சொன்னது போலவே அறை வரை கைகளில் ஏந்தியேச் சென்றவன்.”ஸ்வீட்டி கதவ நீதான் திறக்கணும்”
“நீங்க திறங்க .. ” என்று உதட்டில் முறுவலுடன் சொன்னவளிடம் ,
“நான் இறக்கி விட மாட்டேன். வீட்லதான் யாருமில்லயே … சோ இந்த ஹாலே போதும் நமக்கு ” என்று குறும்புடன் கூறியவுடன் ,
“ஐயோ…. பாஸ் பாஸ் நானே திறக்கிறேன் .. ” என்று வேகமாக கதவைத் திறந்தாள்.
உள்ளே நுழையவுமே பூ மழையில் இருவரும் நனைந்தனர். எதிர்பார்க்காத இருவருமே திகைத்துப் போய் அறையை பார்க்கையிலயே இருவரது அலைபேசியும் பாட ஆரம்பித்தது.
பாடலை வைத்தே அழைப்பது ரமேஷ் என்பதை அவனும் , ராதிகாவை அழைப்பது அனன்யா என்பதையும் புரிந்துக் கொண்டவர்கள் , ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டே கட்டிலை அடைந்தனர் . மலர் படுக்கையில் மனைவியை விட்டு அலைபேசியை காதில் வைத்துக் கொண்டே அரவிந்த் பால்கனி சென்றான்.
ராதிகா அலங்கரிக்கப்பட்ட மெத்தையில் அமர்ந்துக் கொண்டே அலைபேசியை எடுத்து அனன்யாவிடம் பேச ஆரம்பித்தாள். அரவிந்த் பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து கொண்டே ,
“மாப்ள “
” மச்சான் நீ இருக்க மூட்ல உன்னை டிஸ்டர்ப் பன்னதுக்கு சாரிடா … “
“ஏன்டா … ” என நெகிழ்ச்சியுடன் கேட்டவனிடம் ,
“இந்த ‘ஏன்டா’எதுக்கு தெரியல…. ஆனா என் நண்பன் எனக்கு பார்த்து பார்த்து செய்யும்போது , நான் அவனுக்காக இந்த சின்ன வேலைக்கூட செய்யலன எப்படிடா…. கண்டிப்பா நீ உனக்காக, உன் சந்தோஷத்துக்காகனு எதுவும் செய்ய மாட்ட … அதுவும் அனுவ கல்யாணம் பன்னித் தந்தப் பிறகு தான் நீ உன் வாழ்க்கைய ஆரம்பிப்பனு எனக்குத் தெரியும் டா …. நீ பெரிய பாசமலர்’ சிவாஜி ‘னு எனக்குத் தெரியாதா என்ன …..”
நண்பனின் புரிதலில் நெகிழ்ந்த அரவிந்த் பேச முடியாது அமர்ந்திருந்தான்.
“எனக்குத் தெரிஞ்சு நீ உனக்குனு விரும்பின ஒரே விஷயம்’ ராதிகா ‘ மட்டும் தான். இப்பவும் இப்படி எதுவும் செய்துக்கலாம்னு நீயா யோசிச்சாலும் அது தங்கச்சிக்காக மட்டும் தான் இருக்கும் ….என் நண்பனுக்கு என்னால பன்ன முடிஞ்ச சின்ன பரிசு….
என் தங்கச்சி வீட்டுக்காரனுக்கு ஒரு மூணு நாளாவது என் தங்கச்சியத் தவிர வேற நினைப்பு இருக்க கூடாது.”
வாய் விட்டு சிரித்த அரவிந்த் “மாப்ள இது தான் பக்கத்து இலைல பாயாசம் தரச் சொல்றதா “
” கண்டுபிடிச்சிட்டியே மச்சான் ….” என்று நகைத்தவனிடம் ,
மனம் இனிக்க “தேங்க்ஸ் மாப்ள “
“மச்சான் உன் தங்கச்சி இப்படி தேங்க்ஸ் சேர்த்து வைக்க ஒரு இடம் சொன்னா டா”
“புரியல “
“ம்… நம்ம கம்பெனி ட்ரைனேஜ்ல ( கழிவுநீர் தொட்டி) கொண்டு போடச் சொன்னா … நீயும் அதையே செய்… போடா டேய் போனை ஸ்விட்ச் ஆப் பன்னிட்டுப் போ… அப்புறம் சீக்கிரம் என்னை தாய்மாமன் ஆக்கிரு … இல்ல நான் சீனியர் ஆகிடுவேன்… வாழ்த்துக்கள் மச்சான்….” என்றுப் புன்னகைத்துக் கொண்டே வைத்து விட்டான்.
அறைக்குள் நுழைந்தவன் மனைவியைத் தேட கட்டிலில் பட்டு வேட்டி சட்டையுடன் துவாலை மட்டுமே இருந்தது. முறுவலோடு அதை எடுத்துக் கொண்டு குளித்து உடை மாற்றி வந்தான்.
