“குட்டிமாவுக்கு தூக்கம் வரலயா அத்தை கிட்ட வாறீங்களா” எனவும் ,
” ராதிகா நீ போய் தூங்கு, நான் பார்த்துக்கிறேன்”
என்றுக் கிளம்பி விட்டாள்.
ராதிகா அறைக்குள் நுழைய, அரவிந்த் உறக்கத்திலிருப்பது தெரிந்தது. எனவே ஓரமாக நின்று மறுபடியும் ஆடையை களைய முற்பட அவளால் முடியவில்லை. கோபமும் ஆதங்கமும் சேர்ந்து அழுகை வரும் போல் இருந்தது. பிய்த்து எறிந்து விடலாமா என்ற எண்ணம் தோன்ற , அனன்யா சொன்ன அந்த ஆடையின் விலை கிழித்தெறியவும் விடவில்லை.
முடிவில் அந்த உடையை மாற்றாது படுத்தவள் போர்வையை எடுக்க கைப் போக ,அரவிந்த் முகம் பார்த்தவள் அந்த எண்ணத்தையும் கைவிட்டு , தாவணி போன்ற பகுதியை எடுத்து முதுகு தெரியா வண்ணம் போர்த்தி படுத்துக் கொண்டாள்.
இவள் படுத்ததும் புரண்டு படுத்தவன் ராதிகாவைப் பார்க்க , அவள் இவன் புறம் முகம் பார்த்துதான் படுத்திருந்தாள்.
“ம்…. பரவால்ல .. எனக்கு தூக்கம் வருது” என கண்ணை மூடிக்கொண்டாள்.
“ரொம்ப ஹெவியா இருக்கும் … ஒரு பைவ் மினிட்ஸ் மாத்திட்டு படு …நைட் உன் மேல கை போட்டா…. தூக்கத்துல தான் இந்த கண்ணாடி எல்லாம் குத்தி விட்டுரும் …ஏன் உன்னையே கீறி விட்டுரும்..… வேணும்னா நான் ஹெல்ப் பண்ணவா … ” என்று கண் சிமிட்டி குறும்புடன் கேட்டான்.
அவள் உடனே எழுந்து கொள்ளவும் தலையணையை எடுத்து அவளிடம் தந்து “நீ இத எடுத்து அடிக்கப் போற …அது தான் நானே எடுத்து தந்தேன். எப்படியும் அந்த ஹெல்ப் பண்ண விட மாட்ட , அதுதான் இந்த ஹெல்ப் … “
தலையணையை வாங்கி கீழே வைத்தவள் , எழுந்து அவள் மாற்றிக் கொள்ள துணி எடுத்தாள். அவள் எழவும் அவன் நீண்ட கூந்தல் அலையென முதுகில் பரவிக் கிடப்பதைப் பார்த்தவன்.
“வாவ்….. டியர்….பாண்டிய மன்னன் டவுட் எனக்கும் வருது ‘கேன் ஐ கிளாரிஃபை’ … “
துணிகளை எடுத்துக் கொண்டு அவனையேப் பார்த்துக் கொண்டு வந்தவள் , கட்டிலில் அவன் படுத்திருந்த பக்கம் வந்தாள்.
குளியலறை செல்வாள் என்று எதிர்பார்த்தவன் தன் பக்கம் வரவும் புரியாமல் எழுந்து அமர்ந்தான்.
அருகில் வந்தவள் அவனுக்கு முன்புறம் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
அவன் முகம் பார்க்க இயலாது திரும்பி அமர்ந்து கொண்டவள்..” ஹெ…. ஹெல்ப் பண்றேன் சொன்னீங்க….” என்றவள் அவள் கூந்தலை அள்ளி முன்புறம் போட்டுக் கொள்ள … அப்போதுதான் கவனித்தான் , கொக்கிகள் பாதி அவிழ்க்கப்பட்ட நிலையில் இருந்ததை .
