதுக்குள்ள கிளம்பி யார் டா ஆபிஸ் வரச் சொன்னது “

“மாப்ள … அடுத்த வாரம் நான் அந்த கான்ட்ராக்ட் சைன் பன்ன யுஎஸ் போகணும் … அதான் இங்க சமாளிக்க … “

“ஓ ….அப்படிங்களா சார். ஒரு நிமிஷம் ” என்றவன் அனன்யாவிடம் திரும்பி , ” அனு கிளம்பு நாம ஆபிஸ் போகலாம்… பாவம் சிவாண்ணன் தனியா சமாளிக்கிறது கஷ்டம்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

Advertisement