தங்கை மனைவியிடம் பேசியிருப்பாள் என்று யூகித்தவன் …. அவனுக்கு பிடித்த இளையராஜா பாடல்களை மிதமான ஒலியில் இசைக்க விட்டு பால்கனி சென்று நின்று கொண்டான்.
கதவு திறக்கும் ஒலியில் அறைக்குள் வந்தவன் , மனைவியைக் கண்டு சிலையென நின்று விட்டான். பட்டு சேலை கட்டி தலை நிறைய மல்லிகைப் பூச்சூடி மெல்ல அடியெடுத்து அவனருகே வந்தவள் , அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாது முகம் சிவக்க தலை குனிந்து நின்றாள்.
“ரதி “புதுப் பெயரில் குழம்பி அவனைப் பார்க்க ,
“என் ரதி ” என்று அவள் கன்னம் தாங்கி பேசியவன்.
“ஆமாம் இந்த சேலை யார் கட்டி விட்டா, சேலை கட்டத் தெரியாது சொன்ன … “
“நானே தான் கட்டிப் பழகினேன். அடிக்கடி யாரையும் ஹெல்ப் கேட்க முடியாதே ….. நல்லாருக்கா… ” என்று கேட்கவும்,
” எப்படி நல்லா இல்லாம போகும் … ஆனா கஷ்டபட்டு பழகி கட்டியிருக்க.… ஆனா அதை ஒரே நிமிஷத்துல நான் ……” , மேலே பேச முடியாது அவன் மீசையை இழுத்து , “அசிங்கமா பேசக் கூடாதுனு சொல்லிருக்கேன் “
“பா….ஸ்…. ப்ளீஸ்….” என்று முகத்தை மூடிக் கொண்டவளை கட்டிலில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டவன்.
” சரி அது அப்புறம் பேசுறேன் …… அனு சொன்னதால இப்ப இந்த டிரஸ் மாத்திட்டு வந்தியா”
‘இல்லை’ என்பதாக தலை அசைத்தவள், “உங்களுக்காக ….. உங்களுக்கு என்னை சேலையில் பார்க்க பிடிக்கும்கிறதுக்காக….”
அவளை நெருங்கி அமர்ந்து கொண்டவன் , “அப்படியா எனக்கு பிடிக்கும் கிறதுக்காக புடவை கட்டினியா …. அப்ப எனக்காக என்ன வேணா செய்வீயா “
“ம்… செய்வேன்… என் முகம் பார்த்தே எனக்கு என்ன வேணும் , வேண்டாம்னு யோசித்து செய்ற உங்களுக்காக இதுக் கூட செய்ய மாட்டேனா … நீங்க சந்தோஷப்படுவீங்கன்ற நினைப்பே எனக்கும் சந்தோஷம் தருது … “
“ம்ம்…. இப்படி எனக்காக என்ன வேணாலும் செய்யத் தோணுற இந்த எண்ணத்துக்குப் பெயர் என்ன டியர்…ம் ” என்று புருவம் ஏற்றி இறக்கியவனிடம் ,
குறும்புடன் “அதுக்கு பெயர் எனக்குத் தெரியல பாஸ் … நீங்க யோசிச்சு பெயர் கண்டுபிடிங்க …. எனக்கு தூக்கம் வருது … நான் தூங்கப் போறேன்.” என்று நகர்ந்து சென்றுப் படுத்துக் கொண்டாள் அதுவும் அந்த ஏசி அறையின் குளிருக்கு இதமாக போர்வைப் போர்த்திக் கொண்டு.
” என்னனன… தூக்கம் வருதா … நீ என்ன பெயர்னும் சொல்ல வேண்டாம் …. நானும் யோசிக்க வேண்டாம்” என்று அவளருகில் சென்றுப்படுத்தவன் .,
அவள் முதுகுப்புறம் இருந்த போர்வையை விலக்கிக் கொண்டே அவள் கன்னம் உரசியவன் , காதில் மென்மையாக முத்தமிட்டு “அன்னைக்கு என்ன சொன்னேன் …நீ போர்வை போர்த்துனா நான் என்ன செய்வேன்னு சொன்னேன்ல “
அவனது தொடுகையில் மயங்கிக் கொண்டிருந்தவள், இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்து , சட்டென்று திரும்பி அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டே….” அது தான் போர்த்தியிருக்கேன் …” என்றாள்.
அந்தப் போர்வையை இழுத்து கீழே போட்ட வன் தாபம் மேலோங்க ” இப்படிக் கூட சிக்னல் தரலாமா டியர் … நான் ஆவ்ரேஜ் ஸ்டூடன்ட் தான் , அது அந்த பள்ளி பாடத்துல தான் ….இந்த பள்ளியறைல மீ……”
அதற்கு மேல் அரவிந்திற்கு பேச எங்கு நேரம் …. தன் மனதிற்கினியவளுடன் இணைந்து இனிக்க இனிக்க தாம்பத்திய பாடத்தை பயின்றான். புதிதாய் படிப்பதால் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போக , நடு இரவில் தொடங்கிய பாடத்தை விடியும் வேளையில் தான் படித்து முடித்தனர்.