அவள் அப்படியே படுக்க முயன்றதன் காரணம் புரிய மெல்லிய முறுவலுடன் அவள் உடையில் கை வைக்க , அவனின் ஸ்பரிசம் பட்ட உடல்கூசி சிலிர்க்க … ஏதோ ஒன்று மனதையும் உடலையும் தளரச் செய்ய கைகளில் முகம் கொடுத்து தேம்ப ஆரம்பித்து விட்டாள்.
அவள் முன்புறமாக வந்து அமர்ந்துக் கொண்டவன் , ” என்னையப் பாருடா”
அவள் அப்படியே இருக்க , அவளை அணைத்தார் போல் கையைக் கொண்டு போய் அதை அவிழ்த்து விட்டுக் கொண்டே , ” அனு பிறக்கும் போது எனக்கு ஏழு வயசுதான் இருக்கும் அம்மா நிலை உனக்குத் தெரியும் , தாயம்மா பாப்பாவுக்கு என்ன செய்தாலும் நான் ஹெல்ப் பண்ணுவேன். லீவு விட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் தூக்கி வச்சுட்டே சுத்துவோம் நானும் ரமேஷூம், அவளுக்கு என்ன தேவையோ எல்லாம் செய்வேன். இப்பவும். அவ எனக்கு குழந்தைதான், அம்மா எனக்கு செய்ததவிட அவங்களுக்கு நான் நிறைய செய்வேன் … பிகாஸ் அவங்களும் எனக்கு குழந்தை தான் ….. இப்ப நீ எனக்கு மூணாவது குழந்தை , குழந்தைக்கு .இந்தச் சின்ன ஹெல்ப் கூட பன்ன மாட்டேனா ” எனவும் முகம் நிமிர்த்தி அவனைப் பார்க்க ,
முறுவலோடு ” மனைவிய எப்போ மனைவியாப் பார்க்கணும்னு எனக்கு தெரியும் டியர்…. நாளைக்கு நமக்கு குழந்தை பிறந்தாலும் இந்த குழந்தைக்குத் தான் (அவள் தாடையை பிடித்துக் கொண்டே) பர்ஸ்ட் பிரிபரன்ஸ் ஓகே… “
கண்ணீர் மல்க எழுந்து சென்றவள் , குளித்து இலகுவான உடை மாற்றி விட்டு வந்தாள்.
“ஏன்டா அழுத … நான் தொட்டா பிடிக்கலயா…” என்ற அரவிந்திடம் ,
“இல்லை” என்பதாக தலையசைத்தவள் , ‘இன்னைக்கு உங்களைத் தவிர யாருக் கிட்டயும் உரிமையா போய் பட்டன் கழட்டனும்னு கேட்க முடியாத என் நிலைய நினைச்சு அழுதேன். சின்ன வயசுல எனக்கு ஸ்கூல் யுனிஃபார்ம் பின்னாடி பட்டன் போடனும். அத்தை உடம்புக்கு அடிக்கடி முடியாம போகும் , அவங்க படுத்து இருக்கும் போது அவங்க கிட்டயும் போட முடியாம , மாமா கிட்டயும் கேட்க சங்கடப்பட்டு … ஸ்கூல் போனா மிஸ் போட்டு விடுவாங்க , இல்ல பிரண்ட்ஸ் போடுவாங்க … பக்கத்து வீட்டு ஆன்டி இப்படி பட்டன் போட்டுக்க, தலை கட்டிக்க போகும் போதெல்லாம்… உன்னை பெத்தவ இருந்தா இப்படி ஒரு நிலை வருமானு சொல்லிட்டே செய்வாங்க …
இதெல்லாம் சேர்ந்துதான் என்னைப் பெத்தவங்க மேல ரொம்ப கோபம் உண்டாக்கிருச்சு , இப்ப உரிமையா உங்ககிட்ட கேட்டேன்… அப்ப …. அதான் அழுகை வந்துருச்சு” என்றவள் அவன் முகம் பார்த்து , “நான் ஒன்னு கேட்டா கோவிச்சிக்க மாட்டீங்களே”
“உன்கிட்ட கோவிச்சுக்க என்னால எப்படி முடியும் .. கேளு டா”
” இதைத்தான் ரிசப்ஷன் நடந்த நேரத்துலருந்து யோசிச்சுட்டு இருந்தியா” என்றவன் அவன் மொபைலை எடுத்துக் கொடுத்துப் பார்க்கச் சொன்னான்.
அதைப் படிக்க படிக்க முகம் மலர்ந்தவள்…, அவன் அருகில் வந்து “அப்போ அது நிஜமா … என் அம்மா பேரு ‘கீதா ‘ங்கிறது மட்டும் தான் தெரியும் .. கீதாஞ்சலினு எனக்குத் தெரியாது. அப்ப நான் உங்க மாமா பொண்ணுதானா ” என்று பேசிக் கொண்டே போனவள், “இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியுமா”
புன்னகைத்துக் கொண்டே அவன் பெரியப்பா சொன்ன நாளிலிருந்து அனைத்து விவரங்களையும் கூறியவன் ,
“நீ யாருனு எனக்குத் தெரிஞ்சுக்கனும்னு நான் போகல டா .எனக்கு என் ராதிகா யாராயிருந்தாலும் பரவால்ல … ஆனா உங்கம்மாப்பாவால தான் நீ காதலவெறுக்கிறனு சொன்னல்லையா …. இல்ல அந்தக் காதல் தூய்மையானது …. உண்மையானது …. புனிதமானது…..மொத்தத்துல ரொம்ப அழகானதுனு நீ புரிஞ்சுக்கணும் அப்படிங்கிறதுக்காக மட்டும் தான் எல்லா விஷயமும் திரட்டினேன்.எங்க மாமா அவர் மனைவிய அதாவது உங்கம்மாவ எவ்வளவு விரும்பியிருக்காருனு எனக்கு அம்மா சொல்லித் தெரியும்… உங்கம்மாவும் பாரேன் அவரு இல்லனு தெரிஞ்சு சுயநினைவை இழந்தவங்க , நினைவு வந்ததும் உன்னை உன் மாமா கைல ‘ ராதிகா ‘னு சொல்லி அவருகிட்டயே போறேன்னு சொல்லிட்டுத்தான் கண்ண மூடியிருக்காங்க. அப்ப அந்தக் காதல் எப்படிப்பட்டது பாரேன் …. லவ்லில….” என்று புன்னகத்தவன் அவள் முகம் பார்க்க …
அவள் மனநிலை உணர்ந்தவன், மெல்ல புரிய வைக்கலாம் என்றெண்ணியவன் ,
“ஓ…. இந்த டாபிக் விட்டுறலாம் என் மாமன் பொண்ணே … எப்பவும் நடு ராத்திரியே பேசிட்டு இருக்கோம் … அதுவும் தூக்கத்துல எழுந்துப் பேசிட்டு இருக்கோம். தூங்கலாமா ….” என்றவன் அவள் அருகில் நெருங்கி வந்து ,
” நான் தொடுறது பிடிக்கலயா கேட்டதுக்கு , இல்ல சொன்ன … அப்ப பிடிச்சிருக்கா” என்று முகம் நெருங்கி கேட்கவும்..”
” சொல்லமாட்டேன்” என்று கரங்கள் கொண்டு முகத்தை மூடிக் கொண்டவளை இறுக அணைத்துக் கொண்டவன்.
“நீ சொல்ல வேண்டாம் … நானே நம்ம வீட்டுக்குப் போய் தெரிஞ்சுக்கிறேன். அப்படியே அந்த டவுட் மட்டும் இப்ப கிளியர் பண்ணிக்கிறேன்” என்றவன் சட்டென்று அவள் கழுத்தில் உதடு வைத்து கூந்தலில் முகம் புதைத்தான் .