தன்னால் கலைக்கப்பட்டு, களைப்படைந்து தன்நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்தவளின் முகத்தில் படிந்திருந்த கூந்தலை ஒதுக்கிக் கொண்டே ,
அவன் வாயை கைக்கொண்டு மூடியவள் , “பாஸ்…. இப்படிலாம் கேட்காதீங்க “
அவன் கையில் முத்தமிட்டு விலக்கியவன் , “டியர் எனக்கு கிடைச்ச அதே சந்தோஷம் உனக்கும் கிடைச்சா தானேடா இதுல முழுமையடைய முடியும் “
“போங்க நீங்க இப்படிலாம் கேட்காதீங்க எனக்கு வெட்கமாயிருக்கு….”
” என்கிட்ட என்ன வெட்கம் … நீ சொல்லு நீ சொல்ற பதில்லதான் என்னோட வெற்றியும் சந்தோஷமும் இருக்குடா”
“ப்ளீஸ் ….. எனக்கு வெட்கமாருக்கு நான் சொல்ல மாட்டேன்”
“நீ சொல்றவரை நானும் விட மாட்டேன்” என்றவன் அவளிடமிருந்து பதில் வாங்கிக் கொண்டு தான் உறங்கவிட்டான்.
விழிப்பு வந்தவளுக்கு உலகமே புதிதாய் இருப்பது போன்ற உண்ர்வு , கணவனின் உறக்கம் கலையாது எழுந்து குளித்து உடை மாற்றிக் கொண்டவள் , சிறிது நேரம் கண் இமைக்காது அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தூக்கத்தில் புரண்டுப்படுத்தவன் கைகளால் அருகில் துழாவ … தன்னைத் தேடும் அவன் கரங்களுக்குள் மறுபடியும் செல்ல ஆவல் கொண்டாலும் , பெண்களின் இயல்பான கூச்சம் தடுக்க … முறுவலோடு அறையை விட்டு வெளியேறினாள்.
கீழேச் சென்று வாசற்கதவை திறக்க ,இவள் திறப்பதற்காகவே காத்திருந்த வேலையாட்கள் அவளருகே வந்தனர்.
இத்தனை நேரமாக அவளுக்காக காத்திருந்த அவர்களை நினைத்து பெருமையும் கவலையும் ஒருங்கே கொண்டவள்.
“ஈஸ்வரியக்கா வீட்ல சமைக்க தேவையானது எல்லாம் இருக்கு தானே”
“ஆமாங்க அம்மிணி எல்லாம் இருக்குங்க”
“அப்போ எல்லோரும் நாளைக்கு காலையில வேலைக்கு வந்தாப் போதும் … செக்யூரிட்டி அண்ணாட்டயும் ஆள்மாத்தி விட்டுட்டு கிளம்ப சொல்லுங்க … ” என்றவள், ” ஒரு நிமிஷம் ” என்று விட்டு அவர்கள் அறைக்குச் சென்றாள்.
அரவிந்த் இன்னுமே உறக்கத்தில்….. ஆழ்ந்த உறக்கத்தின் காரணம் அறிந்தவள் , இரவின் நிகழ்வுகளில் முகம் சிவக்க தொடங்க கட்டிலருகில் இருந்த அவனது பர்சிலிருந்து பணம் எடுத்து வேலையாட்களின் கைகளில் தந்தாள்.
எது இந்த உரிமையை தந்தது … ஒரு நாள் உடல் இணைவு இந்த உரிமையை தந்து விடுமா… இருக்காது… இங்கு வந்த நாள் முதல் அவன் காட்டிய அன்பு , அக்கறை… இல்லை … கேட்காமல் தாலி கட்டியதைத் தவிர அரவிந்திடம் குற்றம் காண எந்தக் காரணமும் இருப்பதாக தெரியவில்லை ராதிகாவிற்கு. அவன் நினைவுகள் தான் மனதை ஆக்ரமித்து இருந்தன. இன்று மட்டுமில்லையே அவன் அம்மாவுக்காக ஏங்குகிறான் என அவன் அம்மாவிடம் பேசிப் பேசி அவனைத் தன் மகனாக ஏற்றுக்கொள்ள வைத்து , அரவிந்தைப் பார்த்து மகிழ்ந்தாளே …. அவன் வருத்தம் , அவன் மகிழ்ச்சி …. எல்லாம் அவனுக்காக , இதோ இப்போது கூட அவனுக்காகவே தன் கையால் சமையல் செய்து கொண்டிருக்கிறாள். எல்லாம் அவன்… அவன்… அவன் …. உடலின் ஒவ்வொரு அணுவும் ‘அரவிந்த், அரவிந்த்’ என்பதையே உச்சரித்தது போல் இருந்தது.
யோசித்துக் கொண்டே இருந்தாளே ஒழிய இது தான் காதல் … இதற்கு பெயர் தான் காதல் என்று அவள் பெயர் தரவில்லை ….
அது தான் காதல் என்று முடிவுக்கு அவள் வரும் போது அவள்..