அவனை விலக்க மனமில்லை , விலக அவனுக்கும் மனமில்லை … உணர்ச்சிகளின் தாக்கத்தில் இருந்தவள் அவன் சட்டையை இறுகப் பற்றிக் கொள்ள … மூடியிருந்த விழிகளில் முத்தமிட்டவன் …”
“இந்தக் கடலுக்குள்ளப் போனா மூழ்கி போகத்தான் தோணுது … எப்படி அவருக்கு டவுட் வந்துச்சோ… எதுனாலும் நம்ம வீட்டுக்கு போயிரலாம்… அங்கப் போய் டெய்லி ஆராய்ச்சிப் பண்ணி கிளியர் பன்னிக்கிறேன். ” என்று குறும்புடன் சொன்னவனிடமிருந்து நாணத்துடன் விலகியவள்..,
” ஏன் இப்ப கிளியர் ஆகலயா” என்று சொல்லி போய் படுத்துக் கொண்டாள்.
“நான் ஆவ்ரேஜ் ஸ்டூடண்ட் , மெதுவா , கொஞ்சம் கொஞ்சமா ரிசர்ச் பன்னிதான் நான் பி.ஹெச்.டி வாங்க முடியும் …நீ பேசுறதப் பார்த்தா … திரும்ப ஆராய்ச்சி தொடங்கத் தான் தோணுது”
அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டவள் , “உங்க பாஷைல நான் தூங்கிட்டேன்ன்ன்…. ” என்று ராகம் இழுத்தாள்.
“ஸ்வீட்டி.. இது நம்ம தாத்தா வீடாகிருச்சு… நம்ம வீடா இருந்துச்சு …..”
“குட் நைட் பாஸ்”
“நாளைக்கு குட் நைட் சொல்ல விட மாட்டேன்”
“பார்ப்போம் பார்ப்போம் “
“பார்க்கத்தானேப் போற….”
புன்னகைத்துக் கொண்டே இருவரும் நித்திரைக்குச் சென்றனர்.
ரமேஷின் அறைக்குள் நுழைந்த அனன்யாவுக்கு இது அறைதானா இல்லை பூந்தோட்டமா என்ற எண்ணம் தான் தோன்றியது.கட்டிலுக்கு மட்டுமல்ல அறை முழுதுமே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
“வெல்கம் மை குயின் ” என்ற ரமேஷின் குரல் அருகில் கேட்க திடுக்கிட்டவளை,
“ஹேய் பப்ளி ….என்ன இப்படி வேர்க்குது … உங்கண்ணன் பூந்தோட்டத்தையே ரூம் குள்ள கொண்டு வந்துருக்கான் .. குளு குளுனு இருக்கு .. உனக்கு வேர்க்குது”
“அது அத்தான் … “
அவள் படபடப்பைப் போக்கும் பொருட்டு , “ஆமா இந்த சினிமால வர்ற மாதிரி பால் சொம்புலாம் எடுத்துட்டு வரலயா … ” என்றவாறே அவளைக் கைப் பிடித்து அழைத்து வந்து , கட்டிலில் அமர வைத்தான்.
“அக்கா தந்தாங்க , நான் தான் உங்களுக்குப் பால் பிடிக்காது வேண்டாம் சொல்லிட்டேன்”
“அப்ப எனக்கு என்ன பிடிக்கும் , பிடிக்காது எல்லாம் தெரியுமா”
” தெரியுமே” , “எங்க சொல்லு… எனக்கு பிடிச்சத சொல்லு “
” எங்கண்ணனுக்கு அப்புறம் என் மேல அன்பு வச்சிருக்கிற ஒரே ஆண் … உங்கள தெரியாம இருக்குமாத்தான் ….”
“இன்னும் தெரிய நிறைய இருக்கே … பப்ளி” … என்று நெருங்கி அமரவும், அனன்யாவிற்கு உடல் நடுங்க ஆரம்பித்தது , வார்த்தைகளும் தந்தியடிக்க ,
“இனி … இனி தெரிஞ்சுக்கிறேன் … அத்தான் பப்ளி சொல்லாதிங்க …. ” என்று சினுங்கியவளின் முகம் அருகே முகம் கொண்டு சென்றவன்” தெரிஞ்சுக்க வச்சுருலாமா பப்ளி… அப்படியே நீ பப்ளியா இல்லையானு டெஸ்ட் பன்னிரலாமா” என்றவன் கைகள் அவள் இடை வளைத்திருந்தது.